• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

மேகம் 26 இறுதி

Administrator
Staff member
Messages
466
Reaction score
795
Points
93
மேகம் 26:

“மேகா ஏன் இப்படி பேஸ வச்சு இருக்க? இன்னைக்கு உனக்கு மேரேஜ் ஞாபகம் இருக்கா அது” என்று காயத்ரி அதட்ட,

“அக்கா…” என்று தயக்கமாய் பார்த்தவளது முகத்தில் அதீத பதட்டம் வருத்தம்.

“என்ன அக்கா.‌ இப்படியே முகத்தை வச்சுக்கிட்டு தான் மணமேடையில போய் உட்கார போறீயா?” என்று திட்ட,

“அது அக்கா அவருக்கு இன்னும் என் மேல கோபம் போகலை கா” என்று அழுதுவிடும் குரலில் மொழிந்தாள்.

“கோபப்படாம நீ பண்ணி வச்ச வேலைக்கு கொஞ்சுவாங்களா?” என காயு முறைக்க,

“அக்கா நீயுமா?” என்று மேகா கேட்க,

“ஆமா நான் தான் என் நண்பன் வாழ்க்கைக்காக பேசணும். யார் எதை சொன்னாலும் நம்பிட்டு வந்து கண்ணை கசக்குனா கோபம் வரத்தான் செய்யும். இதே மாதிரி கல்யாணத்துக்கு பின்னாடியும் யாராவது எதையாவது சொல்லி அதை நம்பி டிவோர்ஸ் கேட்டா என்ன பண்றது” என்று கூறுகையிலே,

“அக்கா…” அலறினாள் மேகா.

“ஏன் கத்துற நீ செஞ்சாலும் செய்வ” காயத்ரி கூறியதும்,

“இல்லைக்கா நான் எதோ புத்தி கெட்டு போய் இப்படி பண்ணிட்டேன. இனிமேல் யார் வந்து சொன்னாலும் ஏன் அவரே வந்து சொன்னாலும் நான் நம்ப‌ மாட்டேன்” என்று கையை பிடித்தாள்.

“இதை என்கிட்ட ஏன் வந்து சொல்ற. போய் சைத்துக்கிட்ட சொல்லு” என்று காயு முகத்தை திருப்ப,

“அவர் தான் என் கால் மெசேஜ் எதையுமே பாக்க மாட்றாரே” என்க,

“அதான் இன்னைக்கு கல்யாணம் ஆகிடுமே அப்புறம் உன் கூடவே தான் இருக்க போறான் அப்புறம் சமாதானம் பண்ணிக்கோ” என்று பொழிந்தாள்.

காயு வந்து பேசி நான்கு நாட்கள் ஆகியிருந்தது. அவள் உண்மையை கூறிய அன்றே சைத்தன்யாவிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டாள்.

ஆனால் அவன் அழைப்பை ஏற்கவில்லை. அவன் கோபம் அறிந்தவள் மீண்டும் முயற்சித்தாள்.

தளர்ந்து போகாமல் பல முறை தொடர்ந்து அழைத்தாள் ஆனால் எந்த பயனும் இல்லை.

அழைப்பை கைவிட்டு செய்திகளில் மன்னிப்பை கோரினாள். அதற்கும் எந்த பதிலும் இல்லை.

தொடர்ந்து இரண்டு நாட்கள் இதே வேலையாக இருந்தவள் சோர்ந்து போக அடுத்த நாள் காலை நலங்கு வைக்க என்று வீட்டில் சொந்தங்கள் கூடிவிட்டனர்.

அதன் பிறகு மேகாவிற்கு தனிமை கிடைக்கவே இல்லை.‌ இதோ இன்று காலை திருமண நேரமும் வந்துவிட காயுவிடம் புலம்பி கொண்டிருக்கிறாள்.

“இங்க பாரு மேகா நடந்த பிராப்ளத்தை இப்போதைக்கு மறந்திடு. இப்படியே பதட்டத்தோட போய் நின்னா போட்டோஸ்லாம் நல்லாவா இருக்கும். அது காலத்துக்கும் இருக்க போறது. நாளை பின்ன உங்க பசங்க போட்டோஸ் பாத்துட்டு அம்மா ஏன் இப்படி டல்லா இருக்கன்னு கேட்டா என்ன பதில் சொல்லுவ?” என்று காயு அதட்ட,

காயு கூறுவதில் இருந்த உண்மை புரிந்தது. அதுவும் நாளை எங்களுக்கு பிறக்க போகும் குழந்தை என்று எண்ணம் பிறந்ததுமே மெலிதாய் ஒரு வெட்க புன்னகை பிறந்தது.

அதனை கண்ட காயு, “பார்றா வெட்கத்தை” என்று சிரிக்க,

“ப்ச் அக்கா…” என்று சிணுங்கினாள் மேகா.

“இப்போ தான் கல்யாண பொண்ணு மாதிரி இருக்க. இப்படியே சிரிச்ச முகமா இருக்கணும்” என்று காயு மொழிய,

“ஹ்ம்ம்…” என்று தலையசைத்தவளது முகம் சற்று தெளிந்திருந்தது.

காயத்ரி கூறியது போல திருமணம் முடியும் வரை மனதை மகிழ்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும் என்று எண்ணி கொண்டாள்.

இருவரும் சிரித்து பேசி கொண்டு இருக்க அழகு கலை நிபுணர் மேகாவினை அழகாக தயார்படுத்தி இருந்தாள்.

“லெஃப்ட் சைட் கன்னத்துல கொஞ்சம் ரோஸ் பவுடர் போடுங்க” என்று காயத்ரி சரி செய்து கொண்டிருந்தாள்.

“மேகா ரெடியா?” என்ற படி வந்தார் தமயந்தி.

“ஹான் ரெடிமா” என்று மேகா சிரிப்புடன் எழுந்து நிற்க,

சில கணங்கள் தமயந்திக்கு பேச்சே வரவில்லை. எத்தனை நாட்களாக மகளை மணக்கோலத்தில் காண வேண்டும் என்று தவமாய் தவமிருந்தார்.

இப்போது அது கைக்கூடி வர பேச நா எழவில்லை.

“என்னம்மா பொண்ணை பாத்ததும் மெய்மறந்து நின்னுட்டிங்களா?” என்ற காயத்ரியின் குரலில் சுயநினைவை அடைந்தவர் முகம் முழுதும் சிரிப்புடன்,

“ஆமா மெய்மறந்து தான் நின்னுட்டேன். அவ்ளோ அழகா இருக்கா” என்று நெட்டி முறித்தார்.

