- Messages
- 1,242
- Reaction score
- 3,657
- Points
- 113
வேதம் – 24
தன் தந்தைதான் இடிக்க வந்தது என்றுணர்ந்தவன், நெற்றியைச் சுருக்கினான். “பார்த்துப் போங்க, யாரையும் இடிச்சுடாதீங்க...” லேசாய் முறைப்புடன் கூறி, வேதவள்ளியின் தோளில் கையைப் போட்டுக்கொண்டு அலட்சியமாக நடந்தான் அன்பழகன். அவனைத்தான் விழி இடுங்க பார்த்திருந்தார் முத்துக்கிருஷ்ணன்.
‘வேதவள்ளி என்றில்லை, கண்டிப்பாக யாருக்காக இருந்தாலும் திட்டியிருப்பான் அவன்.’ அவர் மனம் முதன்முதலிலாய் மகனுக்கு ஆதரவு கரம் நீட்டியது. எதுவும் பேசாதவர், தன் வாகனத்தை இயக்கி வீட்டை நோக்கிச் சென்றார்.
“ஏன்ங்க, தெரியாமதானே இடிச்சாரு...” வேதவள்ளிக்கு முத்துக்கிருஷ்ணனை அடையாளம் தெரியவில்லை என்பதே உண்மை. வத்சலா முகம் மட்டுமே அன்று காவல்நிலையத்தில் உற்றுப் பார்த்திருந்தாள். மற்றபடி ஆண்கள் இருவரையும் அவளுக்குத் தெரியாது. அதனால்தான் அறிவழகன் முதன்முறை வீட்டிற்கு வந்தப் போது அவனை மனைவிக்கு அறிமுகம் செய்து வைத்தான் அன்பழகன்.
அவளைத் திரும்பிப் பார்த்து லேசாய் உதட்டை வளைத்தவன், “ஏன், உன் மாமனாரை சொன்னதும் கோபம் வருதோ?” என வினவியபடி தோளைக் குலுக்கினான்.
“என்னங்க சொல்றீங்க?” ஒரு நொடி அதிர்ந்து நின்ற வேதவள்ளி, “உங்கப்பாவா அவரு? நீங்க பேசுனதுக்கு எதுவும் நினைச்சுக்கப் போறாருங்க...” என்று பதறினாள்.
“ம்க்கூம்... நான் எதுவும் சொல்லலைனாலும், அவர் நினைச்சுக்கதான் போறாரு. அந்த மனுஷன் அப்படி, அவருக்கும் எனக்கும் சுத்தமா ஆகாது...” சலித்தான் அன்பு.
“என்னங்க...” மனைவி முறைக்க,
“ஹே, நீ முறைச்சா இல்லைன்னு ஆகிடுமா? அதான் உண்மையும் கூட...” அலட்சியமாகத் தோளைக் குலுக்கினான்.
“ஏன், உங்களுக்கும் அவருக்கும் ஆகாது?”
“அதெல்லாம் பெரிய ஹிஸ்ட்ரி, இன்னொரு நாள் சொல்றேன். நீ ரோட்டைப் பாரு, வண்டி வராதப்போவே கிராஸ் பண்ணுவோம்...” என இருவரும் சாலையைக் கடக்க, ஒரு உருவம் அவர்களை உற்றுக் கவனித்தது.
‘யாரது?’ எனப் பார்த்த வேதா, “எழில்...” என முணுமுணுத்தாள்.
“என்ன வேதா?” என்றவன் மனைவி பார்வை போகும் திசையை நோக்கினான்.
“இவனா?” என்ற அன்பழகனின் இதழ்களில் கேலிப்புன்னகை குடியேறியது.
“நீ இந்தப் பக்கம் வா வேதா. ஒளிஞ்சு ஒளிஞ்சு பார்க்குறான். நல்லா பார்க்கட்டும் என் பொண்டாட்டியை...” என்ற அன்பு இடப்பக்கமிருந்த வேதாவை வலது பக்கத்திற்கு மாற்றினான்.
