மேகம் 25:
அத்தனை காலையில் காயுவை எதிர்பார்த்திராத தமயந்தி நிற்க,
“என்னம்மா உள்ள கூப்பிட மாட்டிங்களா?” என்று வினவ,
சடுதியில் சுயம் பெற்றவர்,
“வா… வாம்மா இவ்வளோ காலையில உன்னை எதிர்பார்க்கலை” என்றபடி வழி விட்டார்.
“நானே இன்னைக்கு இங்க வந்து நிப்பேன்னு நினைக்கலை. எல்லாத்துக்கும் காரணம் என் தங்கச்சி மேகா தான்” என்று மொழிய,
தமயந்தியின் முகத்தில் கலக்கம் சங்கடம் எல்லாம் குடி கொண்டது.
அவரது தோற்றத்தை கண்டவளுக்கு நேற்றைய இரவு உறங்காத இரவாய் இருக்கும் என்று புரிந்திட ஆதரவாக அவரது கையை பிடித்தவர்,
“கவலைப்படாதிங்கம்மா இந்த கல்யாணம் நல்லபடியா நடக்கும்” என்று மொழிய,
அதனை கேட்டவரது முகத்தில் தான் அளப்பரிய நிம்மதி ஜனித்தது.
அறைக்குள் இருந்து வெளியே வந்த சேதுபதியும் காயத்ரியை கண்டுவிட்டு,
“வாம்மா காயத்ரி” என்று வரவேற்றார்.
ஆனால் அதில் எப்போதும் இருக்கும் மகிழ்ச்சி சிறிதும் இல்லை.
இருந்தும் இந்த நிலையிலும் தன்னை வரவேற்றவரின் பண்பை உணர்ந்தவள் புன்னகையுடன் அதனை ஏற்றுக் கொண்டாள்.
தமயந்தி, “காயத்ரி ஏன் மா இவ இப்படி பேசிட்டு இருக்கா. என்னன்னு கேட்டாலும் பதில் சொல்ல மாட்றா? உனக்கு எதுக்கு தெரியுமா மா?” என்று வினவிட,
காயத்ரியிடத்தில் வருத்தம் குடிகொண்டது. தன்னுடைய தங்கை தான் யாவிற்கும் காரணம் என்று கூற இயலாது தவித்தவள்,
“என்ன பிராப்ளம்னு தெரிஞ்சு தான் வந்து இருக்கேன். ரெண்டு அடி போட்டா தான் இவ சரி வருவா? யார் என்ன சொன்னாலும் நம்பிடுவாளா?” என்க,
“யார் என்ன சொன்னது மா?” என்று தமயந்தி கேட்க,
“மேகாக்கிட்ட பேசிட்டு வந்து சொல்றேன் மா” என்றவள் இருவரிடத்திலும்,
“நீங்கள் ரெண்டு பேரும் எதை நினைச்சும் கவலைப்படாதிங்க. என்ன நடந்தாலும் இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்கும். சைத்து அவன் எப்பவும் மேகாவ விடமாட்டான்” என்றிட,
இத்தனை நேரம் இருந்த கவலை தவிப்பு என யாவும் இருவரிடத்திலும் விடைபெற்றது.
பின்னே இருக்காதா? பல நாட்களாக நடக்கவில்லை என்று வருந்தி கொண்டிருந்த மகளது திருமணம் கைக்கூடும் நேரத்தில் திடீரென பிரச்சனை அதுவும் மகளின் மூலமாகவே வந்தால் என்ன செய்ய முடியும்.
திருமணம் நடக்குமா? நடக்காதா? என்று பெரும் கவலை தொற்றி கொண்டது.
இப்போது காயத்ரியின் வருகை மூலமாக தான் இவ்வளவு நேரம் இருந்த அலைப்புறுதல் நின்றிருக்கிறது.
