• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

மேகம் 5

Administrator
Staff member
Messages
464
Reaction score
794
Points
93
மேகம் 5:

இல்லாமலே இருப்பது இன்பம் இருந்தும் இல்லை
என்பது துன்பம்
அகிம்சை முறையில்

என்னை கொள்ளாதே...


மேகா சீக்கிரமா கிளம்பு டைம் ஆச்சு டென்க்கு அங்க இருக்கணும்” என்ற சரண்யாவின் குரலுக்கு,

“இதோ டூ மினிட்ஸ்” என்றவள் முகத்திற்கு லேசான பவுடர் பூசி சிறிய கல் பொட்டு ஒன்றை வைத்து கொண்டாள்.

“நான் ரெடி” என்று மேகா கூறிய சமயம்,

“நானும் ரெடி” என்று திவ்யாவும் வந்தாள்.

திவ்யா, “மத்தவங்க எல்லார்கூடவும் சேர்ந்து போலாமா?” என்க,

“எல்லாரும் ரெடினா போகலாம் வெயிட் பண்ணலாம் முடியாது” என்று சரண்யா பதில் அளித்தாள்.

திவ்யா எட்டி பார்க்க மற்றவர்கள் எல்லோரும் தயாராக தான் இருந்தனர்.

எல்லோரும் ஒருவழியாக தயாராகி கல்லூரியின் ஆடிடோரியத்தை நோக்கி சென்றனர்.

இன்று மேகாவின் வகுப்பினருக்கு வரவேற்பு விழா சைத்தன்யாவின் வகுப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பெரிய ஒலிப்பெருக்கியினால் பாடல்கள் சற்று சத்தமாக ஒலித்து கொண்டிருக்க ஆங்காங்கே முதுகலை மாணவர்கள் நின்று தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை செய்தபடி இருந்தனர்.

வரவேற்பதற்காக நின்ற பெண் இவர்கள் வருவதை கூறியதும் பட்டாசுகளை வைத்து பற்ற வைக்க சென்றனர்.

இதனை கண்ட மேகா அதிர்ந்து நெஞ்சில் கைவைத்து விட்டாள். காரணம் அவளுக்கு பட்டாசு சத்தம் என்றாலே அவ்வளவு பயம்.

சிறு வயதில் ஒரு முறை புஸ்வாணம் வைக்கும் போது அது வெடித்துவிட்டது. இவளது கையில் லேசான காயமும் ஏற்பட்டிருந்தது.

அதில் இருந்து பட்டாசு சத்தம் என்றாலே பயத்தில் இதயம் தடதடக்க துவங்கிவிடும்.

வயது ஏற‌ ஏற பயம் குறைந்துவிடும் என்று அவளுடைய பெற்றோர் எண்ணியிருக்க ஆனால் அது குறைந்தபாடில்லை.

அச்சம்பவத்திற்கு பிறகு மேகா பட்டாசு வெடிப்பதை அறவே விட்டுவிட்டாள். தீபாவளி சமயத்தின் போதும் வீட்டுக்குள் அடைந்து கொள்வாள்.

பெற்றவர்கள் எவ்வளவு கூறியும் மீண்டு வர மேகா முயற்சிக்கவில்லை.

இப்போதும் இதயம் மத்தளம் வாசிக்க துவங்க முதல் வரிசையில் வந்தவள் ஒதுங்கி தூரமாக போய் நின்றுவிட்டாள்.

அது ஆயிரம் வாலா பட்டாசு என்பதால் ஐந்து நிமிடங்கள் அங்குமிங்கும் பறந்து அதீத சத்தத்துடன் புகையுடன் வெடித்து சிதறியது.

எங்கே தன் மீது பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் ஒதுங்கி மேலும் ஓரமாக சென்றாள்.

ஒருவழியாக பட்டாசு அனைத்தும் வெடித்து முடிந்ததும் தான் மேகாவிற்கு மூச்சு சீராக வந்தது.

