மேகம் 17
உலகில் வேறு ஆண்களே இல்லையா என்ற வினா தொடுக்கப்படுகிறது என்னிடம்
கோடிக்கணக்கில் இருக்கிறார்கள் தான்
ஆனால் இவன் எந்தன்
பெருங்காதல்
பெருங்காமம்
பெருங்கோபம்
கதிமோட்சம் …
“பதில் பேசாம அழுதிட்டு இருந்தா என்ன அர்த்தம் மேகா?” என்று சைத்தன்யா மீண்டும் அழுத்தமாக கேட்க,
அவளிடம் அப்போதும் மௌனம் தான் பதிலாக இருந்தது.
“இன்னும் எவ்ளோ நாள் இப்படி எதுவுமே சொல்லாம அமைதியா இருக்க போற மேகா? எனக்கு நிஜமா புரியலை உனக்கு என்ன பிராப்ளம்னு?” என்றவன் இழுத்து பிடித்த பொறுமையுடன் நெற்றியை தேய்க்க,
அவளிடம் இப்போதும் பதில் இல்லை.
“நான் உனக்கு வேண்டாமா மேகா” என்றவனது குரலில் இருந்த ஏதோ ஒன்று அவளது இதயத்தை நழுவ செய்ய,
கன்னம் தாண்டிய கண்ணீரை துடைத்தவள் சடுதியில் வெளியேற முயற்சிக்க,
“பேசிட்டு இருக்கும் போது இப்படி போறது என்ன பிகேவியர் மேகா” என்றவனது குரல் உயர்ந்து அதட்டலுடன் ஒலிக்க,
அதில் திடுக்கிட்டவள் கதோடு ஒன்றி நின்றாள்.
அவள் முகத்தில் இருந்த கலவரத்தை கண்டவன்,
“என் கேள்விக்கு பதில் சொல்லிட்டு போ மேகா. நான் உனக்கு வேணுமா வேண்டாமா?” என்று ஒருவித பிடிவாதத்துடன் ஒலிக்க,
இவள் உதட்டை அழுந்த கடித்து அழுகையை கட்டுப்படுத்தியவள் அவனை நிமிர்ந்து பார்க்க,
அவனது பார்வை வீச்சு வெகுவாய் அவளை தாக்கியது.
அதில் முகத்தை வலப்புறம் திருப்பியவளது இதயத்தில் மெலிதான நடுக்கம் பிறந்தது.
‘எத்தனை பெரிய கேள்வியை கேட்டுவிட்டு அமர்த்தலாய் அமர்ந்து இருக்கிறான். நான் எப்படி இதற்கு பதில் அளிக்க இயலும்?’ என்று நினைத்தவளுக்கு உள்ளுக்குள் பெரிதான பரிதவிப்பு.
“நீ பதில் சொல்லாம இங்க இருக்க போக முடியாது மேகா” என்றவன் சாவகாசமாய் சாய்ந்து கொள்ள,
இவளுக்கு தான் என்ன செய்வதென்று தெரியவில்லை.
‘உள்ளத்தின் அறையெங்கும் முழுதாய் நிறைந்திருப்பவனை எங்கனம் மறுக்க இயலும்?’ என்று உள்ளே கூக்குரல் எழ,
‘கூறித்தான் ஆகவேண்டும் அவனது நலனில் அக்கறை இருந்தால் அவன் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணம் இருந்தால் மனதை கல்லாக்கி கொண்டு கூறிவிடு’ என்று மற்றொரு மனது எடுத்துரைக்க,
ஒரு கணம் விழி மூடி திறந்தவள்,
“வேணாம்” என்று காற்றுக்கே கேட்காத குரலில் மொழிந்திட,
“ஹான் கேட்கலை” என்றவன் அவளை நோக்க,
“நீ… நீங்க எனக்கு வேணாம்” என்று நடுங்கிய குரலில் கூறிவிட்டாள்.
