• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

வேந்தன் 13

New member
Messages
21
Reaction score
1
Points
3
வேந்தன் 13

கதை பிடிச்சிருந்தா அப்படியே கமெண்ட் பண்ணிட்டு போங்க ஹனீஸ் ❤️

மனோகரிக்கு நளிராவைத்தான் பிடிச்சிருக்கு, இவள்தான் தன் மகனுக்கு பொருத்தமாக இருப்பாள் என்று பெரிதும் விரும்பினார். ஆனால் நளிராவோ அவரின் ஆசையில் மொத்தமாக மண்ணை அள்ளிப் போட்டுவிடவும், அத்தனை கோபம் கண் மூடித்தனமாக வந்தது அவருக்கு.

அதிலும் நளிராவின் பேச்சுக்கு மறுபேச்சில்லாமல் ராஜானும் மலரும் சரின்னு சொன்னது இன்னும் உச்சந்தலைக்கு ஏறியது சினம்.

மாப்பிள்ளையைப் பெத்த மகராசிக்கு கவுரவக் குறைச்சலாகப் போனது. அதெப்படி வேண்டாம்னு சொல்லலாம்? தன் வீட்டிலயே தான் கிளிச்ச கோட்டை யாரும் தாண்டுரதே இல்லை.

அப்படியிருக்கையில் இவங்க? மூச்சுவாங்கியது அவருக்கு.

“எனக்கென்னமோ இந்தம்மாவுக்கு வர கோவத்துக்கு இங்க சூறாவளி சுழட்டி அடிக்கப் போகுதுன்னு தோணுது” ஆர்த்தி சைத்ரா காதில் சொல்லிச் சிரித்தாள்.

“ஸ்ஸ்ஸ் பேசாம இரு ஆர்த்தி. பிறகு இதை ஒரு பேச்சா எடுத்துக்குவாங்க” தங்கையை கண்டித்தாள் சைத்ரா.

“எங்களுக்கு இது தேவையில்லாத விஷயம் சம்மந்தி” மனோகரி நீளமாக பேசுவதற்கு தயாராக மூக்கு கண்ணாடியை தன் கைப்பையில் உள்ள திசு பேப்பரால் துடைத்துவிட்டு திரும்பவும் கண்களில் அணிந்து கொண்டார்.

“அப்படியே கொஞ்சம் தண்ணி குடிங்க, லென்த்தா பேசணும்ல?” வாணி அவருக்கு குடிக்க தண்ணி பாட்டிலை எடுத்துக் கொடுக்க.

மலர்விழிக்கு சிரிப்பு வந்துவிட்டது வானியின் குசும்பில்.

அப்படியே கணவன் புறம் குனிந்து “தேவையில்லாத விஷயம்னு தெரிஞ்சும் இந்தம்மா எதுக்கு பேசுது” மெல்லிய குரலில் விசாரிக்க.

“அந்தம்மா நம்மளைத்தான் பாக்குது மலர். அப்படியே சிரிச்சா மாதிரி இருந்துக்க” எச்சரித்தார் மனைவியை.

“என்ன விஷயம்?” மனோகரி அவர்களை சந்தேகமாகப் பார்த்தார்.

“உங்க கண்ணாடி ஃப்ரேம் அழகா இருக்குன்னு சொன்னேன்” மலர்
சமாளித்துவிட்டார்.

அப்படியா! என்ற பெருமையுடன் கன்னாடியை கையில் எடுத்து ஒருமுறை பார்த்தவர், “தங்கத்துல செஞ்ச ப்ரேம்” பெருமையாய் சொல்லிவிட்டுப் பின் அவர்கள் பக்கம் திரும்பினார்

“ஹான் இப்ப எதுல விட்டேன்?” மனோகரி கேட்க.

“தேவையில்லாத பேச்சு பேசுறேன்னு உங்களையே நீங்க திட்டிகிட்டீங்க” வாணி பட்டுன்னு சொல்லிவிட.

“சூப்பர் வாணிக்கா. பின்னிட்டீங்க” சைத்ராவுக்கு வாணி மீது இன்னும் பிரியம் கூடியது.

