• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

மேகம் 3

Administrator
Staff member
Messages
464
Reaction score
794
Points
93
மேகம் 3

இதயமே ஹோ இவனிடம்

ஹோ உருகுதே ஒ…
இந்த காதல் நினைவுகள் தாங்காதே இது தூங்கும் போதிலும் தூங்காதே…

சைத்தன்யா அகன்றதும்,

“ஏய் மேகா உன் செலக்ஷன் சூப்பர் டி” என்று சரண்யா அவளது கையை பிடித்து கொண்டாள்.

“ஆமாடி இனிமேல் அவர் உனக்கு மட்டும் க்யூட்டன் இல்லை எங்களுக்கும் தான்” என்று திவ்யா மொழிய,

“ஆமாடி. ப்பா என்ன கலர் என்ன ஸ்டைல்” என்று சரண்யா இயம்ப,

“ஆமா அந்த கண்ணு இருக்கே கண்ணு ப்பா…” என்று திவ்யா விழி மூடி சிலாகித்தாள்.

இங்கு இருவரும் இத்தனையாக பேசி கொண்டு இருக்க மேகா தான் பேயறைந்ததை போல அமர்ந்திருந்தாள்.

அப்போது தான் அவளது நிலையை கவனித்து திவ்யா,

“என்னடி நாங்க இவ்ளோ பேசிட்டு இருக்கோம். நீயென்னவோ பேயறைஞ்ச மாதிரி இருக்க” என்று உலுக்கிட,

“நிஜமாவே பேய் தான் அறைஞ்சிடுச்சுடி” என்றவளது குரலில் சுரத்தே இல்லை.

சரண்யா, “ஏன்டி என்ன ஆச்சு?” என்க,

“அவர் நேட்டீவ் தமிழ்நாடாம்” என்று மேகா இழுக்க,

“அதனால என்னடி நல்ல விஷயம் தான். அவர் நேபாளியா இருந்தா நம்ம பேசுற இங்கிலிஷ்ல நம்ம பக்கம் கூட எட்டி பார்க்க மாட்டாரு. நல்ல வேளை நம்ம ஊரா போய்ட்டாரு” என்று சரண்யா மகிழ,

“ஆமா டி. இங்க பாரு அவர் போன பின்னாடி எல்லாரும் அவரை பத்தி தான் பேசிட்டு இருக்காங்க” என்று திவ்யா வகுப்பை காண்பித்தாள்.

மேகாவும் அப்போது தான் கவனித்தாள். வகுப்பில் இருந்த பாதிக்கு மேல் மாணவிகள் எல்லாம் சைத்தன்யாவை பற்றி தான் பேசி கொண்டு இருந்தனர்.

ஒரு சிலர் இன்னும் மேலே போய்,

“ஹீ இஸ் மைன்” என்று சிறிதாக சண்டை கூட போட்டு கொண்டு இருந்தனர்.

அதனை கண்ட மேகா, ‘ஐயையோ இதை கவனிக்காம போய்ட்டேனே. இப்போ இவளுக்கிட்ட இருந்து என் க்யூட்டனை காப்பாத்தணுமே. இவருக்கு படிக்க வேற காலேஜே கிடைக்கலையா…? இவங்க எல்லாரும் வேற நல்ல கலரா அழகா இருக்காங்களே’ என்று மனதிற்குள் பெரிதாய் அலற,

மேகாவின் முக பாவனையை கண்ட திவ்யா,

“இப்போ இவங்ககிட்ட இருந்து நாம எப்படி அவரை காப்பாத்த போறோம்” என்று வருந்தினாள்.

‘ஐயையோ கூட இவங்க ரெண்டு பேரும் கூட அவரை பாக்குறாங்களா? ஊருக்குள்ள நாலஞ்சு க்ரஷ் வச்சிருக்கவங்க எல்லாம் சந்தோஷமா இருக்கான் ஒரே ஒரு க்ரஷ் வச்சிக்கிட்டு நான் படுற பாடு இருக்கே ஐயையையோ’ என்று மனதோடு புலம்பியவள் அதனை கிடப்பில் போட்டு விட்டு பழைய பிரச்சனைக்கு வந்தாள்.