“நான் இங்க இருக்கும் போது சுவத்தை பாத்து பேசிட்டு இருக்க? இங்க என்னை பாத்து என் முகத்தை பாத்து சொல்லு மேகா” என்றவனது குரல் ஒரு கணம் திடுக்கிட செய்ய,
சடுதியில் அவன் முகம் கண்டாள். அடுத்த கணமே அவளிடம் பேச்சு வராது போனது.
முகமெங்கும் முத்து முத்தாக வியர்க்க துவங்கிட அவனை மொழியற்று நோக்கினாள்.
இவனிடத்தில் தன்னால் நிச்சயமாக இந்த பதிலை கூற இயலாது என்று தோன்றிட உள்ளுக்குள் சிறிதான ஆயாசம் எழுந்தது.
ஆனால் வேறு வழியில்லையே அவன் வாழ்வில் தனக்கு எந்த இடமும் வேண்டாம் என்று முன்பே முடிவெடுத்தாயிற்றே பிறகென்ன கூறிவிடு என்று மூளை எடுத்துரைக்க,
தான் பதில் கூற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை உணர்ந்து அவனது விழிகளை நேருக்கு நேர் கண்டவள்,
“நீங்க…” என்று துவங்கிய வார்த்தை அப்படியே நின்று போனது.
காரணம் சைத்தன்யா தான். அவள் இதழ் பிரித்த அடுத்த கணம் அவளருகே வந்திருந்தானே.
நூலளவு இடைவெளியில் நின்றிருந்தவனை கண்டு இவளுக்கு வார்த்தை வரவில்லை.
“ஹ்ம்ம் சொல்லு மேகா. நீங்கன்னு ஏதோ ஆரம்பிச்சியே?” என்றவன் நிறுத்தி அவளது விழிகளுக்குள் ஊடுருவ,
அவனது நெருக்கமும் இந்த பார்வையும் மேகாவை உள்ளுக்குள் என்னென்னவோ செய்ய வியர்வை துளிகள் மேலும் உற்பத்தி ஆகியது.
அதனை கண்டவன்,“என்ன மேகா ஏசி ரூம்லயும் இப்படி வேர்க்குது” என்று தனது கைக்குட்டையால் அவளது நெற்றியை துடைத்தான்.
அவனது கைக்குட்டையில் இருந்து அவனது வாசம் குப்பென்று இவளை தாக்க அதனை தாங்க மாட்டாதவள்
விழிகளை மூடி கொண்டான்.
அதனை கண்டு இதழுக்குள் புன்னகைத்தவன் அவளது மூடிய இமைகளில் மெலிதாய் மூத்தமிட, அவனது வெப்ப மூச்சு காற்று இவளை நடுங்க செய்தது.
பெரிதாய் அதிர்ந்து போனவள் விழிகளை விரித்து பார்க்க,
“என்ன கண்ணு டி இது அப்படியே என்னை இழுக்குது” என்றவனது குரல் இவளை இதயத்தை உருகிட செய்ய,
“டி யா?” என்று அதிர்ந்து வினவினாலும் குரல் எழும்பவில்லை.
“ஆமாடி டி தான் ஏதோ சொல்லிட்டு இருந்தியே அதை கண்டினியூ பண்ணு டி” என்று அத்தனை டி போட்டு அவளை வாயடைக்க வைத்தவன் மேலும் நெருங்கி இடையோடு கட்டி கொள்ள,
இவளுக்கு பெரிதான பூகம்பம் பிறந்தது.
அதனை தாள மாட்டாதவள் நெளிந்து கொண்டு விலக முயற்சிக்க,
“ஷ்… அசைய கூடாது எது சொல்றதா இருந்தாலும் இப்படியே இருந்து சொல்லு டி” என்று அதட்ட,
“இது… இது வேண்டாமே” என்றவள் அவனது கையை சுட்டி காட்ட,
“நோ இப்படியே இருந்து நீ சொல்றதை சொல்லு உன்னை விட்றேன்” என்று கூறிவிட்டான்.
