• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

மேகம் 8

Administrator
Staff member
Messages
464
Reaction score
794
Points
93
மேகம் 8:

பெரிதான பாவனைகள் ஏதும் தேவையில்லை

நான் சிதறாமல் சிதறி போவதற்கு…
அவனது சின்ன
புன்னகை ஒன்றே

போதுமானதாகிறது…?


மேகா ஹாஸ்டல் வரலையா?” என்ற திவ்யாவிற்கு,


“நீங்க போங்க நான் காயு அக்காவை பாத்திட்டு வந்திட்றேன்” என்று பதில் பொழிந்தாள் மேகா.

“அக்காவை பாக்க போறீயா? இல்லை சீனியரை பாக்க போறீயா?” என்று சரண்யா கண்ணடிக்க,

“அச்சச்சோ அதெல்லாம் இல்லை. நான் அக்காவ தான் பாக்க போறேன். அவங்க தான் ஹாண்ட் நோட்ஸ் இருக்கு வந்து வாங்கிக்கோன்னு சொன்னாங்க” என்று உடனடியாகத் மறுத்தவளது மனதிற்குள் மெல்லிய சாரல்.

“சரிதான். இப்போல்லாம் உனக்கு எங்களை விட அவங்க தான முக்கியமா போய்ட்டாங்க. போ” என்று சரண்யா கூற,

“ஹே சரண் நீயே இப்படி பேசுற? எனக்கு நீங்க தான் இம்பார்ட்டன்ட். நான் எப்பவுமேவா அவங்களை பாக்க போறேன்” என்று தோழியை சமாதானம் செய்ய விழைய,

“நம்பிட்டேன். க்ளாஸ் எங்க கூட அட்டெண்ட் பண்ண வேண்டியது இருக்கதால இங்க இருக்க. இல்லைனா சீனியர பாக்க தான போவ”

“சே அப்படிலாம் இல்லை. இங்க வந்து யாரையும் தெரியாம முழிச்சப்போ. நீங்க தான ப்ரெண்ட்ஸா கிடைச்சிங்க” என்றவளுக்கு தோழியை வேறு என்ன கூறி சரி செய்வது என்று தெரியவில்லை.

நேரம் வேறு சென்று கொண்டிருந்தது. காயத்ரி வேறு ஐந்தரை மணிக்கு மைதானத்திற்கு வர கூறியிருந்தாள்.

“சரிதான் நம்பிட்டேன்” என்றவள்,

“உனக்கு நாங்க தான் முக்கியம்னா இன்னைக்கு எங்க கூட தான் வரணும்” என்று சரண்யா இயம்ப,

“ஆங்…” என்றவள் பதில் கூறாது விழித்தாள்.

“என்ன வருவ தான?” என்றவளிடம்,

வேறு வழியின்றி நான்கு புறமும் தலையை அசைத்து வைத்தாள்.

“சரி வா போகலாம்” என்று கையை பிடித்து அழைத்து செல்ல,

“ஹ்ம்ம்” என்று தலை அசைத்தவளது முகத்தில் இருந்த தவிப்பை கண்ட திவ்யா,

“சரண் போதும் விளையாண்டது. அவ முகத்தை பாரு திருவிழால காண போன குழந்தை மாதிரி முழிக்கிறா” என்று திவ்யா சிரிப்புடன் கூற,

மேகாவின் முகத்தை கண்ட சரண்யாவிற்கு அடக்கமாட்டாது சிரிப்பு வந்துவிட்டது.

இருவரது சிரிப்பையும் கண்டவள்,

“அடிப்பாவிகளா? அப்போ என்னை காமெடி பண்ணிட்டு இருந்திங்களா?” என்று இடுப்பில் கை வைத்து முறைக்க,

“ஹப்பா எவ்ளோ சீக்கிரம் கண்டுபிடிச்சிட்டிங்க மேடம்” என்று சரண்யா கலாய்க்க,

“எந்நேரம் உன்னை மதிச்சு உன் பேச்சை நம்புனேன்ல” என்று முறைத்தாள்.