“ப்ம்ச்... அமைதியா வாங்க. நீங்க வேற, வம்பை விலை கொடுத்து வாங்குவீங்க...” என்று அவன் கையை பிடித்து இழுத்துச் சென்றாள் மனைவி.
எழிலை திரும்பிப் பார்த்த அன்பு, “என்ன டா, இப்போ யார்கிட்ட போய் வத்தவப்ப? போ, போய் சொல்லு...” வில்லனின் சிரிப்புடன் நகர, எழில் அவர்கள் இருவரையும் கண்களால் எரித்தவாறே சென்றான்.
இருவரும் வீட்டிற்குள் நுழைய, வத்சலா அழைத்துவிட்டார். வேதவள்ளயிடம் சில நிமிடங்கள் பேசியவர், மகனிடமும் அளவளாவ, “ம்மா... உன் வீட்டுக்காரரை ரோட்ல பார்த்தேன்...” என நடந்ததை நினைவு கூர்ந்தான்.
“வாய் நீளம்டா உனக்கு, நேர்ல வரும்போது பார்த்துக்கிறேன்...” அவனுக்கு இரண்டு வசவுகள் கொடுத்தவர், அழைப்பைத் துண்டிக்க, முத்துக்கிருஷ்ணன் வந்துவிட்டார்.
அவரது முகத்தில் யோசனைக் கோடுகள் படர்ந்திருக்க, அதை கவனித்த வத்சலா தேநீரை தயாரித்து அறைக்குள் நுழைந்தார். உடையை மாற்றி கட்டிலில் தளர்வாக அமர்ந்திருந்தார் முத்துக்கிருஷ்ணன்.
“டீயைக் குடிங்க...” இன்னுமே இருவருக்கும் இடையில் சுமூகமான பேச்சுவார்த்தை இல்லை. ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டுமே
கணவருக்கும் மனைவிக்கும் இடையில் நிகழ்ந்தன.
“ஹம்ம்...” குழப்பமான முகத்துடன் தேநீரை வாங்கிப் பருகியவரின் அருகில் அமர்ந்தார் வத்சலா. இதுதான் சரியான சந்தர்ப்பம், எப்படியாவது கணவரது மனதைக் கரைத்து மகனை வீட்டிற்கு அழைத்து வந்துவிடலாம் என எண்ணியவர், “என்னங்க, ஏன் ஒரு மாதிரி குழப்பமா இருக்கீங்க?” என வினவினார்.
மனைவியைத் திரும்பிப் பார்த்தவர், “ஒன்னும் இல்லை வத்சலா...” பதில் இயம்பினார்.
“இல்லையே, என் புருஷனை எனக்குத் தெரியாதா? உங்க மனசுல என்ன இருக்குன்னு எனக்குத் தெரியும். இப்போதான் அன்புகிட்ட பேசிட்டு வந்தேன்...” என்ற மனைவியை கேள்வியாகப் பார்த்தார் மனிதர்.
‘என்னை மனைவி முழுதாக அறிவாள்’ என அந்தக் கணம் மனது ஒரு நொடி மகிழ்ந்தது.
“நீங்க என்ன நினைக்குறீங்க? கடைசிவரைக்கும் அவனை வீட்டுக்குள்ளே சேர்க்க கூடாதுன்னா?” என கேட்டு தலையை இடம் வலமாக அசைத்த வத்சலா, “அப்படியெல்லாம் வெட்டி விடுற உறவு இல்லைங்க இது. தப்போ, சரியோ அவன் நம்ம பையன். ஊர் உலகம் என்ன சொல்லும்னு யோசிச்சிட்டு எல்லாம் இருக்காதீங்க. அன்னைக்கு நீங்க அவனை வீட்டை வெளிய போக சொன்னது சரின்னு சொல்ற அதே மனுஷங்கதான், இப்போ அன்புவும் வேதாவும் தனியாக கஷ்டப்படுறாங்க, உங்களுக்கு கல் மனசுன்னு சொல்றாங்க. அவங்களுக்கு ஜஸ்ட் அது ரெண்டு நிமிஷம் பேச்சு. அதுக்கெல்லாம் நம்ம முக்கியதுவம் கொடுக்கணும்னு அவசியமில்லை...” என்றார்.
