• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

மேகம் 9

Administrator
Staff member
Messages
464
Reaction score
794
Points
93
மேகம் 09:

குட்டிகளை தூக்கி சுமக்கும் கங்காருவை போல

ஒரு நேசத்தை நூக்கி
சுமப்பது தான்
வாழ்வின் ஆகப்பெரும்
சாபம் போலும்…


மேகா கிளம்பிட்டியா?” என்று வினவிய காயத்ரிக்கு,


“ஹ்ம்ம் நான் ரெடி தான் கா. என் ரூம் மேட்ஸ் ரெடியானதும் சேர்ந்து வந்திட்றேன்கா” என்று மேகா பதில் அளித்தாள்.

“ஹ்ம்ம் சீக்கிரம் வா.‌ உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு” என்க,

“என்ன சர்ப்ரைஸ் கா” என்று மேகா ஆர்வம் தாங்காது கேட்டிட,

“அது சர்ப்ரைஸ் நேர்ல தான் சொல்லுவேன் கம் பாஸ்ட்” என்றவள் முடித்துவிட,

“சரிக்கா வர்றேன்” என்று அழைப்பை துண்டித்தாள் மேகா.

இன்று மேகாவின் கல்லூரியில் கல்சுரல்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் டே.

பல்வேறு போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெற்றவர்களுக்கு கல்லூரி சார்பில் பரிசு வழங்குவார்கள்.

அதில் சைத்தன்யாவின் கூடை பந்தில் வென்றிருந்தது. மேலும் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு இடையில் நடந்த போட்டியில் ஓவர் ஆல் சாம்பியன்ஷிப்பையும் சைத்தன்யாவின் வகுப்பு பெற்றிருந்தது.

சைதன்யா பரிசு வாங்குவதை காணும் ஆவலில் தான் முதல் ஆளாக தயாராகி அமர்ந்து இருந்தாள் மேகா.

அதுவும் கத்தரி பூ நிறத்தில் கற்கள் வேலைப்பாடுகள் அமைந்த சுடிதாரும் அதற்கேற்ப சிறிய கல் வைத்த செயினும் அணிந்து இருந்தாள்.

இன்று அவனுடன் எப்படியாது ஓரே ஒரு புகைப்படம் எடுத்துவிட வேண்டும் என்று தான் இவ்வளவு மெனக்கெடல்களும்.

தோழிகள் இருவரும் தயாரானதும் விழா நடக்கும் இடத்திற்கு செல்ல அங்கு சைத்தன்யாவின் வகுப்பினர் தான் அனைத்து வேலையையும் செய்து கொண்டிருந்தனர்.

சைத்தன்யா மேடையின் மேல் நின்று ஒலிப்பெருக்கி எல்லாம் சரியாக வேலை செய்கிறதா என்று பார்த்து கொண்டிருந்தான்.

அதனை கண்டவளுக்கு இதே மேடை மேலே முகம் வெளுக்க அச்சத்துடன் தான் நின்றிருந்தது நினைவிற்கு வந்தது.

அன்று என் நிலையை கண்டு பாவப்பட்டு இவர் போக கூறவில்லை என்றால் என்ன நடந்திருக்கும்?

ஒரு வேளை நான் இவரிடம் காதலிப்பதாக கூறியிருப்பேனோ? ம்ஹூம் எப்படியும் அது நடந்திருக்காது என்று இவள் சிந்தித்தபடி வர,

“மேகா என்ன திங்கிங் எவ்ளோ டைம் கூப்பிட்றது‌. வா வந்து இந்த டேப்பை கட் பண்ணி கொடு” என்ற காயுவின் குரலில் தன்னிலை அடைந்தவள்,

“ஹான் செய்யிறேன்கா” என்றாள் வெட்டி கொடுக்க காயத்ரி பலூனை ஒட்ட துவங்கினாள்.

விழிகள் அவ்வப்போது சைதன்யா மீது படிந்தது. வழக்கத்திற்கு மாறாக பார்மல் உடையில் வந்திருந்தவனது தோற்றம் அவளை வெகுவாக கவர்ந்தது.

எல்லாவற்றையும் ஒட்டி முடித்ததும் காயு, “அவ்ளோதான் ஒட்டி முடிச்சாச்சு மேகா. ஒர்க் ஓவர் இனிமே ஈவன்ட் ஆர்கனைசிங் தான் கரெக்டா பண்ணனும்” என்றிட,

“ஹ்ம்ம்” என்று தலை பலமாக அசைத்தவளது ஓர விழிப்பார்வை சைத்தன்யாவிடம் தான்.

