• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

1👰👰👰

Active member
Messages
180
Reaction score
149
Points
43


1👰👰👰


வெகுநேரம் உறங்காமல் அப்போதுதான் உறங்கியவனின் அலைபேசி மூன்று முறைக்கு மேல் சப்தமிட, அதன் தொந்தரவை தாங்க முடியாதவன் அதை தூக்கி அடிக்க அதுவோ எதிரில் இருந்த சுவற்றில் பட்டு தெறித்து விழுந்தது.

அதே வேகத்துடன் எழுந்தவனின் கண்களோ சிவந்து போய் தூக்கம் இல்லாததை பறைசாற்ற, ஆராயும் பார்வை,ஆறடி ஆண்மகன், காட்டுக்கோப்பான உடல் வாகு,தலையை வலது கையால் கோதியவன் எழுந்து கண்ணாடியில் தன் உருவத்தை பார்க்க, அசரடிக்கும் அழகு, தீர்க்கமான பார்வை. எதிரில் இருந்த கண்ணாடியில் காரி துப்பியவன் அவனையே பார்த்து "உன்னை நீயே ரசிக்கிறியா? வெக்கம் கெட்டவனே, நீயெல்லாம் ஆம்பளையா? ஒரு பொண்ணு உன்னை வேணாம்னு சொல்லிட்டா உனக்கெதுக்கு டா, மீசை"என்று அவனை பார்த்து பேசிகொண்டிருக்க...

அதே நேரம் கதவு தட்டும் சப்தம் கேட்டவன், எஸ் என்று கூற, அவன் முன் வந்து நின்றவனோ, அவனின் நண்பனும், பிஏ வுமான ராகுல்.

"சார்" என்றழைக்க, அவனின் முறைப்பில், ஆ... ஆதில் என்று மாற்றிகொண்டவன், "இன்னும் ஒரு மணி நேரத்தில் அந்த பொண்ணுக்கு அவ அத்தை பையனோட காமாட்சியம்மன் கோவில்ல கல்யாணம் நடக்குது, அதுவும் அந்த பொண்ணோட சம்மதத்தோட தான்"என்றவன் கூறி முடிப்பதற்குள் அவன் கன்னத்தில் பொலிரென ஒரு அறை வாங்கியிருந்தான். அதில் அவன் அதிர்ந்தெல்லாம் போகவில்லை எப்போதாவது வாங்கினால் தானே உரைக்க, அவன் தான் எப்போதும் வாங்குகிறவன் ஆயிற்றே...


"தேங்க்யூ பார் யுவர் காம்பிளிமென்ட், இப்போ நான் போய் அந்த பொண்ணோட வீட்டுல பேசறேன். அவ பேரண்ட்ஸ் கன்வின்ஸ் பண்றேன்"என்று கூறியவன் அவனின் தீ பார்வையில் வாயை மூடிக்கொள்ள...

"எனக்கு தேவையானதை நானே எடுத்துதான் எனக்கு பழக்கம், யார்ட்டயும் பிச்சை வாங்கி பழக்கம் இல்லை. அண்டர்ஸ்டான்ட்.போய் மீட்டிங்க்கு அரெஞ்சு பண்ணு, எல்லாம் சரியா இருக்கனும்"என்று தீவிரமாக கூறியவன் அவன் ஆதில் சைத்ரேயன். தொழிலில் அசகாய சூரன், அவனுக்கு இல்லாத தொழில்களும் இல்லை, இல்லாத எதிரிகளும் இல்லை.
எதிரியின் மரணம் அவன்.


அவன் சென்றதும் தலையை பிடித்து கொண்டு,"ஆ... ஆஹ்"என்று கத்தியவனின் குரலில், அங்கு வேலை செய்திருந்த அனைவருமே அதிர்ந்து போயினர். அவர்களால் இன்னிக்கு யார் இவன் கையில மாட்ட போறாங்களோ என்று பரிதாபப்பட தான் தோன்றியது.


