• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

மேகம் 16

Administrator
Staff member
Messages
464
Reaction score
794
Points
93
மேகம் 16:

காரணமற்ற கண்ணீருக்கு பின்னர் நேசம் கொண்ட நெஞ்சின் காயத்தை தவிர வேறென்ன பெரிதாக இருந்துவிட போகிறது…?


“உன்னோட பெண்டிங் டாஸ்க் எல்லாம் கம்ப்ளீட் பண்ணியாச்சா மேகா?” என்று வினவிய ரேகாவிற்கு,

“ஹ்ம்ம் கம்ப்ளீட் பண்ணிட்டேன் மேம்” என்று பதில் அளித்தாள்.

“அப்புறம் இந்த டைம் நீ தான் ப்ரசண்ட் பண்ணனும்” என்க,

“நானா?” என்றவளது விழிகள் அதிர்ச்சியில் விரிய,

“எஸ் நீ தான் மேகா”

“மேம் ராதிகா தான எப்பவுமே பண்ணுவா? நான் எப்படி?” என்றவள் நிறுத்த,

“இந்த டைம் நீ தான் பண்ணனும். சைத்தன்யா சார் சொல்லி இருக்கார். ஸோ இந்த டைம் நீ நெக்ஸ்ட் வேற ஒருத்தர்னு ரொட்டேட் ஆகும்” என்றார்‌

சைத்தன்யாவின் பெயரை கேட்டதும் இவளது உள்ளே அலைகழிக்க துவங்க,

வேறு ஏதும் கூற மனமின்றி,

“சரிங்க மேம் நானே பண்றேன்” என்றவாறு எழுந்து வந்துவிட்டாள்.

தன்னுடைய இருக்கைக்கு வந்தவளுக்கு தலை வலிக்க துவங்கிவிட்டது.

ஏற்கனவே மன உளைச்சலில் இருப்பவளுக்கு இந்த ப்ராஜெக்ட் விடயம் வேறு மேலும் உளைச்சலை உண்டாக்கியது.

ஒரு வாரமாக எதையும் சரியாக செய்ய இயலாமல் எதிலும் கவனம் செலுத்த முடியாமல் தனக்குள்ளே பலவாறு உழன்று கொண்டிருக்கிறாள்.

காரணம் சைத்தன்யாவை அன்றி வேறென்ன இருந்துவிட முடியும்.

அன்று அவன் பேசிவிட்டு சென்ற வார்த்தையும் அவனுடைய பார்வையும் இன்று வரை உயிர்வரை ஊடுருவி சிலிர்க்க செய்ய விழிகளை மூடி திறந்தாள்.

இன்றும் அந்த நிகழ்வு கண்முன்னே நழுவி சென்றது.

பேரிடியாக தலையில் விழுந்த அதிர்ச்சியால் ஏகமாய் அதிர்ந்தவளது முகம் சடுதியில் வெளுத்திருந்தது.

அவளது முகத்தையே ஊடுருவி பார்ந்திருந்தவன்,

“சொல்லு மேகா இப்படி என்னை வேற ஒருத்திக்கு கொடுத்துட்டு அழுதிட்டு இருக்க போறீயா?” என்று மீண்டும் அழுத்தம் திருத்தமாக கேட்க,

இவளுக்கு விழிகள் முழுவதும் நிறைந்துவிட்டது,

“ப்ச் சும்மா அழுதிட்டே இருக்காத மேகா” என்றவன் சலிப்புடன் நெற்றியை தேய்க்க,

இவளது கரங்கள் கண்ணீரை துடைத்தது.

“உனக்காக தான் உன்னை வீடியோ கால்ல பாத்திட்டு தான் எல்லா வேலையையும் விட்டுட்டு பைத்தியக்காரன் மாதிரி ஓடி வந்திருக்கேன்” என்றவன் முகத்தை மறுபுறம் திருப்பி தலையை கோதி கொண்டான்.

மேகா தான் நடப்பவற்றை நம்பவியலாது விழிகள் தெறிக்க பார்த்து கொண்டிருந்தாள்.