ஓரளவிற்கு எல்லோரும் வந்திருக்க அரங்கம் முக்கால்வாசி நிறைந்திருந்தது.

சைத்தன்யாவும் காயுவும் நிகழ்ச்சி நிரல் பற்றி விவாதித்து கொண்டிருக்க, மேகா இங்கு தோழிகளுடன் அமர்ந்து இருந்தாள்.

திவ்யா, “மேகா அதான் எல்லாரும் வந்துட்டாங்களே ஏன் இன்னும் ஸ்டார்ட் பண்ணலை?” என்று வினவ,

“அதான் எனக்கும் தெரியலை” என்று மேகா மொழிய,

“எனக்கு ரொம்ப போர் அடிக்கிதுடி. போய் காயத்ரி சீனியர்க்கிட்ட கேட்டுட்டு வா. டைம் ஆகும்னா கொஞ்ச நேரம் கேன்டின் வரை போய்ட்டு வந்திடலாம்” என்று சரண்யா கூறினாள்.

“எதாவது சீஃப் கெஸ்ட்டுகாக வெய்ட் பண்றாங்களோ?” என்று மேகா ஐயப்பட,

“என்னவோ போய் கேட்டுட்டுவா” என்று இருவரும் அவளை துரத்திவிட,

மேகாவும் எழுந்து காயத்ரி அருகில் சென்றாள்.

மேகாவை கவனித்த காயு, “என்ன மேகா?” என்று வினவ,

“அக்கா பங்க்ஷன் எப்போ ஸ்டார்ட் ஆகும்னு ப்ரெண்ட்ஸ் கேக்குறாங்க” என்று மேகா கேட்க,

“இன்னும் டென் மினிட்ஸ்ல ஸ்டார்ட் ஆகிடும்”

“ஓ… யாருக்காவாது வெயிட்டிங்கா கா?”

“ஆமா ஒரு முக்கியமான வி.ஐ.பி வர்றதுக்காக வெயிட்டிங்”

“யாருக்கா அது?”

“வந்ததும் உனக்கே தெரிஞ்சிட போகுது”

“ஹ்ம்ம். அப்புறம் எனக்கு ஏதோ சர்ப்ரைஸ் இருக்குனு சொன்னிங்களே”

“அதுவும் சீஃப் கெஸ்ட் வந்ததும் தெரிஞ்சிடும்” என்கையிலே வெளியே வரிசையாக நிறைய வாகனம் வந்து நிற்கும் ஓசை கேட்க,

“உன்னோட சர்ப்ரைஸ் ரிவீல் ஆக போகுது வா” என்று அவளது கைப்பிடித்து அழைத்து சென்றாள்.

தங்களுக்கு முன் நடந்து செல்லும் சைத்தன்யாவை பார்த்தாவாறே சென்றவளுக்கு தெரியவில்லை வர போகும் நபரால் தான் எந்தளவு உடைய போகிறோம் என்று…

********************

டப்” என்ற சத்தத்துடன் அலேபேசி கீழே விழுந்ததில் தன்னிலை அடைந்தவள் பதறி,

“சா… சாரி சார். தெரியாம கைத்தவறிடுச்சு” என்று குனிந்து எடுக்க,

அலைபேசியின் முன்புறம் மொத்தமும் சிதறி இருந்தது.

அதனை கண்டு அதிர்ந்தவள்,

“நான் வேணும்னு போடலை‌. அது தெரியாம விழுந்திடுச்சு…” என்று பயத்தில் என்ன கூறுவெதென தெரியாது விழிக்க,

“இட்ஸ் ஓகே கிவ் இட் டு மீ” என்று சைத்தன்யா மொழிந்தான்.

“இல்லை. அது டிஸ்ப்ளே உடைஞ்சிடுச்சு. நா.. நான் சர்விஸ் பண்ணி எடுத்துட்டு வந்து தர்றேன்” என்று மொழிய,

“நோ இஸ்யூஸ் நான் பாத்துக்கிறேன்” என்று அலைபேசிக்காக கையை நீட்டினான்.

“இல்லை. நான் தான உடைச்சேன். நானே சரி பண்ணி கொடுத்திட்றேனே சார்…” என்று அவனது முகம் காண,

அவளது முகத்தை ஒரு நொடி அமைதியாக பார்த்தவன்,

“ஓகே” என்று முடித்துவிட்டான்.