“நான் நேத்து ஒரு சம்பவம் பண்ணிட்டேன்” என்க,

“என்னடி?” என்ற இருவரது குரலில் அவ்வளவு ஆர்வம்.

“அது நேத்து அம்மா போன் பண்ணாங்க” என்று துவங்கியவள் நடந்ததை கூறி முடிக்க,

“அடிப்பாவி” என்று சரண்யா வாயில் கையை வைக்க,

“ஏன்டி யார் இருக்கான்னு பாத்து பேச மாட்டியா?” என்று திவ்யா மொழிந்தாள்.

“அது நாங்க திரும்பி இருந்ததால அவர் வந்ததை கவனிக்கலை. நான் பேசுனதை கேட்டு இருப்பாரா?” என வருத்தம் இழையோடிய குரலில் வினவிட,

“வாய்ப்பு நிறைய இருக்கு” என்றாள் சரண்யா.

“கேட்ருந்தா ஏன் ரியாக்ட் பண்ணலை?” என்று மேகா வினா தொடுக்க,

“அது பப்ளிக் ப்ளேஸ்ல அங்க கேட்க வேணாம் காலேஜ்ல வச்சு ரேகிங் பண்ணிக்கலாம்னு நினைச்சு இருந்தா…” என்று திவ்யா இழுக்க,

“அதெப்படி எனக்கே இன்னைக்கு தான் அவர் இந்த காலேஜ்ல படிக்கிறது தெரியும்” என்று மேகா ஐயப்பட,

“அடியே மக்கு உனக்கு இன்னைக்கு தான் தெரியும் ஒருவேளை அவருக்கு ஏற்கனவே நீ அவரோட ஜூனியர்னு தெரிஞ்சிருந்தா?” சரண்யா கேட்க,

“ஆமால்ல” என்று மேகா மொழிய,

“என்ன ஆமா போச்சு அவர் உன்னை வச்சு செய்ய போறாரு” என்று திவ்யா இயம்பினாள்.

“மூவிஸ்ல எல்லாம் பாப்போமே அந்த மாதிரி எதாவது கூப்டு வச்சு வம்பிழுப்பாங்களோ…?” என்று சரண்யா இழுக்க,

இங்கு மேகாவிற்கு வயிற்றினுள் பயப்பந்து உருண்டது.

மேகா நெருங்கிய தோழிகளிடம் ஓரளவு நன்றாக பேசுவாள் மற்றபடி அவள் அமைதியே. யாரிடமும் எந்த வம்புக்கும் செல்லாது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கும் ரகத்தை சேர்ந்தவள்.

இதற்கு முன்பும் அழகாக இருப்பவர்களை சைட் அடித்திருக்கிறாள் தான். சைத்தன்யா கொஞ்சம் சினிமா நாயகன் சாயலில் நன்றாக இருந்ததால் க்ரஷ் வரிசையில் சேர்த்து இருந்தாள்.

அதுவும் யாரிடமும் தெரிவிக்க எண்ணவில்லை. நவீனா அவளாக கண்டறிய கடைக்கு வந்து செல்பவர் தானே என்று எண்ணி தான் நண்பர்களிடமும் கூறினாள்.

ஆனால் அவன் இப்படி கல்லூரியில் தனக்கு சீனியராக வந்து நிற்பான் என்று கனவிலும் நினைத்து பார்க்கவில்லையே

இதனால தனக்கோ தன்னுடைய படிப்பிற்கோ எதாவது பிரச்சனை வந்துவிட்டால் என்ன செய்வது? பெற்றோர் தனது படிப்பையே நிறுத்திவிட்டு அழைத்து சென்றுவிடுவார்களே? தன்னுடைய படிப்பு என்னாவது?

