New member
- Messages
- 5
- Reaction score
- 0
- Points
- 1
அத்தியாயம்: 3
இன்று வெள்ளி கிழமை. வளைகுடா நாடுகளில் வெள்ளி கிழமை வார விடுமுறை லீவ் நாள் என்பதால் அன்றைய விடுமுறையை சோர்வில்லாமல் கழிக்க அதிகாலையில் ஐந்து மணிக்கெல்லாம் அனைவரும் கிரிக்கெட் விளையாட அங்கிருந்த கிரவுண்டில் கூடி நின்றனர்.
அனைவரும் அவர்கள் பெயருடன் அபுதாபி என பெயரிடப்பட்ட ஜெர்சி அணிந்து பேட், பால், ஸ்டெம் என விளையாட தயாராக வந்திருக்க, மெயின் ஆனா இரண்டு பேர் தங்களுக்குள்ளேயே டீம் பிரித்து கொண்டிருக்க, அவர்களுக்குள் ஒருவனாய் அருண் பிரபாகரனும் நின்றிருந்தான்.
இன்று காலை உடற்பயிற்சியை தவிர்த்து விட்டு விளையாட வந்திருந்தவன் வார்ம் அப் செய்து கொண்டிருக்க,
"ஹாய் அருண் சார்" என்ற திலீப்பின் சத்தத்தில் திரும்பிய அருண்,
"வாங்க திலீப். என்ன ஒரு வாரமா உங்களை பார்க்கவே முடியலை அவ்வளவு பிசியா ?" என்று அருண் பிரபாகரன் கேட்க,
"எங்க சார்! மறுநாளே என்னை நைட் ட்யூட்டிக்கு மாத்திட்டாங்க. அப்பறம் எங்க இருந்து பார்க்க? ஆனா எனக்கு ஒரு டவுட் சார்" என்று திலீப் தீவிர முக பாவத்துடன் சொல்ல
"என்ன திலீப்?" என்ற அருண் பிரபாகரன் வார்மப்பை நிறுத்திவிட்டு திலீபை பார்க்க,
"நான் அன்னைக்கு சீனியர் மெஸ் ஹாலுக்கு சாப்பிட வந்ததுக்கு பனிஷ்மெண்டா சார் இது..." என்று திலீப் கேட்க
"ஹோவ் சில்லி மேன்! நீ இதுக்கெல்லாம் யாரும் அப்படி செய்ய மாட்டாங்க நீ ரொம்ப யோசிக்காத திலீப். நைட் ஷிப்டுக்கு ஆள் பத்தலைனு சொன்னாங்க அதான் நே ஷிப்ட் பார்த்தவங்கள பாதி நைட்க்கு மாத்திட்டாங்க" என்றான் புன்னகையுடன்.
"ஹோ... ஓகே சார் ஆனா எனக்கு ஒரு ஹெல்ப் வேணுமே சார்?" என்று திலீப் கேட்க,
'அவன் வேலையை டே ஷிப்டிற்கு மாற்றி கேட்க போகிறான்' என்று நினைத்த அருண் "சொல்லுங்க திலீப் முடிச்சா செய்யுறேன்" என்று பிடி கொடுக்காமல் கிரவுண்டை பார்த்துக்கொண்டே சொல்ல,
"எனக்கு கம்பேனில பேசி ஒரு மாசம் லீவ் வாங்கி தரனும் சார்" என்றான் திலீப்.
அதில் திகைப்புடன் அவனை பார்த்த அருண் "என்ன தலீப் இப்போ வந்து கேக்குறிங்க? ப்ளான் ஷடவுன் பண்ணியாச்சி இந்த டைம்ல லீவ் தர மாட்டாங்க. உங்களுக்கு தெரியும் தானே?" என்று கேட்க,
"தெரியும் சார். ஆனா எனக்கு வேற ஆப்ஷன் இல்லை. அக்கா பொண்ணு பெரியபொண்ணு ஆகி இருக்கு. நான் தான் தாய் மாமா. சீர் செய்ய சடங்கு செய்ய நிக்கனும். அக்கா வந்தே ஆகனும்னு சொல்றாங்க" என்றான் திலீப்.
