• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

13completed

Active member
Messages
180
Reaction score
149
Points
43
யட்சிணி 13

விமலாவிற்கு பின் யாரோ ஒருவர் இருப்பது புரிய, அவரை தேட தொடங்கியிருந்தான். நாட்களும் கடக்க வைஷுவும் அவளின் கனவை நிறைவு செய்திருக்க,ஆதிலின் நண்பன் மருத்துவமனையிலே அவள் பணிபுரிய தொடங்கியிருந்தாள்.

வைஷுவிற்கு நந்தினி தன் தந்தையின் தங்கை என்பது தெரியும். ஆதிலின் அவர்களின் மீதான வெறுப்பிற்கு காரணத்தை அறிந்து கொள்ள, நந்தினியை நாடினாள்.

வைஷு "அத்தை அப்பா, அம்மா என்ன பண்ணாங்க, நீங்களும் அவங்க கிட்ட பேச விரும்பல, அவங்களை ஒதுக்கி வச்சிருக்கீங்க? அப்புறம் உங்க பையனும் அவங்கள வெறுக்குறாங்க என்ன காரணம்? என் அப்பா யாருக்கும் எந்த துரோகமும் செஞ்சது இல்ல, இன்னைக்கு வரைக்கும் உங்க புள்ள என் குடும்பத்து மேல வெறுப்ப மட்டும் தான் காட்டுறாரு, சின்ன அத்தையோட பையனையும் சுட்டு கொன்னுட்டாரு? அவங்க பாவம் தானே? இவ்வளவும் பண்ணது அவர், அப்புறம் ஏன் அப்பாவை துரோகினு சொல்ராங்க எனக்கு புரியல?"என்று பரிதவிப்புடன் வினவியவளின் தலையை தடவி விட்டவர்,

நந்தினி "அது அவனுக்கு சின்ன வயசுல ஏற்பட்ட அனுபவம்டா, நான் ஆதில் அப்பா விமலாவ கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்தப்போ ஆதிலோட இந்த வீட்ட விட்டு வெளிய போய் எங்க போறதுன்னு தெரியாம தவிச்சு, அண்ணன் வீட்டுக்கு போலாம்னு அங்க போனேன். அவங்க என்ன கட்டி குடுத்தத்தோட கடமை முடிஞ்சுதுன்னு நிம்மதியா இருந்தவங்களுக்கு நான் இப்படி போய் நிக்கவும், அவங்களுக்கு பாரம்னு எங்களை உள்ள விடவே இல்ல உன் அப்பாவும் அம்மாவும், என்னை வெளிய இழுத்து தள்ளி அடிச்சு தொரத்திட்டாங்க அப்போ ஆதிலுக்கு எட்டு வயசு அதெல்லாம் அவனோட மனுசுல ஆழமா பதிஞ்சுருச்சு, அவங்க கொஞ்சம் புரிஞ்சு நடந்துகிட்டு இருந்தா நானும் கஷ்டப்பட்டு இருக்க மாட்டேன். அந்த கோவம் நாட்கள் கடக்க கடக்க அவனுக்குள்ள அவங்கள பிடிக்காமலே போய்டுச்சு, மத்தபடி சந்திரனை என்ன காரணத்துக்காக கொன்னானு எனக்கு இப்போ வரைக்கும் தெரியல, உயிரோட அருமை தெரிஞ்சவன் அவன் காரணம் இல்லாம ஒரு உயிரை கொல்ல மாட்டான், அதுக்கு பின்னாடி ஏதோ ஒரு விஷயம் இருக்கு, அவனே வருவான் உன்கிட்ட கொஞ்சம் பொறுமையா இரு"என்று கூறியவரின் மடியிலேயே அமைதியாக தலை சாய்த்து கொண்டவளுக்கு தன் குடும்பத்தின் மீதான வெறுப்பும் புரிந்திருந்தது.

ஆதிலின் மனம் ஏனோ அன்று நிலையில்லாமல் துடித்து கொண்டு இருந்தது. அன்று மருத்துவமனைக்கு சென்று இருந்த வைஷுவை யாரோ கடத்தி விட்டதாக தகவல் வர, தேடலின் முடிவில் அவர்களின் காலனாய் மாறி இருந்தான்.