வாணி சொன்னது புரிந்தாலும் மீசையில் மண் ஒட்டாதது போல பாவித்து, அவரை ஒரு முறை முறைத்த மனோகரி “அடுத்தவங்க வீட்டுலே எப்படி போனாலும் எனக்குக் கவலையே இல்லைங்க. ஆனாலும் இந்த வீட்டுல இருந்து ரெண்டு மருமகளை எடுக்கப் போறேன். அந்த ஒரே காரணத்துக்காகத்தான் சொல்றேன் கேட்டுக்கங்க. இவ்வளவு செல்லம் ஆகாதுங்க. அவ வேண்டாம்னு சொன்னா சரின்னு தலையாட்டுறீங்க. என்ன ஏதுன்னு சொல்லி புரிய வைக்க மாட்டீங்களா?” மனோகரி தன்னை எதிர்த்துப் பேசிய நளிராவை சும்மா விடக்கூடாது எனப் பொறிந்து தள்ளினார்.

“நளிரா காரணமில்லாம அப்படிச் சொல்ல மாட்டா. எங்க பொண்ணுங்க மூணு பேருமே தங்கம்ங்க, நாங்க அவங்களை நம்புரோம்” மலர் மெல்லிய குரலில் சொன்னார்.

“அப்போ லவ் பண்ணுறாளா?” மனோகரி நெருப்பாய் வார்த்தைகளைக் கொட்டிட.

“சிவா சிவா அப்படியெதுவும் இல்லைங்க” நாதன் பதறினார். அவருக்கு நெஞ்சு வலியே வந்தது சம்மந்தியின் பேச்சில். சம்மந்தின்னு பார்த்தால் என்ன பேச்செல்லாம் பேசுறாரு. அதுவும் தன் மகளைப் பார்த்து… அவருக்கு ரத்த அழுத்தம் ஏகத்துக்கும் எகிறியது. அதைத் தீர்க்கும் முயற்சியாய் தண்ணீர் பாட்டிலை எடுத்தவர் ஒரே மடக்கில் குடித்து தீர்த்தார்.

“இந்தக் காலத்துப் பொண்ணுங்க தடுக்குனா அங்கதான விழுறாங்க. அதும் இவ அழகுக்கு நான் நீன்னு வரணுமே” நக்கலாக சிரித்தார்.

“இப்ப உதாரணத்துக்கு நாம கூட பொண்ணு பார்க்க வந்தமே அப்படி” ராகவன் இடையில் புகுந்து சொல்ல.

“நான் சொன்னது வேற” கணவனை வெட்டுவேன் குத்துவேன் என்பது போலப் பார்த்தார் மனோகரி.

“மனோ இதென்ன பேச்சு?” யாருமறியாது சொல்லி, ராகவன் மனைவியின் கையைத் தொட்டார். பேசாமலிருக்கும்படி சைகையும் செய்தார்.

அதற்கெல்லாம் அடங்கும் ஆளா மனோகரி, “பின்ன என்னங்க, பொண்ணு கல்யாணம் வேண்டாம்னு சொல்லுவாளாம், இவங்களும் சரின்னு சொல்லுவாங்களாம். நாலு தட்டு தட்டி சரின்னு சொல்ல வைக்கனுமில்ல” நொடித்துக்கொண்டார் மனோகரி.

ஆர்த்திக்கும் சைத்ராவுக்கும் நல்லா கேட்டுவிடணும்னு தோணுச்சுதான். ஆனால் அப்படிக் கேட்டு இன்னும் பெற்றவர்களுக்கு தலைவலியை இழுத்துவிட வேண்டாமே என்று நினைத்து அடங்கியிருந்தார்கள்.

“நாளைக்கு ஏதும்னா எங்க பேரும் சேர்ந்துதான் கெடும் கவனமா இருங்க” மனோகரி மிதப்பாக அறிவுரையை சொல்லிவிட்டு கிளம்பினார்.

“அம்மாடி பொண்ணுங்களா, இந்த பையில இனிப்பு பலகாரம் இருக்கு. எடுத்துட்டு போய் உங்க மாமியார் காருல வச்சுட்டு வழியனுப்பிட்டு வாங்க. இல்லாட்டி அதுக்கும் அந்தம்மா உக்காந்து கிளாஸ் எடுக்கும்” வாணி பெண்களை மனோகரி பின்னாலேயே அனுப்பி வைத்தார்.