அவனது சரியென கூறிய பிறகு தான் இவளுக்கு நிம்மதி பிறக்க,

“ஷால் ஐ லீவ் சார்” என்று எழுந்து கொண்டாள்.

“சிம்மை எடுத்து கொடுத்துட்டு போ மேகா…” என்று மொழிந்திட,

அந்த ‘மேகா’ என்ற அழைப்பு இவளுக்குள் உள்ளுக்குள் ஒரு பிரளயத்தை உண்டு செய்ய முகத்தில் எதையும் காண்பிக்காது இருக்க பிரம்ம பிராயத்தனப்பட்டவள்,

“ஹ்ம்ம்” என்று தலையசைத்து நின்றவாக்கிலே அலைபேசியில் இருந்து சிம்மை எடுக்க முயற்சிக்க அலைபேசியில் எந்த புறத்தில் திறப்பது என்று தெரியவில்லை.

எல்லா பக்கமும் ஒரே போல இருந்தது. இது போல அலைபேசியை அவள் இதற்கு முன் பார்த்ததேயில்லை.

‘சரி ஏதாவது ஒரு புறம் திறப்போம்’ என்று திறக்க முயற்சிக்க கையில இருந்து மீண்டும் அலைபேசி நழுவி விழுந்துவிட்டது.

அதில் ஏகமாய் அதிர்ந்து விழிவிரித்தவளது முகத்தில் பதட்டம் விரவியது.

இதயம் தடதடக்க அதனை குனிந்து எடுத்து,

“அது நான் இப்பவும் தெரியாம தான் போட்டேன்” என்றவளது முகம் பயத்தில் லேசாக வெளுத்து விட்டது.

‘இரண்டு முறை கீழே போட்டுவிட்டேன் திட்டிவிடுவானோ…’ என்று இதயம் படபடவென அடித்து கொண்டது.

லேசாக நடுங்கிய விரல்களில் பிடித்திருந்த அலைபேசியுடன் நின்றிருந்தவளை அமைதியாக அவதானித்தவன் அலைபேசியை வாங்குவதற்காக கையை நீட்டினான்.

சட்டென்று அவனது கையில் அலைபேசியை கொடுத்துவிட்டவளுக்கு அந்நொடியும் பதற்றம் குறையவில்லை.

அலைபேசியை மிக சுலபமாக சைத்தன்யா திறந்து சிம்மை எடுக்க இவள் அவன் திறப்பதையே சற்று வியப்புடன் பார்த்திருந்தாள்.

சிம்மை எடுத்து மூடியவன்,

“மொபைலுக்கு வாரண்டி இருக்கு. நானே ஷோரூம்ல கொடுத்த சரி பண்ணிக்கிறேன்” என்றிட,

“இல்லை வேணாம். உடைஞ்சிட்டு சரி பண்ணாம விட்டா எனக்கு கில்டியா இருக்கும். ப்ளீஸ் என்கிட்டயோ கொடுக்குறீங்களா? நாளைக்கு வரும் போது சரி பண்ணி கொண்டு வர்றேன்” என்று விழிகளை சுருக்கி கேட்க,

வாழ்வில் முதல் முறையாக தன்னிடம் இவ்வளவு நீளமாக பேசியவளது சுருங்கிய விழிகளில் பார்வையை பதித்தவன் பதில் ஏதும் மொழியாது இருக்க,

அந்த பார்வை இவளுக்கு இதயத்தை நழுவச்செய்தது.

மூளை அந்த பார்வையில் இருந்து தப்பிவிடு தப்பிவிடு என்று கூக்குரல் இட, நிர்மலான முகத்துடன் நின்றிருந்தாள்.

நிமிடம் அமைதியாக கழிந்திட அலைபேசியை அவள் புறம் நகர்த்தி வைத்தான்.

பட்டென்று அதனை கையில் எடுத்தவள்,

“தாங்க் யூ சார்” என்று ஓடிவந்து விட்டாள்.

வெளிய வந்தவளுக்கு அந்த பார்வையில் இருந்து தப்பித்ததில் அத்தனை பெரிய ஆசுவாசம் பிறந்தது.

‘அந்த பார்வை அதில் இருந்தது என்ன? அது ஏன் என்னை இத்தனை படுத்துக்கிறது?’ என்று மனது குழம்பி சிந்தித்த கணம்,

“ஹேய் மேகா டார்ல்ஸ் என்ன எம்‌.டி ரூம்ல இவ்ளோ நேரம்?” என்றபடி அருகில் வந்தாள் காவ்யாவின் கையில் தேநீர் இருந்தது.

