- Messages
- 1,242
- Reaction score
- 3,657
- Points
- 113
வேதம் – 7
வணிகவளாகத்தின் வாயிலில் நின்று எட்டிப் பார்த்துக்கொண்டிருந்த வேதவள்ளியின் விழிகள் முழுவதும் பயம் படர்ந்திருந்தது. முருகையா அன்பழகனிடம் செல்லும் வேகமே அவரது மனதை எடுத்துரைக்க, முகம் முழுவதும் பதற்றம் விரவியது.
ஏற்கனவே அன்பழகன் தன் வீட்டு மக்களைப் பற்றித் தன்னிடமே குறை கூறுவான், திட்டுவான். அவனது இயல்பான பேச்சே திமிராகத்தான் இருக்கும். இப்போது இருவருக்கும் இடையில் எதுவும் பிரச்சனை நிகழ்ந்துவிடுமோ? என எண்ணியவளின் விழிகள் லேசாகப் பனித்தன. அழக்கூடாது என எத்தனை முறை கூறிக்கொண்டாலும் அன்பழகன் என்று வரும்போது மனம் ஏதோ ஒரு கணத்தில் தைரியத்தை இழந்துவிடுகிறது.
எத்தனையோ விரும்பத்தகாத, ஏற்க முடியாத சூழ்நிலைகள் வந்தப் போதும் தைரியமாக நின்று அதை கடந்தவளால், இந்த அன்பழகனை, அவனது செயலை, பேச்சைக் கடக்க முடியவில்லை. மனதின் ஒரு ஓரத்தில் நின்று பெண்ணை இம்சித்தான். சில சமயம் எரிச்சலாக வரும். பல சமயம் கோபம் வரும். ஏன் இப்படி? என அவளால் ஆதங்கப்பட மட்டுமே முடியும்.
கழுத்திலிருந்த துப்பட்டாவின் நுனியைப் பிடித்துக்கொண்டே தங்களை எட்டிப்பார்த்தவளின் கலக்கமான முகத்தில் தன் பார்வையைப் பதித்தான் அன்பழகன். அவளது பாவனைகளில், ஆடவன் முகம் மென்மையானது. இத்தனை நேரமிருந்த திமிரான அலட்டலான உடல்மொழி தளர்ந்து விட, கண்ணாடியை அகற்றித் தன் கால்சராயில் வைத்தான். இவையெல்லாம் வேதா என்ற ஒரு மந்திரச் சொல்லுக்காக மட்டும்தான். அவள் முகத்தில் தெரிந்த அந்தப் பதற்றத்திற்காக மட்டுமே.
தன்னை
நிலைபடுத்திக்கொண்டான். கோபம் கொள்ளக் கூடாது எனத் தனக்குத் தானே கூறியவன், தேநீர் கடைக்காரரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு திரும்பவும், முருகையா அவனருகில் வந்திருந்தார்.
“நீ செய்றது நல்லா இருக்கா தம்பி? எங்க வீட்டுப் பொண்ணு பின்னாடி வராதேன்னு எத்தனை தடவை சொல்றோம். கேட்க மாட்டீயா?” முருகையா கோபமாக வினவினார். அன்பழகனிடம் பதிலில்லை. அவன் பார்வை முழுவதும் சாலைக்கே வந்து நின்று தங்களை கவனிக்கும் பெண்ணின் மீதுதான். செவி மட்டும் எதிரில் இருப்பவரின் வார்த்தைகளை உள்வாங்கி மூளைக்குக் கடத்தியது.
“உன்கிட்டேதான் டா கேட்குறேன். இதுவே உனக்கு ஒரு தங்கச்சி இருந்து, அவ பின்னாடி ஒருத்தன் வந்தா நீ சும்மா இருப்பியா?” ஆதங்கமாகக் கேட்டார் மனிதர்.
“வெளுத்திருப்பேன் எவனா இருந்தாலும்...” உதட்டுக்குள் முணுமுணுத்தான் ஆடவன். இருப்பினும் அது பெரியவர் செவியை அடைந்திருந்தது.
