• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,242
Reaction score
3,657
Points
113
வேதம் – 15
நன்றாய் விடிந்திருக்க, வேதாவும் அன்புவும் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தனர். கலையரசி கதவைத் தட்ட, வேதவள்ளிக்கு விழிப்பு வந்துவிட்டது.
எங்கிருக்கிறோம் என்பது உறைக்கவே அவளுக்கு சில கணங்கள் தேவைப்பட்டன. சோம்பலாய் மறுபுறம் திரும்பிப் படுத்தவளின் முகத்திற்கு வெகு அருகே அன்பழகனின் முகம் இருக்க, பதறி எழ முயன்றவளால் முடியாது போனது. தோளோடு அவளை இழுத்து அணைத்தவாறு உறங்கிக்கொண்டிருந்தான் அவள் கணவன்.
மூளை நேற்றைய நினைவை மீட்ட, மெதுவாய் அன்பழகன் கையை விலக்கினாள். அதில் ஆடவன் உறக்கம் கலைந்தது. “கொஞ்ச நேரம் தூங்கு டி. எங்க போகப் போற?” என்றவன் ஒரே இழுப்பில் அவளை தன் மேலே படரச் செய்திருந்தான்.
‘கடவுளே! இவனுக்கு விவஸ்தை என்பதே கிடையாதா? ஏன் தன்னை இப்படி பாடாய்ப் படுத்துகிறான்’ பெண் மனது படபடவென அடித்துக்
கொண்டது.
“கதவை யாரோ தட்றாங்க. விடுங்க” என்ற வேதா எழ முயல, “நான் கால் பண்ணி சொல்றேன், கொஞ்சநேரம் கழிச்சு போகலாம்” என்றவனுக்கு அவளைவிடும் எண்ணமே இல்லை. நன்றாய் அட்டைப் போல ஒட்டிப்படுத்து, தன் மேலே பெண்ணை படுக்க வைத்தான்.
“ஒன்னும் தேவையில்லை. விடுங்க” பட்டென அவனிடமிருந்து வாரி சுருட்டி எழுந்தவள், உடையை சரி
செய்துகொண்டே கதவை திறந்தாள்.
‘சாரி அண்ணி, டைம் ஆச்சு. அதான் எழுப்புனேன்...’ கெஞ்சும் பாவனையுடன் கலை சைகை செய்ய, வேதா புன்னகைத்தாள்.
‘இந்தாங்க அண்ணி, பேஸ்ட், பிரஸ், சோப், என்னோட புது சுடிதார். குளிச்சுட்டு வாங்க, சாப்பிடலாம்’ என்ற கலை விடைபெற, வேதாவும் குளித்து முடித்து வந்தாள்.
இன்னும் அன்பழகன் எழவில்லை. தலையணையில் முகம் புதைத்து குப்புற படுத்திருந்தான். போர்வை விலகியிருக்க, குனிந்து அதை எடுத்து கழுத்துவரை போர்த்தி விட்ட வேதாவின் கரத்தை இழுத்துத் தன் கன்னத்தில் அழுத்தினான் அன்பு. கணவன் தூங்குகிறான் என எண்ணியவள், அவன் செயலில் அதிர்ந்து கையை உருவப் பார்த்தாள்.
சிரிப்புடன் விழிகளைத் திறந்த அன்பு அவள் கையைவிடவில்லை. வேதவள்ளி கையில் வைத்திருந்த மருதாணி வாசம் ஆளை மயக்கியது. சென்ற வாரம் ஆசையாய் கையில் மருதாணி பூசியிருந்தாள் பெண். அவள் கையை நாசியருகே கொண்டுச் சென்றவனுக்கு மருதாணியோடு இழைந்த அவளது வாசம் இதயத்தையும் சேர்த்து சிலிர்க்கச் செய்தது‌.