கண்களில் அனல் பறக்க "உன்னை விடமாட்டேண்டி"என்றவனின் கண்களில் பழிவாங்க துடிக்கும் வேங்கையின் ஆக்ரோசம் அப்பட்டமாக தெரிந்தது.

குளியலறையை திறந்துகொண்டு உள்ளே சென்றவன் நீரின் குளுமையிலும் அவனின் கோபம் தணியவில்லை.

உடைமாற்றிக்கொண்டு படியில் இறங்கியவனின் காலடி ஓசையிலே அங்கிருந்தவர்கள் நடுங்கித்தான் போயினர்.


"சாப்பாடு எடுத்து வைக்கவா ஆதில்"என்ற, சித்தியை ஏறிட்டும் பாக்காதவன், தன் காரில் ஏறி புயலாய் அங்கிருந்து செல்ல,காரின் வேகம் அதிகரிக்க அதை விட அவனின் கோபம் அதிகமானது அவளையும் அவள் கூறிய வார்த்தைகளையும் நினைத்து...

அய்யர் மந்திரங்களை கூறிகொண்டிருக்க, ஒரு திருமணத்திற்கு தேவையான அனைத்தும் தயாராகி கொண்டிருக்க, அங்கிருந்த அனைவரின் முகமும் மனமும் அத்தனை மகிழ்வாக இருந்தது.

பெண் வீட்டாரும் மாப்பிளை வீட்டாரும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்க, மணமகன் மட்டும் ஏதோ ஒரு பதட்டத்திலே இருந்தான் .


அவள் வைஷ்ணவி அழகிய முகம், கூரான நாசி, மருளும் மான்விழிகள், சிவந்த அதரங்கள், ரோஜாவண்ண பட்டுடுத்தி, அதற்கேற்ற அணிகலன்கள், மல்லிகை சரம் என்று அத்தனை அம்சமாக இருந்தாள். அவளின் நொடிக்கொருமுறை மகளை பார்த்து பூரித்து கொண்டு இருந்தார்.


அவளின் தோழியும் தங்கையும் அவளை கிண்டல் பேசி வெட்கத்தில் சிவக்க வைத்துக்கொண்டு இருக்க, அவளோ முகம் மூடி சிரிக்க காவியமாய் இருந்தது. அவள் சிரிப்பது இன்று தான் கடைசி மீண்டும் அவள் முகத்தில் அந்த சிரிப்பு வர அவள் எத்தனையோ தியாகங்களையும் துரோகங்களையும் கடக்க வேண்டியிருக்கும் என்று அவள் அறியவில்லை.

அய்யர் "முகூர்த்ததுக்கு நேரமாச்சு பொண்ண அழைச்சிட்டு வாங்கோ"என்று குரல் கொடுக்க, அவளின் தங்கை வர்ஷினி அவளை அழைத்து வர, மணமகன் சந்திரன் ஆவலாக அவளையும் அவளின் வெட்கத்தையும் ரசித்து பார்த்தான்.

அய்யர் மந்திரம் ஓத, மங்கலவாத்தியங்கள் இசைக்க தாலியை கழுத்தின் அருகில் கொண்டு சென்ற அதே நேரம்
சந்திரனை குறிப்பார்த்து சுட்டு இருந்தான் ஆதில் சைத்ரேயன்.


அவன் மார்பில் தோட்டா பட்டு தெறிக்க, ரத்தம் கொப்பளிக்க அப்படியே பின்புறம் சாய்ந்தவனை, கண்களில் நீருடன் அதிர்ந்து போய் பார்த்தவளை பார்த்து சிரித்தான் அவன்.

" என்னை வேணாம்னு சொல்லிட்டு அவன் பக்கத்துல உக்காந்துருக்க, உன் நிழலை தொட்டவன் கூட நானா மட்டும் தான் இருக்கனும் புரியுதா"என்று கர்ஜித்தவனை கண்டு அனைவரும் அதிர்ந்து போனார்கள் என்று வைஷ்ணவி அதே இடத்தில் உறைந்து போனாள்.


