• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

மேகம் 21

Administrator
Staff member
Messages
672
Reaction score
1,013
Points
93
மேகம் 21

ஒரு பிரிவு பெரிதாய்

என்ன செய்துவிட
பேகிறது...? கூட்டத்தில்
யாரோ ஒருவரிடத்தில்
உன் சாயலை
தேடுவதை தவிர?


கையில் ஒரு கோப்பை வைத்தபடி பார்த்து கொண்டிருந்த சைத்தன்யாவிற்கு நிஜமாய் இதனை எப்படி கையாள்வதென்று புரியவில்லை.

அத்தனை பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களை சாதரணமாக கட்டி ஆள்வனுக்கு இப்பெண்ணிடம் எவ்வாறு பேசி புரிய வைக்க என்று தெரியவில்லை.

அதுவும் தன்னை பார்த்ததும் ஏகமாய் அதிர்ந்து பின்னர் தவித்து கலங்கி மூர்ச்சையாகி போனவளிடம் எப்படி இதனை கூற இயலும்.

தன்னை எதிர்பாராது பார்த்ததற்கே இத்தனை பாவங்களை காட்டுபவளை கண்டு ஒரு புறம் அதிர்ச்சியும் மறுபுறம் வியப்பும் தோன்றியது.

இந்த காதல் இத்தனை வலிமையானதா? எந்தவித தகவலும் தொடர்பும் இல்லாத போதும் எவ்வளவு மனஉறுதி இருந்தால் இவள் காத்திருப்பாள் என்று அவள் மீது சிறு பிரம்மிப்பை உண்டு பண்ணியிருந்தது.

அடுத்த நாள் அலுவலகத்திற்கு வந்தவன் அவளறியாது அவளை கண்காணிக்க துவங்கியிருந்தான்.

தன்னறையில் இருந்து கண்காணிப்பு கேமரா மூலமாக அவளை பார்க்க,

வழக்கம் போல அமைதியாக தன்னிடத்திற்கு வந்தவள் பணியை கவனித்தாள்.

முகம் நேற்றைய விட இன்று அத்தனை நிர்மலாக இருந்தது. நிச்சயமாக அழுதிருக்கிறாள் என்று உள்மனம் கூறியது.

விட்டால் கணினியில் புதைந்து போய்விடுவாள் போல கழுத்தை கூட திருப்பாது அமர்ந்திருந்தாள்.

அருகில் இருந்த காவ்யா எதாவது கேட்டால் கூட திரும்பி ஓரிரு வார்த்தைகளில் பதிலளித்து முடித்துவிடுகிறாள்.

அந்த கணம் இரண்டு நிமிடங்கள் விடாது பேசியபடி தன்னை வர்ணித்த மேகா, தோழிகளுடன் வகுப்பறையில் பேசி சிரித்து தன்னிடத்தில் மாட்டி கொண்ட மேகா என்று என்று கலகலவென பரிமாணம் காட்டிய மேகா என்று அவள் தான் நினைவை நிறைத்து நின்றாள்.

ஆனால் இப்போது கண்ணெதிரில் இருப்பவள் அமைதியின் மற்றொரு உருவம்.

தன்னியல்பை தொலைத்துவிட்டு இருக்கிறாள் இந்த பெண் என்று அந்த கணம் தோன்றியதும்
ஒரு பெருமூச்சு வெளிவந்தது.

காவ்யா கூறும் ஏதாவது சில விடயங்களுக்கு அவளது இதழ்கள் மெலிதாக பிரிந்து மெல்லிய கீற்றாய் புன்னகையை உதிர்க்கும்.

ஆனால் அதில் உயிர்ப்பில்லையோ என்று எண்ண வைத்துவிட்டாள் இந்த பெண்.

அமைதியாய் ஆர்பரிப்பின்றி நிச்சமலமாக கண்முன் நடமாடி கொண்டிருப்பவள் சைத்தன்யாவின் எண்ணங்களில் முழுதாய் முகிழ்ந்திருந்தாள்.

ஒரு வாரமாக அவளை தான் அவதானித்தபடி இருந்தான்.‌ அன்றும் அப்படித்தான் வழக்கம் போல அலுவலகம் வந்து அவளை கண்காணித்தவாறு வேலையில் ஆழ்ந்திருக்க காயத்ரி அலைபேசியில் இருந்து அழைப்பு வந்தது.