“ஆனால் நீ எனக்கு பொண்ணு செலெக்ட் பண்ணிட்டு இருக்க? அந்த சொனாக்ஷிய நான் கல்யாணம் பண்ணிக்கணுமா?” என்று அவளை உறுத்துவிழிக்க,

பொங்கிய அழுகையை கட்டுப்படுத்தியவள் முகத்தை அவனுக்கு காட்டாது மறைத்து கொண்டாள்.

அவளது அமைதி அவனது பொறுமையை சோதிக்க,

“ப்ச் இறங்கி போடி” என்றவன் கார் கதவை திறந்துவிட,

சடுதியில் இறங்கியவள் விறுவிறுவென்று வீட்டிற்குள் ஓடிவிட்டாள்.

அன்றிரவு அவளது அழுகையை மேகாவின் தலையணை மட்டும் தான் அறிந்தது.

அவனுக்கும் தன்னை பிடித்திருக்கிறது என்று தெரிந்த பின்னரும் அழுகையில் கரைந்தவள் அவனுக்கு தான் பொருத்தமில்லை‌.

தன்னோடு அவன் வாழ்வு நிச்சயமாக நன்றாக இருக்காது‌.

அவனுடைய படிப்பு அழகு அந்தஸ்து என எதற்கும் தான் சிறிதளவு பொருத்தமில்லாதவள்.

என்னையும் அவரையும் சேர்த்து வைத்து பார்த்தாள் யாராக இருந்தாலும் நிச்சயம் அவருக்காக பரிதாபம் தான் கொள்ளுவார்கள்‌‌.

அவருக்கு அவரது பெற்றோர் பார்த்து வைத்த பெண் தான் சரியாக இருக்கும் அதுதான் அவருக்கு நல்லது என்று இவளாகவே முடிவு செய்து கொண்டாள்.

இதில் மேகாவின் பெரிய சந்தேகம் தன்னுடைய நேசத்தை பற்றி எப்படி க்யூட்டனுக்கு தெரிய வந்தது என்பது தான்‌.

காயத்ரி கூறி இருப்பாளா? என்று சிந்தித்தாள் அவளுக்கு எப்படி தெரிய வந்திருக்கும் என்பது யோசனையாக இருந்தது.

தான் அவனுக்கு வேண்டாம் என்று முடிவு செய்த பிறகும் உள்ளே அமைதி இல்லை‌. அவனில்லாது நீ எப்படி வாழ்வாய் என்று உள்ளே ஒன்று அரற்றி அவளை ஒரு வழி செய்தது.

தன்னுடைய ஆசைக்காக அவருடைய வாழ்க்கையை வீணடிக்க இயலாது என்று பலவாறு சமாதானம் கூறியவள் மறுநாள் அவனை சந்திக்க திரணியற்று தடதடக்கும் இதயத்துடன் அலுவலகம் வந்தாள்‌.

ஆனால் அவள் எதிர்பார்த்த எதுவும் நிகழவில்லை. அன்று பேசி சென்ற பிறகு சைத்தன்யா அலுவலகத்திற்கே வரவில்லை.

காரணம் அவளுக்கே புரிந்தது‌. அவனுடைய புது அலுவலகத்தில் நிறைய வேலைகள் இருக்கும்.

இதற்கிடையில் ஒரு முறை அவர் வந்ததே பெரிய விடயம் என்று நினைத்து கொண்டவளுக்கு உள்ளுக்குள் சிறிது நிம்மதியாக கூட இருந்தது.

அவனை சந்தித்து என்ன கூறுவது எப்படி துவங்குவது என்று எதுவுமே அவளுக்கு தெரியவில்லை.

பிறகு நாட்கள் ஆமை போல நகர்ந்தது அவளுக்கு. காரணம் அவனில்லாத வெறுமை தான்.

இத்தனை நாள் உடனிருந்தானா? இப்போது மட்டும் எதற்காக இப்படி வருந்துகிறாய்? என மனசாட்சி அவளை வதைக்க அவளிடம் எந்த வினாவிற்கும் பதில் இல்லை‌.

இப்படி அதீத குழப்பத்தில் உளைச்சலில் இருப்பவளுக்கு வேலை செய்வதே பெரும்பாடாக இருக்க இதில் அவள்தான் ப்ரசண்டேஷன் கொடுக்க வேண்டும் என்று கூறினால் எப்படி இருக்கும்.