அவரை பார்த்தால் பெரிய இடத்து பிள்ளை போல தெரிகிறது. தான் அவரை பற்றி பேசியதை கேட்டு கோபம் கொண்டு எதாவது கூறிவிட்டால் என்ன செய்வது. மாணவர்களிடமே சற்று கண்டிப்புடன் தானே நடந்து கொண்டார். ஒருவரை பற்றி அவர் அனுமதி இல்லாது பேசுவது தவறுதானே? என்று எண்ணி பயந்தவள் விட்டால் அழுதுவிடுவாள் போல முகத்தை வைத்திருந்தாள்.

அதுவும் அவர் ருக்ஷா மேடத்தின் மிக விருப்பமான மாணவன் போல மேடத்திடம் தன்னை பற்றி எதாவது கூறிவிட்டால் அவர் தனது மதிப்பெண்ணில் கைவைத்து விட்டால் என்று சிந்தனை எட்டு திக்கும் பறந்தது.

அதனை கண்ட மற்ற இருவரும் பதறி,

“ஹைய் மேகா எதுக்கு இப்படி அழற மாதிரி பேஸ வச்சிருக்க? நீ ஜஸ்ட் நல்லா இருக்காருனு தான் சொன்ன இதுல என்ன இருக்கு. அவர் கேட்டே இருந்தாலும் எந்த பிராப்ளமும் இல்லை சரியா விடு பாத்துக்கலாம்” என்று ஆறுதல் கூற,

இவளது முகம் இன்னும் தெளியில்லை.

“அடியே எந்த பிரச்சனையும் வந்தாலும் நாங்க உன் கூட இருக்கோம்போதுமா?” என்று திவ்யா அழுத்தி கூறி கையை பிடிக்க மேகாவிற்கு சிறிது நம்பிக்கை பிறந்தது.

ஆனால் அடுத்த நொடியே அதனை மண்ணோடு மண்ணாக்கும் விதமாக வந்தது ஒரு செய்தி‌.

“ஹே கைஸ் லிசன்” என்று வகுப்பு தலைமை மாணவன் இயம்ப,

எல்லோருடைய கவனமும் அவன் புறம் திரும்பியது.

“இன்னைக்கு ஆஃபர்நூன் சீனியர்ஸ் நம்ம எல்லாரையும் ஆடிடோரியம்ல அஸம்பிள் ஆக சொல்லி இருக்காங்க. நம்மக்கிட்ட ஏதோ பேசணுமாம்” என்றவனது கூற்றில் இவளது முகத்தில் கலவரம் படர்ந்தது.

அவன் கூறிய கூற்றில் மற்ற இருவருக்கும் கூட சிறிது அச்சம் பிறந்தது.

இத்தனை நாட்கள் இல்லாமல் இன்று ஏன் அனைவரையும் அழைக்கின்றனர்.‌ அதுவும் நேற்று இந்த நிகழ்வு நடந்த பிறகு அழைக்கிறார்கள் என்றால் என தான் நினைக்க வைத்தது.

சீனியர் மாணவனையே நீ கமெண்ட் அடிக்கிறாயா? என்று கூப்பிட்டு திட்டத்தான் போகின்றனர் என்று உள்ளுக்குள் அச்சம் விரவியது.

ஆனால் வெளியே காண்பிக்கவில்லை ஏற்கனவே மேகா பயத்தில் இருக்கிறாள் தாங்கள் அஞ்சுவதை வெளிக்காட்டினால் அவள் இன்னும் பயந்து போவாள் என்று தைரியமாக இருப்பது போல காண்பித்து கொண்டனர்.

திவ்யா, “இது வேற எதாவது அனௌன்ஸ்மென்ட்காக இருக்கும் நீ பயப்படாத பாத்துக்கலாம்” என்று கூறிவிட்டிருந்தாள்.

அதன் பின்னர் வகுப்பு நடந்தது. ஆனால் மூவருக்கும் கவனம் அதில் இல்லை.

இதில் அதிகம் பயந்தது மேகா தான் காரணம் அவள் தான் இதில் நேரடியாக தொடர்புடையவள். மற்ற இருவரும் சற்று வசதி படைத்த குடும்பத்தினை சேர்ந்தவர்கள் அவர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் நிச்சயம் சமாளித்துவிடுவார்கள்.

