• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

2👰👰👰

Active member
Messages
180
Reaction score
149
Points
43

யட்சிணி 2👰👰👰


வைஷுவை வேகமாக காரில் தள்ளி கதவை சாத்தியவன், காரை வேகமாக ஓட்டிக்கொண்டே பாடலை ஒலிக்க விட்டவன்,


ஹ்ம்ம்மம்ம்ம்ம் ம்ம்ம்ம்
நான் பொல்லாதவன்
பொய் சொல்லாதவன்
நான் பொல்லாதவன்
பொய் சொல்லாதவன்
என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்
வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்
என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்
வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்
கை கட்டி வாய்மூடி யார் முன்னும் நான் நின்று
ஆதாயம் தேடாதவன்
அந்த ஆகாயம் போல் வாழ்பவன் ஹ்ம்ம் ஆ

வானத்தில் வல்லூறு வந்தாலே
கோழிக்கும் வீரத்தை கண்டேனடி
வானத்தில் வல்லூறு வந்தாலே
கோழிக்கும் வீரத்தை கண்டேனடி
ஞானத்தை பாதிக்கும்
மானத்தை சோதித்தால்
நான் என்ன செய்வேனடி

நானுண்டு வீடுண்டு
நாடுண்டு வாழ்வுண்டு
என்றேதான் வாழ்ந்தேனடி
நாளாக நாளாக
தாளாத கோபத்தில்
நான் வேங்கை ஆனேனடி

நான் பொல்லாதவன்
பொய் சொல்லாதவன்
என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்
வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்
கை கட்டி வாய்மூடி யார் முன்னும் நான் நின்று
ஆதாயம் தேடாதவன்
அந்த ஆகாயம் போல் வாழ்பவன் ஹ்ம்ம் ஆ
ர ப ப ப ப ப ப ப
ர ப ப ப ப ப ப ப அஹே ஆ ஆ ஆஹான் ஆ

ஒரு வரி விடாமல் பாடிக்கொண்டே வர வைஷுவோ, அவனை பார்த்து பல்லை கடித்தாள். வாயை திறந்து ஏதாவது பேசினால் தன் குடும்பத்தை ஏதாவது செய்து விடுவானோ என்று உள்ளூற நடுங்கி போயிருந்தாள். அவனுக்குத்தான் கொலை செய்வது சாதாரணம் ஆயிற்றே, சொல்லியதை செய்து விடுவானே, அவன் பாட பாட அவனை முறைத்துகொண்டிருந்தவளை பார்த்தவன் "என்ன பேபி என் பாட்டு அவ்ளோ பிடிச்சிருக்கோ, இப்படி கண் கொட்டாம ரசிக்கிற"என்றவனை வெட்டவா குத்தவா என்ற ரீதியில் முறைக்க அவனின் வீட்டை நெருங்க நெருங்க அவனின் முகமோ இறுகியிருந்தது.

என்ன என்ன செய்யபோகிறானோ என்று அச்சத்தில் இருந்தாள்.

அவர்கள் வரும்முன்னே தகவல் அறிந்து அவனின் சித்தி கோவத்தில் தகித்து கொண்டிருந்தாள்.

காரில் இருந்து இறங்கியவன் நான்கடி நடந்து செல்ல, வைஷு இல்லாததை அறிந்தவன் இரண்டே எட்டில் காரை அடைந்தவன், கார் கதவை தட்டியவன் "என்ன மேடம் கார்ல இருந்து இறங்கி வர மனசில்லையோ? ஓ ஒருவேளை தூக்கிட்டு போகணும்னு நினைக்கிறியோ ஆமால்ல அதுவும் நல்லாதான் இருக்கும். இதோ வரேன்"என்றவன் அவளை தூக்க முற்பட, அவன் கைகளை தடுத்தவள் பதறிக்கொண்டு இறங்கி விட்டாள்.

இதழ் வளைத்து சிரித்தவன் அவளின் கரங்களை பற்றி இழுத்து கொண்டு வர, வாசலிலே அவர்களை இடைமறித்தாள் ஆதிலின் சித்தி விமலா.