இதில் இதுபோதாது என்று அவன் எப்போது வந்து நிற்பான் என்று தெரியாது அச்சத்திலே சுற்றி கொண்டு இருந்தாள்.

ரேகா மூலமாக அவன் ஒரு மாதத்திற்கு இங்கு வரமாட்டான் வர வாய்ப்பில்லை என்று அறிந்ததும் தான் சிறிது நிம்மதி ஜனித்தது.

நடந்தவற்றை நினைத்தவளுக்கு பெருமூச்சு வர பணியில் கவனத்தை வைத்தாள்‌.

ப்ரசண்டேஷன் கொடுக்க வேண்டும் என்பதால் சற்று அதிக சிரத்தையுடன் வேலைய செய்தவள் பவர் பாயிண்டை தயார் செய்ய துவங்கினாள்‌.

இன்னும் இரண்டு நாட்களில் க்ளையண்ட் மீட்டிங் இருக்கிறது.

அவள் கொடுக்கும் விதத்தில் தான் இந்த ப்ராஜெக்டின் வெற்றி இருக்கிறது‌.

அவள் ஒழுங்காக கொடுக்கவில்லை என்றால் மொத்தமாக சொதப்பிவிடும் ஆதலால் சற்று கூடுதல் கவனம் எடுத்து செய்தாள்‌

இரண்டு நாட்கள் உணவு உறக்கமின்றி நல்லபடியாக பிபிடியை தயார் செய்து பலமுறை ஒத்திகையும் பார்த்திருந்தாள்‌.

அவளது குழுவில் இருந்த அனைவரும் அவளுக்கு ‘ஆல் தி பெஸ்ட்’ என்று கூற,

தலையசைத்து பெற்று கொண்டவளுக்கு உள்ளுக்குள் பயம் பதட்டம் எல்லாம் ஏக போகமாய் ஆட்சி செய்தது‌‌.

அவளுக்கு ஏற்கனவே மேடை பயம் அதிகம் இதில் இத்தனை பேர் முன்னிலையில் எப்படி பேச போகிறாள் என்று அவளுக்கே தெரியவில்லை‌.

காலையிலே எழுந்து கடவுளை வேண்டிக் கொண்டு நல்லபடியாக இந்த நாள் முடிய வேண்டும் என்று மனதிற்குள் பலவாறு உழன்றபடி தான் அலுவலகம் வந்திருந்தாள்.

இது காணொளி அழைப்பின் மூலம் நடைபெறும் மீட்டிங் தான். இருந்தும் இவளுக்கு தான் பயம் குறையவில்லை.

இன்னும் நிகழ்வு தொடங்க இருபது நிமிடங்கள் இருக்க குழு தலைவர் எல்லோரையும் பத்து நிமிடத்தில் வர கூறி ப்ரொஜெக்டர் சரியாக உள்ளதா இறுதியில் இதனால் பிரச்சனை வந்துவிட கூடாது என்று கிளம்பி சென்றார்.

ராதிகா, “வா மேகா இன்னும் பிப்டீன் மினிட்ஸ் இருக்கு. நீ அங்கேயே ஒரு டைம் ரிகர்சல் பாத்துக்கோ நான் எதாவது சேஞ்ச் பண்ணனுமான்னு பாத்து சொல்றேன்” என்க,

“ஹ்ம்ம் ஓகே டி. நீங்க போங்க நான் வாஷ் ரூம் போய்ட்டு வர்றேன்” என்றவள் ஓய்வறைக்கு சென்று முகத்தை நன்றாக கழுவிவிட்டு தனக்கு தானே பல முறை தைரியம் கூறிவிட்டு அந்த அரங்கிற்கு சென்றாள்.

எல்லோரும் அவரவர் இடத்தில் அமர்ந்து இருந்தனர்.

ராதிகா, “என்ன மேகா ஒரு டைம் ட்ரையல் பாக்குறியா?” என்க,

அப்போதே அவளுக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது.

அதனை மறைத்தவள்,

“இல்லை நான் டேரெட்க்டா ப்ரசண்ட் பண்றேன்” என்று விட்டாள்.

இந்த கணம் சைத்தன்யா பின்னுக்கு சென்று இது மட்டுமே பிரதானமாக இருந்தது.