"ப்பா... என்னடி காலையிலே என்னை மயக்க ஆரம்பிச்சுட்டீயா?" உதட்டோரம் சிரிப்பு நெளியக் கேட்டவனின் உதடு அவள் கரங்களில் பதியச் சென்றன. அமைதியாய் கணவனைப் நோக்கியவள், அவன் அசந்த நேரம் பார்த்து கையை வெடுக்கென உருவினாள். ஏகத்துக்கும் அவனை முறைத்துவிட்டு உதட்டுக்குள் எதையோ முணுமுணுத்துக்
கொண்டே வேதா செல்ல, ஒற்றைக் கையைத் தலைக்கும் தரைக்கும் இடையில் கொடுத்து ஒருபக்கமாகப் படுத்தவன் முகத்தில் அத்தனை சிரிப்பு. மந்தகாச புன்னகைப் படர்ந்தது அவனுக்கு.
குளித்து முடித்து பளிச்சென வந்தவளின் முகம் குளுமையைப் பரப்பியது கணவனுக்கு. கலைந்த தலையுடன் புதிதாய் அணிந்திருந்த உடை, கச்சிதமாய் அவளுக்கு பொருந்தியிருக்க, சின்ன சிரிப்புடன் மனைவியை ரசித்தவன், தானும் குளித்து முடித்து வந்தான்.
இருவரும் உண்டு முடிய, கலை வேதாவின் கையைப் பிடித்துக்கொண்டாள். ஏதேதோ அவள் சைகை செய்து ஆர்வத்துடன் பேச, கொஞ்சம் புரிந்தும் புரியாமலும் அவளுக்கு பதிலளித்தாள் வேதா. கலைக்கு வேதாவை அத்தனைப் பிடித்தது. அவளது அமைதியான சுபாவம், அலட்டலில்லாத பாவனை ஈர்த்தது.

அவளிடம் சைகையிலே பேசினாள். தன் தாய், தமையன் பற்றிக் கூறினாள். கல்லூரி, நண்பர்கள் என அனைத்தையும் பகிர்ந்தவள், இடையிடையே தன் தந்தையைப் பற்றியும் பகிர்ந்தாள். அவரைப் பற்றி பேசும்போது மட்டும் முகம் விகசித்தது கலைக்கு. வேதவள்ளிக்குப் புரிந்தது, அவள் தந்தையை அத்தனைப் பிடிக்கும் கலைக்கு என்று. நினைவு, தன் தந்தையையும் சுற்றி வந்தது. விழியோரம் லேசாய் ஈரம் படர, அதை அவள் அறியாது துடைத்துக்
கொண்டாள்.

தன்னுடைய முடிவை அவர் எவ்வாறு ஏற்றுக்கொள்ளப் போகிறாரோ? என மனம் முழுவதும் பயம் அப்படிக்கிடந்தது. இருந்தும் அவரிடம் தன் நிலையைக் கூறி விளக்கலாம், கண்டிப்பாக தன் தந்தை புரிந்து கொள்வார் என தனக்குத் தானே கூறிக்கொண்டாள். அதிர்ஷ்டலட்சுமியும் அவர்களுடன் பேச்சில் கலந்தார்.

மெதுவாய் ஆரம்பித்தவர், வேதா குடும்பத்தைப் பற்றியும், திருமணம் நடந்த வித்ததைப் பற்றியும் வினவ, முழுதாய் எதையும் கூறவில்லை வேதவள்ளி. நடந்ததை மேலோட்டமாகக் கூறிவிட்டாள். என்னதான் அம்சவேணி தவறானவராக இருந்தாலும், முருகையாவின் முகம் நினைவில் வந்தது. அவர்களைப் பற்றி தவறாய் எல்லாம் சித்தரிக்கவில்லை அவள். தனக்கு அங்கிருக்க பிடிக்கவில்லை, கருத்து வேறுபாடு காரணமாக அங்கிருந்து வெளியேறிவிட்டதைப் போலத்தான் லேசாய் கூறினாள்.
முகிலனுடன் வெளியே சென்ற அன்பு, “நீ போய்க் கடையை பார்த்துக்கோ டா. நான் அவளை வெளிய கூட்டீட்டுப் போய், தேவையான திங்க்ஸ் எல்லா வாங்கிட்டு வரேன்” என்றவன் நண்பனைக் கடையில் இறக்கிவிட்டான்‌.
