• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

மேகம் 7

Administrator
Staff member
Messages
464
Reaction score
794
Points
93
மேகம் 7:

நேர்த்தியாய் நேர்க்கோட்டில்
வாழ்ந்திடும் வாழ்வில்
பெரிதாய் என்ன இருந்து
விட போகிறது இந்த
அதீத நேசத்தில்
செத்து பிழைக்கும்
சுகத்தை விட பெரிதாய்…?


திருவிழா கூட்டத்தில் தொலைந்து போன குழந்தை தாயை கண்டவுடன் அச்சத்துடனும் அணைத்து கொள்ளுமே அதே போலத்தான் இங்கு மேகாவும் சைத்தன்யாவை பார்த்ததுமே ஓடி வந்து கட்டி கொண்டாள்.

அவனது பிம்பம் விழிகளில் தோன்றிய கணம் உள்ளுக்குள் ஜனித்த ஆசுவாசத்தை நிம்மதியை கூற வார்த்தைகள் இல்லை.

இதயத்தினை இறுக்கி பிடித்திருந்த பயம் நொடியில் மறைந்து போயிருந்தது.

அவனை இறுக்கமாக கட்டி கொண்டிருந்தவளது உடலில் ஏகமாய் நடுக்கம்.

கரங்களால் அவனது உடையை இறுக்கி பிடித்திருந்தவளது கண்ணீரை சைத்தன்யா உணர்ந்தான்.

இவர்களை காணாத நொடி நேரத்தில் படத்தில் பார்த்தது புத்தகத்தில் படித்தது அடுத்தவர் சொல்லி கேள்விப்பட்டது என்று யாவும் மாறி மாறி மனக்கண்ணில் வந்து போயிருந்தது.

யாரிடமாவது தனியாக இந்த காட்டில் மாட்டிக் கொண்டால் தன்னுடைய நிலை என்ன ஆவது என்று எண்ணும் போதே உள்ளே பதறியது.

அதற்கும் மேல் எதாவது மிருகத்திடம் மாட்டி கொண்டால் தன்னை அது அடித்து கொன்றுவிடும் என்று உள்ளுக்குள் நடுங்கியது.

நொடிக்கு நொடி அவளுடைய கற்பனையினால் நடுக்கம் அதிகமாக அதனை உணர்ந்த சைத்தன்யா,

“மேகா ஈஸி ஈஸி ஒண்ணும் இல்லை. நீ இப்போ சேஃபா தான் இருக்க” இந்த மொழிந்து அவளது தோளை ஆதரவாக வருடி கொடுக்க,

லேசாக நடுக்கம் நின்றது. ஆனால் கண்ணீர் மட்டும் நிற்கவில்லை.

அவனுடைய அணைப்பு அளவில்லாத பாதுகாப்பை கொடுத்தாலும் சிறிது நேரத்திற்கு முன்பு உணர்ந்த பயத்தின் விளைவால் கண்ணீர் வழிந்தோடியது.

சில கணங்கள் பொறுத்தவன்,

“மேகா இங்க பாரு லுக் அட் மீ” என்று அழைக்க,

அவள் நிமிர்ந்து பார்க்கவில்லை.

“மேகா” என்று அழுத்தமாக அழைத்தவன் அவளது முகத்தை தன்னை நோக்கி பார்க்குமாறு செய்தான்.

மேகா அழுது சிவந்த முகத்துடன் நிமிர்ந்து அவனது முகத்தை காண,

“உனக்கு எதுவும் இல்லை. பயப்படாத நீ சேஃபா இருக்க. அழக்கூடாது” என்று அழுத்தம் திருத்தமாக கூறியதும்,

அவளது தலை தானாக அசைந்தது.

அதில் குழந்தையின் பாவனையை தான் கண்டான் சைத்தன்யா.

தலை அசைத்தவளுக்கு அப்போது தான் தான் இருக்கும் நிலை உறைக்க,

“சா… சாரி சாரி சீனியர்” என்று என்று பதறி விலகினாள்.

“இட்ஸ் ஓகே ஈஸி” என்று அவன் முடித்துவிட,

தலை சம்மதமாக அசைத்தவளுக்கு ஒருவித கூச்சமும் அசௌகரியமும் ஒட்டி கொண்டது.