“கடவுளே…” என்று அவள் நிம்மதி அடைந்த கணம் பறந்து வந்து அவளருகே வந்த பட்டாசு ஒன்று படாரென்ற சத்தத்துடன் வெடித்து சிதற,

“அம்மா” என்ற அலறலுடன் துள்ளி நகர்ந்தவள் அருகில் இருந்தவரது கரத்தை இறுக்கமாக பிடித்து கொண்டு விழிகளை மூடி கொண்டாள்.

படபடவென சத்தம் மிக அருகில் கேட்டது இதயம் துடிப்பை பன்மடங்காய் பெருக்கிவிட லேசாக வியர்த்துவிட்டது.

சத்தம் ஓய்ந்ததும் தான் ஒருவரது கையை பிடித்திருப்பது உரைத்தது.

“ஷ்… சாரி” என்றபடி கையை விட்டு திரும்பி பார்க்க சைத்தன்யாதான் அவளருகே நின்றிருந்தான்.

அதிர்ந்து விழித்தவளது இதயம் துடிப்பு மேலும் சீரற்று துடிக்க பயத்தில் வியர்த்து இருந்தவள் சட்டென்று மயங்கி சரிய,

நொடியில் அவளது இடையில் கைக்கொடுத்து தாங்கியிருந்தான் சைத்தன்யா.

புகை ஓரளவு குறைந்திருந்ததால் மேகா விழுந்ததை கண்டு கூட்டம் கூடிவிட்டனர்.

“என்னாச்சு?” என்றபடி விரைந்து வந்த காயத்ரி,

மேகாவையும் சைத்தன்யாவையும் மாறி மாறி பார்த்துவிட்டு,

“திரும்பவுமா? அதெப்படி உன்னை பாத்து மட்டும் மயங்கி விழறா?” என்றவள் மேகாவை தாங்கி பிடித்து அருகில் உள்ள நாற்காலியில் அமர வைத்தாள்.

இதற்குள் சரண்யாவும் திவ்யாவும் பதறி கொண்டு வர,

காயத்ரி, “ஒன்னுமில்லை பயப்படாதிங்க” என்றவள் முகத்தில் பட்டென்று நீரை அடித்தாள்.

அதில் மேகாவிற்கு நினைவு திரும்ப லேசாக விழிகளை திறந்து பார்த்தாள்.

காயத்ரி, “மேகா ஆர் யூ ஓகே?” என்று வினவிட,

“ஹ்ம்ம்” என்று லேசாக தலையசைத்தாள்.

“என்னாச்சு இப்பவும் சாப்பிடாம வந்திட்டியா?” என்று வினா தொடுக்க,

“இல்லை எனக்கு க்ராக்கர்ஸ்னா சின்ன வயசில இருந்தே பயம்” என்று தயங்கி கூறினாள்.

“ஓ… முதல்லே சொல்லி இருக்கலாம்ல. உன்னை உள்ள அனுப்பி இருப்பேன்”

“இல்லை நான் வந்ததுமே வச்சிட்டாங்க”

“சரி இப்ப ஓகே தான?” என்க,

“ஹ்ம்ம்” என்று தலை அசைத்தாள்.

“சரி ஓகே போங்க பங்க்ஷன கன்டினியூ பண்ணுவோம்” என்றவள் மேகாவை பழச்சாறு அருந்த செய்து உள்ளே அழைத்து சென்றாள்.

சற்று தெளித்ததும் மேகா, ‘சே அவரை பாத்தவுடனே பாத்தவுடனே மயங்கி விழறேனே என்னை பத்தி என்னை நினைச்சிருப்பார்’ என்று மனதிற்குள் புலம்பினாள்.

‘அவரை பாத்தா மட்டும் எங்க இருந்து தான் எனக்கு பயம் வருதோ… பர்ஸ்ட் இந்த பயத்தை போக்கணும்’ என்று ஒரு மனம் புலம்ப,

‘அது இந்த ஜென்மத்தில நடக்காது’ என்று மற்றொரு மனம் நகையாடியது.

‘ப்ச்’ என்று சலித்தவள் சைத்தன்யாவை தேட விழிகளுக்கு அவன் அகப்படவில்லை.

