• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

மேகம் 2

Administrator
Staff member
Messages
464
Reaction score
794
Points
93
யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே
நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ
என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம் …


மேகா உன் மொபைல் வைப்ரேட் ஆகுது பாரு…” என்ற ராதிகாவின் குரலில் சத்தமின்றி அதிர்ந்து கொண்டிருந்த அலைபேசியை கையில் எடுத்து பார்க்க தாயிடமிருந்து அழைப்பு வந்தது.


“டூ மினிட்ஸ் என் டேபிளை பாத்துக்கோ நான் வந்திட்றேன் ராதி” என்றவள் கை கழுவுமிடம் சென்றாள்.

ராதிகாவும் மேகாவுடன் பணி புரிபவள் தான். ராதிகா கோவையை சேர்ந்தவள் இங்கு உள்ள தனியார் கல்லூரியில் படித்து கொண்டே பகுதி நேர வேலை பார்க்கிறாள்.

நவீனாவை போல அல்லாது இவளுக்கு தமிழ் தெரியும் ஆதலால் மேகாவிற்கு இவளுடன் நன்றாக ஒத்து போனது.

அழைப்பை ஏற்றவள், “ஹான் சொல்லுங்கம்மா” என்க,

“என்ன பண்ற மேகா. காஃபி ஷாப்ல இருக்கியா…?” என்று பதில் வந்தது.

“ஹ்ம்ம் ஆமா மா. ஏதாவது முக்கியமான விஷயமா? நான் வொர்க்கா இருக்கேன்” என்றிட,

“வொர்க் லோட் ரொம்ப அதிகமா? இதுக்கு தான் பார்ட் டைம்லாம் வேணாம்னு சொன்னேன் கேட்டியா?” என்று தமயந்தி மொழிய,

“அச்சோ அம்மா அதெல்லாம் ஒன்னுமில்லை. நான் பிடிச்சு தான் இந்த வேலையை செய்யிறேன். நான் அப்புறம் கூப்பிடவா?” என்று பதில் இயம்பினாள்.

“சரிடி பாத்து இரு. ஹாஸ்டல் போனதும் கூப்பிடு” என்க,

“ஹ்ம்ம் சரிம்மா” என்று அழைப்பை துண்டித்து விட்டு திரும்பியதும் கண்டது விஷமப் புன்னகையுடன் நின்றிருந்த ராதிகாவை தான்.

அவளது சிரிப்பை கண்டு,

“என்ன?” என்று புருவத்தை உயர்த்தினாள் மேகா.

“பிடிச்சு தான் செய்யிறேன்னு சொன்னியே…” என்று ராதிகா சிரிப்புடன் இழுக்க,

“ஆமா அதுக்கென்ன?” என்று மேகா வினா எழுப்ப,

வேலைய பிடிச்சு செய்யிறியா…? இல்லை அவரை உன்னோட அந்த க்யூட்டனை பிடிச்சு செய்யிறியா…?” என்று மந்தகாச புன்னகையுடன் கேட்டாள்.


“ஹேய்…” என்று அவளை செல்லமாக முறைத்தவள்,

“அப்படிலாம் ஒன்னுமில்லை. அவர் டெய்லி டிப்ஸ் டூ ஹண்ட்ரட் கொடுக்குறாரே அது எனக்கு செலவுக்கு வரும் அவ்ளோ தான். மத்தபடி ஒன்னுமில்லை” என்று பதில் மொழிந்தாள்.

“ஓஹோ… ஒன்னுமில்லையா? சரி க்யூட்டன் இன்னைக்கு ப்ளூ டீசர்ட்ல செம்மயா இருந்தாருல” என்க,

“ப்ளூவா அவர் இன்னைக்கு க்ரே கலர் டீசர்ட்டும் ப்ளாக் பேண்டும் தான போட்டு இருந்தாரு”என்று சிந்தித்தவாறு பதில் மொழிந்தவள் அப்போது தான் ராதிகாவி முகத்தில் இருந்த கேலிச்சிரிப்பை கண்டாள்.

சடுதியில் தான் செய்தது உறைக்க ஒரு கணம் நாக்கை கடித்தவள்,

“அது சும்மா பாத்தேன் அதான்” சமாளிக்க,

“ஓஹோ சும்மா பாத்தா இவ்வளோ க்ளியரா ஞாபகம் இருக்குமா? அவர் டேபிளுக்கு பக்கத்து டேபிள்ல இருந்த பொண்ணு என்ன ட்ரெஸ் போட்டு இருந்தா?” என்று ராதிகா வினவியதும்,

இவள் விழித்தாள்.

