• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

11👰👰👰

Active member
Messages
180
Reaction score
149
Points
43
யட்சிணி 11


அந்த பெண்கள் தன் கணவனை பற்றி அசிங்கமாக பேசிக்கோண்டிருப்பதை பொறுக்க முடியாதவளோ, ஆதிலை மனிதனா என்று கேவலமாக பேசிய பெண்ணின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருக்க,அவர்களோ அந்த நேரத்தில் அவளை எதிர்பாரதவர்கள் அவளிடம் "சின்னம்மா, அவங்க உங்களுக்கு துரோகம் பன்றாங்க, அதை பொறுத்துக்க முடியாம தான் நாங்க அப்டி பேசிட்டோம். உங்க மேல இருக்க அன்புள தான் இப்டி நடந்துகிட்டோம், மன்னிச்சுக்கோங்க அம்மா"என்று மன்னிப்பு வேண்ட...

சத்தம் கேட்டு வந்த ஆதிலும் மான்சியும் வைஷுவின் அதிரடியில் அதிர்ந்து போய் நின்றனர்.ஆதில் பலவிதமான உணர்ச்சிகளின் பிடியில் தவித்திருந்தான். அவள் தன்னை தவறாக நினைத்து விடுவளோ என்று தவித்து கொண்டிருந்தான்.


மேலும் அவர்கள் ஆதிலை குறை கூற அதை பொறுக்க முடியாதவள் "யார் துரோகி, அவரா அவர் கொடுக்கற சம்பளத்தையும் அவரோட சாப்பாடையும் சாப்பிட்டு இப்டி அவரை பத்தியே புறணி பேசுறிங்களே, நீங்க தான் துரோகிங்க, ஒரு பொண்ணும் ஆணும் பக்கத்துல உட்கார்ந்து கையை பிடிச்சு பேசிட்டு இருந்தாலே அவங்களுக்குள்ள தப்பான உறவு தான் இருக்குமா? ஏன் உங்களுக்கு தெரிஞ்ச எந்த அண்ணன் தங்கையும், பிரண்ட்ஸ்யும் இப்படி இருந்தது இல்லையா? என் புருஷன பத்தி எனக்கு தெரியும், எனக்கு உங்களோட அக்கறையும் தேவையில்லை, இந்த மாதிரி இட்டுக்கட்டி சொல்ற அன்புள உருவான அறிவுரையும் தேவையில்லை. இதுக்கு மேல இன்னொரு வார்த்தை அவங்கள பத்தி பேசுனா,அதான் நீங்க இங்க வேலை பாக்கற கடைசி நாளா இருக்கும் புரியுதா? போய் வேலையை பாருங்க"என்று எச்சரித்து அனுப்பினாள்.

அவர்களை அனுப்பி விட்டு திரும்பியவளின் கண்களில் ஆதிலும் அவனின் அருகில் இருந்த பெண்ணும் பட, அவளின் விழிகள் முழுதாய் மூன்று வருடங்களின் பின் அவனை பார்க்கிறாள். எப்போதும் கிளீன் சேவில் இருப்பவன் இன்று பலமாதங்கள் மழிக்கப்படாத தாடியும், கண்களில் அவளுக்கான காதலும் அவனும் அவளை பார்வையிலே வருடினான்.

அவள் தான் அவளை பார்க்காமல் இருந்தாள். அவனால் அப்படி இருக்க முடியாதே தினமும் அவளை பார்த்து விட்டு தான் வருவான் அவளுக்கு தெரியாமலே...

முதலில் ஒரு வாரம் அவளை பார்க்க முடியாமல் தவித்தவன், தினமும் அவளை கண்டு வருவதை வாடிக்கையாக்கி இருந்தான். அவளின் கண்களில் தெரியும் அவனுக்கான காதலையும், ஏக்கத்தையும் அறிந்தவனுக்கு மகிழ்ச்சி தாங்க வில்லை.

அவனுக்கான அவளின் காதலை அவளே கூறவேண்டும் என்று காத்திருந்தான். ஆனால் அவள் கூறும் பொழுது அதை கேட்கும் நிலையில் அவன் இருக்க மாட்டான் என்று அறியா வில்லை.