"சடங்கு தானே திலீப். அதான் டூ மத்ஸ் கழிச்சி கூட வைக்கலாமே. வீட்டுல பேசி பாருங்களேன். இப்போ போகனும்னா லீவ் கிடைக்குறதும் கஷ்டம் அன்ட் சம்பளமும் அடி படும்" என்று அருண் பிரபாகரன் எடுத்து சொல்ல
"ஆமா சார். ஆனா... குடும்பத்தையும் பார்க்கனுமே. எனக்கு கூட பிறந்தது அக்கா மட்டும் தான். சம்பாத்தியம் இரண்டு மாசம் கழிச்சி கூட பண்ணலாம் சார்" என்றான் திலீப்பும் முடியாக.
"அப்போ ஒரு முடிவோட தான் இருக்கிங்க? அப்படி தானே?" என்று கேட்ட அருண் பிரபாகரனை பார்த்து அவன் மனமே கேலி செய்து சிரித்தது.
ஆம்... நேற்று இரவு தான் அவனின் லீவிற்கு அப்ளே செய்து விட்டு வந்திருந்தான் அருண் பிரபாகரன்.
இந்த மூன்று வருட வெளிநாட்டு வாழ்க்கையில் வள்ளியின் நினைவு எப்போதாவது வரும். முதலில் சுகமாக தொடங்கும் நினைவு கடைசியில் அதீத வலியுடன் தான் முற்று பேரும். அந்த வலியை கடக்கவே அவன் அவள் நினைவில் இருந்து வெளி வர வேண்டும்.
அதற்காக அவன் பெரிதும் மெனக்கெடுவான். அப்படி இருக்க இந்த முறை வள்ளியின் நினைவு வலியை கொடுப்பதற்கு பதில் அலக்கலிப்பை கொடுத்தது. அதிலும் அவன் மனம் எதைமோ அவனுக்கு உணர்ந்த முயல கனவுகள் எல்லாம் கொடுரமாக தோன்றி தூக்கத்தை தொலைக்க செய்திருந்தது.
ஒரு வாரமாகவே மனதில் ஒரு அலைக்கழிப்பு, பயம், எதையோ இழந்த உணர்வு என்று மாறி மாறி வந்தது. அதிலும் இதுவரை வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று நினைக்காதவனுக்கு ஊருக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் வழுப்பெற்றது.
அங்கே சென்றால் தங்கவேலுவுடன் சண்டை வரும். யாரும் பேச மாட்டார்கள் என்று பலதையும் எண்ணி பார்த்து தனக்கு தானே சமாதானம் செய்து ஊருக்கு செல்வதை ஒத்தி வைக்கத்தான் நினைத்தான் ஆனால் 'இப்படியே அப்பாவுக்கு பயந்து ஊருக்கு செல்லாமல் எவ்வளவு வருடம் இருக்க போகிறாய்? இது எத்தனை நாள் நிரந்தரம்?" என்று மனம் எழுப்பிய கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை.
அது தான் உண்மையும் கூட. குடும்பம் உறவு என்று அனைவரும் ஊரில் இருங்க, எத்தனை நாள் இந்த வெளிநாட்டு வாழ்கை வாழ முடியும்! எப்படியும் ஒரு நாள் ஊர் சென்று தானே ஆக வேண்டும்.
எனவே சில பல யோசனைகளுக்கு பிறகு ஊர் செல்ல முடிவெடுத்தவன் லீவிற்கு அப்ளே செய்ய, கம்பேனி வேலை நேரம் லீவ் தர முடியாது என்று சொல்லவும், வேலையை ரிசைன் செய்வதாக சொன்ன பிறகு தான் பதினைந்து நாட்கள் மட்டும் லீவ் தருவதாக சொல்லி இருந்தார்கள்.
அவன் நிலையே அப்படி இருக்க அதில் திலீப் வேறு லீவ் கேட்க என்ன செய்வது என்ற யோசனை தான் அருண் பிரபாகரனிடம்.
"ஆமா சார். ஊருக்கு போயும் இரண்டு வருஷம் ஆகிட்டு. இப்படி பங்ஷன் டைம் போனாதான் போனது" என்ற திலீப் முகத்தில் அப்போதே ஊருக்கு செல்ல போகும் சந்தோஷம் தெரிய,
"ஓகே திலீப் பேசி பார்க்குறேன். லீவ் கிடைச்சா உங்க லக். நீங்க பஸ்ட் கம்பேனில லீவ் அப்ளே பண்ணிடுங்க அப்போ தான் நான் பேச சரியா இருக்கும்" என்றான் அருண் பிரபாகரன்.
