Member
- Messages
- 31
- Reaction score
- 1
- Points
- 8
வேந்தன்…27
“இறக்கி விடு. தொடாத என்ன” வளையல் கரங்களால் அவனது மார்பில் குத்தியவள், நகங்களால் கிள்ளியும் வைத்தாள். பீச் ரோட்டில் மக்கள் நடமாட்டமிருக்கும் அதனால் தைரியமாக காரில் ஏறி வந்தாள்.
ஆனால் இங்கே யாருமில்லாத வீட்டிற்கு அழைத்து வந்ததும் இல்லலாமல், வில்லன் போல கைகளில் தூக்கிக்கொள்ள, அவளுக்கு திகில் பிடித்தது. மனசுக்குள் ஏதேதோ கற்பனைகள் தப்பு தப்பாக குதிரை வேகத்தில் ஓடியது.
“ம்ஹூம் நான் வரமாட்டேன். விடுடா என்னை” அவன் முகத்தில் கீறி வைத்தாள் நகத்தால். லேசாய் ரத்தமும் கசிய.
பொறுமையிழந்தவன் அவளை அப்படியே நழுவ விட.
தான் கீழே விழப்போவதை அறிந்தவள் அவன் தோள்களை இறுகக் கட்டிக்கொண்டாள். “ப்ளீஸ் நீ பண்ணுறது ரொம்பத் தப்பு. விடு என்ன” அவனிடம் கெஞ்சவே ஆரம்பித்து விட்டாள்.
“எனர்ஜி வேஸ்ட் பண்ணாத ஹனீ” இன்னொரு முறை அவளை நழுவ விட்டு பின் கைகளுக்குள் அடக்கிக்கொள்ள. அவளது இதழ்கள் அவனது கன்னத்தில் நச்சென இச்சொன்று வைத்திட,
சிபினின் கைகளுக்குள் அடங்காமல் அடங்கியிருந்தவளுக்கு வெகு அருகில் அவனது முகம். பிடிமானத்திற்காக அவனது இறுகிய தோள்களைப் பற்றியிருக்க, அவன் வேணுமென்றே செய்தானோ இல்லை இயல்பாகவே படியில் ஏறும்பொழுது தற்செயலாக நிகழ்ந்ததோ தெரியவில்லை, முகத்தோடு முகம் உரசியது அடிக்கடி. மறந்தும் தன் இதழ்களை அவன் கன்னத்தில் உரச விடவேயில்லை அவள்.
அவனிடமிருந்து விடுபட முயற்சி செய்து செய்து கைகள் ஓய்ந்தே போனது. மதம்பிடித்த யானையிடமிருந்து தப்பிக்க முயற்சி செய்யும் பாகனின் நிலையானது அவளுக்கு.
“ப்ளீஸ் என்னை விட்டுருங்க” என பலமுறை
கண்ணீருடன் கெஞ்சியும் பார்த்துவிட்டாள்.
“இப்போ விடப்போறியா இல்லையா?” என்று மிஞ்சியும் பார்த்துவிட்டாள். அவளது தொண்டை தண்ணீர் வற்றியதுதான் மிச்சம்.
அவனோ எதையும் கண்டுகொள்ளாது அறைக்குள் சென்றவன் அவளை பொம்மை போல மெத்தையின் மீது வீசிவிட்டு தானும் அவள் மீது விழ.
“யம்மாடி” அலறியவாறே இடதுபுறம் புரண்டு படுத்து தள்ளிப் போனாள் நளிரா.
அவளது அரண்டுமிரண்ட விழிகளை கண்ணுற்றவன் “தப்பிச்சுட்டா” உதடுகளில் சிரிப்பு தவழ தலையணையில் முகம் பதித்து உறங்க ஆரம்பித்துவிட்டான்.
அவன் வந்த வேகம், தூக்கிட்டு வந்த விதம், அவளிடம் பேசிய தோரணை இதையெல்லாம் பார்த்த நளிரா இன்னைக்கு நமக்கு கடைசி நாள் என்றே தோன்றிவிட்டது. அத்தனை பயம் அவளுக்கு. அவன்கிட்டே இருந்து தப்பிச்சா போதுமே என கடவுளை வேண்டினாள்.
ஆனால் அவன்பாட்டுக்கு குப்புற கவிழ்ந்து உறங்க ஆரம்பிக்கவும், இவளுக்கு ஒண்ணுமே புரியலை.
என்ன நடக்குது இங்க? எனும் பாவனையில் தன் அருகில் படுத்திருந்தவனை மிரள மிரளப் பார்த்தாள்.
ஆள்காட்டி விரலை மட்டும் நீட்டி அவன் தோளை சுரண்டிப் பார்க்க.
“ஏய்” ஒற்றைக் குரலில் நடுநடுங்கிப் போனாள் நளிரா.
தூங்கும் சிங்கத்தை எழுப்பினால் இப்படித்தான் கர்ஜிக்குமோ.