“ரேகா மேம் ஒரு பைலை கொடுக்க சொன்னாங்க” என்று சிந்தனையை ஒதுக்கிவிட்டு பதிலளித்தாள்.

“ஓஹோ… அதுக்கு எதுக்கு இவ்ளோ நேரம் ஆளு பார்க்க நல்ல ஊட்டி ஆப்பிள் கலர்ல பளிச்சினு இருக்கவும் சைட் அடிச்சிட்டு நின்னுட்டியா?” என்று கண்ணடிக்க,

இவளுக்கு சடுதியில் கொழுகொழுவென குண்டு கன்னங்களுடன் தன்னை பார்த்து விழித்த குழந்தைகள் நினைவிற்கு வந்ததனர்.

உள்ளே ஒன்று பிரவாகமாக பொங்கி வர அதனை அடக்க வழி தெரியாது தவித்தவள்,

“அதெல்லாம் எதுவுமில்லை? அழகா இருந்தா பாக்கணும்னு அவசியம் இல்லை. அதுக்கும் மேல ஹீ இஸ் மேரிட்”என்றவாறு தன்னிருக்கையை நோக்கி நடந்தாள்.

“சோ வாட்? சைட் அடிக்கிற பசங்க எல்லாம் அன்மேரிட்டா இருக்கணும்னா யாரையுமே நாம சைட் அடிக்க முடியாதுடி” என்றவாறு அமர்ந்தாள் காவ்யா.

“சரிதான்” என்ற மேகா கையில் இருந்த அலைபேசியை தனது பையில் போட,

அதனை கவனித்த காவ்யா,

“என்னடி அது மொபைல் மாதிரி இருக்கு? யாரோடது?” என்று வினவிட,

“அது நான் தெரியாம சார் மொபைல கீழே தள்ளிவிட்டுட்டேன் அதுல டிஸ்ப்ளே உடைஞ்சிடுச்சு. அதான் நானே சர்வீஸ் பண்ணி தர்றேன்னு வாங்கிட்டு வந்து இருக்கேன்” என்றதும்,

“சாரோட மொபைலா? கொடு” என்று வாங்கி முன்னும் பின்னும் திருப்பி பார்த்தவள்,

“ரொம்ப காஸ்ட்லியா இருக்கும் போலடி” என்றாள்.

“நானும் அப்படி தான் நினைக்கிறேன்” மேகா மொழிய,

“நீ எப்படி அவர் மொபைல தள்ளிவிட்ட?” என்று வினா எழுப்ப,

ஒரு கணம் தடுமாறியவள்,

“நான் பைலை டேபிள்ள வைக்கும் போது தெரியாம தட்டிவிட்டுட்டேன்” என்று சமாளித்தாள்.

“கவனமா இருக்க மாட்டியா” என்றவள்,

“உன் பேஸ் ஏன் ஒரு மாதிரி இருக்கு? மொபைல உடைச்சதால சார் ஏதும் திட்டிட்டாரா?” என்று கவலையுடன் கேட்க,

சடுதியில் தன்னை மீட்டவள்,

“இல்லை அதெல்லாம் ஏதுமில்லை. சார் ஏதும் சொல்லலை? அவரே சர்வீஸ் பண்ணிக்கிறேன் வாராண்டி இருக்குனு சொன்னாரு நான் தான் கில்டியா இருக்கும்னு வாங்கிட்டு வந்துட்டேன்” என்று விளக்கமளித்தாள்.

“ஹ்ம்ம் நல்லவரா இருப்பாரு போவே பணக்காரங்க எல்லாரும் கெட்டவங்க இல்லை போல. சரி ஈவ்னிங் போகும் போது நம்ம சிவாண்ணா கடையில கொடுத்துட்டு நாளைக்கு வாங்கிட்டு வந்து கொடுத்துடலாம்” என்று முடித்திட,

மேகாவும் அப்போதைக்கு அனைத்தையும் ஒத்தி வைத்துவிட்டு பணியை கவனித்தாள்.

மாலை வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில் இருந்த அலைபேசியை சரி செய்யும் கடைக்குள் இருவரும் நுழைந்தனர்.

இருவரையும் கண்ட சிவா,

“என்னம்மா எப்படி இருக்கிங்க?” என்று விசாரிக்க,

“ஹ்ம்ம் நல்லா இருக்கோம்ணா” இந்த காவ்யா புன்னகையுடன் பதில் அளித்தாள்.