அழைப்பை ஏற்றதும்,

“சைத்துப்பா…” என்ற இளையவர்களின் குரல் செவியோடு சேர்த்து இதயத்தையும் நிறைக்க,

மெலிதான குமிழிட்ட புன்னகையுடன் காணொளி அழைப்பை காண,

“சைத்துப்பா எப்போ வருவிங்க?” என்று அக்ஷி கேட்க,

“எனக்கு சாக்லேட் வாங்கிட்டு வாங்க” என்று அனிருத் மொழிந்தான்.

“நெக்ஸ்ட் வீக் வர்றேன் செல்லம்” என்றவன்,

“வாங்கிட்டு வர்றேன் பட்டு” என்று சிரிப்புடன் பதில் மொழிய,

அடுத்தடுத்து பேச்சுக்கள் செல்ல,

“மே ஐ கம்மின் சார்” என்ற குரல் அவனது செவியில் மோதியது.

குரல் வந்த கணமே அதற்கு சொந்தக்காரியை கண்டுகொண்டவன் திரும்பி தனது அறையில் இருந்த சிசிடிவியை காண,

கையில் ஒரு கோப்பை ஏந்தியபடி நின்றிவளது முகத்தில் ஒரு நிச்சலமான பாவம்.

ஒரு நொடி ஊன்றி பார்த்தவன்,

“எஸ் கம்மின்” என்றிட,

அறைக்குள் நுழைந்தவன் வந்தவுடனே,

“சார் ரேகா மேம்…” என்று துவங்கியவளிடத்தில்,

‘உட்கார்’ என்றவாறு சைகை செய்தவன் அலைபேசியில் கவனத்தினை வைக்க,

மேகாவும் அப்போது தான் அதனை கவனித்தவள் அமைதியாக எதிரே அமர்ந்துவிட்டாள்.


குழந்தைகளுடன் மெல்லிய சிரிப்புடன் பேசி கொண்டு இருந்தவனது பார்வை அலைபேசியில் இருந்தாலும் கவனம் முழுவதும் மேகாவிடம் தான்.

நிச்சலமாக இருந்தவளது முகம் சைத்துவின் சிரிப்பை கண்டதும் உயிர்பித்து கொண்டதொரு பாவனையை கொடுத்தது.

பல வருடங்களுக்கு பிறகான அவனது சிரிப்பை கண்டவளுக்கு உள்ளுக்குள் சொல்லவியலாத ஒரு சிலிர்ப்பை ஓட செய்ய அவனை தான் இமைக்காது பார்த்திருந்தாள்.

முன்பை விட முகத்தில் சிறிது முதிர்ச்சி வந்திருக்க அது இன்னும் அவனை அழகாக காண்பித்தது.

கருநீல நிற சட்டையையும் சந்தன நிறத்தில் பேன்ட்டும் அணிந்திருந்தவனது இடது கையில் ஒரு கைக்கடிகாரம் இருந்தது.

இரண்டு கையையும் மேஜை மேல வைத்தவாறு நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டு மென்னகையுடன் பேசி கொண்டு இருந்தான்.

அவளது பார்வை மெதுவாய் தன்னை வருட அதில் ரசனை கூடியதும் அவனுக்கு புரிந்திட உள்ளுக்குள் சிறிதான சிலிர்ப்போடியது.

இத்தனை நாட்கள் அமரிக்கையான புன்னகையுடன் கடந்து சென்றவளுக்கு இன்று என்னவாயிற்று இப்படி பார்த்து வைக்கிறாள் என்று தான் தோன்றியது.

“சைத்துப்பா” என்ற குரலுக்கு,

“என்னடா செல்லம்” என்று வினவிய கணம் இவளது முகத்தில் ஒரு வித மின்சாரம் தாக்கிய உணர்வு வந்து போனது.

அதனை கண்டவனது புருவம் யோசனையாய் சுருங்கி விரிய,

“சைத்துப்பா அம்மா அடிச்சிட்டா என்னை?” என்ற குரலில் அவளது முகமெங்கும் பிரளயத்தின் சாயல் பிறந்தது.

கழுத்தோரம் பூத்த வியர்வையை துடைத்துவிட்டவள் பார்வையை மறுபுறம் திருப்பி சுவற்றை வெறித்தாள்.

“அப்பா நீங்களே அம்மாவ திட்டுங்க. நாங்க சொன்னா பாட்டி கேக்கவே மாட்றா” என்று புகார் வர,

“ஆமாப்பா கேளுங்க அம்மாவ” என்று மற்றொரு குரல் கேட்டது.

கவி கூறியது சரிதான் இரண்டு குழந்தைகள் தான் போலும் என்று தோன்றியது.

சில பல நொடிகள் கடந்ததும்,

“என்ன‌ உன்கிட்டயும் கம்பிளைண்ட் வாசிச்சுட்டாங்களா?” என்ற குரலே அவளுக்கு காயத்ரியை உணர்த்தியது.

