• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

NN-7

Messages
37
Reaction score
20
Points
8
விழிகளில் கண்ணீர் மனதில் வலி தந்தையின் பாராமுகம் அனைத்தையும் நீரில் கரைத்து விடும் சக்தி இருந்தால் கரைத்து விடலாம் என்று கண்ணீர் வழிய அமர்ந்திருந்தால்.

தோள்களில் கரம் பதிய உணர்வுகள் வந்தவளாக திரும்பிப் பார்த்தால் சிவகாமி நின்றிருந்தார்.

_"அம்மா ஐ அம் சாரி அம்மா உங்க கிட்டயாவது நான் வந்து இத பத்தி சொல்லி இருக்கணும்.. என்ன மன்னிச்சிடுங்க"

என்று திரும்பி அழுதால் அவளது முதுகை தட்டிக் கொடுத்தவாறு சிவகாமியும் அவளுடன் அமர்ந்து கொண்டார் சிறிது நேரம் அவளுக்கு அவகாசம் கொடுத்தவர் ஒரு வழியாக அழுது முடித்தவள் நிமிர்ந்து தாயைப் பார்த்தால் அவர் என்ன சொல்லப் போகிறார் என்னும் பயம் அடி மனதில் இருந்தது சிவகாமியும் நிதானமாக.

-"நீ ஏன் லவ் பண்ண அப்படின்னு உன்னை நான் திட்ட போறதில்லை கோவப்பட போறதில்லை அதனால ஒரு பிரயோஜனமும் இல்லைன்னு எனக்கு நல்லா தெரியும் உன்னோட வயச தாண்டி தான் நானும் வந்து இருக்கேன் ஆனா நீ வந்து அப்பா கிட்ட சொல்லணும் உனக்கு தோணலையா அட்லீஸ்ட் என்கிட்டே வந்து இத பத்தி முன்னாடியே சொல்லி இருக்கலாம் இல்ல நீயே சொல்லல மிருதாளினி"

தயங்கியவாரே -" உங்ககிட்ட சொன்ன என்ன நடக்கும்னு பயமா இருந்துச்சு மா.....
நான் சொல்லான்னு வரும்போது..."என்று இழுத்தவள்
-" நான் சொல்லலான்னு வரும்போது அப்பா கல்யாணத்தை பத்தி பேசினார் அவர் என் மேல வச்சிருக்க நம்பிக்கையை பார்க்கும்போது என்னால் அதுக்கு மேல பேசவே முடியல "என்று நிறுத்தினாள்.

-"அப்போ உங்க அப்பா உன் மேல நம்பிக்கை வைத்திருக்கிறார் என்று நீ சொல்லல ....அப்போ அப்பா உனக்கு வேற பையன பார்த்து கல்யாணம் பண்ணி வச்சா உனக்கு ஓகேவா".

வேகமாக தலையை ஆட்டினால் மிருதாளினி.

-"நீ சொல்லாதது ரொம்ப தப்பு இப்ப உன் மேல ரொம்ப கோவமா இருக்காருன்னு நினைக்கிறேன் சரி சொல்லு அடுத்தது நீ என்ன பண்ண போற"

-" தெரியலம்மா".

தன்னைப் பற்றி யோசிக்க தனக்காக துணை நிற்க தன் தாய் இருப்பது மிருதாலினிக்கு ஆறுதலாக இருந்தது.


-"சரி முதல்ல நீ அப்பாவ சமாதானப்படுத்து அப்புறமா உன்னோட காதல நீ புரியவை ஓகேவா இப்போ நீ வந்து தூங்கு ஒரு கண்ணெல்லாம் எப்படி சிவந்து இருக்கு தண்ணி குடி அழாதே இந்த பிரச்சனை எப்படி தீர்க்கலாம்னு முடிவு பண்ணு சரியா"

என்று தன் மகளை வீட்டிற்கு அழைத்து வந்தார் சிவகாமி . அவளை படுக்க வைத்து விட்டு சிறிது நேரம் அவள் பக்கத்தில் அமர்ந்து இருந்தார். வெகு நேரம் அழுததால் அவள் தூங்க ஆரம்பித்ததும் தங்களது அறைக்கு வந்தால் சிவகாமி.