“என்ன குடிக்கிறிங்க? டீ காஃபி?” என்று சிவா உபசரிக்க,

“அதெல்லாம் வேணாம்ணா. காஃபி குடிச்சிட்டு தான் வந்தோம்” என்று மறுத்த காவ்யா,

“எங்களுக்கு ஒரு மொபைல் சர்வீஸ் பண்ணனும்” என்றாள்.

“ஹ்ம்ம் பண்ணிடலாம். மொபைலை கொடுங்க” என்று கையை நீட்டினான் சிவா.

சிவா காவ்யாவின் கல்லூரி தோழியின் அண்ணன். அலைபேசியை சரிசெய்ய வழக்கமாக இங்கு தான் இருவரும் வருவார்கள்.

மேகா பையில் இருந்து அலைபேசியை எடுத்து கொடுக்க,

அதனை வாங்கி பார்த்த சிவா முன்னும் பின்னும் திருப்பி பார்த்துவிட்டு,

“இதென்னம்மா புது மாடலா இருக்கு? இந்த மாடலை நான் இதுக்கு முன்னாடி பாத்ததே இல்லையே” என்க,

“எங்களுக்கும் இதை பாத்தா டிப்பரண்டா தான் இருக்குண்ணா. நானும் இந்த பிராண்ட கேள்விப்பட்டது இல்லையேன்னு தான் நினைச்சேன்” என்று காவ்யா மொழிந்தாள்.

“எனக்கு தெரிஞ்ச பிராண்டா இருந்தா அசால்ட்டா பண்ணிடுவேன். இது சுத்தமா எனக்கு தெரியாததா இருக்கே” என்று சிவா சிந்திக்க,

இங்கு மேகாவிற்கு உள்ளுக்குள் பதற்றம். நாளை சரி செய்து தருவதாக கூறிவிட்டு வந்துவிட்டேனே இப்போது என்ன செய்வது என்று தோண்ற,

“அண்ணா எப்படியாவது சரி பண்ணி கொடுங்கண்ணா” என்று கெஞ்சலாக அவன் முகம் கண்டாள்.

“என் ப்ரெண்ட் ஒருத்தன் பெங்களூர்ல இருக்கான். அவன் மொபைல் ஷோரூம்ல தான் வொர்க் பண்றான். அவன்கிட்ட கேட்டா தெரியும்” என்ற சிவா அந்த அலைபேசியை புகைப்படம் எடுத்து நண்பனுக்கு அனுப்பிவிட்டு அழைப்பை விடுத்தான்.

மேகாவின் முகத்தை கண்ட காவ்யா,

“ஹேய் மேகா அண்ணா கண்டிப்பா சரி பண்ணி கொடுத்துடுவாரு. நாளைக்கு இல்லைனா ரெண்டு நாள்ல திருப்பி கொடுத்துடலாம். எம்.டி ரொம்ப நல்லவரா இருக்காரு எதுவும் சொல்ல மாட்டாரு” என்று அவளது கையை பிடித்து ஆறுதல் கூறினாள்.

இருந்தும் மேகாகவிற்கு நாளை அவனிடம் சரி செய்து தந்துவிட வேண்டுமே என்று அச்சம் மறையவில்லை.

பத்து நிமிடங்கள் பேசிவிட்டு வந்த சிவா,

“கவி இந்த போன் இம்போர்டட் போன்மா. அதான் எனக்கு தெரியலை. இதை நார்மலா சர்வீஸ் பண்ற ஷாப்ல பண்ண முடியாது. ஸ்பேர் பார்ட்ஸ் கிடைக்காதுமா. நீங்க இந்த ஷோரூம் போனா தான் சர்வீஸ் பண்ண முடியும்” என்றிட,

சிறிது ஆசுவாசப்பட்ட மேகா, “ஷோரூம் எங்க இருக்கு ண்ணா. நாங்க இப்போவே போய் சர்வீஸ்க்கு கொடுக்குறோம்” என்க,

“ஷோரூம் தமிழ்நாட்ல இல்லைம்மா மும்பைல தான் இருக்கு” என்று சிவா பதில் இயம்ப,

“மும்பையா?” என்று இருவரும் ஒரு சேர வினவினர்.

“ஆமா மும்பை தான். அதைவிட முக்கியமான விஷயம் இதுக்கு டிஸ்ப்ளே மாத்த மூனு லட்சம் ஆகும்” என்று சிவா கூறியதும் இருவரிடத்திலும் ஏகமாய் அதிர்ச்சி.