சந்திரனின் தாயோ,"நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்ட, நாசமா போயிருவ ? அநியாயமா ஏன் புள்ளைய கொன்னுட்டானே"என்று அந்த தாய் நெஞ்சில் அடித்து கொண்டு கதற...


மேடையேறி வந்தவன் காலடியில் கிடந்த பிணத்தை ஓங்கி உதைத்தவன், கண்களில் நீருடன் மருளும் பார்வையுடன் நடந்ததை கிரகித்து கொள்ளா முடியாமல் மணமேடையில் அமர்ந்திருந்த வைஷ்ணவியை ஏளனமாக பார்த்து சிரித்தவன்,"என்ன மேடம் கல்யாணம் நடக்காம மணமேடைய விட்டு எழுந்திருக்க மாட்ட போலவே, உன் ஆசை நிராசை ஆக கூடாதுல, இதோ வரேன்"என்றவன் மறுநொடியே தாலியை எடுத்து அவளின் கழுத்தில் கட்டியிருந்தான்.


மகனின் பிணத்தை மடியில் வைத்து கதறி கொண்டிருந்தவளோ"அடிப்பாவி பாதகத்தி கூடவே இருந்து கழுதறுத்துட்டாளே, நீயெல்லாம் நல்லாருப்பியா பாவி, நீங்க நல்லாவே இருக்க மாட்டீங்க, நாசமா போயிருவீங்க, நல்லாருக்க மாட்டீங்க பெத்த வயிறு பத்தி எரியுதே, ஐயோ என் புள்ள போய்ட்டானே ராசா சந்திரா, ஐயோ ஐயோ"என்று தலையில் அடித்து கொண்டு கதறி அழ, அங்கிருந்தவர்களுக்கெல்லாம் அவனை கொன்று புதைக்க ஆத்திரம் வர, அவன் கையில் இருந்த துப்பாக்கியை கண்டு பயந்து ஒதுங்கி நின்றனர்.

அவளின் தந்தையோ சிறுவயதில் இருந்து தூக்கி வளர்த்த, மருமகனின் கொலையில் அதிர்ந்தவர், மகளின் நிலையை கண்டு துடித்து போனார். அவளின் தங்கையும் தம்பியும் தாயை பயத்துடன் கட்டிக்கொள்ள...

எச்சில் விழுங்க அவளை பார்த்தவன் "நான்தான் உன்னை எனக்கு பிடிக்கலைனு சொல்லிட்டேனே, அப்புறமும் என்னை இப்படி சித்ரவதை பண்ற? ஐயோ மாமா அவரை எதுக்காக கொன்ன, கொலைகாரப்பாவி."என்று அவனை பார்த்து கதறி அழ...

அவளை பார்வையால் எரித்தவன் "நான் நினைக்கிறது மட்டும் இல்லை, பார்க்கிறது கூட எனக்கு மட்டும் தான் சொந்தம் அதுக்கு தடையா யார் வந்தாலும் இதான் நிலைமை"என்றவன் துப்பாக்கியை பின்னால் சொருகிக்கொண்டு தன் காரில் ஏறி சென்றே விட்டான்.

கோவிலில் அசால்ட்டாக ஒரு கொலையை செய்து, திருமணத்தையும் முடித்து கொண்டு இங்கு வந்து பிசினஸ் டீல் பேசிகொண்டிருந்தவனை என்ன செய்ய என்று மலைப்பாக பார்த்தான் ராகுல். அவனாலும் எதும் செய்ய முடியாதே, நன்றி கடனால் அவன் செய்யும் தவறுகளுக்கு துணைப்போகும் நிலைமைக்கு தள்ளப்பட்டான்.

மாலை வரை பிசினஸ் மீட்டிங் செல்ல, அதை முடித்தவனோ நேராக வைஷ்ணவியின் வீட்டை நோக்கி வாகனத்தை செலுத்தியவன் தன் அதிகார பலத்தாலும், பணத்தாலும் காலையில் நடந்ததை மூடி மறைத்து விட்டான்.


