• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

மேகம் 14

Administrator
Staff member
Messages
464
Reaction score
794
Points
93
மேகம் 14:

ஒருவரிடமே கெஞ்சி

கொஞ்சி மண்டியிட்டு
நேசத்தை கொண்டாடி
தீர்த்த பின் நீர்த்து போகும்
அளவு இந்த வாழ்வு

மிகவும் சிறியது

“ஹாப்பி பர்த்டே மேகா”என்ற கவியின் குரல் ஆர்ப்பாட்டமாய் வர,

“தாங்க்ஸ் டி” என்ற மேகாவின் குரல் அமைதியாக வந்தது.

“ட்ரெஸ் நல்லா இருக்கே?” என்று கவி வினவ,

காணொளி அழைப்பில் இருந்தவள் குனிந்து ஒருமுறை தன் உடையை பார்த்துவிட்டு,

“அம்மாவும் அப்பாவும் சர்ப்ரைஸா வாங்கி கொடுத்தாங்க” என்க,

இதழில் மெலிதான புன்னகை மிளிர்ந்தது.

“பார்ரா சர்ப்ரைஸா? இருக்கட்டும்” என்றவள்,

“எனக்கு எங்க ட்ரீட்?” என்று வினவ,

“வீட்டுக்கு வா தர்றேன்”

“ஹ்ம்ம் வர்றேன் டி. இங்க ரொம்ப பிஸி நான். சண்டே கூட விருந்துக்கு போய்ட்டு இருக்கோம்” என்று மொழிந்தாள் காவ்யா.

“ஹ்ம்ம் ப்ரீயா இருக்கும் போது வா” என்று மேகா கூற,

கவி தலையசைத்த கணம்,

“ஹாய் மேகா” என்று சிரிப்புடன் திரையில் தோன்றினான் சூர்யா.

“ஹாய் சூர்யா எப்படி இருக்கிங்க” என்று மேகாவும் மென்னகையுடன் வினவ,

“நல்லா இருக்கேன். உன் ப்ரெண்ட் என்னை ரொம்ப நல்லா பாத்துக்குறா” என்று சிரித்தவன்,

“விஷ்ஷிங் யூ அ ஹாப்பியஸ்ட் பர்த்டே” என்று வாழ்த்த,

“தாங்க்ஸ் சூர்யா” என்று பதில் அளித்தவள் சிறிது நேரம் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தவள் கண்ணாடியில் ஒரு முறை தன்னை கண்டாள்.

வெங்காய தாள் நிறத்தில் வேலைபாடு அணிந்த சுடிதார் அணிந்து இருந்தவளது கழுத்தில் மெல்லிய சங்கிலி காதில் சிறிய ஜிமிக்கி அசைந்தாடியது.

அவள் வழக்கமாக அணியும் எளிமையான உடையை விட சற்று அதிகமாக தான் இருந்தது.

தனது கைப்பையை எடுத்து கொண்டு வெளியே வந்தவள் நேராக பூஜையறை முன்பு நின்று விழிகளை மூடினாள்.

மனது நிர்மலாக இருந்தது. எதுவும் பெரிதாக வேண்ட தோன்றவில்லை.

சில நிமிடங்கள் கழித்து வெளியே வர,

“ஹாப்பி பர்த்டே மேகா” என்ற தந்தையின் பாசமான குரல் கேட்க,

“தாங்க்ஸ் பா” என்றவள் அவரது கைகளை பிடித்து கொண்டாள்.

“இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மேகா” என்றபடி வந்த தமயந்தியின் கையில் கேசரி இருந்தது.

“தாங்க்ஸ் மா” என்றவள் இருவரது காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்க,

மனம் நிறைந்து வாழ்த்திய இருவரும் இனிப்பை ஊட்டி விட்டனர்.

மகளின் பிறந்த நாளிற்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் வயது கூடி கொண்டு செல்கிறது ஒற்றை பிள்ளைக்கு இன்னும் திருமணம் செய்து வைக்க இயலவில்லையே என்று மனதினோரம் ஒரு வருத்தம் இழையோடி கொண்டு தான் இருந்தது.

