• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

3👰👰👰

Active member
Messages
180
Reaction score
149
Points
43
யட்சிணி 3👰👰👰



ஆதில் சென்றதும் அவனின் அறையிலேயே மடங்கி அமர்ந்தவள், தரையிலே தலை சாய்த்து படுத்து அதீத அதிர்ச்சியிலும் சோர்விலும் கண்களை மூடியவள் உறங்கி விட்டாள்.

இரவு ஒன்பது மணிப்போல வீட்டுக்கு வந்தவன்,கதவை திறந்துகொண்டு தரையில் உறங்கிக்கொண்டு இருந்த வைஷுவை பார்த்து , அவளின் அருகில் மண்டியிட்டு அமர்ந்து அவளின் முகத்தையே ஆழ்ந்து நோக்கியவன் "ஏண்டி என்ன உனக்கு பிடிக்கல உனக்கு எவ்ளோ தைரியம் இந்த ஆதில் சைத்ரேயன கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்ட இல்லை, நிம்மதியா தூங்குறியா"என்று பாவமாய் ஆரம்பித்தவன் வன்மத்தில் முடித்தான்.

அறையில் சுற்றும் முற்றும் பார்த்தவன் பாட்டிலில் இருந்த நீரை எடுத்து வந்தவன், அவளின் முகத்தில் ஊற்ற,அதில் பதறி போய் எழுந்தவள் கண்கள் சிவக்க ரவுத்திரத்துடன் நின்றிருந்தவனை பார்க்க, கால்கள் நடுங்க, பயத்தில் நின்றிருக்க அவளின் அருகில் வந்தவன் "ஏண்டி புருஷன் வெளிய போய் இவளோ நேரமாச்சு, காணோம்னு எந்த அக்கறையும் இல்லை. சொகுசா ஏ சி ரூம்ல ஹாயா படுத்து தூங்கிட்டு இருக்க, நீதாண்டி பொண்டாட்டி. உன்னை என்ன சொன்னேன் வீட்டுல இருக்க எல்லா வேலையும் பார்க்க சொன்னேன்ல, போ போய் எனக்கு சூடா சப்பாத்தி சிக்கன் பிரை டுவெண்ட்டி மினிட்ஸ்ல வரணும். புரிஞ்சுதா போ"என்றவனின் அரட்டலில் பயந்து நடுங்கியவள் வேகமாக சமையலறைக்கு சென்றாள்.

ஏசி அறையில் அவ்வளவு நேரம் குளிரில் நடுங்கி கொண்டு இருந்தவள்,அவன் செய்த நீராபிஷேகத்தில் குளிரில் வெடவெடக்க, சமையலறையில் வேகமாக அவன் கேட்டதை தயார் செய்ய அப்போது பட்டம்மா சமையலறைக்குள் நுழைந்தவர் "என்னம்மா பண்றீங்க இந்த நேரத்துல, உங்களுக்கு சாப்பாடு எடுத்துட்டு வச்சிருக்கேன். வந்து சாப்பிடுங்க"என்றவாறே வந்தவர் அவரின் உடையை பார்த்து பதறி போனவர் "ஐயோ என்ன உடுப்பு இப்படி ஈரமா இருக்குது, இப்படி நடுங்குறீங்க? துணி மாத்திட்டு வாங்க"என்று கூறியவரை பார்த்து அன்பாய் பார்த்தாள்.

அவரை பார்த்து தயக்கமாக "அம்மா அது சார் சப்பாத்தியும், சிக்கனும் கேட்டாங்க.அதான் தயார் பண்ணிட்டு இருக்கேன்"என்றவள் வேகவேகமாக செய்ய,


அவரோ "சாரா, எந்த சார்"என்று கேட்டவர் "ஓ...ஆதில் தம்பியா... அவர் எப்போவும் வீட்டுல சாப்ட மாட்டாங்கலேமா, ஓ ஒருவேளை பொண்டாட்டி கையால சாப்பிடணும்னு ஆசைப்படறாரோ என்னவோ"என்றவர்
அவளின் அருகில் வந்து கரண்டியை வாங்கியவர் "குடுங்கம்மா நான் பண்றேன். நீங்க துணிய மாத்துங்க"என்று கேட்க...

ஒரு நிமிடம் மாலை நடந்தது வந்து போக "இல்லை இல்லமா நானே பண்றேன்"என்று செய்தவள் அறைக்கு எடுத்து செல்ல, அங்கு அவனோ குழந்தை போல குப்புறப்படுத்து உறங்கி கொண்டிருந்தான்.

அதை டேபிளில் வைத்து விட்டு,"சார், சார்"என்றழைக்க...

அவன் மீது கை வைக்க, மறுநொடியே "ஏய்"என்ற உறுமலுடன் அவளின் கழுத்தில் கைவைத்து தூக்கி சுவற்றோடு சேர்த்து நிற்க , அதில் அவள் மூச்சுக்கு திணற, கண்களில் நீர் திரள, முகம் சிவக்க தன் கையில் தத்தளித்தவளை கண்டவன் மறுநொடியே அவளை கீழே விட, அதில் நிற்க முடியாமல் தடுமாறியவள் அங்கிருந்த டேபிளில் முனையில் நன்றாக இடித்துக்கொள்ள, ரத்தம் கொப்பளிக்க அவள் அப்படியே மயங்கியிருந்தாள்.

அத்தனை ரத்தத்தை கண்டும் பதறாமல் அவளை தூக்கி, மெத்தையில் போட்டான் அந்த இதயத்தில் ஈரமில்லாத மருத்துவன். அந்த அறையில் நெடுநாள் உபயோகம் இல்லாமல் இருந்த அந்த மருத்துவ பெட்டியை வெறுப்பாய் பார்த்தவன், மயங்கிக்கிடந்தவளின் தலைமுடியை பற்றி "இதுவரைக்கும் நான் வெறுத்த எதையுமே நான் தொட்டதில்ல, ஆனா இன்னிக்கு உன்னால"என்றவன் மேற்கொண்டு எதுவுமே பேசாமல் அவளுக்கு வைத்தியம் பார்த்தவன் அவளுக்கு தேவையான மருந்தை வேலையாள் மூலம் வாங்கிவர செய்து அவளுக்கு செலுத்த, தலையில் கட்டு போட்டு விட,அவளோ வலி குறைந்து உறங்க தொடங்கினாள்.

அவனின் கோவமும் வெறுப்பும் தேவையில்லாத ஒன்று, அதுவும் அவனே ஏற்படுத்தி கொண்டான் என்றும் அவனுக்கு புரியவில்லை ஆத்திரத்திலும் பிடிவாதத்திலும்...

 
Active member
Messages
205
Reaction score
116
Points
43
அட கடவுளே இவ்வளவு மூர்க்கமாவா இருப்பான் 😳😳😳😳😳
 
Top