இரண்டி தள்ளி நின்றும் அவருடைய வாசனை திரவியத்தின் வாசம் இவள் மேல் நிறைந்து வீசியது.

தனது பையில் இருந்து தண்ணீர் பொத்தலை எடுத்து சைத்தன்யா கொடுக்க, மறுக்காமல் வாங்கி கொண்டவளுக்கு அது அப்போதைய தேவையாக தான் இருந்தது.

தண்ணீர் உள்ளே இறங்கியதும் சற்று தெம்பாக இருந்தது.

நீரால் முகத்தையும் கழுவி கொண்டாள்.

“ஆர் யூ ஆல்ரைட் நவ்?” என்ற சைத்தன்யாவின் வினாவிற்கு,

“ஹ்ம்ம்…” என்று மட்டும் தலையசைப்பை பதிலாக கொடுத்தாள்.

பிறகு தனது அலைபேசியை எடுத்து காயத்ரிக்கு அழைத்தான்.

அது காட்டுப்பகுதி என்பதால் சிக்னல் அவ்வளவாக கிடைக்கவில்லை.

சைத்தன்யா சிக்னல் எங்கே கிடைக்கிறது என்று நகர்ந்து சென்று பார்க்க,

பட்டென்று அவன் பின்னால் வேக எட்டுக்களில் நடந்தாள்.

ஏற்கனவே காயத்ரியை விட்டுவிட்டு ஒரு முறை பட்டதே போதாதா? என்று உள்ளம் கூக்குரல் இட்டது.

சிறிது தூரம் நடந்து வந்ததும் சிக்னல் கிடைக்க அழைப்பை இணைத்து காயத்ரியிடம் பேசியவன் மேகாவை கண்டுவிட்டதை அவள் நன்றாக இருக்கிறாள் என்றும் கூறியவன் தாங்கள் எப்போதும் சூரிய உதயத்தை பார்க்கும் இடத்திற்கு வருமாறு கூறினான்.

மேலும் சில நொடிகள் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தவன் கண்டது தனக்கு வெகு அருகில் அப்பாவியாக நின்று கொண்டிருந்த மேகாவை தான்.

அங்கிருந்து பயத்தில் தன் பின்னோடே வந்துள்ளாள் என்று அறிந்ததும் புன்னகை முகிழ்ந்தது.

அவன் திரும்பியதை கண்டதும் சட்டென்று மறுபுறம் திரும்பி கொண்டாள்.

அவனது முகம் காணவே அவளுக்கு கூச்சமாக இருந்தது. காரணம் இத்தனை நேரம் அவனை இறுக்கமாக அணைத்து இருந்தது தான்.

மென்னகையுடன் நடந்து தனது பையை எடுத்து கொண்டவன்,

“வா போகலாம்” என்று நடக்க,

விறுவிறுவென அவனை பின்பற்றி அவனோடு நடந்தாள்.

முன்பு போல கால் வலி எதுவும் பெரிதாக தெரியவில்லை காரணம் உடனிருப்பவனா அல்லது நடந்த சம்பவமா என்று அவளுக்கு தெரியவில்லை.

அங்காங்கே நடந்து சென்ற ஆட்கள் கண்களுக்கு தென்பட்டனர். அது வார நாள் என்பதால் அத்தனை கூட்டமில்லை.

அவன் உயரமாக இருப்பதால் வேக எட்டுக்களில் நடக்க இவள் தான் அவனுடைய வேகத்திற்கு ஈடு கட்டி ஓட வேண்டி இருந்தது.

அதில் சிறிது மூச்சு வாங்கியது. இதுவே காயத்ரி என்றால் மெதுவாக நடந்து செல்லுங்கள் என்று கூறியிருப்பாள் இவனிடம் கூற இயலவில்லை.

சிறிது நேரத்தில் அவனே அவளுடைய நிலையை உணர்ந்தானோ என்னவோ நடையின் வேகத்தை குறைத்தான்.

இருவரும் சிறிது நேரத்தில் மலையின் உச்சியினை அடைந்தனர்.