“உம்மேல இருக்க கோவத்துக்கு, இந்நேரம் சம்பவம் பண்ணி முடிச்சிருக்கணும். பட் நான் நைட்டெல்லாம் தூங்கவே இல்ல. நீயும் தூங்குடி” வலது கையை நீட்டி அவளைத் தேடினான் கண்களை மூடிக்கொண்டே.
“இங்கதா இருக்கேன். தூங்குங்க தூங்குங்க” அவன் கைகளுக்குள் சிக்கிடாமல் ஒற்றை விரலால் தட்டித் தூங்க வைத்தவள், மெல்ல மெல்ல நகர்ந்து கட்டிலில் இருந்து இறங்கினாள்.
கதவருகே வந்தவள் அதைத் திறந்திட முயல, முடியாது தோற்றவள், ஜன்னல், பாத்ரூம் என எல்லாவற்றையும் முயற்சி செய்து பார்த்தாயிற்று எதுவும் அங்கே வேலைக்கு ஆகவில்லை.
தரையில் சரிந்து அமர்ந்தவளுக்கு யாரென்றே தெரியாத ஒருவனோடு இப்படி தனித்திருக்கிறோமே என்ற நினைவே வேதனையைக் கொடுத்தது.
வெண்ணிற தரையின் ஜில்லிப்பு கூட உரைக்கவில்லை அவளுக்கு.
இவன்கிட்டே இருந்து விடுபட்டால் போதுமே என்றிருந்தது. நெஞ்செல்லாம் தீயாய் எரிந்திட, எதிரே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவனை வெறுப்போடு வெறித்துப் பார்த்தாள்.
எல்லாம் உன்னோட விருப்பம்தானா? இந்த நினைப்பே கசப்பைத் தந்தது அவளுக்கு.
இந்நேரம் யாராவது தன்னைத் தேடுவார்களே. அப்பா அம்மாவுக்கு தான் இங்கே இருப்பது தெரிந்தால்? கண்ட நினைப்புகளும் மனதில் ஓட, நெற்றியை அழுந்தப் பற்றினாள் அழுத்தம் தாங்காது.
கண்களில் இருந்து கண்ணீர் அருவியாய் கொட்ட, அவளது உள்ளத் தவிப்பை வார்த்தைகளில் சொன்னால் புரியாது.
சரியாய் மூணு மணிநேரம் கழித்து அவன் அசைய, விருட்டென தன்னை சரிசெய்தவள், அவனையே அச்சமாய் வெறித்தாள்.
எழுந்தவன், அவள் அமர்ந்திருப்பதை கவனித்து, “ஹாய் ஹனீ” ஒரு சிரிப்பை அவளுக்கு வாரி வழங்கிவிட்டு, குளிப்பதற்காக குளியலறை சென்றுவிட்டான்.
அவனையே விழிகள் விரிய வேடிக்கை பார்த்தவள், அவன் இடையில் கட்டிய துண்டோடு வரவும், “ச்சீய் சீய், அசிங்கம்” கண்களை இறுக மூடிக்கொண்டவளுக்கு அவனது அரைகுறை உருவம் கண்டு தேகமெங்கும் கூசிப் போனது.
அவளை ஒரு சிரிப்போடு பார்த்தவன், வேகமாய் உடை மாற்றிட, “ஓய் ஹனி. இப்போ பார்க்கலாம்” என்றான் குறும்புகள் கூத்தாடும் குரலில்.
ஒற்றைக் கண்ணால் அவனை பார்த்து, முழு மனுசனாத்தான் இருக்கான் என்று ஊர்ஜிதம் பண்ணியவள், அவனை விழிகளை முழுதாய் திறந்து பார்த்து, அவனது குறும்பு சிரிப்பில் “என்ன ஒரு திமிர்” என்று முறைத்தவள் எழுந்து நின்றாள்.
“யாரு நீங்க. எதுக்கு என்னை போட்டு படுத்தி எடுக்கறீங்க?” அவனைக் கேள்விமேல் கேள்வி கேட்டவள்
“உங்களை பார்த்தாவே தெரியுது, நல்லவர்ன்னு. ஆனால் இப்படி ஒரு பொண்ணுகிட்ட தப்பா நடந்துக்கறது சரியா. ஒரு பொண்ணை அவளோட விருப்பமில்லாம தொடக் கூடாதுன்ற பேசிக் மேனர்ஸ் கூட உங்களுக்கு இல்லையா? எங்க வீட்டுல கல்யாணம் வச்சிருக்கோம். அப்படி மட்டும் ஏதும் இல்லாம இருந்தா இந்நேரம் உங்களை சும்மாவே விட்டிருக்க மாட்டேன்” விரலை உயர்த்திக் காட்டி அவள் மிரட்ட.
அவனுக்கோ அவள் பேசும் மொழி அத்தனையும் இன்னிசையாய் காதில் விழுந்தது.