தமயந்தி, “டீ போட்டு எடுத்துட்டு வரவா மா?” என்று வினவ,
அதில் சிறிது இலகு தன்மை வந்திருப்பதை உணர்ந்தவள்,
“ஹ்ம்ம் போடுங்க மா. நீங்களும் எதுவும் சாப்பிட்டு இருக்க மாட்டிங்க. சாப்பிட்டு தெம்பா இருங்க. நான் போய் அவளை கவனிச்சிட்டு வந்து எடுத்துக்கிறேன் மா” என்றவள் விறுவிறுவென மாடியேறி மேகாவின் அறையின் முன் நின்றாள்.
கதவு உள்புறமாக தாளிடப்பட்டிருந்தது.
இரவு வெகுநேரமாக உறக்கமின்றி அழுது கரைந்தவள் விடியல் பொழுதில் தான் சயனத்திற்கு சென்றிருந்தாள்.
காயத்ரி கதவை தட்ட ஆழ்ந்து உறங்காதவள் சடுதியில் விழித்துவிட்டாள்.
இரவெல்லாம் உறங்காதது கண்கள் இரண்டு கண்களும் எரிந்தது.
விழிகளை தேய்த்தபடி எழுந்தவளுக்கு நேற்றைய நிகழ்வு நினைவுக்கு வர மனதோடு சேர்த்து விழிகளும் கலங்கியது.
இனி இதுதான் வாழ்க்கை அவர் உன்னுடைய வாழ்வில் இல்லை அவருக்கு உன்னை பிடிக்கவில்லை என்று தனக்கு தானே கூறி கொண்டு எழுந்தவளுக்கு கால்கள் தள்ளாடியது.
சுவற்றை பிடித்து கொண்டு நிலைப்படுத்தியவள் சென்று முகம் கழுவி வந்தாள்.
கதவை தட்டும் ஓசை மட்டும் நிற்கவே இல்லை.
தாயாக தான் இருக்கும் என்று நினைத்தவள், “வர்றேன் மா” என்று குரல் கொடுத்துவிட்டு முகத்தை நன்றாக துடைத்தாள்.
இருந்தும் அழுதழுது முகம் கண்ணெல்லாம் வீங்கி சிவந்திருந்தது.
கதவை திறந்ததும் பெற்றவளை எப்படி சமாளிக்க போகிறோம் என்று புரியவில்லை.
அவர்களுடைய வருத்தம் துன்பம் எல்லாம் அவளுக்கு தெரிந்தது. இருந்தும் அவளிடம் அதற்கு எந்தவித தீர்வும் இல்லை.
முதலில் வருந்தினாலும் போக போக புரிந்து கொள்வார்கள் என்று தானாகவே நினைத்து கொண்டவள் கதவை திறக்க வெளியே காயத்ரி நின்றிருந்தாள்.
நிச்சயமாக காயத்ரியை எதிர்பாராதவள் அதிர்ந்து பின்னர் கலங்கி,
“அக்கா…” என்று அணைத்து கொள்ள,
பட்டென்று அவளை தன்னிடமிருந்து தள்ளிவிட்டவள் கன்னத்திலே படாரென்று அறைந்திருந்தாள்.
காயுவின் செயலை கிஞ்சிற்றும் எதிர்பாராதவள்,
“அக்கா” என்று கலங்கிய விழிகளுடன் கன்னத்தில் கையை வைக்க,
“இன்னொரு தடவை அக்கான்னு கூப்பிட்ட அவ்ளோ தான் உன்னை வெளுத்திடுவேன்” என்று தீயாய் முறைத்தவள் உள்ளே சென்று அமர்ந்து கொள்ள,
மேகா தான் செய்வதறியாது சமைந்து போய் நின்றுவிட்டாள்.
காயத்ரிக்கு இன்னும் நான்கு அறைவிடும் எண்ணம் தான்.