“அப்போ அவன் செஞ்சது தப்பில்லைன்னு நியாயப்படுத்துறீயா வத்சலா?” முத்துக்கிருஷ்ணன் அமைதியாக அதே சமயம் அழுத்தமாகக் கேட்டார்.
அதில் மெலிதாய்ப் புன்னகைத்த வத்சலா, “கண்டிப்பா இல்லைங்க, அவன் செஞ்சது தப்புதான். பெரிய தப்பு, ஒருநாளும் அதை நான் நியாயப்படுத்த மாட்டேன். என்ன பண்றது, புள்ளையா போய்ட்டான். நல்லா இருக்கக் கூடாதுன்னு சபிக்க எல்லாம் முடியாதேங்க. அவன் செஞ்ச தப்புக்குத்தான் தண்டனையா இத்தனைநாள் அவனை வீட்டைவிட்டு விலக்கி வச்சுட்டீங்களே!” என்றார்.
“ஏன் வத்சலா, அறிவையும் அவனையும் ஒன்னாதானே வளர்த்தோம். ஏன் இவன் மட்டும் எப்பவுமே வீட்டுக்கு அடங்காமல் போய்ட்டான். என் பேச்சை ஒருநாளும் மதிச்சது இல்லை. இப்பவும் வாழ்க்கையோட பெரிய முடிவை அவனா எடுத்துட்டு வந்துட்டான். சரி, அது தப்புன்னு ஒரு நொடியாவது யோசிச்சு மன்னிப்பு கேட்டானா?” கணவர் ஆதங்கமாய் வினவினார்.
“என்னங்க பண்றது, பெத்த மனசு பித்து, புள்ளை மனசு கல்லுன்றது உண்மை தான். ஒரே கையில இருக்க ஐஞ்சு விரலே ஒன்னா இருக்காதப்போ, இவனுங்க ரெண்டு பேரும் ஒரே மாதிரியா இருக்கணும்னு நீங்க எதிர்பார்க்க கூடாது...” வத்சலா கணவருக்குப் புரிய வைக்கும் நோக்கோடு பேச, முத்துக்கிருஷ்ணன் முகத்தில் இன்னுமே குழப்பமிருந்தது.
“ஏன்ங்க, அவனுக்கும் உங்களுக்கும் ஆகவே மாட்டுதுன்னு நீங்களா எப்படி முடிவு பண்ணலாம். ஒரு தடவையாவது அவனைக் கூப்பிட்டுவச்சு நிதானமா பேசியிருக்கீங்களா? இல்லவே இல்லை. எதுக்கெடுத்தாலும் நீங்க கோபப்பட, பதிலுக்கு அவன் முனைச்சுட்டு போய்டுவான். இந்த விஷயத்துலயும் அதான் நடந்துச்சு. அவனை கூப்பிட்டு வச்சு, பேசிப்பாருங்களே! கண்டிப்பா உங்களுக்குள்ள ஒரு புரிதல் வரலாம்...” என்றவர், “என்ன சொல்றீங்க? அவனை வரச்சொல்லவா?” ஆர்வமாய் கணவர் முகத்தைப் பார்த்தார் வத்சலா.
“அதான் முடிவு பண்ணீட்டியே! வரச்சொல்லு...” முத்துக்கிருஷ்ணன் கூறியதும், துள்ளி குதித்து கட்டிலிலிருந்து இறங்கிய வத்சலா, தன் அலைபேசியை எடுத்து மகனுக்கு அழைத்துக்கொண்டே வெளியேறினார்.