தாயின் முகத்தில் வெகு நாட்களுக்கு பிறகு அளவில்லாத மகிழ்ச்சியை கண்ட மேகாவிற்கு உவகை ஊற்றெடுத்தது.

“நானே என் பொண்ணை கண்ணு வச்சிடுவேன் போல” என்றவர்,

“இன்னும் பத்து நிமிஷத்துல பொண்ணை அழைச்சிட்டு வர சொல்லிடுவாங்க ரெடியா இருங்க” என்று மொழிந்துவிட்டு செல்ல,

அடுத்து சைத்தன்யாவின் வீட்டு சொந்தங்கள் சிலர் வந்து பெண்ணை பார்த்துவிட்டு சென்றனர்.

காயு அருகில் இருந்ததால் ஓரளவு திடமாகவே மேகாவும் அவர்களது கேள்விக்கு பதில் அளித்தாள்.

மேகாவின் கல்லூரி தோழிகள் சரண்யாவும் திவ்யாவும் வந்துவிட இடம் கொஞ்சம் கலகலப்பானது.

பெண்ணை அழைத்து வர கூறியதும் சிரிப்புடனே மேகாவை அழைத்து சென்றனர்.

புரோகிதர் அமர்ந்து மந்திரத்தை கூற, அவர் சொல்வதை அப்படியே செய்து கொண்டிருந்தான் சைத்தன்யா.

வெள்ளை வேட்டி சட்டையில் மாப்பிள்ளை கலையுடன் அமர்ந்து கர்ம சிரத்தையாக மந்திரத்தை கூறி கொண்டு இருந்தவனது நெற்றியில் சிறிய சந்த கீற்று.

நெருப்பின் முன் அமர்ந்து இருப்பதால் அங்காங்கே வியர்வை துளிகள் அரும்பி இருந்தது.

இருந்தும் மேகாவின் கண்ணுக்கு அவ்வளவு அழகாய் தெரிந்து தொலைத்தான்.

ஒரு நொடி தான் அவனை பார்த்திருப்பாள் பின்னர் எல்லோரும் தன்னை பார்ப்பதை உணர்ந்து தலையை தாழ்த்தி கொண்டாள்.

இருந்தும் கண நேரத்தில் கண்டவனிடத்தில் தான் இத்தனையும் கவனித்திருந்தாள்.

இந்த நான்கு நாட்களில் அழைப்பு செய்தி என எதையுமே எடுக்காமல் மேகாவை மிகவும் ஏங்க வைத்துவிட்டானே.

காயத்ரி அவனது பதிலை கூறிய பிறகு இன்று தானே காண்கிறாள்.

அவனது நேசத்தோடு சேர்த்து வைத்து அவனை காண்பவளுக்குள் சொல்ல முடியாத உணர்வு ஊற்றெடுத்து பேரழகனாக தெரிந்தான்.

அவனை மீண்டும் பார்க்க துடிக்க மனதை சுற்றி இருந்தவர்களை வைத்து கட்டுப்படுத்தியவள் மெதுவாக நடந்து சென்று அவனருகே அமர்ந்தாள்.

அவள் அமர்ந்தும் சைத்தன்யா நிமிர்ந்து அவளை பார்க்கவில்லை.

அது சிறிதான சுணக்கத்தை கொடுத்தது. இருந்தும் நொடிகளில் தன்னை மீட்டு கொண்டவள்,

தான் செய்த காரியத்திற்கு யாராக இருந்தாலும் கோபப்படத்தான் செய்வார்கள். இன்று வெகுநாளாக‌ எதிர்பார்த்த நேசம் கைக்கூடும் நாள் பிரச்சினையை சற்று ஒத்தி வைக்க வேண்டும் என்று நினைத்தாள்.

பிறகு எல்லாம் வேகவேகமாக நடந்தது. தானும் அவனுடன் சேர்ந்து புரோகிதர் கூறியதை செய்தாள்.

எல்லோரிடமும் காயத்ரி மாங்கல்யத்தை ஆசிர்வாதம் வாங்கி வர புரோகிதர் அவனது கையில் கொடுத்தார்.

திருமாங்கல்யத்தை கையில் வாங்கியவன் அப்போது தான் நிமிர்ந்து மேகாவின் முகம் கண்டான்.

அப்போது மேகாவும் ஒரு வித தவிப்புடன் அவனது வதனத்தை தான் நோக்கியிருந்தாள்.

அவளது முகம் கண்டவன் கண்ணசைத்து மெலிதான புன்னகையுடன் மாங்கல்யத்தை அணிவிக்க, இவளுக்கு உள்ளுக்குள் விவரிக்க இயலாத நிம்மதி மகிழ்ச்சி எல்லாம் ஒருங்கே பிறந்தது.

பிறகு கொடுக்கப்பட்ட குங்குமத்தை அவளது நெற்றியில் இட்டவனிடமிருந்த இலகு தன்மையில் இவ்விடத்தில் பதற்றம் வெகுவாய் குறைந்து போக இதழ்களில் நிறைவான புன்னகை.

இருவரது இதழ்களில் இருந்த புன்னகை அழகாய் புகைப்பட கருவியில் சிறை பிடிக்கப்பட்டது.

அடுத்தடுத்த சடங்குகளில் இருவரும் முகம் முழுக்க மகிழ்வுடன் கலந்து கொண்டனர்.

அரசியல்வாதியின் வீட்டு திருமணம் ஆதலால் நிறைய வெள்ளை வேட்டி‌ அணிந்த தலைகள் தென்பட்டது.

ஒவ்வொருவராக வந்து வாழ்த்தி சென்றனர். மேகாவுக்கு அரசியல் கூட்டத்தை கண்டதும் சிறிதான அச்சம் பிறந்தது.

இதற்கு முன் எல்லாம் கூட்டத்தை அதுவும் அரசியல் கூட்டத்தை கண்டதில்லை‌.

உள்ளுக்குள் ஒருவித அசௌகரியம் பிறந்தது. அருகில் இருப்பவனை சற்று நெருங்கி அமர்ந்தாள்.

அவளது நிலையை உணர்ந்தவன் ஆதரவாக கைகளை பிடித்து கொண்டான்.

மேகா‌ அதில் அவனது புறம் திரும்பி பார்க்க,

‘என்ன?’ என்று ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்க,

அதில் வழக்கம் போல இதயம் தாளம் தப்ப,

“ம்ஹூம்” என்ற ரீதியில் தலையசைத்தாள்.

அதில் அவனது‌ இதழ்களில் மெலிதான புன்னகை பிறந்தது.

