• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

9👰👰👰

Active member
Messages
180
Reaction score
149
Points
43
யட்சிணி 9


வைஷ்ணவி அன்று கல்லூரியில் முக்கியமான தேர்வு இருப்பதால், சற்று முன்பாக கொஞ்சம் நேர்த்தியாகவே கிளம்பி கொண்டிருந்தாள்.


ஆதில் அப்போது தான் அறைக்குள் வந்தவன் கண்ணாடியின் முன் நின்றிருந்த வைஷுவை பார்த்தவன் அவளருகில் மெதுவாக நெருங்கி செல்ல, சில நாட்களாகவே அவளின் மனம் அவன் பால் சாயதொடங்கி இருக்க, அவளின் பின்புறம் நின்று கழுத்தில் முகம் புதைத்தவனோ "ஐ லவ் யூ பேபி, அப்படியே ரசகுல்லா போல இருக்க என்னால உன்னை நெருங்கவும் முடியல, விலகவும் முடியல ஆனா நீயா என்னை தேடி காதலோட என்கிட்ட வரணும். ஐ மிஸ் யூ ரொம்ப நாள் காத்திருக்க வச்சராத நவி"என்று தாபத்துடன் ஒலித்தவனின் குரலில் அவளுக்கோ கன்னங்கள் சிவக்க வெட்கம் தான் வந்தது.

கண்ணாடியில் அவளின் சிவந்த முகம் கண்டவனுக்கு, அவனை கட்டுப்படுத்த முடியாமல் அவளின் இதழில் தஞ்சமடைய அவளும் அதை விரும்பியே ஏற்றாள்.

அவனை கட்டுப்படுத்தி கொண்டு அவளிடம் இருந்து பிரிந்தவன் அவளின் முடிகற்றைகளை ஒதுக்கியவன் "பேபி ப்ளீஸ் இன்னிக்கு ஒரு நாள் என்னோட டைம் ஸ்பென்ட் பண்ணு டா, ஐ மிஸ் யூ லார்ட், இன்னிக்கு ஒன் டே ப்ளீஸ்"என்று மெல்லிய குரலில் கேட்க...

அவனை நோக்கி புருவமுயர்த்தியவளோ "ஏன் திடிர்னு இன்னிக்கு"என்று குழப்பத்துடன் கேட்க...

அவனோ அவளை பின்னிருந்து அணைத்து அவளின் நெற்றி வகுட்டில் குங்குமத்தை வைத்தவன் "என்னோட காதலுக்கு இன்னியோட ஒரு வயசு ஆச்சு"என்று சிலாகித்து கூற...

அவளோ புரியாமல் பார்க்க "இதே நாளுல தான் உன்னை நான் முதல் முறையா பார்த்தேன்.பார்த்ததும் உன்கிட்ட விழுந்துட்டேன். இன்னிக்கு முழுவதும் நான் உன்னோட இருக்கனும். நம்ம ரெண்டு பேரும் ஒரு இடத்துக்கு போகலாம்"என்று கூறியவனின், வார்த்தைகளின் மென்மையில் உருகியவளோ "இன்னிக்கு எனக்கு முக்கியமான எக்ஸாம் இருக்கு. நான் போயே ஆகணும்"என்று கூறியவளிடம் இருந்து திடிரென விலகியவனை அதிர்ந்து போய் பார்த்தாள் அவள்.

வைஷுவோ "ஆத்தாடி வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறிருச்சே, இன்னிக்கா எனக்கு எக்ஸாம் இருக்கனும்"மனதோடு புலம்பியவள் "நான் ஈவினிங் சீக்கிரமா வந்துறேன், அப்புறம் நாம போகலாம். இன்னிக்கு இம்போர்ட்டண்ட் எக்ஸாம்"என்று சற்று தன்மையாகவே கூற,அதில் அவனின் தலை தானாகவே ஆட, நானே உன்னை வந்து பிக் பண்ணிக்கிறேன் என்றவன் "வா போகலாம்" என்று கூற, அவளோ "நான் எப்போவும் போல ஈஸ்வர் அண்ணா கூடவே போய்க்கிறேன்" என்று கூறியவளை முறைத்தவன் "ஏன் உனக்கு என்னோட வர கஷ்டமா இருக்கா"என்று கோவமாக கேட்டவனை இது திருந்தாத ஜென்மம் என்பது போல பார்த்தவள் கதவை திறந்து கொண்டு வாசலுக்கு சென்றவள் அவனின் காரை திறந்து அதில் ஏறிகொண்டாள்.