உச்சியில் இருந்து பச்சை பசேலென நெடுந்தூரத்திற்கு இயற்கை அளித்த காட்சியில் ஒரு கணம் பேச்சிழந்து தான் போனாள்.

அதுவும் அங்காங்கே புகை மூட்டத்துடன் காட்சியளித்த இயற்கை அவ்வளவு அழகாக இருக்க இவள் மெய் மறந்து தான் நின்றுவிட்டாள்.

இவளது நிலையை கண்ட சைத்தன்யா தானும் இயற்கையை பார்க்க துவங்கினான்.

“இவ்ளோ அழகை பாக்க எவ்ளோ தூரம் வேணா நடந்து வரலாம்…” என்றவள் தன்னை மறந்து உச்சரித்துவிட,

“ஆமா அதான் இங்க அடிக்கடி வருவோம்” என்று சைத்தன்யாவும் மொழிந்தவன்,

“சன் ரைஸ் ஸ்டார்ட் ஆக போகுது பாரு இன்னும் அழகா இருக்கும்” என்றிட,

“ஹ்ம்ம்” என்று தலை அசைத்தவள் மெது மெதுவாக மேகக்கூட்டத்தில் இருந்து சூரியன் உதிக்க துவங்குவதை அதிசயமாக கண்டாள்.

தனக்கு வெகு அருகில் சூரியன் உதிப்பது போல பிரம்மை எழுந்தது அவளுக்கு.

வியப்பில் அவளது விழிகள் பெரிதாய் விரிந்திட,

“வாவ்…” என்று இதழ்கள் தாமாய் முணுமுணத்தது.

அதில் சைத்தன்யாவின் பார்வை அவள் மேல் படிந்து மீண்டது.

காயத்ரி அங்கு வந்து சேர்ந்ததும் கண்டது உதிக்கும் சூரியனை தான் வழக்கம் போல அதனை தனது அலைபேசியில் புகைப்படம் எடுக்க அதில் அருகருகே நின்றிருந்த இருவரது உருவமும் அழகாய் விழுந்தது.

அதனை கண்டவள்,

“சன் ரைஸ விட இவங்க ரெண்டு பேரும் அழகா தெரியிறாங்களே…” என்றபடி அருகில் வந்தாள்.

காயுவை கண்டுவிட்ட மேகா, “அக்கா” என்று ஓடி சென்று அணைத்து கொண்டாள்.

“என்ன மேகா பயந்துட்டியா?” என்று காயு கேட்க,

“லைட்டா” என்றவளது முகம் இன்னும் சிவந்து தான் இருந்தது.

“உன்னை அந்த இடத்தைவிட்டு எங்கேயும் போக வேணாம்னு தான சொன்னேன்” என்க,

“இல்லை கா ஏதோ சவுண்ட் கேட்டுச்சு அதான் எதாவது அனிமல் வந்து இருக்குமோன்னு பயந்து வேற இடத்துக்கு போய்ட்டேன்” என்றாள்.

“ஹேய் மேகா இங்க அனிமல்ஸ் எதுவும் இல்லை. அப்படி இருந்தா ஹியூமன்ஸ எப்படி அலவ் பண்ணுவாங்க?” என்று வினவிட,

“ஆமால்ல” என்று மேகாவும் சிந்தித்தாள்.

“ஆமா மட்டும் தான்” என்று சிரித்தாள் காயத்ரி.

“எனக்கு தோணவே இல்லை” என்று மொழிய,

“சரி விடு. அதான் சைத்து அழைச்சிட்டு வந்துட்டான்ல” என்றவள்,

“வா அப்படி உட்காரலாம்” என்று புல்தரையில் அமர, மேகாவும் அமர்ந்து கொண்டாள்.

சைத்தன்யா அருகில் இருந்த கல்லின் மீது அமர்ந்து கொண்டான்.

அங்கே இன்னும் சிலரும் கும்பலாக அமர்ந்து பேசி சிரித்து உண்டபடி இருந்தனர்.

காயு, “இங்க பார் மேகா நான் சன் ரைஸ பிக் எடுத்தேன் அதுல நீங்க ரெண்டு பேரும் அழகா விழுந்திருக்கிங்க” என்று அலைபேசியை காண்பிக்க,

அதனை வாங்கி பார்த்தவள் விழிகளை விரித்து பார்த்தாள்.