முதலில் அவர்களின் மௌனத்தை கலைத்தது மான்சி தான்.

"ஹெலோ வைஷ்ணவி எப்டி இருக்கீங்க? ஆதில் எப்போவும் உங்களை பத்தி தான் பேசுவான். அவன் அப்டி பேசறதுல தப்பே இல்லைனு இப்போ தான் புரியுது"என்று கூற...


வைஷு புரியாமல் விழிக்க, அவளோ "ஆமா உங்களுக்கு நான் யார்னு தெரியாதுல? நான் மான்சி, ஆதிலோட பிரண்ட். வாங்க உள்ள"என்று அவளின் கைபிடித்து அழைத்து செல்ல...

ஆதிலோ "அவ கைய விடு மான்சி"என்க... அவள் புரியாமல் அவனை பார்த்து விழிக்க...

வைஷுவின் எதிரில் வந்தவன் "நீ எதுக்காக இங்க வந்த?"என்று கேட்க, அவனின் கேள்வியில் முகம் கருத்து போனவள் அவனை அடிபட்ட பார்வை பார்க்க...


அதில் அவன் மனம் இறங்கினாலும் அவளின் கனவுக்காக தானே, இத்தனை கஷ்டமும் இறுகிய குரலில் "ஐந்து வருசத்துக்கு உன்னை இங்க வர கூடாதுனு சொல்லிருக்கேன் இல்லை. அப்புறம் எதுக்காக வந்த,கிளம்பி போ இங்கருந்து"என்று கூறியவனை அதிர்வுடன் பார்த்தாள் அதுவும் சிலநொடிகள் மட்டுமே...

மறுநிமிடமே "ஏன் நான் ஏன் வரக்கூடாது. இது என் வீடு. என் புருஷன், மாமியார் எல்லாம் இங்க தான் இருக்காங்க, நான் எதுக்காக போகணும். இனிமேல் நான் இங்க தான் இருப்பேன். இங்க இருந்து தான் படிக்க போறேன்"என்றவள் அப்போது தான் அவளை பார்த்துக்கொண்டே உள்ளே வந்த ராகுலிடம் "ராகுல் அண்ணா என்னோட திங்ஸ் எல்லாம் எடுத்துட்டு என்னோட ஹாஸ்டல் ரூம் காலி பண்ணிட்டு வந்துருங்க, நான் இன்டர்ன்ஷிப் இங்க இருந்து தான் பண்ண போறேன், எல்லாத்தையும் எடுத்துட்டு வந்துருங்க"என்று கூற, புரியாமல் விழித்தவன் ஆதிலை பார்க்க, அவளோ "அங்க என்ன பார்வை, ஒண்ணும் சொல்ல மாட்டார் உங்க பாஸ்,போங்க"என்று கூற...


ஆதிலோ, அவளை பார்த்து பல்லைகடிக்க, அவளோ ஹாலுக்கு சென்றவள் "அத்தை நான் வந்துட்டேன் எங்க இருக்கீங்க, அத்தை"என்று குரல் குடுக்க...

நந்தினி அவர் அறையில் இருந்து வெளியில் வந்தவர் வைஷுவை பார்த்து மகிழ்ந்து போனார்.

"வைஷு குட்டி எப்பிடிடா இருக்க, பாத்து எவ்ளோ நாள் ஆச்சு என்னடா இப்படி இளச்சு போய்ட்ட? நல்லா சாப்பிடுறியா இல்லையா?"என்று கேட்க...

"நல்லா இருக்கேன் அத்தை.நீங்க எப்புடி இருக்கீங்க?"என்று கேட்க...