“என்னம்மா, இப்போதான் பேசுன. மறுபடியும் கூப்பிட்டிருக்க?” அன்பழகன் வினவ,
“டேய், உங்கப்பா உன்னையும் வேதாவையும் வீட்டுக்கு வர சொல்லிருக்காரு. ரெண்டு பேரும் கிளம்பி வாங்க...” ஆரவாரமானக் குரலில் பேசினார் பெண்மணி.
“ப்ம்ச்... ம்மா, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு, இன்னொரு நாள் வர்றேன்னு உன் வீட்டுக்காரர்கிட்ட சொல்லு...” அலட்சியமாகக் கூறிய மகனை நினைத்து பல்லைக் கடித்தவர்,
“டேய், அடிச்சு வெளுத்துடுவேன். ஒழுங்கா அரை மணிநேரத்துல இரண்டு பேரும் இங்க வந்துருக்கீங்க...” என அழைப்பைத் துண்டிக்க, அவரது குரலில் அன்பழகனுக்கு அப்படியொரு சிரிப்பு.
“என்னங்க தனியா சிரிச்சுட்டு இருக்கீங்க?” வேதவள்ளி வினவ,
“அது ஒன்னும் இல்லை. என்ற தகப்பனார் வர சொல்லி அழைப்பு விடுத்துருக்காரம். அம்மா இப்போதான் கால் பண்ணாங்க, வா போய் பார்த்துட்டு வரலாம்...” என்றான்.
“உண்மையாங்க?” வேதவள்ளி ஆச்சர்யமாய் வினவ,
“உண்மையா, நிஜமா, சத்தியமா...” விழிவிரித்த மனைவியின் கண்களில் முத்தமிட்டவன், “போய் சேலையை மாத்திக்கோ. நம்ம வீட்டுக்குப் போய்ட்டு வரலாம்...” என்றவனுக்கும் புரிந்தே இருந்தது எப்போதும் போல இதுவும் தாயின் வேலைதான் என்று. வேதவள்ளி உடைமாற்றி வர, இருவரும் பெற்றவர்கள் வீட்டை நோக்கிச் சென்றனர்.
“அறிவு, போய் ஒரு பாக்கெட் பால் மட்டும் வாங்கிட்டு வா டா. உன் தம்பியும், வேதாவும் வர்றாங்க...” என்ற தாயை ஆச்சர்யமாகப் பார்த்தான் அறிவழகன்.
“உங்கப்பாதான் டா வர சொன்னாரு. போ, போய் சீக்கிரம் பால் பாக்கெட் வாங்கிட்டு வா...” என அவனை அனுப்பினார். அறிவு வெளியே செல்ல, சரியாய் அன்பழகனும் வேதாவும் உள்ளே நுழைந்தனர்.
“வா டா நல்லவனே...” அறிவு தமையன் தோளில் தட்டி, “வா வேதா...” என அவளையும் அழைத்தான்.
“வந்துட்டேன்டா கெட்டவனே...” என்ற அன்பு சிரிப்புடன் கூற, அவனை முறைத்துக்
கொண்டே நகர்ந்தான் பெரியவன்.
வெளிய கேட்ட பேச்சு சத்தத்தில் வாயிலருகே வந்த வத்சலா, “வா டா, உள்ளே வாம்மா...” என இருவரையும் அழைத்தார். வேதவள்ளி தயங்கியபடியே உள்ளே நுழைந்தாள்.
“என்னம்மா நீ, மகனும் மருமகளும் முதல்முறையா வீட்டுக்கு வர்றோம். ஒரு கொட்டு இல்லை, வரவேற்பு இல்லை, என்னவோ போ, இதெல்லாம் நல்லா இல்லை...” சலிப்புடன் கூறிச் சிரித்தவனின் கையிலே நறுக்கென கிள்ளிய வத்சலா, “அமைதியா வா டா...” என அவனை அறைக்குள் இழுத்துச் செல்ல, வேதா அவருடன் செல்வதா? வேண்டாமா? எனத் தெரியாது விழித்தாள்.