மேகா விழிகளை விரிக்கும் போது சைத்தன்யா அவளை திரும்பி பார்த்தவாறு இருவரது நிழலும் அழகாய் விழுந்திருந்தது.

“வாவ் அக்கா போட்டோ வேற லெவெல்” என்றவளது முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.

சைத்தன்யாவின் அருகில் தான் என்பதே உள்ளுக்குள் ஒருவித மகிழ்ச்சியை ஊற்றெடுக்க வைக்க,

“இதை நான் எனக்கு அனுப்பிக்கிறேன்” என்றவள் தன்னுடைய எண்ணிற்கு அனுப்பினாள்.

காயு சைத்தன்யாவிடமும் அதனை காண்பிக்க நன்றாக உள்ளது என்று முடித்துவிட்டான்.

பிறகு கொண்டு வந்திருந்த பிஸ்கட் மற்றும் இதர உணவு பொருட்களை உண்டுவிட்டு அவ்விடத்தை சுற்றி பார்த்துவிட்டு கிளம்பினர்.

வழக்கம் போல காயத்ரியும் மேகாவும் பேசி கொண்டு நடந்தனர்.

அடுத்து அருகில் இருந்த ஒரு கோவிலுக்கு சென்று சுற்றி பார்த்துவிட்டு இருப்பிடத்தை நோக்கி கிளம்பினர்.

மதிய உணவை வெளியே முடித்து கொண்டவர்கள் மெதுவாக மாலை நெருங்கும் வேளையில் டார்ஜிலிங்கின் மைய பகுதியினை நெருங்கினர்.

மேகா போகும் வழியில் தான் பணி புரியும் தேநீர் விடுதியில் இறக்கிவிடுமாறு கூறியிருக்க தேநீர் விடுதியை நோக்கி சென்றனர்.

விடுதி வாசலில் நின்றதும் மேகா இறங்கி கொள்ள கதவை திறந்த சமயம்,

காயத்ரி, “ஏன் மேகா இவ்ளோ தூரம் ட்ராவல் பண்ணிட்டு வந்து டயர்டா இல்லையா நீ அவசியம் போய் தான் ஆகணுமா?” என்று வினவ,

“இல்லைக்கா எனக்கு டயர்ட்லாம் எதுவும் இல்லை. இங்க வேலையும் பெருசா இருக்காது” என்று மறுத்தாள்.

“அவ்ளோ தூரம் நடந்து போய்ட்டு இங்க வந்து நிக்கி போறீயா?” என்று கேட்டவள்,

“என்ன சைத்து அமைதியா இருக்க? சொல்லு அவக்கிட்ட” என்றிட,

இத்தனை நேரம் வேடிக்கை பார்த்தவன்,

“ஒரு நாள் தான லீவ் போடு. மேனேஜர் தெரிஞ்சவர் தான் பேசவா…?” என்று அவளது முகம் கண்டான்.

அதில் ஒரு கணம் திணறியவள் பின்னர்,

“இல்லை ஆல்ரெடி இன்டர்நெல்ஸ்க்கு நிறைய லீவ் எடுத்துட்டேன்.‌ எனக்கு டையர்ட் எதுவும் இல்லை மேனேஜ் பண்ணிப்பேன்” என்றவள் மறுத்திட,

அதற்கு மேலும் வற்புறுத்த இயலாதவர்கள் சரியென்று விட்டு கிளம்பிட,

தலையசைத்து விடை கொடுத்தவள் தான் எதையோ பறிகொடுத்தது போல நின்றுவிட்டாள்.

காரணம் இத்தனை நேரம் இருந்த இதம் மொத்தமாய் தொலைந்து போயிருந்தது.

தொலைந்ததா இல்லை மகிழுந்தை இயக்கி சென்றவன் எடுத்து சென்றுவிட்டானா? என்பது அவளுக்கு மட்டும் தான் தெரியும்.