வைஷுவின் பாதுகாப்பிற்காக அவளின் பிறந்தநாள் அன்று ராகவ் அவளுக்கு பரிசளித்திருந்த கைகடிகாரத்தில் பதிந்திருந்த ஜிபிஸ் மூலமாக அவளை வைத்திருக்கும் இடம் தேடி சென்றிருந்தான்.

நகரத்தில் இருந்து வெகுதொலைவில் ஒரு காட்டில் இடிந்து போன ஒரு வீட்டில் வைஷுவை அடைத்து வைத்திருந்தனர் ராகவும் விமலாவும்...

ஆதில் மட்டுமே காரை எடுத்து கொண்டு வந்திருக்க, வரும் வழியில் அத்தனை ஆக்ரோசமாய் வண்டியை ஓட்டியிருந்தான்.

அந்த வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தவனை "ஹோ வெல்கம் மை சன்"என்ற குரலே வரவேற்க, அந்த குரலை இனம் கண்டு கொண்டவனுக்கு இதுவரை இருந்த ஆவேசமும் ஆத்திரமும் மறைந்து போய் இருக்க கண்களில் கண்ணீர் வழிய உடல் நடுங்க பார்த்திருந்தான் தன் தந்தையை...

"அப்பா"என்றவனின் குரல் தந்தியடிக்க, அவர் அருகில் ஓடி சென்றவன் அவரின் முகத்தை வருடியவன் தாவி அணைத்திருக்க,அப்போதுதான் உணர்ந்தான். அவர் தன்னை அனைக்காததையும் அவரின் உடழ்மொழியையும், நொடியில் புரிந்து கொண்டான். அவரின் மாற்றத்தையும் அவருக்கு பின்னால் கை, கால்கள் கட்டிய நிலையில் கிடந்த வைஷுவும் அவளின் வேண்டாம் என்ற தலையசைப்பும் சொன்ன செய்தியில் நடுங்கித்தான் போனான் அவன்.

மறுநொடி அவரை பிரிந்தவன் "யார் நீ"என்று கர்ஜிக்கும் குரலில் வினவியவனை கண்டு சிரித்த ராகவ்," இப்போ தான் உன் வாயால அப்பான்னு ஆசைத்தீர கூப்பிட்டியே கண்ணா, அப்புறமும் யார்னு கேக்குற"என்று நக்கலாக கூறியவரை கடும் கோபத்துடன் பார்த்திருந்தவனின் முதுகில் கத்தியை இறக்கி இருந்தால் விமலா.

கண்களில் கடும் அனலுடனும் வலியிலும் திரும்பியவனோ தன் முதுகில் கத்தியை இறக்கி இருந்த விமலாவையும் அத்தை கண்டும் சிரிக்கும் ராகவையும் கண்டவன் இதழ்களோ "துரோகி"என்று கூற...

ராகவோ "இவனை வச்சு இன்னும் எவ்ளோவோ காரியம் ஆகணும், அதுக்குள்ள ஸ்டார்ட் பண்ணிட்டியா? பொறுமையா இரு விமலா, நம்ம காரியம் முடிஞ்சதும் இவங்க ரெண்டு பேரையும் உன் ஆசைப்படி என்ன வேணாலும் செஞ்சுக்கோ"என்றவனை ஏளனமாக பார்த்தவனோ "ஓ அப்போ இவளுக்கு பின்னாடி இருந்தது நீதானா? காசுக்காக இவ்ளோ கேவலமா இறந்த மாதிரி ட்ராமா போட்டு இத்தனை வேலையும் பண்ணிருக்க உன்ன போய் அப்பான்னு சொல்லவே கேவலமா இருக்கு"என்று கூறியவனை பார்த்த ராகவ் "யாருக்குடா வேணும் நீ காட்டுற அப்பா புள்ள பாசமும் உங்கம்மாவோட கண்ணீரும் வேஷமும்... எனக்கு தேவை பணம், எப்போவோ என் கைக்கு வந்திருக்க வேண்டியது உன் பிச்சைக்கார அம்மாவால எல்லாம் நாசமா போச்சு"என்று ஆதியில் இருந்து நடந்தவற்றை கூற, ஆதிலுக்கு அப்போது தன் புரிந்தது தான் எவ்வளவு எளிதாக ஏமாற்றப்பட்டு இருக்கிறோம் என்று, அந்த கயவனை காணக்காண ஆத்திரம் தலைக்கேறியது.