மனது சப்தமின்றி, ‘காயு அக்கா’ என்று முணுமுணுத்தது.

திரும்பி இருந்த போதும் அவளது உதட்டசைவை கண்டு கொண்டான் சைத்தன்யா.

காயுவின் குரலை கேட்ட அடுத்த கணம் இவளிடத்தில் ஒருவித அசௌகரியம்.

கணவன் மனைவி பேசும் பொழுது தான் இங்கு தொந்திரவாக அமர்ந்து இருக்கிறோமோ? என்று ஒரு வித அவஸ்தையை முகம் பிரதிபலிக்க, முகத்தில் விழுந்த முடிக்கற்றை ஒதுக்கியவள் அவன்புறம் திரும்பி,

‘தான் பிறகு வருவதாக கூற’ நினைக்க,

சைத்தன்யாவிற்கு என்ன தோன்றியதோ,

“உனக்கு ஒரு சர்ப்ரைஸ்” என்று காயுவிடம் மொழிந்தவன் மேகாவின் புறம் அலைபேசியை திருப்பி இருந்தான்.

அவன் சடுதியில் அலைபேசியை திருப்புவான் என்று எதிர்பாராதவள் திகைத்து விழிகளை விரிக்க,

விரிந்த விழிகளுக்குள் ஒரு கணம் சென்று வந்திருந்தான் சைத்தன்யா.

மேகாவை எதிர்பாராத காயுவும் இன்பமாய் அதிர்ந்து

“ஹேய் மேகா” என்று கூச்சலிட,

இங்கு தன்னுடைய திகைப்பை நொடியில் விழுங்கியவள் மென் குரலில்,

“அக்கா” என்று அழைத்தாள்.

அந்த குரலில் தான் எத்தகைய அமைதி குடியிருந்ததாய் தோன்றியது இவனுக்கு.

“நீ எப்படி சைத்து ஆபிஸ்ல?” என்று காயு இன்றும் நம்பவியலாதவளாக வினவிட,

“நான் இங்க தான் ஒர்க் பண்றேன் கா” என்று பதில் அளித்தவளது பார்வை காயுவின் மீது ஊர்ந்தது.

இங்கு சைத்துவின் பார்வை மேகாவின் மீது படிந்தது.

கிளிப்பச்சை நிறத்தில் சுடிதாரும் ஊதா நிறத்தில் பேன்ட் அணிந்து இருந்தவளது துப்பட்டா ஒரு பக்க தோளில் நலினமாய் வழிந்து கொண்டிருந்தது.

காதில் மெலிதான முத்து பதித்த தோடு கழுத்தில் சிறிய சங்கிலி அணிந்து இருந்தாள்.

கோண வகிடெடுத்து கூந்தலை பின்னி இருந்தாள். இருப்பினும் சில கூந்தல் கற்றை முகத்தில் வந்து விழுக அதனை ஒதுக்கியவாறு பேசியவளது கரத்தில் இவனது பார்வை பதிந்தது.

இவ்வளோ நாளா ஏன் கான்டாக்ட்லயே இல்லை? மொபைல் நம்பர சேஞ்ச் பண்ணிட்டியா?” என்று காயு வினவியதும்,

இவளிடத்தில் ஒரு கணம் பதிலே இல்லை. மெலிதான பதற்றத்தில் காதோரம் வியர்வை அரும்புகள் பூத்தது.

குட்டி குட்டியாக இருந்த கூந்தல் கற்றைகள் கன்னதினோரம் வியர்வையில் ஒட்டி கொண்டது.

ஆனால் நொடி நேரத்தில் தன்னை மீட்டவள்,

“அது மொபைல் மிஸ் ஆகிடுச்சு கா” என்று திணறலோடு பதில் அளித்தாள்.

‘ஏன் அலைபேசி தொலைந்தால் தொடர்பு கொள்ள முடியவே முடியாதா என்ன? மின்னஞ்சல் முகவரியை வைத்து முகநூல் என எவ்வளோ வழிகளில் தொடர்பு கொண்டிருக்கலாமே?’ என்று தோன்றியது

ஆனால் அடுத்த விநாடி அது தொடர்பு கொள்ள நினைத்தவர்களுக்கு இவள் என்னிடம்த்தில் இருந்து விலகி செல்வ வேண்டும் என்றல்லவா எண்ணி இருக்கிறாள் என்று மனது கூறியது.

நொடிக்கு நொடி அவளது பதற்றம் கூடி கொண்டு போனதை அவளது வியர்வை துளிகள் பறைசாற்றியது.