‘எங்க போனாரு. நேவி ப்ளூ சர்ட் சாண்டில் பேண்ட்னு சும்மா கண்ணுக்கு குளிர்ச்சியா இருந்தாரே… அதுவும் அந்த கண்ணு கையில இருந்த வாட்ச் பக்கத்துல பாக்கும் போது ரசிக்கிறதை விட்டுட்டு இப்படி மயங்கி விழுந்துட்டேனே’ என்று மனது ஏகமாய் புலம்பி தவித்தது.

இதற்குள் விழா துவங்க மேடையில் பார்வையை வைத்தவள் அப்போது தான் மைக்கில் பேசி கொண்டிருந்த காயத்ரியின் அருகே நின்றிருந்த சைத்தன்யாவை கண்டாள்.

‘ஹே க்யூட்டன். இன்னைக்கு அநியாயத்து அழகா இருந்து தொலையிறானே… இம்புட்டு அழகா இருந்தா நான் எங்க பார்வையை விலக்குறது’ என்று தனக்கு தானே பேசி கொண்டவள் அவனையும் மேடையையும் மாற்றி மாற்றி பார்த்து கொண்டிருந்தாள்.

மாணவர் பெயர்கள் ஒரு சீட்டில் எழுதி போட்டு குலுக்கல் முறையில் ஒரு சீட்டை முதுநிலை மாணவர் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அதில் யார் பெயர் வருகிறதோ அந்த இளநிலை மாணவர் முதுநிலை மாணவர் கூறியவற்றை மேடையில் ஏறி செய்ய வேண்டும்.

ஒவ்வொருவரது பெயராக வர ஆடுவது பாடுவது என்று டாஸ்க் வந்தது எல்லோரும் செய்துவிட்டு தங்களுக்கு கொடுக்கப்பட்ட பரிசை வாங்கிவிட்டு இறங்கினர்.

திவ்யா மற்றும் சரண்யாவின் முறை முடிந்துவிட்டிருக்க இருவரும் மேகாவிடம்,

“அடுத்து நீ தான் அடுத்து நீ தான்” என்று பயப்படுத்த,

மேகாவே அதிக பதட்டத்துடன் அமர்ந்து இருந்தாள். என்ன செய்ய சொல்வார்களோ என்று வேறு பயம் அதற்கு மேல் மேடை பயம் அதிகமாக இருந்தது.

ஒவ்வொரு முறை சீட்டு பிரிக்கப்படும் போது இதயம் எகிறி குதிக்க அச்சத்தோடு அமர்ந்து இருந்தாள்.

அவள் பயந்த கணம் ஒரு வழியாக வந்துவிட ஒரு முதுநிலை மாணவி மேகாவின் பெயரை எடுத்திருந்தாள்.

தன்னுடைய பெயர் ஒலிக்கப்பட்டதும் பட்டென்று எழுந்து கொண்டவளது முகத்தில் ஏகமாய் பதகளிப்பு.

“போடி போ என்ஜாய்” என்று இருவரும் மேகாவை அனுப்பி வைக்க,

பின்னிய கால்களை சிரமப்பட்டு நகர்த்தியவள் மேடையேறி சென்றாள்.

கையில் மைக் கொடுக்கப்பட்டதும் மற்றவர்களை போல தன்னுடைய பெயர் மற்றும் ஊரை பற்றி பகிர்ந்து கொண்டாள்‌.

“ஹே மேகா ஆர் யூ சிங்கிள்?” என்று மாணவர்கள் கூட்டத்தில் இருந்து குரல் வர இவளுக்கு இன்னும் பயம் வந்தது.

எல்லா பெண்களுக்கும் இதே கேள்வி வந்ததுதான்.

மேகாவின் பெயரை எடுத்த மாணவி தீஷா,

“ஹாய் மேகா” என்று கை நீட்ட,

“ஹாய் சீனியர்” என்று கையை குலுக்கினாள்.

“வை சோ நெர்வெஸ். ஐ ஹாவ் அ சிம்பிள் டாஸ்க் பார் யூ” என்றதும்,

சிறிதாக ஆசுவாசப்பட்டவள் நிம்மதியாக மூச்சை வெளியிட்டாள்.

