• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

மேகம் 6

Administrator
Staff member
Messages
464
Reaction score
794
Points
93
மேகம் 6:


இந்த பொல்லாத காதல்

என்ன செய்யும்?
தான் எனும் எண்ணத்தை
தகர்த்து
தவிடுபொடியாக்கி
தன்னிலை மறந்து

கெஞ்ச செய்யும்.

மேகா எழுந்திரு” என்ற காயத்ரியின் குரலுக்கு,


“ப்ச்” என்ற சிணுங்கலை கொடுத்த மேகா திரும்பி படுத்தாள்.

“மேகா இட்ஸ் கெட்டிங் லேட்” என்று காயத்ரி மொழிய,

“ம்மா கொஞ்சம் நேரம் தூங்கிக்கிறேனே ப்ளீஸ்” என்று குளிருக்கு இதமாய் போர்வையை கழுத்து வரை இழுத்து கொண்டாள்.

“மேகா டியர் இது உங்க வீடு இல்லை. நீ இப்போ டார்ஜிலிங்ல இருக்க” என்று காயத்ரி சிரிப்புடன் கூற,

செவிகளில் விழுந்த வார்த்தைகளின் விளைவால் பட்டென்று போர்வையை விளக்கி விழிகளை திறந்தாள்.

“ப்பா ஒரு வழியா எழுந்தாச்சா? போய் சீக்கிரம் குளிச்சி ரெடியாகிட்டு வா” என்று மொழிந்தாள்.

மேகாவிற்கு அப்போது தான் தான் காயத்ரியின் வீட்டிற்கு நேற்று இரவு வந்தது நினைவிற்கு வந்தது.

“ஹான் இதோ போறேன் கா” என்றவள் எழுந்து போர்த்தியிருந்த போர்வையை எடுத்து மடித்து வைத்தாள்.

“பரவாயில்லையே இந்த பழக்கம் எல்லாம் இருக்கே” என்க,

“அது அம்மா டீச்சர்ன்றதால ரொம்ப ஸ்ட்ரிக்ட். எல்லா வொர்க்கையும் நான் சரியா செய்யணும்னு எக்ஸ்பெக்ட் பண்ணுவாங்க” என்றபடி மடித்து வைத்தாள்.

“ஓ… ஒகே” என்றவள்,

“போய் குளி” என்றாள்.

“ஹ்ம்ம்” என்று தலையசைத்தவள் கடிகாரத்தில் நேரத்தை பார்க்க அதிகாலை மூன்று என்று காண்பித்தது.

‘என்னது மூனு மணியா? பப்ளிக் எக்ஸாம்க்கு கூட நான் இந்த டைம்க்கு எழுந்ததில்லையேடா’ என்று மனதிற்குள் அலறினாள்.

“என்ன மேகா டைம் பாத்திட்டு இப்படி ஷாக் ஆகுற? இதுக்கு முன்னாடி இந்த டைம்க்கு எழுந்ததே இல்லையா?” என்று மேகாவின் முக பாவனைகளை கண்டவள் வினவ,

“ஹான் அதெல்லாம் இல்லைக்கா” என்றவள் அப்போது தான் காயத்ரியின் உடையை கவனித்தாள்.

அவள் குளித்து முடித்து ஜீன்ஸ் டாப் சகிதம் தயாராக இருந்தாள்.

‘மூனு மணிக்கே குளித்து தயாராகி இருக்கிறாளே இவள் எத்தனை மணிக்கு எழுந்திருப்பாள்? இரவு தூங்கினாளா? இல்லையா? தன்னுடன் தானே வந்து படுத்தாள்’ என்று பலவாறாக சிந்தித்தபடி நின்றுவிட்டாள்.

“மேகா உன்னைத்தான் கூப்பிட்றேன்” என்று காயத்ரி உலுக்கியதும் சுயநினைவை அடைந்தவள்,

“ஆங்‌…” என்று விழித்தாள்.

“என்ன திங்கிங்?” என்று காயு கேட்டதும்,

“அது ரொம்ப கூலிங்கா இருக்கு கண்டிப்பா குளிக்கணுமா?” என்று வினவிட,

பட்டென்று சிரித்துவிட்டவள்,

“ஹேய் குளிக்காம எப்படி வருவ? ஹைஜீனிக் ரொம்ப இம்பார்ட்டன்ட்” என்றாள்.

“அக்கா ப்ளீஸ் இந்த குளிர்ல தண்ணீயை மேல ஊத்துனா நான் ப்ரீஸ் ஆகிடுவேன்” என்று பாவமாக முகத்தை வைத்து கொண்டாள்.

“ஹீட்டர் ஆன் பண்ணி தான் வச்சு இருக்கேன் போ போய் குளி” என்று அவளை குளிக்க அனுப்பி வைத்தாள் காயத்ரி.

அவர்கள் முதல் முறையாக சந்தித்து இரண்டு மாதங்கள் கடந்திருந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் இருவரும் நன்றாகவே நெருங்கி இருந்தனர்.