மறுநாளே திலீப் லீவிற்காக அருண் பிரபாகரன் கம்பேனியில் பேச, அவனுக்கு ஒரு மாதம் லீவ் கிடைத்து விட்டது.
அடுத்த இரண்டாவது நாள் அருண் பிரபாகரனுக்கு ப்ளைட். மூன்றரை வருடம் கழித்து நல்லிரவு இரண்டு மணிக்கு தமிழ்நாட்டின் கோவை ஏர்ப்போட்டில் வந்து இறங்கினான் அருண் பிரபாகரன்.
ஒரு வாரமாக எல்லாவற்றையும் யோசித்து தன்னை தானே திடப்படுத்திக்கொண்டே அருண் வந்திருக்க, மனம் அமைதியாக தான் இருந்தது.
பாலைவனத்திலேயே கிடந்தவனுக்கு அந்த நல்லிரவு நேரத்திலும் நம் மண்ணின் வாசம் இதயத்திற்கு புத்துணர்வை கொடுக்க, அதை ஆழ்ந்து மூச்சேடுத்து நெஞ்சில் நிரப்பி கொண்டவன், கால் டேக்சி பிடித்து வீடு வந்து சேர்ந்தான்.
அருண் பிரபாகரன் வீட்டகற்கு வரும் போது நேரம் அதிகாலை ஐந்து மணியை கடந்தகருக்க சூரியன் கீழ் வானில் உதிக்க தொடங்கி இருந்தான்.
சரவணனும், கௌத்தமும் எழுந்து ஜாகிங் செல்ல வெளியே வந்தவர்கள் வீட்டு வாசலில் கார் வந்து நிற்பதை பார்த்து 'யார்?' என்பது போல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க,
"என்னை ஏன்டா பார்க்குற? நானே தூக்கம் வர்லையேனு... பேருக்கு உன்னோட ஜாகிங் வரேன். இதுல காலங்காத்தாலயே சிஐடி வேலையா! போடா..." என்ற கௌத்தம் முன்னே செல்ல,
தன் பயண பொதிகளுடன் காரை விட்டு இறங்கினான் அருண். அவனை அந்த நேரம் எதிர் பார்க்காமல் ஒரு நிமிடம் என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து நின்ற கௌத்தம் அண்ணா என்றபடி அருணிடம் ஓடினான்.
சரவணனும் அருணை பார்த்து நொடி நேரம் அதிர்ந்தாலும் அவன் இதை கொஞ்சம் எதிர் பார்த்திருந்தான். ஈஸ்வரி ஒரு விஷயத்தை அவ்வளவு எளிதில் விடுபவர் இல்லை. அதிலும் செந்தூரவள்ளி தன் மருமகள் என அத்தனை உரிமையாக அடித்து பேசியவர் அருணை வர வைத்து விடுவார் என்று எதிர்பார்த்தான்.
எனவே "வாட அருண். என்ன கோவைக்கு வர வழி தெரிஞ்சிட்டா உனக்கு?" என கேட்டுக்கொண்டே அவனிடம் செல்ல,
அதில் புன்னகைத்த அருண் "எப்படி இருக்கிங்க டா?" என்று கேட்டவன் கௌத்தம் தோழில் கை போட்டு கொண்டான்.
"நாங்க நல்லா இருக்கோம். நீ எப்படி இருக்க? ஏன்டா உனக்கு வீட்டுக்கு வர இவ்வளவு நாள்?" என்ற சரவணன் அருண் பிரபாகரன் புஜத்தில் குத்த,
கௌத்தம் அமைதியாக நின்றிருந்தான். அவனுக்கு என்ன பேச என்ன கேட்க என்று தெரியவில்லை. ஆனால் அருண் வந்ததில் ரொம்ப சந்தோஷம் எனவே அவர்கள் பேசுவதை புன்னகையுடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.
"சாரி டா. அப்போ இருந்த மனநிலைக்கு என்னால இங்க இருக்க முடியலை. அதான் துபாய் போய்ட்டேன்" என சரவணன் கையை பிடித்து கொண்ட அருண் பிரபாகரன் "சாரி டா சரவணா. மாமா இறப்புக்கு என்னால வர முடியலை. திடிர்னு சொல்லவும் அதிர்ச்சியில ஊருக்கு வர டிக்கெட் போடனும்னே எண்ணமே வர்லை. அதுலயும் நான் வெளிநாடு போய் மூன்றே நாள்ல. நான் எதிர்பார்க்கவே இல்லை டா." என்று சரவணன் கையை அழுத்தி பிடித்துக்கொள்ள,
"ப்ச்... இதுக்கெல்லாம் நீ சாரி கேட்கனுமா டா? அப்பா இறப்பு யாருமே எதிர் பார்க்காதது. அதுலயும் நமக்கு அப்பா வேற மாமா வேற கிடையாதே! அப்பா இறப்புக்கு நீ எவ்வளவு கஷ்ட பட்டுருப்பனு புரியுது டா. ஆனா என்ன பண்ண முடியும்? விடு... அதெல்லாம் முடிஞ்சி போச்சி" என்றான் சரவணன் ஆறுதலாய்.