உள்ளுக்குள் பெரும் அவஸ்தை பிறந்தது. அவனது முகத்தை பார்த்த மறுக்க முடியாதவளுக்கு இருக்கும் நிலையில் கூற வந்ததே மறந்துவிட்டது.
இருந்தும் தன்னை வெகுவாக கட்டுப்படுத்தி கொண்டவள்,
“அது… உங்களுக்கு அந்த சொனாக்ஷி தான் உங்களுக்கு பொருத்தமா இருப்பா” என்று மொழிந்திட,
“ஹ்ம்ம்” என்று மட்டும் பதில் வந்தது.
தலையை குனிந்து பேசி கொண்டு இருந்தவளுக்கு அவனது குரல் பேதத்தை கண்டறிய முடியவில்லை.
“அவங்க டாக்டருக்கு படிச்சு இருக்காங்க. ரொம்ப அழகாவும் இருக்காங்க” என்று மொழிய,
அப்போது, “ஹ்ம்ம்” என்ற பதிலே வர,
“எல்லாத்துக்கும் மேல அவங்க உங்க ஸ்டேட்டஸ்க்கு ஈக்வலா இருக்காங்க அவங்கப்பா பெரிய பிஸ்னஸ் மேன். எல்லா விதத்துலயும் பொருத்தமா இருப்பாங்க” என்று முடிக்க,
அதற்கும், “ஹ்ம்ம்” என்ற பதில் வர,
இவள் ஆயாசத்துடன் நிமிர்ந்து பார்த்தாள்.
“நீ எப்போ இருந்து ஐ.டி ஜாப் விட்டு மேட்ச் பிக்ஸிங் பண்ண ஆரம்பிச்ச” என்று தீவிர பாவனையில் சிந்திக்க,
இவளுக்கு சட்டென்று கோபம் ஜனிக்க, அவனை முறைத்து பார்த்தாள்.
அதில் மெலிதான கீற்றாய் புன்னகைத்தவன் அவளருகே குனிந்து,
“எனக்கு அது எதுவும் வேண்டாம். நீ மட்டும் தான் வேணும் லைஃப் லாங்” என்று ஆழ்ந்த குரலில் மொழிந்திட,
இவளுக்கு இதயம் தாளம் தப்பியது.
அடிவயிற்றில் இருந்து ஏதோ ஒன்று பிரவாகமாக பொங்கி வர,
விழிகளும் நிறைந்து போனது.
இத்தனை வருட தவமாய் காத்திருந்த நேசம் வரமாய் வந்து கையில் தவழும் கணம் அதனை அள்ளி ஆராதிக்க முடியாத தன் கையறு நிலையை அறவே வெறுத்தவள் முகத்தை அவனுக்கு காட்டாதவாறு திருப்பி கொண்டாள்.
“நா… நான் உங்களுக்கு பொருத்தமே இல்லை” என்று அழுகையை கட்டு படுத்தி மொழிய,
“அதை நான் சொல்லணும். உன்னை தவிர யாருமே எனக்கு பொருத்தமா இருக்க மாட்டாங்க” என்று காட்டமாக பதில் அளித்தான்.
“இல்ல நான் உங்களுக்கு வேணாம்” என்க,
“நான் உனக்கு வேணாமா?” என்றவன் கூர்மையாக பார்க்க,
“அது எனக்கு” என்றவள் பேசுகையிலே பாதியில் அவள் பேச்சு நின்று போயிருந்தது.
காரணம் அவளது இதழ்கள் சைத்தன்யாவின் இதழ்களுக்கு புதைந்து போனது.
மெதுவாய் நிதானமாய் துவங்கியவன் இதழ் வழியே உயிரை தொடும் முயற்சியில் இறங்கிட,
அவனது செயலில் அதிர்ந்து விழிவிரித்தவள் அவனுடைய ஆடையை இறுக்கமாக பற்றி கொண்டாள்.
வேண்டாம் இது சரியல்ல என்று மூளை எச்சரித்தாலும் மனம் மன்னவனிடம் மயங்க துவங்கியது.