திவி, “இப்படியே முறைச்சிட்டு இரு. சீனியர் கிளம்பிடுவாரு” என்று திவ்யா மொழிய,

“அச்சச்சோ அதை மறந்துட்டேனே” என்றவள் தலையில் தட்டிவிட்டு வேகமாக மைதானத்தை நோக்கி தடையை தொடர்ந்தாள்.

வேக நடை தான். மூச்சு வாங்க நடந்தவளுக்கு இதழில் மென்னகை மிளிர்ந்தது. காரணம் தோழிகளுடன் நடந்த உரையாடல் தான்.

‘க்யூட்டன். உன்னை பாக்க தான் வர்றேன்னு இவங்க கண்டுபிடிச்சிட்டாங்க’ என்று நினைத்தவாறே நடந்தாள்.

அன்று திங்கள் கிழமை சைத்தன்யாவை பார்த்து இரண்டு தினங்கள் ஆகி இருந்தது.

காலையில் வந்ததில் இருந்தே அவனை பார்த்துவிட வேண்டும் என்று உள்ளுக்குள் ஒன்று பரபரவென்று கூறி கொண்டே இருந்தது.

அதற்கு தோதாக காயத்ரி படிக்க வேண்டிய நோட்ஸ் மற்றும் புத்தகங்களை கொடுப்பதாக கூற அவளை பார்க்க கிளம்பிவிட்டாள்.

இரண்டு நிமிடத்தில் மைதானத்தை அடைந்துவிட்டவளது பார்வைஅந்த கடைக்கோடியில் கூடைப்பந்து விளையாடி கொண்டு இருந்தவர்கள் மீது பதிந்தது.

விழிகள் அடுத்த நொடி அங்குமிங்கும் அலைபாய்ந்து உரியவனிடத்தில் நின்றது.

மஞ்சளும் நீலமும் கலந்த நிறத்தில் டீசர்ட்டும் ஷார்ட்ஸும் அணிந்திருந்தவனது கவனம் முழுவதும் விளையாட்டின் மீது தான்.

டீசர்டின் பின்புறம் பெரிதாக எழுதப்படடிருந்த சைத்தன்யா என்ற பெயரை உச்சரித்தவளது பார்வை அவனது முகத்தில் விழுந்தது.

மாலை மங்கும் நேரம் சூரியவனது மெல்லிய கதிர்கள் முகத்தில் விழ அங்காங்கே சிதறி தெறித்தது வியர்வை துளிகள்.

நெற்றியில் வழிந்த வியர்வையை சைத்தன்யா ஒற்றை விரலால் வழித்தெறிந்துவிட்டு விளையாட்டை தொடர,

இங்கு சடுதியில் இவள் நின்றுவிட்டாள். என்னவோ தன் மீதே அவன் வியர்வை துளிகள் பட்டது போல உள்ளே சிலீரென்ற உணர்வு தாக்கிட, ஒரு கணம் அவனது வியர்வை வாசத்தை உணர உள்ளம் அவா கொண்டது.

தன் எண்ணம் போகும் பாதையை உணர்ந்தவள் ஒரு கணம் திடுக்கிட்டு போனாள்.

‘அடியே என்ன பண்ணிட்டு இருக்க?’ என்று தன்னை தானே கடிந்து கொண்டவள் அவன் மீதிருந்த பார்வையையும் மிகவும் சிரமப்பட்டு திருப்பி அங்கே ஓரத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த காயத்ரியை கண்டாள்.

இதழ்கள் வேறு, ‘என்னவோ பண்றடா க்யூட்டா…’ என்று முணுமுணுத்து கொண்டது.

அருகில் நெருங்கியதும் அவனை திரும்பியும் பார்க்கவில்லை. காரணம் எல்லாம் அவன் மீதுள்ள அச்சம் தான்.

