• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

8👰👰👰

Active member
Messages
180
Reaction score
149
Points
43

யட்சிணி 8


ஒரு பிரபலமான இன்ஜினியரிங் கல்லூரியின் முன், வண்டியை நிறுத்த அவளோ அவனை யோசனையாக பார்த்தவள் தயக்கத்துடன் "இங்க ஏன் வந்துருக்கோம்"என்று கேட்க....


அவனோ "நான் தான் உன்கிட்ட முன்னாடியே சொன்னேன்ல, நீ இந்த காலேஜ்ல தான் படிக்க போற"என்றவனை அதிர்ந்து போய் பார்த்தவள், தைரியத்தை வரவழைத்தவளாய் "என...எனக்கு டாக்டர்க்கு படிக்கணும்னு தான் ஆசை"என்று கூறியவளை ஏளனமாக பார்த்தவன் "நான் உன்னை படிக்கணும்னு சொன்னது உன் ஆசையை நிறைவேத்த இல்லை. என் ஸ்டேட்டஸ்காக புரிஞ்சுதா, நாளைக்கே உன்னை ஏதாச்சும் பங்ஷன், பார்ட்டிஸ் கூட்டிட்டு போகும் போது என் பொண்டாட்டி 12படிச்சிருக்கான்னு சொல்ல முடியுமா? அதுக்காகவும் நாளைக்கு என் பசங்களுக்கு பாடம் சொல்லி தரவும் தான் நீ படிக்க போற, சோ அதுக்கு நீ ஏதாச்சும் ஒரு டிகிரி படிச்சாலே போதும். அதுவும் நான் என்ன சொல்றனோ அதை தான் நீ படிக்கணும். வா"என்றவனின் பின்னால் சென்றவளுக்கு தொண்டை அடைத்தது. அவனை எதிர்த்து பேசும் நிலையிலும் அவள் இல்லை.

அதன் பின் நடந்த எதிலுமே அவள் பங்கு இல்லை. அனைத்தையும் அவனே செய்து முடித்து விட்டு நாளைமுதல் கல்லூரிக்கு வர கூறி அவளிடம் சைன் வாங்கி விட்டு அட்மிஷன் போட்டு ,அவளை கைபிடித்து அழைத்து சென்றவன் சென்றதென்னவோ அந்த ஊரிலேயே மிகப்பெரிய ஜவுளிக்கடலான RN சில்க்ஸ் க்கு தான்.

வைஷு "இங்க எதுக்கு வந்துருக்கோம்"என்று கேட்க...

"ஹான் சமோசா சாப்பிட"என்று நக்கலாக கூறியவன்," துணி கடைக்கு எதுக்கு வருவாங்க உனக்கு டிரஸ் எடுக்க தான், சொசைட்டில எனக்குன்னு ஒரு ஸ்டேட்டஸ் இருக்கு, நீயும் அதுக்கேத்த மாதிரிதான் டிரஸ் பண்ணனும் வா"என்றவன் உள்ளே கைப்பற்றி அழைத்து சென்றவன் நேராக அவளை அலுவலக அறைக்கு அழைத்து செல்ல, அவளோ புரியாமல் அவனை பின்தொடர அங்கு இருந்த அனைவரும் எழுந்து மரியாதை கொடுக்க, அவன் சென்று முதலாளி சீட்டில் அமர்ந்தவனை அதிர்ச்சியாக பார்த்தவளை கண்டுகொள்ளாதவன் அங்கிருந்த பணிப்பெண்ணை வரவழைத்தவன் அவளை அழைத்து கொண்டு போய் அவளுக்கு பிடித்த உடைகளை காட்டுமாறு கூற, அவளும் அந்த பெண்ணுடன் சென்றாள்.

அந்த பெண் அதிக விலையில் உடைகளை எடுத்து போட, அவளோ எதிலும் மனம் இலயிக்காமல் ஏனோ தானோவென்று பார்த்து கொண்டிருக்க, அதை சிசிடிவி வழியாக கண்டவன் அவனே எழுந்து வந்தவன் அங்கிருந்த பெண்ணிடம் அடுத்த கஸ்டமரை பார்க்க செல்லுமாறு கூறியவன் அவள் அருகில் வந்து "என்ன பண்ணிட்டு இருக்க, உன்னை ட்ரெஸ் தான் செலக்ட் பண்ண சொன்னேன். நீ கனவு கண்டுக்கிட்டு இருக்க, உன்னை மாறியே இங்க யாரும் சும்மா இல்லை புருஷன் காசுல ஏசி கார்ல சுத்துறதுக்கும், இப்டி பேன்க்கு அடியிலே நின்னு கனவு கண்டுட்டு இருக்கவும், சீக்கிரம் "என்றவனின் குரலில் கடையில் இருந்த சிலர் வைஷுவை பாவமாக பார்க்க,சிலர் ஏளனமாக பார்த்தனர்.