ஆனால் அவளது தோற்றம் செய்ய விடவில்லை. இரவெல்லாம் உறங்காது அழுது சிவந்து ஓய்ந்த தோற்றத்தில் சோர்ந்து போய் வந்து நிற்பவளை கண்டு வருத்தமும் ஆதங்கமும் ஒருங்கே எழுந்தது.
அவ்வளவு நேசத்தை வைத்து கொண்டு இப்படி எதுவும் புரியாது தன்னை தானே வதைத்து கொள்கிறாளே என்று வருத்தம் பெரிதாக இருந்தது.
“சைத்துக்கிட்ட என்ன சொன்ன?” என்று அழுத்தமாக வினவ,
மேகாவிடத்தில் பதில் இல்லை.
“உன்கிட்ட தான் மேகா கேக்குறேன் பதில் சொல்லு?” என்று காயு அதட்ட,
“அது… அது வந்து அக்கா…” என்றவள் அச்சத்தில் உமிழ் நீர் விழுங்க,
“என்ன மென்னு முழுங்குற சொல்லு முழுசா”
“இந்த கல்யாணத்தை ஸ்டாப் பண்ணிடலாம்னு…” என்றவள் நிறுத்தி அச்சத்துடன் பார்க்க,
“நிறுத்திட்டு என்ன பண்றதா ஐடியா?” என்று வினா எழுப்ப,
அவளுக்கு என்ன கூறுவதென்று நிச்சயமாக தெரியவில்லை.
இந்த திருமணத்தை நிறுத்த முடிவு செய்துவிட்டாள் தான் ஆனால் அதன் பிறகு என்ன? என்பதெல்லாம் கேள்விக்குறி தான்.
அவளுக்கே தெரியாத பதிலை எவ்வாறு கூறுவாள். இப்போதும் மௌனத்தை துணையாக்கி கொள்ள முயல,
“கேக்குறேன்ல பதில் சொல்லு? அடுத்து என் செய்ய போறதா உத்தேசம் வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க போறீயா?”என்றிட,
“இல்லை” என்று பதறியபடி பதில் அளித்தாள்.
அதில் காயுவிற்கு கோபம் கரையுடைக்க,
“அப்புறம் எதுக்கு நீ மேரேஜை நிறுத்த சொன்ன?” என்று இழுத்து பிடித்த பொறுமையுடன் கேட்க, மேகா வாயை திறக்கவில்லை.
“எல்லாத்தையும் ரெண்டு டைம் கேட்டால்தான் ஆன்சர் பண்ணுவியா? இல்லை இவ கேட்டு நான் பதில் சொல்லணுமான்னு நினைச்சு அமைதியா நிக்கிறியா?” என்றதும்,
பதறி தவித்தவள், “ஐயோ அக்கா அப்படிலாம் எதுவுமில்லை” என்று கையை பிடிக்க,
சட்டென்று கையை உதறியவள்,
“நீ பண்றதை பாத்தா அப்படிதான் இருக்கு” என்று கூற,
“இல்லைக்கா சத்தியமா நான் அப்படி நினைக்கலை. அது உங்க ப்ரெண்ட்க்கு என்னை பிடிக்கலை கா. அவருக்கு என் மேல லவ் இல்லைக்கா” என்று தயங்கி கூற,
‘மேல சொல்’ என்பது போல காயு பார்த்து வைக்க,
“அவரால தான் எனக்கு இந்த மாதிரி ஆச்சுனு கில்டி பீல்ல தான் அவர் என்னை கல்யாணம் பண்ணிக்க கேட்டுருக்காரு” என்று காயு முகம் கண்டாள்.
“அவன் உன்கிட்ட இதெல்லாம் சொன்னானா?”