அருகில் வந்த ஆதிலோ "ரெண்டு பேரும் ரொம்ப கேவலமா நடிக்கிறிங்க? வார வாரம் நீங்க போய் அவளை போய் பார்த்துட்டு வரது எனக்கு தெரியாதுன்னு நினைச்சுட்டு இருக்கீங்க அப்படித்தானே?"என்று கேட்டவனை அலட்சியமாக பார்த்தவர் "உனக்கு தெரிஞ்சா என்ன? தெரியலைன்னா என்ன?நாங்க ஏன் உன்னை கண்டு பயப்படணும்.ஆமா, அவள் என் மருமகள், வாரத்துக்கு ஒரு தடவ இல்லை, நாலு நாளுக்கு ஒரு தடவ போய் பார்த்தேன், அதுல உனக்கு என்ன பிரச்சனை? உனக்கு தான் அவளை பிடிக்காது. அவளை தள்ளி வெச்சுருக்க, இதோ இவளை டைவெர்ஸ் பண்ண போறேன்னு கூட தான் கேள்வி பட்டேன், அப்புறம் எதுக்காக நீ இந்த விசயத்துல தலையிடுற? என்று கேட்டவரை அதிர்ச்சியாக பார்த்தவன்,"விட்டா பழையபடி மறுபடியும் கோட் மாட்டிட்டு கோர்ட்க்கு போய் நீங்களே எனக்கு டிவெர்ஸ் வாங்கி தந்துருவிங்க போல இருக்கே? ஆனால் நல்லா கேட்டுக்கோங்க? டிவெர்ஸ்க்கு எல்லாம் வாய்ப்பே இல்லை. இவளை நான் அவ்ளோ சீக்கிரத்துல என்கிட்ட தப்பிக்க விட்ர மாட்டேன் "என்றவன் திரும்பி வைஷுவை முறைத்தான்.


வைஷுவோ தாய், மகன் இருவரும் பேசிகொண்டிருந்ததை அதிர்ச்சியாக பார்த்தவள் அவனின் முறைப்பிற்கான காரணம் தெரியாமல் முழிக்க, அவனோ அதே முறைப்புடனே வெளியில் சென்று விட்டான்.

அடுத்த அரைமணி நேரத்தில் வைஷு இருந்த ஹாஸ்டல் அறை காலி செய்யப்பட்டு அவளுடைய பொருட்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்து இருந்தது.

இரவு உறங்கும் வரையிலும் நந்தினியுடன் அரட்டை அடித்து மடியில் படுத்து கதை பேசி சிரித்தவளுக்கு உறக்கம் அவரின் மடியிலேயே உறங்கியும் விட்டாள்.அவரும் அவளின் உறக்கம் கலைய கூடாது என்பதற்காக அமர்ந்தப்படியே கண்ணயர்ந்தார்.

ஆதிலின் மனமோ தன்னவளின் அருகாமைக்காக தவித்து கிடந்தது. அவளை ஒரு வேகத்தில் போக சொல்லிவிட்டானே தவிர, எங்கு அவள் மீண்டும் சென்று விடுவானோ என்று தவித்தவனுக்கு அவளின் என் வீடு நான் போக மாட்டேன் என்ற சொல் காதில் தேன் பாய்வது போல் இருந்தது.

மறுமனமோ இனி தான் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், தன்னிடம் இருந்து தப்பிசென்ற விசசெடியாலும் அவளின் ஆதரவாளும் அவர்களால் வைஷுவுக்கு ஏதேனும் நடந்திடுமோ என்று விழிப்புடன் இருந்தது.

வேலைகளை முடித்து கொண்டு அவன் வீட்டுக்கு வந்தவன் கண்டது சோபாவில் அமர்ந்தப்படி உறங்கியிருந்த அன்னையையும் அவரின் மடியில் சுகமாய் உறங்கும் மனைவியையும் தான், அவ்வளவு நேரம் கண்டதையும் நினைத்து யோசித்து கொண்டிருந்தவனுக்கு இந்த காட்சி அத்தனை இதமாய் இருந்தது.