முதன் முறையாக தன்னை நம்பி கொடுக்கப்பட்டிருக்கும் பணி சரியாக செய்து முடித்துவிட வேண்டும் என்று உள்ளுக்குள் ஒரு எண்ணம் இருந்தது.

பதினைந்து நிமிடங்கள் கடந்ததும் காணொளிகள் அழைப்பு இணைக்கப்பட சற்று மேடாக திரையின் முன் சென்று நின்றவள்,

“குட் மார்னிங் எவ்ரிவன்” இதழ் பிரித்து துவங்கிய கணம்,
கதவு திறக்கும் ஓசை கேட்டது.

அனிச்சையாக மேகாவின் விழிகள் திரும்ப,

கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் சைத்தன்யா.

மேகாவின் இதழ்கள் தன்னையும் மீறி உள்ளுக்குள் அதிர்ந்து,

‘க்யூட்டன்’ என்று அலறிவிட,

இவனோ சாவகாசமாக உள்ளே நுழைந்து அவளை பார்த்தவாறு முதல் வரிசையில் அமர்ந்து கொண்டான்.

விழிகள் முழுவதும் அவளிடத்தில் தான் நிலைத்திருந்தது‌.

இங்கு மேகாவிற்கு சடுதியில் வியர்த்து வழிய துவங்கிவிட்டது.

துப்பட்டாவை எடுத்து முகத்தை துடைத்து கொண்டவள் மிகவும் முயன்று ப்ரசண்ட்டேஷனை கொடுக்க துவங்கினாள்.

இடையிடையே நிறைய கேள்விகள் சந்தேகங்கள் வந்தது.

அவற்றிற்கு விடை தெரிந்தாலும் ஊசியாய் தன்னை துளைக்கும் அவனது பார்வையினால் இவளுக்கு வார்த்தை தந்தியடித்தது‌.

கிட்டத்தட்ட ஓரளவு அனைத்தையும் முடித்திருந்தாள். இன்னும் ஐந்து நிமிடத்தில் முடிந்துவிடும் தான் இருந்தும் அவளால் முடியவில்லை.

ஏனோ விழிகள் கலங்கவது போல தோன்றியது.

சடுதியில் எழுந்து கொண்டான் சைத்தன்யா.

எல்லோருடைய பார்வையும் அவனை தொடர,

அவளருகே சென்றவன் ஒரு தண்ணீர் பொத்தலை எடுத்து நீட்ட,

இவள் அதிர்ந்து விழித்தாள் அவனது செயலில் அவன் எழுந்ததை கண்டே அனைவரது முன்பும் எதாவது கூறிவிடுவானோ என்று அச்சத்தில் தான் இருந்தாள்‌.

“ஹாவ் இட் மேகா” என்றவன் அவள் விட்டதில் இருந்து அவளுக்கு பதில் தொடர்ந்தான்.

கேட்கப்படும் கேள்விகளுக்கு அடுத்த சந்தேகமே வராத அளவிற்கு பதில் அளித்தான்.

அது அவனது இத்தனை வருட அனுபவத்தையும் தலைமைத்துவத்தையும் எடுத்து காட்டியது.

அவனிடமிருந்து நீரை வாங்கி அருந்தியவளுக்கு ஓரளவு அச்சம் மட்டுப்பட்டிருக்க அமைதியாக அவனை அவதானித்தாள்‌.

அவன் பாவனை பதில் கூறிய விதம் அவனுடைய திறமையை நன்றாய் காண்பித்தது.

மேகாவும் பதில் அளித்தாள் தான் ஆனால் சைத்தன்யா அளவிற்கு அவளால் இயலவில்லை.

அவனிடமிருந்த திடமான பதில் அவளிடத்தில் இல்லை.

‘என்னதான் ஊரில் இல்லை என்றாலும் இங்கு நடப்பவற்றை நன்றாக தெரிந்து வைத்துள்ளாரே’ என்று மனதிற்குள் எண்ணி கொண்டாள்.

என்ன முயன்றும் மனது அவனை ரசிப்பதை நிறுத்த இயலவில்லை.

ஆகாய நிறத்தில் ப்ளைன் சட்டையும் அதற்கு தோதாக வெள்ளை நிறத்தில் பேண்ட்டும் அணிந்திருந்தான். அவனது நிறத்திற்கு இந்த உடை அவ்வளவு பொருத்தமாக இருந்தது‌.