"ஆமா இவ்வளவு நாள் வராம இருந்துட்டு... இப்போ என்ன திடீர்னு வந்துருக்க? அம்மா போன் பண்ணிச்சா? கல்யாண விஷயம் தெரிஞ்சதும் ஓடி வந்துட்டியா?" என்று கௌத்தம் கிண்டலாய் கேட்க,
"அதானே...!" என்றான் சரவணனும் பரிகாசமாய். அதில் புரியாமல் விழித்த அருண் "கல்யாணமா! யாருக்கு டா? அம்மா கால் பண்ணலையே.." என்று சொல்ல,
"பொய் சொல்லாத டா. வள்..." என்ற கௌத்தம் அடுத்து பேசும் முன் அவன் வாயை பொத்தி கொண்ட சரவணன் கௌத்தமிற்கு 'நோ...' கண்ணை காட்டினான்.
புரிந்து கொண்ட கௌத்தம் அமைதியாகி விட,
"என்னடா?" என அருண் பிரபாகரன் சரவணனை பார்க்க,
"எனக்கு இப்போ தான் டா கல்யாணம் பண்ணலாம்னு வீட்டுல பேச்சை எடுத்து இருக்காங்க. அதை தான் டா அவன் சொல்ல வரான்" என்று அருணிடம் சொன்ன சரவணன்.
"இப்போ தான் பேச்சே ஆரம்பிச்சி இருக்கு. அதுக்குள்ள என்னடா அவசரம்? அவசரகுடுக்கை " என்று கௌத்தம் தலையில் தட்ட,
"சாரி டா" என்றான் கௌத்தம் அசட்டு சிரிப்புடன்.
இவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே தங்கவேலுவும் வெளியே வந்தவர் அருணை பார்த்ததும் வெடித்து விட்டார்.
அவர் இத்தனை நாள் கோபம் இன்று வெளிவர "யாரை கேட்டு டா இந்த வீட்டு வாசப்படி மிதிச்ச? கொலை கார பாவி. இப்போ யாரை கொல்ல இங்க வந்துருக்க?" என்று கோபத்தில் கத்தியபடி அருண் பிரபாகரன் சட்டையை பிடிக்க,
"மாமா... என்ன பண்றிங்க நீங்க? விடுங்க அவனை. அவன் என்ன பண்ணான்? அந்த இடத்துல நானா இருந்தாலும் இதை தான் பண்ணிருப்பேன்" என்றான் சரவணன்.
ஆனால் அதை அவர் காதில் வாங்கியது போல் இல்லை. அவரின் மொத்த கவனமும் அருணின் மேல் இருக்க "சொல்லுடா யாரை கேட்டு இங்க வந்த போன சனியன் அப்படியே போக வேண்டியது தானே டா" என்ற தங்கவேல் அருணை உலுக்க,
"யாரை கேட்கனும்? சொல்லுங்க... கேக்குறேன்" என அடக்கப்பட்ட கோபத்துடன் கூறிய அருண் அவர் கையை அவன் சட்டையில் இருந்து எடுத்து விட,
"என்னை கேட்கனும் டா. இது ஒன்னும் உன் தாத்தா பூட்டன் சொத்தோ சம்பாத்தியமோ இல்லை. என் சுய சம்பாத்தியம். என் நண்பனை கொன்ன உனக்கு இந்த வீட்டுல இடம் இல்லை" என்று தங்கவேல் கத்த.
