• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

7👰👰👰

Active member
Messages
180
Reaction score
149
Points
43
காலனின் யட்சிணியே 7


ஆதில் ஹாலில் அமர்ந்திருந்தவன் மொபைலில்"சொல்லி பார், முடியலைன்னா போட்டுட்டு தூக்கிரு அவ்ளோதான், யார்கிட்டயும் கெஞ்சி இந்த ஆதில் சைத்ரேயன்க்கு பழக்கம் இல்லை. எனக்கு வேணும்னா வேணும் அவ்ளோதான்.ஜஸ்ட் அவனுக்கு இன்போர்ம் பண்ணு முடியாதுன்னு சொன்னா அவனா போட்டுரு"என்று எதிரில் அழைப்பில் இருந்த ராகுலிடம் கூற, அவனுக்கோ இவனுக்கு எதிலுமே பொறுமை இல்லையா? மனிதனா இவன். அவன் இடத்தை தருவதும் தராததும் அவரவர் விருப்பம், கேளு இல்லனா போட்டுரு, அவனிடம் கெஞ்சாதே என்பவனிடன் என்ன பேச, தலையிலடித்து கொண்டவன் அவன் கூறியதை செய்ய ஆரம்பித்தான்.


ஹாலில் அமர்ந்திருந்தவன் அருகில் வந்தமர்ந்த ரியா "ஆதில்" என்றழைக்க, திரும்பியவனிடம் "உங்களுக்கு கொஞ்சம் கூட பொறுமையா இல்லையா?எதுக்காக எல்லாத்திலும் இவளோ அவசரம்"என்று கேட்க, அவனோ "நான் என்ன அவசர பட்டேன். எனக்கு வேணும் நான் எடுத்துகிறேன் அவ்ளோ தான்"என்று ஒற்றை வரியில் முடித்து விட்டான்.

இவனிடம் மேற்கொண்டு என்ன பேச என நினைத்தவள் "என்ன அவசரம் நீங்க படலை, இவளோ அவசரமா எதுக்கு அந்த கல்யாணம். அதுவும் அவ காதலிச்சவனை அவ கண்ணுமுன்னாடி கொன்னு, அதே மேடைல"என்றவள் முடிக்கும் முன்,"சட் அப் ரியா,ஷி டோன்ட் லவ் ஹிம் அண்டர்ஸ்டூட்"என்றவனின் குரலில் அவ்வளவு கோபம், அதில் நடுங்கிப்போனவள் மேற்கொண்டு தைரியத்தை வரவழைத்தவளாய் "அவ ஒரு சின்ன பொண்ணு, உங்களுக்கும் அவளுக்கும் கிட்டத்தட்ட பத்து வருச கேப்"என்றவள் கூற, ஆதிலின் முகமோ அதிர்ச்சியால் விரியா, அவனுக்கே அது புதிது தான்.

வைஷுவை பார்ப்பவர்கள் அவளுக்கு பத்தொன்பது வயது என்று யாருமே நினைக்க மாட்டார்கள். அவன் அவளின் வயதை பற்றி எல்லாம் சிந்திக்கவே இல்லை. அவனின் மனசாட்சியோ "நீ ஒரே வீட்டுல கூட இருக்க உன் அம்மாவை பத்தியே உனக்கு தெரியல, அவளை பத்தியா உனக்கு தெரிய போகுது"என்று கெக்களிக்க...

"அவ ஸ்கூல் முடிச்சதும், படிக்க வசதி இல்லாம நம்ம கார்மெண்ட்ஸ்ல வேலைக்கு சேர்ந்துருக்கா, அவளுக்கு படிக்க அவ்வளவு ஆசை. நீ அவளை கல்யாணம் பண்ணி அவ லைப் மொத்தமா ஸ்பாயில் பண்ணிட்ட"என்று கூற அவனுக்கு எதுவுமே மனதில் பதிய வில்லை.

வேகமாக போனை எடுத்து கொண்டு வெளியே சென்றவன் நேராக சென்றதென்னவோ, வைஷுவின் வீட்டிற்கு தான், அவன் சென்ற நேரம் அனைவரும் வீட்டில் இருக்க சிதம்பரம் வைஷுவின் உடமைகளை எடுத்துட்டு வைத்து கொண்டு இருந்தார்.

அவளின் தாயோ "அந்த பாவி என் பொண்ண என்ன பாடு படுத்துறானோ? தெரியல கொலைகாரப்பாவி"என்று அழ...

சிதம்பரம் "தப்பு பண்ணிட்டோம் அவளை அங்க அனுப்பியிருக்க கூடாது. அவளை உயிரோட வச்சிருக்கானா என்னன்னு கூட தெரியல? என் பொண்ண காப்பாத்த கூட கையாலாகாதவனா போயிட்டேனே"என்று கண்கலங்க...

"அதெல்லாம் உயிரோட தான் இருக்கா, அதுவும் ரொம்ப பத்திரமா"என்றவனின் குரல் கேட்டு அனைவரும் அதிர்ந்து போய் திரும்ப...

