• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

மேகம் 22

Administrator
Staff member
Messages
464
Reaction score
794
Points
93
மேகம் 22:

மறுநாள் அலுவலகத்தில் தனது அறையில் வேலையை கவனித்து கொண்டிருந்தவனுக்கு நேற்றிலிருந்து ‘தான் ஏன் முன்னரே இவளை உணராது போனோம்?’ என்ற கேள்வி தான் துரத்தி கொண்டிருந்தது.

விழிகள் கோப்பில் இருந்தாலும் சிந்தனை முழுவதும் அவளிடத்தில் தான்.

அவளை சரி செய்ய வந்தவன் அவளிடத்தில் சரிந்து கொண்டிருக்கிறானோ…?

எதேச்சையாக நிமிர்ந்து பார்க்க மேகா தன்னறை வாசலில் லேசான பதற்றத்துடன் நின்றிருப்பது தெரிந்தது.

ஏதோ தனக்குத்தானே பேசியபடி இருந்தவள் ஒரு முடிவுக்கு வந்தவளாக,

“மே ஐ கம் இன் சார்” என்றிட,

அவளது செயலில் புருவம் சுருக்கியவன்,

“எஸ் கம்மின்” என்றுவிட்டு கோப்பை பார்ப்பது போல குனிந்து கொண்டான்.

அவள் உள்ளே வரும் அரவம் உணர்ந்து நிமிர்ந்து,

‘என்ன?’ என்பதாய் புருவம் உயர்த்த,

கண நேரத்தில் அவளிடத்தில் மெலிதான பூகம்பம் மின்னி மறைய இதழ்கள் எதையோ முணுமுணுத்தது.

எதுவும் அவனது துள்ளிய பார்வையில் இருந்து தப்பவில்லை.

விழிகளை சிறிதாய் விரித்து தன்னிலை மறந்து இமைக்காது தன்னையே பார்த்திருப்பவளை கண்டு இவனுக்குள் மெலிதான சிலிர்ப்பு ஏற்பட்டது.

அதுவும் அவளது அந்த பாவனை இத்தனை முதல் முறையாக தன்னிலை மறந்து நேரடியாக அவள் தன்னை ரசிப்பது இது தான் என்று எண்ணம் பிறக்க சிறிதான சுவாரசியம் முளைத்தது.

மேலும் அவளது பார்வை தந்த குறுகுறுப்பை தவிர்க்க முடியாதவன்,

“என்ன வேணும் மேகா?” என்று மீண்டும் அழுத்தி வினவிட,

“சார் உங்க மொபைல்?” என்று மேகா கூறியதும்,

அலைபேசியை வாங்குவதற்காக அவனது கரம் நீண்டது. அவனுக்கும் தெரியும் ஒரு நாளில் அதனை சரி செய்திட இயலாது என்று இருந்தும் அவளை கொஞ்ச நேரம் பதற செய்யும் பொருட்டு கேட்டான்.

அவனது கரத்தையும் முகத்தையும் ஒரு நொடி மாறி மாறி பார்த்தவள்,

“அது இன்னும் சர்வீஸ் பண்ணி வரலை சார்‌. சர்வீஸ் பண்ண கொடுத்து இருக்கேன் வர டென் டேஸ் ஆகும்” என்றபடி தயங்கி அவனது முகம் காண,

“எங்க கொடுத்து இருக்க?” என்றவனது பார்வை அவளது முகத்தில் நிலைத்தது.

“எனக்கு தெரிஞ்ச அண்ணா மூலமா மும்பைல இருக்க சர்வீஸ் சென்டர்க்கு அனுப்பி இருக்கேன்”

“ஓ… எவ்ளோ சர்வீஸ் சார்ஜ்?”

“த்ரீ லேக்ஸ்”

“பே பண்ணிட்டியா?”

“இல்லை சார் அட்வான்ஸ் மட்டும் கொடுத்து இருக்கேன்” என்றதும் அவனது முகத்தில் வியப்பு ஜனித்தது.

இதனை சரி செய்ய ஆகும் பணத்தை கண்டு பின்வாங்கி விடுவாள் என்று எண்ணயிருக்க இவள் அதனை செய்யவில்லை.