"ஆதில் நீ என்ன காரியம் பண்ணிருக்க தெரியுமா? உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா, நம்ம ஸ்டேட்டஸ் என்ன, இவ ஸ்டேட்டஸ் என்ன? ஒருவேளை சோத்துக்கே நம்ம கிட்ட கையேந்தி நிக்கிற அன்னாடங்காச்சி இவளை போய் கல்யாணம் பண்ணிருக்க, இப்போ ரியாக்கு என்ன பதில் சொல்ல போற, வளர்ந்துட்ட அதனாலே உன்னை கண்ட்ரோல் உன் இஷ்டத்துக்கு விட்டதுக்கு நீ என்ன காரியம் செஞ்சு வச்சுருக்க, கொஞ்சமாச்சும் யோசிச்சு பார்த்தியா நாளைக்கு நான் எப்படி எல்லார் முன்னாடியும் நடமாடுவேன் என்ன கேள்வியா கேட்டு துளைப்பாங்களே, இப்படி ஒரு பொண்ண கல்யாணம் பண்ண என்ன காரணம்னு, நான் என்ன சொல்வேன்"என்று பேசிக்கொண்டே சென்றவரை அலட்சியமாக பார்த்தான்.

வைஷ்ணவி அவரின் பேச்சில் கூனிக்குறுகி போய் நின்றிருந்தாள்.

அவனோ "யார் நீ, உனக்கெதுக்கு நான் பதில் சொல்லணும். ஸ்டேட்டஸ் பத்தி பேசறதுக்கு ஒரு தகுதி வேணும். நல்ல டீசெண்டா ட்ரெஸ் பண்ணி காஸ்ட்லியா நகை போட்டா நீ பணக்காரியா? இருபது வருசத்துக்கு முன்னாடி எங்கப்பாக்கு பி, ஏ வேலைபார்த்து அவரை ஏமாத்தி இந்த வீட்டுக்கு வந்த நீயெல்லாம் நான் தாலிகட்டி கூட்டிட்டு வந்த வைப் பத்தி பேச தகுதியே இல்லை புரிஞ்சுதா ப்ளடி பிட்ச். இதான் உனக்கு கடைசி முறை நீ என்கிட்ட நேருக்கு நேரா பேசுறது இனி ஒரு முறை என் லைன்ல நீ கிராஸ் ஆனா நாய சுடுற மாறி சுட்டு நடுத்தெருவில வீசிறுவேன்"என்றவன் கண்களில் தெரிந்த உறுதியில் ஆடிப்போனார் அவர்.

அவளுக்கோ இவனா பேசினான் என்று நினைக்க, ஒரு வேளை மாறிவிட்டானா தனக்காக தான் அவன் கெட்டவன் ஆனானோ என்று நினைக்க, அவளுக்கு தெரியவில்லை அவன் கேடுகெட்டவன் என்று...


கால்கள் தானாக விலகி அவனுக்கு வழிவிட, மனைவியை அழைத்து கொண்டு உள்ளே நுழைய,"அய்யா ஒரு நிமிஷம்"என்ற குரலில் நிமிர்ந்தவன், வேலைக்காரியை முறைக்க, அவளோ தலைகுனிந்த படியே"அய்யா பெரியம்மா உங்களுக்கும் சின்னம்மாக்கும் ஆரத்தி எடுக்க சொன்னாங்க"என்று பவ்யமாக, கூற...