வந்தவர்களை எப்படியோ பேசி சமாளித்து அனுப்பிய நாதனுக்கும் மலர்விழிக்கும் இது இத்தோடு முடியாது என்று தோன்றியது. இரண்டாவதாக ஒரு பொண்ணு இருக்கையில் கடைக்குட்டிக்கு இப்போ என்ன அவசரம் என்ற பேச்சு வரும் என்று நினைக்க நினைக்க தலையே வெடித்தது போல இருந்தது அவர்களுக்கு.

“அம்மாடி நளிரா. கொஞ்சம் வெளிய வா பொண்ணே” வாணி குரல் கொடுத்தார்.

தயங்கியவாறே நளிராவைக் கேள்வியாய்ப் பார்த்தார்கள்.
கண்கள் கலங்கி சிவந்து போயிருக்க, அவள் அழுதிருப்பது நன்றாகவே தெரிந்தது பெற்றவர்களுக்கு. அதில் மிச்சம் மீதியிருந்த சிறு அங்கலாய்ப்பும் விலகியோடியது அவர்களுக்கு.

“அம்மா, அப்பா சாரிம்மா. என்னை மன்னிச்சிடுங்க. நான்... நான் வேணும்னே பண்ணலைம்மா” நளிரா தாயின் மடியில் முகம் புதைத்து

“அம்மா தப்பு என்மேலதான்” ஆர்த்தி தன் மீதுதான் தவறு என்பதை ஒப்புக்கொள்ள முன்வந்தாள்.

“ஆரவ்வ எனக்கு பிடிச்சிருக்கும்மா. அதான் நளிராக்காகிட்ட சொன்னேன். எனக்காக அவ திட்டு வாங்கிட்டா” விளக்கம் சொன்ன ஆர்த்தி “சாரிப்பா என்னை மன்னிச்சிடுங்க” இருவரிடமும் மன்னிப்புக் கேட்டாள்.

“எனக்குத்தான் தெரியுமே. என் பொண்ணுங்க தப்பு பண்ண மாட்டாங்கன்னு” ராஜன் பெருமையாகச் சொன்னார்.

மூவரும் தந்தையைக் கட்டிக்கொண்டனர் “என் செல்ல அப்பா” என்று.

ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுக்கு திருமணம் செய்வது என்பது சாதாரணமான விஷயமா? வீடு கல்யாணக் களை கட்டி இருந்தது.

நாதனுக்கும் மலர்விழிக்கும் நின்று பேசிட நேரமில்லை.

பத்திரிக்கை வைக்க நேரில் செல்வதும், போனில் அழைப்பு விடுப்பதும், பெண்களுக்கு புடவைகள் எடுக்க, தைக்கவென்று ஆயிரக்கணக்கான வேலைகள் லைன் கட்டி நிற்க பெண்களுடன் சிறிது நேரம் நின்று பேசவும் அவர்களுக்கு நேரமில்லை.

மாப்பிள்ளை வீட்டார் ஏற்பாடுகள் எல்லாவற்றையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்றும் அதற்கு பணத்தை மட்டும் தந்துவிடுங்கள் என்று சொல்லியிருக்க, அதுவே இவர்களுக்கு ஒரு பெரிய உதவியாகப் போயிற்று.

இதில் பாவம் நளிரா தான் தவித்து நின்றாள். வீட்டினர் தவிர்த்து மற்றவர்கள் இவளை ஒரு குறையாகவே பேசினார்கள். அதுவும் இவள் காதுப்படவே பேசிவைத்தார்கள்.

“என்ன குறைன்னு தெரியலையே. நம்மகிட்ட சொல்லுவாங்களா. அப்படியே மறைப்பாங்க”

“யாரோ ஒருத்தனை விரும்பறாளாமே”

“இவளுக்கு ஜாதகமே சரியில்ல பாத்துக்க”

இப்படி ஆயிரத்தெட்டு குத்தம் குறைகள், இவர்கள் காதுப்படவே கேட்டது.

அதுவும் பத்திரிக்கை வைக்கப் போகுமிடமெல்லாம், முகம் கருத்துதான் வருவார்கள்.

இத்தனை பேச்சுகளை வாங்கியும் ஒரே ஒருவார்த்தை கூட நளிராவை குறை சொன்னதில்லை வீட்டினர் யாருமே.

அன்றும் அப்படித்தான் பத்திரிகை வைப்பதற்காக சென்றவர்கள் திரும்பி வரும் பொழுது முகத்தில் உயிர்ப்பே இல்லை.
 
Top