ஆனால் தனது பெற்றோர் சின்ன பிரச்சனை ஆனாலும் தன்னை அழைத்து செல்லும் முடிவை தான் எடுப்பார்கள் என்று மறுகியவள் கடவுளிடம் மனதிற்குள் ஆயினும் வேண்டுதலை வைத்தாள்.

இனி அந்த உலக அழகனே வந்தாலும் தான் திரும்பி கூட பார்க்க மாட்டேன் இனி படிப்பது மட்டும் தான் தன்னுடைய தலையாய கடமை என்பது போல இருப்பேன் என்று பலவாறு வேண்டி கொண்டாள்.

வரவே கூடாது என்று அவள் எதிர்பார்த்த உணவு இடைவேளை வந்தது. சாப்பிட சிறிதும் மனம் இல்லாததால் உணவை மறுத்துவிட்டிருந்தாள்.

உணவு இடைவேளை முடிந்ததும் எல்லோரும் ஆடிடோரியம் செல்ல தயாராக வேறு வழியின்றி இவளும் இணைந்து கொண்டாள்.

எல்லோரும் முன் செல்ல நண்பர்களுடன் பின் சென்றவள் இறுதி வரிசையில் யாருடைய கவனத்தினையும் கவராது அமர்ந்தாள்.

அவர்கள் வந்ததும் முதுகலை மாணவர்கள் வர எல்லோரும் மரியாதை நிமித்தமாக எழுந்து நிற்க தானும் எழுந்து நின்றாள்.

சரியாக அவளுடைய பார்வையில் விழுந்தான் அழுத்தமான நடையுடன் நடந்து வரும் சைத்தன்யா.

இதயத்தில் தடதடவென தொடர்வண்டி ஓடும் ஓசை கேட்க பட்டென்று அமர்ந்து தன்னுடைய முகத்தை முடிந்தளவு மறைந்து கொண்டாள்.

முதுகலை மாணவர்கள் வந்ததும் மேடை மேல் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டனர்.

அதில் நடுவில் இருந்த ஒருவன் எழுந்து,

“ஹாய் எவ்ரிவன்” என்று சிரிப்புடன் கை அசைக்க,

“ஹாய் சார்” என்று இளையவர்களும் ஆர்ப்பரித்தனர்.

மேகா ஏதும் செய்யவில்லை அவள் தான் உட்சபட்ச அச்சத்தில் இருந்தாளே.

“ஐ ஆம் முகில் ப்ரம் பிஜி” என்று தன்னை அறிமுகப்படுத்தி கொண்டான்.

பிறகு, “மற்றவர்கள் தங்களை அறிமுகம் செய்வார்கள்” என்று மொழிய,

வரிசையாக ஒவ்வொராக எழுந்து தங்களை அறிமுகம் செய்து கொண்டார்கள்.

பின்னர் இளையவர்கள் முறை அவர்களும் செய்தனர். மேகா எழுந்து தன்னை அறிமுகம் செய்து கொண்டாலும் அதில் சுரத்தே இல்லை.

ஒருவித பதற்றம் அச்சமே மேலோங்கி இருந்தது.

அறிமுகப்படலம் முடிந்ததும் முகில் எழுந்து,

“எல்லாருக்கும் காலேஜ் செட் ஆகிடுச்சா?” என்று வினவ,

“காலேஜ் எல்லாம் செட் ஆகிடுச்சு லவ் தான் செட் ஆகலை” என்று கூட்டத்தில் இருந்து ஒரு குரல் கேட்டது.

அங்கே சிரிப்பலை எழுந்தது. முகிலும் சிரிப்புடன்,

“அதெல்லாம் போக போக செட் ஆகும்” என்றவன்,

“ப்ரெண்ட்ஸ் எல்லாம் கிடைச்சிட்டாங்களா?” என்று வினவினான்.

“எஸ்” என்று கோரஸாக பதில் வந்தது.