“இல்லை”
“அப்புறம் எப்படி இதை சொல்ற நீ?” என்றதும் சில நொடிகள் மௌனம் காத்து பின்னர்,
“உங்க தங்கச்சி ஸ்வஸ்திகா தான் சொன்னாங்க. அவங்களும் உங்க ப்ரெண்டும் ரொம்ப நாளா விரும்பிட்டு இருக்கிறதாகவும் கூடிய சீக்கிரம் கல்யாணம் செய்துக்க இருந்ததாகவும் சொன்னாங்க. இடையில என்னை பத்தி தெரிய வந்ததால அவர் என்னை விட்டு உன்னை மேரேஜ் பண்ணிக்க போறாருனு சொன்னாங்க”
“...”
“நமக்கு பிடிச்சவங்க சந்தோஷத்துல தான நம்ம சந்தோஷம் இருக்கு. அதான் இந்த மேரேஜை நிறுத்திட்டேன். அவரு அவருக்கு பிடிச்ச பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டு ஹாப்பியா இருக்கட்டும்” என்று முடிக்க,
“அப்படியே அடிச்சேன்னா பாரு கன்னம் வீங்கிடும். அடுத்த வாரம் கல்யாணம் இருக்கேன்னு அமைதியா இருக்கேன்” என்றவளது கோபத்தில் மேகா மிரண்டு பார்க்க,
“யார் எது சொன்னாலும் நம்பிடுவியா? சொந்தமா அறிவே இல்லையா?” என்று காயு பொறிந்து தள்ள,
இவள் பதிலற்று நின்றிருந்தாள்.
“கல்யாணத்தை நிறுத்துறது அவ்ளோ ஈசியா போச்சா உனக்கு?” என்று காயு மேலும் முறைக்க,
இவளுக்கு விழிநீர் கன்னத்தில் வழிந்தது.
“உனக்கு அழறதை தவிர எதுவுமே தெரியாதா மேகா? அவ சொன்னா உனக்கு புத்தியே இல்லையா?” என்று திட்ட,
மேகா வாயே திறக்கவில்லை.
“சைத்துவை நீ நம்பவே இல்லையா?” என்று வருத்தத்துடன் கேட்க,
“இ…இல்லை கா. எனக்கு அவர் மேல நம்பிக்கை இருக்கு கா” என்று மறுக்க,
“அப்புறம் ஏன் அவன்கிட்ட நேத்து அப்படி பேசின?”
“பிடிக்காத மேரேஜை…” என்று பேசுகையிலே இடை நுழைந்தவள்,
“பைத்தியம் மாதிரி பேசிட்டு இருக்காத மேகா. அவனுக்கு உன்னை தான் பிடிச்சிருக்கு” என்று கத்தியேவிட்டாள்.
அதில் அதிர்ந்து நின்றவள் பின்னர்,
விழிநீரை துடைத்தபடி தலையை இடம் வலமாக அசைத்து,
“இல்லை உங்க தங்கச்சி ரொம்ப உறுதியா சொன்னாங்க. அழகு அறிவு ஸ்டேட்ஸ் எல்லாம் இருக்க அவங்களை அவர் விரும்புனாங்கன்னு சொல்றது உண்மையா தான் இருக்கும். இது எதுவுமே இல்லாத என்னை அவர் கல்யாணம் பண்ணிக்க முடிவெடுத்தது கண்டிப்பா பரிதாபத்தினால தான் இருக்கும்”
“...”
“அதுவும் அவரால தான் எனக்கு டிஸ்க் கம்ப்ரஷன் வந்திருக்குனு தெரிஞ்ச உடனே தான் அவர் என்னை தேடி வந்திருக்காரு விரும்புறதா சொல்லி இருக்காரு. அதெப்படி இத்தனை நாள் நினைவுல கூட இல்லாத ஒருத்தி மேல திடீர்னு காதல் வரும்?” என்று காயுவை கண்டாள்.
அவள் பேசியதில் முதலில் கோபம் வந்தாலும் இறுதியில் கூறியதில் நியாயம் உள்ளதால் பொறுமையாக பேச நினைத்தவள்,
“மேகா இங்க வா வந்து உட்காரு” என்று அருகில் இருந்த இருக்கையில் அமர வைத்தாள்.