அவளை விடவே மனதில்லாதவனது இதழ் மெதுவாய் கன்னக்கதுப்பில் பதிந்து அதன் மென்மையை சோதிக்க துவங்கியது.
பஞ்சு பொதிகைக்குள் அமிழ்ந்துவிட்ட இதழை விலக்க இயலவில்லை.
கன்னத்தில் காய்ந்து போயிருந்த கண்ணீரை இதழ் கொண்டு துடைத்தவன் முத்த ஊர்வலத்தை முகமெங்கும் நிகழ்த்த இவள் மெதுவாய் தன்னிலை மறக்க துவங்கி இருந்தாள்.
அவனை பிடித்திருந்த சட்டையின் இறுக்கம் கூட,
அதனை உணர்ந்தவன் பட்டென்று அவளை இடையை தன்னோடும் மேலும் இறுக்கி ஏறி இறங்கிய தொண்டை குழியில் தஞ்சம் புகுந்தான்.
அங்கேயே அவ்விடத்தில் உறைந்துவிட அவனது மனது துடிக்க மெதுவாய் தொண்டை குழியில் இதழை பதிக்க இவளது உடல் அதிர்ந்து மீண்டது.
அதில் தன்னிலை மறந்து துவண்டிருந்தவளுக்கு மனதின் ஓரம் எச்சரிக்கை மணி ஒலிக்க, பட்டென்று அவனை விலக்கிவிட்டு மறுபுறம் திரும்பியவளுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.
“இது… இது வேணாம் தப்பு…” என்றவளுக்கு குரல் ஏகமாய் நடுங்கிட,
அவளை பின்னிருந்து அணைத்து தோளில் தனது தாடையை பதித்தவன்,
“ஹ்ம்ம் கல்யாணம் பண்ணிக்கலாம் அப்புறம் எதுவும் தப்பில்லை” என்றிட, குரலில் அவளுக்கான நேசம் பொங்கி வழிந்தது.
திருமணம் என்ற வார்த்தையினை கேட்டதும் அவனிடமிருந்து மெதுவாக விலகியவள்,
“நான்… எனக்கு கொஞ்சம் ஹெல்த் இஸ்ஸூஸ் இருக்கு” என்று திக்கி திணறி மொழிய,
‘மேலே சொல்’ என்பது போல இருந்தது அவனது பார்வை.
“எனக்கு ஸ்பைனல் கார்ட்ல டிஸ்க் கம்ப்ரஷன் இருக்கு. சர்ஜரி பண்ணி இருக்கேன். என்னால பெல்ட் போடாம எங்கேயும் ட்ராவல் பண்ண முடியாது” என்று அவன் முகம் காண,
“ஸோ…” என்று அவளை பதில் பார்வை பார்த்தான்.
“இப்படி பிராப்ளத்தோட இருக்க என்னை கல்யாணம் பண்ணிக்க உங்களுக்கு என்ன அவசியம் வந்தது. அதுக்கும் மேல நான் கொஞ்சம் கூட உங்களுக்கு பொருத்தமே இல்லை. காயு அக்கா காட்டுன எந்த பொண்ணு பக்கத்துல வர கூட எனக்கு தகுதி இல்லை. நீங்க உங்களுக்கு ஏத்த பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கோங்க” என்று மொழிய,
“பேசி முடிச்சிட்டியா? இல்லை இன்னும் ஏதும் இருக்கா?” என்று கூர்மையாக பார்க்க,
“ம்ஹூம்” என்று அவளது தலை இடம் வலமாக அசைந்தது.
“மேகா உன் மனசாட்சியை தொட்டு சொல்லு. உனக்கு வந்த மாதிரி ஹெல்த் இஸ்ஸூஸ் எனக்கு வந்தா நீ என்ன வேணாம்னு சொல்லிடுவியா?” என்று வினவ,
“இல்லை” என்று சடுதியில் பதில் வந்து விழுந்தது.
“தென் நான் மட்டும் ஏன் உன்னை விடனும்” என்று வினவிட,
ஒரு கணம் அவளிடத்தில் பதில் இல்லை.