காயத்ரி இவளை கண்டதும், “மேகாஎன்று கையசைக்க,

“அக்கா…” என்று நெருங்கியவளுக்கு மூச்சு வாங்கியது வேக நடையில் வந்ததால்.

“ஏன் இப்படி மூச்சு வாங்குது. மெதுவா வர வேண்டியது தான” என்று காயு வினவ,

“லேட்டாயிடுச்சே நீங்க கிளம்பிடுவிங்களோன்னு தான் வேகமா…” என்று பேசுகையிலே தலையில் நங்கென்று வந்து மோதிய பந்தால் பட்டென்று தரையில் மயங்கி சரிந்திருந்தாள் மேக மொழியாள்…

“மேகா” என்று காயு பதறி அவளை பிடிக்க வர, அதற்குள் புல் தரையில் விழுந்திருந்தாள்.

ஏற்கனவே மூச்சு வாங்கி கொண்டிருந்தவளுக்கு பந்து தலையில் பட்டதும் ஒரு கணம் மூச்சு நின்றே போயிருக்க மூர்ச்சையாகி இருந்தாள்.

அவள் மீது பந்தை எறிந்த சைத்தன்யா முகம் முழுவதும் பதட்டத்துடன் அவளருகே வர,

காயு, “மேகா மேகா கண்ணை திற” என்று அவளது கன்னத்தில் தட்டினாள்.

ஆனால் மேகாவிற்கு விழிப்பு வரவில்லை. துரிதமாக செயல்பட்ட சைத்தன்யா அவளை கையில் ஏந்தி,

“எமெர்ஜென்சி ரூம்க்கு கொண்டு போவோம்” என்று விரைந்தான்.

நடந்த நிகழ்வால் சிறு கூட்டமே அங்கு கூடியிருந்தது. விளையாடி கொண்டிருந்த அனைவரும் உடன் வந்தனர்.

அவசர சிகிச்சை அறைக்கு அழைத்து சென்றதும் அங்கிருந்த செவிலியர் மற்றும் மருத்துவர் மேகாவை சோதிக்க துவங்கினர்.

சைத்தன்யா, “விளையாடிட்டு இருக்கும் போது க்ரௌண்ட்கிட்ட வந்து உட்காரதன்னு எவ்ளோ டைம் சொல்லி இருக்கேன். கேட்டியா நீ” என்று காயத்ரியை திட்டி கொண்டு இருந்தான்.

சைத்தன்யாவிற்கு அதீத பதட்டம் அவன் வேண்டுமென பந்தை எரியவில்லை எனினும் தன்னால் தான் அவள் மீது பந்து பட்டது இப்போது மூச்சு பேச்சின்றி கிடக்கிறாள் என்று மனது முழுவதும் ஒரு தவிப்பு.

காயு, “சைத்து பயப்படாத அவளுக்கு ஒன்னும் ஆகாது” என்று ஆறுதல் கூறுகையிலே மருத்துவர் வெளியே வந்தார்.

அடுத்த கணமே இருவரும் அவரிடம் நெருங்க,

“நத்திங் டூ ஒர்ரி. அவங்க பால் பட்ட அதிர்ச்சியில தான் மயங்கி இருக்காங்க. இப்போ கண் முடிச்சிட்டாங்க” என்று மருத்துவர் கூற,

“தாங்க்ஸ் டாக்டர்” என்றுவிட்டு உள்ளே நுழைந்தனர்.

இப்போது காயுவிற்கு முன் சைத்தன்யா உள்ளே நுழைந்தான்.

விழிகளை திறந்த மேகாவிற்கு ஒரு கணம் ஒன்றும் விளங்கவில்லை.