மேகா காயுவின் முகத்தை சிறிது தவிப்புடன் காண,
“மேகா நான் சொல்றதை நல்லா காது கொடுத்து கேளு. சைத்துக்கு உன்னை தான் பிடிச்சு இருக்கு உன்னை மட்டும் தான் பிடிச்சு இருக்கு சரியா? என் தங்கச்சிக்கு சைத்து மேல இன்ட்ரஸ்ட் இருந்துச்சு பட் அவனுக்கு எதுவும் இல்லை. இப்போ உன்னை அவனுக்கு பிடிச்சு கல்யாணம் பண்ண போறதால அவ கோபத்துல அப்படி வந்து பேசிட்டா” என்று கூற,
“இல்லை அக்கா அவங்க” என்று மேகா தயங்கி இழுக்க,
“இதுக்கு மேல நான் உனக்கு எப்படி புரிய வைக்கிறதுனு தெரியலை. எனக்கும் உனக்கும் இருக்க மாதிரியே பரிதாபத்துல உன்னை கட்டிக்க முடிவெடுத்துட்டானோன்னு தோணுச்சு. நான் அதை அவன்கிட்ட நேரடியாவே கேட்டுட்டேன் அதுக்கு அவன் என்ன பதில் சொன்னான் தெரியுமா?” என்று காயு நிறுத்த,
மேகாவின் பார்வை அவாவை தாங்கி நின்றது.
“இதெல்லாம் அவனே உன்கிட்ட சொல்ல ஆசைப்பட்டிருப்பான். பட் சூழ்நிலை நானே சொல்ல வேண்டியதா இருக்கு” என்று பெருமூச்சு விட்டவள் அவன் கூறிய வார்த்தைகளை அப்படியே கூறினாள்.
“காதலிக்கிறது அழகான விஷயம்னா காதலிக்கப்பட்றது அதை விட அழகான விஷயம். எனக்கு மேகாவை விட அவளோட காதல் ரொம்ப பிடிச்சிருக்கு. அவளோட காதலை நான் காதலிக்கிறேன். இதுவரைக்கும் என்னை காதலிக்கிறதா நிறைய பேர் என்கிட்ட சொல்லியிருக்காங்க ஆனால் அதுல இல்லாத ஒரு பீல் இவளோட சொல்லாத காதல்ல இருக்கு”
“...”
“இப்போ வரை என்னை விரும்புறதா என்கிட்ட அவ ஒரு வார்த்தை கூட சொல்லலை. பட் ஒவ்வொரு செகெண்டும் அவளோட காதலை என்னை பீல் பண்ண வைக்கிறா. அதுவும் அனிருத்கிட்டயும் அக்ஷிக்கிட்டயும் அவ என்னை தேடுன அந்த ஒரு நிமிஷம் உள்ளுக்குள்ள ஏதோ நழுவி அவ கால்ல விழுந்துடுச்சு அப்போ அந்த நொடி தோணுச்சு இவ தான் உனக்கானவ இவளை விட்றாத இந்த ஜென்மத்தில இவளைவிட யாராலயும் உன்னை காதலிக்க முடியாதுனு அவ்ளோதான் என்னோட பேலன்ஸ் லைஃப் அவளோட தான் அவ கையை பிடிச்சிக்கிட்டு தான்னு முடிவெடுத்துட்டேன்” என்று முடித்திருந்தான்.
அவனிடத்தில் இத்தகைய பதிலை நிச்சயமாக காயு எதிர்பார்த்திருக்கவில்லை. அதுவும் இத்தனை நீளமாய் ஒரு விளக்கம் இயல்புக்கு மாறாய் அதுவே அவனுடைய நேசத்தின் ஆழத்தை உணர்த்தியது.