“மச்சான்” என்ற முகில் அவன் சட்டையில் சிறிது பணத்தை வைத்து, “அம்மா கொடுக்க சொன்னாங்க டா. செலவுக்கு வச்சுக்கோ” என்றான். அன்பழகன் முகத்தில் லேசாக புன்னகை ஜனித்தது. தலையை அசைத்து அவனிடமிருந்து விடை பெற்றவன், அடகுக்கடையை நோக்கிச் சென்றான்.
கழுத்திலிருந்தத் தங்கத்தாலான கழுத்தணியை அவிழ்த்து அடகு வைத்து பணத்தைப் பெற்றுக்கொண்டு வீட்டிற்கு விரைந்தான். வேதவள்ளி அவனுடைய உடைகளை எடுத்து அலமாரியில்
அடுக்கிக்கொண்டிருந்தாள்‌.
“வேதா, கடைக்குப் போய்ட்டு வரலாம். இதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்” என்றவனை மனைவி கேள்வியாகப் பார்த்தாள்.
“நமக்கு தேவையான திங்க்ஸ் எல்லாம் வாங்கணும் இல்ல. போகலாம் வா” என்றவனுடன் வேதவள்ளி நடந்தாள். வீட்டைப் பூட்டிக்கொண்டு இருவரும் கடைக்குச் சென்றனர்.
முதலில் பாத்திரங்கள் விற்கும் கடைக்குச் சென்று அத்தியாவசியமானவற்றை வாங்கினர். பின்னர் வேதவள்ளி என்னென்ன வேண்டும் என யோசித்து வாங்கி முடிய, நேரம் மதியத்தை தொட்டுவிட்டிருந்தது. தேவையான பொருட்கள் வாங்கியதற்கே அன்பழகன் கையிலிருந்த பணமெல்லாம் கரைந்துவிட்டது. அடுத்து பணத்திற்கு என்ன செய்யலாம் என மூளை யோசித்துக் கொண்டிருக்க, அவள் பின்னே சென்றான் அன்பழகன்.
அருகிலிருந்த சந்தைக்குச் சென்று காய்கறிகள், வீட்டிற்குத் தேவையான மளிகை சாமான்கள் வாங்கி இருவரும் வீட்டை அடைய, மணி மூன்றாகியிருந்தது.
“எல்லாத்தையும் வந்து எடுத்து வச்சுக்கலாம் வேதா. இப்போ வந்து சாப்பிடுங்க. அலைஞ்சது பசிக்கும்” என்ற அதிர்ஷ்டலட்சுமி இருவரையும் அழைத்துச் சென்றார். மின் அடுப்பு வாங்கச் சென்ற வேதாவிடம், தன்னிடம் வேறு ஒரு எரிவாயு அடுப்பு இருப்பதாகக் கூறி, தானே அவளுக்கு அடுப்பையும் எரிவாயுவையும் கொடுத்துவிட்டார் பெரியவர்.
வாங்கி வந்தப் பொருட்களை எல்லாம் வேதா ஓரளவுக்கு வீட்டில் அடுக்கி முடிக்க, அதிர்ஷ்டலட்சுமி அடுப்பை தூசிதட்டி எடுத்துவந்து கொடுத்தார். எரிவாயுவையும் இணைத்துவிட்டார்‌.
“தேங்க்ஸ் மா, நைட்டுக்கு நானே சமைச்சுக்குறேன்” வேதா புன்னகையுடன் கூற, “அம்மா இல்லை வேதா. நான் உனக்கு மாமியார் முறை. அத்தைன்னு கூப்பிடு...” செல்லமாய் முறைத்தவரிடம் தலையை அசைத்தாள் பெண்.
சிறிதுநேரம் பேசிவிட்டு அவர் அகல, தனக்கும் அவனுக்கும் தேநீரை தயாரிக்க ஆரம்பித்திருந்தாள் வேதவள்ளி.