சட்டென்று பந்து தலையில் விழுந்தது நினைவிற்கு வர,

‘அச்சச்சோ என் தலை நெளிஞ்சிடுச்சா’ இந்த பதறியவாறு மேகா தலையை தடவி பார்க்க,

அக்கணம் நுழைந்த சைத்தன்யா,

“என்ன மேகா தலை வலிக்கிதா…?” என்று பதற,

“சே சே தலை நெளிஞ்சிடுச்சான்னு பாத்தேன்” என்றவளது பதிலில் சைத்தன்யா,

“வாட்?” என்று திகைத்து விழிக்க,

‘அச்சச்சோ மனசில நினைச்சதை அப்படியே சொல்லிட்டோமா?’ என்று விழிக்க,

இவர்கள் இருவரது பாவனையில் சத்தமாக சிரித்துவிட்டாள் காயத்ரி.

“என்ன மேகா தலை ஷேப் மாறாம அப்படித்தான் இருக்கா?” என்று சிரிப்புடன் வினவ,

“அக்கா” என்றவள் சிரிப்புடன் எழுந்து அமர முயற்சிக்க முதுகுபுறத்தில் சுளீரென வலி பிறந்தது.

அதில் முகத்தை சுருக்கியவள்,

“ஷ்…” என்க,

“என்ன மேகா கீழ விழுந்ததுல எங்கேயும் அடிப்பட்டிருச்சா? வலிக்கிதா?” என்று பதறி வினவிய சைத்தன்யாவின் முகத்தில் இருந்த தவிப்பை கண்டவளுக்கு ஒரு கணம் பேச்சு வரவில்லை.

கண பொழுதில் தன்னை சமாளித்தவள்,

“இல்லை பெருசா எதுவும் வலி இல்லை. இது கீழ விழுந்ததுல பிடிச்சிருக்குனு நினைக்கிறேன். அதுவா சரியாகிடும்” என்று கூற,

“ஆமடா. அது சுளுக்கு தான் பிடிச்சு இருக்கும்” என்று காயத்ரியும் மொழிந்தாள்.

இருந்தும் மனது கேளாமல்,

“ஆர் யூ ஸ்யூர்?” என்று சைத்து வினவிட,

‘இந்த மாதிரி நீ கேட்டா நான் தினமும் கூட கீழ விழுவேனே க்யூட்டா’ என்று மனதிற்குள் கொஞ்சி கொண்டவள்,

“ஹ்ம்ம்” என்று தலையசைத்து வைத்தாள்.

காயு, “சைத்து நீ ப்ராக்டீஸ்க்கு போ. நாளைக்கு மேட்ச் இருக்குல. நான் இவளை ஹாஸ்டல்ல விட்டுட்டு வர்றேன்” என்க,

“சரி” என்றவன் மேகாவிடம் தலையசைத்து விடை பெற அவ்வளவு தான் மேகாவிற்கு அவளை சுற்றி யாவும் நொடி நேரம் உறைந்து மீண்டது.

காயு, “சைத்து போட்ட பால் தான் உன் மேல பட்டுருச்சு மேகா” என்றதும்,

“ஓ…” என்றவளுக்கு சடுதியில் உணர்வுகள் வடிந்து போனது.

‘அவரால் பந்து விழுந்ததால் தான் இத்தனை கரிசனமா? அந்த தவிப்பெல்லாம் அதற்காக தானோ…?’ என்று உள்ளே ஏமாற்றம் அலையலையாக பரவியது.

“எனக்கு ஒரு செகெண்ட் நீ விழுந்ததும் என்ன பண்றதுனு புரியலை. சைத்து தான் தூக்கிட்டு இங்க வந்தான்” என்றிட,

இவள் சடுதியில் தன்னை தானே முகர்ந்து பார்த்திட அன்று காட்டுக்குள் நுகர்ந்த அதே வாசனையை நாசி நுகர்ந்திட பேச்சு வரவில்லை.

சற்று நேரத்திற்கு முன்பு மனது ஆசைப்பட்ட ஒன்று நடந்துவிட்டதை நம்ப இயலவில்லை.