“என்ன முழிக்கிற சரி விடு. அந்த டேபிள்ல எத்தனை மெம்பர்ஸ் இருந்தாங்கன்னாவது சொல்லு” என்றிட,

மேகா, “ஹையோ ஆள விடுடி. தெரியாம சொல்லிட்டேன். நான் அவரை தான் பாத்தேன். பாக்க க்யூட்டா கண்ணுக்கு குளிர்ச்சியா ஒரு பையன் வந்தா பாக்கதான் செய்வோம். அதுவும் நல்ல கலரா மைதா மாவு மாதிரி இருந்தாரு. இதுல என்ன தப்பு” என்று ராதிகாவை காண,

அவள் முகம் அதிர்ச்சியில் வெளிறி இருந்தது.

‘ஏன் இப்படி அதிர்ச்சி ஆகுறா? ரொம்ப நேரமா ஆளை காணோம்னு மேனேஜர் தேடி வந்துட்டாரா?’ என்று எண்ணியபடி திரும்பியவளது விழிகள் அதிர்ந்து பெரிதாய் விழுந்தது.

காரணம் இத்தனை நேரம் இவர்கள் பேசி கொண்டு இருந்த பேச்சிற்கு சொந்தக்காரன் தான் நின்று கொண்டிருந்தான்.

இருவருக்கும் அதிர்ச்சியில் சில கணங்கள் பேச்சு வரவில்லை.

‘இவன் எப்போது வந்தான். பேசியவற்றை கேட்டுவிட்டானா?’ என்று நொடியில் மனதிற்குள் பலவாறான எண்ணங்கள் சுழன்றது.

ஆனால் அவனது முகம் நிர்மலாக தான் இருந்தது.

ஏதும் அறியாதவன் போல,

“எக்ஸ்க்யூஸ் மீ” என்று விலக கூறிவிட்டு,

கைகளை கழுவிவிட்டு நகர,

மேகா அப்போது தான் யுரேகாவை கூறிய ஆர்க்கிமிடிஸ் போல,

“ஹேய் அவருக்கு தமிழ் தெரியாது டி” என்று முகம் முழுக்க சிரிப்புடன் மொழிய,

“ஊஃப்” என்று நிம்மதியாக மூச்சை வெளியிட்டவள்,

“இதை முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல லூசு. நான் எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா?” என்று சிரித்தாள்.

“சாரி மறந்துட்டேன். வெள்ளை வெளேர்னு மைதா மாவு மாதிரி இருக்கேலே தெரியலையா இவர் கண்டிப்பா நேபாளியா தான் இருப்பார்னு. இவர் முன்னாடி போய் நின்னு ஹேய் க்யூட்டன்னு கூப்பிட்டாக்கூட இவருக்கு புரியாது” என்றிட,

“ஆமா டி இந்த ஊர்ல இது ஒரு வசதி” என்று சிரித்தவள்,

“சரி வா போலாம் மேனேஜர் தேடி வந்திட போறாரு” என்று இருவரும் வெளியே செல்ல,

மேகாவின் க்யூட்டன் பணத்தை செலுத்திவிட்டு உடன் வந்த பெண்ணுடன் வெளியேறி கொண்டு இருந்தான்.

மேகா அதனை ஒரு நொடி காண,

“என்னடி பீலிங்ஸ் ஆஃப் இந்தியா வா?” என்றிட,

“சே சே சும்மா சைட்டிங் தான்” என்றவள் மற்ற வேலையை கவனிக்க துவங்கினாள்.

மறுநாள் காலை விடுதியில் இருந்து கல்லூரிக்கு மேகா கிளம்பும் நேரம் லேசான தூறல் போட துவங்க,

“மழை காலம் வந்துட்டாலே இது ஒன்னு” என்று சலித்தவள் குடையை எடுத்து கொண்டு புறப்பட்டாள்.

முதல் நாள் பெய்த மழையின் காரணமாக சில இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்க அது தன்னுடைய வெள்ளை உடையில் அது தெறித்துவிடாது இருக்க பிரயாத்தனப்பட்டு ஒரு கையில் குடையும் மறுகையில் உடையை தூக்கி பிடித்தபடி வெகு கவனமாக நடந்து கொண்டிருந்தாள்.