முதலில் தயங்கி தயங்கி பேசிய மேகா கூட காயத்ரியின் இலகு தன்மையில் நன்றாக பேச துவங்கி இருந்தாள்.

ஆனால் இவை யாவும் சைத்தன்யா இல்லாத நேரம் மட்டும் தான். அவன் இருக்கும் நேரம் எப்போதுமே அமைதி தான்.

காயத்ரி கூட அவனை கண்டு பயப்படாதே நன்றாக பேசு என்று பலமுறை கூறிவிட்டாள் ஆனால் மேகாவின் அச்சம் தான் குறையவில்லை.

காயத்ரியும் சரி தானாக குறையட்டும் என்று விட்டுவிட்டாள். அரசு விடுமுறை மூன்று நாட்கள் வந்திருக்க திவ்யாவும் சரண்யாவும் ஊருக்கு கிளம்பி இருந்தனர்.

மேகாவிற்கு பகுதி நேர வேலையின் காரணமாக வீட்டிற்கு செல்ல இயலவில்லை. மூன்று நாட்கள் எப்படி தொடர்ந்து விடுமுறை எடுக்க இயலும் பிறகு பரீட்சையின் போது விடுமுறை கிடைக்காதே என்று எண்ணி விடுதியிலே இருந்துவிட்டாள்.

மேகாவோடு சேர்த்து ஓரு சிலர் மட்டுமே விடுதியில் இருந்தனர்.

இதனை அறிந்த காயத்ரி அவளை வற்புறுத்தி தங்களுடைய வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டாள்.

சைத்தன்யாவும் காயத்ரியும் ஒரு வீட்டில் தான் தங்கி இருந்தனர். அதனை வீடு என்று கூறுவதை விட சிறிய பங்களா என கூறினாள் மிகச் சரியாக இருக்கும் என்று தான் மேகாவிற்கு அதனை முதன் முறை பார்த்த போது தோன்றியது.

அந்த பங்களாவில் இவர்களுக்கு பணிபுரியவே ஒரு குடும்பத்தினர் அமர்த்தபட்டிருந்தனர்.

இருவருக்கும் விடுதி வாசம் ஆகாது என்பதால் அவர்களுடைய தந்தை இந்த வீட்டை வாங்கிவிட்டதாக காயத்ரி கூறிய போது மேகாவிற்கு சிறிதான பிரம்மிப்பு எழுந்து என்னவோ உண்மை தான்.

மூன்று நாட்கள் ஏதும் செய்யாமல் இருப்பதற்கு டார்ஜிலிங்கை சுற்றி பார்க்கலாம் என்று காயத்ரி முடிவு செய்திருந்தாள்.

நான் எதற்கு நீங்கள் இருவரும் போய் வாருங்கள் என்று மறுத்த மேகாவை காயத்ரி தான் பேசி சம்மதிக்க வைத்திருந்தாள்.

பத்து நிமிடத்தில் மேகா குளித்து வர அடுத்த சில நிமிடங்களில் இருவரும் ஜெர்க்கினை மாட்டி கொண்டு வெளியே வந்தாள்.

மேகாவிற்கு ஜீன்ஸ் அணியும் பழக்கம் இல்லாததால் சுடிதார் ஒன்றை அணிந்து அதன் மேல் குளிர் தாங்கும் வகையில் ஜெர்கினை அணிந்திருந்தாள்.

இருவரும் வர அங்கு சைத்தன்யா தயாராகி அமர்ந்து இருந்தான்.

இவர்களை கண்டதும் தனது கைக்கடிகாரத்தில் நேரத்தை பார்க்க,

“நான் ரெடி ஆகிட்டேன் பா. உன் ஜூனியர் தான் குளிருது குளிக்க மாட்டேன்னு தர்னா பண்ணி லேட்டாக்கிட்டா” என்று சிரிப்புடன் மொழிய,

இதனை எதிர்பாராத மேகா திகைத்து பின் லேசாக சிவந்து விட்ட முகத்தை மறைக்க போராடியவாறே,

“அக்கா” என்று சிணுங்கினாள்.

அவளது சிறுபிள்ளை தனமான செய்கையில் சைத்தன்யாவிற்கே இதழ் கடையோரம் சிரிப்பில் மின்னியது.

அதனை வழக்கம் போல மறைத்தவன்,

“போகலாம்” என்று எழுந்து கொண்டான்.

மூவரும் வெளிய வர ஜெர்கினை தாண்டி மேகாவிற்கு உள்ளுக்குள் குளிர் ஊடுருவியது.


இந்த குளிர்ல எப்படி போக போறோமோ?’ என்று கவலை பிறந்தது.


வெளியே சென்று சுற்றி பார்க்க அவளுக்கு மிகவும் பிடிக்கும் தான் ஆனால் இந்த அதிகாலை எழுவது தான் மிகப்பெரிய பிரச்சனையே.