ஒரு கையில் கைக்கடிகாரம் இருக்க மறுகை ஒலிவாங்கியை பிடித்திருந்தது‌.

ஒரு காலை நிலத்தில் ஊன்றி மறுகாலை சுவற்றில் மோதியவாறு தோரணையாக நின்று மென்னகையுடன் பேசி கொண்டிருந்தவனை காண கண்கள் இரண்டு போதவில்லை அவளுக்கு.

பேசி முடித்தவன் பட்டென்று அவள்புறம் திரும்ப,

இதனை எதிர்பாராதவள் நொடியில் பார்வையை விலக்கி இருந்தாள்.

ப்ராஜெக்ட் வெற்றி கரமாக முடிந்தது.

எல்லோரும் வந்து சைத்தன்யாவிடம்,

“நல்லா பண்ணிங்க சார்”

“சரியான நேரத்தில் சுட்சுவேஷனை கையில எடுத்திட்டிங்க சார்” என்று பலவாறாக கூற,

அவன் பதில் மொழிந்தவாறு இருந்தான்.

மேகாவிற்கு தான் தான் என்ன கூறுவதென தெரியவில்லை.

ஏதும் கூறாமல் வர இயலாதே என்று தோன்ற,

“தாங்க்ஸ் சார்” என்று மெதுவாக முணுமுணுக்க,

அவன் அதனை கண்டு கொள்ளாத பாவனையில் கிளம்பிவிட்டான்.

அவனது செயலில் அடிப்பட்டு போனவளுக்கு மீண்டும் விழிகள் கலங்கியது.

யாருக்கும் காண்பிக்காது மறைத்தவள் மற்றவர்களுடன் வெளியேறினாள்.

“என்ன மேகா இது லாஸ்ட் மினிட்ல இப்படி பண்ணிட்ட”

“எம்.டி சார் மட்டும் கன்டினியூ பண்ணலைன்னா மொத்தமா கொலாப்ஸ் ஆகியிருக்கும்”

“எவ்ளோ டைம் ட்ரையல் பாத்த மேகா அப்புறம் என்னாச்சு?”

“டி எல்க்கிட்ட மாட்டுன? சும்மாவே அந்தாளு பேயாடுவாரு” என்று பல குரல்கள் அவளை நோக்கி பாய எதற்கும் பதில் அளிக்காதவள் தன்னிருக்கையில் அமர்ந்துவிட்டாள்.

சைத்துவின் உதாசீனம் அவளை வெகுவாக காயப்படுத்தி இருந்தது.

குழு தலைவர் ராமநாதனிமிருந்து அழைப்பு வந்தது.

ராதிகா, “உன்னை திட்டதான் கூப்பிட்றாரு போல” என்று சிறிது வருத்தத்துடன் கூற,

“நான் பாத்துக்கிறேன்” என்றவள் எழுந்து ராமநாதன் அறைக்குள் அனுமதி பெற்று உள்ளே நுழைந்தாள்.

அவரது முகம் கடுகடுவென இருந்தது.

“ஒரு ப்ரசன்ட்டேஷன் ஒழுங்கா கொடுக்க தெரியலை. உனக்கு எதுக்கு ஐடி கம்பெனில வேலை. கல்யாணம் பண்ணிக்கிட்டு வீட்ல சமைச்சு போட வேண்டியது தான” என்று காச்சு மூச்சென்று கத்த துவங்கிவிட,

ஏற்கனவே காயப்பட்டிருந்தவளது கண்ணீர் பெருகியது.

“எதுக்கெடுத்தாலும் அழுதுற வேண்டியது. சீ எங்க உயிரை எடுக்கன்னே வந்து சேருவீங்க போல. அடுத்த மீட்டிங்கலயும் நீ தான் ப்ரசண்ட் பண்ணனும் போ என் கண் முன்னாடி நிக்காத போ” என்று திட்டிவிட,

வெளியே வந்தவளுக்கு அழுகை குறையவில்லை.

நன்றாக செய்ய வேண்டும் என்று தான் அத்தனை மெனக்கெடல்கள் செய்தாள் இருந்தும் இப்படி பாதியிலே நின்று போவோம் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.