கண்களில் வர இருந்த கண்ணீரை உள்ளடக்கியவள் நாலைந்து உடைகளை தேர்ந்தெடுக்க அவனோ "ஹலோ மேடம் நீ சந்தைல போய் பஞ்சுமிட்டாய் விக்க போகல, இன்ஜினியரிங் படிக்க போற அதுக்கேத்த மாறி டிரஸ் செலக்ட் பண்ணு, குய்க்"என்றவனை வெறுப்பாக பார்த்தவள் "இல்லை எனக்கு ட்ரெஸ் வேணாம். என் வீட்டுல இருக்கறதே போதும். நான் போய் அங்க எடுத்துகிறேன்"என்று கூறியவளை பார்த்து சத்தமாக சிரித்தான்.


"என்ன சொன்ன உன் வீட்டுல போய் எடுத்துக்கிறீயா? உங்கப்பன் என்னமோ வாரத்துக்கு பத்து துணி எடுத்து குடுத்த மாறியும், அதை நீ உன் வீட்டு பீரோல வைக்க இடம் இல்லாம எடுத்துட்டு வரேன்ற மாதிரியும் பேசுற, போட்டது நாலு சாயம் போன தாவணி, ரெண்டு இத்து போன காட்டன் சுடிதார். நீ இப்போ செக்யூரிட்டி சிதம்பரம் பொண்ணு இல்லை. த கிரேட் பிசினஸ் மேன் ஆதில் சைத்ரேயனோட பொண்டாட்டி. காட் இட். அதுக்கேத்த மாதிரி நடந்துக்கோ"என்றவன் அவளுக்கு தேவையானதை இனர்ஸ் முதல் அனைத்தையும் எடுத்து குவித்தவன் அவளை அழைத்து கொண்டு வர, அங்கிருந்து வெளியே வந்ததும் தான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது.

காரில் ஏறியவர்கள் வீட்டிற்கு வந்து சேர, அங்கு கேட்டின் அருகிலேயே நின்றிருந்தனர் அவளின் தாயும் தந்தையும்.காரிலிருந்து இறங்கியவள் அவர்களை கண்டதும் மகிழ்வாக அருகில் செல்ல,"நில்லு, நீ இன்னும் ஒரு அடி அவங்களை நோக்கி எடுத்து வெச்சா, அவங்க இங்க இருந்து முழுசா உயிரோட திரும்பி போக மாட்டாங்க, அதுக்கு சம்மதம் மேற்கொண்டு நீ போகலாம்"என்று கூறியவனின் வார்த்தைகளில் துடித்து போனவள் கண்களில் மொத்த வெறுப்பையும் தேக்கி அவனை பார்க்க, அவளின் பார்வை வலித்தாலும் அவர்களின் மேல் இருந்த வெறுப்பும் அவர்களின் செய்கையும் அவனை வெறி ஏற்றியது.

அவன் அருகில் வந்த சிதம்பரம் "பாவி உனக்கென்னடா இத்தனை வன்மம். நாங்க உனக்கு என்னடா துரோகம் பண்ணோம். எங்க பொண்ணை இப்டி சித்திரவதை படுத்துற, அதுக்கு முழுசா எங்களை கொன்னுடு"என்று கத்த...

அவனோ "அதெப்படி மாமனாரே எல்லாரும் உங்களை போலவே இருக்க முடியுமா? சோத்துல விஷத்தை வைச்சு கொன்னுட்டு போயிட்டே இருக்க நான் என்ன சிதம்பரமா? உங்களை எல்லாம் இப்படி தான் பொறுமையா வச்சு செய்யணும். இது மட்டும் இல்லை. இன்னும் நிறைய நிறைய இருக்கு உங்களுக்கு மட்டும் எல்லாருக்கும் துள்ள துடிக்க தவிக்கனும் அப்போதான் என்னோட வன்மம் கொஞ்சமாச்சும் குறையும்"என்றவன் கண்கள் சிவந்து பார்க்கவே பயங்கரமாக இருக்க, வைஷுவுக்கு அவனை பார்க்கவே பயமாக இருந்தது.

சிதம்பரதிற்கும் மீனாட்சிக்கும் ஏதோ புரிவது போல இருக்க வியர்த்து வழிந்தனர்.

அவளின் கைப்பற்றி இழுத்தவன் அவளை தன் கைவளைவில் நிறுத்தி கொண்டு "நீங்க இதோ உங்க பொண்ண பாக்கலாம், பேசலாம். ஆனால் அவ உங்களை பாக்க மாட்டா, பேச மாட்ட"அப்டி ஏதும் நடந்துச்சுன்னா நான் என்ன செய்வேன்னு உங்களுக்கு நல்லா தெரியும்"என்று அவர்களோடு மனைவியையும் சேர்த்து மிரட்டியவன் உள்ளே சென்று விட்டான்.

அவன் சென்ற பின், பெற்றோரை பார்த்தவள் "ப்ளீஸ் நீங்க ரெண்டு பேரும் இங்க வராதீங்க, நான் நல்லாதான் இருக்கேன். எனக்கு நீங்க நல்லா இருக்கனும்"என்றவளின் கதறலை மனம் நோக கண்டவர்கள், உயிரே இல்லாமல் வீடு திரும்பினர்.