காரில் ஏறி அமர்ந்தவன் அவளிடம் திரும்பி"என்னை பார்த்தா உனக்கு எந்த ஆங்கிளயாச்சும் டிரைவர் மாதிரி இருக்கா"என்று கேட்டவனிடம் புரியாமல் தலையாட்ட அவனோ "அப்புறம் என்ன முன்னாடி வந்து உட்கார்"என்று கத்த, அவளோ அவனை வினோதமாக பார்த்தவாறே முன்புறம் ஏறிகொண்டாள்.


காரை எடுத்தவன் ஸ்பீக்கரில் பாடலை ஒலிக்க விட்டவாறே, அவளையும் ரசித்து கொண்டு காரை ஓட்டினான்.


முதல் முதலாக முதல் முதலாக…
பரவசமாக பரவசமாக…
வா வா வா அன்பே…
ஓஹோ… தனித்தனியாக தன்னந்தனியாக…
இலவசமாக இவன்வசமாக…
வா வா வா அன்பே…

உன்னாலே உன்னாலே…
விண்ணாளச்சென்றேனே…
உன் முன்னே உன் முன்னே…
மெய் காண நின்றேனே…


ஒரு சொட்டு கடலும் நீ…
ஒரு பொட்டு வானம் நீ…
ஒரு புள்ளி புயலும் நீ…
பிரமித்தேன்… ஹோ…


ஒளி வீசும் இரவும் நீ…
உயிர் கேட்கும் அமுதம் நீ…
இமை மூடும் விழியும் நீ…
யாசித்தேன்…


முதல் முதலாக முதல் முதலாக…
பரவசமாக பரவசமாக…
வா வா வா அன்பே…
ஓஹோ… தனித்தனியாக தன்னந்தனியாக…
இலவசமாக இவன்வசமாக…
வா வா வா அன்பே…


ஒரு பார்வை நீளத்தை…
ஒரு வார்த்தை நாணத்தை…
தாங்காமல் விழுந்தேனே…
தூங்காமல் வாழ்வேனே…


நதிமீது சருகை போல்…
உன் பாதை வருகின்றேன்…
கரை தேற்றி விடுவாயோ…
கதி மோட்சம் தருவாயோ…


மொத்தமாய் மொத்தமாய்…
நான் மாறிப்போனேனே…
சுத்தமாய் சுத்தமாய்…
தூள் தூளாய் ஆனேனே…

பாடல் வரிகளுடன் இவனும் பாடிக்கொண்டே வர, அவளோ கள்ளத்தனமாய் அவனை ரசித்திருந்தாள் ஆச்சரியத்துடன்...

அதற்குள் கல்லூரி வந்திருக்க, காரை விட்டு இறங்க கதவை திறக்க சென்றவள், அவன் எதிர்பாராத நேரத்தில் கன்னத்தில் முத்தமிட்டவள் அவன் சுதாரிக்கும் முன்பாகவே இறங்கி சென்று விட, அவனோ வெட்கப்பட்டு தலைக்கோதியவன் அங்கிருந்து செல்ல, இருவருக்குமே அத்தனை இதமான மனநிலை.

மாலை அவனின் அவசரத்தால் அவனே அதை அழித்து அவர்களின் வாழ்வை உடைந்த கண்ணாடியாய் சில்லு சில்லாய் நொறுக்கிடுவான் என்று அவன் அறிந்திருக்கவில்லை.


மாலை அவளுக்காக கல்லூரிக்கு வெளியே காத்திருக்க, அவளும் வந்தாள் அவளின் தோழனோடு பேசிக்கொண்டே...

அவளுடன் இன்னொருவனை கண்டவனுக்கு ஆத்திரம் தலைக்கேற அறிவிழந்த அபாக்யவன் ஆனான் ஆதில்.

தூரத்தில் இருந்தே அவனின் காரை கண்டுகொண்டவள் "ஓகே அருண் பை நாளைக்கு மீட் பண்லாம், வரேன்"என்றவள் வேகமாக ஓட முயற்சிக்க, அவளின் காலணி சதிசெய்ய தடுமாறி விழ சென்றவளை தாங்கி பிடித்த அருண் "ஹெலோ மேடம், காலைல இருந்து கனவுலயே இருக்க பாத்து போ"என்று அவளை கிண்டல் செய்தவனின் முதுகில் அடித்து சிரித்தவள் வந்து காரில் ஏறினாள்.


அருண் வைஷுவின் ஒரே நண்பன். அதற்கு மேல் சகோதரனை போன்றவன். அவனுக்கு மட்டும் அவள் வாழ்வின் நிகழ்வுகள் அனைத்தும் தெரியும்.