காவ்யா, “மூனு லட்சமா?” என்று அதிர்வு தாளாது வினவிட,

சிவா, “ஆமா மூனு லட்சம் தான். இந்த மொபைலோட ரேட் ஏழு லட்சம்” என்று பதில் அளித்தான்.

“ஏழு லட்சம்? அவ்வளோ அமௌண்ட்கெல்லாம் மொபைல் இருக்கா?” என்று காவ்யா குறையாத அதிர்வுடன் வினவ,

“ஹ்ம்ம் அதுக்கு மேலயும் இருக்கும்மா. இதெல்லாம் கோடீஸ்வரங்க யூஸ் பண்றதும்மா” என்றவன்,

“ஆமா இவ்ளோ காஸ்ட்லி மொபைல் உங்களுக்கு ஏது?” என்றிட,

“எங்க கம்பெனி எம்டியோடது ண்ணா. இவ தெரியாம கீழ தள்ளிவிட்டுட்டா அதான் சரி பண்ணி கொடுத்திடலாம்னு வாங்கிட்டு வந்தோம்” என்று கவி மொழிந்தாள்.

“இதுக்கு வாரண்டி இருக்குமேமா? பாக்க புதுசா தான் தெரியுது க்ளைம் பண்ணிக்கலாமே?” என்று சிவா ஐயப்பட,

“எங்க எம்டியும் வாரண்டி க்ளைம் பண்ணிக்கிறேன்னு தான் சொன்னாரு இவ தான் நான் தானே உடைச்சேன் நானே சரி பண்ணி தர்றேன்னு வாங்கிட்டு வந்துட்டா” என்று கூறினாள்.

இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த மேகா, “அண்ணா நீங்களே மும்பை ஷோரூமை காண்டாக்ட் பண்ணி இதை சரி பண்ணி தர்றீங்களா?” என்றிட,

கவி, “அடியே மூனு லட்சம் ஆகுமாம் அவ்ளோ பணத்துக்கு எங்க போறது. அதான் சாரே வாரண்டி க்ளைம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டாருல பேசாம இங்க சர்வீஸ் பண்ண முடியலைன்னு அவர்க்கிட்ட கொடுத்துடலாம்” என்றிட,

“இல்லைடி அது சரிவராது‌. நான் சரி பண்ணி தர்றேன்னு சொல்லிட்டேன் பண்ணி கொடுத்துடலாம்” என்றவள்,

“அண்ணா நீங்க இதை சர்வீஸ் பண்ண ஏற்பாடு பண்ணுங்க” என்று முடித்துவிட்டாள்.

“சரிம்மா. அட்வான்ஸ் கொடுக்கணும் ப்ளஸ் இதை நான் அனுப்பி அவங்க சரி பண்ணி திருப்பி தர எப்படியும் டென் டேஸ்க்கு மேல ஆகும்” என்று சிவா கூற,

‘பத்து நாளா? அதுவரைக்கும் அவர் அலைபேசியில்லாது என்ன செய்வார்?’ என்று சிந்தித்தபடியே,

“சரிண்ணா. எங்கிட்ட ஒரு இருபத்தஞ்சாயிரம் இருக்கு அதை அனுப்பி வைக்கிறேன் பேலன்ஸ சீக்கிரமா அரேன்ஜ் பண்ணி தர்றேன்” என்றவள் தன்னுடைய வங்கி கணக்கில் இருந்த பணம் மொத்தத்தையும் சிவாவின் வங்கி கணக்கிற்கு மாற்றிவிட்டாள்.

பின்னர் இருவரும் கூறிவிட்டு கிளம்ப,

காவ்யா, “ஏன்டி போலன்ஸ் அமௌன்ட்க்கு என்ன பண்ண போறோம்? சின்ன அமௌன்ட்னா யார்ட்டாயவது வாங்கிக்கலாம் இது ரொம்ப பெரிய அமௌன்ட்டா இருக்கு? வீட்லயும் கேட்டாலும் எதுக்கு திடீர்னு அவ்ளோ பெரிய அமௌன்ட்னு கேள்வி வருமே?” என்று வினவ,

தானும் அதை தான் சிந்தித்தபடி இருந்தவள்,

“நானும் அதான் யோசிக்கிறேன். இன்னும் ஒன் வீக்ல சேலரி க்ரெடிட் ஆகிடுமே அதை வச்சு மேனேஜ் பண்ண முடியாதா?” என்று வினா தொடுக்க,

“சரிதான் அதுலயும் ஒன் லாக் தான் வரும் பேலன்ஸ் எப்படி ஈக்வல் பண்ண?”