அதனை அவர்கள் கூறவில்லை எனினும் மேகாவிற்கு புரிந்தது.

அமைதியாக உண்டவள் இருவரிடமும் கூறிவிட்டு அலுவலகம் புறப்பட்டாள்.

வாகனத்தை அதன் இருப்பிடத்தில் நிறுத்தியவள் அலுவலகத்தினுள் நுழைய ஆங்காங்கே ஒரு சிலர் தென்பட்டனர்.

தன்னுடைய கணினியின் முன் அமர்ந்து தன்னுடைய பணியை பார்க்க துவங்கி இருந்தாள்.

அவள் குழுவினுடைய பிராஜெக்ட் இந்த வார்த்துடன் முடிவடைகிறது. அதற்கான இறுதி கட்ட வேலையை தான் பார்த்து கொண்டிருந்தாள்.

நேரம் செல்ல செல்ல ஒவ்வொராக வர துவங்கினர்.

அதனோடு சேர்ந்து அவளுக்கு பிறந்தநாள் வாழ்த்தும் வந்தது.

எல்லோருக்கும் புன்னகையுடன் நன்றியை நவிழ்ந்தபடி பணியை பார்த்து கொண்டிருந்தவளுக்கு இதயத்தின் ஓரம் எதையோ எதிர்ப்பார்த்தது.

எதையோ என்ன சைத்தன்யாவை தான் அவனுடைய வாழ்த்தை தான் எதிர்பார்த்தது.

‘இதென்ன இப்படி ஒரு எண்ணம்? இத்தனை நாள் அவன் என்ன உனக்கு வாழ்த்து சொல்லி கொண்டா இருந்தான்?’ என்று மனசாட்சி வினா தொடுக்க,

பதில் இல்லை என்று தான் வந்தது.

‘இல்லை தானே பிறகென்ன உன் வேலையை பார். அவர் வந்து வாழ்த்து கூறினால் மட்டும் என்ன நிகழ்ந்துவிட போகிறது. எதுவும் மாறாது வீண் கற்பனையை வளர்க்காமல் பணியை கவனி” என்று மனசாட்சி அதட்டியது.

கைகள் அதன் வேலையை செய்து கொண்டிருந்தாலும் உள்ளத்தின் ஓரம் ஒரு பேரிரைச்சல் அவளை பாடாய்படுத்தி கொண்டிருந்தது.

என்னவோ அவனுடைய வாழ்த்து இல்லாமல் இந்த நாள் முடிவடையாது என்று தான் அவளுக்கு தோன்றியது.

இத்தனை நாள் வாழ்த்து கூறினாரா இல்லையா? என்பது பெரிதில்லை.

கண்முன்னே நடமாடும் ஒருவனை எப்படி இந்த மனதால் புறந்தள்ள முடியும்.

அதுவும் இனி இவன் தான் என்று நேசித்துவிட்ட ஒருவரிடமிருந்து மனது வாழ்த்தை எதிர்பாராது எப்படி இருக்கும்.

அத்தனைக்கும் பிறகும் மனது இந்த நேசத்தை கடந்துவர முயற்சிக்காதது பெரிதான ஆச்சர்யம் இல்லை.

மணி பதினொன்றை நெருங்கும் சமயம் அவன் வந்திருப்பானா? போய் பார்ப்போமா? என்று உள்ளே ஒன்று பரபரத்தது.

சென்று பார்த்து? என்ன கூறுவது எனக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறுங்கள் என்றா கேட்க முடியும். அவர் என்னை பற்றி என்ன நினைப்பார் என்று சிந்தை பிறந்தது.

நான் கூறாது அவருக்கு எப்படி தெரியும்? அதுதான் புதிய உடை அணிந்து வந்திருக்கிறேனே?

சரிதான் உன்னுடைய உடையையும் உன்னையும் கவனிப்பது தான் அவருக்கு வேலையா? சும்மா கண்டதையும் நினைக்காமல் இரு என்று மனசாட்சி மீண்டும் அதட்ட சோர்ந்து போயிருந்தாள்.