திரும்பிப் பார்த்த வேதா, “அட, நீயும் வா வேதா...” என இருவரையும் அறைக்குள் அழைத்துச் சென்று அமர வைத்தார்.
“என்ன மா, ரகசியமா கூட்டீட்டு வர்ற? அவர்கிட்டே சொல்லலையா நீ? சரிதான் போ, அப்போ இன்னைக்கு ஒரு பஞ்சாயத்தை கூட்டுறோம்...” குதூகலித்தவனின் தலையிலே ரெண்டு கொட்டு வைத்தார் தாய்.
“சண்டை போட்றதுக்கு சளைக்க மாட்ட டா, அப்படி எதுவும் செஞ்ச, உன் அம்மாவை நீ வேற மாதிரி பார்க்க வரும். நானே அவரைக் கெஞ்சி கூத்தாடி சம்மதிக்க வச்சிருக்கேன். நீ அதை கெடுத்து விட்றாத...” என பதறினார் பெண்மணி.
“சரி, சரி, பதறாதம்மா...” என்றவன் தோளைக் அசட்டையாகக் குலுக்கினான்.
“அவர் ரூம்க்குள்ளதான் இருக்காரு. போய் அமைதியா அவர்கிட்ட பேசணும். கொஞ்ச நேரத்துக்கு உன் அடாவடிதனத்தை கழட்டி வை டா...” என்றவரிடம் தலையை அசைத்து கட்டிலிலிருந்து எம்பி குதித்து,
“நான் பார்த்துக்கிறேன் மா, நீ கவலைப்படாத...” எனக் கூறியவனிடம் அத்தனை நேரமிருந்த இலகுபாவனை நொடியில் மாற, முகத்தைக் கடினமாக்கினான்.
“டேய், நில்லு டா...” அன்பு கையைப் பிடித்து இழுத்த வத்சலா, “முகத்தை ஏன் டா உர்ருன்னு வைக்கிற. இவ்வளோ நேரம் நல்லாதானே இருந்த?” என கடிந்தார்.
“தெரியலை மா, அவர்கிட்டே பேசப் போனாலே, அதுவா பாடி லாங்குவேஜ் மாறிடுது...”
“மாறும் டா, மாறும். அவரு உங்க அப்பா, அதை நினைச்சுட்டு பேசுற, என் புருஷனை அவமதிக்கிற மாதிரி எதுவும் பேசுன, நான் சும்மா இருக்க மாட்டேன் டா...”
“ஆமா, உனக்கும் அவருக்கும் இரண்டாம் உலகப்போர் நடந்துச்சே, அது எப்போ முடிவுக்கு வந்துச்சு. நீ அவருக்கு சப்போர்ட் பண்ணிட்டு பேசுற...”
“எனக்கும் என் புருஷனுக்கும் ஆயிரம் இருக்கும். அதுக்குள்ளே நீ வரக் கூடாது...” வத்சலா கண்டிப்புடன் கூற,
“ஒ... நீ அப்படி வர்ற. சரி ரைட்டு, இனிமே ப்யூச்சர்ல எனக்கும் என் பொண்டாட்டிக்கும் பிரச்சனை வந்துச்சுன்னா, நீ இடையில் வரக்கூடாது மம்மி...” என்றுவிட்டு சென்றவனைப் பார்த்து மற்ற இருவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.
“நீங்க சண்டை போட்டா, பார்த்துக்கலாம் டா...” என்ற வத்சலாவும்விடாது கத்த, அவரது கூற்றில் வேதா சற்றே சங்கடப்பட்டுப் போனாள்.