“ஆங்... உங்க வீட்டுக்கு ஒரு நியாயம், எங்க வீட்டுக்கு ஒரு நியாயமா? உனக்குகாகத்தான் அவளை நானே கூட்டீட்டு வந்து விடுறேன்”
“ஓ... நீங்க வந்து விடுறதால, நான் பயந்துடுவேன்னு நினைச்சீங்களா?” அலட்சியமாகத்தான் கேட்டான் அன்பழகன்.
அதில் அதிர்ந்த முருகையா, “நீ பயப்படுறீயோ இல்லையோ, எங்களுக்கு பயமா இருக்கு. உன்னை மாதிரி நாலு பேர் எங்க பொண்ணு பின்னாடி வந்தா, அவ பேர்தான் கெட்டுப் போகும்...” அவர் கூற்றில் அன்பழகன் இதழ்கள் வளைந்தன.
“என்னை மாதிரி நாலு பேர் எல்லாம் இல்லை. நான் மட்டும்தான் என்னை போல. உங்கப் பொண்ணு பின்னாடி என்னைத் தவிர யாரையும் சுத்த விட மாட்டேன். கவலைப்படாதீங்க...” கேலியாக உரைத்தவனை அற்பமாகப் பார்த்தார்.
“உன்னெல்லாம் திருத்த முடியாது டா. துஷ்டனை கண்டா, நாங்கதான் தூர விலகிப் போகணும்...” தலையில் அடித்துக்கொண்டு அவர் நகரப் பார்த்தார்.
“ஒரு நிமிஷம் நில்லுங்க...” என்றவன், தன் கையில் உள்ள கைக்கடிகாரத்தைச் சரி செய்துகொண்டே அவரைப் பார்த்தான்.
“இல்லை, உங்க வீட்டுப் பொண்ணை என்னப் பண்ணிட்டேன்னு இப்படி பதறுறீங்க. கோபப்படுறீங்க? அவளை இதுவரைக்கும் எதாவது ஒரு வகையில டிஸ்டர்ப் பண்ணி இருக்கேனா?”
“அதான் தினமும் பின்னாடி வந்து டார்ச்சர் பண்றீயே?”
“எனக்கு அவளைப் பிடிச்சிருக்கு, அதான் பின்னாடி வர்றேன்”
“நாளைக்கு கல்யாணமாகி வேற வீட்டுக்குப் போகப்போற பொண்ணு டா அவ. நீ பின்னாடி வந்தா, ஊர் தப்பா பேசும்” முருகையா கொதித்துப் போனார். அன்பழகனின் பேச்சும் அலட்சியமும் அவரை சீண்டியிருந்தது.
“ப்ம்ச்...” என நெற்றியைச் சொரிந்தவன், “அதான் நானும் சொல்றேன். நாலு பேர் பேசுறதுக்கு முன்னாடி நீங்களே உங்கப் பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுங்க. எப்படியும் ஏதோ ஒரு வீட்டுக்குப் போகதானே போறா? அது ஏன் என் வீடா இருக்கக் கூடாது...” அலட்டலில்லாத பாவனையில் கேட்டவனிடம் பேசுவது எல்லாம் விழலுக்கு இரைத்த நீரைப் போல
என்றுணர்ந்தவர், அகன்றுவிட்டார்.
முருகையா நகர்ந்ததும் நிம்மதி பெருமூச்சை வெளியிட்டாள் வேதவள்ளி. பேசியதோடு அகன்றுவிட்டாரே மனிதர் என பெண்ணின் மனம் நிம்மதியடைந்தது. தூரத்தே நின்று அவளைக் கவனித்தான் அன்பழகன். அவள் முகத்திலிருந்த ஆசுவாசத்தில் அவனுள்ளே ஏதோ ஒன்று அடங்கியது. அவளுக்காகவேனும் இனிமேல் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைத்தான்.
இப்படியே இரண்டு நாட்கள் முருகையா வந்து வேதாவை வேலைக்குவிட்டுச் செல்வதும், பின் பணி முடிந்து வீட்டிற்கு அழைத்துச் செல்வதும் என பெண்ணைப் பாதுகாத்தார். மூன்றாம் நாள் இரவு அவருக்கு வேலை நகரமுடியாது பிடித்துக்கொண்டது.