தன் கனவு, அவனின் சுயம், தாயின் பாசம் அனைத்தையும் இவனை கொன்று விட்டதாய் எண்ணி அந்த குற்றவுணர்வில் அனைத்தையும் இழந்து விட்டானே, எத்தனை மென்மையானவன் அவனே அவனை கெட்டவனாக்கி கொண்டானே அதுவும் இந்த நம்பிக்கை துரோகிக்காக...

இவன் தன் தாயை எப்படி நம்ப வைத்து ஏமாற்றி, பல வருடங்கள் பைத்தியமாகவும் மாற்றி இருந்தானே அத்தனையும் தகுதியே இல்லாத இந்த நாய்க்காக இப்போதே கொன்று புதைத்து விடும் அவனை வெறியுடன் முன்னேறியவனின் கைகளை இழுத்து பிடித்து கொண்டனர் அவர்களின் அடியாட்கள், அப்போதுதான் சுயம் உணர்ந்து திரும்பியவனின் கண்களில் பட்டனர் அவர்களை சுற்றி 20 பேராவது நின்று கொண்டிருந்த ஆயுதத்துடன்...

ராகவ் "என்னடா பாத்துட்டு இருக்கீங்க? பிடிங்க அவனை" என்று கூற...

அவள புடிச்சி இழுத்துட்டு வாங்கடா இங்க என்று தன் அடியாட்களுக்கு கட்டளை இட,அதில் ஒருவன் வைஷுவின் தலை முடியை பற்றி இழுத்து வர, ஆதிலின் கண்களோ ரத்தமென சிவக்க, "டேய் மரியாதையா அவளை விட்ருங்க, இல்ல எவனும் இங்க இருந்து உயிரோட போக முடியாது"என்று தன் சிம்ம குரலில் கர்ஜிக்க...

விமலாவோ "முதல்ல நீ இங்க இருந்து உயிரோட போறியான்னு பார்க்கலாம். மரியாதையா எல்லா ப்ரொபேர்ட்டி பேப்பர்ஸ்லையும் சைன் பண்ணிட்டினா உன்னையும் உன் பொண்டாட்டியையும் உயிரோட விடுவேன். இல்லனா ரெண்டு பேரு கழுத்தையும் அறுத்து போற்றுவேன் "என்று கத்த...

அதில் சிரித்தவனோ," சிரிப்பு வர மாதிரி காமெடி பண்ற பாத்தியா? ஆனா என்ன செய்ய இப்ப எனக்கு சிரிக்கிற மூடு இல்லையே?" என்று தாடையை தடவி யோசித்தவன், தன் மொத்த பலத்தையும் ஒன்றிணைத்து தன்னை பிடித்திருந்தவர்களை உதறித் தள்ளினான்.

விமலா ஓடிச்சென்று வைஷுவை பிடித்து இழுத்து அவளின் வாயில் ஒட்டியிருந்த பிளாஸ்டரை எடுத்து "ஏய் மரியாதையா உன் புருஷன் கிட்ட சொல்லி எல்லா ப்ராப்பர்ட்டிலையும் கையெழுத்து போட சொல்லு அவன் கையெழுத்து போட்டா உங்க ரெண்டு பேர்த்தையும் உயிரோடு விடுவேன் இல்லனா உங்களுக்கு இங்கே கொன்னு புதைச்சிருவோம்" என்று கூற...

எதிரில் நின்று இருந்த ஆதிலை பார்த்தவள் விமலாவை ஏளனமாக பார்த்து " யார் யாரை கொண்டு புதைக்கிறாங்கன்னு பார்த்துவிடுவோமா"என்று கூறி விமலாவின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறையை விட்டவள் ஓடிச்சென்று ஆதிலை அணைத்து கொள்ள அவளின் முகத்தை வருடியவனோ, "நவீமா உனக்கு ஒன்னும் இல்லையே"என்று பரிதவிப்புடன் வினவ, அவளோ இல்லை தலையாட்டியவன் அவளை கைக்குள்ளே வைத்துக்கொண்டவன் தன்னை சுற்றி நின்றவர்களுக்கு
அவர்களுக்கு காலனாய் மாறி அனைவரையும் அடித்து தள்ள, எதிர்த்து அடிக்க வந்தவர்களை வேங்கையின் சினத்துடன் அடித்து வீச, ஐந்து நிமிடமே அதிகம் உயிரோடு இருந்தவர்களில் சிலர் மட்டுமே உயிர் பிழைத்தால் போதும் என்று தப்பி ஓடி இருந்தனர்.