மதிய நேரமும் வந்து விட்டிருந்தது. சுரத்தையின்றி உண்டுவிட்டு வந்தவள் மீண்டும் கணினியில் புதைந்து கொண்டாள்.

இடையில் ப்ராஜெக்ட் மேனேஜரிடமிருந்து அழைப்பு வர எடுத்து பேசியவள் வருவதாக கூறி எழுந்து சென்றாள்.

அனுமதி வாங்க கதவை தட்டும் முன் செவியில் விழுந்த செய்தியில் அப்படியே நின்றாள்.

“ஆமா இன்னைக்கு எம்.டி சார் ஆபிஸ் வரலை. நான் டேட் கேட்டுட்டு சொல்றேன்” என்ற வரிகளினால் அவளுக்கு ஏதோ ஒன்று சொல்லாமல் கொள்ளாமல் மடிந்து போனது.

‘ஓ இன்று அவர் அலுவலகத்திற்கே வரவில்லையா? வராத ஒருவரிடமிருந்து வாழ்த்தை பெறுவதற்கு தான் இந்த மனது இத்தனை போட்டு படுத்தியாதா?’ என்று வினா பிறக்க,

இதழ்களில் ஒரு விரக்தி புன்னகை பிறந்தது.

அவரிடம் அனுமதி பெற்று பேசிவிட்டு வந்து தனது இருக்கையில் அமர்ந்தவளுக்கு எதுவுமே செய்ய தோன்றவில்லை.

எல்லோரும் வந்து செல்லும் வழியில் வந்து சென்றால் கூட அவர் வந்து செல்லுவது தெரிந்திருக்கும்.

அவனுக்கென்று தனியாக ஒரு வழி இருக்க இவளுக்கு தெரியவில்லை.

‘ப்ச் இப்படி எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து போறது தான் உனக்கு பொழப்பு மேகா. அவர் என்ன உன்னை போலவா? அவருக்கு எத்தனை நிறுவனங்கள் இருக்கிறது எவ்வளவு பொறுப்பு இருக்கிறது அதனை எல்லாம் பார்க்காது உன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் கூற வருவாரா என்ன?’ என்று எண்ணம் விழிகள் லேசாக பனித்தது.

‘ப்ச் மேகா எப்போதிருந்து இப்படி ஆனாய் அவரிடம் எதிர்ப்பார்க்க உனக்கு என்ன உரிமை இருக்கிறது? உன்னுடைய எல்லையில் இருப்பது தான் உனக்கு நல்லது’ என்று ஒரு மனம் அதட்ட கனத்த மனதுடன் தான் வேலையை கவனித்தாள்.

என்னவோ அலுவகத்தில் இருக்கவே பிடிக்கவில்லை அவளுக்கு எப்போதடா கிளம்புவோம் என்று தான் அமர்ந்திருந்தாள்.

அலுவலக நேரம் முடிந்ததும் முதல் ஆளாக எழுந்து கிளம்பிவிட்டாள்.

வாகனத்தை எடுத்தவளுக்கு வீட்டிற்கு செல்லவும் மனதில்லை.

போகும் வழியில் ஒரு கோவில் இருக்க அங்கு சென்று அமர்ந்து கொண்டாள்.

பட்டு புடவையில் சர்வ அலங்காரத்துடன் அமைதியாக பக்தர்களுக்கு காட்சி தரும் அம்மனை கண்டதும் மனதிற்கு சிறிது அமைதி பிறந்தது.

எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தாளோ தெரியவில்லை.

“ஏழு மணியாகிடுச்சு நடையை சாத்தணும்” என்று குருக்கள் கூறியதும் தான் அவளுக்கு நேரமாகிவிட்டது தெரிந்தது.

எழுந்து மீண்டும் ஒரு முறை அம்மனை விழிகளுக்குள் நிரப்பியவள் வாகனத்தை உயிர்ப்பித்து வீட்டை நோக்கி சென்றாள்.