காரில் ஏறியவள் அவனின் முகத்தையும் பார்க்காமல் அமர்ந்திருக்க, காரை வளைத்து திருப்பியவனின் வேகத்தில் அதிர்ந்தவள் அவனை பார்க்க அவன் முகத்தில் மருந்துக்கும் இளக்கம் இல்லை. காலை இருந்தவன் தற்போது அப்படியே முழுதாய் மாறி இருக்க ஒன்றும் புரியாமல் அமைதியாய் இருந்தாள்.


காரை வேகமாக வீட்டிற்கு ஓட்டியவன் அவள் இறங்கும் முன்பே அவளை கைபிடித்து தரதரவென இழுத்து சென்றவன் அவர்களின் அறையில் கட்டிலில் இழுத்து தள்ள, அவளோ
கண்களில் கண்ணீர் வழிய உடல் நடுங்க பயந்து போய் நின்றிருந்தவளின் அருகில் வந்தவன் "யாருடி அவன்? அவன் கிட்ட அப்டி சிரிச்சு சிரிச்சி பேசுற, என்ன கண்டா உனக்கு வெறுப்பா இருக்கா?" என்று மேலும் ஒரு அடி அவளை நோக்கி எடுத்து வைக்க அவளோ உடல் நடுங்கி பின்னால் கண்ணாடியோடு ஒட்டி நின்றாள்.

அவளின் பயம் அவனுக்கு மேலும் ஆத்திரத்தை கொடுக்க பெண்ணின் முகவாயை பற்றியவன், "அவனை விட நான் எந்த விதத்துலடி குறைஞ்சு போய்ட்டேன்...? நோ, நீ அவன்கிட்ட பேச கூடாது. அவன் இருக்க பக்கம் கூட திரும்ப கூடாது. அப்டி ஏதாச்சும் நடந்துச்சுன்னு வையி, உன்னை எதும் பண்ண மாட்டேன். அவனை இல்லாம செஞ்சுருவேன். உருத் தெரியாம அழிச்சிடுவேன்"என்றவன்...

அவளிடம் காட்ட வேண்டிய கோவத்தை எல்லாம் மொத்தமாக கூட்டி அவளுக்கு பின்னால் பளிச்சிட்ட கண்ணாடியில் ஓங்கி குத்த அது சில்லு சிலையாக நொறுங்கி கீழே விழுந்து சிதறியது. பயத்திலும், கண்ணாடி நொறுங்கிய சத்தத்திலும் அரண்டவள் முதுகில் ஒரு துகள் கண்ணாடி கூர்மையாய் அவள் முதுகினை பதம் பார்க்க கண்களை மூடி வலியை அடக்கி நின்றாள்.

அவளின் வலியை உணராதவனோ மேலும், "ஏண்டி, ஏண்டி உனக்கு என்னோட காதல் புரியவே இல்லையா?" வேதனையோடு ரத்தம் வடிந்த கைகளை அவளின் கன்னத்திற்கு கொடுத்து மெதுவாக தங்கினான் காதல் பாதி, க்ரோதம் பாதியாய் இறைஞ்சியவன் மேல் எந்த விதமான உணர்வையும் காட்ட முடியவில்லை பெண்ணவளால்...

தன்னுணர்விலிருந்து மீண்டு வந்தவன் மீண்டும் முகத்தை சுருக்கினான், "இல்ல நான் இப்டி தான் இருப்பேன்னு நீ சொன்னான்னு வை, ஈஸி உன்னையும் கொன்னுட்டு நானும் செத்து போய்டுவேன்" அந்த குரலிலிருந்த தீவிரம் அவளை வாயடைக்க செய்தது.

அதையும் மீறி ஆத்திரம் தலைக்கு ஏற, "கொன்னுடுடா, தயவு செஞ்சு என்ன கொன்னுடு" அமைதியான அழுத்தம் நிறைந்த குரலில் அவன் முகத்தை பார்த்தவள் விழிகளில் அத்தனை கோவம்.

"நீ ஏன் சாகுற? என்ன கொன்னுட்டு நீ சந்தோசமா இரு. எனக்கு புடிச்சது, என் இஷ்டம்னு எதுவுமே எனக்குன்னு இல்லாதபோ நான் மட்டும் உயிரோட இருந்து என்ன பண்ண போறேன்? ஒவ்வொரு நாளும் என் தம்பிய வச்சு, என் அப்பாம்மா வச்சு என்ன பிளாக்மெயில் பண்ணிட்டே இருந்து, அவங்ககிட்ட இருந்து போன் வந்தாலே யாரோ செத்துட்டாங்களானு தான்டா பயமா இருக்கு"...

கண்களில் கண்ணீர் நிற்காமல் அவள் கன்னங்களை நனைத்தது. அவள் வார்த்தைகளில் அசையாது நின்றவன் மனம் அவள் கண்ணீரில் அடிபட்டு போக தானாக அந்த கண்ணீரை தாள முடியாமல் துடைக்க போனவன் கைகளை தட்டிவிட்டாள்.