அங்கோ, தாயின் மடியில் தலை வைத்து படுத்திருந்தவளின் கண்களில் நீர் வழிந்து கொண்டே இருந்தது. அவளின் அத்தை இந்த குடும்பத்தோடு எந்த உறவும் இல்லை என்று சாபம் வழங்கி உறவை முடிந்து கொண்டு சென்று விட, துடித்து போயினர் அவளின் குடும்பத்தார்.

வைஷ்ணவியின் தந்தை சிதம்பரம் "எங்கருந்து வந்தானோ பாவி. ஒரே நிமிசத்துல மொத்த வாழ்க்கையையும் முடிச்சுட்டானே, இப்போ எப்படி இருந்துருக்க வேண்டிய வீடு இப்படி கதற வச்சுட்டானே, என் குழந்தையோட வாழ்க்கையே போச்சே"என்று தான் ஆண்மகன் என்பதையும் மறந்து கதறி அழ...

அவளின் குடும்பமே அழுது கொண்டு தான் இருந்தது காலையில் இருந்து...

"அப்புறம் உங்களோட ஒப்பாரி முடிஞ்சிருச்சுன்னா நான் உள்ள வரலாமா?"என்ற குரலில் நெருப்பை மிதித்தது போல் அனைவரும் அதிர்ந்தெழ...

உள்ளே வந்தவனோ "உங்க வீட்டுலைய எழவு விழுந்துச்சு, இப்படி கண்ணீர் ஊத்துறீங்க, உங்க அழுகையில பக்கத்து வீட்டு கிணறு நிறைஞ்சு வழியுதாம் "என்று நக்கலடித்தவன்,"அப்புறம் மாமியாரே வீட்டுக்கு வந்த மருமகனுக்கு டீ, காபி குடுக்குற பழக்கம்லாம் இல்லையா? என்று கேட்டவனை வெறுப்பாக பார்த்தவர் முகத்தை வேறுபக்கம் திருப்பி கொள்ள,

வைஷுவின் அருகில் வந்தவர் அவளின் தோள் மேல் கைப்போட்டு "அப்புறம் பேபி கிளம்பலாமா"என்று கேட்க...

அவளோ அவனை திகைப்பாக பார்த்து "எங்க"என்று கேட்க, "வேறெங்க உன் மாமியார் வீட்டுக்கு தான்"என்று கூறியவனை அதிர்ந்து போய் பார்க்க, அவனோ அவளின் தம்பி ஆகாசை பார்த்து "அப்றம் குட்டி மச்சான் உங்கக்காவ நான் கூட்டிட்டு போறேன்.உங்கப்பா அம்மா அதிர்ச்சில இருந்து எழுந்ததும் தகவல் சொல்லிடு"என்றவன் அவளின் கையை பிடித்து இழுத்து கொண்டு நடக்க...

சிதம்பரம் "அடேய் கொலைகாரா என் பொண்ண எங்கடா கூட்டிட்டு போற, காலைல குடிச்ச ரத்தம் பத்தலையோ என் பொண்ண விட்டுரு"என்று கத்தினார்.

"மாமனாரே சத்தம், சத்தம் காலைல நீங்க சரியா பாக்கலையோ இப்போ வேணா குட்டி மச்சானை வச்சி ஒரு ட்ரைலர் பார்ப்போமா" என்றவன் துப்பாக்கியை ஆகாஷை நோக்கி உயர்த்த...

அதில் பதறி போன வைஷுவோ
"இல்லை, அவனை விட்டுரு நான் வரேன், வந்துறேன்"என்றவள் அவனின் கையை பற்றி கொள்ள...


அவளின் தந்தையை திரும்பி நக்கலாக திரும்பி பார்த்தவன் அவளை அழைத்து கொண்டு சென்றான்.

அவளின் தாய் மீனாட்சியோ "இவனுக்கெல்லாம் நல்ல சாவே வராது"என்று சாபம் கொடுக்க தேவதைகள் மேலிருந்து "ததாஸ்து" கூறி சென்றனர்.






 
Well-known member
Messages
787
Reaction score
587
Points
93
Aadhil sariyana anti hero va iruppan polaye 🤔🤔🤔
 
Top