இவர்கள் வெளியே வந்ததும் அங்கு பணிபுரியும் குடும்பத்தின் தலைவர் கலையரசுவும் வந்துவிட்டார்.

“ஐயா கிளம்பிட்டிங்களா?” என்றபடி அவர் வர,

“உங்களை எழுந்து வர வேணாம்னு தானே சொன்னேன்” என்று சைத்தன்யா கடிந்து கொண்டது சற்று தள்ளியிருந்த மேகாவிற்கு நன்றாக கேட்டது.

“இதுல என்னங்கய்யா இருக்கு” என்றபடி அவன் கொடுத்த சாவியை வாங்கி கொண்டவர்,

“காலையிலைக்கு சமைச்சு வச்சிடட்டுங்களாய்யா?” என்று வினவினார்.

“இல்லை நாங்க வர டைம் ஆகும் வெளியே பாத்துக்கிறோம்” என்றுவிட்டான்.

பின்னர் சைத்தன்யா சென்று மகிழுந்தை இயக்க காயத்ரியுடன் சேர்ந்து பின் இருக்கையில் ஏறி கொண்டாள் மேகா.

கதவை திறந்து அவர்கள் கிளம்பியதும் தான் கலையரசு உள்ளே சென்றார்.

நேற்று வந்த போதே காயத்ரி கலையரசு அவரது மனைவி நிர்மலா மகள் கனிமொழியை அறிமுகம் செய்து வைத்தாள்.

இவர்கள் தங்களுடைய சிறு வயதில் இருந்தே தங்களது வீட்டில் பணிபுரிபவர்கள் என்றும் இப்போது இங்கு தங்களுக்கு சமையல் மற்றும் இதர வேலைக்காக பெற்றோர் அனுப்பி வைத்திருப்பதாக காயத்ரி கூறி இருந்தாள்.

அதிகாலை மூன்றரை மணிக்கே உரித்தான பணி மூட்டும் அங்காங்கே பஞ்சு பொதிகை போல காணப்பட அந்த இருட்டினை கிழித்து கொண்டு சென்றது சைத்தன்யாவின் வாகனம்.

மேனியை தழுவி செல்லும் கூதக்காற்றினால் கைகளை கட்டி கொண்டபடி சாரளத்தின் வழியே வேடிக்கை பார்த்தபடி வந்தவளுக்கு இது ஒரு புதுவித அனுபவமாக
இருந்தது‌.

“எப்படி இருக்கு ட்ராவல்?” என்று காயத்ரி வினவிட,

“ஹ்ம்ம் நல்லாயிருக்கு கா” என்று மெலிதாக புன்னகைத்தாள்.

சைத்தன்யா இருந்தாலே
இவளது குரல் இப்படித்தான் மிகவும் சிறியதாக ஒலிக்கும்.

“கேட்கலை என்ன சொன்ன?” என்று சிரிப்புடன் காயு வம்பிழுக்க,

“அக்கா…” என்று லேசாக சிணுங்கினாள்.

“என்ன என்ன மேகா சாங்க்ஸ் வேணுமா உனக்கு?” என்றவள்,

“சைத்து எதாவது சாங்க்ஸ் போட்டுவிடு” என்க,

“அது நான் கேட்கலை” என்று லேசாக பதறினாள்.

“நீ தான மேகா கேட்ட” என்று காயு சிரிப்பை விழுங்கி மொழிய,

“நான் எப்போ கேட்டேன்?” என்று பாவமாக விழித்தாள்‌.

நடந்த சம்பாஷனைகளை கேட்டபடி வந்த சைத்தன்யா பாடலை ஒலிக்கவிட்டான்.

மேகாவிற்கு பாடல் கேட்க தோன்றியது உண்மைதான். அவளுக்கு தான் பயணம் என்றாலே பாடல் கேட்பது அத்தனை விருப்பம் ஆகிற்றே அதனால் பாடலை கேட்க ஆர்வமாக இருந்தாள்.

ஆனால் சைத்தன்யா ஒலிக்க விட்ட பாடலில் அவள் முகம் சட்டென்று வாடிவிட்டது.

காரணம் அவன் ஒலிக்கவிட்டது ஒரு ஆங்கில பாடல்.

மேகாவிற்கு அந்த பாடலில் தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை‌.

அவள் முகத்தை கண்ட காயு,

“என்ன மேகா சாங் பிடிக்கலையா?” என்க,

“ம்ஹூம்” என்று தலையசைத்தாள்.

ஆனால் காயு,

“சைத்து சாங்க சேஞ்ச் பண்ணு” என்றிட்டாள்.

சைத்தன்யா பாடலை மாற்றினான்.

இம்முறையாவது தமிழ் பாடல் இசைக்குமா? என்று எதிர்பார்க்க பலன் பூஜ்ஜியம் தான்.