வைஷு வேகமாக கண்களை துடைத்து கொண்டு அறைக்குள் செல்ல, அவனோ குளியலறையில் இருக்க, அவனுக்காக காத்து கொண்டிருந்தவளின் காதில் யாரோ அழும் சத்தம் கேட்டு மாடியில் நின்று பார்க்க, விமலா இருந்த அறையில் தான் சத்தம் கேட்டது.


கீழ் இறங்கி சென்றவள் அந்த அறையை திறக்க செல்ல, அங்கிருந்த வேலையாட்களோ "அம்மா வேணாம் கதவை திறக்காதீங்க, அய்யா அந்தம்மாக்கு யாரும் எந்த உதவியும் பண்ண கூடாதுனு சொல்லிருக்காங்க மா"என்று அவளை தடுக்க...

அந்த அறையிலோ "தண்ணி... த... தண்ணி"என்று கட்டிய குரலில் தீனமாக சத்தம் கேட்க...

ஒரு நிமிடம் தயங்கியவள் அடுத்த நொடியே கதவை திறந்திருக்க, அங்கோ விமலா மிகவும் பரிதாபமான நிலையில் இரண்டு நாளிலே மிகவும் சோர்ந்து ஒரு நாளுக்கு ஒருவேளை மட்டுமே உணவும் தண்ணீரும் கொடுக்கப்பட்டு, பசியிலும் வயிறை பிடித்து கொண்டு பாவமாக இருக்க, அந்த இளகிய மனம் கொண்டவளால் தாங்க முடியாமல் "அக்கா தண்ணி எடுத்துட்டு வாங்க"என்று கூற, அந்த பெண்ணோ "அம்மா அய்யா திட்டுவாங்க, வேணாம் வாங்க கதவை சாத்திட்டு போயிரலாம்"என்று பதற, அவளே சென்று டைனிங் டேபிளில் இருந்து நீரை எடுத்து வந்தவள் விமலாவின் வாயாருகே கொண்டு செல்ல, அடுத்த நொடியே அந்த டம்ளர் பறந்து சென்று சுவற்றில் அடித்து விழுந்தது. அங்கே அனல் பார்வையுடன் நின்றிருந்தான் ஆதில்.

அதி விக்கித்து போனவள் அதிர்ச்சியாக அவனை பார்த்து "பா... பாவம், அவங்க செஞ்சது தப்பு தான் மன்னிச்சுரலாமே,தண்ணி தரலாம் ப்ளீஸ்"என்று கெஞ்ச...

அவனோ,"ஹ்ம்ம்... தப்பு பண்ணா மன்னிக்கலாம். ஆனால் இவ பண்ணது நம்பிக்கை துரோகம், பாவம் அதோட பரிசு மரணம் மட்டுமே... அதுவும் செஞ்ச பாவத்துக்கு தண்டனையை அனுபவிச்சு, துடிச்சு சாகனும். புரிஞ்சுதா? இது நான் எழுதுன தீர்ப்பு.அதுவும் கொஞ்ச நாளைக்கு தான். இன்னும் கொஞ்சம் கொஞ்சமே நாள் அதுக்கப்புறம் இவ செஞ்சதுக்கான இறுதி தீர்ப்பை எழுதுவான் இந்த ஆதில் சைத்ரேயன், அதை மாத்தி அமைக்க எந்த சக்திக்கும் உரிமை இல்லை"என்றவனின் குரலில் இருந்த உறுதியை கண்டு பயந்து தான் போனாள் அவள்.

ஆதில் அவளுக்கு நேராக நிற்க, அவளின் முகத்தை பார்த்து இருந்தவனின் கண்கள் சுருங்க,அவளின் இதழ்கள் விரிய திரும்பியவனின் கண்களில் நந்தினி விமலாவிற்கு நீர் கொடுக்கும் காட்சி.

ஆதில் தாயை அதிர்ச்சியாக பார்க்க, அவரோ பரிவாக அவளின் தலையை தடவி கொடுக்க, முதல் முறை விமலாவின் கண்களில் குற்ற உணர்ச்சி.

நந்தினி கொஞ்சம் கொஞ்சமாக இயல்புக்கு வர வைஷுவின் கல்லூரி பயணமும் தொடங்கியது. அவளுக்கு வீட்டில் இருப்பதை விட கல்லூரியில் தான் சுதந்திரமாக இருப்பது போல் தோன்றியது.

ஆதிலின் நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், வைஷு அவனை ஏற்று கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்க, அவளுக்கு அவனை பார்க்காமல் இருந்தாலே அந்த நாள் சுபம் என்று தோன்றுமளவிற்கு இருந்தது அவனின் செயல்கள்.


அவள் படிக்க சென்று எட்டு மாதங்கள் கடந்திருந்தது. அப்போது தான் நடந்தது அந்த சம்பவம். அது அவர்களுக்கு இடையியான இடைவெளியை குறைக்குமா? அதிகரிக்குமா?...

மீண்டும் சந்திப்போம் நாளை... தாமதத்திற்கு மன்னிக்கவும்.







 
Top