• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

மேகம் 4

Administrator
Staff member
Messages
464
Reaction score
794
Points
93
மேகம் 4:

சைத்தன்யா மேகாவை தாங்கி பிடித்ததும் எல்லோரும் பதற,


காயத்ரி அவனருகே ஓடி வந்து,

“ஹேய் மேகா மேக விழியாள் கண்ணை திறந்து பாரு” என்று அவளது கன்னத்தில் தட்ட,

முகில் ஓடி சென்று தண்ணீர் பொத்தலை எடுத்து வந்து கொடுத்தான்.

அதனை வாங்கி காயத்ரி மேகாவின் முகத்தில் இரண்டு முறை பட் பட்டென்று தெளிக்க,

மேகாவிற்கு லேசாக விழிப்பு வந்தது. இருந்தும் கண்களை திறக்க இயலவில்லை.

காயத்ரி, “சைத்து அவள என்மேல சாயச்சு வை” என்று அமர்ந்தவாக்கில் அவளை தாங்கி கொண்டவள் நீரை மேகாவிற்கு புகட்டினாள்.

வறண்டிருந்த தொண்டைக்கு நீர் சுகமாக இறங்க விழிகளை பாதி திறந்த நிலையிலே நீரை பருகினாள்‌.

உள்ளுக்குள் நீர் இறங்கியதும் சிறிது தெம்பு கிடைக்க விழிகளை நன்றாக திறந்து பார்த்தாள்.

அப்போது தான் இவர்களது முன்பு பயத்தில் மயங்கி விழுந்தது நினைவிற்கு வந்தது.

கூடவே விழிகளில் அருகில் நின்றிருந்த சைத்தன்யாவின் முகம் விழுந்தது.

மீண்டும் உள்ளுக்குள் பயப்பந்து உருண்டது.

இதற்குள் காயத்ரி, “தாங்க் காட்” என்றவள்,

“வா வா இங்க உட்காரு” என்று ஒரு நாற்காலியினை எடுத்து போட்டு மேகாவை அமர வைத்தாள்.

ஒரு நிலைப்படுத்தி அமர்ந்து கொண்ட மேகாவிற்கு தன்னை சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பவர்களை கண்டதும் என்னவோ போல இருந்தது.

இத்தனை பேரின் முன் மயங்கி விழுந்தது ஒருவித சங்கடத்தை தந்தது.

காயத்ரி, “மேகா ஆர் யூ ஓகே?” என்று வினவிட,

“ஹ்ம்ம்” என்று மெதுவாக தலையை அசைத்தாள்.

“என்னாச்சு உனக்கு?” என்று வினவியதும்,

அவளது விழிகள் சுற்றி இருந்தவர்களின் மீது ஒருவித அசௌகரியத்துடன் விழுந்தது.

அதனை உணர்ந்த காயத்ரி,

“நீங்க கிளம்புங்க நான் இவளை கொண்டு போய் விட்றேன்” என்று அவர்களை அனுப்பி வைத்தாள்.

அப்போது தான் ஓரளவிற்கு நிம்மதியாக இருந்தது. இருந்தும் அருகில் நின்றிருப்பவனது பார்வை தன்மீது படர்வதை கண்டு உள்ளுக்குள் அச்சம் அலை அலையாய் பரவியது.

அவர்களை அனுப்பிய காயத்ரி,

“இப்போ சொல்லு ஏன் மயங்கி விழுந்த?” என்று அவளது முகம் காண,

மேகா என்னவென பதில் அளிப்பாள். பயத்தில் மீண்டும் கண்கள் கலங்க துவங்கியது.

“மேகா இப்போ எதுக்கு நீ அழற?” என்று சைத்தன்யாவின் அழுத்தமான குரல் செவியில் விழுந்ததும்,

சட்டென்று ஒரு நடுக்கம் தோன்றிய ஆதரவிற்காக காயத்ரியின் கையை இறுக பிடித்து கொண்டாள்.

ஆனால் பதில் மொழியவில்லை. மாறாக அழுகை தான் அதிகரித்தது.

