Member
- Messages
- 60
- Reaction score
- 2
- Points
- 8
தன் கையை எடுத்து தன் கழுத்தை தொட்டு பார்த்து கொண்டு வியர்க்க எங்கே இருக்கிறோம் என திரும்பிப் பார்க்கிறான் முகில்.
கோபி பேருந்து நிலையத்தில் நிற்க சுற்றும் முற்றும் பார்த்து விட்டு தன் கைபேசியை எடுத்து பார்க்க டிசம்பர் 22 காலை 8:30 என காட்டியது.
"நான் மறுபடியும் இதே நாளுக்கு வந்துட்டேனா....நான் செத்து எதுவும் போய்ட்டேனா....நான் ஏன் மறுபடியும் வந்திருக்கேன்...."என முகில் மனதினில் நினைத்தபடி பார்க்க,
"ஹே....வாடா முகில்....இப்போதான் வர்றியா...."என வள்ளி தனது பழைய ஸ்கூட்டியில் வர,
"என்னோட மண்டைக்குள்ள கடைசியாக கேட்ட குரல் அது சந்தீப் குரல்....வள்ளியை பார்த்துக்கோன்னு சொல்லுச்சு...."என முகில் மனதினில் நினைத்தபடி பார்க்க,
வள்ளி ஸ்கூட்டியில் இருந்து கீழே விழ, முகில் முன்னே ஓடி சென்று அந்த ஸ்கூட்டியை பிடித்து இவன் சரிய வள்ளி கீழே விழாமல் காலை ஊனி நிற்கிறாள்.
"முகில்...."என வள்ளி முகிலை பார்க்க,
"வள்ளி உனக்கு ஒன்னும் ஆகலைல ...."என முகில் கேட்க,
"எனக்கு ஒன்னும் ஆகலை....தேங்க்ஸ் முகில்..."என வள்ளி கூறுகிறாள்.
"இது நான்தான்....இது டிசம்பர் 22 மதியம் 1:02....நான் கோபி வந்து நான்கு மணி நேரம் இரண்டு நிமிடம் ஆச்சு....நான் பஸ்ல ஏறுறதுக்கு முன்னாடி தயிர் சாதம் சாப்பிட்டேன்....இது நல்லாருக்கும்....கூட தக்காளி ஊறுகாய் இருந்தா இன்னும் நல்லாருக்கும்...இங்க ஒரு ஹோட்டல் இருக்கு அதுல நல்லாருக்கும்....நீ இங்க வரும் போது ட்ரை பண்ணி பாரு...உனக்கு அது பிடிக்கும்.... பை தி வே....நீ என்கிட்ட ஏன் தலைகீழே தொங்கிட்டு இருக்கேன்னு கேட்பேல்ல...அப்போதான் தலைக்கு இரத்த ஓட்டம் போய் மூளை நல்லா வேலை செய்யும்...நல்லா யோசிக்கலாம்...நீயும் அதை முயற்ச்சி பண்ணி பாரு...இது உன்னோட இத்து போன மூளையை சரி பண்ணும்...."என தலை கீழே மரத்தில் தொங்கியபடி பேருந்தில் வந்த பெண் தனது கைபேசியில் பேசி கொண்டு இருக்க முன்னே எதையோ பார்த்தபடி எழுந்து மரத்தின் கிளையின் மீது அமருகிறாள்.
"ரிபோர்ட்ல இருக்க மாதிரிதான் இருக்கு...இப்போ என்னால எதுவும் பண்ண முடியாது....இப்போதைக்கு நான் வேவு மட்டும் பார்க்கறேன்..."என மித்ரா தனது பெற்றோர்களுடன் செல்வதை பார்த்துவிட்டு தனது குரல் பதிவை தன் கைபேசியில் அனுப்புகிறாள்.
இருட்ட தொடங்க சூரியன் தனது ஒளியை இழந்து கொண்டு இருந்தது. போலீஸ் நிலையத்தில் போலீஸ் அதிகாரி விஜய் அமர்ந்து பழைய புத்தகத்தை படித்து கொண்டு இருக்க, போலீஸ் நிலையத்தின் அலைபேசி அலறியது.
"ஹலோ....கோபிச்செட்டிப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன்.... ஹா....என்ன....??? சண்டையா....?? முகில் நீயா பேசறது....??? உனக்கு ஒன்னும் ஆகலைல....???"என விஜய் பேச,
"ஆமா....எனக்கு ஒன்னும் ஆகலை...எங்க கடைகிட்ட ஒரு ஆள் தண்ணி போட்டுட்டு வந்து சண்டை போட்டுட்டு தகராறு பண்றான்...பிளீஸ் சீக்கிரம் வாங்க..."என முகில் தன் கைபேசியில் மாடியில் நின்று பேசி கொண்டு இருக்கிறான். வள்ளியும் வரதனும் கீழே சாப்பிட்டு கொண்டு இருக்கின்றார்கள்.