அதைக்கேட்டவன் முகம் இறுகி போக,வைஷுவை திரும்பி ஏளனமாக பார்த்தவன் "என்ன சொன்ன மறுபடியும் சொல்லு"என்று வேலைக்காரியை அதட்ட, அவளோ பயந்து நடுங்கியவள் "அ... அய்யா ஆர, ஆரத்தி"என்று கூற,"இல்லை அதுக்கு முன்னாடி"என்று வார்த்தைகளை கடித்து துப்ப,"அது அதுவந்து உங்களுக்கும் சின்னம்மாவுக்கும்"என்று திக்கி திணறி கூற,


அவள் கூறியதில் வாய்விட்டு சத்தமாக சிரிக்க, அங்கு கிட்டத்தட்ட பத்து பேருக்கும் மேல் இருப்பார்கள் வேலைகாரர்கள் அவர்கள் அனைவருமே இப்போஎதுக்கு இவர் இப்படி சிரிக்கிறார் என்பது போல் பார்க்க, விமலாவுமே அங்கு நடப்பதை பார்த்து கொண்டு இருக்க அவருக்கோ "பைத்தியமாயிட்டானா இவன்"என்று தான் தோன்றியது.

"இவ ஒண்ணும் உங்களுக்கு சின்னம்மா கிடையாது, எல்லாரும் கேட்டுக்கோங்க, இதோ இவளும் இன்னைல இருந்து உங்கள்ள ஒருத்தி தான், புரியுதா அதாவது வேலைக்காரி என்னோட வேலைக்காரி"என்று ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் அழுத்தம் கொடுத்து கூற, வைஷு அதிர்ந்து போனாள்.

"ஹான் அப்புறம் இன்னொரு விசயம் சொல்றேன், உங்க எல்லாருக்கும் ஒரு விசயம் நீங்க எல்லாரும் இனிமேல் இங்க வேலைக்கு வர வேணாம், எல்லாருக்கும் நாளைல யிருந்து பேக்டரில தான் வேலை. ஏன் சொல்றேன்னா இங்க நான் ஒரு புது வேலைக்காரிய அப்பாயிண்ட் பண்ணிருக்கேன். அதனால உங்க யாருக்கும் இங்க வெட்டி சம்பளம் தர நான் விரும்பல, அண்டர்ஸ்டாண்ட் கிளம்புங்க எல்லாரும், பட்டாம்மாவை தவிர "என்றவன் கூற, அனைவரும் அவளை பாவமாக பார்த்து விட்டு செல்ல, விமலாவுக்கோ சுவாரஸ்யம் அதிகமானது.

வைஷ்ணவி கண்களில் வழியும் நீருடன் அவனையே பார்த்திருக்க,
அவளை இகழ்ச்சியாக பார்த்தவன் "இன்னும் அஞ்சு நிமிஷத்திலே எனக்கு காபி எடுத்துட்டு ரூமுக்கு வரணும், புரியுதா அதே போல இனிமேல் இந்த வீட்டுல எல்லா வேலையையும் நீ செய்யணும்.புரிச்சிருக்கும்னு நினைக்கிறன்"என்றவன் வேகமாக படிகளில் ஏறி சென்று விட்டான்.

அவளோ சிலையாய் நின்றிருக்க, அங்கு முன்பு சமையல் வேலைசெய்து கொண்டிருந்த பட்டம்மா அவளின் தோள் தொட்டு "அம்... அம்மா இந்தாங்க காபி லேட்டா போனா தம்பிக்கு கோவம் வரும், போங்க"என்று அவளை அனுப்பி வைத்தவருக்கு அவளை எண்ணி பாவமாக இருந்தது.இவன் கையில் வந்து சிக்கி விட்டாலே என்று பரிதாபப்படத்தான் தோன்றியது.

மாடி ஏறியவள் எந்த அறை என்று தெரியாமல் செல்ல, அங்கோ மூன்று அறைகள் மட்டுமே இருக்க, அதில் இரண்டாம் அறை பூட்டி இருக்க, மற்ற இரண்டும் திறந்திருக்க முதல் அறையில் கேட்ட சத்தத்தில் காபியை எடுத்து கொண்டு உள்ளே நுழைய, கபோர்டில் ஏதோ எடுத்துக்கொண்டு இருந்தவன் கொலுசு சத்தத்தில் திரும்பியவன் "ஏய் உனக்கு கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லையா? ஒருத்தங்க ரூமுக்குள்ள வரும்போது தட்டிட்டு வரணும்னு தெரியாதா? ஓட்டு வீட்டுல ஒத்த ரூம்ல இருந்தவங்களுக்கு இதெல்லாம் எப்டி தெரியும்.திறந்த வீட்டில ஏதோ நுழைற மாதிரி"என்று வார்த்தை பேசியவன், அவளின் கையில் இருந்த காபியை வெடுக்கென பறிக்க, அவளின் கண்களோ கலங்கி போயிருந்தது.