"என்ன சொல்றிங்க நீங்க? வயசானா புத்தி மழுங்கிடுமா? மாமா இறப்புக்கு நான் எப்படி காரணம் ஆவேன்? அவரோட இறப்பு இயற்கையா நடந்த ஒன்று. அதை எப்படி கொலைனு சொல்லுவிங்க? மாமா இறப்புக்கு நான் வராதது தப்பு தான். அதுக்காக தேவை இல்லாம பேசாதிங்க?" என அருண் பிரபாகரன் கேட்க,
"ஆமா... மாமா. அப்பா இறந்ததுக்கும் அருணுக்கும் என்ன சம்மந்தம்? ஏன் எப்பவும் இதையே சொல்றிங்க? நீங்க இப்படி பேசி.. பேசியே... எங்களை ரொம்ப கஷ்டப்படுத்துறிங்க மாமா. எங்களை அவரோட இறப்புல இருந்து கொஞ்சம் மீண்டு வர விடுங்க" என்றான் சரவணனும் கோபமாக.
அதற்கு தங்கவேல் பதில் கொடுக்கும் முன் ஈஸ்வரியும் உஷாவும் இவர்கள் சத்தத்தில் வெளியே வர அவரின் கோபம் ஈஸ்வரியின் மேல் திரும்பியது. "எல்லாம் இவளால் வந்த வினை" என்று தங்கவேல் பேச,
அவரை முறைத்த அருண், தன்னை நோக்கி வந்த உஷாவையும், ஈஸ்வரியையும் தோழோடும் அனைத்துக்கொண்டான்.
அந்த இரு பெண்களும் அவன் வாழ்வில் மிகவும் இன்றியமையாதவர்கள். அதுவரை கோபம் தவிர்த்து எந்த உணர்வையும் காட்டாத அருண் பிரபாகரனுக்கு அவர்களை பாரத்ததும் கண்கள் பணிந்தன.
அதில் இருவர் உச்சியிலும் ஆத்மார்த்தமாய் மத்தமிட்டவன் "எப்படி இருக்கிங்க அம்மா? அத்தை?" என்று கேட்க,
"நல்லா இருக்கோம் டா. நீ எப்படி இருக்க? ஏன்டா இவ்வளவு நாள் வீட்டுக்கு வர்லை?" என்று கேட்ட உஷா, தொடர்ந்து "இப்போ அண்ணி கால் பண்ணாங்களா?" என்று கேட்க
தான் செய்த அதே தவறை தன் அத்தையும் செய்வதை உணர்ந்த கௌத்தம் "அத்தை... அவனே இப்போ தான் வந்துருக்கான். உடனே எல்லாம் சொல்லனுமா...? வாங்க முதல்ல உள்ள போலாம்..." என்க,
"மனுசனோட சிறந்த ஆற்றல் என்ன தெரியுமாடா சரவணா? உள்ளூணர்வு. அதை மட்டும் சரியா பயண்படுத்தி ஒரு மனுஷன் வாழ்ந்தாம்னா அவனுக்கு தோழ்வியே இருக்காது" என்று ஈஸ்வரி உஷாவை முறைத்தபடி பூடமாக சொல்ல,
"ஆமா..." என்றான் சரவணன் புன்னகையுடன். இத்தனை வருடம் ஒரு போன் கால் கூட இல்லாமல் இருந்த அருண் இன்று யாரும் சொல்லாமலேயே ஊருக்கு வந்திருப்பதிலேயே புரிந்து கொண்டான். வள்ளியின் திருமணம் நடக்க போவது இல்லை என்று. ஆனாலும் அருணின் முடிவு தெரியும் முன் தானாக எதுவும் சொல்ல வேண்டாம் என நினைத்தவன்
"வாடா உள்ள போலாம்" என்று அருணின் பேக்கை தூக்க,
அதில் கொதித்து போன தங்கவேல் "என்னை பார்த்தா உங்களுக்கு எல்லாம் எப்படி டா தெரியுது. நான் அவன் வீட்டுக்குள்ள வர கூடாதுனு சொல்றேன். நீங்க என்னடா அவனை உள்ள கூட்டிட்டு போறதுலேயே குறியா இருக்க. அப்பறம் என்னோட பேச்சுக்கு என்ன மறியாதை?" என்று எகிற
"அப்பா... சும்மா அண்ணனை பேசனும்னு பேசாதிங்க. அந்த வள்ளி என்ன மணிமாறன் மாமா பொண்ணா? அவங்க கல்யாணம் நின்னா மாமாக்கு ஹார்ட் அட்டாக் வர! சும்மா போங்கப்பா..." என்றான் கௌத்தம் எரிச்சலுடன்.
