• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

10👰👰👰

Active member
Messages
180
Reaction score
149
Points
43
யட்சிணி 10



வைஷுவின் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தது.அவனை அப்படியே அவனின் நிறை குறைகளுடன் ஏற்றுக்கொள்ள நினைத்தவளின் எண்ணம் முழுவதும் தவறானது. அவனை மாற்றி விடலாம் என்று நினைத்தவளின் கற்பனை கோட்டை மணல் கோட்டையாய் சரிந்து போனது. அரும்பிய காதல் முளையிலே முடிந்து போனது.


அவளின் காயம் தந்த வலியை விட அவன் கொடுத்த மனக்காயத்தின் வலியை குறைக்க முயன்றவள் இரண்டு நாட்கள் கழித்து அன்று தான் கல்லூரிக்கு கிளம்பி கொண்டிருந்தாள்.


அந்த இரண்டு நாட்களுமே ஆதில் அவளின் கண்களில் படவே இல்லை. அவள் அவன் மீது அளவில்லா கோவத்தில் இருந்தாலும் அவனுக்கு என்னவானது, எங்கே சென்றான் என்று நினைத்து ஒரு பக்கம் தவிக்கத்தான் செய்தது.

அன்று காலை கல்லூரிக்கு கிளம்பியவள் வாசலுக்கு வர, அவளருகில் வந்த ராகுல் "வைஷு டைம் ஆகிடுச்சு போலாமா?"என்று கேட்க...

அவளோ அவனை புரியாமல் பார்த்தாள். இத்தனை நாட்கள் அவளை கொண்டு போய் விடுவதும் அழைத்து வருவதும் ஆதில் தானே...


"அண்ணா அ... அவர் எங்க, நல்லாருக்காங்க இல்லை?" என்று கேட்டவளை பாவமாக பார்த்தான் அவன்.

அவனுக்கு தான் அவர்களுகிடையில் நடந்தது தெரியுமே? கடந்த இரு நாட்களுமே அவளை அவனை திட்டியதை கோடி முறையாவது அவனிடம் கூறி என் மேல இத்தனை குறை கண்டு பிடிக்கறவளுக்கு என்னோட காதல் ஒரு முறை கூட புரியவே இல்லையாடா? "என்று கேட்பவனிடம், அமைதியாகவே இருப்பான் இவன்.

யாருக்காக பேச முடியும். நண்பனுக்காகவா? இல்லை உடன்பிறவாத தங்கைக்காகவா? இல்லை இவனிடம் உன்மேல் தான் தவறு என்று கூறினால் அவன் அவனை சல்லி சல்லியாக அடித்து நொறுக்கி விடுவானே எதுவுமே பேச முடியாத நிலையில் இருந்தான்.

அவன் இவளுக்கு அத்தனை கொடுமைகள் செய்தும் அவனை பற்றி விசாரிப்பவளை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.

அவன் பதில் கூறும் முன் கார் ஹார்ன் அடிக்க, வைஷு திரும்பி பார்க்க ராகுல் "ஆதில் தான் வைஷுமா, போகலாம்"என்று கூற...

ஜன்னலை இறக்கி எட்டி பார்த்தவன் "உங்களோட கன்வெர்சஷன் முடிஞ்சுதுன்னா, கிளம்பலாம், டைம் ஆயிடுச்சு"என்று அழுத்தமாக கூறியவனின் விழிகளை பார்த்தவளோ அதிர்ந்து தான் போனாள்.

அவனின் கண்கள் சிவந்து கோவைப்பழம் போல் இறுகி கிடந்தது. அவளுக்கு புரிந்தது அனைத்தும் அவளால் தான் என்று...

வைஷு முன் சீட்டில் ஏறுவதற்கு செல்ல, அவளின் பின் வந்த ராகுலை கண்டவன் "முன்னாடி ஏறு ராகுல், எனக்கு 12கிளாக் மீட்டிங் இருக்கு"என்று மறைமுகமாக அவளை அருகில் அமர வேண்டாம் என்று கூறியவனின் உதாசீனத்தில் மனம் வலிக்க, பின்புறம் ஏறி அமர, கார் அவனின் கைகளில் பறந்தது.