ஏனோ விழிகள் கலங்கிட சடுதியில் இமை சிமிட்டி உள்ளிழுத்தவள் அவர்களது வாகனம் மறையும் வரை அப்படியே நின்றுவிட்டாள்.

*************

“மேகா உன்னை ரேகா மேம் கூப்பிட்றாங்க” என்ற மேக்னாவின் குரலில் தன்னுடைய கணினியில் இருந்து பார்வையை அகற்றியவள்,

“ஹ்ம்ம் போறேன்” என்று பதில் மொழிந்தாள்.

காவ்யா, “வரும் போது எனக்கு ஒரு காஃபி எடுத்திட்டு வாடி” என்று திரும்பி கூற,

அதற்கும், “ஹ்ம்ம்” என்று பதிலையே கொடுத்தவள் எழுந்து ரேகாவின் அறையை நோக்கி சென்றாள்.

ரேகா இவர்களது ப்ராஜெக்ட் மேனேஜர். டீம் லீடருக்கு அடுத்த பதவியில் இருப்பவர்.

மேகா மற்றும் அவளது குழு உறுப்பினர்கள் அனைவரும் ரேகாவின் நேரடி கட்டுப்பாட்டில் தான் வருவார்கள் அதன் பிறகு தான் குழு தலைவரிடம் வருவார்கள்.

“எக்ஸ் க்யூஸ் மீ” என்று அனுமதி கேட்டு மேகா உள்ளே நுழைய,

“வா மேகா. நான் நேத்து ஒரு பைல் அனுப்பி எர்ரர் செக் பண்ண சொன்னேனே கம்ப்ளீட் பண்ணியாச்சா?”என்று வினா எழுப்பினார்.

“இன்னும் முடிக்கலை மேம். ஈவ்னிங் கொடுத்துட்றேன்”

“ஈவ்னிங்கா? ஆஃப்நூன்குள்ள கொடுக்க சொன்னேனே?”

“எஸ் மேம் பட் என்னோட சிஸ்டம் கொஞ்சம் ஸ்டக் ஆகுது”

“டிக்கெட் ரைஸ் பண்ண வேண்டியது தான?”

“மெயில் பண்ணிட்டேன் மேம். பட் இன்னும் ரெஸ்பான்ஸ் வரலை”

“ஓ… மெயின்டனென்ஸ் டீம் ஹெட் யாரு? கோபால் தான” என்றவர் தனது அலைபேசியை எடுத்து,

“ஹலோ கோபால் நான் ரேகா பேசுறேன்” என்று இரண்டு நிமிடங்கள் பேசினார்.

மேகா அமைதியாக அமர்ந்து இருந்தாள்.‌ கடந்த ஒரு வாரமாக மேகா இப்படித்தான் அமைதியாக இருக்கிறாள்.

சரியாக சொன்னால் சைத்தன்யாவை கண்ட பிறகு தான். வீட்டில் அன்று அழுது தீர்த்தவளுக்கு கண்ணீர் மொத்தமாய் வற்றி போயிருந்தது.

அதன் பிறகு ஒருவாறாக தேறி கொண்டாள். நேசம் ஒரு புறம் மட்டும் வந்தால் அது நிச்சயம் கருகி காணாமல் தான் போகும். இத்தனை நாட்கள் அவனை நினைத்திருந்தே தவறு. அதுவும் இப்பொழுது திருமணம் முடிந்துவிட்டது என்று அறிந்த பிறகு அவனை நினைப்பது மிகப்பெரிய பாவம்.

ஏன் காயத்ரி அக்காவிற்கு துரோகம் கூட என்று தன்னைத்தானே ஏதோ ஒரு வகையில் தேற்றி கொண்டாள்.

மறுநாள் அலுவலகம் வரும் சமயம் அவன் தனக்கு முதலாளி தான் தொழிலாளி அவ்வளவு தான் என்று மனதிற்குள் ஆயிரம் முறை பதிவு செய்து கொண்டாள்.

இருந்தும் அவனை அடிக்கடி பார்க்க நேருமோ தன் மனம் காயப்படுமோ என்று அவ்வளவு தூரம் அஞ்சியது.

ஆனால் மேகா பயந்தது போல ஏதும் நடக்கவில்லை. அடுத்த நாளிலிருந்து சைத்தன்யா அலுவலகமே வரவில்லை.