வணிக வளாகத்தின் வாயிலில் பத்து நிமிடங்கள் நின்ற வேதவள்ளி முருகையாவிற்கு அழைத்தாள்.
“பெரியப்பா, டைம் ஆச்சு” வேதவள்ளி கூறவும், “சாரி டா. இன்னைக்கு வேலை அதிகமா இருக்கு. பஸ்ல வீட்டுக்குப் போய்ரு டா. பத்திரமா போ” என்றவர் அழைப்பைத் துண்டிக்கவும், பேருந்து நிலையத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் வேதா.
வேதவள்ளி நிற்பதை கவனித்துவிட்டு அருகே வந்தவன், அவள் செயலை அவதானித்து பெண்ணுடனே நடந்தான். பேருந்து நிலையத்தை அவர்கள் அடைந்ததும் ரோசல்பட்டி செல்லும் பேருந்து உடனே வந்துவிட, அதில் ஏறினாள் வேதா.
அவள் பின்னே அன்பழகனும் பேருந்தில் ஏற, தன் பின்னே வந்தவனின் காலடித்தடத்தில் லேசாக நெற்றியைச் சுருக்கியவள், இருக்கையில் அமர்ந்தாள். எப்போதும் இருசக்கர வாகனத்தில் மட்டும்தான் அவன் பின்னே வருவான். இப்படியெல்லாம் பேருந்தில் ஏறியதே இல்லையே என அவளது எண்ணம் அவனைச் சுற்றித்தான் நகர்ந்தது.
பேருந்தை சுற்றிலும் பார்வையைப் படரவிட்டவன், வேதவள்ளி அருகே இருந்த இருக்கையில் அலட்டாமல் அமர்ந்து கொள்ள, அதை எதிர்பார்க்காத பெண் திகைத்துப் போனாள். பக்கவாட்டாகத் திரும்பி அவன் முகத்தைப் அவள் பார்க்கவும், அவன் அவளைக் கண்டு கொள்ளவே இல்லை.
இரண்டு நிமிடங்கள் அவனை வெறித்தாள் வேதா. அந்தப் பார்வையில், இமை சிமிட்டாமல் நோக்கும் பெண்ணின் விழிகளில் லேசாகத் திணறியவனின் மூச்சு அனலாய் வெளிவந்தது. இருந்தும் அவள்புறம் ஒரு நொடி கூட அன்பழகன் திரும்பவில்லை. அந்த விழிகளைப் பார்த்தால், ஏதோ அது தன்னை உள்ளிழுத்துக் கொள்வது போல பிரம்மை ஆணவனுக்கு.
“எங்கப் போகணும்?” நடத்துநர் வினவ, அவளுக்கும் சேர்த்து தானே பயணச்சீட்டை வாங்கினான் அன்பழகன்.
அவன் நகர்வதாக உத்தேசமில்லை என்பதை உணர்ந்தவள், எழுந்து நின்றாள். அதை உணர்ந்தவன், குனிந்து அலைபேசியில் மூழ்குவது போல விழிகளை அலைபேசித் திரையில் பதித்தான். ஆனால், அவனின் ஐம்புலன்களும் அவளைச் சுற்றித்தான் வட்டமிட்டன. வாயைத் திறந்து எதாவது பேசுவாள் என அன்பழகன் காத்திருக்க, ஒரு வார்த்தைக் கூட உதிர்க்கவில்லை பெண்.
வேண்டுமென்றே அன்பு இப்படிச் செய்கிறான். தன்னை பேச வைப்பதுதான் அவன் நோக்கம் என உணர்ந்தாள் வேதவள்ளி. அதற்குள்ளே அவளருகே வந்த நடத்துநர், “என்னம்மா, அடுத்த ஸ்டாப் இறங்கணுமா?” என்றவரின் பார்வை எப்போதும் வரும் அவளை நன்கு பரிட்சயம் என சொல்லாமல் சொல்லியது. அவளருகே ஒரு ஆடவனைக் கண்டவர், முன்பே சந்தேகத்துடன்தான் நகர்ந்தார்.