ஒரு பெருமூச்சுடன் கண்களை மூடி படுத்திருந்த தன் கணவரை பார்த்துவிட்டு படுக்க உறக்கம் வரவே இல்லை. பிள்ளையின் வாழ்க்கை பற்றி சிந்திக்க எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டுதான் இருப்பார்கள் அனைத்து தாய்மார்களும் முழு நேர சிந்தனையாக அவர்களது குழந்தைகள் தான் நினைவில் இருப்பார்கள் அதுபோல இத்தனை நாளாக தன் மகள் மீது அவர் வைத்திருந்த பிம்பம் காணாமல் போனது போன்ற உணர்வு இருப்பினும் இப்பொழுது இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தக்க சமயத்தில் தக்க முடிவுகளை எடுப்பது தான் நல்லது என்று நினைத்தவாறு கண்ணை மூட தூக்கம் தான் வரவே இல்லை .தன் பிள்ளையின் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க ஆரம்பித்தவர்களின் தூக்கம் காணாமல் காணாமல் போனது.

ஒரு வாரம் இரண்டாக மாறியது ஒரு பலனும் இல்லை . சிவகாமி தன் கணவரிடம் அவ்வப்பொழுது பேசிக்கொண்டு இருந்தார் அதை உதாசீனம் செய்து கொண்டிருந்தார் வேதாசலம் .

இப்பொழுது அவர் வீட்டுக்கு வருவது குறைந்து விட்டது . இந்த இரண்டு வாரத்தில் மெலிந்துஇருந்தால் மிரு .

அன்றுதான் ஒரு அதிசயம் நடந்தது .

எப்பொழுதும் போல வேலைக்கு செல்ல புறப்பட்ட மிருவை பார்த்த வேதாசலம் இன்னைக்கு என்னோட லஞ்ச் டைம்ல நீயும் உன்னோட..... என்று இழுத்தவர் குரலை செறுமையாவர் வந்து பாருங்க என்று சொல்லிவிட்டு வேகமாக சென்று விட்டார் .

சென்றவர் உணவுகூட சாப்பிட வில்லை சிவகாமி கூப்பிட்டும் நிக்காமல் சென்றவர் திரும்பியும் பார்க்கவில்லை .

தாயிடம் சென்ற மிரு ஒருவித மகிழ்ச்சி தந்தை பேசிவிட்டார் நன்றாக பேசவில்லை என்றாலும் வரச்சொல்லி இருக்கிறார் அல்லவா . சிவகாமிக்கு ஒன்றும் புரியவில்லை எதையும் சொல்லிவிட்டு செய்பவர் இதை சொல்லாமல் செய்வது அவருக்கு வருத்தத்தை தந்தது இருப்பினும் மகளின் முகத்தில் வெகுநாள் களித்து புன்னகையை பார்த்தவருக்கு மனம் இலக .

சிவகாமியின் மனம் அடித்து கொண்டது ஏதோ தவறு நடப்பது போல இருப்பினும் முகத்தில் காட்டிக்காமல் மகளை வழியனுப்பினார் .

அலுவலகம் சென்ற மிரு புன்னகையுடன் கார்த்திக்கை எதிர் பார்த்து இருந்தாள் அவன் அவளின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் விதமாக தாமதிக்காமல் வந்துசேர .


அவனிடம் அனைத்தையும் சொல்லி முடிக்க கார்த்திக்கு தூக்கிவாரி போட்டது .ஒருவழியாக பகுதி நேர விடுப்பு எடுத்தவர்கள் சென்றது என்னவோ அவளின் தந்தையின் கம்பெனிகுத்தான் .
 
Last edited:
Top