காயு, “இந்த சாங் நல்லா இருக்கும் எனக்கும் சைத்துவுக்கும் ரொம்ப பிடிச்ச சாங். நாங்க அடிக்கடி கேட்போம்” என்றிட,

“ஓ…” என்று தலை அசைத்தவள் சைத்தன்யாவுக்கு பிடிக்கும் என்பதால் அந்த பாடலை அவதானிக்க முயன்றாள்.

ஆனால் இம்முறையும் அவளுக்கு எதுவுமே புரியவில்லை.‌ அவளுக்கு ஆங்கிலம் தெரியும் தான் ஆனால் இந்த ஆங்கிலத்தை அவளால் புரிந்து கொள்ள இயலவில்லை.

இருந்தும் கவனிக்க முயற்சி செய்தபடி இருந்தாள்.

காயு, “என்ன நல்லா இருக்குதான?” என்க,

“ஹ்ம்ம் நல்லாயிருக்கு” என்று தவையசைத்து வைத்தாள்.

அதன் பிறகு அடுத்தடுத்து பாடல் ஒலிக்க இவளுக்கு உறக்கம் வரும் போல இருந்தது.

மிகவும் முயன்று கொட்டாவியை அடக்கினாள். அதனை கண்டுவிட்ட காயு,

“என்ன மேகா தூக்கம் வருதா?” என்று வினவிட,

தலையை நான்கு புறமும் அசைத்து வைத்தாள்.


“தூக்கம் வருதா வரலையா?” என்று காயு புரியாது வினவ,

“அது எனக்கு இந்த சாங்க்ஸ் எதுவும் புரியலைகா” என்று பாவமாக விழித்தாள்.

“என்ன?” என்று காயத்ரிக்கு திகைப்பு.

சைத்தன்யாவின் பார்வை கூட மேகா மீது படிந்து மீண்டது‌.

“அப்போ நல்லாயிருக்குனு சொன்ன?”

“அது நீங்க கேட்டதால சொன்னேன்” என்றவளை கண்டு காயத்ரிக்கு சிரிப்பு தான் வந்தது.

“அதை முதல்லயே சொல்லிருக்கலாமே. இவ்ளோ சாங்கயும் புரியாம கேட்டுட்டு வந்திருக்க” என்று திகைப்பும் சிரிப்புமாக மொழிந்தவள்,

“எங்ககிட்ட தமிழ் சாங்க்ஸ் இல்லையே?” என்றாள்.

உடனே மேகா, “என்கிட்ட இருக்கு ப்ளே லிஸ்ட் வச்சிருக்கேன்” என்று ஆர்வமாய் கூறிவிட,

அதிலே அவளுக்கு இசையின் மீதிருந்த விருப்பம் மற்ற இருவருக்கும் புரிந்தது.

சடுதியில் சைத்தன்யாவின் கை இவள் புறம் நீள, மேகா விழித்தாள்.

“மொபைல் கொடு அவன் உன்னோட ப்ளே லிஸ்ட்ட போட்டுவிடுவான்” என்று காயு கூற,

தனது அலைபேசியினை எடுத்து கொடுத்தாள்.

அடுத்த கணம், “பாஸ்வேர்டு” என்று அழுத்தமான குரல் செவியில் மோத,

“மொழி 1604” என்றாள்.

“அதென்ன 1604?” என காயு கேட்க,

“என் பர்த்டே கா”

“ஹே உனக்கும் ஏப்ரலா? சைத்துவுக்கும் ஏப்ரல் தான்” என்றதும்,

“ஓ…” என்று கேட்டு கொண்டவளுக்கு என்ன தேதி என்று அறிய மனது துறுதுறுத்தது. முயன்று கட்டுப்படுத்தினாள்.

பின்னர் மேகாவின் அலைபேசியில் இருந்து பிரதீப் குமாரின் குரலில்

காதல் கனவே தள்ளிப்

போகாதே போகாதே… என்ற இசை இசைக்க துவங்கியது.

மேகா வழக்கம் போல தன்னிலை மறந்து இசையில் மூழ்கி போனாள்.


பிறகு நேரம் சென்றதே தெரியவில்லை. வழியில் ஒரு சிறிய கடையில் தேநீரை அருந்திவிட்டு ஒரு மணி நேரத்தில் டைகர் மலையை அடைந்தனர்.

அவர்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்க அங்கு ஏற்கனவே சிலர் மலை ஏற துவங்கி இருந்தனர்.

அதனை வியப்புடன் கவனித்த மேகா, ‘நாம தான் சீக்கிரம்னு நினைச்சா நமக்கு முன்னாடி இவ்ளோ பேர் இருக்காங்க’ என்று எண்ணி கொண்டாள்.

அவளது எண்ணவோட்டத்தை அறிந்த காயத்ரி,

“இந்த டைம்க்கு மலை ஏற ஸ்டார்ட் பண்ணாதான் நாம சன் ரைஸ் பாக்க முடியும்” என்று கூற,

“ஓ ஓகே கா” என்று தலையசைத்தாள்.