இதயம் சில நொடிகள் குதிரை வேகத்தில் துடித்திட கையை வைத்து அழுத்தி கொண்டாள்.

அதில் காயு பதறி, “என்ன என்ன செய்து மேகா?” என்று வினவ,

தன்னிலை அடைந்தவள்,

“அக்கா பதறாதிங்க எறிந்து ஒன்னுமே இல்லை” என்று மெத்தையில் இருந்து இறங்கிவிட்டு,

“நாம போகலாம் வாங்க” என்று காயுவின் கையை பிடித்து கொண்டாள்.

உள்ளூரும் ஒருவித சில்லென்ற உணர்வை அனுபவித்தபடி விடுதிக்கு சென்றவள் அவன் வாசம் வீசும் உடையை மாற்ற கூட தோன்றாது படுத்துவிட்டாள்.

எந்தன் நெஞ்சில் ஊஞ்சல்
கட்டி ஆடி கொண்டு
இருக்கிறாய்…
எனக்குள் புகுந்து
எங்கோ நீயும்
ஓடிக்கொண்டு இருக்கிறாய்…

*********

இப்படி சட்டென அலைபேசியை திருப்பிவிடுவான் என்று எதிர்பாராதவள் திகைத்து விழிக்க,

“என்ன சர்ப்ரைஸ் டா?” என்று வினவிய காயத்ரியும் மேகாவை கண்டு இன்பமாய் அதிர்ந்து,

“ஹேய் மேகா…” என்று சிறிது கூச்சலிட்டுவிட்டாள்.

மேகாவும் திகைப்பில் இருந்து மீண்டு, “அக்கா…” என்று மென்குரலில் அழைத்தாள்.

“நீ எப்படி சைத்து ஆபிஸ்ல?” என்று காயு இன்றும் நம்பவியலாதவளாக வினவிட,

“நான் இங்க தான் ஒர்க் பண்றேன் கா” என்று பதில் அளித்தவளது பார்வை காயுவின் மீது ஊர்ந்தது.

இத்தனை வருடத்தில் வெளித்தோற்றத்தில் பெரிதான மாற்று இல்லை. அப்போது இருந்தது போலவே அழகாக இருந்தாள்.

எப்போதும் சுடிதாரில் பார்த்தவள் இன்று புடவையில் இருந்தாள். திருமணம் ஆனதற்கு அடையாளமாக நெற்றி வகிட்டில் அழகாய் குங்குமம் கழுத்தில் தாலி கொடி என்று தாய்மை எனும் ஸ்தானத்தில் மேலும் மெருகேறி எழிலாக இருந்தாள்.

“நம்ம ஆபிஸ்ல தான் நீ வொர்க் பண்றியா…?” என்று மகிழ்வாய் வினவியவள்,

“ஆளே மாறிட்ட மேகா நீ” என்று மொழிய,

“நீங்க கூட கா இன்னும் அழகாகிட்டிங்க” என்றவளது இதழில் மெலிதான புன்னகை.

“சரிதான் நம்பிட்டேன்” என்று சிரித்தவள்,

“இவ்வளோ நாளா ஏன் கான்டாக்ட்லயே இல்லை? மொபைல் நம்பர சேஞ்ச் பண்ணிட்டியா?” என்று வினவிட,

“அது மொபைல் மிஸ் ஆகிடுச்சு நம்பரும் அதுல போய்டுச்சு” என்றவளுக்கு காயத்ரியின் பேச ஆசை இருந்தாலும் நேரம் ஆகிவிட்டதே…

தான் கொடுத்த ரிப்போர்ட்டை கொடுத்துவிட்டாயா? நான் கூறிய பைலை தயார் செய்துவிட்டாயா? என்று சிறிது நேரத்தில் ரேகாவிடம் இருந்து அழைப்பு வந்துவிடுமே என்ன பதில் கூறுவது.