“வேதா, எதுவும் சாப்பிட்டீயா நீ? வா, நான் ஜூஸ் போட்டுத் தர்றேன்...” என்று மருமகளின் கையைப் பிடித்திழுத்துக்கொண்டு சமையலறைக்குள் நுழைந்தார் வத்சலா.
“அத்தை, இப்போதான் கடைக்குப் போய் ஜூஸ் குடிச்சுட்டு வந்தோம்...” வேதா கூறுவதைப் பொருட்படுத்தாமல் ஆப்பிளை நறுக்க ஆரம்பித்தார் பெரியவர். கடைக்குச் சென்ற அறிவழகன் வந்துவிட, பாலை ஊற்றி பழச்சாறு தயாரித்து அவளுக்குக் கொடுத்தார். வயிற்றில் இடமே இல்லையெனினும் மாமியாரின் அதட்டலான அன்பில் புன்னகைத்துக்கொண்டே மெதுவாய் அதைப் பருக ஆரம்பித்தாள்.
தந்தை அறைக்குள்ளே நுழைந்து கதவை மெதுவாய் சாற்றிவிட்டு அவரருகே சென்று நின்றான் அன்பு. அவன் அரவத்தை உணர்ந்தவர், எழுந்து அமர்ந்தார். தன்னுடைய மூக்கு கண்ணாடியை தேடி எடுத்து துடைத்து அணிந்தவர் மகனை நிமிர்ந்து பார்க்க, அவன் பார்வை சுற்றியுள்ள சுவற்றில் ஆரம்பித்து அறையை நிறைத்த விளக்கொளியில் முற்று பெற்றது. சில நொடிகள் அமைதியாய் இருந்த முத்துக்கிருஷ்ணன் எழுந்து மகன் கன்னத்திலே ஓங்கி அறைந்திருந்தார்.
விழிகளை மூடித் திறந்தவன் முகத்தில் எந்த பாவனையும் இல்லை. அதே போல அலட்சியமாகத்தான் நின்றிருந்தான்.
“ஏன் டா, ஏன் இப்படி பண்ண? பெத்தவங்களை ஒரு நிமிஷம் யோசிச்சு பார்த்தீயா டா?” ஆதங்கமாய்க் கேட்டார் மனிதர்.
அவரது முகத்தை சந்திக்காது தவிர்த்தவன், “தெரியலை, அப்போ அதுதான் சரின்னு தோணுச்சு, செஞ்சுட்டேன்...” என்றான்.
“உனக்கு சரின்னு தோணுறது எல்லாருக்கும் சரியாகிடாது டா. நீ செஞ்சது ரொம்ப பெரிய தப்பு...”
“என் சிட்சுவேஷன் அப்படி...”
“செய்றதை செஞ்சுட்டு, சூழ்நிலை மேல பழிப்போடாத டா. ஏன் பெத்தவங்க நாங்க இல்லையா? அன்னைக்கு ஒரு நிமிஷம் எங்களை யோசிச்சுப் பார்த்திருந்தா, அந்தப் பொண்ணை வீட்டுக்கு கூட்டீட்டு வந்திருப்பதானே? ஏன் டா உனக்கு எங்க மேல நம்பிக்கை வரலை?” என மனிதர் கோபமாய் வினவ, அதே அலட்சியம் ஆடவனிடம்.
“இங்க முதல்ல பார்த்து பதில் சொல்லு டா, வாழ்க்கையோட பெரிய முடிவு, நீயா உன் இஷ்டத்துக்கு எடுத்துக்கிட்டா, நாங்க எதுக்கு இருக்கோம்...”
“ப்ம்ச்... சொன்னதையே சொல்லாதீங்க. எனக்கு தப்புன்னு தோணலை...”