சைத்தன்யா கூறியவற்றை அறிந்த மேகா அதிர்ந்து சிலையாகிவிட்டாள் தான்.
எத்தகைய வார்த்தைகள் இவை. என்னைவிட என்னுடைய உணர்வுகளை என்னுடைய நேசத்தை நேசிக்கிறான். உள்ளுக்குள் இதயம் சிறிது சிறிதாக கரைந்து வழிய துவங்கியது.
தன்னை நேசித்திருந்தால் கூட இவ்வளவு பெரிதாய் தோன்றியிருக்காது தன்னுடைய நேசத்தை விரும்புகிறான். என்னுடைய உணர்வுகளுக்கு எவ்வளவு பெரிய அங்கீகாரம் இது என்று உள்ளம் விம்மியது.
உவர்நீரை துடைக்காது தன்னையே வெறிப்பவளிடம்,
“அது மட்டுமில்லை. உங்க கல்யாணம் எப்படி இவ்ளோ சீக்கிரம் நடக்குதுனு தெரியுமா?” என்று கேட்க,
‘இல்லை’ எனும் விதமாக மேகாவின் தலை அசைந்தது.
“நீயே யோசிச்சு பாரு அவன் இருக்கிற நிலைமைக்கு ஒரு மிடில் கிளாஸ் பொண்ணை அதுவும் வேற கேஸ்ட்ல எப்படி ஒத்துப்பாங்க?” என்று அவள் முகம் காண,
மேகாவிற்கும் இந்த கேள்வி முதலில் இருந்தே உள்ளே ஓடி கொண்டிருக்கிறது.
“அவன் உன்னை விரும்புறதா கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்றதா சொன்னதும் வீட்ல ஒரு பூகம்பமே வெடிச்சது. அதுவும் பெரியவங்க சைத்துவுக்கும் என் தங்கைக்கும் கல்யாணம் பண்ற முடிவுல இருந்தாங்க. பெரிய பிரச்சனை ஆச்சு. எல்லாரும் தாம் தூம்னு குதிச்சாங்க. ஒத்துக்கவே முடியாதுனு சொல்லிட்டாங்க”
“...”
“ஆனால் சைத்து கொஞ்சம் கூட அசையல. என் வாழ்க்கையில கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது மேகாகூட மட்டும் தான் இல்லைன்னா கடைசி வரை இப்படியே இருந்திடுவேன்னு சொல்லிட்டான். ஏற்கனவே அவன் கல்யாணம் தள்ளி போகுதுன்ற கவலையில இருந்த அத்தை ரொம்ப பயந்துட்டாங்க. மாமாக்கிட்ட அவன் ஆசைக்கு ஒத்து போங்கன்னு கெஞ்சுனாங்க. அவரும் கொஞ்சம் கூட மனசை மாத்திக்கலை”
“...”
“வீட்ல இந்த பிராப்ளம் கொஞ்ச நாளாவே ஓடிட்டு இருந்துச்சு. பொறுமை இழந்த மாமா அந்த பொண்ணை கல்யாணம் செஞ்சா உனக்கு சொத்துல எந்தவித பங்கும் கிடையாது. வீட்டைவிட்டு போய்டுனு சொல்லிட்டாரு. சைத்துவால இந்த சொபஸ்டிகேட்டட் லைஃபை விட முடியாது. கண்டிப்பா உன்னை விட்டுடுவான்னு ஒரு பெரிய நம்பிக்கை மாமாக்கு”
“...”
“ஆனால் அடுத்த செகெண்டே எனக்கு உங்க சொத்துல இருந்து ஒரு பைசா கூட வேணாம். நான் படிச்சு இருக்கேன் என் படிப்புக்கேத்தை வேலை செஞ்சு என்னையும் என் பொண்டாட்டியையும் பாத்துக்க தெரியும்னு வீட்டை விட்டு கிளம்பி போறேன்னு அவர் நம்பிக்கையில பெரிய அடியை போட்டான். அவனோட பேச்சுல மனுஷன் நிஜமா ஆடிப்போய்ட்டாரு. என் வீட்டுக்காரு சொல்லியும் கேக்காம வீட்டைவிட்டு போய்ட்டான்”
“...”