அவளது கைப்பிடியை வைத்தே மேகாவின் நடுக்கத்தை உணர்ந்த காயத்ரி ஆதரவாக அவளது கையை பிடித்தாள்.

அவளது பயத்திற்கு காரணம் தனது உற்ற நண்பன் தான் என்று புரிந்தது. ஆனால் காரணம் அதுதான் தெரியவில்லை.

திரும்பி,

“சைத்து நீ வெளியே வெயிட் பண்ணு” என்றாள்.

சைத்தன்யா மறுமொழி பேசாது வெளியேறிவிட,

“மேகா உனக்கு என்ன பிரச்சனை ஏன் மயங்கி விழுந்த? ஏதும் ஹெல்த் இஸ்யூஸா?”என்று வினா எழுப்ப,

“ம்ஹூம்” என்று தலை அசைந்தது.

“தென் வாட்?” என்றதும் அவளிடம் பதில் இல்லை.

“மேகா ஸ்பீக் அவுட்?” என்றிட,

“அது நான் லஞ்ச் சாப்பிடலை அதான்” என்று திக்கி திணறி பதில் பொழிந்தாள்.

“ஏன் சாப்பிடலை?” என்று பதில் வினா வர,

மேகாவிடம் மௌனம் மட்டும்.

தனது அலைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்து பழச்சாறு வாங்கி வர கூறிய காயத்ரி,

“அது மட்டும் தான் பிராப்ளமா?” என்று கேட்க,

“ஹ்ம்ம்” என்று தலை அசைத்தவளது முகத்தில் பதற்றம்.

“ஓ…” என்று இழுத்தவள்,

“அப்புறம் எதுக்கு அழுத?” என்று வினா தொடுக்க,

இவளது பதற்றம் அதிகரித்தது.

“சைத்துவ பாத்து எதுக்கு பயப்பட்ற? அவன் கேள்வி கேட்டதும் எதுக்கு அப்படி நடுங்குன?” என்று வரிசையாக அழுத்தமாக கேள்வி வந்து விழ,


மேகாவிற்கு பயத்தில் முகம் முழுவதும் வெளிறியது. விழிகளில் நீர் நிறைய துவங்கியது.


“ப்ச் மேகா அழாம பதில் சொல்லு” என்று காயத்ரி அதட்டிய கணம் ஒருவன் கையில் பழச்சாறுடன் வந்தான்.

அதனை வாங்கிய காயத்ரி,

“இந்தா இதை குடி” என்றிட,

“இல்லை வேணாம்” என்று மறுத்தாள்.

“ப்ச் குடி. சாப்பிடாம எனர்ஜி லாஸ் ஆகி எப்படி விழுந்த? இதை குடிச்சா எனர்ஜி கிடைக்கும்” என்று மொழிய,

வேறுவழியின்றி அதனை வாங்கி அருந்தினாள். காயத்ரி கூறியது போல அதனை வருந்தியதும் சற்று திடமாக தான் இருந்தது.

“இப்போ சொல்லு எதுக்கு சைத்துவ பாத்து அப்படி பயப்பட்ற?” என்றவளது குரலில் இருந்த அழுத்தம் நீ பதில் கூறியே ஆக வேண்டும் என்றது.

“அது நான்…” என்று துவங்கியவள் நடந்த அனைத்தையும் கூறி,

“என்னை மன்னிச்சிடுங்க சீனியர் நான் ஏதோ தெரியாம பண்ணிட்டேன்.‌ நீங்க இதை பெரிசு பண்ணிடாதிங்க. எதாவது பிராப்ளம் ஆனா எங்க வீட்ல என்னை படிக்க விட மாட்டாங்க” என்ற காயத்ரியின் கரத்தினை பிடித்தவளது விழிகளில் இருந்து நீர் சரசரவென இறங்கியது.

“ஊஃப்” என்ற காயத்ரிக்கு இவ்வளவு தானா? இதற்கா இவள் இத்தனை பயந்தாள் என்று தோன்ற அச்சிறு பெண்ணின் அச்சத்தை கண்டு மெலிதான புன்னகை கூட எழுந்தது.