அதனை கண்ட மேகாவின் முகத்தில் ஆச்சரிய பாவம் ஒன்று பிறக்க முகத்தை திருப்பி கொண்டாள்.

‘என்ன சிரிக்கிறார்? என் மீது இருந்த கோபம் குறைந்துவிட்டதா?’ என்று எண்ணம் ஜனிக்க,

மற்றொரு மனம்,

‘அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. இத்தனை பேர் முன்னிலையில் கோபப்படவா முடியும் அதுதான் அமைதியாக இருக்கிறார்.‌ தனியாக சிக்கும் போது உனக்கு பெரிதாக இருக்கிறது’ என்று நகைத்தது.

அதுவும் சரிதான் தான் செய்த வேலைக்கு‌ யாராக இருந்தாலும் கோபப்படத்தான் செய்வார்கள் அதனை அப்போது பார்த்து கொள்ளலாம் என்று விட்டுவிட்டாள்.

அதன் பிறகு கல்லூரி நட்புக்கள் ஒன்றாக கிளம்பி வர அங்கே ஆரவாரம் தான்.

“என்ன மச்சான் சிங்கில் சிங்கில்னு சுத்திட்டு திரிஞ்சவன். இப்படி குப்புற கவுந்திட்டியேடா” என்று ஒருவன் மொழிய,

“ஜூனியர் மேல கண்ணை வச்சிட்டதால தான் வந்த எல்லா ப்ரபோசலையும் ரிஜெக்ட் பண்ணிருக்கான் மாப்ள” மற்றொரு குரல்,

இன்னொருவன், “எப்புட்றா?” என்று ஆச்சர்யம் விலகாது கேட்க,

சட்டென்று இருவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.

“எப்படி எப்படி என் கண்ணுல இருந்து இது தப்புச்சு? யார் கமிட் ஆனாலும் நான் தான பர்ஸ்ட் கெஸ் பண்ணுவேன்‌. இப்ளோ வருஷமா எப்படி சீக்ரெட்டா மெயின்டைன் பண்ணிங்க?” என்று பஞ்சாபி பெண் ஒருத்தி சிரிப்புடன் கேட்க,

சைத்தன்யாவின் இதழ்களில் மெலிதான புன்னகை.

“ரொம்ப வருஷம் இல்லை இப்போ தான் கொஞ்ச நாளா” என்று மேகா இழுக்க,

“நோ நான் நம்ப மாட்டேன். ரெண்டு பேரும் கண்ணாலயே பேசிக்கிறத பாத்தா ரெம்ப வருஷம் லவ் பண்றது போலயே” என்று சிரிப்புடன் மொழிந்தாள்.

“நீ காயுவோட இந்த பொண்ணை கூட்டிட்டு போகும் போதே எனக்கு ஒரு டவுட் இருந்துச்சு. இவ தான் நான் தான் கூட்டிட்டு போறேன்னு சொன்னா” என்று காயுவை காண்பிக்க,

“என் ப்ரெண்ட் லவ்வுக்கு ஹெல்ப் பண்ணேன்” என்று காயு சிரிப்புடன் கண்ணடிக்க,

மேகா‌ திகைப்புடன் காண, சைத்தன்யா மென்னகையுடன் நின்றிருந்தான்.

“பாத்தியா? இவளும் இதுக்கு உடந்தையா?” என்று ஒருத்தி மொழிய,

“ஆமா பின்ன, என் நண்பன் வேற மேகாவை பார்த்ததும் பிளாட் ஆகிட்டான்‌ அதான் அவன் காதல் கைக்கூட உதவி பண்ணேன்” காயு தன்னிஷ்டத்திற்கு கூற,

“ஆஹான் பாருடா தோழமை” என்று கோரஸாக நான்கு குரல் வர அங்கே சிரிப்பலை.

கூட்டத்தில் இருந்து, “வழி விடுங்க வழி விடுங்க” என்று அனைவரையும் விலக்கிவிட்டு உள்ளே நுழைந்தாள் கண்ணாடி அணிந்த பெண் ஒருத்தி.

நல்ல சிவந்த நிறத்தில் வடநாட்டு பெண் போல இருந்தாள்.

“சைத்து இவ தான் உன் வொய்ப்பா?” என்று முனைப்புடன் வினவ,

“ஆமா” என்று சிரிப்புடன் தலை அசைத்தான் சைத்தன்யா.

மேகா தான் அவளது முறைப்பை புரியாது விழித்தாள்.

“லவ் மேரஜா?” என்று வினா தொடுக்க,

“ஹ்ம்ம்” என்று மேலும் கீழும் சிரிப்புடன் தலை அசைந்தது.

“எவ்ளோ நாள் லவ்?”

‘ஏழு’ என்று இரண்டு கை விரல்களையும் சேர்த்து காண்பிக்க,

“ஓ மை காட் என் குட்டி ஹார்ட்ட ப்ரேக் பண்ணிட்ட” என்று இதயத்தில் கையை வைத்து கொண்டவள்,

“யார் பர்ஸ்ட் ப்ரபோஸ் பண்ணது?” என்று வினவ,

மேகாவின் முகத்தில் ஆர்வம் இதற்கு என்ன பதில் அளிக்க போகிறான் என்று?

“நான் தான்” என்று சிரிப்புடன் மொழிய,

சடுதியில் மேகாவின் அருகில் சென்றவள் அவளை முன்னும் பின்னும் திருப்பி பார்த்துவிட்டு,

“என் அழகுக்கு இல்லைனாலும் ஓகே தான்” என்று இதழ் வளைத்தவள்,

“என்ன பாக்குற? நீ வர்றதுக்கு முன்னாடி இருந்தே அவன் பின்னாடி சுத்திட்டு இருந்தேன்” என்றதும் மேகாவின் முகத்தில் மெலிதான அதிர்ச்சி.

“ப்ச்‌ என்ன பண்ண இவனுக்கு உன்னை பிடிச்சிருச்சு. இவனுக்காக தமிழ் எல்லாம் கத்துக்கிட்டேன் தெரியுமா?” என்று வராத கண்ணீரை துடைக்க,

மேகாவிற்கு என்ன எதிர்வினை ஆற்றுவதென்று தெரியவில்லை.

“பிரஷி உனக்கு கல்யாணம் ஆகி ஒரு பையன் இருக்கான்” என்று அருகில் இருந்தவன் கூற,

“ப்ச் அதெல்லாம் நியாபகத்துல இருக்கு நீ வாயை மூடு” என்று சிரிப்புடன் கூற,

மேகாவின் முகம் அதிர்ந்து பின் இயல்பாகியது.