அவரது கேள்வியில் அன்பழகன் நிமிர்ந்து வேதாவையும் நடத்துநரையும் மாறி மாறிப் பார்க்க, “இல்லை ண்ணா, ஒன்னும் இல்லை...” என்று பதிலுரைத்துவிட்டு அமர்ந்தாள். ஏனோ அருகே அமர்ந்திருப்பவனை மாட்டிக் கொடுக்கும் எண்ணம் துளிகூட அவளை ஆக்கிரமிக்கவில்லை.
பெண்ணின் செய்கையில் ஆடவன் இதழ்கள் மென்னகையை உதிர்த்தன. இருவருக்கும் இடையே தன் கைப்பையை வைத்து இடைவெளியைப் பெரிதுபடுத்தினாள் அவள். அதில் புருவத்தை உயர்த்திய அன்பு, தொண்டையைச் செருமி சரி செய்துகொண்டான்.
“ஏன் டி சின்னப் புள்ளைத் தனமா பிஹேவ் பண்ற? உங்கப் பெரியப்பாவைக் கூட்டீட்டு வந்தா, நான் பயந்துடுவேனா?” கேலியாகச் சிரித்தவனை முறைத்த வேதா, சாளரத்தின்புறம் திரும்பிக்கொண்டாள்.
“ஆமா! இவர் பெரிய சண்டியர். யாருக்கும் பயப்பட மாட்டாரு...” வாய்க்குள் முணுமுணுத்தவளின் பதிலில் இதழ்கடையோரம் புன்னகை ஜனித்தது அவனுக்கு.
“ப்ம்ச்...” என்றவள் எதுவும் பேசவில்லை.
“ஆமா, நான் சண்டியர்தான் உன் விஷயத்துல மட்டும்...” லேசாய் அவளுயரத்திற்கு குனிந்து காதில் முணுமுணுத்தவனின் வார்த்தைகளில் முதன்முதலாக பெண் சிலிர்ப்பை உணர்ந்தாள். அந்தக் குரல் அவளை முழுவதும் வசியப்படுத்தியது.
முறைக்க முயன்று தோற்ற விழிகளை ஆடவனுக்கு காட்டாது மறைத்தவள், மறந்தும் அவன்புறம் திரும்பவில்லை. பக்கவாட்டாக அவளின் தோற்றத்தை மனதில் பதித்தான் அன்பழகன். சிறியதாய் வேதா அணிந்திருந்த காதணி அவனை அழைப்பது போன்றொரு பிரம்மை. எப்போது அந்த செவியில், தன்னை ஈர்க்கும் பெண்ணின் கழுத்து வளைவில் தஞ்சம் புகுந்து முத்தமிட்டு மோட்சம் அடையப் போகிறோம் என்றவன் ஏக்கப் பெருமூச்சை வெளிவிட்டான்.
தன்னருகே அமர்ந்திருந்தவனின் இருப்பை ஒவ்வொரு நொடியும் பெண் உணர்ந்தாள். அவன் மூச்சுக்காற்றின் வெம்மை பாவை முகத்தில் முத்தமிட்டு சென்றது. தன்னையே நொடி விலகாது நோக்குபவனின் பார்வை அசௌகரியத்தைக் கொடுத்தாலும், எதுவும் பேசாது அமர்ந்திருந்தவளின் சிந்தை முழுவதும் அன்பழகன்தான்.
‘தன்னருகே மட்டும் இவனின் பேச்சிலும் உடல் மொழியிலும் எப்படி இத்தனை மாற்றங்கள்? குரல் கூட அத்தனை மிருதுவாய் தன் பெயரை உச்சரிக்கிறதே! இதுதான் உண்மையா? இல்லை, எல்லோரிடமும் காண்பிக்கும் திமிரான பேச்சும் அலட்சியப் பாவனையும்தான் உண்மையா?’ என யோசித்து குழம்பிப் போனாள் வேதவள்ளி. தன்னுடைய நிறுத்தம் வரவும் வேதவள்ளி அவனைப் பார்க்க, அன்பழகன் எழுந்து இறங்கினான். பெண்ணும் இறங்கி நடக்கத் துவங்கினாள்.
“வேதா...” எத்தனை மென்மையான அழைப்பு. அந்தக் குரல் அகத்தை அடைந்து சிந்தையை செயலிழக்கச் செய்வதை உணர்ந்தவள் எட்டி நடையைப் போடவும், “எனக்கு பதிலை சொல்லீட்டுப் போ டி...” என்று குரலை உயர்த்தியவன், பின் தாழ்த்தினான்.