“ஸோ மொபைல் வர டென் டேஸ் ஆகும் அதுவரைக்கும் நான் என்ன பண்றது?” என்று வியப்பை காண்பிக்காது வினவ,

இந்த வினாவிற்கு தானே நேற்றில் இருந்து பதில் சிந்தித்து வருகிறாள் ஒன்றும் புலப்படவில்லையே…

“அது…” என்று இழுத்து,

“உங்க மொபைல் வர வரைக்கும் என்னோடதை யூஸ் பண்ணிக்கிறிங்களா…?” என்ற வினவியவளுக்கே அது அபத்தமாக தான் இருந்தது.

அவளது பதிலில் சடுதியில் இவனுக்கு புன்னகை அரும்பிவிட்டது.

அதனை லாவகமாக இதழுக்கடியில் மறைத்தவன்,
“கிவ் மீ யுவர் மொபைல்” என்று அவளிடம் கையை நீட்டி இருந்தான்.

அவனது வினாவில் அதிர்வை தாங்க இயலாதவள்,

“ஹான்…” என்று திகைத்து விழித்தாள்.

திகைப்பில் பெரிதாக விரிந்த அந்த விழிகளுக்குள் மீண்டும் சென்று வந்தவனுக்கு திகைப்பில் லேசாக திறந்திருந்த அவளது வாயை கண்டு சிரிப்பு வந்து சுவாரசியம் மேலும் கூடியது.

மேகா தன் காதில் விழுந்தது உண்மையா என்று நம்பவியலாது திகைத்து அவனை காண,

“ஐ செட் கிவ் மீ யுவர் மொபைல்” என்று சைத்தன்யா மீண்டும் கூறி அவளை அதிர்வுக்கு உள்ளாக்கினான்.

“அது… நான்… என்னோடது” என்று உளற துவங்கியவளது நெற்றியில் வியர்வை பூக்கள் பூக்க துவங்கியிருந்தது.

பதற்றத்தில் கையில் இருந்த துப்பட்டாவை கசக்கியவளை தான் விழியகலாது பார்த்திருந்தான்.

அவளது பதற்றம் அவனுக்கு புரிய வைத்தது அந்த அலைபேசியில் தனக்கு தொடர்புள்ள ஏதோ ஒன்று இருக்கிறது என்று.

அவளாகவே பேசட்டும் என்று அமைதியாக பார்த்திருக்க,

ஒருவராக தைரியத்தை வரவழைத்து, “ஏன் மொபைல் எப்படி நீங்க… அது பழைய மொபைல்” என்று திக்கி திணறி கேட்டுவிட்டாள்.

“நீதான உன் மொபைல யூஸ் பண்ணிக்க சொன்ன மேகா?” என்று அவன் அழுத்தி கேட்க,

‘ஆமாம்’ என்று இவளது தலை மேழும் கீழும் அசைந்தது.

அதில் அவளது காதில் இருந்த மெல்லிய ஜிமிக்கி அசைந்தாட இவனது விழிகள் அதில் லயித்தது.

நொடி நேரத்தில் தன்னை சமாளித்தவன்,“தென் வாட்” என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி இறக்க,

இவளுக்கு ஒரு பூகம்பம் பூத்தது அவனது பாவனையில். ஒரு கணம் செய்வதறியாது நின்றுவிட்டாள்.

அந்த கணம் அவனுக்கு உறைத்தது. தன்னை புருவ தூக்கல் தான் அப்போதும் இப்போதும் அவளது உறைந்த நிலைக்கு காரணம் என்று.

மீண்டும் அந்த பார்வை தந்த குறுகுறுப்பை தாளாது சைத்தன்யா ஒரு முறை குனிந்து தன்னுடைய கைக்கடிகாரத்தை பார்க்க,

ஆனால் இவள் தான் என்ன செய்ய இயலும். கையை பிசைந்தபடி அவனை கண்டாள்.

எதுவும் கூறாது கையை அவளை நோக்கி நீட்ட,

“சிம்மை எடுத்துட்டு தர்றேன்” என்று தனது அலைபேசியை திறக்க முயற்சித்த கணம் அங்கே ஒரு அலைபேசியின் கானா இசைத்தது.