அனைவரும் சென்று விட, விமலாவோ ஓடிச்சென்று ஆதிலிடம் இருந்து வைஷுவை பிரிக்க முயற்சிக்க, அவனோ அவளின் கழுத்தை பிடித்து தூக்கி வீசி இருந்தான்.

மறுநொடியே அவனின் வயிற்றில் கத்தியை இறக்கி இருந்தான் ராகவ்."நீ செத்தாலும் சொத்து என் பையன் ஆரவ்க்கு தானே, அப்போ நீ செத்துரு" என்றவன் மீண்டும் ஓங்கி வயிற்றில் சொருகியவனின் கழுத்தை பிடித்து காலடியில் போட்டவன் நொடியும் தாமதிக்காமல் துப்பாக்கியை எடுத்து அவனின் மார்பில் சுட்டு அவனை கொல்ல, அத்தை அதிர்வுடன் பார்த்து கொண்டு இருந்த விமலாவின் நெற்றியிலும் தோட்டவையும் இறக்கி இருந்தான்.


அவன் வயிற்றில் இருந்து உதிரம் அதை பொருட்படுத்தாமல், சுற்றிலும் பார்க்க, அங்கு அவர்களுக்காக பெட்ரோல் வாங்கி வைத்திருந்ததை எடுத்து, இருவரின் மேலும் ஊற்ற, அதில் அதிர்ந்து போன வைஷுவோ, "வேணாங்க ப்ளீஸ்... பண்ண வரைக்கும் போதும், இதெல்லாம் தப்பு, ரத்தம் வேற நிறைய வருது நம்ம போலாம் "என்று அவனின் வயிற்றில் செருகியிருந்த கத்தியை பார்த்தவாறே கூற, அவனோ "இதுங்க செஞ்ச துரோகத்துக்கு இவங்களோட மிச்சம் எதுவும் இங்க இருக்க கூடாது"என்றவன் அவர்கள் இருவரையும் கொளுத்தி விட, வைஷ்ணவி தான் பயந்து போக, அவளின் கையை பற்றி இழுத்து கொண்டு வெளியே வந்தவன் அத்தனை வலிகளுடன் வெகுதொலைவு அவளை அழைத்து வந்திருக்க, அதற்கு மேல் தாங்க முடியாதவனோ
ஆஹ் என்று கத்தியவாறே வயிற்றில் இருந்த கத்தியை பிடிங்கினான் ஆதில் சைத்ரேயன், ரத்தம் கொட்டியது.

வைஷு "ஐயோ எவ்ளோ ரத்தம் என்னங்க"என்று கதறியவள்,"வாங்க ஹாஸ்பிடல் போகலாம்" என்று கண்களில் கண்ணீர் வர கதறி அழ...

அந்த நிலையிலும் அவளின் அழுகையை ரசித்தவன் "உன்னோட கண்கள்ல வர கண்ணீர் எனக்காகவா? அப்போ உனக்கு என் மேல காதல் வந்துருச்சு தானே"என்று கேட்க...

அவளோ "உங்களுக்கு கொஞ்சம் கூட பயமா இல்லையா? இந்த காட்டுக்குள்ள ஒருத்தரும் இல்லை. இவளோ ரத்தம் போகுது. உங்களுக்கு ஏதாச்சும் ஆயிட்டா நான் என்ன பண்ணுவேன். ஆனா இப்போ கூட இந்த கேள்வி முக்கியமா?" என்று கேட்டவளை பார்த்தவன்...