மற்றவர்கள் முன்னிலையில் அழ விரும்பாதவள் ஓய்வறைக்கு சென்று முகத்தை நன்றாக நீரால் அடித்து கழுவினாள்.

இருந்தும் விழிகள் இரண்டும் நன்றாக சிவந்திருந்தது.

ராதிகா பார்த்துவிட்டு, “ரொம்ப திட்டமிட்டாரா மேகா” என்று வினவ,

“ஹ்ம்ம்” என்றவள் வேறேதும் கூறாது தலையை கணினியில் புதைந்து கொண்டாள்.

அடுத்த விநாடி,

“மேகா கம் டூ மை கேபின்” என்று சைத்துவிடமிருந்து செய்தி வந்தது.

இவனும் திட்டத்தான் போகிறான் என்று உள்ளுக்குள் ஒரு அச்சம் பிறந்தது‌.

ஏற்கனவே வாங்கிய வசவுகளினால் ஏகமாய் காயப்பட்டிருந்தாள்.

‘உன் மீது தானே தவறு போய் வாங்கி கட்டிக்கொள்’ என்று மனசாட்சி நகையாட எழுந்து சென்றாள்.

தன் மீது சில பார்வைகள் பரிதாபமாக விழுவது போல தோன்ற அதனை அலட்சியம் செய்தவளால் வந்த முதல்நாள் கோபமாக தன்னிடம் பேசிய சைத்தன்யாதான் நினைவிற்கு வந்தான்.

விழிகளை மூடி திறந்தவள்,

“மே ஐ கம் இன் சார்” என்று அனுமதி கேட்க,

“எஸ் கம்மின்” என்று பதில் வந்தது.

உள்ளே நுழைந்தவள் அமைதியாக நிற்க,

“உங்க மெயிலுக்கு சில பைல்ஸ் அனுப்பி இருக்கேன். அதெல்லாத்தையும் சம்மரைஸ் பண்ணி எனக்கு பிரிண்ட்அவுட் எடுத்துட்டு வாங்க. அப்படியே உங்க டி‌.எல்க்கும் ஒரு காபி அனுப்பிடுங்க” என்று கூற,

“ஓகே சார்” என்றவளுக்கு அவன் கடிந்து கொள்ளாதது நிம்மதியாக இருந்தாலும் தன்னுடைய அழுது சிவந்த முகத்தை கண்டு எந்தவித எதிர்வினையும் காட்டாது இருப்பது அதிகமாக வலிக்க செய்தது.

‘அவர் யார் உனக்கு அவர் ஏன் நீ அழுவதை கண்டு வருந்த வேண்டும் நீ தான் அவர் வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டாய். அவர் உன்னை திட்டாது விட்டதே பெரிய விடயம் போய் விடு’ என்று மனசாட்சி நிந்திக்க,

கசங்கிய முகத்துடன் வெளியேற சென்றாள்.

“ஈவ்னிங்குள்ள பைல் வேணும். டைம் ஆனாலும் முடிச்சு கொடுத்துட்டு போங்க” என்றவனது கூற்றில் கால்கள் அப்படியே நின்றது.

திரும்பி அவனை கண்டவளது முகத்தில் அச்சம் பரவியது.

“சார்” என்றவளுக்கு வார்த்தை வரவில்லை.

சைத்து, ‘என்ன?’ என்பதாய் நிமிர்ந்து பார்க்க,

“நான் இன்னைக்கு வீக் ஆஃப் போட்டு இருக்கேன்” என்று தயக்கமாய் மொழிய,

“ஐ டோண்ட் கேர். ஆப்டர்நூன்க்குள்ள முடிச்சுட்டா கிளம்பலாம்” என்றவன் தன்னுடைய பணியை கவனிக்க,

‘அதெப்படி முடியும் நிறைய வேலை இருக்கிறதே’ என்று எண்ணியவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

இத்தனைக்கும் இந்த பணி அவனுடையது அல்ல‌‌. எதற்காக திடீரென அவளை அழைத்து கொடுத்திருக்கிறான் என்று தெரியவில்லை.

‘இது என்னுடைய பணி இல்லை செய்ய இயலாது’ என்றெல்லாம் இங்கு கூற முடியாதே.

மதியம் வீட்டிற்கு போகவில்லை என்றால் தாயை நிச்சயமாக சமாளிக்க இயலாது.