‘இவளுக்கு ஏன் இத்தனை பதற்றம் தான் இருப்பதாலா?’ என்று கேள்வி ஜனிக்க,

இதில் எப்படி இவளுக்கு என் மீது நேசம் பிறந்தது? என்றும் தான் எண்ணம் வந்தது.

“அக்கா எனக்கு கொஞ்சம் ஒர்க் இருக்கு. நான் முடிச்சிட்டு வரட்டுமா…?” என்று அனுமதி கேட்டாள்.

“ஓ… மேடம்க்கு என்னைவிட ஒர்க் இம்பார்ட்டன்ட்டோ?” என்று புருவத்தை உயர்த்த,

அதில் பதறியவள், “ஐயோ அக்கா அப்படிலாம் இல்லை. ஆஃப்நூன்குள்ள ரிப்போர்ட் சப்மிட் பண்ணலைன்னா ரேகா மேம் எதாவது சொல்லுவாங்க” என்று தன்னிலை விளக்கம் கொடுக்க,

காயத்ரி சிரிப்புடன், “நீ இன்னும் மாறவே இல்லை மேகா அப்படியே இருக்க” என்றவள்,

“ஐ ஆம் ஜெஸ்ட் கிட்டிங். போய் ஒர்க்க பாரு” என்றதும்,

“ஹ்ம்ம்” என்று தலையசைத்தவள் அலைபேசியை கொடுக்க சென்ற கணம்,

“ம்மா நான் அப்பாட்ட பேசுறேன்”

“ம்மா நான் பேசுறேன்” என்று என்று இரு மழலை குரல் செவியில் மோத,

இவளது கரம் ஒரு கணம் நின்றுவிட்டது.

காயத்ரி, “மேகா என் பசங்களை பாரு” என்றவள் குழந்தைகளிடம் அலைபேசியை கொடுத்தாள்.

அப்போதே இவளுக்கு உள்ளுக்குள் என்னவோ செய்ய துவங்கியது.

மீண்டும் அவளது முகத்தில் மிகப்பெரிய பிரளயம் பிறந்தது.

அவளை அவதானித்தவனுக்கு உண்மையாய் இந்த பரிதவிப்பு பதற்றம் ஏன் என்று புரியவில்லை.

“கொடு மா” என்றபடி அலைபேசியை வாங்கிய வாண்டுகள் இருவரும் இவளை கண்டு மலங்க மலங்க விழிக்க,

வெள்ளை வெளேரென பால் வண்ண நிறத்தில் குண்டு கன்னங்களுடன் விழிகளை உருட்டி தன்னை பார்த்தவர்களது பாவனையில் உள்ளுக்குள் ஏதோ ஒன்று நழுவிட அலைபேசியை வைத்திருந்த கை வியர்வையில் பிசுபிசுத்திட சட்டென்று தவறிவிட்டாள் மேக மொழியாள்.

டப்” என்ற சத்தத்துடன் அலேபேசி கீழே விழுந்ததில் தன்னிலை அடைந்தவள் பதறி,

“சா… சாரி சார். தெரியாம கைத்தவறிடுச்சு” என்று குனிந்து எடுக்க,

அலைபேசியின் முன்புறம் மொத்தமும் சிதறி இருந்தது.

அதனை கண்டு அதிர்ந்தவள்,

“நான் வேணும்னு போடலை‌. அது தெரியாம விழுந்திடுச்சு…” என்று அச்சத்தில் திக்கி திணறியவளது முகம் வெளுத்துவிட்டது.

ஏதாவது திட்டிவிடுவானோ? என்று உள்ளே இதயம் பலமடங்கு வேகத்தில் துடிக்க துவங்கியது.

நொடி நேரத்தில் பலவித கலவையான உணர்வுகளை அள்ளி தெளித்தவளை ஒரு கணம் ஊன்றி பார்த்தவன்,

“இட்ஸ் ஓகே கிவ் இட் டு மீ” என்று கரங்களை நீட்ட,

“இல்லை. அது டிஸ்ப்ளே உடைஞ்சிடுச்சு. நா.. நான் சர்விஸ் பண்ணி எடுத்துட்டு வந்து தர்றேன்” என்று மொழிய,

“நோ இஸ்யூஸ் நான் பாத்துக்கிறேன்” என்று அலைபேசிக்காக கையை நீட்டினான்.

“இல்லை. நான் தான உடைச்சேன். நானே சரி பண்ணி கொடுத்திட்றேனே சார்…” என்று அவனது முகம் காண,

அவளது முகத்தை ஒரு நொடி அமைதியாக பார்த்தவன் அதற்கு மேலும் கூற இயலாது,

“ஓகே” என்று முடித்துவிட்டான்.