“ஹேய் மேகா பேபி. சில் சில்” என்று அவளது கண்ணீரை துடைத்துவிட்டு,

“இது ஒரு மேட்டர்னு இதுக்கு போயா இவ்வளவு பயந்திட்டு இருக்க” என்று மொழிந்தவளை கண்டு மலங்க மலங்க விழித்த மேகா,

‘என்ன இவள் இதனை இத்தனை சுலபமாக எடுத்து கொண்டாள். தான் தான் ஏதேதோ நினைத்து பயந்துவிட்டோமா? என்னை திட்டுவதற்காக இவர்கள் அழைக்கவில்லையா?’ என்று எண்ணினாள்.

அவளது பார்வை மேலும் காயத்ரியை சிரிக்க வைக்க,

‘க்யூட்’ என்று முணுமுணுத்தவள்,

“மேகா பேபி. இந்த வயசுல சைட் அடிக்கிறது எல்லாம் சகஜம். இப்போ அதெல்லாம் பண்ணலைனா தான் அப்நார்மல். யார் அழகா இருந்தாலும் பார்க்கலாம் ரசிக்கலாம். ஒரு பொருள் அழகா இருந்தா ரசிப்போமே அந்த மாதிரி தான் இது” என்றவள்,

“இதுக்கு போய் ஏன் இப்படி பயப்பட்ற. இதுல அழுகை வேற”என்றிட,

“அப்போ நீங்க என்னை திட்ட கூறப்டலையா?” என்று ஐயப்பட,

அதில் வெளிப்பட்ட வெகுளிதனம் காயத்ரியை வெகுவாக கவர்ந்தது.

“நோ எனக்கு நடந்தது எல்லாம் நீ சொல்லி தான் தெரியும். அவன் என்கிட்ட எதுவும் சொல்லலை” என்று சிரிப்புடன் மொழிய,

‘நாமே சென்று மாட்டிக்கொண்டோமா?’ என்று மானசீகமாக தலையில் அடித்து கொண்டாள் மேகா.


அப்போ எதுக்கு கூப்டீங்க சீனியர்?”


“ஹ்ம்ம் மேக மொழியாள் உன்னோட நேம் ரொம்ப அழகா இருந்துச்சு. அதான் யார் வச்சா ஏதும் ரீசன் இருக்கானு கேக்க கூப்டேன். நீ அதுக்குள்ளயும் மயங்கி விழுந்துட்ட” என்று சிரிப்புடன் மொழிய,

மேகாவின் முகத்தில் லேசான அசட்டு புன்னகை பிறந்தது.

“அது என் அம்மா தமிழ் டீச்சர் அவங்களுக்கு தமிழ்பற்று அதிகம் அதான் இந்த நேம் வச்சாங்க” என்று மேகா மொழிய,

“ஓ…” என்று கேட்டு கொண்டாள் காயத்ரி.

“நைஸ் நேம் உன்னை மாதிரியே உன் நேமும் ரொம்ப அழகா இருக்கு” என்று காயத்ரி மொழிய,

“தாங்க்ஸ் சீனியர்” என்றவளது முகத்தில் சிறிதாக இருந்த பயமும் விலகி இருந்தது.

“இதுக்கு பயந்து தான் லஞ்ச் சாப்பிடாம வந்தியா?” என்று காயத்ரி கேட்க,

“ஹ்ம்ம்” என்று மேகாவின் தலை மேலும் கீழும் அசைந்தது.

“மேகா…” என்று இழுத்தவள் இருபுறமும் சிரிப்புடன் தலை அசைத்தாள்.

“மேகா லுக் யார் அழகா இருந்தாலும் சைட் அடிக்கலாம் தப்பில்லை. அப்புறம் தப்பு செய்யாம எதுக்கும் நாம பயப்பட கூடாது” என்று அழுத்தம் திருத்தமாக கூற,

“சரிங்க சீனியர்” என்று தலை ஆட்டினாள்.

“சரி நீ தமிழ்நாட்டில எங்க இருக்க?” என்று விசாரிக்க,

“சென்னை சீனியர்”

“ஓ… சென்னை தான் நேட்டீவ்வா?”