அன்பழகன் அலைபேசியில் வேலை சம்மந்தமாக ஏதோ பேசிக்கொண்டிருக்க, அறிவழகன் வாயிலில் வந்து நின்றான். அவனைப் பார்த்தவன், “ஓகே சார், நாளைக்கு கடைக்கு வாங்க. பேசிக்கலாம்” என அழைப்பைத் துண்டித்துவிட்டு, “எதுக்கு டா வந்த?” என முறைத்தவாறே வினவினான்.
அவனை அடிக்க ஏதேனும் தென்படுகிறதா? எனச் சுற்றி முற்றிப் பார்த்த அறிவு, “செய்றதையும் செஞ்சுட்டு, உனக்கு கோபம் வேற வருதா டா” எனத் தமையன் கழுத்தைச் சுற்றி வளைத்தான்.
“ஏன் டா டேய், நான் ஏதோ க்ரைம் பண்ண மாதிரிதான் நேத்துல இருந்து பேசுறீங்க, என்னை ட்ரீட் பண்றீங்க. காதலிச்சவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா?” அவனிடமிருந்து விடுபட போராடியபடி அன்பு கேள்வி கேட்டான்.
“கல்யாணம் பண்ணதை தப்பு சொல்ல மாட்டோம் டா. திருட்டுத் தனமா கல்யாணம் பண்ணா, அது தப்புதான்”
“ம்க்கும்.... நான் அவளை வீட்டுக்குக் கூட்டீட்டு வந்து முறையா கல்யாணம் பண்ணி வைங்கன்னு கேட்டா, செஞ்சு வச்சிருப்பீங்களா டா? என்னமோ பேச வந்துட்டான்...” சிலுப்பிக் கொண்டான் அன்பு. இருவரும் பின்னி பிணைந்த நிலையிலிருக்க, சமையறையிலிருந்த வேதவள்ளி கூடத்திற்கு வந்தாள். அவர்கள் நின்றிருந்த கோலத்தைப் பார்த்து பெண் லேசாய் அதிர, அறிவு அவளைப் பார்த்து சங்கடமாய் புன்னகைத்தவாறே அன்புவைவிட்டான்.
“வேதா, இவனுக்கும் சேர்த்து டீ போடு” என்றவன், “ஹம்ம், இவன் அறிவு, என் அண்ணன்” என்று அவளிடம் அறிவழகனை அறிமுகம் செய்தான்.
அறிவு வேதாவைப் பார்த்து புன்னகைக்க, அவளும் பதிலுக்கு லேசாய் சிரித்தாள். பின்னர் சமையலறைக்குள் பெண் நுழைந்துவிட,
“ஆமா, இப்போ எதுக்கு இங்க வந்த நீ?” என கேட்டுக்கொண்டே அவனுக்கு ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டு மற்றொன்றில் தானும் அமர்ந்தான் அன்பழகன்.
“ஏன் டா, வீட்டுக்கு வந்தவனை தொரத்துறதுலயே இரு” சலித்துக்கொண்ட அறிவு, ”நீ பண்ணக் காரியத்துக்கு என் காதுல ரத்தம் வர்ற அளவுக்கு பேசிட்டாங்க டா” பெரியவன் பொங்க, அதில் சின்னவனுக்கு சிரிப்புப் பொத்துக்கொண்டு வந்தது.
“சிரிக்காத டா எருமை, எல்லாம் உன்னாலதான். அம்மா போனை போட்டு அத்தை, மாமா, பாட்டீன்னு அத்தனை பேருக்கும் சொல்லி, காலையிலே மாயாண்டி குடும்பத்தார் வந்து இறங்கிட்டாங்க. ஷப்பா...” என்றவன் குரலில் அன்புவின் மீசைக்கடியில் புன்னகை துடித்தது‌.
அருகிலிருந்த டப்பாவை தூக்கி தம்பி மீது எறிந்த அறிவு, “கொலைகாண்டுல இருக்கேன். அட்வைஸ் பண்ணியே கொன்னுட்டானுங்க. நீ என்னடான்னா, சிரிக்கிற...” என்றான் கடுப்பில்.