திடீரென்று ஒரு இரு சக்கர வாகனம் அவளை இடிக்கும்படி வந்து நகர்ந்து சென்றிட,

ஒரு கணம் இதயம் நின்றுவிட கையில் இருந்த குடை நழுவியிருந்தது.

நெஞ்சில் கை வைத்தவள் வாகனத்தில் வந்தவனை கண்டு நிமிர்ந்து முறைக்க,

அவனோ தனக்கு பின்னால் யாரையோ கையை நீட்டி எச்சரித்தான்.

மேகா என்னவென புரியாத குழப்பத்தில் திரும்பி பார்க்க தனக்கு வெகு அருகில் இருந்த ஒருவன் நடந்து போவது தெரிந்தது.

யாவையும் சேர்த்து பார்த்தவளுக்கு அவன் தன்னை இடிக்க வந்திருப்பதும் வாகனத்தில் சென்றவன் அதை தடுத்திருப்பதும் நொடியில் புரிந்திட இதயத்தில் சிறிதான நடுக்கம் ஜனித்திட காப்பாற்றியவனை விழிகள் தேடியது.

அவன் இதற்குள் எங்கோ மறைந்திருந்தான்.

தன் மேல் விழுந்த மழைத்துளியால் குடையில்லாததை உணர்ந்து வானத்தை தலை உயர்த்தி பார்த்தாள்.


இரு துளி நீர் கன்னத்தை தீண்டிட அதனை துடைத்துவிட்டு

குனிந்து குடையை எடுத்து கொண்டு வகுப்பறையை நோக்கி நடக்கத்துவங்கினாள்.

‘ஒருவன் தன்னை இடிக்க வருவதை கூடவா கவனிக்காது இருந்துள்ளோம்’ என்று தன்னை தானே நிந்தித்தபடி நடந்தவளுக்கு

‘உதவி செய்தவனுக்கு நன்றி கூட கூறவில்லையே’ என்று வேறு கவலை ஒட்டி கொண்டது.

‘யாராக இருக்கும் தனக்கு உதவி செய்தது?’ என்று கேள்வி எழ,

‘இங்கு படிக்கும் மாணவனாக தான் இருக்கும்’ என்று தனக்குத்தானே பதில் அளித்தாள்.

‘யாரென கண்டறிந்து கண்டிப்பாக நன்றி கூற வேண்டும்’ என்று சிந்தித்தவளுக்கு அவனது முகம் நினைவிற்கு வரவில்லை.

மிகவும் முயற்சிக்க அப்போது தான் அவன் தலைக்கவசம் அணிந்து இருந்தது நினைவிற்கு வந்தது.

ஆனால் அந்த கண்கள் தீர்க்கமாக அவனை பார்த்து மிரட்டிய கண்கள் அவளது நினைவிற்கு வர இவளுக்கு உள்ளுக்குள் ஏதோ செய்தது.

‘ப்பா என்ன பார்வைடா’ என்று எண்ண வைத்த கணம் தான் அந்த கண்கள் அந்த பார்வை தான் எங்கோ பார்த்திருப்பதை நினைவில் நிழலாடியது.

உடனே மூளை அதீத வேகத்தில் செயல்பட்டு அந்த கண்ணுக்கு சொந்தக்காரனை தன்னுடைய நினைவு புத்தகத்தில் தேடியது ஆனால் பலன் சுழியம் தான்.

“ப்ச்…” என்று முனங்கியவாறு நடந்து சென்றவள் அவன் அணிந்திருந்த வெள்ளை நிற சட்டையையும் கருப்பு நிற பேன்டையும் நினைவுபடுத்தி கொண்டே வகுப்பறைக்கு சென்றாள்.

மேகாவை கண்டதும் திவ்யா,

“ஹே மேகா ஏன்டி இவ்ளோ நேரம் இங்க இருக்க ஹாஸ்ட்டல்ல இருந்து கிளாஸ்க்கு வர” என்றிட,

“ஆமா எப்பவோ கிளம்பிட்டேன்னு கால் பண்ணியேடி” என்று சரண்யாவும் கேட்டாள்.