தங்கவேல் எப்போதும் அருணால் தான் மணிமாறன் இறந்து போனான் என்பது போல் பேசி கொண்டிருக்க, ஏதோ ஆதங்கத்தில் நண்பனின் இறப்பை தாங்க முடியாமல் பேசுகிறார் என்று நினைத்து அமைதியாக இருந்தான். ஆனால் இன்று அருண் முன்பே பேசவும் பதில் பேசி விட்டான்.
அவர்கள் அனைவரும் அருணுக்கு ஆதரவாக பேச, ஈஸ்வரி அழைத்து தான் அருண் வந்திருக்கிறான் என்று தவறாக புரிந்து கொண்ட தங்கவேல் "எல்லாம் உன்னை சொல்லனும் டி. வீட்டுல ஏல்றைரை இழுத்து விட்டுட்ட இல்ல! உன்னை வந்து பேசிக்குறேன்" என்று ஈஸ்வரியை திட்டி விட்டு வெளியே சென்று விட்டார்.
ஆனால் அருண் பிரபாகரனுக்கு தங்கவேலுவகன் கோபத்தை விட மற்றவர்கள் மீதுதான் சந்தேகம் வந்தது.
ஆம்...கௌத்தமின் பேச்சில் ஈஸ்வரி உஷா இருவரும் ஒரு நொடி அதிர்ந்து, பின்பு ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டதையும், ஈஸ்வரி உஷாவிடம் கண்ணாலேயே தைரியம் சொன்னதையும் அருண் பிரபாகரன் கவனித்து இருந்தான். அதில் அவன் மனதில் சிறு சந்தேகம் துளிர் விட 'என்னவாக இருக்கும்?' என்று அவன் யோசிக்க தொடங்க
அதை தடை செய்வது போல் "அண்ணா..." என்றபடி வர்ஷினி ஓடி வந்தாள். மற்ற அனைவரும் அவன் வீட்டிற்கு வந்ததே பெரிது என்பது போல் பேச, இவளோ அவன் என்ன வாங்கி வந்தான் என்பதை ஆராயவதிலே இருந்தாள்.
இங்கு என்ன சூல்நிலை என தெரியாமல் யாருக்கும் எதுவும் வாங்காமல் வந்திருந்த அருணுக்கு வர்ஷினியை சரி கட்டுவதே பெரும் பாடாக இருந்தது.
அவளின் பாதி கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை. "நீ என்ன தப்பு பண்ணிட்டா வேலைக்கு போன? பயந்து வரதுக்கு?" என்றவளின் கேள்விக்கு,
ஆமா என்றும் சொல்ல முடியவில்லை, இல்லை என்றும் சொல்ல முடியவில்லை அருண் பிரபாகரனால்.
திருமணத்தன்று அவன் செய்தது அவன் மனசாட்சி படி சரி ஆனால் ஒரு பெண்ணின் மனதை காயப்படுத்தியது தவறு எனவே அருண் இதழ் பிரியா புன்னகையுடன் அமைதியாக இருக்க,
"ஆமா இவ்வளவு நாள் வராத நீ இப்போ என்ன திடிர்னு வந்து குதிச்சிருக்க? அத்நை போன் பண்ணி கல்யாண மேட்டர ஓப்பன் பண்ணிட்டாங்களா?" என்று வர்ஷினி கிண்டலாக கேட்க,
"ஹையோ..." என சரவணனும் கௌத்தமும் தலையில் கைவைத்து நின்று விட்டனர்.
"ஆமா... நான் வந்ததுல இருந்து பார்க்குறேன்... எல்லாரும் "அம்மா போன் பண்ணாங்களானு?" தான் கேக்குறிங்க. ஏன்? யாருக்கு கல்யாணம்? அம்மா என்ன சொன்னாங்க?" என்று அருண் பிரபாகரன் ஆராயும் கூர் பார்வையுடன் கேட்க,
வர்ஷினியின் பார்வை மெல்ல சரவணன் மற்றும் கௌத்தம் பக்கம் சென்றது. அவர்கள் நின்ற தோரணையே அருணுக்கு எதுவும் தெரியாது என்று புரிந்து விட,
'அவசரக்குடுக்கை' என தன்னை
தானே நொந்து கொண்டவள் 'அது சும்மா...' என்றாள் வர்ஷினி மலுப்பலாக.
அதில் அருணிற்கு இதுவரை இல்லாத ஒரு தனிமை உணர் உண்டாக. முகம் பொழிவிழந்து போனது.
ரணங்கள் தொடரும்...