ஆனால் அடுத்த கணம் தீஷா கூறியதை கேட்டவளது மூச்சு அப்படியே நின்றுவிட,

விழிகள் தெறித்துவிடும் அளவு வெறித்து பார்த்தாள்.

தீக்ஷா சிரிப்புடன், “நான் சொல்ற ஆளுக்கு நீ ப்ரபோஸ் பண்ணும்” என்றிட,

“என்ன?” என்றவளுக்கு பேச்சு எழவில்லை.


இதற்குள் கீழி இருப்பவர்களிடம் பெரியதான ஆரவாரம் கிளம்பியது.

இந்த டாஸ்க்கை தான் நிறைய பேர் எதிர்பார்த்து இருந்தனர்.

“நோ…” என்று மேகா பின் வாங்க,

“நோ நீ செஞ்சு தான் ஆகணும்” என்று முதுகலை மாணவர்களிடமிருந்து குரல் வந்தது.

செய்யவில்லை என்றால் கீழிறங்க முடியாது என்று அவளுக்கும் புரிந்திருந்தது.

தீஷாவின் விழிகள் யாரை கூறலாம் என்று சுற்றி பார்க்க,

“தீஷா மீ தீக்ஷா மீ…” என்று ஆளாளுக்கு கையை தூக்கி ஆர்பரிக்க துவங்கியிருந்தனர்.

சிரிப்புடன் எல்லோரையும் சுற்றி பார்த்த தீஷா அவர்களை மென் சிரிப்புடன் பார்த்து நின்றிருந்த சைத்தன்யாவை கையை காண்பித்து,

“அவனுக்கு ப்ரபோஸ் பண்ணு” என்றிட,

மேகாவிற்கு நெஞ்சு வலி வராதது ஒன்று தான் குறை.

சைத்தன்யாவை முகத்தை கண்டவள்,

“இவருக்கா?” என்றவளுக்கு நாக்கு உலர்ந்து போனது.

பயத்தில் லேசாக முகம் கூட வெளிறிவிட்டது.

இங்கு கீழே இருப்பவர்கள் வேறு,

“கமான் மேகா கமான் மேகா” என்று அவளது ரத்த அழுத்தத்தை உயர செய்திருந்தனர்.

சைத்தன்யா வேறு அப்படியே அமைதியாக நின்றிருக்க, இவளுக்கு என்ன செய்வதென தெரியவில்லை.


************

“அண்ணி மேகா ரெடியா?” நாக லெட்சுமி குரல் கொடுக்க,

“ஹ்ம்ம் ரெடி தான் நாகு. அவங்க வந்துட்டாங்களா?” என்று தமயந்தி வினவ,

“பக்கத்துல வந்துட்டாங்க போல இப்போ தான் அவர் பேசுனாரு. இன்னும் பத்து நிமிஷத்துல வந்திடுவாங்க” என்று நாக லெட்சுமி பதில் அளித்தார்.

“சரி வா நாம போய் அவங்க வரும் போது வெளியே இருப்போம்” என்று தமயந்தி மொழிய,

“காவ்யா நாங்க சொல்லும் போது மேகாவை அழைச்சிட்டு வா” என்று நாகு கூறிவிட்டு வெளியே சென்றனர்.

நாக லெட்சுமி மற்றும் செந்தில் நாதன் தம்பதியினர் இவர்களது வீட்டிற்கு அருகில் தான் வசிக்கின்றனர்.

வெகு வருட பழக்கம் என்பதால் நெருங்கிய சொந்தம் போலத்தான் அவர்களது பழக்க வழக்கம் இருக்கும்.

இப்போது கூட செந்தில்நாதன் மூலமாக தான் மேகாவிற்கு ஒரு வரன் வந்திருந்தது‌.

செந்தில்நாதனும் சேதுபதியும் மகிழுந்து ஓசை கேட்டதும் வாசலில் சென்று வரவேற்றனர்.

மாப்பிள்ளை சந்தோஷ் அவனது பெற்றோர் மற்றும் சகோதரிகள் என ஆறு பேர் வந்திருந்தனர்.

தமயந்தியும் நாகலெட்சுமியும் வந்தவர்களை வரவேற்று உபசரித்தனர்.