“என்ன பாக்குற மேரேஜ் ஆகி இருந்தாலும் இவன் என்னோட ஸ்வீட் எக்ஸ் தான். நல்லா பாத்துக்க இவனை” என்று மிரட்டலாக கூற,

மேகாவின் தலை தானாக அசைந்தது.

இவளது நேரம் சிரிப்புடன் அமைதியாக இருந்த சைத்து,

“ஹேய் போதும் விடு அவ பயப்பட்றா” என்று மொழிய,

“பார்றா பொண்டாட்டிக்கு சப்போர்ட்ட” என்று ப்ரஷி சிரிப்புடன் மொழிந்துவிட்டு,

“சரி ரெண்டு பேரும் எப்பவும் ஹாப்பியா இருங்க” என்று வாழ்த்த,

இருவரும் சிரிப்புடன் நன்றி நவிழ்ந்தனர்.

வெகுநேரம் நண்பர்களின் கலாட்டா தொடர பிறகு உணவுன்ன சென்றனர்.

அதற்கு பிறகும் சொந்த பந்தம் தெரிந்தவர்கள் என்று வந்த வண்ணம் இருக்க மணமக்கள் இருவரும் மூன்று மணிக்கு மேல் தான் வீட்டிற்க்கு அழைத்து செல்லப்பட்டனர்.

மேகாவின் சொந்தங்கள் சைத்துவின் வீட்டை பார்த்துவிட்டு வாயை பிளந்து விட்டனர்.

ஏற்கனவே இவன் இருந்த இருப்புக்கு மினிஸ்டர் வீட்டு சம்மந்தமா? என்று பொறாமையில் இருந்தவர்களுக்கு அவ்வீடே சைத்துவின் பின்புலத்தினை கூற தங்களுக்குள் கிசுகிசுத்து கொண்டனர்.

ஓரிரு நல்ல எண்ணம் கொண்டவர்கள் தான் இத்தனை நாட்கள் திருமணம் தள்ளி போனது இப்படி ஒரு அழகான வாழ்வு அமைவதற்காக தான் என்று மனதார மகிழ்ந்தனர்.

மேகாவிற்கும் அவ்வீட்டை பார்த்து பிரம்மிப்பு தான் இருந்தும் முகத்தில் எதையும் காண்பித்து கொள்ளவில்லை.

மேகாவை பூஜை அறையில் விளக்கேற்ற கூற, தீபத்தை ஒளிரவிட்டவள் விழிமூடி வெகுவாய் ஏங்கி தவமிருந்த வாழ்க்கை கைக்கூடியதற்கு நன்றியை தெரிவித்துவிட்டு இவரோடான எனது வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள்.

அதன் பின்னர் மணமக்களுக்கு பாலும் பழமும் கொடுக்கப்பட்டது. அதிலும் உறவு முறை பெண்களின் கேலி மிகுந்திருந்தது.

பிறகு காயு மேகாவை ஓய்வெடுக்க அறைக்கு அழைத்து சென்றாள்.

தன்னுடைய வீட்டில் பாதியளவை கொண்டு இருக்கும் அவ்வறையை விழிகளை சுழற்றி மேகா காண,

“இது கெஸ்ட் ரூம் மேகா.‌ சைத்து ரூம்… சாரி உங்க ரூம் மேல இருக்கு. இப்போ இங்க ரெஸ்ட் எடு” என்க,

“சரிக்கா” என்று தலை அசைத்தவளுக்கு சிறிது ஓய்வு தேவைப்பட்டது. காலையில் இருந்து நின்றபடியே இருந்தது முதுகு வலித்தது.

“சரி நீ தூங்கு நான் போய் வந்தவங்களை கவனிக்கிறேன்” என்று நகர போனவள்,

“ஆமா கேக்கணும்னு நினைச்சேன். ரெண்டு பேரும் சமாதானம் ஆகியாச்சா?” என்று வினவ,

“ம்ஹூம் இல்லைக்கா” என்று தலை அசைத்தாள்.

“அப்புறம் சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருந்திங்க?”

“அதான் எனக்கும் தெரியலை. நாலு நாளா என் போனை கூட அட்டென்ட் பண்ணாம மெசேஜ் பாத்துட்டு ரிப்ளை பண்ணாம கோபமா இருந்தாரு. இப்ப என்னை பாத்து சிரிக்கிறாரு”

“மேரேஜ் அன்னைக்கு கோவமா இருந்தா நல்லாவா இருக்கும். அதான் என் நண்பர் நார்மலா இருக்கான். தனியா மாட்றப்போ இருக்கு”

“நானும் அதான் நினைச்சேன்” என்றவள் கலவையாக கூற,

“ப்ச் விடு மேகா அதான் கல்யாணம் முடிஞ்சதே அடிச்சாலும் புடிச்சாலும் ஒன்னா இருந்துக்கோங்க” என்று சிரிப்புடன் கூறிவிட்டு காயு விலக,

அதே சிந்தையுடன் படுத்தவள் சிறிது நேரத்தில் உறங்கியும் இருந்தாள்.

இங்கு சைத்தன்யாவும் மற்றவர்களை வரவேற்று பேசி கொண்டு இருந்தான்.

மேகாவை கேட்டவர்களுக்கும் தானே பதில் கூறி கொண்டு இருந்தான்.

வெகுநேரம் நின்று இருந்தால் அவளுக்கு அசதியாக இருக்கும் என்று நினைத்து இவன் தான் காயுவிடம் சொல்லி ஓய்வெடுக்க அழைத்து செல்ல கூறினான்.

இரவு கவிழ துவங்கிய நேரம் காயத்ரி வந்து எழுப்பும் வரை மேகா உறங்கி கொண்டு தான் இருந்தாள்.

காயுவின் குரலில் உறக்கம் கலைந்து எழுந்தவள் நேரத்தை பார்த்துவிட்டு பதறி,

“ரெம்ப நேரம் தூங்கிட்டேன்கா” என்று மொழிய,

“ஹேய் மேகா சில் ஏழு மணி தான ஆகியிருக்கு. நான் தான் நீ டையர்டா இருப்பன்னு யாரையும் எழுப்ப விடலை”

“அத்தை ஏதும் நினைச்சுக்க போறாங்க” என்று கவலையுடன் கூற,

“சரிதான் அவங்க அப்படிலாம் எதுவும் நினைக்க மாட்டாங்க. மகன் நம்ம பேச்ச கேக்கலையேன்னு சின்ன வருத்தம் அவ்ளோ தான் அதான் உன்கிட்ட சரியா பேசலை. போகப்போக சரியாகிடுவாங்க” என்று ஆறுதல் கூறியவள்,

“போய் குளிச்சிட்டு இந்த சாரியை மாத்திட்டு வா” என்க,

சரியென தலையசைத்த மேகா குளித்து வர உறவுகார பெண்களின் உதவியுடன் கேகாவை தயார் செய்தாள்.