சில நொடிகள் கடந்த பிறகு,
“நீங்க வேணா இதை பெருசா நினைக்காம இருக்கலாம் ஆனால் உங்க பேமிலி மெம்பர்ஸ் ரிலேட்டீவ்ஸ் எல்லாருக்கும் இது குறையா தான் தெரியும்”
“அவங்க யாரும் உன் கூட வர போறது இல்லை. நான் தான் கல்யாணம் பண்ணி வாழ போறேன்” என்று அழுத்தம் திருத்தமாக இயம்ப,
“இதெல்லாம் பேச்சு வார்த்தைக்கு மட்டும் தான் சரியா வரும். உங்க அம்மா அப்பாக்கு உங்க தகுதிக்கு ஏத்த நல்ல பொண்ணா கல்யாணம் பண்ணி வைக்கணும்னு ஆயிரம் ஆசை இருக்கும் கண்டிப்பா அவங்க எல்லாம் இதை ஏத்துக்க மாட்டாங்க”
“அவங்க எல்லாரையும் எப்படி சம்மதிக்க வைக்கணும்னு எனக்கு தெரியும். இவ்வளோ தான் ரீசன் வச்சு இருக்கியா? இல்லை பேலன்ஸ் இருக்கா?” என்று வினா தொடுத்தான்.
பதிலுக்கு மேகா பார்த்த தவிப்பான பார்வை அவனை உடைய செய்ய,
அவளை நெருங்கி கன்னத்தை கையில் ஏந்தியவன்,
“லுக் மேகா எல்லாருக்கும் எதாவது பிராப்ளம் இருக்கத்தான் செய்யும். அதை நினைச்சு நமக்கான ஹாப்பினெஸ்ஸ இழக்க கூடாது. ஐ அக்ரி என் வீட்ல உடனே அக்சப்ட் பண்ணிக்க மாட்டாங்க. கொஞ்சம் போராட வேண்டி இருக்கும் ஆனால் கண்டிப்பா சம்மதிக்க வச்சிடுவேன் நமக்காக இது கூட செய்ய முடியாதா? உனக்கு என் மேல நம்பிக்கை இருக்கு தான மேகா நான் உன்னை யாரையும் எதுவும் சொல்ல விட மாட்டேன் ட்ரஸ்ட் மீ” என்று அவளது விழிகளுக்குள் கலக்க,
முற்றும் முதலும் நெசத்தை மட்டுமே தாங்கி தனக்காக தன்னுடைய நேசத்திற்காக மட்டும் வந்து நிற்பவனை கண்டு இவளுக்கு அனைத்தும் நழுவியது.
அவனது நேசத்தில் விழிகள் பனித்தது.
“இட்ஸ் ஆல்ரெடி லேட் மேகா. சீக்கிரமா மேரேஜ் பண்ணிக்கலாம். வில் யூ மேரிட் மீ?” என்றவனது குரல் அவளது உயிரை உரசி செல்ல,
“ஹ்ம்ம்” என்று மேலும் கீழும் தலை அசைத்தவள் அவனது மார்பில் முகத்தை புதைத்து தேம்பி தேம்பி அழுக துவங்கி இருந்தாள்.
இத்தனை வருடம் உள்ளுக்குள் புதைத்து ஏங்கி தவித்து நேசத்தின் வெளிப்பாடாய் இந்த கண்ணீர்.
அவளது நிலை உணர்ந்தவன் சில நிமிடங்கள் அவளை தொந்திரவு செய்யவில்லை. அணைத்தபடியே முதுகை வருடினான்.
ஆனால் நேரம் செல்ல செல்ல அவளது அழுகை அதிகரித்ததே தவிர குறையவில்லை.
“மேகா போதும் எவ்ளோ நேரம். நிறுத்து” என்று அதட்டி அவளது அழுகையை நிறுத்தியவன் கண்ணீரை இதழால் துடைக்க,
விழி மூடி அவனை அவனது ஸ்பரிசத்தை இருப்பை வாசத்தை தனக்குள் உறுதி செய்தவளது மனமெங்கும் அவன் பிம்பம் மட்டும் தான்.