“நாங்க நீங்க வந்ததுமே பேச நினைச்சோம் எங்களுக்கு அப்போ எக்ஸாம் டைம் அதான் பேச முடியலை” என்று முகில் மொழிய,

மூவரும் சிறிது ஆசுவாசத்துடன் தங்களை பார்த்து கொண்டனர்.

“க்ளாஸ் எல்லாம் எப்படி போகுது. படிக்கிறதுக்கு ஈஸியா இருக்கா? எதாவது டவுட்ஸ் இருந்தா தயங்காம எங்ககிட்ட கேளுங்க. இங்க இருக்க யார்க்கிட்ட கேட்டாலும் சொல்லி தருவாங்க” என்று மொழிய,

“சைத்தன்யா சார் சொல்லி தருவாரா?” என்று கூட்டத்தில் இருந்து கேள்வி எழும்ப,

மீண்டும் சிரிப்பொலி கலகலவென பரவியது.

“ஹ்ம்ம் கேட்கலாம் கண்டிப்பா சொல்லி தருவாரு” என்று முகிலுக்கு முன் பதில் வந்தது எல்லோரும் பதில் வந்த திசையை திரும்பி பார்த்தனர்.

மேகாவும் பார்த்தாள் பதில் கூறியவள் காயத்ரி. சைத்தன்யாவுடன் தினமும் தேநீர் விடுதிக்கு வரும் அழகு யுவதி.

“ஃபுட்பால் கிரவுண்ட்ல தான் தினமும் இருப்பாரு. டவுட்ஸ் இருந்தா அங்க வந்தே கேட்டுக்கோங்க” என்று மேலும் சிறிது தகவலை கொடுக்க,

“ஓகே…” என்று நிறைய குரல்கள் எழுந்தது.

இத்தனை கலவரத்திலும் சைத்தன்யா ஏதும் பேசாது அமைதியாக தான் இருந்தான். அதுதான் இவளுக்கு இன்னும் கிலியை கிளப்பியது.

முகில், “நாங்க‌ உங்களை கூப்டதுக்கு ரீசன் உங்களுக்கு ப்ரெஷர்ஸ் பார்டி அரேன்ஜ் பண்ணி இருக்கோம். கம்மிங் பிப்டீன் பார்டி இந்த ஆடிடோரியம் தான் நடக்க போகுது. உங்களை இன்வைட் பண்ணதான்” என்றவன் நண்பர்களை காண எல்லோரும் எழுந்து வந்து பத்திரிகையை நீட்ட,

இளைய வகுப்பு மாணவ தலைவன் வந்து பெற்று கொண்டான்.

பின்னர் பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு எல்லோரும் கலைந்து செல்லுமாறு கூறிட,

மேகா தன் தோழிகளுடன் விட்டால் போதும் என்று எழுந்து ஓடப் பார்க்க,

“மேகா மேக மொழியாள் மட்டும் இங்க வா” என்ற குரல் அவளது வயிற்றுக்குள் பூகம்பத்தை தோற்றுவித்தது.


வெளிறிய முகத்துடன் நண்பர்களை காண,

“அவளை தவிர எல்லாரும் கிளம்புங்க” என்று அதட்டல் காயத்ரியிடமிருந்து வர,

சரண்யாவும் திவ்யாவும் பார்வையிலே தோழியிடம் தைரியம் கூறிவிட்டு விடைய பெற்றனர்.

நகர மறுத்த கால்களை நகர்த்தி நடந்து சென்று காயத்ரியின் முன் நின்றவளுக்கு பயத்தில் முகம் வெளுத்து விழிகளில் நீர் கோர்த்து இருந்தது.

காயத்ரியின் அருகில் தான் சைதன்யா அமர்ந்து இருந்தான். அவனை தொடர்ந்து மற்ற மாணவர்களும் அமர்ந்து இருந்தனர்.

இத்தனை பேரின் முன் தான் திட்டு வாங்க போகிறோம் என்ற எண்ணம் அச்சத்தை அதிகப்படுத்தியது.