தமயந்தி உணவை அறைக்கே எடுத்து வந்து மகளுக்கு ஊட்டிவிட்டு சில அறிவுரைகளை வழங்கி சென்றார்.

பிறகு காயு மேகாவை சைத்து அறையின் வாயிலில் விட்டுவிட்டு,

“ஆல் தி பெஸ்ட் மேகா” என்று சிரிப்புடன் கூறி செல்ல,

இங்கு மேகாவிற்கு கால்கள் இருந்த இடத்தில் இருந்து துளியும் அசையவில்லை.

உள்ளுக்குள் இதயம் தடதடவென அடித்து கொண்டது.

‘ரிலாக்ஸ் மேகா ரிலாக்ஸ் அவர் உன்னோட க்யூட்டன் நீ சொன்னா கண்டிப்பா புரிஞ்சுப்பாரு’ என்று தனக்குத்தானே பல வார்த்தைகள் கூறி மனதை திடப்படுத்தியவள் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள்.

கீழி இருந்த அறையைவிட இது சற்று பெரியதாக இருந்தது. உள்ளே நுழைந்து கதவை தாளிட்டவள் திரும்பி பார்க்க மெத்தையின் நடுவே புது மாப்பிள்ளையின் பொலிவுடன் சற்று சாய்ந்தவாறு அமர்ந்து அலைபேசியை பார்த்து கொண்டிருந்தான்.

இவள் பயந்தது போல பூ அலங்காரங்கள் ஏதுமில்லாதால் மனதில் சிறு ஆசுவாசம் பிறந்தது. ஆனால் தான் வந்ததை உணர்த்தும் அவன் தலையை நிமிர்த்தி பார்க்காததில் சுணக்கம் ஜனித்தது.

சடுதியில் அவன் கொண்ட கோபம் நினைவிற்கு வர‌ என்ன செய்வதென்று புரியவில்லை.‌ சிறிது நேரம் கைகளை பிசைந்தவாறு இருந்தவளுக்கு அவன் இருக்கும் கோபத்தில் தன்னை கண்டு கொள்ள மாட்டான் என்று புரிந்துவிட்டது.

தானாக தான் பேசி தன்னுடைய பக்கத்தை கூற வேண்டும் என்று முடிவெடுத்து வாயை திறக்க வார்த்தை வரவில்லை.

அதற்கு மேல் அவனை எப்படி அழைப்பது என்று தெரியவில்லை. இத்தனை நாட்கள் அலுவலகத்தில் சார் என்று மரியாதை நிமித்தமாக அழைத்துவிட்டாயிற்று இனியும் அதனை தொடர முடியாது.

வேறு எப்படி அழைக்க பெயர் அழைக்கவும் முடியாது என்று தோன்ற எப்படியும் அழைக்க வேண்டாம் இப்போதைக்கு பேசுவோம் என்று நினைத்தவள்,

‘க்கும்’ என்று தொண்டையை கணைக்க அப்போதும் அவனிடத்தில் அசைவில்லை.

ஒருவேளை அமர்ந்தவாக்கில் தூங்கிவிட்டாரா? என்று கூட சந்தேகம் எழுந்தது.

இங்கு சைத்தன்யா அவள் வந்ததில் இருந்து அனைத்தையும் கவனித்து கொண்டு தான் இருக்கிறான்.

என்னதான் செய்கிறாள் பார்ப்போம் என்று தான் அமைதியாக அவதானித்தபடி இருந்தான்.

அவளது முக பாவனைகளை வைத்து எண்ணத்தை யூகித்தவனுக்கு சிறிது புன்னகை எழுந்தாலும் அதனை காண்பித்து கொள்ளவில்லை.

காரணம் அவள் திருமணத்தை நிறுத்த கூறியது தான் தானும் தனது நேசமும் அத்தனை சுலபமாய் போய்விட்டோமா என்று அப்படி ஒரு ஆதங்கம் உள்ளுக்குள் கனன்றது.

முகத்தினை சற்று இறுக்கமாக தான் வைத்து இருந்தான்.

மீண்டும், ‘க்கும்…’ என்று சத்தமாக செய்ய,

அப்போதும் பலன் பூஜ்ஜியம் தான்.

வேறு வழியில்லை நாம் தான் வாயை திறந்து பேசியாக வேண்டும் என்று உணர்ந்தவள்,

“எ…என்னங்க” என்று திக்கி திணறி அழைத்துவிட்டாள்.

அவளது திணறலை உள்வாங்கியவன் மெதுவாக நிமிர்ந்து,

‘என்ன?’ என்பதாய் ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்க,

இவளுக்கு இதயம் தாளம் தப்பியது. பேச வந்த வார்த்தைகள் முற்றிலும் மறந்து போயிருக்க,

“அது… அது வந்து நான் நீங்க” என்று வார்த்தைகள் தந்தியடித்தது.

“என்ன சொல்லணும் சீக்கிரம் சொல்லு எனக்கு மெயில் செக் பண்ணனும்” என்று பட்டென்று கூறிவிட,

இவளது முகம் அனிச்ச மலராய் வாடி போனது.

அதனை கவனித்தவனும் எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை.

கலங்கிய விழிகளை உள்ளிழுத்து கொண்டவள்,

“அது என் மேல தப்பு தான் அவங்க பேசினதை நம்பி நான் கல்யாணத்தை நிறுத்த சொல்லியிருக்க கூடாது” என்று ஒருவழியாக கூறிவிட,

“ஓகே போய் படு” என்று அவன் முடித்திருந்தான்.

அவனது கூற்றில் ஒரு கணம் மேகாவிற்கு என்ன எதிர்வினை புயிவதென தெரியவில்லை.

அவன் கோபப்பட்டால் கூட சமாதானம் செய்ய முயற்சிக்கலாம்.

இப்படி ஒன்றுமே நடவாதது போல பேசுபவனிடத்தில் என்னவென்று பேசுவது என்று அவளுக்கு சுத்தமாய் புரியவில்லை.

அமைதியாய் அதே இடத்தில் தவிப்புடன் நின்றிருந்தவளை கண்டவன்,

“உன்னை போய் படுக்க சொன்னேன்” என்று சைத்தன்யா அழுத்தமாய் கூற,

இவளது விழிகள் மீண்டும் நிறைந்தது. அதனை முயன்று உள்ளிழுத்து அழுகையை அடக்கிட முகம் சிவப்பாய் மாறியிருந்தது.