திவ்யா, சரண்யா மற்றும் மேகா மூவரும் தான் அவர்கள் வகுப்பில் தமிழ் பயிலும் மாணவர்கள்.

வந்த புதிதில் இருந்து மொழியின் ஒற்றுமை காரணமாக மூவரும் தோழி ஆகிவிட்டிருந்தனர்.

“வர்ற வழியில ஒரு சின்ன இன்சிடென்ட்” என்ற மேகா நடந்ததை கூற,

“ஏன்டி ஒருத்தன் இடிக்கிறது கூடவா தெரியாம பேக்கு போல நடந்து வந்திருக்க” என்று மற்ற இருவரும் திட்டி அறிவுரை மொழிய,

பேச்சை மாற்றும் பொருட்டு மேகா,

“என்னடி இன்னைக்கு ருக்ஷா மேம் வரலை. டைம்க்கு கரெக்டா வந்திடுவாங்களே” என்று வினவினாள்.

“இல்லைடி இன்னைக்கு மேம் லீவ் போல” என்று சரண்யா கூற,

“ஓ அப்போ ஜாலி” என்று மேகா முடிப்பதற்குள்,

“ரொம்ப சந்தோஷப்படாத அவங்களுக்கு பதில் அவங்க பி.ஜி ஸ்டூடண்ட் யாரோ க்ளாஸ் எடுக்க வராங்களாம்” என்று திவ்யா கூறிவிட்டாள்.

“ஓ… பிஜி ஸ்டூடண்ட் எல்லாம் யூ.ஜி கிளாஸ்க்கு வருவாங்களா?” என்று கேட்டு கொண்டு இருக்கும் போதே,

யாரோ ஒருவன் உள்ளே நுழைவதும் வகுப்பு மாணவர்கள் எழுந்து நிற்பதும் இறுதி வரிசையில் அமர்ந்து இருந்த இவர்களுக்கு தெரிந்தது.

சரண்யா, “பிஜி ஸ்டூடண்ட் வந்துட்டாங்க போல” என்று கூற மூவரும் எழுந்து நின்றனர்.

“யாரது அந்த மாணவன்?” என்ற ஆர்வத்தில் எட்டி பார்த்த மேகாவின் விழிகள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டது.

ஒரு நொடி எதுவும் ஓடவில்லை. காரணம் அவளுடைய வகுப்பறையில் அவளெதிரே நின்று கொண்டிருப்பது அவளுடைய க்யூட்டன் தான்.

அவன், ‘க்யூட்டன்’ எப்படி இங்கே? என்று ஆயிரம் வினாக்கள் எழ சமைந்து நின்றுவிட்டாள்.

எல்லோரும் அவனுக்கு காலை வணக்கத்தை தெரிவித்துவிட்டு அமர்ந்திட இவள் மட்டும் அதிர்ச்சியில் அப்படியே நின்றிட்டாள்.

மொத்த வகுப்புமே இவளை திரும்பி பார்த்திட அந்த க்யூட்டனது பார்வையும் இவள் மேல் தான்.

சரண்யாவும் திவ்யாவும் பதறி,

“ஏய் மேகா என்னடி ஆச்சு உனக்கு?” என்று உலுக்கவும் சுயநினைவை அடைந்தவள் எதிரில் இருந்தவனை கண்டு விழிக்க,

அவளது சிறிதான பிளந்த வாயும் மலங்க மலங்க விழித்த விதமும் கண்டிப்பாக எதிரில் இருந்தவனுக்கு புன்னகையை வரவழைத்திருக்க வேண்டும்.

ஆனால் அந்த அழுத்தக்காரன் புன்னகைக்காமல் ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கி, ‘என்ன?’ என்பதாய் வினவிட,

இவளுக்கு இதயம் எகிறி குதித்தது.

சடுதியில் தலையை இடம் வலமாக அசைத்தவள் பட்டென்று அமர்ந்து கொண்டாள்.

இங்கு சரண்யா, “ஏய் என்னடி ஆச்சு ஏன் இப்படி பேயறைஞ்ச மாதிரி இருக்க?” என்று வினா எழுப்ப,

“அது அவர் தான் இவரு” என்றவளுக்கு வார்த்தை திக்கியது.