அதில் மேகாவின் தலை நிமிர,

தனது பேன்ட் பாக்கெட்டில் இருந்த அலைபேசியை எடுத்த சைத்தன்யா பேச துவங்கினான்.

அவனது கையில் இருந்த புத்தம் புது அலைபேசியை கண்டவளது விழிகள் அதிர்ந்து விரிந்தது.

அலைபேசியில் பேச்சு கொடுத்தாலும் பார்வை அவளை தான் அவதானித்து இருந்தது.

பெரிதாய் அதிர்ந்து மொழியற்று நிற்பவளை கண்டு மனதினோரம் லேசான ரசனை ஊற்றெடுத்தது.

பார்வை தலை முதல் கால் வரை அளந்தது. அடர் நீல நிறமும் ராமர் பச்சையும் கலந்த சுடிதாரும் பேண்ட்டும் அணிந்து இருந்தாள்.

துப்பட்டா வழக்கம் போல அல்லாது கழுத்தை சுற்றி இருந்தது. காதில் இருந்த சிறிய ஜிமிக்கியில் தான் அவனது விழிகள் முழுவதும்.

இரண்டு நிமிடங்களில் ஓராயிரம் பாவனைகளை மாற்றி மாற்றி பொழிந்து கொண்டிருந்தவளை கண்டும் காணாது இருந்தவன்
அழைப்பை துண்டித்ததும் நேரடியாக நோக்கினான்.

“நான் மும்பை ப்ரான்ச்கு கான்டாக்ட் செஞ்சு வாரண்டி க்ளைம் பண்ணி மொபைல வாங்கிக்கிறேன். லீவ் தட்” என்று போனால் போகிறது என்பது போல மொழிய,

“இல்லை அது…” என்று துவங்கியவள் சடுதியில்,

“ஓகே சார்” என்று முடித்துவிட்டாள்.

அதில் இவனது இதழ்களில் கீற்றாய் புன்னகை விரிந்தது. அதனை வழக்கம் போல இதழுக்குள் அடக்கிவிட்டான்.

போகும் அவளையே மௌனமாக தொடர்ந்தவன் பிறகு தன்னுடைய வேலையில் மூழ்கிவிட்டான்.

அதன் பிறகு அவனுக்கு ஊரில் நிறைய வேலைகள் இருக்க இந்த பணியை தனக்கு அடுத்த பதவியில் இருப்பவரிடம் ஒப்படைத்துவிட்டு கோவை சென்றுவிட்டான்.

சென்றதும் தான் தாமதம் காயு,

“சைத்து என்னாச்சு அவகிட்ட பேசுனியா? என்ன ரியாக்ட் பண்ணா?” என்று அடுத்தடுத்து வினாக்களை தொடுக்க,

“பொறுமை காயு எவ்ளோ கொஸ்டீன்ஸ் கொஞ்சம் மூச்சு வாங்கிட்டு பேசு” என்று தண்ணீர் பொத்தலை எடுத்து கொடுத்தவன் சாவகாசமாக அமர,

இவளுக்கு தான் பொறுமை பறந்தது.

“ப்ச் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு? நீ மேகாகிட்ட பேசுனியா இல்லையா?”

“நோ நான் பர்ஸ்ட் டைம் அவளை பார்த்தப்போ தெரிஞ்ச மாதிரியே காட்டிக்கலை”

“என்ன?” என்று அதிர்ந்தவள்,

“ஏன்?” என்று பார்த்தாள்.

“தோணலை”

“அவ என்ன ரியாக்ட் பண்ணா?”

“மயங்கி விழுந்துட்டா”

“ரியல்லி?”

“ஆமா அப்புறம் எமெர்ஜென்சி ரூம்க்கு நான் தான் தூக்கிட்டு போனேன்” என்று நேற்று வரை அலைபேசி விடயத்தில் நடந்ததை கூறினான்.

இத்தனை நாட்கள் அலைபேசியில் காயு பலமுறை கேட்டும் கூறாதவன் இப்போது அனைத்தையும் கூறி முடித்தான்.