“எல்லாருக்கும் சைத்துவ பத்தி ரொம்ப நல்லா தெரியும். அவன் ஒரு முடிவெடுத்துட்டா யார் சொன்னாலும் மாத்திக்க மாட்டான்னு. அத்தையும் என் வீட்டுக்காரும் தான் மாமாக்கிட்ட பேசுனாங்க. வேற வழியில்லாம மாமா தான் இறங்கி வந்தாரு. அதுவும் அவன் ஒரு கண்டிஷனோட தான் ஒத்துக்கிட்டான்” என்று நிறுத்த,
“என்னதுக்கா?” என்றவளுக்கு வார்த்தையே வரவில்லை.
“எனக்கு மேகாக்கும் கல்யாணம் ஆகுற முன்னாடியும் சரி முடிஞ்ச பின்னாடியும் சரி நான் உயிரோட இருக்கும் போதும் அதுக்கு பின்னாடியும் கூட மேகாவுக்கோ அவளோட குடும்பத்துக்கோ என்னை சேர்ந்தவங்களால நம்ம ஸ்டேட்ஸ் வச்சோ கேஸ்ட் வச்சோ எந்த பேச்சும் இருக்க கூடாது. அவ இந்த வீட்டோட மருமகள். அவளை பேசுனா என்னை பேசுன மாதிரின்னு சொன்னான். அந்த நொடி நாம கூட இதை யோசிக்கலையேன்னு தோணுச்சு. எவ்ளோ தூரம் உன்னை விரும்பியிருந்தா எந்த காலத்திலயும் நீ கஷ்டப்பட கூடாதுனு இப்படி கண்டிஷன் போட்டுருப்பான்” என்று மேகாவை காண,
அவளுக்கு அவனுடைய நேசத்தில் மூச்சு முட்டியது நிஜமாய் சட்டென்று எழுந்து சென்று பால்கனியில் நின்று கொண்டாள்.
எவ்வளவு நேசமிருந்தால் எனக்காக என் ஒற்றை ஆளுக்காக அனைத்தையும் தூக்கி எறிய முடிவு செய்திருப்பார் என்று நினைக்க நினைக்க நெஞ்சம் விம்மியது.
அவளது நிலை உணர்ந்த காயு எழுந்து சென்று தோளில் கையை வைக்க,
“சாரிக்கா” என்றவள் அழுகையுடன் அணைத்து கொண்டாள்.
அவளது முதுகை ஆதரவாக வருடியவள்,
“என்கிட்ட எதுக்கு சாரி கேக்குற போய் உன் ஆள்க்கிட்ட கேளு. அவன் முகமே சரியில்லை. நீ அவனை நம்பலைனு ரொம்ப வருத்தப்பட்டு பேசுனான். அதுவும் விரக்தியா பேசுன மாதிரி தான் எனக்கு பீல் ஆச்சு” என்றிட,
மேகாவிற்கு வேதனையில் முகம் கசங்கியது.
அதனை கண்ட காயு, “போ போய் அவனை சமாதானம் பண்ணு. ஈஸியா கிடைக்கிற காதல்ல எதுவுமிருக்காது” என்றிட,
“அவரு அவ
ருக்கு என் மேல கோபம் இருக்கும்” என்று தவிப்பும் அச்சமுமாக கூற,
“அது உன் பிராப்ளம் நான் எதுவும் பண்ண முடியாது” என்று தோளை குலுக்கிவிட்டு கீழே சென்று தேநீரை பருக துவங்கிவிட,
மேகா தான் எப்படி சைத்தன்யாவிடம் பேசுவது என்று தெரியாது தவித்து நின்றிருந்தாள்…