“பிடிச்சிருக்கா? பிடிக்கலையா? நான் வேணுமா? வேணாமா?” ஒவ்வொரு வார்த்தையாகப் பிரித்துக் கேட்டான் அன்பழகன்.
அவனது கேள்வியில் கடைக்கண்ணால் ஆடவனை நோக்கியவளின் இதழ்களில் நக்கல் புன்னகை. அதை உணர்ந்தவனுக்கும் அவளது எண்ணம் புரிந்தது.
‘ஏன் பிடிக்கலைன்னு சொன்னா மட்டும் துரை பின்னாடி வரமாட்டாரு பாரு...’ மனதிற்குள்ளே கேள்வி எழுப்பினாள் வேதவள்ளி.
அவளது முகம் பார்த்து அகத்தைக் கணித்தவனுக்கு வதனம் முழுவதும் புன்னகை. “ம்க்கூம்... பிடிக்கலைன்னு சொன்னா மட்டும், பின்னாடி வரமாட்டான் பாருன்னுதானே நினைக்கிற?” என கேட்டவனை ஆச்சரியம் பொதிந்தப் பார்வையுடன் நோக்கினாள் வேதவள்ளி.
சிரித்தவன், “ஓகேன்னா, கூட்டீட்டுப் போய் தாலி கட்டி குடும்பம் நடத்துவேன். இல்லைன்னா, பெர்ஃபாமன்ஸை ஹெவியாக்குவேன்...” கேலியாகக் கூறியவனைப் பார்த்துத் திரும்பி நின்றாள் பெண்.
“எப்படி, அடிதடி செஞ்சா?” லேசாக முறைத்தவளின் கண்ணோரம் சுருங்க, கன்னத்து தசைகள் வரிவரியாய் நீண்டிருந்தன.
“ப்ம்ச்... சத்தியமா நான் அப்படி நினைச்சு சொல்லலை டி. பட், தேவைப்பட்டால் அடிதடியும் பண்ணுவேன்...” தோளைக் குலுக்கினான் அன்பழகன். வேதவள்ளியின் முறைப்பும் அதிகமாகியது.
“தேவைபட்டாதான் டி... சும்மா என்னை கிரிமினல் மாதிரி பார்க்காதீங்க குடும்பமே!” சலித்துக் கொண்டான்.
அவனிடம் பதிலுரைக்காதவள் நகர, “வேதா...” என கத்தினான் ஆடவன். பதறித் திரும்பினாள் பெண். யாரேனும் சாலையில் இருக்கிறார்களா? எனப் பயந்த பாவையின் விழிகள் சாலையில் படர்ந்தன. பின் நின்று நிதானமாக அவன்புறம் திரும்பியவள், இரண்டாவது முறையாக நிமிர்ந்து அவன் விழிகளைச் சந்தித்தாள். அதில் அவன் இதழ்கள் முழுவதும் புன்னகை.
விழிகள் முழுவதும் தன்மீதான மயக்கத்தில், நேசத்தில் நிற்பவனைப் பார்த்து பெண்ணுக்கு உள்ளுக்குள்ளே ஏதோ ஒரு உணர்வு குப்பென்று தாக்க, அதிர்ந்தது பாவையின் மனம். பார்வையைத் தழைத்தவள், எதுவும் கூறாது விறுவிறுவென வீடிருக்கும் தெருவிற்குள் நுழைந்துவிட்டாள்.
அன்பழகன் அதே இடத்தில் நின்றான். அவளருகே மட்டும் ஏன் இத்தனை ஆசுவாசம்? இத்தனை பொறுமை, மென்மை. என்னால் இவளிடம் கோபம் கொள்ளவே முடியாதா? வாழ்க்கை முழுவதும் இவளிடம் மண்டியிடப் போகிறேனா? இவள் மீது தனக்கு ஏன் இப்படி ஒரு மயக்கம், கிறக்கம்? என்று தீருமோ இது? என விடை தெரியாத பல கேள்வியுடன் நின்றவனிடம் வெகு விரைவில் பதில் வரக்காத்திருந்தது.