அசையாது அவனை தான் பார்த்திருந்தாள்.

அவளது அந்த முகம் அவனை மொத்தமாய் அசைத்து பார்த்திட,

“ப்ச் என்னடி வேணும் உனக்கு?” என்று நெற்றியை தேய்க்க,

அவளது கண்ணீர் கரை தாண்டியது.

“இதே சூழ்நிலையில நான் உன்னை நம்பாம கல்யாணத்தை நிறுத்த சொல்லி இருந்தா உனக்கு கோபம் வருமா வராதா?” என்று இறுக்கத்துடன் கேட்க,

அவளிடத்தில் மௌனம்.

“எந்த இடத்திலயுமே நான் உனக்கு நம்பிக்கையை கொடுக்கவே இல்லையா? இல்லை என்னோட காதலை நீ எங்கயுமே பீல் பண்ணலையா? நாளை பின்ன கல்யாணம் ஆன பிறகு யாராது எதாவது வந்து சொன்னா அதை நம்பி என்னை சந்தேகப்படுவியா?” என்றவன் அவளருகில் வந்திருக்க,

“போதும் இதுக்கு மேல பேசாதிங்க” என்றவள் அவனது மார்பில் முகத்தை புதைத்து கண்ணீரை வடித்தாள்.

அழுகையின் ஊடே, “சாரி சாரி” என்று வேறு முணுமுணுக்க,

இவனது கைகள் அவளை அணைக்கவில்லை. அதனை உணர்ந்து கொண்டவளுக்கு வேதனை அதிகரிக்க சடுதியில் நிமிர்ந்து அவனது கையை பிடித்து அங்கே மாட்டப்பட்டிருந்த ஆளுயுர கண்ணாடி முன் நிறுத்தி இருந்தாள்.

அவளது திடீர் செயலை சைத்து புருவம் சுருக்கி பார்க்க,

கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்தவள் நிமிர்ந்து,

“நீங்களே பாருங்க நீங்க எப்படி இருக்கீங்க நான் எப்படி இருக்கேன்னு உங்களுக்கு எனக்கு ஏணி வச்சாலும் எட்டுமா?” என்று அவள் பேசுகையிலே அவன் இடைபுக,

“ப்ளீஸ் நான் பேசி முடிச்சிக்கிறேன்” என்றவள்,

“நீங்களே பாருங்க பார்க்க ஹிந்தி படத்தில வர ஹீரோ மாதிரி அழகா இருக்கிங்க. நான்லாம் உங்க பக்கத்தில நிக்க கூட தகுதி இல்லாதவ மாதிரி இருக்கேன். அதுக்கு மேல உங்க ஸ்டேட்ஸ் பேக்ரவுண்ட் அதுக்கெல்லாம் நான் எதுவுமே இல்லை”

“...”

“படத்திலயும் நாவல்லயும் வேணா பணக்கார அழகான ஹீரோ மிடில்கிளாஸ் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறது ஈஸியாக நடக்கலாம். ஆனால் நிஜ வாழ்க்கையில இதுலாம் வாய்ப்பே இல்லை. உங்களை ஆசைப்பட்றதுக்கு எனக்கு எந்த தகுதியும் இல்லை‌. உங்களை மாதிரி ஆளுங்களை தூரத்துல இருந்து ரசிக்க மட்டும் தான் முடியும்னு எனக்கு புரிஞ்சிடுச்சு. அதுனால தான் என்னோட காதலை எனக்குள்ளயே புதைச்சிட்டேன்”

“...”

“ஆனால் நான் நினைச்ச மாதிரி அவ்ளோ சீக்கிரத்துல என்னால உங்களை மறக்க முடியலை. இந்த ஜென்மத்தில மறக்க முடியும்னு தோணலை‌. அப்போ தான் எனக்கு உடல்நிலை சரியில்லாம போச்சு. இந்த ஜென்மத்துல உங்களை நேசிக்க கிடச்சதே பெரிய பாக்கியம் அந்த சந்தோஷத்தோடவே வாழ்ந்திட்டு போய்டலாம்னு தான் வாழ்ந்திட்டு இருந்தேன்”

“...”

“அப்போ தான் திடீர்னு ஒரு நாள் எனக்கு முதலாளியா வந்திங்க. என் கண்முன்னாடியே இருந்திங்க. இதுக்கெல்லாம் மேல எனக்கு பெரிய ஷாக் கொடுக்குற மாதிரி என்னை கல்யாணம் பண்ணிக்க கேட்டிங்க.‌ என்னால நடக்குற எதையும் உண்மைனு நம்ப முடியலை. எதோ கனவு தான் கொஞ்ச நேரத்தில கலைஞ்சிடும்னு நம்பிட்டு இருந்தேன்”

“...”

“ஆனால் உடனே வீட்ல பேசினிங்க. கல்யாணம் வேலை எல்லாம் சீக்கிரம் நடந்துச்சு. ஆனால் எனக்கு உள்ளுக்குள்ள பயம் இருந்துக்கிடே இருந்துச்சு. ரொம்ப வருஷமா கிடைக்காதுனு தெரிஞ்சு ஏங்கி தவிச்சி மருகிட்டு இருந்த வாழ்க்கை நிஜத்துல நடக்கும் போது அது நல்லபடியா நடக்கணும்ற பயம். குழந்தைக்கிட்ட அதுக்கு பிடிச்ச பொம்மையை கையில கொடுத்து அது பொம்மை தனக்கு தான் சொந்தம்னு நினைச்சு விளையாடிட்டு இருக்கும் போது தீடீர்னு அதுகிட்ட இருந்து பிடுங்கிட்டா அந்த குழந்தையோட நிலை என்ன?”

“...”

“அந்த மாதிரி தான் என்னோட பயமும். அதை யாருக்கிட்டயும் சொல்ல முடியாம உள்ளுக்குள்ளயே பயந்திட்டு இருந்தேன். அப்போ தான் ஸ்வஸ்திகா வந்து நீங்களும் அவளும் காதலிச்சதாவும் உங்களால தான் எனக்கு அடிப்பட்டதுன்ற குற்றவுணர்வுல தான் நீங்க அவளைவிட்டுட்டு வந்து என்னை கல்யாணம் பண்ணிக்கிறதா சொன்னா. எனக்கு ஒரு நிமிஷம் ஒன்னுமே ஓடலை. அப்புறம் நிதானமா அவ சொன்னதை யோசிச்சு பாத்தேன்”

“...”
 