“இல்லை அப்பா அம்மா ரெண்டு பேருக்கும் நேட்டீவ் தென்காசி. அப்பா ஜாப் காரணமா சென்னையில செட்டில் ஆகிட்டோம் சீனியர்”

“அப்பா என்ன வொர்க் பண்றாங்க?”

“பேங்க்ல வொர்க் பண்றாங்க”

“அம்மா தமிழில் டீச்சரா?”

“ஆமா சீனியர்”

“மெரிட்ல வந்தியா?” என்று இந்த கல்லூரியின் கட்டண அளவை பற்றி அறிந்தவள் வினவ,

“இல்லை சீனியர். மேனேஜ்மென்ட் தான். அதான் மத்த செலவை நானே பாத்துக்க பார்ட் டைம் போய்ட்டு இருக்கேன்”

“ஹ்ம்ம் குட். உனக்கு அங்க யார் ஜாப் வாங்கி கொடுத்தது?”

“நானே தான் சீனியர் போய் கேட்டு ஜாயின்ட் பண்ணேன்”

“ஹ்ம்ம் வொர்க்கிங் ஹவர்ஸ் என்ன?”

“சிக்ஸ் டூ எய்ட் தர்ட்டி சீனியர்”

“ஹ்ம்ம்” என்றவள்,

“உன்னை பாத்தா எனக்கு என் தங்கச்சி நியாபகம் தான் வருது. அவளுக்கும் உன் ஏஜ் தான். உன்னை போல தான் இருப்பா.‌ என்னை நீ அக்கான்னே கூப்டு” என்றிட,

“சரிங்க அக்கா” என்றவளது முகத்தில் புன்னகை பிறந்தது. அவளுக்கும் சீனியர் என்று கூப்பிட விருப்பம் இல்லை தான்.

ஆனால் இங்கு அது தான் நடைமுறை எனும் போது அதனை பழகிக்கொள்ள தானே வேணும் என்று அழைத்தாள்.

“சரி ஓகே இந்த விஷயத்தை இதோட விட்ரு. யார்க்கிட்டயும் சொல்லாத” என்க,

“சரிங்கக்கா” என்று தலை அசைத்தாள்.

“அப்புறம் சைத்துவ பாத்து இனி பயப்படாத” என்றதும் மேகாவின் முகத்தில் கலவரம் பிறந்தது.

“ஹேய் இப்போ தான சொன்னேன் அதுக்குள்ள பயப்பட்ற” காயத்ரி போலியாக முறைக்க,

“அக்கா அது அவரை பாத்தாலே எனக்கு பயமாகிடுது” என்றவளது குரலிலே சிறிதளவு நடுக்கம் தெரிந்தது.

“அவன் என்ன பேயா பிசாசா? பேரை கேட்டதுமே இப்படி பயப்பட்ற”

“இல்லைக்கா எனக்கு அவரை பாத்தாலே ஒரு பயம் தானா வந்திடுது ஏன்னு தெரியலை”

“சைட் அடிக்கும் போது மட்டும் பயமா இல்லையா?”

“அது அவருக்கு தெரியாம அடிச்சேன்”

“ஆனாலும் இப்போ தெரிஞ்சிடுச்சே”

“இனிமே பாக்க மாட்டேனே”

“ஏன் தெரிஞ்சா என்ன? பாக்குறதுல ஒன்னும் தப்பில்லை” என்றவள்,

“அங்க பாரு என் ப்ரெண்ட் எவ்ளோ ஹாண்ட்சமா நிக்கிறான் பாரு” தூரத்தில் நின்றிருந்தவனை காண்பித்தாள்.

மேகா விழியுயர்த்தி பார்க்க காயத்ரி கூறியது போல அவன் சுவற்றில் ஒரு கையை சாய்ந்து நிற்பது கூட ஒருவித க்யூட்டாக தான் இருந்தது.

மனது மீண்டும், ‘க்யூட்டன்’ என்று முணுமுணுத்தது.

அடுத்த கணமே சட்டென்று தெளிந்தவள்,

“ம்ஹூம் வேணாம்” என்று தலையசைக்க,

காயத்ரி கேள்வியாக பார்த்தாள்.