“எவர் தான் எவரு ஏன்டி தலையும் இல்லாம வாழும் இல்லாம சொன்னா எப்படி புரியும்” என்று திட்ட,

“அது க்யூட்டன் இவர் தான்” என்றதும் தான் தாமதம்,

இருவரும் கோரஸாக, “என்னது இவரா?” என்று சிறிதான கூச்சல் போட்டிட,

“அங்க என்ன சத்தம் இனிமேல் பேச்சு சத்தம் வந்தா வெளியே அனுப்பிடுவேன்” என்றவனது அழுத்தமான குரலில் மூவரும் கப் சிப் என்றாகிவிட்டனர். ஆங்கிலத்தில் தான் கூறினான்.

ஆனால் மூவருக்கும் பேச வேண்டும் என்று உள்ளுக்குள் ஆர்ப்பரிப்பு.

ஆனால் பேச இயலவில்லை எதிரில் இருந்தவனை கவனிக்க துவங்கினார்கள்.

“ஹாய் எவ்ரிவன் ஐ ஆம் சைதன்யா பிஜி ஸ்டூடண்ட்” என்றதும் தன்னை மறந்து மேகாவின் இதழ்கள்,

“சைத்தன்யா க்யூட்டன் போல நேமும் க்யூட் தான்” என்று முணுமுணுத்தது.

பின்னர் அவன்,

“நீங்களும் உங்களை இன்ட்ரோ பண்ணிக்கோங்க” என்றதும் ஒவ்வொராக எழுந்து நின்று தங்களது பெயரை கூற துவங்க,

இங்கு மேகாவின் விழிகளோ அவளை மீறி அவனை ரசிக்க துவங்கியது.

வெள்ளை நிறத்தில் சட்டையும் கருப்பு நிறத்தில் பேன்ட்டும் அணிந்திருந்தவன் இந்த தோற்றத்தில் சற்று வித்தியாசமாக இருந்தான்.

ஆனால் அதுவும் அழகாக தான் இருந்தது அவளது க்யூட்டனுக்கு.

அவனை அளந்து கொண்டிருந்தவளுக்கு அப்போது தான் அவனது உடை புரிபட தன்னை காத்த கூறிய விழிகளுக்கு சொந்தக்காரன் அவன் தான் என்று மூளை உணர்த்தியது.

உணர்ந்த கணம் மீண்டும் வியப்பில் விழிகள் விரிந்து கொண்டது. இந்த நாளில் இன்னும் எத்தனை அதிர்ச்சியை தான் இவள் தாங்குவாளோ…?

க்யூட்டன் தான் தன்னை காப்பாற்றினானா? என்று உள்ளத்தில் உவகை ஊற்றெடுத்தது.

விழிகளை விரித்து தன்னை மறந்து பார்த்தவளை திவ்யா இடிக்க,

“என்னடி?” என்று சிறிது கோபத்துடன் வினவினாள்.

“எழுந்து உன்னை இன்ட்ரோ கொடு” என்றதும்,

“ஷ்…” என்று நாக்கை கடித்தவள் எழுந்து,

“ஐ ஆம் மேக மொழியாள் ப்ரெம் தமிழ்நாடு” என்று முடித்து கொண்டாள்.

பின்னர் சைத்தன்யா பாடம் எடுக்க துவங்க மேகா பாடத்தை விட எடுப்பவனை தான் கவனித்து கொண்டிருந்தாள்.

என்னவோ இத்தனை அழகாக இருப்பவனிடமிருந்து விழியை எடுக்க இயலவில்லை.

ஒரு மணி நேரம் எப்படி சென்றது என்றே யாவருக்கும் தெரியவில்லை.

அத்தனை நேர்த்தியாக தெளிவாக எடுக்க அங்கு ஊசி விழுந்தால் கூட கேட்கும் அளவு அமைதி.

எடுத்து முடித்தவன்,

“எனி டவுட்ஸ்?” என்று கேட்டதும் தான் எல்லோரும் தன்னிலைக்கு வந்தனர்.

ஒரு மாணவி, “சார் ஆர் யூ கமிட்டட்?” என்று வினவிட,

அங்கே சிரிப்பலை பரவியது. ஆனாலும் சில பெண்கள் அவனது பதிலை ஆர்வமாக எதிர் பார்த்தனர்.

மேகாவோ என்ன இவ்வளவு தைரியமாக கேட்டுவிட்டாள் என்று அதிர்ந்து பார்த்தாள்.