நேராக அவன் வந்தது என்னவோ அவர்களின் வீட்டில் இருந்து வெகு தொலைவில் உள்ள பிரபலமான மருத்துவ கல்லூரி முன்பு, அதுவரை கவனிக்காதவள் "எனக்கு கிளாஸ்க்கு டைம் ஆச்சு? என்னை காலேஜ்ல கொண்டு போய் விடுங்க?"என்று ஆதிலிடம் கேட்க, அவனோ அவளுக்கு பதில் கூறாமல் காரிலிருந்து இறங்கியவன் உள்ளே சென்று விட்டான்.

ராகுல் "வாமா போகலாம்"என்று கூறி நடக்க, அவளோ "அண்ணா இங்க யாரையும் பார்க்கணுமா? என்னை கொண்டு போய் விட்டுட்டு வந்துருக்கலாமே? இந்நேரம் முதல் கிளாஸ் முடிஞ்சுருக்கும்"என்று அவள் பேசி கொண்டே செல்ல, அவனோ "நான் எல்லாம் சொல்லுறேன் மா, வா போகலாம்"என்று அழைத்து கொண்டு வர...

வைஷு அங்கிருந்த மாணவர்களையும் அவர்களின் கழுத்தில் கிடந்த ஸ்டெதாஸ்கோப்பையும் ஏக்கமாக பார்த்து கொண்டே வர, அதை தொலைவில் இருந்து பார்த்தவனுக்கு மனம் வலித்தது. இதே வலியை காலம் முழுக்க அவளுக்கு கொடுக்க பார்த்தவன் ஆயிற்றே, தன்னை எண்ணி அவனே நொந்து கொண்டான்.

வைஷுவை அமர வைத்து விட்டு அவர்கள் இருவரும் உள்ளே செல்ல, அடுத்த அரைமணி நேரத்தில் வைஷு மருத்துவ கல்லூரியில் சேர்க்கப்பட்டு விட, அனைத்தையும் முடித்து அவளை காலேஜ் ஹாஸ்டலிலும் சேர்த்து அதன் தொகை அனைத்தையும் கட்டி விட்டு அவளருகில் வந்தவர்களை புரியாமல் பார்த்தாள்.


ஆதில் எதுவுமே பேசாமல் இருக்க,ராகுல் தான் "வைஷு இனி மேல் நீ இங்க தான் படிக்க போற, எல்லாம் ஓகே. உனக்கான திங்ஸ் எல்லாம் இன்னும் ஒன் ஹௌர்ல உன் கைக்கு வந்துரும். அப்பறம் இனிமேல் நீங்க ஹாஸ்டல்ல தான் தங்கி படிக்க போறீங்க, அதுக்கான பில், எல்லாம் இதுல இருக்கு.செமஸ்டர் ஹாலிடேய்ஸ் மட்டும் வந்து நந்தினிமாவ பார்த்தால் போதும், சாட்டர்டே, சண்டே கூட வர வேணாம். ரொம்ப தூரம் உனக்கும் டயட். படிப்புல கவனம் இருக்கட்டும்.புரிஞ்சுதா சொன்னது எல்லாம்" என்று கூறியவனை அதிர்ந்து பார்த்தவள் திரும்பி அவனை முறைத்தாள்.

ஆதிலிடம் வந்தவள்"எதுக்காக இப்படி பண்றீங்க? என்ன ப்ரூப் பண்ண நினைக்கிறீங்க? நான் அந்த அருண் கூட பேசக்கூடாதுன்னு தானே இதை செய்றிங்க? நீங்க மாறவே மாட்டிங்களா?" என்று கோவமாக கத்த...

அருகில் நின்ற ராகுலை ஓங்கி அறைந்தவன் "தேவையில்லாம இங்க எந்த சீனும் கிரீயேட் பண்ண வேணாம். நான் சொன்னதை செய்" என்று அவனை பார்வையால் மிரட்ட...


பாவமாக கன்னத்தை பிடித்து கொண்டவன் "இந்த புருஷன், பொண்டாட்டி தொல்லை தாங்க முடியல"என்று முனுமுனுத்து கொண்டவனோ "காயு"என்றழைக்க...