அவளது நேசத்தை தன்னிடம் உருகி நிற்கும் பாவனையை முழுதாய் ரசித்தவன் மென்னகையுடன் அணைத்து உச்சியில் இதழ் பதித்தான்.
சில நிமிடங்கள் அவனது அணைப்பில் இருந்தவள் சடுதியில் விலகி அவனது முகம் காண,
“என்ன?” என்று ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கினான்.
அதில் வழக்கம் போல இதயத்தில் ஜனித்த பூகம்பத்தை தள்ளியவள்,
“ஈவ்னிங் பொண்ணு பாக்க வர்றாங்களே என்ன பண்றது?” என்று கேட்க,
“நான் என்ன பண்ண முடியும். நீதான ஓகே சொன்ன நீ தான சமாளிக்கணும்” என்றவன் தோளை குலுக்க,
“நான் என்ன பண்றது” என்று விழித்தவளது பாவனையை கண்டதும்,
“க்யூட்” என்று இதழ்கள் மெலிதாக முணுமுணுத்தது.
அதனை உணராதவள்,
“ஹான் என்ன சொன்னிங்க” என்று வினா தொடுத்தாள்.
இதழுக்குள் புன்னகையை அதக்கியவன்,
“நத்திங். பொண்ணு தான பாக்க வர்றாங்க வர்றவனை பிடிக்கலைன்னு சொல்லிடு. நான் சீக்கிரமா என் வீட்ல பேசி சம்மதம் வாங்கி அத்தை மாமாக்கிட்ட பேச சொல்றேன்” என்று அவளுக்கு வழி கூற,
“ஹ்ம்ம்” என்று சம்மதமாக தலையசைத்தவளுக்கு அப்போது தான் தானிருந்த நிலை உணர நொடியில் அவனிடமிருந்து விலகியவள்,
“சரி நான் கிளம்புறேன் வந்து ரொம்ப நேரமாச்சு” என்று கதவை திறக்க போக,
“எங்கடி போற? இவ்வளோ நேரம் நான் கொடுத்ததை வாங்கிட்டேல்ல இப்போ கொடுத்துட்டு போ” என்று சிரிப்புடன் மொழிய,
அவனது சிரிப்பில் தொலைந்த மனதுடன்,
“ம்ஹூம். அதெல்லாம் ஆஃப்டர் மேரேஜ் தான்” என்றவள் வெளியேறி செல்ல,
புன்னகையுடன் செல்பவளை கண்டவனுக்கும் மனமெங்கும் நிறைவு ஜனித்தது.
மேகா வெளியே வந்ததும்,
“என்னாச்சு மேகா ஏன் இவ்ளோ நேரம் சார் ரொம்ப திட்டிட்டாரா?” என்று ராதிகா பிடித்து கொள்ள,
“ரொம்ப திட்டி இருக்காரு போல இவ முகத்தை பாத்தாலே தெரியிது எப்படி அழுது சிவந்திருக்கு பாரு” என்று சோனியா மொழிந்தாள்.
“பீல் பண்ணாத மேகா” என்று வித்யா ஆறுதல் கூற,
ஒரு கணம் திகைத்து விழித்தவளுக்கு முகத்தில் இருந்த புன்னகையை மறைக்க பெரும்பாடாய் போய்விட்டது.
மிகவும் முயன்று சோகமாய்
வைத்து கொண்டவள்,
“ஆமா நான் அழுத பின்னாடியும் விடாம செம்ம திட்டு” என்று மொழிய,
“பீல் பண்ணாத மேகா. நாங்களும் இந்த மாதிரி திட்டு வாங்கி இருக்கோம் தான்” என்று பலவாறாக வந்த ஆறுதலுக்கு தலை அசைத்துவிட்டு வீட்டை நோக்கி கிளம்பி சென்றவளது முகத்தில் வாடாத புன்னகை மிளிர்ந்தது…