“படிக்க வந்த இடத்துல படிக்கிற வேலையைச் மட்டும் பாக்கணும்” என்றிட,

“சரிதான். இரு என் நண்பனை கூப்பிட்றேன் பேசிட்டு போ” என்க,

“இல்லை வேணாம் நான் போறேன்” என்றவள் ஓடியே வந்துவிட்டாள்.

அதன் பிறகு விடுதிக்கு வந்து ஓய்வெடுத்தவள் தோழிகள் வந்ததும் கூறிவிட்டு பகுதி நேர பணிக்கு சென்றாள்.

வழக்கம் போல பிரதீப் குமாரின் பாடலுடன் தேநீர் விடுதியை அடைந்தவள் தன்னுடைய பணியை துவங்கினாள்.

நவீனாவிடம் நடந்தவற்றை கூறாமல் அவர் தனது கல்லூரியில் தான் முதுகலை படிக்கிறார் அவருக்கு தமிழ் தெரியும் அவர் ஏதும் கேட்கவில்லை என்று மட்டும் கூறியிருந்தாள்.


பதிலுக்கு நவீனா, “ஹேய் அவருக்கு எல்லாம் தெரிஞ்சும் ரியாக்ட் பண்ணாம இருக்கார்னா என்ன அர்த்தம்?” என்று புருவம் உயர்த்த,

“என்ன அர்த்தம்?” என்று மேகா வினவினாள்.

“அவருக்கு உன்னை பிடிச்சிருக்குன்னு அர்த்தம்” என்று கண்ணடித்தாள்.

சிலுசிலுவென உள்ளுக்குள் சாரலடிக்க அதனை ஒதுக்கியவள்,

“ஹேய் லூசு மாதிரி பேசாம போய் வொர்க்க பாரு” என்றுவிட்டவள் மற்ற வேலையை கவனித்தாள்.

ஏழு மணிக்கு மேல் இருவரும் தேநீர் விடுதிக்குள் நுழைய மேகாவின் கண்கள் லேசாக பளிச்சிட்டது.

இருவரும் வந்து அமர்ந்ததும் வழக்கம் போல வந்து,

“என்ன வேண்டும் சார்?” என்று வினவிட,

காயத்ரி, “ஹேய் இன்னைக்கும் ஏன் ஜாப்க்கு வந்த? ரெஸ்ட் எடுக்க வேண்டியது தான?” என்று வினா தொடுத்தாள்.

“மதியம் ரெஸ்ட் தான் எடுத்தேன் கா” என்று பதில் மொழிந்தவள் மறந்தும் சைத்தன்யாவின் புறம் திரும்பவில்லை.

“ஆஃடர் நூன் எடுத்தா இப்போ வந்தே ஆகணுமா?”

“அது லீவ் கிடைக்கிறது கஷ்டம் கா. எக்ஸாம் டைம்ல லீவ் தேவைப்படும்” என்றாள்.

“ஓ…” என்று கேட்டு கொண்டவள்,

“டூ மேட்லீன் டூ காஃபி” என்று ஆர்டர் கொடுக்க,

சடுதியில் பணியில் மும்முரமானவள் அவர்கள் கேட்டது கொண்டு வந்து கொடுத்துவிட்டு மற்றவர்களை கவனிக்க சென்றாள்.

அவர்கள் உண்டு முடித்ததும்,

“வேறு ஏதும் வேண்டுமா?” என்று கேட்டு பதில் கிடைத்ததும் பில்லை கொண்டு வர சென்றாள்.

பில் வந்ததும் நேராக அவர்களிடம் செல்லாமல் உள்ளே சென்றவள் அதில்,

“தாங்க்ஸ் பார் யுவர் ஹெல்ப் சீனியர்” என்று எழுதி ஒரு சிறிய பொம்மையை வரைந்தாள்.

அவனுடைய உதவிக்கு கண்டிப்பாக நன்றி கூற வேண்டும் என்று எண்ணியிருந்தவள் வெகுநேரம் சிந்தித்தே இந்த யோசனையை கண்டறிந்திருந்தாள்.