“பார்த்தீயா? பார்த்தீயா? இப்போ கூட உன்னால செஞ்ச தப்பை ஒத்துக்க முடியலை. ஏன் டா நீ மட்டும் இப்படி விதண்டாவாதம் பண்ற. சொல்றதை கேட்கவே மாட்டீயா டா?” கோபத்தில் கத்தியவருக்கு முகமெல்லாம் வியர்த்துவிட்டது.
“சரி, சரி. கோபப்படாம பேசுங்க. பீபீ அதிகமாகிடும...” என அருகிலிருந்த நீரை எடுத்து தந்தையிடம் கொடுத்தான். அதை வாங்கிப் பருகி தன்னை சமன்படுத்திக்கொண்டார் மனிதர்.
“ஓகே வா நீங்க? அம்மாவை கூப்பிடவா?” அக்கறையாய் கேட்டவன் முகத்தைதான் பார்த்தார் முத்துக்கிருஷ்ணன். மருந்துக்கும் ஒரு வார்த்தை, ‘அப்பா...’ என அன்பழகன் வாயிலிருந்து வரவில்லை.
அதில் மனம் சுணங்கியவர், “நீ என்னை அப்பான்னு கூப்பிட்டு எத்தனை வருஷம் ஆகுதுன்னு தெரியுமா அன்பு. அப்பான்னு கூப்பிட கூட முடியாத அளவுக்கு உனக்கு நான் வேண்டாதவனா போய்ட்டேனா?” என வினவியர் குரலில் அப்பட்டமான வலி. லேசாய் குரல் கமறியது பெரியவருக்கு. அதில் நெற்றியை சுருக்கியவனுக்கு எப்படி எதிர்வினையாற்றுவது எனத் தெரியவில்லை.
“ஏன் டா எப்பவுமே என்னை எதிரியா பார்க்குற? நான் சொல்ற எல்லாமே உன்னோட நல்லதுக்கு மட்டும்தான் டா. புள்ளைங்க நல்லா இருக்கணும்னுதான் எந்த பெத்தவங்களும் நினைப்பாங்க. நானும் அப்படி நினைச்சுதான் டா உன்னை ஒவ்வொரு தடவையும் திட்டுனேன், சண்டை போட்டேன். இப்பவும் அதுக்காகத்தான் உன்னை வீட்டைவிட்டு வெளிய அனுப்புனேன், நீ செஞ்ச தப்பை உணரணும். உணர்ந்தா தான், இன்னொரு முறை இப்படி செய்ய மாட்டேன்னு நினைச்சேன். ஆனால், அப்பவும் உனக்கு நான் வில்லனாதான் தெரியுறேன் இல்லை, பெத்தவங்க மேல பிள்ளைங்க நம்பிக்கை வைக்கலைனா, இல்லை பெத்தவங்க பிள்ளைங்க மேல நம்பிக்கை இல்லாம இருந்தா, ரெண்டு பக்கமுமே சரிவராது டா. இதுவரைக்குமே சரிவராமப் போய்ட்டுச்சு, இனிமே அப்படியே போய் என் புள்ளை என்கிட்ட வராமையே போய்டுவானோன்னு பயமா இருக்கு டா...” எனக் கூறி மூக்கு கண்ணாடியை கழட்டியவரின் விழிகள் கலங்கியிருக்க, முதன்முதலில் அன்பழகனுக்கு குற்ற உணர்வு துளிர்விட்டது.
அவன் செய்தது தவறென மனம் சுட்டிக் காட்ட, யோசிக்காது தந்தையை அணைத்திருந்தான். ஏனோ அந்த நொடி தன் தவறின் வீரியம் புரிந்தது அந்த மடையனுக்கு. கொஞ்சம் வலிக்கதான் செய்தது, பெற்றவர்களை அதிகம் கஷ்டப்படுத்தி விட்டோமோ? என முதன்முதறையாகத் தோன்ற, “சாரி பா...” குரலில் உண்மையான வருத்தத்துடன் கூறிய மகனை முத்துக்கிருஷ்ணனும் அணைத்துக்கொண்டார். மனதில் அத்தனை நிம்மதி. இதற்காகத்தானே மனிதர் இத்தனை பாடுபட்டார்.