"தொடாத, இந்த கண்ணீருக்காக தான என்ன உன் கூட வச்சிருக்க? நல்லா பாத்து ரசி. என்னோட கனவை அழிச்சிட்டு உன்ன சந்தோச படுத்த நான் காலம் மொத்தமும் இப்டி உன் முன்னாடி அழுதுட்டே நிக்கிறேன்" என்று கூற...

"நான் எங்கடி உன் கனவை அழிச்சேன்?" வருத்தமாக அவளிடம் வினவினான்.

"என் கல்யாண வாழ்க்கையை அழிச்ச, எவ்ளோ நல்லவரு தெரியுமா என் மாமா? அவரை போய் மனசாட்சியே இல்லாம என் கண்ணு முன்னாடியே கொன்னியேடா"
என்று தலையில் அடித்து அழுத்தவள், "என் குடும்பத்தை வச்சே என்ன மிரட்டுன, நான் ஆசை ஆசையா படிச்சா என்னோட டாக்டர் கனவையும் ஒடைச்சியே. சரி அதையும் என் தம்பிக்காக பொறுத்துக்குட்டேன். நான் எதார்த்தமா ஒருத்தன் கிட்ட பேசுனா உனக்கு என்ன வந்துச்சு? உன்ன கட்டிக்கிட்டா உன் கூட மட்டும் தான் பேசணும், உன்ன மட்டும் தான் பாக்கணும்னா எதுக்கு என்ன காலேஜ் அனுப்பனும்? வீட்டுக்குள்ளையே ஜெயில் மாதிரி நடத்த வேண்டியது தானே?" என்றவள்...

கன்னத்தை நனைத்திருந்த கண்ணீரை துடைத்தவள், "இல்ல தெரியாம தான் கேக்குறேன், என்னைக்காவது பிளாக்மெயில் பண்ணாம, சந்தோசமா என்கிட்டே பேசிருப்பியா? இதுல எப்படி என்னால உங்கிட்ட பயமே இல்லாம சிரிச்சு பேச முடியும்?"

அவளை அவன் உன்னிப்பாக பார்த்திருக்க அவனை விட்டு மெல்ல மெல்ல விலகி போனாள், "விட்டுடு, நான் இந்த ரூம்ல அடஞ்சே காலம் முழுசும் இருந்துடுறேன். ஒவ்வொரு தடவ வெளிய வர்றப்பையும் என் மனசு செத்துக்கிட்டே போகுது. உயிர் வாழுற ஆசையே இல்லாம பண்ணிட்ட, ஒரு நிமிஷம் சிரிச்சா அடுத்து அதை மறக்குற அளவுக்கு செஞ்சுடுற"என்றவள்
கை எடுத்து அவனிடம் வேண்டினாள்.

"என் குடும்பத்தை விட்டுடு. யாரையும் வற்புறுத்தி வர்றது பேர் காதல் இல்ல, இல்ல என்ன கேக்காமயே என்ன நெருங்கி எனக்கு முத்தம் குடுத்தா காதல் வரும்னு நீ நினைச்சா காதல் வராது, என் வயசால உன் மேல காமம் வேணா வரும். அந்த சுகத்துக்காக உன்ன மாதிரி ஒருத்தன்கிட்ட என்ன நான் ஒப்படைக்க விரும்பல. விற்று என்ன... ப்ளீஸ்... ப்ளீஸ்" அழுதழுது தரையில் மடிந்து முகத்தை பொத்தி விசும்பியவளை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக தள்ளி போனான்.

வெளியே சென்றவன் மறுநொடியே உள்ளே வந்து அவளின் முதுகில் இருந்த கண்ணாடி துண்டை எடுத்தவன் காயத்துக்கு மருந்திட்டு விட்டு சென்று விட்டான்.

வைஷுவால் அழுகையை அடக்கவே முடியவில்லை. கதறி தீர்த்தாள். அவன் செய்த அனைத்தையும் பொறுத்து அவனுடன் புது வாழ்வை தொடங்கலாம் என்று நினைத்தவளின் எண்ணத்தை நொறுக்கி அவளை காயப்படுத்தி அவளின் மொத்த வெறுப்பையும் சம்பாதித்து கொண்டான் தன் அவசரபுத்தியால்...


கைக்கூடி வரும் பொக்கிஷத்தை வார்த்தை என்னும் விசத்தால் சிதைத்திருந்தான்.
 
Active member
Messages
205
Reaction score
116
Points
43
அவனே ஆப்பு வச்சுக்கிட்டானா 🙄🙄🙄🙄🙄🙄
 
Top