அவனருகில் ஒரு பெண் வந்து நிற்க, ராகுல் "வைஷு இவ காயத்ரி. என்னோட சிஸ்டர், சித்தி பொண்ணு. இந்த வருசம் தான் சேர்ந்துருக்கா, லேட் அட்மிஷன், இவளுக்கும் உன்னை போல தான் 19 இயர்ஸ் தான். ரெண்டு பேருமே mbbs தான், ஒரே ஹாஸ்டல். காயு பாத்துக்கோ"என்று கூற, அவளோ "ஓகே அண்ணா"என்றவள், "ஹேய் வைஷு டைம் ஆச்சு வா, போகலாம்" என்று கையை பிடித்து இழுத்து செல்ல, அவளோ திரும்பி திரும்பி அவனையே பார்த்து கொண்டு செல்ல, அவனோ ராகுலை அழைத்து கொண்டு சென்று விட்டான்.

காயு அவளின் நெருங்கிய தோழியாகி போனாள்.

ஒவ்வொரு நாளும் அவன் வந்து தன்னை அழைத்து செல்ல மாட்டானா?என்று வாசலையே பார்த்து ஏங்கியவளுக்கு மூன்று ஆண்டுகளும் ஏமாற்றமாக தான் இருந்தது.


புயலாய் மூன்று வருடங்கள் கடக்க, அந்த மூன்று வருடங்களில் அவளை செமஸ்டர் விடுமுறைக்கு வருவாள். அவளை வரும்போது அவன் இருக்க மாட்டான். அவள் வருவதே அவனை பார்க்க தான். அவனோ வேண்டுமென்றே அவளை தவிர்த்தான். அக்கல் வரும்போது வீட்டுக்கு வர மாட்டான். கெஸ்ட் ஹௌசில் இருந்து கொள்வான். மூன்று வருடங்களில் அவளுக்கு தேவையான அனைத்துமே அவள் நினைக்கும் முன்பே அவளிடம் வந்து சேர்ந்து விடும்.

அவன் தன்னை முழுதாக தவிர்க்கிறான் என்றறிந்தவளுக்கு, அவனை காண மனம் தவியாய் தவித்தது.முன்பே அவளுக்கு அவனின் குணம் பிடிக்காமல் இருந்த போதே அவனை காதலிக்க ஆரம்பித்து இருந்தவள், அவளுக்காக அவன் பார்த்து பார்த்து ஒன்றாக செய்ய அவன் மேல் கொண்ட காதலில் கரைந்து போனாள்.

இடையில் அவளின் பெற்றோர் அவளை பார்க்க வந்தவர்கள் ஆதில் அவளின் தங்கை, தம்பி இருவரையும் அவர்களுக்கு பிடித்த படிப்பில் சேர்த்து படிக்க வைப்பதாக சொல்ல அவனின் மீதான காதல் கூடித்தான் போனது அவளுக்கு....


நான்காம் வருடம் இன்டர்ன்ஷிப் அவனே ஒரு பெரிய மருத்துவ மனையில் ஏற்பாடு செய்திருக்க, அதையும் வெற்றிகரமாக முடித்தவளுக்கு அவனிடம் நன்றி கூற வேண்டும் என்று தோன்ற, அவனுக்கு தெரியாமலே வீட்டுக்கு வந்து சேர, அவனோ சோபாவில் அமர்ந்து ஒரு பெண்ணுடன் நெருக்கமாக அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தான்.


அதே நேரம் அங்கு வேலை செய்யும் பெண்களில் இருவர் இவள் வந்ததை கவனிக்காமல் "பொண்டாட்டிய படிக்க அனுப்பிட்டு இன்னொருத்தியோட சேர்ந்து போடற ஆட்டத்தை பாரு, மனுசனா இவன். அந்த புள்ள பாவம். இவன் கொடுமையை தாங்க முடியாம அங்கேயே தங்கிருச்சு, பாரேன் எப்படி ஒட்டிக்கிட்டு இருக்கான்னு விவஸ்தை இல்லாத ஜென்மம். ஒரு மாசமாச்சு இங்க வந்து எப்போ பார்த்தாலும் அவர் கூடவே ஒட்டிக்கிட்டு என்ன ஜென்மமோ?"என்று பேசிக்கொண்டே செல்ல, மறுநொடியே வைஷுவின் ஐந்து விரல்களும் அந்த பெண்ணின் கன்னத்தில் பதிந்திருந்தது.

சத்தம் கேட்டு வெளியே வந்தவன் ஆங்காரமாய் நின்றிருந்த வைஷுவை கண்டு அதிர்ந்து போய் நின்றான்.








 
Top