பின்னர் மூவரும் சேர்ந்து மலை ஏற துவங்கினர்.

சைத்தன்யா மட்டும் ஒரு பையில் அத்தியாவசியமான பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டான்.

மேகா முதல் முறையாக வருவதால் அவ்விடத்தை சுற்றி ஆர்வமாக பார்த்தபடி வர,

காயு, “இந்த ப்ளேஸ்க்கு நாங்க இதோட ட்வென்ட்டி டைம்ஸ் வந்துட்டோம்” என்று மொழிய,

“அவ்வளவா?” என்று வியந்தாள்.

“ஆமா ஃப்ரி டைம் கிடைச்சாலே வந்திடுவோம்” என்று மொழிய இருவரும் பேசியபடி நடந்தனர். சைத்தன்யா முன்னாடி நடந்து கொண்டு இருந்தான்.

ஏற ஏற மலை சென்று கொண்டே இருந்தது.

மேகாவிற்கு கால் வலிக்க துவங்கியது. ஆனால் முகத்தில் காண்பிக்காது நடந்தாள்.

ஒரு கட்டத்திற்கு மேல் நடக்க இயலவில்லை. அவளை கண்டுவிட்ட காயு,

“என்ன நடக்க முடியலையா?” என்க,

“லைட்டா கால் வலிக்கிது கா” என்று முகத்தை சுருக்கினாள்.

“பாதி தூரம் தான் வந்து இருக்கோம். கொஞ்சம் நேரம் உட்கார்ந்துக்கிறியா? அப்புறம் போகலாம்” என்க,

“ஹ்ம்ம் சரிக்கா” என்றவள் அருகில் பாறை மேல் அமர்ந்துவிட்டாள்.

இவர்களை கண்டு சைத்தன்யாவும் நின்றுவிட்டான்.

சில நிமிடங்களில்,

“க்கா போகலாம்” என்று எழுந்து கொண்டாள்.

காயு, “ஆர் யூ ஓகே” என்று மொழிய,

“ஹ்ம்ம் ஓகே தான் கா” என்று நடந்தாள்.

மேகா மெதுவாக நடந்து வர சைத்தன்யா சற்று தொலைவில் சென்று இருந்தான்.

மேகா, “அக்கா தாகமா இருக்கு” என்க,

“எனக்கு தாகமாக தான் இருக்கு. நீ இங்கயே வெயிட் பண்ணு. அவன் தூரமா நடந்து போய்ட்ட மாதிரி இருக்கு நான் போய் தண்ணீ வாங்கிட்டு வர்றேன். குடிச்சிட்டு போகலாம்” என்றாள்.

“இல்லை நானும் உங்க கூடவே வர்றேன் கா” என்று மேகா மறுக்க,

“நீ பாக்கவே டையர்டா இருக்க. கொஞ்சம் உட்கார்ந்து ரெஸ்ட் எடு வர்றேன்” என்று அமர வைத்தவள் சைத்தன்யா சென்ற திசையை நோக்கி சென்றாள்.

சிறிது நேரம் அமர்ந்தால் தேவலாம் என்று எண்ணி மேகாவும் ஓய்வாக அமர்ந்தாள்.

காயு சென்று ஐந்து நிமிடங்கள் ஆகியும் திரும்பி வராது இருக்க,

‘என்ன இவங்களை இன்னும் காணோம்?’ என்று எண்ணி எட்டி பார்க்க முயன்ற சமயம் பின்னிருந்து ஏதோ சத்தம் கேட்க பட்டென்று எழுந்துவிட்டாள்.

பின்னே திரும்பி பார்க்கவும் பயமாக இருக்க ஒரு வேகத்தில் அந்த திசைக்கு எதிர் திசைக்கு நடந்து வந்துவிட்டாள்.

மனநிறைவு எதாவது மிருகமாக இருந்தால் என்ன செய்வது அது தன்னை எதாவது செய்துவிட்டால் என்று ஏதேதோ எண்ணம் அலைக்கழிக்க வேகமாக நடந்து சிறிது தூரம் வந்துவிட்டவளுக்கு அப்போது தான் ஆசுவாசமாக இருந்தது.

ஆனால் அடுத்த கணமே தான் செய்து வைத்தது சட்டென்று உறைக்க நெஞ்சில் கைவைத்துவிட்டாள்.

காரணம் தான் பயத்தில் அங்கிருந்து ஓடி வந்துவிட்டோம் ஆனால் இப்போது எங்கு இருக்கிறோம் என்று தெரியவில்லையே.

சுற்றும் முற்றும் விழிகளை அலைபாயவிட்டாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆள் நடமாட்டம் தெரியவில்லை.

வந்த பாதையை தேடினால் எல்லா திசையும் ஓரே போல இருந்தது.

சிறிது சிறிதாக அச்சம் பரவ துவங்கியது. எங்கு செல்வது எந்த திசையில் செல்வது என்று தெரியவில்லை.