மாப்பிள்ளையின் தந்தையும் செந்தில் நாதனும் நண்பர்கள் என்பதால் பேசி கொண்டு இருந்தனர்.

மாப்பிள்ளையின் சகோதரிகள்,

“மாமா பொண்ணை வர சொல்லுங்க” என்று செந்தில் நாதனிடம் கூற,

“வீட்டு மருமகளை பார்க்க ஆர்வத்தை பாரு” என்று சிரித்த நாக லெட்சுமி,

“காவ்யா மேகாவை அழைச்சிட்டு வா” என்று குரல் கொடுத்தார்.

‘ஆவ்… எப்போது இதை எல்லாம் கழட்டுவோம்’ என்று மனதிற்குள் புலம்பி கொண்டு இருந்தவளுக்கு இந்த வாக்கியம் மகிழ்ச்சி அளித்தது.

போய் பொம்மை போல நின்று வந்துவிட்டால் விரைவில் வேடத்தை கலைத்து அலுவலகத்திற்கு கிளம்பி விடலாம் என்று எண்ணம்.

காவ்யா அழைக்கும் முன்னே எழுந்து கொண்டாள்.

“என்னடி அவ்ளோ அவசரமா?” என்று சிரிக்க,

“ஹையோ ஏன் நீ வேற ஆஃபிஸ்க்கு டைம் ஆச்சு. வாடி போய்ட்டு சீக்கிரம் வருவோம்” என்று காவ்யாவுடன் மெதுவாக நடந்து வந்து அவர்களது முன் நின்றாள்.

அடர் ஊதாவில் பச்சை கரை வைத்த பட்டு புடவையில் மிதமான அலங்காரத்துடன் லட்சனமாக இருந்தாள் மேகா. பார்த்தவுடன் திரும்பி பார்க்க வைக்கும் முகம் இல்லை என்றாலும் ஓரளவிற்கு அழகாக தான் இருப்பாள் மேகா.

மாப்பிள்ளையின் தாய்,

“நிமிர்ந்து என் மகனை பாரும்மா என் மருமகளே” என்று மொழிய,

‘இந்தம்மா வேற’ என்று மனதிற்குள் புலம்பியவள் நிமிர்ந்து சந்தோஷை கண்டாள்.

அவனும் புன்னகையுடன் இவளை பார்த்திருக்க தானும் கடமைக்காக ஒரு புன்னகையை சிந்தினாள்.

சந்தோஷின் சகோதரி,

“எங்கப்பா அம்மா கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோம்மா” என்று மொழிய,

ஒரு கணம் தனது தாய் தந்தையரை நிமிர்ந்து பார்த்தாள். அவர்களது முகத்தில் சிறிதான பதற்றம்.

இரண்டடி முன்னே நகர்ந்து குனிந்து வணங்கி எழுந்தவளது முகத்தில் சிறிதான சுணக்கம் தெரிந்தது.

காவ்யா அவளை பிடித்து கொண்டாள்.

மாப்பிள்ளை தாயிடம் ஏதோ கூற,

“சந்தோஷ்க்கு மருமகக்கிட்ட பேச ஆசைப்பட்றான்” என்று கூற,

சேதுபதி, “அதுக்கென்ன தாரளமா பேசட்டும் வாழ போறவங்க அவங்க பேசி முடிவெடுக்கட்டும்” என்றிட்டார்.

‘அச்சச்சோ இதை வேற சமாளிக்கணுமா?’ மனதோடு புலம்பியவள், காவ்யாவை காண அவள்,

“ஆல் தி பெஸ்ட்” என்று உதட்டசைத்தாள்.

‘உன்னை அப்புறம் பாத்துக்கிறேன்’ என்று எண்ணியவள் அவன் பின்னோடு சென்றாள்.

இருவரும் மாடியறையின் அருகே பால்கனியில் நின்று இருந்தனர்.

சந்தோஷ், “ஹாய் மேகா” என்று கையை நீட்ட,

“ஹாய் சந்தோஷ்” என்று தானும் கையை குலுக்கினாள்.