காபியை ஒரு மிடறு குடித்தவன் மறுநொடியே சூடாக இருந்த காபியை அவளின் முகத்தில் ஊத்தியிருந்தான். துடித்துப் போனாள் பாவையவள். வெந்நீரால் கூட குளித்து பழகாதவள் சூடான காப்பி கொட்டியதில் அவளின் முகமோ சிவந்து போனது.

கண்களில் கண்ணீர் வர,சூடு தாங்காமல் வாய்விட்டே அலறியிருந்தாள்.அவளின் அலறலையும் கண்ணீரையும் வெறுப்பாக பார்த்தவன் "ஹேய் மூச்... சத்தம், கண்ணை தொட.நீ இனிமேல் எனக்கு சொந்தம் நீ அழுகிறதா இருந்தாலும் சிரிக்கிறதா இருந்தாலும் அது எனக்கு மட்டும் தான் புரியுதா, போ போய் உன் கையால காபி போட்டு எடுத்துட்டு வா, சொல்ல வரது புரிஞ்சுதுல"என்று கேட்க, அவளின் தலையோ தானாக ஆடியாது.

முகத்தை தன் புடவையால் துடைத்து கொண்டு சமையலறைக்கு சென்றவள்,தன் நிலையை எண்ணி முகத்தை துடைத்து கொண்டு அவனுக்கு காப்பி போட்டு எடுத்து கொண்டு செல்ல, முன்பை போல் அல்லாமல் அவன் அனுமதியுடன் உள்ளே செல்ல, அவன் கையில் காபியை தர, அத்தை வாங்கிட்டு டீபாயில் வைத்தவன் வெளியில் செல்ல திரும்பியவளின் கைப்பற்றி இழுத்தவன் வன்முறையாய் அவளை இதழை தீண்டியிருந்தான்.

அவள் மூச்சு விட முடியாமல் திணற, வெகுநேரம் கழித்து விலகியவன் அவளை சுவற்றோடு சேர்த்து வைத்து "உன்னை காதலிக்குறேன்னு சொல்லி டார்ச்சர் பண்ணி கல்யாணம் பண்ணிட்டு, இப்படி கொடுமைப்படுத்தறேன்னு தோணுதா?" என்று கேட்க,அவளின் கண்களும் அதையே பிரதிபலிக்க...

"எப்போ இன்னொருத்தன காதலிக்கிறேன்னு சொல்லி, அவனை கல்யாணம் பண்ணிக்க தயாராக இருந்தியோ? அப்போவே முடிஞ்சுது என்னோட காதல். அப்புறம் ஏன் உன்னை கல்யாணம் பன்னேனு கேக்குறியா? என்ன வேணாம்னு சொல்லிட்டு நீ மட்டும் நிம்மதியா இருக்கலாமா? இந்த ஆதில் சைத்ரேயன் ஒண்ணு நினச்சா அதை அடைஞ்சு தீரணும், அதுக்காக என்ன வேணா செய்வேன் யார வேணாலும் கொல்லுவேன் புரியுதா?இனி நீ இந்த வீட்டுக்கு மட்டும் இல்லை, எனக்கும் நீதான் வேலைக்காரி"புரிஞ்சிருக்கும்னு நினைக்குறேன் என்றவன் வெளியே சென்று விட்டான்.

வந்த ஒருமணி நேரத்திற்கே இப்படியானால், வாழ்க்கை முழுவதும் எப்படி வாழ போகிறோம் என்று தோன்ற, அங்கேயே மடங்கி அமர்ந்து விட்டாள்.

நாளை அவன் செய்யும் காரியத்தில்...

அதை நாளைக்கு எபில சொல்றேன்.
 
Top