“சரி, சரி. விடு” என்று அறிவு தோளைத் தட்டிய அன்பு, “டீயை குடி டா...” என்றான்.
சரியாக அதேநேரம் வேதவள்ளி தேநீரை எடுத்து வந்து கொடுக்க, “தேங்க்ஸ் மா...” என சிறிய புன்னகையுடன்
எடுத்துக்கொண்டான் அறிவு.
தேநீரை பருகி முடித்தவன், “வீட்டுப் பக்கம் எதுவும் வந்து தொலைச்சுடாத டா...” என்றான் கண்டிக்கும் குரலில்.
அவனை முறைத்த அன்பு, “அப்படி ஒரு ஐடியா இல்லை என்கிட்ட...” என இழுத்தவன், “புதுசா கல்யாணம் ஆனவன். நான் எதுக்கு டா அங்க வரப்போறேன்” சன்னமான சிரிப்புடன் கூற, அவன் கையில் நறுக்கென கிள்ளி,
“டேய்...” என பல்லைக் கடித்த அறிவு, “போதும் டா. உன் பேச்சு எல்லை மீறி போய்ட்டு இருக்கு. சரியில்லை டா” என்றான்‌. அன்பு முகத்தில் கேலியானப் புன்னகை.
‘கடவுளே’ தலையைச் சுவற்றில் முட்டிக்கொண்டாள் வேதவள்ளி. அவளுக்கும் அவர்களது பேச்சு துல்லியமாய்க் கேட்டது.
“உனக்கு முன்ன நான் கல்யாணம் பண்ணிட்டேன்னு உனக்கு பொறாமை எதுவும் இல்லையே அண்ணா...” அன்பழகன் பவ்வியமாக வினவ, அவன் வாயில் ஒன்று போட்டான் அறிவு.
“போதும் டா. நான் கிளம்புறேன்...” என எழுந்து நின்றான் பெரியவன்.
“கிளம்பு, கிளம்பு காத்து வரட்டும்” அன்பு சலிப்பது போன்ற பாவனையில் கூற, அவனை அணைத்துக்
கொண்டான் அறிவு.
“சந்தோஷமா இரு டா. எப்படி கல்யாணம் நடந்திருந்தாலும், உன்னை நம்பி ஒரு பொண்ணு வந்திருக்காங்க. அவங்களை நல்லா பார்த்துக்கோ. ஆல் தி பெஸ்ட்” என்றவனை புருவம் உயர்த்திப் பார்த்தான் சின்னவன். உதட்டில் புன்னகைப் படர்ந்திருந்தது‌.
“இந்தா, இதை செலவுக்கு வச்சுக்கோ” சிறிதளவு பணத்தைத் தம்பி கையில் அண்ணன் திணிக்க, “டேய், அதெல்லாம் ஒன்னும் வேணாம்” அன்பு மறுத்தான்.
“சீனைப் போடாதடா. என் பணம்தான். வச்சுக்கோ” அறிவழகன் விடைபெற, அவனை அனுப்பிவிட்டு வந்தான்.
அவன் வீட்டிற்குள் நுழைந்ததும், “என்ன பேசுனீங்க அவர்கிட்ட?” என முறைத்தாள் வேதவள்ளி.
“என்ன... என்ன பேசுனேன்?” புரியாது அன்பழகன் வினவ, அவனை முறைத்துவிட்டு சமையலறைக்குள் சென்றாள் வேதா.
“ஏய்! என்னென்னு சொல்லு டி. ஞாபகம் வரலை” அவள் பின்னாடியே சென்றவனுக்கு, “விவஸ்தை கெட்ட மனுஷன்” என வேதா முணுமுணுத்தது காதில் தெளிவாய் விழுந்தது. அவள் பேச்சின் சாராம்சத்தையும், தான் பேசியவற்றையும் ஒருமுறை நினைவுப்படுத்தியவன் இதழ்களில் புன்னகை ஜனித்தது.