காலையில் உணவு உண்டது அதற்கு பிறகு தண்ணீர் கூட அருந்தாதது பயம் என எல்லாம் சேர்த்து விழிகளை மங்க செய்ய எதிரில் இருந்தவர்களது உருவம் மறைய துவங்க பட்டென்று மயங்கி சரிந்திட சடுதியில் எழுந்து இரண்டெட்டில் அவளை தாங்கி இருந்தான் சைத்தன்யா.

மயக்கத்திற்கு காரணமானவன் மீதே ஒய்யாரமாக மயங்கி கிடந்தாள் மேக மொழியாள்.

********************

வாசலில் வந்து நின்றவனை கண்டு தமயந்தியும் சேதுபதியும் எழுந்து,


“வா…வாங்க மாப்ளை” என்று சிறிது பதற்றத்துடன் வரவேற்றனர்.

அவர்களுக்கு பதிலாக சிறிய தலையசைப்பை கொடுத்தவனது பார்வை அழுத்தமாக மேகாவின் மேல் தான் இருந்தது.

அந்த பார்வையின் வீரியத்தை தலையை நிமிர்த்தி பார்க்காமலே உணர்ந்தவளுக்கு உள்ளுக்குள்ளே பயப்பந்து உருள துவங்கியது.

வந்திருங்கியவனை கண்டதுமே பெரியவர்களுக்கு புரிந்தது தங்களது புதல்வி அவனிடமும் திருமணத்தை நிறுத்த கூறியிருக்கிறாள் என்று.

தமயந்தி, “நான் போய் உங்களுக்கு குடிக்க ஏதாவது எடுத்துட்டு வர்றேன் தம்பி” என்று சமையலறைக்குள் நுழைந்து விட்டார்.

காரணம் அவருக்குமே சைத்தன்யாவை கண்டாள் பயமே.

சேதுபதி இப்போது பேச வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.

“தம்பி‌ பாப்பா எங்ககிட்ட கல்யாணத்தை நிறுத்த சொன்னா? உங்களுக்கும் அவளுக்கும் ஏதாவது பிரச்சனையா?” என்று வினவிட,

“ம்ஹூம்” என்று தலையசைத்தவனது பார்வை இப்போதைய விட அழுத்தமாக அவள் மீது படர்ந்தது.

அதுவும் அவளது அழுது சிவந்த முகம் இவனுடைய புருவத்தை நெரிய செய்தது.

அவனது பார்வையை அதற்கு மேல் தாள மாட்டாதவள் விறுவிறுவென படிகளில் ஏறி மாடிக்கு சென்றிட,

அவள் ஏறிடும் வேகத்தில் இவர்களை இருவருக்கும பதறியது.

“நான் அவக்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்று தகவலை கூறியவன் விறுவிறுவென மேலேறி செல்ல,

இதனை கண்ட சேதுபதிக்கு உள்ளுக்குள் பயமும் பதற்றமும் தோன்றியது மகளது வாழ்வை நினைத்து.

சைத்தன்யா இரண்டெட்டுகளாக மேலேறி சென்றிட,

வேகவேகமாக படியேறி வந்ததன் விளைவாக காலை பிடித்து கொண்டு வலியில் முகச்சுழிப்புடன் நின்றிருந்தாள் மேகா.

இதனை எதிர்ப்பார்த்தவனுக்கு கோபம் கண்மண் தெரியாமல் பெருகிட,

முகத்தில் கோப ஜுவாலையுடன் அவளை நெருங்கியிருந்தான்.

அவனது கோபத்தை கண்டவள் அச்சத்தில் விழிவிரித்து சுவற்றோடு ஒன்றினாள்.

அவளது விழிகளை கண்டு, “ப்ச்” என்று தன்னை கட்டுப்படுத்தியவன் அவளது காலடியில் மண்டியிட்டு வலது காலை எடுத்து பார்க்க, இவளுக்கு விழி நீர் பெருகியது.