“அப்பாட்டயே சொல்லி வாங்கிக்கலாம். நான் பேசுறேன்”

“அத்தைக்கு தெரிஞ்சா எதாவது சொல்லுவாங்கடி”

“சொல்ல வேணாம்னு அப்பாட்ட சொல்லிடுவோம்”

“ஹ்ம்ம். இருந்தாலும் நீ கொஞ்சம் யோசிச்சு அவர்கிட்ட சொல்லி இருக்கலாம்”

“நான் இவ்ளோ அமௌன்ட் வரும்னு எதிர்ப்பார்க்கலை”

“அதுவும் சரிதான். நானும் வாரண்டின்னு சொன்னது மூவாயிரம் நாலாயிரம் வரும்னு நினைச்சேன்‌. இது நம்ம ஆறு மாத சேலரிய முழுங்குற அமௌன்ட்டா இருக்கே” என்றவள்,

“ஏன் மேகா எவ்ளோ தான் ரிச்சா இருந்தாலும் ஏழு லட்சத்துக்கா மொபைல் யூஸ் பண்ணுவாங்க. தெரியாம தொலைஞ்சு போச்சுனா என்னாகுறது” என்றிட,

மேகாவிற்கும் சிறிது நேரத்திற்கு முன்பே இது தோன்றியது.

“மொபைலே இவ்ளோ காஸ்ட்லியா யூஸ் பண்றாரே இவர் எவ்வளவு ரிச்சா இருப்பாரு?” என்று மீண்டும் காவ்யா வியக்க,

மேகாவிற்கு ஏற்கனவே அவனது பின்புலம் தெரியுமாதலால் எந்தவிதமான எதிர்வினையும் காண்பிக்கவில்லை.

அவளுக்கு நாளை எப்படி சைத்தான்யாவிடம் பேசப் போகிறோம் என்று தான் மனம் முழுவதும் சிந்தை வியாபித்திருந்தது.

பேசியபடி வீட்டை அடைய காவ்யாவிடம் கூறிவிட்டு வீட்டை அடைந்தவளுக்கு வீட்டின் அமைதி எதையோ உணர்த்தியது.

தாய் தந்தையரின் முகம் கண்டவளுக்கு காரணம் புரிந்தது.

அறிந்த கணம் உள்ளே சொல்லவியலா நிம்மதி அலையலையாக பரவியது.

முகத்தில் எதையும் காண்பிக்காதவள் அமைதியாக அறைக்குள் சென்று முடங்கிவிட்டாள்.

பெண் பார்க்க வந்து சென்ற ஒரு வாரமாக எந்தவித தகவலும் இல்லாத போதே அவளுக்கு இது தான் முடிவென்று தெரியுமே. பெற்றோர் தான் பாவம் எதிர்பார்த்து ஏமாந்துவிட்டனர்.

உடை மாற்றி சென்று தாய் தந்தையர் இருவரையும் தன்னால் இயன்ற அளவு தேற்றியவள் உணவுன்ன வைத்து தானும் உண்டு உறங்க சென்றாள்.

ஆனால் மூடிய விழிகளுக்குள் தன்னை பார்த்து திகைத்து விழித்த மழலைகள் இருவரும் வந்து நிற்க உறக்கம் பறிபோனது.

அலைபேசியை எடுத்து நேரத்தை பார்க்க பனிரெண்டு ஆகியிருந்தது.

கைகள் தாமாக மறைத்து வைத்திருந்த புகைப்பட கோப்புக்குள் செல்ல விரல் அந்த ஒற்றை புகைப்படத்தினை வருடி நின்றது.

அதில் சைத்தன்யாவும் மேகாவும் ஒருவரையொருவர் பார்த்தது போல இருக்கும் நிழலுருவம் அழகாய் பதிந்து இருந்தது. அந்த புகைப்படம் காயத்ரி முதன் முதலில் இருவரையும் சேர்த்து வைத்து எடுத்தது.

இத்தனை வருடங்களாய் அவனுடைய நினைவுகளோடு சேர்த்து இதனையும் பத்திரப்படுத்தி வைத்திருந்தாள்.

கலங்கிய விழிகளுடன் அதனை வருடியவள் எப்போது உறங்கி போனாள் என்று அவளுக்கு தெரியவில்லை.