அவளருகே கையைக் கட்டிக்கொண்டு நின்றவன், “விவஸ்தைக் கெட்டவன்தான் டி நைட்டெல்லாம் சும்மா இருந்தேன்” என்று கேலிப் புன்னகையுடன் கூற, அதில் வேதா முகமெல்லாம் சிவந்து போனது. காது மடல்கள் எல்லாம் சூடாகிப்போன உணர்வு.
“வேதா...” காதருகே கிசுகிசுப்பான குரலில் அழைத்தவனின் அழைப்பு குபீரென அடிவயிற்றில் எதையோ உருளச் செய்ய, பட்டென இரண்டடி நகர்ந்து நின்றவள், “அந்த... அந்தத் தெரு முனையில கடை ஒன்னு பார்த்தேன். தோசை மாவு விக்கிறாங்க. போய் வாங்கிட்டு வாங்க, நைட்டுக்கு தோசை ஊத்தி சட்னி அரைச்சுட்றேன்” படபடப்புடன் கூறியவளை மேலும் வம்பிழுக்க மனமில்லாது அமைதியாய் கடைக்குச் சென்று மாவு வாங்கி வந்தான்‌.
அவன் உள்ளே வர, குளம்பியை அருந்தியபடி வாயிலில் நின்றிருந்த முகில் முகத்தில் கேலிப்புன்னகை. அவனைப் பார்த்தும் பார்க்காதது போல அன்பு கடக்க, “மச்சான், நான் பார்த்துட்டேன் டா...” கத்தினான் முகிலன்.
அதில் அன்புவுக்கும் சன்னமான சிரிப்பு முகத்தில். “மூடிட்டு போ டா...” அவன் மீது மாவை எறிவது போல சைகை செய்தவன், வீட்டிற்குள் நுழைந்து வேதாவிடம் மாவை கொடுத்தான்.
அதை வாங்கிக்கொண்டு திரும்பியவளின் பார்வை ஆடவனின் கழுத்தில் பதிய, குறுகுறுவென்ற அவளுடைய பார்வையில் அன்பு திணறிப் போனான்.
“என்ன டி?” எனக் கேட்டவனின் குரல் காற்றாய் வெளிவந்தது.
“உங்க கழுத்துல இருந்த செயினைக் காணோம்?” கேள்வியாய்க் கேட்டவளின் முகத்தைப் பார்த்தவன், முன்னுச்சி முடிகளைக் கோதிக்கொண்டான்.
‘இந்த அளவுக்கு இவள் என்னைக் கவனித்திருக்கிறாளா?’ என்ற நினைப்பு குளுமையைப் பரவச் செய்தது.
“அது... அது வந்து செலவுக்கு காசில்லைன்னு அடகு வச்சுட்டேன்” என்றவனின் பார்வை சுற்றிலும் படர்ந்தது.
“ஓ...” என இழுத்தவள், “என்கிட்ட காசு இருக்கு. அதை வாங்கிக்கோங்க” என்றாள்.
“இல்லை, பரவாயில்லை. மேனேஜ் பண்ணிக்கலாம்”
“ஏன்?” ஒற்றைக் கேள்வியாகப் பெண் நிறுத்தினாள்‌.
“வேணாம்னா, வேணாம். விடு டி” அழுத்தமாய்க் கொஞ்சம் சலிப்புடன் கூறியவனை நிமிர்ந்து முறைத்தவள், “பொண்டாட்டி கிட்டே காசு வாங்குறதை அசிங்கமா நினைக்குறீங்களா?” எனக் கேட்டு கையிலிருந்த கரண்டியை அவள் பட்டென போட, அன்பழகன் வேதாவின் இந்த அவதாரத்தில் அதிர்ந்து போனான்.

















































































 
Well-known member
Messages
547
Reaction score
389
Points
63
அவளும் வேலைக்குப் போறா இல்ல
 
Top