“சைத்து நாம நினைச்சதை விட அவ ரொம்ப சீரியஸா இருக்கா” என்று கவலையுடன் கூற,

சைத்தன்யாவிடம் மொழியில்லை.

“இவ்வளோ நாள் அங்க இருந்தும் நீ ஏன் அவக்கிட்ட இது பத்தி பேசலை?” என்று காயு வினவ,

“பேச முடியலை”

“அதான் ஏன்”

“தெரியலை” என்று தோளை குலுக்கியவன்,

“நெக்ஸ்ட் டைம் நீயும் என்கூட வா” என்றுவிட்டு நகர்ந்திட,

காயுவிற்கு தான் சைத்தன்யாவின் நடவடிக்கை மீது சிறிதான சந்தேகம் எழுந்தது.

சைத்தன்யா கூறியது போல அடுத்த முறை செல்லும் போது காயு மற்றும் குழந்தைகளையும் அழைத்து கொண்டு சென்னைக்கு வந்திருந்தான்.

காலையில வந்ததும் சைத்தன்யா அலுவலகத்திற்கு வந்துவிட உறங்கும் பிள்ளைகள் எழுந்ததும் அவர்களை தயார்படுத்தி மதிய வேளையில் தான் காயு வந்திருந்தாள்.

வந்ததுமே, “சைத்துப்பா எங்களை விட்டுட்டு நீங்க மட்டும் கிளம்பி வந்துட்டிங்களா?” என்று குழந்தைகள் அவனிடம் தாவ,

“எனக்கு ஒர்க் இருந்துச்சுடா செல்லம்” என்று இருவரிடமும் சிரிப்புடன் பதில் பொழிந்தான்.

காயு, “மேகா எங்க சைத்து?” என்று வந்ததுமே கேள்வி எழுப்ப,

“வர சொல்றேன் வெயிட்” என்றவன் அலைபேசியை எடுத்து மேகாவிற்கு அழைப்பை விடுத்தான்.

காயு, “நீங்க ரெண்டு பேரும் உள்ள போய் விளையாடுங்க” என்று குழந்தைகளை அனுப்பி வைத்தாள்.

புது எண்ணிலிருந்து அழைப்பு வந்ததும் யோசனையுடன் எடுத்தவள்,

“ஹலோ” என்றிட,

சில நாட்களுக்கு பிறகு செவியில் நுழைந்த மேகாவின் குரலினால் இவனுக்குள் ரசாயன மாற்றம்.

நொடி நேரம் தாமதித்து, “கம் டூ மை கேபின் மேகா” என்று வைத்துவிட்டான்.

அடுத்த நில நிமிடத்தில், “மே ஐ கம் இன் சார்” மேகாவின் குரல் கேட்டது.

“எஸ் கம்மின்” என்று சைத்தன்யா கூறியதும்ன உள்ளே நுழைந்தாள்.

நுழைந்த கணம் காயு பின்னிருந்து அவளது கண்களை மூடிவிட்டாள்.

அதில் அதிர்ந்தவள் அந்த கரத்தின் மீது கையை வைக்க,

“கெஸ் மீ‌…” என்று உற்சாகமாக காயு இயம்ப

மேகாவின் இதழ்கள் தாமாக,

“காயுக்கா” என்று முணுமுணுத்தது.

சைத்து அவளது இதழசைவை தான் அசையாது பார்த்திருந்தான்.

“கண்டுபிடிச்சிட்டியா மேகா” என்று சிரிப்புடன் காயத்ரி அவள் முன் நிற்க,

மேகாவிற்கு சில கணம் பேச்சே வரவில்லை மகிழ்ச்சியில்.

“என்ன மேகா அப்படியே ஸ்டக் ஆகிட்ட?” என்று காயு சிரிப்புடன் கேட்க,

“எப்போ வந்திங்க கா” என்று மேகாவும் புன்னகையுடன் கேட்டாள்.

ஆனால் அதில் காயத்ரியிடம் இருந்த‌ துள்ளல் இல்லை. ஒருவித அமைதி இருந்தது.