இங்கு தண்ணீர் கொண்டு வந்த காயு மேகாவை காணாது பதறி சைத்தன்யாவை அழைத்திட,

சைத்தன்யா, “நீ பதறாத காயு‌. இங்க தான் எங்கேயாவது இருப்பா. ரொம்ப தூரம் போயிருக்க முடியாது. நான் இந்த சைடு போறேன். நீ அந்த சைடு தேடு” என அவளுடைய அலைபேசியினை கையில் கொடுத்து அனுப்பியவன்,

“மேகா‌ மேகா எங்க இருக்க?” என்ற சத்தத்துடன் அவளை தேட துவங்கி இருந்தனர்.

இங்கு கண்ணை கட்டிவிட்டது போல இருந்தது மேகாவிற்கு.

எந்த புறம் செல்வது என்று தெரியவில்லை. தான் செல்லும் வழியில் மிருகங்கள் ஏதாவது இருந்துவிட்டால் என்று அச்சம் மனமெங்கும் பரவிட தொண்டைக்குழி ஏறி இறங்கியது.

சிறிது நேரத்தில் தாய் தந்தையரின் முகம் நினைவிற்கு வர விழிகளில் நீர் தளும்பிவிட்டது.

நேரம் செல்ல செல்ல பயம் நெஞ்சை கவ்வியது‌. அவ்வளவு தான் தான் இந்த மலைக்காட்டில் தனியாக கிடந்து சாக போகிறோம் என்று முடிவிற்கு வந்துவிட்டவளுக்கு உள்ளூரும் பயத்தில் உடல் நடுங்க துவங்கியது.


எங்கும் செல்லாதே என்று காயுக்கா கூறியதை கேளாமல் வந்த தனக்கு இது தேவை தான் என்று தனக்குத்தானே பேசி கொண்டவளுக்கு கால்கள் துளியும் அங்கிருந்து நகராது வேரோடிவிட்டது.


வாழ்வின் இறுதி நொடிகளை அனுபவித்து கொண்டு இருக்கிறோம் என்று முடிவெடுத்த உட்சபட்ச நடுக்கத்தில் இருந்தவளுக்கு ஆபத்தாந்தவனாய் வந்த சைத்தன்யாவின் குரல் செவியில் விழுந்ததும் இதயம் எகிறி துடித்தது.

“மேகா எங்க இருக்க? மேகா?” என்ற குரல் மீண்டும் செவியில் மோத,

குரல் வந்த திசையை நோக்கி ஓடி வந்துவிட்டவள் தூரத்தில் வந்து கொண்டிருந்த சைத்தன்யாவை கண்டு அப்படியே நின்றுவிட்டாள்.

சைத்தன்யாவை அவளை கண்டுவிட்டான்.

இத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த அழுகை பெருகிட மளமளவென விழி நீர் கன்னத்தினை நனைத்தது.

“மேகா ஆர் யூ ஓகே” என்றவாறு அருகில் வந்தவனை ஓடிச்சென்று இறுக்கமாக கட்டி கொண்டாள்.

********

 
Administrator
Staff member
Messages
464
Reaction score
794
Points
93
விழிகளை மெதுவாக திறந்த மேகாவிற்கு ஒன்றும் புரியவில்லை. தான் எங்கிருக்கிறோம் என்று தெரியவில்லை.

விழிகளால் சுற்றும் முற்றும் பார்க்க ஏதோ ஒரு அறை போல தெரிந்தது.

விழிகளை ஒரு முறை மூடி திறந்தவளுக்கு அப்போது தான் நடந்தது நினைவிற்கு வந்தது.

வந்த கணம் இதயம் தாளம் தப்பியது. தான் கண்டது கனவா இல்லை நிஜமா என்று அவளுக்கு புரியவில்லை.

இதயத்தின் உள்ளறை எங்கும் வியாபித்த பூகம்பத்தை அடக்கியவள் மெதுவாக எழுந்து அமர முயற்சித்தாள்.

அப்போது தான் அருகில் இருந்த காவ்யா,

“ஏய் மேகா கண் முழிச்சிட்டியா?” என்றபடி அவளது கையை பிடித்தாள்.

“ஹ்ம்ம்” என்று மெதுவாக தலையசைத்தவளுக்கு தொண்டை வறண்டிருந்தது.

“சாப்பிடாம வந்தா இப்படி தான் ஆகும்‌. அத்தை அப்போவே சாப்பிட்டு போக சொன்னாங்க சாப்பிட்டு வந்திருக்கணும். சாப்பிடாம வந்து எப்படி மயங்கி விழுந்துட்ட பாரு” என்று அக்கறையுடன் திட்டியவள், அருகில் இருந்த பழச்சாறை எடுத்து அவளுக்கு புகட்டினாள்.