அனைவரும் பேச மறந்து அதிர்ந்து போய் இருக்கஆகாஷோ" மாமா அக்கா வரலையா?"என்று கேட்க...


அவனின் அருகில் வந்தவன் அவனின் தலையை தடவியவன் "உங்க அக்கா ரொம்ப நல்லாருக்கா? நீ போய் அவளோட ஸ்கூல் செர்டிபிகேட்ஸ் எல்லாம் எடுத்துட்டு வா"என்று கூற, சிதம்பரம் "அதெல்லாம் எதுக்கு கேக்குற"என்று கேட்க...

"அது வந்து மாமனாரே, உங்க பொண்ணுக்கும் எனக்கும் நடந்த கல்யாணத்தை சட்டப்படி ரெஜிஸ்டர் பண்ண போறேன். மத்தபடி வேறெதுக்கு நீங்க கஷ்டப்பட்டு படிக்க வச்ச பண்ணண்டாங் கிளாஸ் செர்டிபிகேட் கேக்க போறேன்"என்று நக்கலாக கூற...

அதற்குள் ஆகாஷ் அவன் கேட்டதை எடுத்து வந்து தந்திருக்க, அதை வாங்கியவன் கிளம்ப முற்பட, ஆகாஷ் அவனின் கையை தொட்டு இழுக்க, திரும்பியவனிடம் "மாமா ப்ளீஸ் அக்காவை ஒரு தடவை பாக்கணும், கூட்டிட்டு வர முடியுமா?" என்று கேட்ட அந்த பாலகனின் முகத்தை வாஞ்சையுடன் பார்த்தவன் "உனக்கு உன் அக்காவை பார்க்கணும்னா தாராளமா அவளோட வீட்டுல அங்க வந்து பார்க்கலாம். ஓகேவா... அவ இங்க வரமாட்டா"என்று கூறியவனுக்கு வேகமாக தலையாட்டியவன் அங்கிருந்த பெட்டிக்களை பார்க்க ஆகாஷ் "அது அக்காவோட திங்ஸ், அங்க கொண்டு வந்து தரலாம்னு யோசிச்சோம்"என்று கூற..

அதை கேட்டவனின் முகம் கோவத்தில் கருக்க,"அவளுக்கு தேவையானதை வாங்கி தரதுக்கு நான் இருக்கேன். இதெல்லாம் அவளுக்கு தேவைப்படாது. தேவைக்கு அதிகமாவே அவளுக்கு வேண்டியதை தர அளவுக்கு நான் நல்ல நிலமைல இருக்கேன். புரிஞ்சுருக்கும்னு நினைக்குறேன்"என்றவன் அவளின் தாயையும் தந்தையையும் தாயையும் பார்த்தான்.

"அப்புறம் நான் வரட்டா குட்டி மச்சான்"என்றவன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

வீட்டிற்கு வந்தவன், பட்டம்மாவிடமும் ராகுலிடமும் அமர்ந்து பேசிகொண்டிருக்க மேல வா, என்று அவளுக்கு சைகை காட்டிவிட்டு வர அவளோ அன்று இரவாகும் வரையிலுமே அறைக்குள் வராமல் போக்கு காட்ட, அவனின் கோவம் எல்லை தாண்டியது.

மாடியில் இருந்து கீழே பார்க்க, அவளோ அப்போதும் அவர்களுடன் இருக்க, புதிதாய் அவர்களுடன் ரியாவும் இணைந்திருக்க, ராகுல் சுவாரஷ்யமாக ரியாவை சைட் அடித்து கொண்டு பேசிகொண்டிருக்க, வேகமாக படிகளில் இறங்கியவன் நேராக வைஷுவிடம் வந்து நிற்க, அனைவரும் அவன் வந்ததில் அமைதியாக அடுத்த நொடியிலே வைஷுவை இரு கரங்களிலும் ஏந்தி கொண்டு உள்ளே நடக்க, ரியாவின் முகம் கறுத்துப்போனது. ராகுல் இதழ் விரித்து சிரிக்க, பட்டம்மா வெட்கப்பட்டுக்கொண்டே சமையலறைக்கு சென்று விட்டார்.


அவனின் கரங்களில் இருந்தவன் "என்ன விடுங்க என்ன செய்ரீங்க? எல்லாரும் என்ன நினைப்பாங்க? இறக்கி விடுங்க"என்று துள்ள...


அவனோ "நான் என் பொண்டாட்டிய தூக்கிட்டு வரேன். அவங்க என்ன நெனச்சா எனக்கென்ன?பேசாம வாடி, கீழ போட்ருவேன்"என்று மிரட்ட...

அவளோ "உங்களுக்கு யாரு சைத்ரேயன்னு பேர் வச்சா,சைத்தான் ன்னு வச்சுருக்கலாம்"என்று கூற...