அதற்கும் மேல் சைத்தன்யா என்ன நினைப்பான். வெகு நாட்கள் ஆகிவிட்டதே என்று அலைபேசியை கொடுத்ததற்கு இப்படி மணிக்கணக்கில் பேசுவாயா? என்று கேட்டுவிட்டால் அல்லது மனதிற்குள் நினைத்து விட்டால் என்ன செய்வது என்று எண்ணியவள்,

“அக்கா எனக்கு கொஞ்சம் ஒர்க் இருக்கு. நான் முடிச்சிட்டு வரட்டுமா…?” என்று அனுமதி கேட்டாள்.

காயு சரியென கூறிவிட்டால் இங்கிருந்து சென்றுவிடலாம் என்று எண்ணியவளுக்கு சைத்தான்யா முன்பு பேசவும் ஒருவித அசௌகரியமாக இருந்தது.

“ஓ… மேடம்க்கு என்னைவிட ஒர்க் இம்பார்ட்டன்ட்டோ?” என்று புருவத்தை உயர்த்த,

அதில் பதறியவள், “ஐயோ அக்கா அப்படிலாம் இல்லை. ஆஃப்நூன்குள்ள ரிப்போர்ட் சப்மிட் பண்ணலைன்னா ரேகா மேம் எதாவது சொல்லுவாங்க” என்று தன்னிலை விளக்கம் கொடுக்க,

காயத்ரி சிரிப்புடன், “நீ இன்னும் மாறவே இல்லை மேகா அப்படியே இருக்க” என்றவள்,

“ஐ ஆம் ஜெஸ்ட் கிட்டிங். போய் ஒர்க்க பாரு” என்றிட,

‘ஆமாம் இன்னும் மாறவில்லை எதில் இருந்தும் மீளவில்லை’ என்று மனதிற்குள் நினைத்தவள்,

“ஹ்ம்ம்” என்று தலை அசைத்தாள்.

காயத்ரி, “சரி மொபைல சைத்துக்கிட்ட கொடு” என்ற கணம்,

“ம்மா நான் அப்பாட்ட பேசுறேன்”

“ம்மா நான் பேசுறேன்” என்று என்று இரு மழலை குரல் செவியில் மோத,

இவளது கரம் ஒரு கணம் நின்றுவிட்டது.

காயத்ரி, “மேகா என் பசங்களை பாரு” என்றவள் குழந்தைகளிடம் அலைபேசியை கொடுத்தாள்.

அப்போதே இவளுக்கு உள்ளுக்குள் என்னவோ செய்ய துவங்கியது.


கொடு மா” என்றபடி அலைபேசியை வாங்கிய வாண்டுகள் இருவரும் இவளை கண்டு மலங்க மலங்க விழிக்க,

வெள்ளை வெளேரென பா
ல் வண்ண நிறத்தில் குண்டு கன்னங்களுடன் விழிகளை உருட்டி தன்னை பார்த்தவர்களது பாவனையில் உள்ளுக்குள் ஏதோ ஒன்று நழுவிட அலைபேசியை வைத்திருந்த கை வியர்வையில் பிசுபிசுத்திட சட்டென்று தவறிவிட்டாள் மேக மொழியாள்…

சந்தத்தில் பாடாத

கவிதையை என்
சொந்தத்தில் யார் தந்தது…?









 
Well-known member
Messages
859
Reaction score
630
Points
93
Suspense thaangala ma, kuttiesoda APPA yaaru

Megha ean eppo paarthalum mayangi.mayangi viluraa
 
Active member
Messages
346
Reaction score
233
Points
43
Enna da innaikku mayangi vizhala nu partha tho vizhundhuta innaikku kotta over enna ival ah chaidhu ah parthu mayangi vizhuva innaikku avan ball ah la adichi mayangi vizhundhuta ah
Gayu oda husband yaru enna panraga nu therinchikirathu kula phone mayakam potuduchi
 
Top