“மார்னிங் தான் வந்தேன்.‌ வந்ததுமே உன்னை பாக்க தான் ஓடி வந்துட்டேன்” என்று மொழிந்தவள் மேகாவை கைப்பிடித்து அமரவைத்து தானும் அமர்ந்து கொண்டாள்.

“வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்கா” என்று மேகா விசாரிக்க,

“எல்லாரும் ரொம்ப நல்லா இருக்காங்க. நீ ஏன் இப்படி இவ்வளோ லீனா இருக்க? காலேஜ் படிக்கும் போது கூட நல்லா இருந்த?” என்று கவலையாக கேட்டிட,

பதிலுக்கு மேகா சிறு மென்னகையை பதிலாக கொடுத்தாள்.

இருவரும் வெகு நாட்கள் கழித்து சந்திப்பதால் தங்களை மறந்து சைத்தன்யாவையும் மறந்து பேசி கொண்டிருக்க, சைத்தன்யா விழிகள் பார்வை என அனைத்தும் மேகாவிடத்தில் தான்.

“ப்பா இவன் என் பார்பியை உடைச்சுட்டான்” என்ற மழலை குரல் வர,

அதனை தொடர்ந்து, “நான் உடைக்கலப்பா” என்ற குரலும் வந்தது.

“ப்பா ஹீ இஸ் லையிங்” என்றபடி தலையில் இரண்டு குடுமியுடன் கையில் பொம்மையுடனும் இதழ் பிதுக்கி நின்ற குழந்தையை கண்டதும் இவளுக்கு இதயமே துடிப்பை நிறுத்திவிட்டது.

சடுதியில் அவளது முகத்தில் வந்து போன அந்த விளங்கவியலாத பாவனையை கண்டு இவனது விழிகள் சுருங்கி விரிந்தது.

“நோ ப்பா ஐ டின்ட்” என்றபடி அவனது பின்னால் வந்த வாண்டு மற்றவனை முறைத்தது.

“இங்கேயும் வந்து ஸ்டார்ட் பண்ணிட்டிங்களா?” என்று காயு முறைக்க,

இருவரும் சைத்தன்யாவை கண்டனர்.

காயு, “அவனை பாத்தா விட்ருவேனா. அழைச்சிட்டு வரும் போதே சைலண்ட்டா இருக்கணும்னு சொல்லித்தானே அழைச்சிட்டு வந்தேன்” என்று மொழிய,

“காயு பசங்களை திட்டாத” என்று மேகாவிடமிருந்து திரும்பி சைதன்யா அதட்டல் போட்டான்.

இவை யாவையும் பார்த்து கொண்டிருந்த மேகாவிற்கு அவர்களது குடும்பத்தில் தான் தேவையில்லாது இருப்பது போல தோன்ற வைத்தது.

மேகா அங்கிருப்பதை உணர்ந்த காயு,

“சாரி மேகா உன்னை மறந்துட்டேன்” என்றவள்,

“இவங்க ரெண்டு பேரும் என்னோட பசங்க ட்வின்ஸ் அக்ஷயா அனிருத்” என்று அறிமுகம் செய்தவள்,

“ஆன்டிக்கு ஹாய் சொல்லுங்க” என்று அவர்களிடம் மொழிந்தாள்.

“ஹாய் ஆன்ட்டி” என்று இருவரும் பளீரிடும் புன்னகையுடன் மொழிய,

“ஹாய்” என்று புன்னகைத்தவளது இதயத்தில் மெலிதான நடுக்கம் பரவியது. அது அவளது வதனத்திலும் நொடி நேரம் வந்து போனது.

அவர்கள் உயரத்திற்கு அமர்ந்தவள் இருவரையும் நோக்கி கையை நீட்டினாள்.

“ஆன்ட்டி கூப்பிட்றாங்கல்ல போங்க” என்று காயு கூறியதும் இருவரும் மேகாவை நோக்கி நகர்ந்தனர்.

இருவரையும் தன்னோடு சேர்த்து பிடித்து கொண்டவளுக்கு இவர்கள் சைத்தன்யாவின் பிள்ளைகள் அவனுடைய ரத்தம் என்பதே நடுங்க செய்தது.