வீணையின் நாதமாய் மீட்டிடும் தேன் குரலில் மயங்கியவன் வாழ்நாள் முழுவதும் அதற்கு செவிசாய்த்திட வேகம் கொண்டான். மொத்தமும் அழகின் உருவமாய் இருப்பவளை பிரியத்தான் வேண்டுமா? நினைக்கவே எரிச்சலாக ஏமாற்றமாக இருந்தது அவனுக்கு.
அவளருகே சென்றவன் “என்கூடவே இருந்துடேன்” அவளது கன்னம் பற்றி ஆவலாய்க் கேட்டான்.
“நான் என்ன சொல்ல வரேன்னு காதுலயே வாங்க மாட்டீங்களா?” கேட்டுவிட்டு அவனையே மலங்க மலங்கப் பார்த்தவளுக்கு சத்தியமாய் அவனது மனதில் என்ன இருக்கிறதென்றே புரியவில்லை.
கன்னத்தை வருடிய விரல்களை தட்டிவிட்டவள், “யார் நீங்க? எதுக்கு இப்படி நடந்துக்கறீங்க. கெஞ்சிக் கேட்டுக்கறேன். ஒண்ணா என்னோட இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்க. இல்லைன்னா என்னை விட்டுருங்க. ப்ளீஈஈஸ்ஸ்ஸ் “ கையெடுத்துக் கும்பிட்டே விட்டாள் நளிரா.
“சரிசரி கிளம்பு. லேட் பண்ணா நைட் இங்கயே இருக்க வச்சுக்குவேன்” சொல்லியும் அவள் இருந்த இடத்திலிருந்து நகராமல் நிற்கவும், அவள் கையைப் பற்றியவன் “இருந்துக்கறியா?” ஆசையாசையாய் கேட்டும் வைக்க.
“நோ. நோ வே. நாம கிளம்பலாம்” ஆளை விடுப்பா சாமி என்று அவனுக்கு முன் கதவருகே சென்றாள் நளிரா.
அவள் ஏறுவதற்காக முன் கதவை திறந்துவிட்டவன், அவள் ஏறி அமரவும் கிளம்பினான்.
திரும்பவும் பீச்சில் கார் வந்து நிற்க, அவள் அவனைத் திரும்பி பார்த்தாள். அவள் விழிகளில் பரபரப்பு மின்னியது.
அவள் புறமாய் திரும்பியவனின் விழிகளில் கள்ளத்தனமும் வில்லத்தனமும் கலந்து கூத்தாடிட, “என்னாச்சு திரும்பவும் தப்பி ஓடணுமா? நான் ரெடி. இன்னும் தூக்கம் வருது எனக்கு. ஒடறியா?” என்று கேட்டானே ஒரு கேள்வி.
திகைப்பில் விழிகளை அகலமாகத் திறந்தவளுக்கு சத்தியமாய் “யார்ரா நீ?” என்று நினைக்காமல் இருக்கவே முடியவில்லை.
“ஐயோ ஐயோ ஐயோ” நெற்றியில் அடித்துக்கொண்டவள், “எனக்கு ஒரு மண்ணும் புரியல. ஏன் இப்படியெல்லாம் பண்ணுறீங்க?” கேட்டவளுக்கு குழப்பம்.
“என்னை பைத்தியம் ஆக்கிறாதீங்க. வேற வழியே இல்லாமதான் உங்க சொல்லுக்கு கட்டுப்பட்டு இங்க வந்தேன், ஒருவேளை தப்பு எதுவும் நடந்திருந்தா இந்நேரம்” அவள் சொல்லாமல் நிறுத்திட.
“இதை வச்சு என்னை போட்டு தள்ளியிருப்பியோ” மாயனாக அவள் முன் கையை விரித்துக் காட்டினான்.
அவன் கையில் இருந்த சிறிய கத்தியைப் பார்த்தவளுக்கு, எப்படி இது இவன் கைக்குப் போனது? அவளுக்குப் புரியவில்லை.
“அதுல என்ன தப்பு. எனக்கு தீங்கு வந்துச்சுன்னா அதையும் செய்வேன் நான்” நிமிர்வாய் அவனுக்கு பதில் தந்தாள்.
“ம் குட். சரி நீ கிளம்பு. எனக்கு வொர்க் இருக்கு” அவளை போகச் சொன்னவன் கதவை திறந்துவிட.
அவள் ஏதோ பேசிட வாயைத் திறக்க.
“போக மனசில்லைன்னாலும் ஓகே” கதவை திரும்பவும் க்ளோஸ் பண்ணிட கையை கொண்டு செல்ல.
அவன் கைபற்றித் தடுத்தவள், “நோ நோ நான் போறேன்” சொன்னவள் காரிலிருந்து இறங்கிவிட்டாள்.
“சரியான இவன்கிட்ட மாட்டிட்டேன் போலவே” புலம்பியவாறே நடந்தவளை பைத்தியம் போல சிலர் பரிதாபமாய் பார்த்ததில் தவறேதுமில்லை.