அதுவுமின்றி நேரடியாக அவனை பார்க்கும் வேலை ஏதும் அவளுக்கு வராது என்று அவளுக்கே தெரியும்.

இது போன்ற மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனங்களில் தொழிலாளர்கள் அவர்களுக்கு மேல் இருப்பவரின் கட்டுபாட்டில் தான் வருவார்கள் என்பதால் முதலாளி என்ற ஒருவனை சந்திக்கும் வாய்ப்பு என்பது வெகு அரிது.

அதே போல தான் இங்கும் அவன் எப்போது வருகிறான் எப்போது செல்கிறான் என்று யாருக்கும் தெரியாது.

ஆனால் அவளுக்கு ஒன்று தான் புரியவில்லை ஏன் அவன் தன்னை தெரிந்தது போல காண்பித்து கொள்ளவில்லை என்று.

ஒருவேளை இத்தனை வருட இடைவெளியில் தன்னை மறந்திருப்பானோ…? என்று சிந்தை வர,

‘சே சே இருக்காது. அதெப்படி மறக்க முடியும். வாய்ப்பில்லை’ என்று தனக்கு தானே பதிலும் அளித்தாள்.

பின்னர் ஏன் தன்னை தெரிந்தது போல காண்பிக்கவில்லை ஒருவேளை முதலாளியான அவர் தன்னை தெரிந்த பெண் என்று அறிமுகப்படுத்துவதை விரும்பவில்லையோ?

இருக்குமோ? இல்லை தெரிந்தது போல காண்பித்து கொண்டால் தான் ஏதாவது சலுகை எதிர்ப்பார்ப்பேன் என்று எண்ணுகிறாரோ? இருக்கலாம் வாய்ப்புள்ளது.

என்னவாகும் இருந்தால் என்ன? அவரே தெரிந்தது போல காண்பிக்க விரும்பாத போது தான் ஏன் வலிய சென்று பேச வேண்டும் என்று அமைதியாக இருந்துவிட்டாள்.

“நான் கோபால் கிட்ட பேசிட்டேன் அவர் இப்பவே வந்து உன் சிஸ்டமை சரி பண்ணி கொடுப்பார். சீக்கிரம் எனக்கு இந்த வொர்க்க கம்ப்ளீட் பண்ணி கொடு” என்ற ரேகாவின் குரலில் சிந்தை கலைந்தவள்,

“ஓகே மேம்” என்று எழுந்து கொண்டாள்.

“ஒன் மினிட் மேகா. ஒரு சின்ன ஹெல்ப்” என்றிட,

“சொல்லுங்க மேம்” என்று மறமொழிந்தாள்.

“இந்த பைலை சைத்தன்யா சார்க்கிட்ட சைன் வாங்கிட்டு வந்து தர்றீயா? எனக்கு கொஞ்சம் வொர்க் இருக்கு” என்றிட,

‘நானா?’ என்று மனதிற்குள் அலறியவள்,

“சரிங்க மேம்” என்று தலையசைத்து வைத்தாள்.

கூடவே, ‘அவன் இன்று அலுவலகத்திற்கு வந்துள்ளானா?’ என்று வினாவும் எழுந்தது.

‘வராது எப்படி இவர் கையெழுத்து வாங்கி வர கூறுவார்?’ என்றும் எண்ணம் பிறந்தது.

‘வேறு யாராவது அனுப்புவோமா?’ என்று சிந்தை வர,

‘எத்தனை நாளைக்கு அப்படி அனுப்ப இயலும்? என்றாவது ஒரு நாள் இதனை சந்தித்து தானே ஆக வேண்டும்’ என்றும் எண்ணம் ஜனிக்க அவனது அறையை நோக்கி சென்று அனுமதிக்காக கதவை தட்டிவிட்டு காத்திருந்தாள்.

சில வினாடிகளுக்கு பிறகு,

“யெஸ் கம் இன்” என்றவனது அழுத்தமான குரல் செவியில் மோத,

உள்ளே நுழைந்தவள், “சார் ரேகா மேம்” என்று கூறுகையிலே சைத்தன்யாவின் கையசைவை பார்த்து நிறுத்திவிட்டாள்.