அவள் இன்னும் நகராமல் இருப்பதை உணர்ந்தவன் நிமிர்ந்து பார்க்க,

முகம் முழுவதும் பரிதவிப்புடன் நின்றிருந்தவளது கையில் இருந்த துப்பட்டா கசங்கி கொண்டிருந்தது.

“உங்களுக்கு சி‌.எல் முடிஞ்சது தான? யார் வீக் ஆஃப் பெர்மிஷன் கொடுத்தது ராமநாதனா?” என்று வினவிட,

இவளது தலை மேலும் கீழும் அசைந்தது‌.

தன்னுடைய அலைபேசியை எடுத்து ராமநாதனுக்கு அழைத்தவன்,

“இது நீங்க எம்.டியா நான் எம்‌.டியா? சி.எல் முடிஞ்சவங்களுக்கு எதுக்கு வீக் ஆஃப் கொடுக்குறிங்க. அவங்களுக்கு பதில் நீங்க வொர்க் பண்ணுவிங்களா?” என்று திட்ட துவங்கிட,

இங்கு மேகா அதிர்ந்து பார்த்தாள்.

ராமநாதன் அரைநாள் விடுப்பை மறுத்திருக்க இவள் மிகவும் கெஞ்சி கேட்டு முக்கியமான விடயம் என்று கூறி வாங்கியிருந்தாள்.

இப்போது தன்னால் அவர் பேச்சு வாங்குகிறாரே என்று எண்ணி அவனை நோக்க,

ராமநாதன், “சார் அந்த பொண்ணு ரொம்ப ரெக்வெஸ்ட் பண்ணி கேட்டுச்சு அதான் சார்” என்று இழுக்க,

“ஹியர் ஆஃபர் எல்லா லீவ் வெயிலையும் எனக்கு அனுப்ப சொல்லுங்க நான் அப்ரூவல் பண்ணிக்குவேன்” என்று மேலும் சிறிது வைதுவிட்டு அணைப்பை துணிடித்தவனுக்கு மட்டுமே தெரியும் இத்தனை நேரம் மேகாவை பேசியதற்கு தான் ராமநாதன் இத்தனை வாங்கி கட்டி கொண்டான் என்று.

அவன் பேசிய பேச்சுக்களுக்கு வேறு யாராக இருந்தாலும் விடுமுறை வேண்டாம் என்று வெளியேறி இருப்பார்கள் ஆனால் மேகா மட்டும் நகராது அங்கேய நின்றிருந்தாள்.

“இப்போ எதுக்கு உனக்கு வீக் ஆஃப் மேகா” என்றவன் ஒருமைக்கு தாவ,

“அது எங்க ஊர் கோவில் திருவிழா இன்னைக்கு அதுக்கு போகணும்” என்று மொழிய,

அவளை உருத்து விழித்தவன்,

“உனக்கு பொய் சொல்ல வரலை மேகா” என்க,

அதில் உள்ளுக்குள் அதிர்ந்தவள்,

“பொய்யெல்லாம் இல்லை
” என்று மெது குரலில் கூற,

அவன் அமைதியாக அவளை கண்டான்.

அந்த பார்வையில் உள்ளுக்குள் குளிரெடுக்க,

“இன்னைக்கு என்னை பொண்ணு பாக்க வராங்க” என்று தயக்கத்துடன் கூறியவள் தரையை பார்த்திருந்தாள்.

“என்னை விட்டு வேறொருத்தரை உன்னால கல்யாணம் பண்ணிக்க முடியுமா மேகா?” என்றவனது குரலில் விழுக்கென்று நிமிர்ந்து அவனை கண்டவளது விழிகள் நிறைந்திருந்தது…












 
Active member
Messages
346
Reaction score
233
Points
43
Cutan epudi megha oda love ah find out pannan athu mattum illa ma ivan ah partha rombha varusham ah megha ah va love panrathu pola than theriyuthu
 
Well-known member
Messages
859
Reaction score
630
Points
93
Cuten um megha va love pannittu thaan irukkan polaye, superuuuuuu

Eppo la irunthu nu theriyalaye 🙄 🙄 🙄 🙄 🙄

Aana megha love panrathu epdi therinjirukkum ivanukku
 
Top