“வலிக்குதா?” என்றவனது குரலில் செவிக்குள் நுழையும் கணம் மொத்தமாய் ஒன்று உருகி அவன் காலடியில் விழுந்ததை அவள் மட்டுமே அறிவாள்.

எதிரில் இருந்த நாற்காலியை எடுத்து போட்டு,

“உட்கார்” என்றிட,

இவள் அசையாது நின்றாள்.

“உன்னைத்தான் உட்கார சொன்னேன் மேகா” என்றவனது அதட்டல் குரலில் பட்டென்று தன்னை மீறி அமர்ந்தாள்.

தானும் எதிரில் அமர்ந்தவன்,

“மேகா” என்று அழைக்க,

பார்வை தரையில் இருந்தது.

“மேகா லுக் அட் மீ. நான் பேசும் போது என்னை பாக்கணும்” அழுத்தம் திருத்தமாக வர,

இவள் நிமிர்ந்து அவனது முகம் கண்டாள். அடுத்த கணமே இவளது கண்ணீர் சுரப்பிகள் வேகமாக வேலை செய்ய துவங்கியது.

பெரும்பாடு பட்டு அழுகையை அடக்கி கொண்டு அவனை கண்டாள்.

“மேகா என்னாச்சு?” என்று வினவிட,

வழக்கம் போல பதில் இல்லை.

“மேகா உன்கிட்ட தான பேசிட்டு இருக்கேன். இப்படி சைலண்ட்டா இருந்தா என்ன மீனிங். வாட் ஹாப்பன்ட் இப்போ எதுக்கு நீ மேரேஜை ஸ்டாப் பண்ண சொன்ன?” என்று பொறுமையை இழுத்து பிடித்து கொண்டு வினவினான்.

அது சைத்தன்யாவை பற்றி அறிந்திருந்த மேகாவிற்கும் நன்றாக புரிந்தது.‌ அவனுடைய பொறுமையின் உட்சபட்சமே இதுதான் என்று அறிந்தவள்.

ஆனாலும் வாயை திறக்கவில்லை. என்னவென்று பதில் மொழிவாள் அவளுக்கே தெரியவில்லையே. பரிதாபத்தில் வந்த நேசம் குற்றவுணர்வினால் வந்த காதல் அதனால் விளையும் திருமணம் ஏதும் வேண்டாம் என்று கத்த தோன்றியது ஆனால் அதனை செய்யவில்லை.

அமைதியாக அவன் முகம் கண்டவள்,

“கால் ஆப் தி மேரேஜ்” என்று மட்டும் கூறிட,

“வாட் தி ஃப…” என்று தொடங்கியவன் பின்னர் தன்னை
கட்டுப்படுத்தி,

“மேகா வாட் ஆர் யூ டாக்கிங்? எதுக்காக மேரேஜை ஸ்டாப் பண்ற சொல்ற?” என்று மிகவும் முயன்று பொறுமையாக கேட்க,

அங்கே அமைதி கோலோச்சியது.

“சரி ஓகே நான் மேரேஜை ஸ்டாப் பண்ணிட்றேன்” என்றவனது குரலில் விலுக்கென்று நிமிர்ந்தவளது முகத்தில் அதிர்ச்சியோடு கண்ணீரும் அலையலையாய் இறங்கியது…




 
Well-known member
Messages
859
Reaction score
630
Points
93
Ean enna reason, megha ean ipdi panraa

Enna nadakka pogutho nu bakku bakku nu irunthuthu, athukkulla mayankittale
Verithanama Waiting for next ud ma
 
Active member
Messages
346
Reaction score
233
Points
43
Adapavigala unna crush ah nenachathuku andha pillai ah mayakam potu vizha vachita ga oru vela ithu than azhagu la mayangi vizhrathu ah irukumo 🤔🤔
megha nenaikira thu pola chaidhu ku guilt pityness la vandha love ah irundha indha alavuku ava kita vandhu karanam enna nu therinchika matan avan kekurathu reason kooda illa ava manasukula enna iruku na ra thu than thonuthu
 
Top