ஏகமாய் நடுங்கியபடி இளையவர்ஙளை அணைத்திருந்த அந்த கரத்தினை கண்டு இவனது புருவம் இடுங்கியது.

மெதுவாய் அவர்கள் இருவரையும் உச்சி முகர்ந்தவளது விழியோரம் நீர் துளிக்க குனிந்து அதனை மறைத்து கொண்டாள் மேகா.

ஆனால் எதுவும் சைத்துவின் கழுகு பார்வையில் இருந்து தப்பவில்லை‌

ஆனால் அவனுக்கு ஒன்று தான் புரியவில்லை.

‘ஏன்? எதற்காக இந்த நடுக்கம்?’ என்று.

ஆனால் சிறிது நேரத்திலே அதற்கு விடை கிடைத்திருந்தது.

“ரொம்ப க்யூட்டா இருக்காங்க்கா” என்றவள் மொழிய,

“அவங்கப்பா மாதிரியே க்யூட் தான் பட் சேட்டை ரொம்ப அதிகம்” என்று காயு சிரிப்புடன் மொழிய,

மேகாவின் விழிகள் சட்டென்று சைத்தன்யாவின் மீது படிந்து மீண்டது.

அவளது பார்வை தன் மீது படிவதை கண்டவனுக்கு அதிர்ச்சி அலைகள் பரவியது.

‘அப்பா மாதிரி என்று கூறியதும் பார்வை என் மீது படிகிறது என்றால் இவள் குழந்தைகளின் தந்தை நான் என்று எண்ணி இருக்கிறாளா?’ என்று சிந்தையில் உதித்திட்டது.

அப்போது அந்த நடுக்கம் பரிதவிப்பு விழியோரம் துளிர்த்த நீர் யாவும் என்னுடைய பிள்ளைகள் என்ற நினைப்பாலா? என்று கேள்வி பிறக்க அந்த கணம் உள்ளே ஒன்று நழுவி சென்று அவள் காலடியில் சரணடைந்தது.

எத்தகைய நேசம் இவளுடையது? என்னை அவர்களிடத்தில் தேடுகிறாளா இவள்? என்று நெஞ்சம் நிறைந்த கேள்வியுடன் மேகாவின் மீது மட்டும் விழுந்தது.

அனிருத், “நான் சேட்டை பண்ண மாட்டேன். ஐ ஆம் அ குட் பாய்” என்று தாயை பார்த்து முறைத்தபடி கூற,

“ஆமா மீ ஆல்சோ குட் கேர்ள் மா” என்று அக்ஷயாவும் உதடு பிதுக்கினாள்.

அதில் மேகாவின் புன்னகை விரிந்தது.

“பொய் சொல்றாங்க மேகா. ரெண்டும் சேர்ந்தா நம்மளை தலை கீழா நின்னு தண்ணீ குடிக்க வச்சிடுவாங்க” என்று காயு புகார் வாசிக்க,

“நோ டோன்ட் லை மா. ஐ ஆம் அ குட் பாய்” என்று அனிருத் உதடு பிதுக்கி அழ தயாராக,

அதில் பதறிய மேகா, “ஹே குட்டி பையா நான் உங்க அம்மா சொல்றதை நம்பலை. நீ ரொம்ப குட் பாய் தான்” என்று அணைத்து கொள்ள,

“அப்போ நானு” என்று அக்ஷயா உதடு பிதுக்கினாள்.

“நீயும் தான் பார்பி டால்” என்று அவளையும் அணைத்து கொண்டாள்.

“குட் ஆன்ட்டி” என்ற அக்ஷயா சிரிப்புடன் அவளது கன்னத்தில் இதழ் பதிக்க, சட்டென்று ஏதோ ஒன்று உள்ளே நழுவி சென்றதை மனது உணர, விழிகளில் நீர் கோர்த்துவிட்டது.

அவளை அகலாத பிரம்மிப்புடன் பார்த்திருந்தவனுக்கு விழியோர உவர்நீர் பார்வையில் விழுந்துவிட்டது.

அந்த நொடி அவளது முகத்தில் வந்து போன பாவனை‌ நிச்சயமாக அவனை உலுக்கி விட்டது.