“இன்ஜினியரிங் முடிச்சிட்டு ஐடில வொர்க் பண்றிங்க ரைட்?” என்று கேட்க,

“ஆமா” என்று பதில் பொழிந்தாள்.

“எனக்கு உங்களை பிடிச்சிருக்கு? உங்களுக்கு?” என்று கேட்க,

‘பிடிக்கவில்லை’ என்று கூற துடித்த இதழ்களை கட்டுப்படுத்தி,

“ஹ்ம்ம் என் அம்மா அப்பாவோட முடிவு தான் என்னோடது” என்று பதில் அளித்தாள்.

அவளுடைய, “ஹ்ம்ம்” என்பதிலே அவன் மகிழ்ச்சி ஆகிவிட்டான் போலும்.

“உங்களுக்கு கல்யாணத்துல விருப்பமான்னு தெரிஞ்சுக்க தான் பேசணும் சொன்னேன். உங்களுக்கு என்கிட்ட எதாவது கேட்கணுமா?” என்று வினவ,

“ம்ஹூம்” என்று தலையசைத்தாள்.

சரியென இருவரும் கீழே இறங்கினார்கள்.

மாப்பிள்ளையின் தாயார், “என்னடா இரண்டு பேருக்கும் பிடிச்சு இருக்கா?” என்று வினவ,

“ஹ்ம்ம் ரெண்டு பேருக்கும் சம்மதம்மா” என்று மொழிந்தான்.

இதனை கேட்டதும் சேதுபதி மற்றும் தமயந்தியின் முகத்தில் எத்தனை மகிழ்ச்சி.

மேகா உணர்வற்ற முகத்துடன் அதனை பார்த்து கொண்டிருந்தாள்.

செந்தில் நாதன், “அப்புறம் என்ன பட்டுபுட்டுனு பேசி நிச்சயத்துக்கு தேதி குறிப்போம்” என்க,

மாப்பிள்ளையின் தாயார், “எங்கண்ணன் இல்லாம எந்த நல்ல காரியத்தையும் தொடங்குறது இல்லை. அவர் வெளியூர் போயிருக்காரு அவர் ஊருக்கு வந்ததும் நிச்சயத்துக்கும் கல்யாணத்துக்கும் தேதி குறிச்சிடுவோம்” என்க,
மற்றவர்கள் சம்மதித்தனர்.

மாப்பிள்ளையின் சகோதரிகள் மேகாவை அழைத்து அவளுக்கு பூவை வைத்து விட்டனர்.

அதன் பிறகு சில பல பேச்சுக்களுடன் அவர்கள் விடை பெற்றனர்.

மேகாவின் பெற்றோருக்கு ஏக சந்தோஷம்.

செந்தில் நாதன், “நான் தான் இந்த சம்பந்தம் கண்டிப்பா நல்லபடியா முடிஞ்சிடும்னு சொன்னேனே நீங்க தான் பயந்திட்டு இருந்திங்க” என்று துவங்க,

தந்தை பதில் அளிக்கும் முன் அறைக்குள் நுழைந்துவிட்டாள்.

மின்னல் வேகத்தில் புடவையை கலைந்தவள்‌ சுடிதாருக்கு மாறினாள்.

தலையில் இருந்த பூ என யாவையும் கழற்றி ஆளே மாறி இருந்தாள்.

வேடத்தை கலைத்த பின்னர் தான் நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது.

கைக்கடிகாரத்தை எடுத்து கட்டியவள் நேரத்தை பார்க்க பத்து முப்பது ஆகியிருந்தது.

“அச்சச்சோ மணி பத்தரை ஆகிடுச்சா” என்று அலறியவள் கைப்பையை எடுத்து கொண்டு வெளியே வந்தாள்.

தமயந்தி, “மேகா சாப்பிட்டு போ” என்றிட,

“டைம் ஆச்சும்மா கேண்டின்ல சாப்பிட்டுக்கிறோம்” என்று வாசலுக்கு விரைந்தாள்.

“மேகா பெல்ட்” என்று சேதுபதி பின்னே வர,

“ப்ச் மறந்துட்டேன்” என்றபடி வாங்கி அதனை சுற்றி மாட்டி கொண்டவள் இருசக்கர வாகனத்தின் பின்புறம் ஏறி அமர்ந்தாள்.