ஏதோ தைரியத்தில் எழுதிவிட்டாள் ஆனால் உள்ளுக்குள் சிறிதான பதட்டம் பிறந்தது.

நடந்து சென்று அவர்களின் முன் பில்லை வைத்தாள். இதயம் உள்ளுக்குள் படபடவென அடிக்க துவங்கியது.

எப்போதும் வரும் தொகை தானே என்று எண்ணியிருந்தவன் வழக்கம் போல பணத்தை எடுத்து அந்த பில்லை பார்க்காமலே வைத்துவிட்டு எழுந்து கொள்ள இவளது சடுதியில் என்னவோ போல ஆகிவிட்டது.

உள்ளுக்குள் சிறிதான ஏமாற்றம் அலை அலையாக பரவியது.

காயத்ரி, “வரேன்” எனும் விதமாக தலையசைக்க,

பதிலுக்கு தலையை ஆட்டியவளது விழிகள் ஏமாற்றம் பரவியிருந்தது.

அவர்கள் நகர்ந்ததும் பணத்தை கொடுக்க சென்றவள் கதவினை திறந்து அவர்கள் வெளியேறுவதையே பார்த்து கொண்டிருந்தாள்‌.

மெதுவாக அவளது க்யூட்டனது உருவம் விழிகளில் மங்க துவங்கியது.

சரியாக கதவினை திறந்து மூடும் கணம் சைத்தன்யா திரும்பிவிட,

இதனை எதிர்பாராதவள் அதிர்ந்து விழிக்க,

சிறிய தலையசைப்பை கொடுத்திருந்தான்.

இதனை சிறிதும் எதிர்பாராதவள் திகைத்து விழித்து பிறகு காரணம் உணர்ந்ததும் பெரிதாய் மகிழ்ந்து,

“தாங்க்ஸ் அக்சப்டடா க்யூட்டன்” என்று முணுமுணுத்திருந்தாள்.

முதல் முதலாய்

ஒரு மெல்லிய
சந்தோஷம் வந்து
விழியின் ஓரம்

வழிந்தது இன்று

***************

ஏகமாய் அதிர்ந்து தன்னை நோக்குபவளை கண்டு மீண்டும் அழுத்தம் திருத்தமாக,

“நான் மேரேஜை ஸ்டாப் பண்ணிட்றேன்” என்க,

இவளுக்கு கண்ணீர் சரசரவென இறங்கியது.

“அதான் உன் ஆசைப்படியே செய்யிறேன்னு சொல்லிட்டேனே அப்புறமும் ஏன் அழற மேகா” என்று அழுத்தி வினவ,

இவளுக்கு அழுகை பெருகியது.

“நீ தான இந்த மேரேஜை ஸ்டாப் பண்ண ஆசைப்பட்ட?” என்றவனது வினாவிற்கு அழுகையுடன் தலையை மேலும் கீழும் அசைத்தாள்.

“தென் வாட்?” என்றிட இவளிடம் பதில் இல்லை.

தான் தான் திருமணத்தை நிறுத்த அவனிடம் கூறினோம் அதனை தானே அவன் செய்கிறான் பிறகென்ன அழுகை மனசாட்சி வினவியது.

ஆனால் பதில் தான் கிடைத்தபாடில்லை. நிறுத்துவது என்று முடிவெடுத்தாயிற்று ஆனால் இவனில்லாமல் நீ என்ன ஆவாய் என்று மனது கிடந்து அடித்து கொள்ள என்ன செய்யவென புரியவில்லை.

உள்ளுக்குள் உயிரை வேரோடு பிடுங்கி போட்ட உணர்வு கொல்லாமல் கொன்று திண்றது.

“மேகா லுக் அட் மீ. ஐ லவ் யூ சோ மச். இந்த மேரேஜை கேன்சல் பண்றதும் உனக்காக தான் பிகாஸ் நீ கேட்டு கிடைக்காதது என்கிட்ட எதுவும் இல்லை” என்று அவளது விழிகளை பார்த்து ஆழ்ந்த குரலில் கூற,

இவளுக்கு உள்ளுக்குள் மொத்தமாய் ஒன்று நழுவி அவனிடம் சரணடைந்திட, தாவி அவனை இறுக அணைத்து கொண்டாள்.