காணும் யாவிலும் என் பிம்பத்தை தேடும் இவளது நேசம் எந்த வகையில் சேர்த்தி என்று உறுதியாக தெரியவில்லை.

ஒன்று மட்டும் நிச்சயம் மேகாவின் அளப்பறிய நேசம் சைத்தன்யாவை அசைத்து பார்த்திருந்தது.

“பார்பி டால்” என்று புன்னகையுடன் பதிலுக்கு இதழ் பதிக்க,

அனிருத், “எனக்கு எனக்கு” என்று மொழிய,

காயு சிரிப்புடன், “இதுதான் இவங்க ரெண்டு பேருக்கும் எல்லாத்தையும் போட்டி” என்று பொழிந்தாள்.

“ட்விஸ்னா அப்படி தான் இருப்பாங்க” என்று மேகா இயம்ப,

“ஆன்ட்டி என்னை தூங்குங்க” என்று அக்ஷயா கையை தூக்க,

கைகளில் வாரி கொண்டாள் மேகா.

அனிருத், “ஆன்ட்டி நான்” என்று மொழிய,

சடுதியில் மேகாவின் முகத்தில் இருள் சூழ்ந்தது. காரணம் அவளால் அதிக கனத்தை தூக்க இயலாது. மருத்துவர் கனமான பொருட்களை தூக்கவே கூடாது என்று கூறியிருக்கிறாரே.

கண நேரத்தில் தன்னை சமாளித்தவள்,

“கொஞ்சம் நேரத்துல பாப்பாவ இறக்கிவிட்டு உன்னை தூக்கிக்கிறேன்” என்க,

“இப்பவே சேர்த்து தூங்குங்க. அவ லெஃப்ட் சைட் நான் ரைட் சைட்” என்று கையை உயர்த்த,

மேகாவிடம் பதில் இல்லை. என்ன கூறுவென்று நிச்சயமாக தெரியவில்லை.

“உங்களால ரெண்டு பேரை தூக்க முடியாதா? என் டாடி ரெண்டு பேரையும் தூக்கி சுத்துவாரே” என்று சிரிப்புடன் மொழிய,



இத்தனை நேரம் சிந்தனை வயப்பட்டிருந்தவன் மேகாவின் முகத்தினை கண்டு, “அனிருத் வா நான் தூக்குறேன்” என்று மொழிய,

“ப்பா…” என்று சிரிப்புடன் அனிருத் சைத்தன்யாவிடம் ஓட,

“நானும் நானும். இறக்கிவிடுங்க ஆன்ட்டி” என்று அக்ஷயாவும் அவனிடம் ஓடினாள்.

“பாத்தியா கொஞ்ச நேரத்திலயே எவ்ளோ போட்டின்னு” என்று காயு மொழிய,

“காயு குழந்தைங்களை திட்டிட்டே இருக்காத” என்று சைத்தன்யா அதட்டல் போட்டான்.

அடுத்த கணமே இருவரும் சைத்துவின் கன்னத்தில் இதழ் பதித்து சிரிக்க,

“ம்ஹூம் நீ கொடுக்குற செல்லத்துல இவங்க சேட்டை அதிகமாதான் ஆகும். அத்தை தான் இவங்களுக்கு சரியான ஆளு” என்றவள் சலித்து கொள்ள,

அதனை கண்டு கொள்ளாத இருவரும்,

“ப்பா ஸ்னோ வேர்ல்டு கூட்டிட்டு போங்க” என்று சைத்துவிடம் கொஞ்ச துவங்கினர்.

காயு பெரிதாய் முறைத்து, “நோ நெவர் ஸ்னோ வேர்ல்டு கிடையாது. ரெண்டு பேருக்கும் கூலிங் ஒத்துக்காது” என்றிட,

“ப்பா ப்பா” என்று இருவரும் சைத்துவை தாஜா செய்தனர்.

“யார் சொன்னாலும் நோ ஸ்னோ வேர்ல்டு” என்று காயு உறுதியாக கூறிவிட,

சைத்து, “ஸ்னோ வேர்ல்டு இன்னொரு டைம் போகலாம். இப்போ அப்பா வேற ப்ளேஸ்க்கு கூட்டிட்டு போறேன்” என்று குழந்தைகளை சைத்து சமாதானம் செய்ய துவங்கியவனது கவனம் உற்றவளிடம் தான்.