அன்னையின் அருகில் வந்தவன் அவரின் மடியில் இருந்த வைஷுவை தூக்க, அவளோ உறக்கத்தில் அவனின் சட்டையை இழுத்து அவனுடன் மேலும் ஒண்டிக்கொள்ள, அதில் முழித்த நந்தினி மகனை பார்க்க அவனோ "நீங்க போய் தூங்குங்க,எவ்வளவு நேரம் இவளை படுக்க வெச்சுப்பிங்க, உங்களுக்கு கால் வலிக்கும். போய் தூங்குங்க"என்ற மகனை நக்கலாக பார்த்தவள் "உனக்கு அவ பக்கத்துல வந்ததும் அவளை விட்டு இருக்க முடியலைன்னு சொல்லு, அதுக்கு என்னைலாம் காரணமா சொல்ல வேணாம்"என்றவரை முறைத்தவன் "உங்களுக்கு ஹெல்ப் பண்ண நினைச்சேன்ல என்னை சொல்லணும், குட்டி யானை மாதிரி இருக்க இவளை தூக்குன அஞ்சு நிமிசத்திலே எனக்கு கை வலிக்குது, அதான் உங்களுக்கு வலிக்கும்னு சொன்னேன். என்னை ள் சொல்லணும் பிடிங்க நீங்களே வெச்சுக்கோங்க"என்று மீண்டும் சோபாவிலே படுக்க வைக்க போனவனை தடுத்தவரோ "அட அவசரத்துக்கு பொறந்த அறைவேக்காடே நீ இப்படி என்கிட்ட பேசிட்டே இருந்தா அப்புறம் அவ முழிச்சுடுவா, பிள்ளை ரொம்ப நாளுக்கப்புறம்
வீட்டுக்கு வந்துருக்கா, மறுபடியும் உறக்கம் வர நேரமாகும். தூக்கி கொண்டு போ"என்றவரின் பேச்சில் அவளை தூக்கி கொண்டு நடந்தவனோ அவளை சுமையாக அல்லாமல் ரசித்துக்கொண்டே அவளை தூக்கி வந்தான்.

அவளை கொண்டு வந்து படுக்க வைத்தவனோ, அவளின் தலையை மென்மையாய் வருடி முத்தமிட்டவன் "நவி மா உனக்கு தெரியுமா இன்னைக்கு தான் நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன். மூணு வருசத்துக்கு முன்னாடி இந்த ரூம்ல இருக்க அருவெறுப்பா இருக்குன்னு சொன்ன நீ, இன்னிக்கு என்னை தேடி வந்துருக்க இது என் காதலோட வெற்றி. ஆனால் என்னால சந்தோச பட முடியல. அந்த வீட்டுல இருக்கவங்கள என்னால கொஞ்சமும் ஏத்துக்க முடியல, அவங்க என் அம்மாவோட கண்ணீருக்கும் அவங்க அடஞ்ச வேதனைக்கும் அவங்களும் ஒரு விதத்துல காரணம்,மனுஷங்களா இருக்க கூட தகுதி இல்லாத வீட்டுல நீ, அதுவும் என்னோட தேவதையா? அவங்களை நான் இன்னும் உயிரோட விட்டு வெச்சிருக்கறதுக்கு காரணம் நீ மட்டும் தான். ஆனாலும் ஒவ்வொரு சமையம் என்னால பொறுக்க முடியாம அவங்களால உன்னை நான் காயப்படுத்திருறேன்.என்னை என்னால மாத்திக்க முடியல, நெருப்புல நிக்கற மாதிரி இருக்கு, நீ அவங்களோட பேசும்போது அவங்க உனக்கு வேண்டாம்டா, உனக்கு நான் எப்டி புரிய வைப்பேன். அவங்களுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைனு, எல்லாம் உனக்கு தெரியணும் அவங்க வாயலையே எல்லாம் தெரிய வைப்பேன்"என்றவனின் கண்களில் அத்தனை வன்மம், அவளின் தாயையும் தந்தையையும் எண்ணி...

வேகமாக எழுந்தவன் குளியலறைக்குள் சென்றுவிட, அடுத்த நொடியே அவளின் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தது. அவளின் பெற்றோர் யாருக்கும் எந்த பாவமும் அறியாதவர்கள் எதனால் இவனுக்கு இத்தனை கோபம். அதுவும் அவன் குரலில் இருந்த உண்மை. அவளை அதிகமாக யோசிக்க வைத்தது.

sorry for the late update...


 
New member
Messages
12
Reaction score
5
Points
3
Hii epoo than story read pannan. Semaya pokukuthu. Episode komsham kutty kuttyya poora poola feel akuthu. Read panna quicka mudiyuthu. Enum read pannum pola eruku. Athan sonan. Next episode epo varum??
Plz quick update
 
Top