‘இது தான் இறுதியான அணைப்பு’ என்று உள்ளம் கூக்குரல் இட்டது.

முடிந்தளது அவனை வெகு இறுக்கமாக அணைத்து கொண்டவள் அவனது கழுத்தில் ஆழ புதைந்து கொண்டாள்.

மெலிதாக அவனது வாசம் இவளை நனைக்க துவங்க இவளது கண்ணீரில் சைத்தன்யாவின் உடல் நனைய துவங்கியது.

“சா… சாரி பார் எவ்ரிதிங்க்” என்றவளது இதழ்கள் அவனது கழுத்தில் உரசி மீண்டது.

இத்தனை நடந்தும் அவனது கரங்கள் அவளை அணைக்கவில்லை அப்படியே தான் இறுகியபடி அமர்ந்திருந்தான்.

அவனது இறுக்கத்தை உணர்ந்தவளுக்கு உள்ளமெங்கும் வலி பரவிட நிமிர்ந்து அவனது முகம் கண்டாள்.

அது எந்தவித உணர்வுகளுமின்றி நிச்சலமாக இருந்தது.

அவளது அழுதழுது சிவந்திருந்த முகமும் நடுங்கிய இதழ்களும் அவனை உள்ளுக்குள் மேலும் இறுக செய்தது.

விழிகளை மூடி திறந்து மேலும் அவனை நெருங்கியவள் தன்னுடைய நடுங்கும் இதழ்களை அவனிதழ்களோடு கோர்த்து கொண்டாள்.

இருவருக்கும் வாழ்வின் முதன் முதலான இதழணைப்பு.

இறுதி யாவும் இறுதி இறுதி முத்தம் இறுதி ஸ்பரிசம் என்று உள்ளே ஒன்று அடித்துக் கொள்ள அந்த ஒற்றை முத்தத்தில் மொத்த நேசத்தை கொட்டியவள் பிறகு மெதுவாக அவனிடமிருந்து பிரிந்து,

“யூ டிசர்வ் அ பெட்டர் பெர்சன்” என்று எழுந்து கொண்டாள்.

அவளுடைய செய்கை எதற்கும் எந்த எதிர்வினையும் இல்லை அமைதியாக அழுத்தமாக அவளை பார்த்திருந்தான்.

அதற்கு மேலும் அந்த பார்வையை அதன் வீச்சையும் தாங்க இயலாதவள் விறுவிறுவென எழுந்து பால்கனியில் நின்று கொண்டாள்.

இன்னும் விடாது பெய்து கொண்டிருந்த
மழையில் பாவையின் கண்ணீரும் கரைந்து அவளையும் கரைத்து கொண்டிருந்தது.

அவன் எழுந்து வெளியே செல்வது தெரிந்தது தெரிவைக்கு. இருந்தும் திரும்பவில்லை.

திரும்பினால் நிச்சயமாக தான் அவனை செல்ல விட மாட்டோம் என்று புரிந்து தான் மனதை கல்லாக்கி கொண்டு நின்றிருந்தாள்.

கொட்டும் மழையில் நனைந்தவாறு மகிழுந்தை இயக்கி செல்வனையே வெறித்தவளது நினைவு சில மாதங்களுக்கு முன்பு சென்றது…










 
Well-known member
Messages
859
Reaction score
630
Points
93
Iva ean ipdi panraa

Onnume illaathathukku megha thaan romba bayanthirukkaa
 
Active member
Messages
346
Reaction score
233
Points
43
Megha oda name nalla iruku nu pesa koopitu irukaga aana athukula bayandhu ipadi mayangi yae vizhundhuta ah
Megha ku avan mela athigam ah love irundhum venam nu sollura alavuku avaluku enna achi ava chaidhu paridhapattu than aval ah love pannan guilty conscious la than kalyanam panran nu iva nenaikira thuku kandipa ethachum karanam irukum la
 
Top