மறுநாள் அலுவலகம் வந்ததுமே சைத்தன்யாவின் அறை வாசலுக்கு தான் சென்று நின்றாள்.

அலைபேசி வர குறைந்தது பத்து நாட்களாக ஆகும் என்று கூற வேண்டும். ஆனால் அதுவரை தான் என்ன செய்வது என்று வினவினால் என்ன மொழிவது என்று அவளுக்கு தெரியவில்லை.

‘சரி எதாவது கூறித்தானே ஆக வேண்டும்’ என்று எண்ணியபடி அனுமதி வேண்டி நின்றாள்.

அவன் உள்ளே வர அனுமதி அளித்ததும் கதவை திறந்து நுழைந்தாள்.

ஒதோ ஒரு கோப்பில் கவனமாக இருந்தவன் நிமிர்ந்து அவளை,

‘என்ன?’ என்று புருவம் உயர்த்தி பார்க்க,

‘க்யூட்டன்’ என்று மெலிதாக அதிர்ந்தவளுக்கு அவனது அந்த பாவனையில் சிறிதான பூகம்பம் பிறந்தது.

அடர்நீல நிறத்தில் சட்டையும் அதற்கு தோதாக சந்தன நிறத்தில் பேன்ட்டும் அணிந்து இருந்தவன் கண்ணை பளிச்சென்று கவர இவளிடம் மொழியில்லை.

அதில் சைத்தன்யா மீண்டும்,

“என்ன வேணும் மேகா?” என்று மீண்டும் அழுத்தி வினவிட,

தன்னிலை மீண்டவள்,

‘அடியே என்ன பண்ணிட்டு இருக்க? உன்னை பத்தி என்ன‌ நினைப்பாரு அவரு’ என்று மனதிற்குள் நிந்தித்துவிட்டு,

“சார் உங்க மொபைல்?” என்று மேகா கூறியதும்,

அலைபேசியை வாங்குவதற்காக அவனது கரம் நீண்டது.

அவனது கரத்தையும் முகத்தையும் ஒரு நொடி மாறி மாறி பார்த்தவள்,

“அது இன்னும் சர்வீஸ் பண்ணி வரலை சார்‌. சர்வீஸ் பண்ண கொடுத்து இருக்கேன் வர டென் டேஸ் ஆகும்” என்றபடி தயங்கி அவனது முகம் காண,

“எங்க கொடுத்து இருக்க?”

“எனக்கு தெரிஞ்ச அண்ணா மூலமா மும்பைல இருக்க சர்வீஸ் சென்டர்க்கு அனுப்பி இருக்கேன்”

“ஓ… எவ்ளோ சர்வீஸ் சார்ஜ்?”

“த்ரீ லேக்ஸ்”

“பே பண்ணிட்டியா?”

“இல்லை சார் அட்வான்ஸ் மட்டும் கொடுத்து இருக்கேன்”

“ஸோ மொபைல் வர டென் டேஸ் ஆகும் அதுவரைக்கும் நான் என்ன பண்றது?”

இந்த வினாவிற்கு தானே நேற்றில் இருந்து பதில் சிந்தித்து வருகிறாள் ஒன்றும் புலப்படவில்லையே…

“அது…” என்று இழுத்து,

“உங்
க மொபைல் வர வரைக்கும் என்னோடதை யூஸ் பண்ணிக்கிறிங்களா…?” என்ற வினவியவளுக்கே அது அபத்தமாக தான் இருந்தது.

சைத்தன்யா போய் அவளுடைய பழைய அலைபேசியை உபயோகிப்பதா? அது கனவிலும் நடக்காது என்று வினவியவள் எண்ணி கொண்டிருக்க,

“ஓகே கிவ் மீ யுவர் மொபைல்” என்று கேட்டு வைத்து அவளுக்கு மயக்கம் வராத குறையை வர வைத்திருந்தான் சைத்தன்யா.

அவனது வினாவில் அதிர்வை தாங்க இயலாதவள்,

“ஹான்…” என்று திகைத்து விழித்தாள்.




 
Active member
Messages
346
Reaction score
233
Points
43
Megha annaiku culturals ah chaidhu oda appa ah va than parthu irupalo avan oda financial status indha mobile la partha la yae theriyuthu aanalum service ku 3lakhs ah rombha aniyayam da
Megha yen ma ipadi pei adicha mathiri pakkura ne than venum na ennoda mobile ah kudukiran nu sonna ah atha than ah avan um kettan
 
Top