அவனது இதழ்களிலும் சிறிதான மென்னகை பிறக்க அதனை மறைத்தவன் குரலில் சிறிது கண்டிப்புடன்,

“நோ பெர்சனல் கொஸ்டீன்ஸ்” என்றிட,

‘க்யூட்டன் ரொம்ப ஸ்ட்ரிக்ட் போலவே’ என்று மனதிற்குள் நினைத்து கொண்டாள் மேகா.

ஒரு சில மாணவர்கள் தங்களுடைய சந்தேகத்தை கேட்க பொறுமையுடன் விளக்கி பதில் அளித்தான்.

எல்லோரும் கேட்டு முடிய,

“ஓகே க்ளா
ஸ் ஓவர்” என்று முடித்துவிட்டு வெளியேற போனவனிடம்,

“சார் ஒன் லாஸ்ட் கொஸ்டீன் விச் யூவர் நேட்டீவ் ப்ளேஸ்?” என்று பதில் வந்தது.

ஒரு கணம் நின்றவன்,

“தமிழ்நாடு” என்று விட்டு வெளியேற துவங்க,

இங்கு மேகா தான், “அச்சச்சோ” என்று நெஞ்சில் கை வைத்து அமர்ந்துவிட்டாள்‌.

*******


“தமயந்தி நான் இன்னைக்கு கவியரசு அண்ணணை பாத்தேன் நம்ம பாப்பா கல்யாண விஷயத்தை சொன்னேன் ரொம்ப சந்தோஷப்பட்டாரு” என்றபடி உள்ளே நுழைந்தார் சேதுபதி.

ஆனால் தமயந்தியிடம் பதில் இல்லை சிந்தனையுடன் அமர்ந்து இருந்தார் காரணம் அவர்களுடைய புதல்வி மேகா தான்.

“என்ன தமயந்தி நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன் நீ அமைதியாயிருக்க. என்னாச்சு? பாப்பா எங்க?” என்று மனைவியின் முகம் கண்டு வினவிட,

“உள்ள தூங்குறா”

“தூங்குறாளா? மணி என்ன எட்டு தான் ஆகுது அதுக்குள்ள தூங்கிட்டாளா?”

“ஆமா என்னாச்சுனு தெரியலை முகம் ஒரு மாதிரி இருந்துச்சு டீ போட்டு கொடுத்தேன். பெல்ட் போடாம வந்தா ஏன்னு கேட்டேன் அதுக்கு ஒரு தடவை பெல்ட் போடலைன்னா செத்து போய்ட மாட்டேன்னு சொல்லிட்டு தூங்க போய்ட்டா” என்றவரது குரலில் கவலை அப்பி கிடந்தது.

மனைவி கூறியதை கேட்டவர்,

“அவளுக்கும் மாப்பிள்ளைக்கும் ஏதும் சண்டையா?”

“தெரியலைங்க. ஒரே பொண்ணுன்னு செல்லம் கொடுத்து நீங்கதான் அவளை கெடுத்து வச்சிருக்கிங்க இப்படி எடுத்தெறிஞ்சு பேசுறா” என்று கணவனை முறைத்தார் தமயந்தி.

“இரு நான் போய் என்னன்னு விசாரிக்கிறேன்” என்றவர் எழுந்து சென்று,

“பாப்பா பாப்பா கதவை திற” என்று மேகாவின் அறைக்கதவை தட்டினார்.

இரண்டு மூன்று முறை தட்டிய பிறகு கதவை திறந்த மேகாவின் முகம் அழுததில் வீங்கி சிவந்திருந்தது.

அதனை கண்டு பதறிய சேதுபதி,

“பாப்பா என்னடா ஆச்சு ஏன் முகம் ஒரு மாதிரி இருக்கு” என்று கேட்டதும் தான் தாமதம்,

“அப்பா…” என்று அவரை கட்டிக் கொண்டவளுக்கு அழுகை பெருகியது.

மகளின் பெரிய அழுகையில் இன்னும் இவரது பதற்றம் அதிகரிக்க,

“பாப்பா டேய் என்னாச்சுடா? ஏன் அழற? என்ன பிரச்சனையா இருந்தாலும் சொல்லுடா அப்பா இருக்கேன் நான் சரி பண்றேன்” என்று மகளுக்கு ஆறுதல் கூற,

தமயந்தியும் மேகாவின் அழுகையில் பயந்து,

“மேகா என்னாச்சுடா” என்று வினவினார்.