அவளின் முகம் பற்றி அருகில் இழுத்தவனோ "நீ என்னை காதலிக்கிறேன்னு சொல்லு, அந்த சாவை கூட விரட்டியடிச்சு உன் சைத்து உன் கிட்ட வருவேன் நவிமா"என்று கூறியவனையும் அவனின் பிடிவாதத்தையும் பார்த்தவள் "இந்த நிலைமையில கூட என்னை துடிக்க வைக்குற இல்லை"என்றவளிடம் "ஒரே ஒரு வார்த்தை லவ் பண்றேன் சொல்லு, இல்லனா இங்கருந்து ஒரு எட்டு கூட அசைய மாட்டேன்" என்று கூறியவனை அதிர்ந்து போய் பார்த்தாள்.

ரத்தம் அதிகம் வெளியேறி இருக்க, அவனின் நிலை அவளுக்கு நன்றாக தெரிந்தது. வலியை கட்டுப்படுத்தி இதழில் சிரிப்புடன் கண்களில் காதலுடன் அவளின் காதல் வார்த்தைக்காக தவம் இருக்க,அவளோ
கண்ணீர் மல்க பார்த்தவள் "ஐ லவ் யூ சைத்து, லவ் யூ சோ மச்"என்று கூற, அதை கேட்குமுன்னே மயங்கியிருந்தான் அவன்.

அவனின் கன்னத்தை தட்டியவளோ "ஆதில் இங்க பாரு ஆதில் கண்ண திற, ஐயோ இப்போ நான் என்ன செய்வேன்"என்று பதற,

தூரத்தில் ராகுல்ன் குரலும் ஆரவின் குரலும் கேட்டது. வைஷு, ஆதில் என்று ராகுல் கத்திக்கொண்டே வர, ராகுல்ன் குரலை கேட்டதும் உயிர் பெற்றவளாய்,"ராகுல் அண்ணா "என்று கத்த, அவர்களை கண்டு விட்ட ராகுலும் ஆரவும் வந்து ஆதிலை தாங்கி கொள்ள, ஆரவ் காரை ஓட்ட காரில் வைஷுவின் மடியில் ஆதில் இருக்க, வைஷுவோ "உங்களுக்கு ஒன்னும் ஆகாது, இங்க பாருங்க, கண்ண திறடா சைத்து லவ் யூ என்ன பாரேன். நீ கேட்ட லவ் நான் சொல்லிட்டேன் தானே அப்புறமும் ஏன்டா என்ன சாகடிக்குற?"என்று கதறிக்கொண்டே வர...

அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான் அவன். கத்தி குத்தி வெகுநேரம் ஆகியிருக்க, ரத்தமும் நிறைய வெளியேறி இருந்தது. நந்தினி, வைஷுவின் பெற்றோர் என அனைவரும் வந்துவிட, வைஷுவோ தனியாய் கண்களில் நீர் வடிய எங்கோ வெறித்து கொண்டு இருந்தாள்.

வைஷுவின் தாயோ "ஐயோ கடைசிலே நான் குடுத்த சபமே பழிச்சிறுச்சே, என் பொண்ண என்னால இப்படி பாக்க முடியலை கடவுளே, என் மாப்பிளைய காப்பாத்தி குடு"என்று சாபம் விட்ட அதே கடவுளிடம் வேண்டிக்கொண்டு இருந்தாள்.

வைஷு அங்கு என்ன நடந்ததுஎன்று யாரிடமும் கூறவில்லை. விசாரணை நடத்திய போலிசாரிடமும் தன்னை கடத்தியவர்கள் குத்தி விட்டு தப்பி சென்றதாக மட்டுமே உரைத்தாள். நந்தினிக்கு எதையும் தெரியப்படுத்த கூடாது என்று தானே ஆதில் அவர்களை தடையம் இல்லாமல் எரித்தது.

அனைவரையும் தவிக்க வைத்து கண்களை திறக்க, சுற்றிலும் அனைவரும் நிற்க,"நவீமா ஐ லவ் யூ சொன்னதானே"என்று கேட்க... அவளுக்கு அழுகை மட்டுமே வந்தது.

அங்கு இருந்த ராகுல் "ஏன்டா இப்படி அவளை படுத்தி எடுக்குற, ஒரு தடவ இல்ல, நீ கண்ணு முழிக்கிற வரைக்கும் அவ லவ் யூ மட்டுமே தான் சொன்னா போதுமா?"என்று கேட்க...