"இன்னைக்கு எப்படியாச்சும் நான் தப்பிச்சாகனும்....போலீஸ் விஜய் போன தடவை இந்த வீட்டு பக்கம் வந்துதான் இறந்து போனார்...இந்த தடவை இந்த பக்கம் வரமாட்டார்...நான் பிரச்சினையில மாட்டிக்க மாட்டேன்... சுரேஷை நாளைக்கு கால் பண்ண சொல்லி மெசேஜ் அனுப்பிட்டேன்....என்னோட ஃபோன்ல ஏரோபிளான் மோட் ஆன் பண்ணிட்டேன்....தேவை இல்லாத ஃபோட்டோ வீடியோஸ் எல்லாம் டெலிட் பண்ணிட்டேன்..இப்போ என்னோட ஃபோன்ல நிறைய இடம் இருக்கு....வீடியோ எடுக்க....பவர் பங்க் வச்சு முழுசா சார்ஜ் பண்ணிருக்கேன்...யாராலும் என்னை கூப்பிட முடியாது... போன தடவை கால் வந்ததுதான் காரணம் நான் சாகறதுக்கு...இப்போ அவங்க வருவாங்க...."என தனது நினைத்தபடி தனது போனில் வீடியோ பதிவு செய்ய தொடங்குகிறான் முகில்.
"இப்போ நான் வள்ளியோட நிழலை பதிவு செஞ்சா என்கிட்ட அதுவே ஒரு ஆதாரம்தான்..."என தனது கைபேசியை மாடியில் வைத்துவிட்டு அங்கே இருந்து வீட்டிற்குள் நுழைகிறான்.
"நான் வெளிய போகமாட்டேன்...என்ன ஆனாலும்....நான் முதல் தடவை டிசம்பர் 22 கொலை செய்யபடலை..."என யோசித்தபடி முகில் கண்ணாடியின் முன் சென்று தன் முகத்தை பார்த்து முகத்தை கழுவ, அப்பொழுதுதான் முகில் தனது கண்களை பார்க்கிறான்.
"என்னோட கண்ணு என்ன வித்தியாசமா இருக்கு...வலது பக்க கண் வேற கலர்ல இருக்கு...கொஞ்சம் பழுப்பு நிறம் அதிகமா....இது எப்போ இருந்து..."என முகில் பார்த்து கொண்டு இருக்கிறான்.
டிசம்பர் 23 காலை மணி 6:05 முகில் தனது கைபேசியை எடுத்து பார்க்க அதில் வள்ளியின் நிழல் கல்லூரி உடையில் வருவது பதிவாகி இருந்து.
"நல்ல வேளை பதிவாகி இருக்கு..."என நினைத்தபடி தனது கைபேசியை எடுத்து கொண்டு வள்ளியின் அறைக்கு சென்று கதவை தட்ட,
"குட் மார்னிங்..."என தனது கண்களை தேய்த்தபடி வள்ளி கதவை திறக்கிறாள்.
"வள்ளி...நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்...."என முகில் கூறி கொண்டு தனது கைபேசியை எடுத்து வள்ளியிடம் வீடியோவை காட்டி,
"இது நம்ம வீட்டுக்கு முன்னாடி நேத்து நைட்டு ஒன்பது மணிக்கு எடுத்தது...இது நம்ம வீட்டையே அஞ்சு நிமிஷம் உத்து பார்த்துட்டு அப்புறம் காட்டுக்குள்ள நடந்து போயிருச்சு...."என முகில் கூற,
அதிர்ச்சியில் கைபேசி திரையை பார்த்த வள்ளி,"யார் இது.... நானா....??"என கேட்க,
"இல்லை....இது நீ இல்லை வள்ளி....நீ அப்போ உள்ள சாப்பிட்டுவிட்டு இருந்தே...எனக்கு தெரிஞ்சு இது நிழல்....வள்ளி....நான் சொல்றதை கேளு...நீ இந்த நிழல்கள் பத்தி கேள்விபட்டிருக்கேல்ல....இது இங்க வந்துருக்கு...உன்னை கொல்ல...."என முகில் கூற,
வள்ளி பதற்றத்துடன்,"என்ன....நானே என்னை கொல்ல போறேனா...??"
"அவ கைய நல்லா ஜூம் பண்ணி பாரு...."என முகில் கூற,
வள்ளி கைபேசி திரையை தொட்டு பார்க்கிறாள்.
"நோ வே.....அப்போ நிழல்கள் எல்லாம் சாதாரண கட்டுக்கதைகள் இல்லையா....??"என வள்ளி வள்ளியின் நிழல் கையில் உள்ள கூர்மையான கத்தியை பார்த்து கேட்கிறாள்.
"எனக்கு இது தெரியும்..."என வள்ளி கூற,
"சந்தீப் சாகறதுக்கு முன்னாடி சந்தீப் நிழல் பார்த்தான்....சரியா....?? அவன் இறந்து போறதுக்கு மூணு நாள் முன்னாடி..."என முகில் கேட்க,
"ஆமாம்....அவன் நிழல் பத்தி உன்கிட்ட ஏதாச்சும் கால் பண்ணி சொல்லிருப்பான்னு நினைக்கறேன்...."என வள்ளி கூற,
"நான் முதல் தடவை வந்தப்போ நீதான் நிழல் பத்தி என்கிட்ட சொன்னே...அது மட்டுமில்லாம உன்னோட நிழல் கைலதான் நான் முதல் மற்றும் ரெண்டாவது தடவை செத்தேன்...."என தலை முடியை சொறிந்தவாறு முகில் மனதில் நினைக்க,
"ஹே....முகில்....எனக்கு என்னமோ சந்தீப் அவனோட நிழலால கொல்லப்பட்டு இருப்பானோன்னு தோணுது...."என வள்ளி ஒருவித பீதி கலந்த ஆச்சர்யத்துடன் முகிலை பார்த்து கேட்கிறாள்.
(தொடரும்.......)