பாதி அருந்தியதும், “போதும் கவி” என்று மறுக்க,

“உதைச்சேன்னு வை அவ்ளோ தான். இப்போ தான் மயக்கம் தெளிஞ்சு எழுந்து இருக்க ஆனாலும் பாதி ஜூஸோட நிறுத்திற” என்று திட்டி முழுதாக குடிக்க வைத்தாள்.

அருந்தி முடித்ததும் மேகா, “கவி நான் எப்படி இங்கே வந்தேன்?” என்று மெதுவாக வினவ,

“உனக்கு எதுவும் ஞாபகம் இல்லையா? நீ எம்டி சாரை பாக்க போனப்போ மயங்கி விழுந்துட்ட. அவர் தான் உன்னை தூக்கிட்டு வந்து இங்க சிக் ரூம்ல அட்மிட் பண்ணாரு” என்று மொழிய,

“தூக்கிட்டு வந்தாரா…?” என்று வினவிட,

“ஆமா தூக்கிட்டு தான் வந்தாரு. ரொம்ப நல்ல கேரக்டரா இருக்காரு. உன்னை அட்மிட் பண்ணதும் என்னை கூப்பிட்டு அவர் தான் இன்பார்ம் பண்ணாரு. கூட இருந்து பாத்துக்க சொன்னாரு. உனக்கு இன்னைக்கு லீவ் கொடுத்து இருக்காரு”என்றிட,

“லீவா?” என்று அதிர்வாய் வினவினாள்.

“ஆமா லீவ் தான். உனக்கு எம் டி லீவ் கொடுத்துட்டாருன்னு கேள்விப்பட்டதும் அந்தாளு மூஞ்சிய பாக்கணுமே சரிங்க சார்னு வாயை மூடிட்டு தலையாட்றாரு. நம்மக்கிட்ட மட்டும் எப்படி எகிறுவாரு” என்று குழுத்தலைவரை திட்டினாள்.

மேகா அமைதியாக கேட்டு கொண்டாள்.

பின்னர் அங்கு இருக்க பிடிக்காது,

“நான் வீட்டுக்கு கிளம்பவா?” என்று வினவினாள்.

“இரு நானும் லீவ் சொல்லிட்டு வர்றேன்” என்று காவ்யா எழ,

“வேணாம் டி. நானே போய்க்கிறேன்” என்று மொழிய,

“ஹேய் இப்போ தான் மயக்கம் தெளிஞ்சு இருக்கு. உன்னை எப்படி தனியா அனுப்புறது. நான் லீவ் சொல்லிட்டு வர்றேன்” என்று அழுத்தி சொன்னவள் விடுமுறை கூறிவிட்டு மேகாவை அழைத்து கொண்டு வீட்டினை நோக்கி சென்றாள்.

மேகாவிற்கு ஏனோ அவனை மீண்டும் கண்டுவிட்டது மொத்த சக்தியையும் வடிய செய்திருந்தது.

காவ்யாவின் தோளில் தலையை சாய்த்தவாறு அமர்ந்து கொண்டாள்.

அதில் காவ்யா திரும்பி,

“என்னடி திரும்பவும் மயக்கம் எதுவும் வருதா?” என்றிட,

“இல்லை. சும்மாதான் சாய்ஞ்சேன். சீக்கிரமா வீட்டுக்கு போ” என்று முடித்தாள்.

“மேகா எனக்கு எம்.டி சாரை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு டி” என்றதும் மேகாவின் இதயம் நின்று துடித்தது‌.

சடுதியில் தன்னை சமாளித்தவள், “ஓ…” என்றிட,

“உனக்கு எங்கேயாவது பாத்த மாதிரி இருக்கா?” என்று வினவிட,

“இ… இல்லை இல்லைடி” என்று மொழிந்தாள்.

“ஓ… நானும் ரொம்ப நேரமா யோசிக்கிறேன் ஞாபகத்துக்கு வரவே மாட்டுது” என்றவள்,

“என்னவோ சரி ஆளு பாக்க எப்படி இருக்காரு. அப்படியே வெள்ளை வெளேர்னு. அப்படியே பாலிவுட் மூவி ஹீரோ மாதிரி. செம்ம ஹாண்ட்சம் தெரியுமா? அவர் பேசும் போது அப்படியே ப்ளையிங் மோடு தான் நானு” என்று விழி மூடி சிலாகிக்க,

மேகாவிடம் எந்த எதிர்வினையும் இல்லை.

ஆனால் அதனை கவனிக்காது காவ்யா தொடர்ந்தாள்.

“அந்த கண்ணு இருக்கே கண்ணு அப்படியே நம்மள இழுத்துக்கும் போல. பணக்காரங்க எல்லாரும் அழகா இருக்காங்களா? அழகா இருக்கவங்க பணக்காரங்களா இருக்காங்களா? நாமளும் தான் தேய்ச்சு குளிக்கிறோம் நம்மளுக்கு அந்த கலர் வர மாட்டுதே?” என்று அதி முக்கிய சந்தேகத்தை கேட்டவள் மேகா அமைதியாக இருப்பதை அப்போது தான் கவனித்து,

“என்னடி நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன் நீ அமைதியா இருக்க?” என்றிட,

“என்ன சொல்ல? நீ பேசுற கேக்குறேன்”

“என்ன சொல்லவா? இவ்ளோ சொல்றேன் ஆமா இல்லைன்னு சொல்றதுக்கு என்ன?”