தன்னுடைய செயலை கண்டு மெலிதான வியப்புடன் பார்த்தவள் பிறகு அந்த பார்வையில் மெல்லிய ரசனை பரவுவதை உணர்ந்தான்.

ஆனால் அடுத்த விநாடியே பார்வையை மாற்றி முகத்தை திருப்பி கொண்டாள்.

இப்போது இந்த கணம் அவளது முக மாற்றத்திற்கான காரணம் அவனுக்கு உரைத்தது.

ஆனால் முகத்தை திருப்பிவிட்டு செவி வழியாக இவள் தன்னை உணர்ந்து கொண்டிருக்கிறாளோ? என்று சந்தேகமும் எழுந்தது.

அதே சிந்தனையுடன் சில நிமிடங்கள் கடந்து அவர்கள் இருவரையும் சமாதானம் செய்துவிட்டான் சைத்தன்யா.

காயு, “ஓகே எதாவது மால் போய்ட்டு பார்க் எதாவது இருந்தா போகலாம்” என்று கூற,

சைத்தன்யா, “ஓகே” என்று தலையசைக்க,

மேகாவிற்கும் மீண்டும் தான் அங்கே இருப்பது அவசியமில்லாதது போல தோன்றியது.

“அக்கா எனக்கு கொஞ்சம் வொர்க் இருக்கு. நான் போகவா?” என்று வினவ,

“நீ எங்க போற? நீயும் தான் எங்க கூட வர போற” என்று காயு மொழிய,

“அக்கா அது நான் எதுக்கு. நீங்க பேமிலியா போறீங்க போய்ட்டு வாங்க” என்று மறுத்தாள்.

“நீ எதுக்கா? உன்னை பாக்கதான நான் கிளம்பி வந்திருக்கேன்” என்று செல்லமாக முறைக்க,

ஒரு வழியாக அவளை சம்மதிக்க வைத்து வணிக வளாகத்திற்கு அழைத்து சென்றனர்.

அங்கு சென்று இளையவர்களுக்கு உடை வாங்கிவிட்டு புடவை எடுக்க அடுத்த தளத்திற்கு செல்ல,

மேகாவின் விழிகள் புடவையிலும் அதன் விலையிலும் படிந்து மீள்வதை பார்த்தபடி தான் இருந்தான்.

ஒரு பச்சை நிற புடவையை மட்டும் அவளது விழிகள் ரசனையுடனும் ஆசையுடனும் வருடியது.

ஆனால் அதையும் விலையை பார்த்துவிட்டு வைத்துவிட்டாள்.

இவளுக்கு என்ன? விலையை பார்க்காதே என்று கூறினால் புரியாதே நான் இந்த புடவையை கூட வாங்கி
தர மாட்டேனா? என்று எண்ணமும் சிறிதான உரிமை கோபமும் பிறந்தது.

அனைத்தையும் வாங்கி முடித்ததும் மேகா பார்த்து ரசித்த புடவையை எடுத்து,

“இதையும் பில் போடுங்க” என்றான்.

காயு, “இது யாருக்கு?” என்று கேட்க,

“என் பொண்டாட்டிக்கு” என்று சைத்தன்யா மொழிந்திட,

“சரிதான்” என்று நமட்டு சிரிப்புடன் கூறிய காயுவின் பார்வை மேகா மீது விழ,

சைத்துவும் அப்போது அவளைத்தான் பார்த்திருந்தான்…

யாரிடத்தில்
யாருக்கொரு காதல்
வருமோ…?





 
Active member
Messages
346
Reaction score
233
Points
43
Megha ah correct panna vandhu avalukku oru life ah amachi kudukanum vandha avan yae Megha kita correct agitan husband ah what to.do
Enna Megha oda friend moolama than chaidhu ku Megha oda love matter therinchithu aana aval ah pakkura varaikum avanuku love varala athuku appuram than vabdhuchi itha sonna ava namba matra ah enna than panrathu
 
Top