அவனது சரியென கூறிய பிறகு தான் இவளுக்கு நிம்மதி பிறக்க,

“ஷால் ஐ லீவ் சார்” என்று எழுந்து கொண்டாள்.

“சிம்மை எடுத்து கொடுத்துட்டு போ மேகா…” என்று மொழிந்திட்டான்.

தன்னையும் மீறி ‘மேகா’ என்ற அழைப்பு வந்துவிட்டதை கூறிய பிறகு தான் சைத்தன்யா உணர்ந்தான்.

“ஹ்ம்ம்” என்று தலையசைத்து நின்றவாக்கிலே அலைபேசியில் இருந்து சிம்மை எடுக்க முயற்சிக்க அலைபேசியில் எந்த புறத்தில் திறப்பது என்று தெரியவில்லை.

அலைபேசியை நான்கு புறமும் திருப்பி பார்த்து கொண்டிருந்தாள்.

அது புதுவகையான மாடல் நிச்சயமாக அவளுக்கு திறக்க தெரியாது என்று அவனுக்கு தெரிந்திருந்தது.

அவளாகவே கேட்கட்டும் என்று அமைதியாக வேடிக்கை பார்த்தான்.

அவளோ குத்துமதிப்பாக எதோ ஒரு பக்கம் திறக்க முயல,

மீண்டும் கீழே போட போகிறாள் என்று அவன் நினைத்த கணம் தவறவிட்டிருந்தாள்.

இம்முறை அதிர்ச்சியில் அவளது விழிகள் பெரிதாக்கியவளது முகத்தில் ஏகமாய் பதட்டம்.

சடுதியில் குனிந்து அதனை எடுத்தவள்,

“அது நான் இப்பவும் தெரியாம தான் போட்டுட்டேன்” என்று பாவமாய் விழித்தவளிடத்தில் சிறுபிள்ளை பாவனை தான் அவனுக்கு தோன்றியது.

ஏதும் கூறாது அமைதியாக அவளிடத்தில் கரத்தை நீட்ட,
அலைபேசியை மேகா கொடுத்தாள்.

சிம்மை எடுத்ததும் இதனை சரிசெய்ய நிச்சயமாக நிறைய செலவாகும் என்று எண்ணியவன், “மொபைலுக்கு வாரண்டி இருக்கு. நானே ஷோரூம்ல கொடுத்த சரி பண்ணிக்கிறேன்” என்றிட,

“இல்லை வேணாம். உடைஞ்சிட்டு சரி பண்ணாம விட்டா எனக்கு கில்டியா இருக்கும். ப்ளீஸ் என்கிட்டயே கொடுக்குறீங்களா? நாளைக்கு வரும் போது சரி பண்ணி கொண்டு வர்றேன்” என்று விழிகளை சுருக்கி கேட்க,

வாழ்வில் முதல் முறையாக தன்னிடம் இவ்வளவு நீளமாக பேசியவளது சுருங்கிய விழிகளில் பார்வையை பதித்தவன் பதில் ஏதும் மொழியாது இருக்க,

அந்த பார்வையில் நிச்சயமாக மேகாவிடத்தில் மாற்றம் நிகழ்ந்தது.

தான் அவளை அதிகமாய் அந்த கணம் பாதிக்கிறோம் என்பதை மனது உணர்ந்தது.

இருந்தும் முகத்தினை சீராக வைத்துக் கொண்டவளை கண்டு சிறிது வியப்பு பிறந்தது.

இன்னும் சிறிது நேரம் இருந்தால் இவள் நிச்சயமாக மூர்ச்சையாகிவிடுவாள் என்று சிந்தை பிறக்க,

அமைதியாக அலைபேசி
யை நகர்த்தி வைத்தான்.

உடனடியாக அதனை எடுத்தவள்,

“தாங்க் யூ சார்” என்றுவிட்டு அங்கிருந்து வேகமாக நகர,

தன்னிடத்தில் இருந்து ஓடி தப்பி செல்லும் பாவயை கண்டவனது எண்ணத்தில் ஒன்றே ஒன்று தான் தோன்றியது.

‘இவளை நான் உணராமல் போனேன்…?’ என்று தான்.

































 
Well-known member
Messages
1,112
Reaction score
801
Points
113
Ellathayum note pannittu thaan irunthirukkan intha cutennn

Superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr
 
Well-known member
Messages
570
Reaction score
420
Points
63
Onnu vidama Megha oda chinna chinna expression ah note panni irukan aana ivan than avan face la ethaiyum kammikama ah
 
Top