இருந்தும் அவளிடம் பதில் இல்லை.

நொடிக்கு நொடி அதிகரிக்கும் அவளது அழுகையின் வீரியத்தால் பெற்றோரின் ரத்த அழுத்தம் எகிறியது.

“என்னன்னு சொல்லிட்டு அழு” என்று தமயந்தி அவளை பிடித்து இழுத்தி நிறுத்தி கேட்க,

அழுகையுடன்,

“எ… எனக்கு இந்த கல்யாணம் வேணாம். நிறுத்திடுங்க” என்று கூறி முடிக்க,

பெற்றவர்களது தலையில் இடி விழுந்தது.

தமயந்தி உட்சபட்சமாய் அதிர்ந்து,

“என்னடி சொல்ற?” என வினவிட,

அவருக்கு பதில் அளிக்கதாவள்,

“அப்பா ப்ளீஸ்ப்பா எனக்கு இந்த கல்யாணம் வேணாம். எனக்காக இதை ஸ்டாப் பண்ணிடுங்க” என்று மொழிய,

“நான் கேட்டுட்டு இருக்கேன் என் கேள்விக்கு பதில் சொல்லாம அவர்கிட்ட பேசிட்டு இருக்க. கல்யாணம்னா உனக்கு விளையாட்டா போச்சா. நினைச்சா நடத்த நினைச்சா நிறுத்த. நான் சொன்னேன்ல நீங்க தான் செல்லம் கொடுத்து இவளை கெடுத்து வச்சிருக்கிங்க” என்று தமயந்தி கத்த,

“என்னாச்சு பாப்பா வா வந்து உட்காரு” என்று மகளை அமர்த்தியவர் நீரை எடுத்து வந்து பருக கொடுக்க,

மேகாவும் வாங்கி பருகி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

பின்னர் சேசுபதி,

“இப்ப சொல்லுடா என்ன பிரச்சனை ஏன் கல்யாணத்தை நிறுத்த சொல்ற? உனக்கும் மாப்பிள்ளைக்கும் ஏதாவது சண்டையா?” என்று பொறுமையாக வினவ,

‘இல்லை’ எனும் விதமாக அவளது தலை இடம் வலமாக அசைந்தது.

“அப்புறம் என்ன பிரச்சனை ஏன் கல்யாணத்தை நிறுத்தணும்?”

மேகாவிடம் பதில் இல்லை.

“கேட்குறாருல சொல்லுடி. இது நாங்க பாத்து வச்ச இடமா? நீ தான அடமா நின்னு அவரை கட்டிப்பேன்னு சொன்ன? இப்போ என்ன ஆச்சுனு நிறுத்த சொல்ற?” என்று தமயந்தி கோபமாக வினா எழுப்ப,

“ப்பா ப்ளீஸ் என்கிட்ட காரணம் எதுவும் கேட்காதிங்க. நான் சொல்ற நிலையில இல்லை. எனக்காக இந்த மேரேஜை கால் ஆப் பண்ணிடுங்க” என்று மீண்டும் அதையே கூற,

“அப்படியே அடிச்சேன்னு வை” என்று தமயந்தி கை ஓங்க,

“பொறுமையா இரு தமயந்தி” என்று சேதுபதி தடுத்தார்.

அதே சமயம் வாசலில் மகிழுந்தின் ஓசை கேட்டது.

பெற்றோர் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள,

வாசற் க
தவை வெறித்த மேகாவின் வயிற்றுக்குள் பூகம்பம் பிறந்தது வாசலில் வந்து நிற்பவனை கண்டு.






 
Well-known member
Messages
859
Reaction score
630
Points
93
Megha kooda sernthu naanum cutena sight adichitten pa
😜😜😜😜😜😜😜😜😜😜🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Verithanama Waiting for next ud ma
Seekkirama pottudunga
 
Active member
Messages
346
Reaction score
233
Points
43
Megha vellai ah maida maavu mathiri irundha nepali aam enna oru kandupidipu ippo payapulla tamil nadu nu sonna udanae ivaluku.inga sarvamum jerk aagiduthu
Enna da ithu yaru indha mapillai nu pakkalam nu.partha ipadi pattunu cut pannitaga oru vela mega oda cutan than andha mapillai ah
 
Top