Administrator
Staff member
Messages
466
Reaction score
795
Points
93
அவர் இருக்க அழகு அறிவு பணத்துக்கு அவர் ஏன் உன்னை கல்யாணம் பண்ணிக்க போறாரு. அவருக்கு பொண்ணு தர எவ்ளோ பேர் ரெடியா இருக்காங்க. போயும் போயும் மிடில்கிளாஸ்ல அதுவும் அப்பியரன்ஸ் வைஸ் கூட நல்லா இல்லாததை உன்னை ஏன் அவருக்கு பிடிக்க போகுது. அவர் குற்றவுணர்ச்சில தான் கல்யாணம் பண்ணிக்க போறாருனு அவ சொன்ன எல்லாமே சரிதான்னு தோணுச்சு. இத்தனை வருஷம் தொடர்பே இல்லாம இருந்துட்டு திடுதிடுப்புனு என் முன்னாடி வந்து கல்யாணம் பண்ண‌ கேட்க இதுவா தான் காரணமா இருக்கும்னு தெரிஞ்சது. அதை என் ப்ரெண்ட் மூலமா கன்பார்ம் பண்ணேன்”

“...”

“அந்த ஒரு செகெண்ட் எந்த மாதிரி பீல் பண்ணேன்னு என்னால வார்த்தையால சொல்ல முடியலை. உங்களோட காதல் தான் எனக்கு கிடைக்கணும்னு ஆசைப்பட்டேனே தவிர குற்றவுணர்வுல நடக்குற கல்யாணத்தை இல்லை. இதுக்கு மேல நிறைய பேர் எனக்கு தெரிஞ்சு தெரியாமன்னு பலவிதத்துல இவளுக்கு இப்படி ஒரு வாழ்க்கையா? அவர் பாக்க எவ்ளோ அழகா பணக்கார வீட்டு பையனா இருக்காரு. வேற பொண்ணே கிடைக்கலயா இவளை கட்டிக்கிட்டு கடைசிவரை ஹாஸ்பிட்டலுக்கு அலைய போறாரானு பேசிக்கிட்டாங்க”

“...”

“அதையெல்லாம் கேட்டதும் மனசுக்குள்ள நான் உங்களுக்கு ஒரு சதவீதம் கூட தகுதியான பொண்ணு இல்லைன்ற எண்ணம் வலுவாச்சு எல்லாத்துக்கும் மேல அவ சொன்ன ஒரு வார்த்தை உங்களுக்கு அவ மேல காதல் இருந்ததுன்னு. அந்த ஒன்னு தான் நான் கல்யாணத்தை நிறுத்த முடிவு பண்ண காரணம். என்னைவிட என்னோட காதலை தான நீங்க காதலிக்கிறதா சொன்னிங்க. அந்த காதல் தான் நமக்கு பிடிச்சவங்க வாழ்க்கை அவங்களுக்கு பிடிச்சவங்களோட இருந்தா தான் நல்லா இருக்கும்ணு முடிவெடுக்க வச்சது”

“...”

“ஆனால் அதுக்கப்புறம் நடந்தது எல்லாம் நான் எதிர்பார்க்காதது. இப்போ கல்யாணத்துல கூட நிறைய சொந்தக்காரங்க நான் உங்களுக்கு பொருத்தமே இல்லைன்ற மாதிரி தான் பாத்திட்டு போனாங்க. எனக்கு பயமாயிருக்கு நானும் அதை முழுசா நம்ப ஆரம்பிச்சிடுவேனோன்னு” என்றவளது குரல் அழுகையில் கரகரக்க,

இத்தனை நேரம் அமைதியாய் அவளது பேச்சை கேட்டு கொண்டிருந்தவன் இவ்வரியில் சடுதியில் இறுக்கமாக அணைத்து கொண்டான்.

அவளுக்குள் ஆறுதல் தேவைப்பட அவனை பற்றி கொண்டாள்.

அவளது செயலினால் கோபமாக இருந்தவன் மேகாவின் பேச்சை கேட்டதும் அவளது நிலையில் இருந்து சிந்தித்து அவளுடைய மனப்போராட்டாங்களை அறியாது போனோமே என்று வருந்தினான்.

நிமிடங்கள் கடந்தும் மேகாவின் அழுகை நின்றபாடில்லை. அவளது அழுகையை பொறுக்க மாட்டாதவன்,

“மேகா போதும் அழுததது. நிறுத்து” என்று அவளது முகத்தை நிமிர்த்த,

அழுது சிவந்து பரிதவிப்புடன் விழிகளில் நேசத்தை தேக்கி நின்றவளை கண்டு உள்ளுக்குள் ஏதோ ஒன்று நழுவி சென்றது.

“தகுதி அழகு இதெல்லாம் நீ என்னன்னு நினைக்கிற மேகா. என்ன பொறுத்தவரை என்னோட சந்தோஷத்துக்காக உன்னோட வாழ்க்கையை விட்டு தர துணிஞ்சியே இதை விட வேற பெரிய தகுதி என்ன வேணும். இந்த அழகெல்லாம் ஜெஸ்ட் ஒன்னுமே இல்லை. உன்னோட மனசுக்கு முன்னாடி இது எதுவுமே இல்லை. எப்பவும் போல இப்பவும் உன்னோட காதல் என்ன பிரம்மிக்க வைக்குது. இந்த காதல் எனக்கு கிடைக்க நான் என்ன செஞ்சேன்னு இப்ப வரைக்கும் எனக்கு தெரியலை” என்று என்றவனது கண்ணுக்கு தன் முன்னே நிற்பவள் பேரழகியாக தெரிந்தாள்.

அழுகையுடன் அவளது முகத்தில் மெலிதான புன்னகை படர்ந்தது.
அப்புன்னகையை தானும் பிரதிபலித்தவன் அவளது நெற்றியில் மெலிதாக இதழ் பதித்தான்.

விழிகளை மூடிய மேகா அதனை உள்வாங்கினாள்.

நிமிடங்கள் நொடிகளாக கரைய,

சைத்து, “போய் பேஸ் வாஷ் பண்ணிட்டு வா போ” என்றிட,

சம்மதமாக தலையை அசைத்தவள் முகம் கழுவி வர, அவன் பால்கனியில் நின்று இருந்தான்.

தானும் சென்று அவனருகே நின்று கொண்டாள். சிலு சிலுவென இரவு நேர கூதல் காற்று இருவரது மேனியையும் தழுவி சென்றது.

மணித்துளிகள் மௌனத்தில் கழிய,

“மேகா நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரலையே?” என்றான் சைத்தன்யா.

“என்ன என்ன கேள்வி?” என்று மேகா அவன் முகம் காண,

“நீ இந்தளவு காதலிக்கிறதுக்கு என்ன காரணம்? நான் பெருசா எதுவும் பண்ணலையே?”