‘தன் மகன் தன்னுடைய தவறை உணர்ந்துவிட்டான், இனிமேல் இதுபோலொரு தவறு கண்டிப்பாக நிகழாது’ மனம் மகிழ்ச்சியில் திளைத்தது அந்தப் பெரியவருக்கு.
தந்தையிடமிருந்து பிரிந்தான் அன்பழகன். அவர் முகத்தில் லேசானப் புன்னகை. “சிரிக்காதீங்க...” முகத்தை உர்ரென வைத்துக் கூறியவனைப் பார்த்து மனிதர் பெரிதாய் சிரித்தார்.
“இப்போ தெரியாது டா உனக்கு, நாளைக்கு உன் புள்ளை இதேமாதிரி பண்ணிட்டு வரும்போது தெரியும்...” என்றவரின் முகத்தில் சிரிப்பின் எச்சமிருந்தது.
அன்பழகன் முகத்திலும் மென்னகை துளிர்விட, “அதெல்லாம் என் பொண்டாட்டி என் புள்ளைங்களை அடிச்சு வளர்த்துடுவா, சமத்து...” என்றான்.
“அப்போ என் பொண்டாட்டி வளர்ப்பு சரியில்லைன்னு சொல்ல வர?” முத்துக்கிருஷ்ணன் கேலியாக வினவ,
“நான் அப்படி சொல்லலையே ப்பா...” என்றவன் சன்னமான சிரிப்புடன் வெளியே வந்தான்.
அப்போதுதான் அங்கே வந்த வத்சலா, “என்ன டா, எல்லாம் ஓகே வா?” என வினவினார்.
“ப்ம்ச்... என்னம்மா எல்லாம் ஓகேவான்னு கேட்க்குற... நீ என்னடான்னா, போகும்போது அவருக்கு அவ்வளோ சப்போர்ட் பண்ணி அனுப்புன. அந்த மனுஷன் பொசுக்குன்னு ஒரே வார்த்தையில உன்னை விட்டுக் கொடுத்துட்டாரு...” உதட்டுக்குள் சிரிப்பை மறைத்து உச்சுக் கொட்டியவன், “உன் வளர்ப்பு சரியில்லையாம். அதான் நான் தப்பு பண்ணிட்டேன்னு சொல்றாரு...” என்றான் குரலில் போலியான வருத்தத்தைத் தேக்கி.
மகனை நம்பாத பார்வை பார்த்த வத்சலா, “டேய், பொய் சொல்றீயா?” என வினவினார்.
“ம்மா, நான் ஏன் பொய் சொல்லணும். நீ வரும்போது என் பொண்டாட்டி வளர்ப்பு சரியில்லைன்னு அவர் சொன்னது உன் காதுல விழலையா?” என கேட்டான் அன்பழகன். அந்த வார்த்தை மட்டும் வத்சலா காதில் அறைகுறையாக விழுந்து தொலைத்திருந்தது.
“ஆமா டா...” அவர் அப்பாவியாய் தலையை அசைக்க, “ச்சு... போம்மா, நீ என் புருஷன், புருஷன்னு சொல்லு. அவர் அப்படி இல்லையே, நான் ஒன்னும் சொல்றதுக்கு இல்லை...” என்றவன் திரும்பி நடக்க ஆரம்பித்தான். மீசைக்கு கீழே சிரிப்பு வேறு முளைத்து தொலைத்தது.
‘கமான் மம்மி, ஒன், டூ, த்ரி, கோ...’ மனதிற்குள்ளே அன்பழகன் கூறிக்கொள்ள, வத்சலா அறைக்குள் நுழைந்து கணவனை ஏகத்துக்கும் முறைக்க, அதற்கு காரணமானவன் முகத்தில் சன்னமான சிரிப்பு.