முன்னிருக்கையில் காவ்யா அமர்ந்து இருந்தாள்.

காவ்யா வாகனத்தை இயக்கியதும்,

“கவி சீக்கிரமா போடி” என்று மேகா துரிதப்படுத்த,

“இதுக்கு மேல போனா ஆம்புலன்ஸ்ல தான் போகணும். எப்படியும் லேட்டா போய் திட்டு வாங்க தானே போறோம்” என்று காவ்யா மொழிந்தாள்.

“அய்யோ அவரு ரொம்ப பேசுவாரே” என்று மேகா வருந்த,

“விடு பழகுன ஒன்னு தான” என்று காவ்யா பதில் இயம்பினாள்.

“அதுவும் சரிதான்” என்ற மேகாவிற்கும் இது வழக்கமான ஒன்று தானே என்று தான் தோன்றியது.

சற்று முன் நிகழ்ந்தது போல அலங்கார பொம்மையாய் தான் நின்றது எத்தனையாவது முறை என்று அவளுக்கே தெரியாது.

‘பெண் பார்க்க வருகிறார்கள்’ என்று கூறி விடுமுறை கேட்க அவளுக்கே சங்கட்டமாக இருந்தது.

அவளுடைய விடுமுறை நாட்கள் எப்போதோ முடிந்திருந்தது. இந்த முறை கெஞ்சி கூத்தாடி ஒரு மணி நேரம் அனுமதி வாங்கியிருந்தாள்.

இன்று தன்னோடு சேர்த்து காவ்யாவும் திட்டு வாங்க போகிறாள் என்று வேறு வருத்தம் ஜனித்தது.

எப்போதும் காவ்யை விடுமுறை எடுக்க வேண்டாம் என்று மறுத்துவிடுவாள். இந்த முறை ஒரு மணி நேரம் தானே என்று காவ்யாவும் அனுமதி வாங்கியிருந்தாள்.

காவ்யாவும் பொறியியல் தான் படித்துவிட்டு வேறு ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாள். ஆறு மாதத்திற்கு முன்பு தான் மேகா பணிபுரியும் நிறுவனத்தில் சேர்ந்து இருந்தாள்.

இருவரும் என்ன முயன்றும் பதினொன்று இருபதுக்கு தான் அலுவலகத்தை அடைந்தனர்.

காவ்யா வாகனத்தை நிறுத்த இருவரும் வேக வேகமாக உள்ளே நுழைந்து மின் தூக்கியின் ஏறினார்கள்.

தங்களது தளம் வந்ததும் டீம் லீடர் அறைக்குள் அனுமதி பெற்று உள்ளே நுழைந்தனர்.

ஏற்கனவே கடுகடுவென முகத்தை வைத்து இருந்த டி.எல் இவர்களை கண்டதும் மேலும் கடுகடுவேன ஆக்கி நேரத்தை பார்த்தார்.

மேகா, “சாரி சார் கொஞ்சம் லேட் ஆகிடுச்சு” என்று மன்னிப்பை வேண்ட,

“எனக்கு தெரியுமே நீங்க லேட்டா தான் வருவீங்கன்னு. மாசத்துல பாதி நாள் லீவ் தான் போட்ற நீ” என்று கடிந்து கொண்டவர்,

“போய் வொர்க்கை பாருங்க. இந்த வீக் கரண்ட் பிராஜெக்ட் டெட்லைன்” என்றிட்டார்.

‘அப்பாடா இன்று திட்டு விழவில்லை’ என்று நிம்மதியுடன் திரும்ப,

“மேகா உன்னை எம்.டி சார் வந்ததும் பார்க்க சொன்னார்” என்றார்.

“நானா?” என்று மேகா வினவ,

“ஆமா நீ தான். உன்னோட லீவ் லிஸ்ட்ட பாத்து தான் கூப்பிட்டிருப்பாருன்னு நினைக்கிறேன்” என்றவர் குண்டை தூக்கி போட்டார்.