அவளை தூக்கி பெட்டில் உருட்டி விட்டவன் "ஆஹா என் பேர் பத்தி இந்த அளவுக்கு யோசிச்சுருக்கேன்னா அப்போ என் மேல உனக்கு காதல் வந்துருச்சு, அப்டி தான நவீக்குட்டி"என்று கேட்டவள் "ஹான் மண்ணாங்கட்டி, அது மட்டும் நடக்காது"என்று கூற, அவனோ "இந்த ஆதில் சைத்ரேயன் அகராதில நடக்காதுன்னு எதுவுமே இல்லை. எல்லாத்தையும் நடத்தி காட்டுவேன்"என்றவன் அவளின் கழுத்தில் முகம் புதைத்தவன் அப்படியே உறங்கி விட, இவளுக்கு தான் அவனின் நெருக்கத்தில் உறக்கம் வர மறுத்தது. விடியலின் தொடக்கத்தில் உறங்கியிருந்தாள்.


காலை அவள் குளித்து முடித்து கண்ணாடியின் முன் நின்று தலைவாரிக் கொண்டு இருந்தவள் கண்ணாடியில் கதவில் சாய்ந்து அவளை ரசித்து பார்த்திருந்த ஆதில் கண்களில் பட, முகம் சிவக்க தலை குனிந்து கொள்ள...

அவனோ உள்ளே வந்தவன்,"நவி கம் பாஸ்ட், ஒரு முக்கியமான இடத்துக்கு போகணும்"என்று அழைக்க...

அவளோ "நான் எங்கயும் வரல, அத்தையை பார்த்துக்கணும்"என்று கூற, பல்லை கடித்தவனோ "எங்க அம்மா நான் பார்த்துப்பேன், நீ கிளம்பு"என்று கூற...

அவளோ "அதான் அஞ்சு வருசமா ஒரே வீட்டுல இருந்து நீங்க பார்த்த லட்சணம் நேத்தே தெரிஞ்சுதே"என்று சொன்னவளை வேதனையுடன் பார்த்தவன், மறுநொடியே தன்னை சமன்படுத்தி கொண்டு "டைம் ஆகிடுச்சு, நீயா வரலைன்னா நான் நேத்து போல தூக்கிட்டு போக வேண்டியது இருக்கும்"என்று கூற, அவ செய்தாலும் செய்வான் என்றறிந்தவள் அவனோடு காரில் ஏறி வர, அவர்கள் வண்டி நின்றதென்னவோ ஒரு பிரபலமான கல்லூரியின் முன்பு தான்.

"இங்க எதுக்கு வந்துருக்கோம் "என்று வைஷு கேட்க, "காலேஜ்க்கு எதுக்கு வருவாங்க, படிக்க தான்... ஆனால் படிக்க போறது நீ"என்று கூற...

அவளோ "நானா... இல்லை வேணாம்"என்று மறுக்க...

வாய் தான் அவ்வாறு கூறியது, கண்களில் அத்தனை ஏக்கம்.

அவனோ "ஐ டோன்ட் கேர், நீ படிச்சாகனும். நாளைக்கே ஏதாச்சும் பங்சன், ஆபிஸ்ன்னு போகும் போது யாராச்சும் நீ என்ன படிச்சுருக்கேன்னு கேட்ட,+2னு சொன்னா எவ்ளோ கேவலமா இருக்கும். என்னை பொருத்தவரை என்னோட சர்வண்ட்ஸ் கூட படிச்சிருக்கனும். நீ என் வைப். புரியுதா?"என்று கேட்டவனை கண்களில் வலியுடன் அடிபட்ட பார்வை பார்த்தாள்.

அடுத்த அரைமணி நேரத்தில் அட்மிஷன் போட்டு, அந்த கல்லூரியில் சேர்ந்து விட்டாள்.

வீட்டுக்கு போகும்போது அவள் "ஆமா என்னோட செர்டிபிகேட்ஸ் எப்படி கெடச்சுது"என்று கேட்க...

"உன் தம்பி தான் குடுத்தான்"என்று கூற...

"எங்க வீட்டுக்கு போனீங்களா"என்று மகிழ்வாக கேட்க...

அவனோ "அவங்க வீட்டுல போய் வாங்கிட்டு வந்தேன். ஈவினிங் நம்ம வீட்டுக்கு வருவாங்க உன்னை பார்க்க"என்று கூறியவனை சலனமில்லாமல் பார்த்தாள் இவனை எந்த விதத்தில் சேர்ப்பதென்று தெரியாமல் குழம்பி போனாள்.

மாலை வீட்டில்?

எத்தனை எபி போட்டாலும் கமன்ட் பண்ண மாட்டுறிங்க சோ டூ டேஸ் ஒன்ஸ் தான் எபி...

 
Well-known member
Messages
787
Reaction score
587
Points
93
Ivan lam Enna design oh theriyalaye 🙄🙄🙄🙄🙄
Edheyyyyy ud two days once thaana
 
Active member
Messages
205
Reaction score
116
Points
43
சைத்ரேயன் கெட்டவண்ல கொஞ்சூண்டு நல்லவன் போல 🤔🤔🤔🤔🤔
 
Top