“அது நான் அவரை சரியா பாக்கலை”

“சரியா பாக்கலையா?”

“ஆமா நான் உள்ள போனதுமே எனக்கு தலை சுத்திட்டு விழுந்துட்டேன்”

“ஓ… உனக்கு பதிலா நான் போய் மயங்கி விழுந்திருக்கலாம் என்னை தூக்கிட்டு போய் இருப்பாரு. மிஸ் ஆகிடுச்சு இன்னொரு நாள் மயங்கி விழுறேன்” என்க,

மேகாவிற்கு இந்த பேச்சு ஏனோ சிறிதும் பிடிக்கவில்லை.

சடுதியில், “விழுந்து என்ன பண்ண போற? அவர் நமக்கு எம்.டி” என்று பதில் மொழிய,

“அதுவும் சரிதான். இவரை மாதிரி ஆளுங்களை தூரத்தில இருந்து ரசிக்க தான் நம்மளால முடியும்” என்றிட,

மேகா தனக்கும் சேர்த்து தான் இது என்று மனதிற்குள் கூறி கொண்டாள்.

“இருந்தாலும் இவ்ளோ அழகா கண்ணு முன்னாடி நடமாடும் போது பாக்காம எப்படி இருக்கது?” என்று வினவியவள்,

“சும்மா சைட் தானே அடிச்சிக்கலாம். ஆனால் என்ன இவர் வொய்ஃப்க்கு தெரிஞ்சா அவ்ளோ தான்” என்க,

“என்ன?” என்றவளுக்கு தொண்டையில் வார்த்தை சிக்கி கொண்டது.

காவ்யாவின் வார்த்தையில் இருந்த கணத்தை இதயத்தால் தாங்க இயலவில்லை.

இவளது கேள்வியில், “என்னடி?” என்று காவ்யா மறு வினா தொடுக்க,

தன்னை சமாளிக்க முடியாமல் திண்டாடியவள்,

“அவருக்கு கல்யாணம் ஆகிடுச்சா?” என்றுவிட,

“ஆமா ஆகிடுச்சாம். குழந்தைங்க கூட இருக்கு போல. காலையில வந்ததுமே டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணிட்டேன். அவர் வொய்ஃப் ரொம்ப பொஸஸ்ஸீவ் போல. அதுவும் இவருக்கு எத்த மாதிரி நல்ல ஹிந்தி பட ஹீரோயின் போல தான் இருப்பாங்களாம். எல்லாம் நம்ம நித்யாதான் சொன்னா” என்றிட,

“ஓ…” என்றவளது காயத்ரியின் முகம் மணிக்கணக்கில் தோன்றி மறைந்தது.

சரிதான் காய்த்ரி அக்காவும் நல்ல அழகு தான் இருவருக்கும் பொருத்தம் நன்றாகதான் இருக்கும் என்று எண்ணம் பிறந்த கணம் ஒருவித வலி மனதினோரம் ஜனித்தது.

பேசியபடியே வீடு வந்துவிட்டிருந்தது‌. இருவரது பெற்றோரும் பணிக்கு சென்றிருந்தனர்.

காவ்யா, “நான் உன்கூட வரவா?” என்று வினவ,

“இல்லை நான் பாத்துக்கிறேன். நீ போய் ரெஸ்ட் எடு” என்று அவளை அனுப்பிவிட்டு வீட்டிற்குள் நுழைந்து கதவை பூட்டியவள் நீள்விருக்கையில் விழிமூடி அமர்ந்துவிட்டாள்.

மூடிய விழிகளின் வழியே சூடான கண்ணீர் அவளது கன்னத்தினை நனைத்தது.

சொல்லப்படாத அவ
ளது நேசமும் கொஞ்சம் கொஞ்சமாய் கருதி உயிர்விட்டு கொண்டிருந்தது

புல்லாங்குழலே
பூங்குழலே
நீயும் நானும்
ஒரு சாதி…










 
Well-known member
Messages
859
Reaction score
630
Points
93
Innaikku cuten konja neram thaan vanthaaru, olungave sight adikka mudiyala😏😏😏😏😏😏😏😏
 
Active member
Messages
346
Reaction score
233
Points
43
Stage la propose panna sonnathu oda reaction enna nu yae kammika la yae sis nega indha payapulla chaidhu ah va ipadi bayapadra aana epudi ivan ah love panna ivalum avan ah therincha mathiri kattika la avanum apadi illa appo indha kalyanam kozhnandhai nu kaviya sonnathu ellam ivanga flashback la than muzhusaa theriyum pola
 
Top