வெளியே வந்ததும் மேகா,

“புது எம்டி வர்ற அன்னைக்கா இவங்க பொண்ணு பாக்க வரணும். அம்மாவ சொல்லணும். வந்தன்னைக்கே பேட் இம்ப்ரஷன்” என்று மேகா புலம்ப,

“ஆமா இந்த ஆளு வேற என்னை போட்டு கொடுத்தாருன்னு தெரியலை. பழைய எம்.டி கொஞ்சம் நல்லவரு பெருசா ஏதும் கேட்க மாட்டாரு. ஆனால் இவர் எப்படின்னு தெரியலையே” என்று காவ்யா தன் பங்கிற்கு பொழிந்தாள்.

“சரி விடு இன்னைக்கு இவர் விட்டுடாரேன்னு சந்தோஷப்பட்டேன். அவர்க்கிட்ட மாட்டிக்கிட்டேன். போய் திட்டு வாங்கிட்டு வர்றேன். நீ எனக்கு சாப்பிட ஏதாவது வாங்கி வை பசிக்கிது” என்றுவிட்டு அவளுடைய தளத்திலே இருந்த
எம்.டியின் அறைக்கு சென்றாள்.

“மே ஐ கம் இன் சார்” என்று அனுமதி வேண்டி இவள் நிற்க,

“எஸ் கம்மின்” என்ற அழுத்தமான குரல் அனுமதி கொடுத்தது.

‘வாய்ஸே டெரரா இருக்கே. மேகா உனக்கு செமத்தியா இருக்கு’ என்று புலம்பியவள் கதவை திறந்து உள்ளே நுழைந்தாள்.

கணினியின் முன் முகத்தை வைத்தபடி அமர்ந்திருந்தவனை கண்டவள்,

“சார் கூப்பிட்டிங்களா ஐ ஆம் மேக மொழியாள்” என்றிட,

“எஸ் மிஸ் மேகா” என்று கணினியில் இருந்து முகத்தினை விலக்கியவனை கண்டதும் இதயத்தினுள் பெரிதான பூகம்பம் வெடிக்க,

இதழ்கள் மெதுவாக, “க்யூட்டன்” என்று முணுமுணுத்தது.

“எனக்கு பஞ்சுவாலிட்டி ரொம்ப இம்ப்பார்ட்டனட். அண்ட் மோர் ஓவர் நீங்க உங்க சி. எல்லை விட அதிகமா லீவ் எடுத்து இருக்கிங்க டோன்ட் ரிப்பீட் இட் அகெய்ன். அதர்வைஸ் யூ வில் பீ டெர்மினேட்டட்” என்று அழுத்தமான குரலில் செவிகளில் ஒலித்தது.

ஆனால் அவளிடம் பதில் இல்லை. மேகா தான் சுயநினைவிலே இல்லையே.

“மிஸ் மேகா ஆன்சர் மீ” என்று மீது அழுத்தமான குரலில் தன்னிலை மீண்டவள்,

சடு
தியில், “சா… சாரி சார். இனிமே லீவ் எடுக்க மாட்டேன்” என்று தட்டுத்தடுமாறி மொழிந்தாள். உள்ளுக்குள் இதயம் தடதடத்தது அச்சத்தில்.

“ஹ்ம்ம். உங்க டி.எல் ராமநாதன் தானே? கரண்ட் ப்ராஜெக்ட் என்ன ஸ்டேட்ஸ்ல இருக்கு” என்க,

அவனுக்கு பதில் கூறியவளுக்கு லேசாக தலை சுற்றியது. காலையில் உணவு உண்ணாதது அதற்கு மேல் தன்னெதிரே இருப்பவனை கண்டதும் ஏற்ப்பட்ட அதிர்ச்சி என யாவும் சேர சடுதியில் மயங்கி சரிந்திருந்தாள்.








 
Active member
Messages
346
Reaction score
233
Points
43
Yemma megha unnoda cutan rombhavae azhagu than athukaga ipadi posukunu posukunu avan azhagula mayangi vizhaurathu ellam niyam ah
Adei senior ga la ungalukku ithu ellam niyam ah avaluku enna task ah kuduthu irukiga nega
 
Top