ஆதிலின் இதழ்களோ சிரிப்பில் விரிய, வைஷுவோ ஓடி சென்று அவனை அணைத்து கொள்ள, அனைவரும் நாகரீகம் கருதி வெளியேறினர்.

அவள் அணைத்ததில் அவனின் வயிற்றிழல் கை பட, ஸ்ஸ் என்று முனக,"அச்சோ சாரி தெரியாம பட்ருச்சு"என்று அவள் பதற, அவனோ அதையும் ரசித்தான்.

அதில் கோபம் கொண்டவளோ, "நான் அழுதா அதை ரசிப்பீங்களா? எனக்கு கஷ்டமா இருக்கு"அவனோ "நீ அழறது எனக்காக அப்போ நான் ரசிக்கணும்ல"என்று கூற அவளுக்கோ அவனின் பேச்சில் சிரிப்பு தான்...

ஒரு மாதம் கழிந்திருக்க, ஆதில்க்கு உடம்பு அன்று அனைவரிடமும் பேச வேண்டும் என்று அழைத்திருக்க, ஆரவ், ராகுல், வைஷுவின் பெற்றோர், நந்தினி, ரியா அனைவரும் இருக்க, அவனோ ஆரவிடம் அனைத்தையும் ஒப்படைத்து இருந்தான்.

அவன் இதெல்லாம் தனக்கு தேவையில்லை என்று மறுக்க, ஆதிலோ அதை அவனிடமே கொடுத்து இருந்தான். நந்தினிக்கும் வைஷுவிற்கும் இதில் மகிழ்ச்சியே...

தான் படித்த மருத்துவத்தையே தான் எதிர்காலமாக்கி கொள்ள போவதாகவும் தனக்கு இதை பார்த்து கொள்ள நேரம் இல்லை என்றும் சமாதானம் செய்திருந்தான்.

நந்தினிக்கு மகன் தன்னிடம் ஏதோ மறைக்கிறான் என்று அதை மறக்க நினைக்கிறான் என்றும் புரிய மேற்கொண்டு அதை பற்றி எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.

ஆதில் அறைக்குள் நுழைய, வைஷு கையில் குங்குமத்தை வைத்துக்கொண்டு கண்ணாடியின் முன் அமர்ந்து ஏதோ நினைப்பில் இருக்க, அவளின் பின் வந்து நின்றவன் குங்குமத்தை எடுத்து அவளின் வகிட்டில் வைத்து விட, அவளின் இதழ்களோ தாராளமாக விரிந்தது.

அங்கிருந்து எழுந்தவளோ வேகமாக அவனை அணைத்து முகமெங்கும் முத்தமிட, அவனோ அதிர்ச்சியாய் அவளின் முகம் பார்க்க, அவளோ முகம் சிவந்தவளாய் சம்மதமாய் அவனின் மார்பில் சாய்ந்து கொண்டாள்.

அவளின் செயலை கையில் எடுத்துக்கொண்டவனோ மொத்தமாய் அவளை கொள்ளையிட்டே விலகினான்.

கூடல் முடிந்துஅவன் மார்பில் தலை வைத்து படுத்திருந்தவளோ, "நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் சைத்து, நீங்க இனிமேல் யாரையும் அடிக்கிறேன் கொல்லுறேன்னு கிளம்ப மாட்டீங்க, நம்ம ரெண்டு பேரும் ஒரே ஹாஸ்பிடல் ல ஒர்க் பண்ண போறோம். என்னோட ஹஸ்பண்ட் எனக்கே எனக்காக எப்படி இருக்கணும்னு ஆசைப்பட்டனோ அப்படியே மாறிட்டீங்க, ரொம்ப சந்தோசமா இருக்கேன்"என்று கூறியவளை அணைத்து கொண்டவன், நானும் எவ்ளோவோ தப்பு பண்ணிருக்கேன் அதை எல்லாம் மறந்து மறைச்சு என்ன அப்படியே ஏத்துக்கிட்ட என்னோட தேவதை நீ, உனக்காக நான் மாறினதுல எனக்கும் சந்தோசம்.என்னோட தேவதை டி நீ... இந்த காலனோட யட்சிணி என்றவளை அணைத்துக் கொண்டான்.

நன்றி...
 
Top