‘உட்கார்’ என்பது போல கையை காண்பிக்க அவனெதிரே அமர்ந்து கொண்டாள்.

சைத்தன்யாவோ எதிரில் இருந்த அலைபேசியி திரையினை பார்த்தவாறு மெல்லிய சிரிப்புடன் பேசி கொண்டு இருந்தான்.

எத்தனை வருடங்களுக்கு பிறகை அவனது சிரிப்பை காண்கிறாள்.

விழிகள் தன்னை மீறி ஒரு கணம் படிந்தது. இத்தனை வருடங்களுக்கு பிறகும் அப்படியே தான் இருந்தான்.

முன்பை விட முகத்தில் சிறிது முதிர்ச்சி வந்திருக்க அது இன்னும் அவனை அழகாக காண்பித்தது.

கருநீல நிற சட்டையையும் சந்தன நிறத்தில் பேன்ட்டும் அணிந்திருந்தவனது இடது கையில் ஒரு கைக்கடிகாரம் இருந்தது.

இரண்டு கையையும் மேஜை மேல வைத்தவாறு நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டு மென்னகையுடன் பேசி கொண்டு இருந்தான்.

அலைபேசியின் மறுமுனையில் கேட்ட,

“சைத்துப்பா…” என்று மழலையின் குரலில் நினைவிற்கு வந்தவள் தான் செய்து கொண்டிருக்கும் காரியத்தை நினைத்து தன்னையே கடிந்து கொண்டாள்.

“சைத்துப்பா அம்மா அடிச்சிட்டா என்னை?” என்ற மழலையின் குரல் இவளது அடிவயிற்றில் ஒருவித பிரளயத்தை உண்டு பண்ணியது.

‘அப்பா என்று அழைக்கிறதே? அவருடைய குழந்தையா? எப்படி இருக்கும் இவரை போல அழகாக இருக்குமா? குரலே இவ்வளவு இனிமையாக இருக்கிறதே குழந்தை எவ்வளவு அழகாக இருக்கும். அதுவும் சைத்தன்யாவின் குழந்தை. அவரை போல இருக்குமா? காயு அக்காவை போல இருக்குமா?’ என்று வித எண்ண அலைகள் அவளுக்குள் உழன்றது.

“அப்பா நீங்களே அம்மாவ திட்டுங்க. நாங்க சொன்னா பாட்டி கேக்கவே மாட்றா” என்று புகார் வர,

“ஆமாப்பா கேளுங்க அம்மாவ” என்று மற்றொரு குரல் கேட்டது.

கவி கூறியது சரிதான் இரண்டு குழந்தைகள் தான் போலும் என்று தோன்றியது.

சில பல நொடிகள் கடந்ததும்,

“என்ன‌ உன்கிட்டயும் கம்பிளைண்ட் வாசிச்சுட்டாங்களா?” என்ற குரலே அவளுக்கு காயத்ரியை உணர்த்தியது.

மனது சப்தமின்றி, ‘காயு அக்கா’ என்று முணுமுணு
த்தது.

“ஆமா” என்று மொழிந்து சைத்தன்யா பேச துவங்க இவளுக்கு அங்கிருப்பது அசௌகரியமாக இருந்தது.

கணவன் மனைவி பேசும் போது தான் எதற்கு இங்கே அமர்ந்திருக்கிறோம் பேசாமல் பிறகு வருவதாக கூறி எழுந்து சென்றிடலாமா? என்று நினைத்து அவனை பார்த்து திரும்பிய கணம்,

“உனக்கு ஒரு சர்ப்ரைஸ்” என்றவன் சடுதியில் இவள்புறம் அலைபேசியை திருப்பி இருந்தான்…



 
Active member
Messages
346
Reaction score
233
Points
43
Chaidhu ne surprise nu kudukira ava athu ku shock aagama irundha seri yen na indha payapulla avan ah parthu mayangama irundhuthathae athisayam than
 
Well-known member
Messages
859
Reaction score
630
Points
93
Yaaroda Kuttiesa irukkum


Cuten 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
 
Top