மெலிதான புன்னகையுடன்,

“காதலிக்க பெருசா காரணம் எதுவும் தேவையில்லை. பிடித்தம் எந்த வரையறைக்குள்ளயும் வராது. எனக்கு உங்களை பிடிக்கும் உங்களோட எல்லாமே பிடிக்கும் அவ்வளோதான்” என்க,

இவளது பதிலில் சைத்துவின் புருவம் ஏறி இறங்கியது வியப்பில்.

அதில் மேகாவின் முகத்தில் ரசனை பாவம் இத்தனை நேரம் இருந்த பதட்டத்தில் அவனை கவனிக்கவில்லை.

இப்போது விழிகள் நிறுத்தி நிதானமாக ரசித்தது. கரை வைத்த பட்டு வேட்டி சட்டையில் நெற்றியில் சிறிதான சந்தன கீற்று இதழ்களில் மெலிதான புன்னகை என்று வழக்கத்திற்கு மாறாக அவளை வசீகரித்தான் கணவன்.

அவளது பார்வையை கண்டு கொண்டவன்,

‘என்ன?’ என்பதாய் புருவம் உயர்த்த,

சடுதியில் தோன்றிய நாணத்தை மறைக்க வெளிப்புறம் பார்த்தவாறு திரும்பி கொண்டாள்.

சைத்து அவளது கையை பிடித்து பட்டென்று தன்னருகே இழுத்து கொள்ள மேகா முகம் திருப்பி அவனை பார்க்கவே இல்லை.

சைத்துவின் பார்வை அவள் மேல் ஊர்ந்தது. பாசிப்ச்சையில் கரை வைத்த பட்டுடுத்தி அதற்கேற்ற நகைகளுடன் இதற்கெல்லாம் அவனுக்கான ஒட்டு மொத்த நேசத்தை சுமந்தவாறு அருகில் நின்று கொண்டு இருந்தவள் அவனுள்ளே பலவித ரசாயன மாற்றங்களை உண்டு பண்ணினாள்.

அவளது முகத்தருகே குனிந்தவன் காற்றை குவித்து ஊத அதில் சிலிர்த்தவள் விழிகளை மூடி கொண்டாள்.

அவளது சிலிர்ப்பை உள்வாங்கியவன் காதருகே சென்று,

“தூங்க போலாமா மேகா?” என்று ஹஸ்கி குரலில் கேட்டிட,

“என்ன?” என்று திகைத்து விழித்தாள் மேகா.

“டையர்டா இருக்கு தூங்க போலாமான்னு கேட்டேன்” என்று அவளது முக பாவனையில் தோன்றிய சிரிப்பை மறைத்தபடி கூற,

“ஹான் போலாம்” என்றவளிடத்தில் மிட்டாய் பிடுங்கிய குழந்தையின் பாவனை.

தலையசைத்து உள்ளே நுழைத்தவள் மெத்தையில் ஏறி படுத்து கொள்ள,

இரவு விளக்கை போட்டுவிட்டு மற்ற விளக்கை அணைத்தவன் அவளருகே சென்று படுத்த விநாடி சட்டென்று அவளை தன்னுள் சுருட்டி கொண்டான்.

அதில் அதிர்ந்து விழித்த மேகா,

“என்ன?” என்று பார்க்க,

விஷமப் புன்னகையுடன் ஒன்றுமில்லை என்று தலையசைத்தான்.

அவனது புன்னகையில் அனைத்தையும் கண்டு கொண்டவள் முறைத்தபடியே,

“விடுங்க என்னை விடுங்க” என்று அவனிடமிருந்து திமிற,

“விட்றதுக்கா இவ்ளோ போராடி கல்யாணம் பண்ணி இருக்கேன்” என்று சிரிப்புடன் கூறியவன் அவளது கண்ணத்தை பற்றி தன்னருகே இழுத்து இதழோடு இதழ் சேர்த்து கொள்ள, அவளது திமிறல் அப்படியே நின்று போனது.

மெது மெதுவாய் மென்மையாய் அவளுக்குள் இறங்கியவன் ஒற்றை முத்தத்தில் அவளை உருக வைத்தான்.

முத்தத்தின் நிமிடம் நீண்டு கொண்டே செல்ல அவள் மூச்சு ஏங்கினாள்.

முயன்று அவனை தன்னிடமிருந்து தள்ளிவிட, இருவருக்கும் மூச்சு வாங்கியது.

மூச்சு வாங்கிக் கொண்டே மேகா அவனை முறைக்க, அவனது பார்வையில் விஷமம் கூடியது.

அதனை உணர்ந்தவள் அவனுக்கு முதுகு காண்பித்து திரும்பி கொள்ள,

அவளை பின்னிருந்து அணைத்தவன் கழுத்தோரம் குட்டி குட்டி முத்தங்கள் வைக்க இவள் கூசி சிலிர்த்தாள்.

அவளது சிலிர்ப்பு கூச்சம் அச்சம் திணறல் என யாவையும் சிந்தாமல் சிதறாமல் உள் வாங்கியவன் அவளுக்குள் மூழ்கி அவளை கரைய வைத்தான்.

இத்தனை வருட‌ ஏக்கம் காதலை ஒற்றை இரவில் தீர்த்து வைக்க முடிவு செய்தவன் அவளை கொண்டாடி தீர்த்திருந்தான்.

மென்மையில் வன்மை காண்பித்தவனை இன்னுமின்னும் பிடித்து பித்தம் ஏறி போனாள் பாவை.

மழை நின்ற பிறகு மெதுவாய் வீசும்
மண்வாசம் போல அவர்களுக்குள் அழகாய் மலர்ந்து வீசியது நேசம்…

முற்றும்…
 
Well-known member
Messages
860
Reaction score
631
Points
93
Superrrrrrrrr ma
Ivlo naal cuten ah sight adichittu irunthen, aana inime sight adikka mudiyaathu, megha sandai ku vanthiduvaa😒😒😒😒😒😒😒😒

Cuten ah romba romba miss pannuven

Megha va romba azha vachitteenga, inimelavathu santhosama irukkanum
Azhaghana ending maa
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞Next story ku aarvama waiting ma
 
Active member
Messages
347
Reaction score
234
Points
43
Megha enga inga yum bayandhu poi mayangi vizhunduvalo nu nenachen nalla vela illa just avan love la mattum than ava mayangi muzhugi poi iruku ah

Arumai ah mudivu megha oda love la aarambicha story ippo ivanga rendu per oda love life ah end aagi iruku
 
Top