வரும் வழியில் திடீரென வாகனம் நின்றுவிட்டது.

எரிபொருள் தீர்ந்துவிட்டதா? என்று பார்க்க அது நிறையவே இருந்தது.

‘ப்ச் இருக்க பிரச்சனைல இது வேறயா?’ என்று எண்ணியவள் மீண்டும் மீண்டும் முயற்ச்சிக்க வண்டி இயங்கவில்லை.

வானம் வேறு இருட்ட‌ துவங்கி இருந்தது.

‘என்ன செய்வது ஆட்டோவில் போவது என்றாலும் வண்டியை எங்கே நிறுத்துவது?’ என்று தோன்றியது.

சரி தந்தைக்கு அழைத்து வர கூறுவோம் என்று எண்ணியவள் அலைபேசியை எடுத்த கணம்.

அவளுக்கு வெகு அருகில் வந்து நின்றது ஒரு மகிழுந்து.

அதில் திடுக்கிட்டவள் இரண்டி பின்னால் சென்றபடி நிமிர்ந்து பார்க்க,

“மேகா” என்றபடி சாளரத்தின் கண்ணாடியை இறக்கினான் சைத்தன்யா.

ஒரு நொடி இவளுக்கு ஒன்றும் புரியவில்லை. காலையில் இருந்து யாரை மனமெங்கும் ஆழலுடன் எதிர்பார்த்தாளோ அவனே வந்து இங்கு நிற்க சடுதியில் எதுவும் ஓடவில்லை.

மனதின் அறையெங்கும் மழைச்சாரல் வீச அப்படியே நின்றுவிட்டாள்.

“மேகா” என்றவனது அழுத்தமான அழைப்பில் சுயநினைவை அடைந்தவள்,

“ஹான்” என்று விழித்தாள்.

“இந்த டைம்ல இங்க என்ன பண்ற?” என்று சைத்து வினவ,

“அது கோவிலுக்கு வந்தேன். சாமி கும்பிட்டு கிளம்பும் போது வண்டி ப்ரேக் டவுன் ஆகி நின்னுடுச்சு. நிறைய டைம் ட்ரை பண்ணிட்டேன் பட் ஸ்டார்ட் ஆகலை” என்று நிறுத்திவிட்டு அவன் முகம் காண,

“மெக்கானிக் யாரையாவது கூப்பிட வேண்டியது தான?”

“எனக்கு யாரையும் தெரியாது. அப்பாதான் இதெல்லாம் பார்ப்பாங்க‌ அதான் அவருக்கு கால் பண்ண மொபைல் எடுத்தேன்”

“ஓ…” என்றவன் அலைபேசியை எடுத்து யாருக்கோ அழைப்பை விடுத்தான்.

அடுத்த ஐந்து நிமிடத்தில் அங்கு ஒருவன் வந்து நின்றான்.

“சொல்லுங்க சார்” என்று வர,

“இந்த ஸ்கூட்டி ஸ்டார்ட் ஆகலை என்னன்னு பாருங்க” என்று சைத்து மொழிந்தான்.

வந்தவன் ஐந்து நிமிடம் வண்டியில் ஏதோ செய்துவிட்டு வந்து,

“சார் இன்ஜின்ல தான் பிராப்ளம் வண்டி ரெடியாக ரெண்டு நாள் ஆகும்” என்றுவிட,

‘ரெண்டு நாளா? அதுவரைக்கும் என்ன பண்றது?’ என்று மேகா உள்ளுக்குள் எண்ண,

“ஓகே எடுத்துட்டு போங்க. ஆனால் நாளைக்கு ரெடி பண்ணி கொடுங்க” என்றவன் தனது பர்ஸில் இருந்து ஐநூறு ரூபாய் தாள்களை எடுத்து தர,

“சரிங்க சார்” என்றவன் உடன் வந்தவனுடன் சேர்ந்து வாகனத்தை எடுத்து கொண்டு சென்றான்.

அங்கு நடந்தவற்றை கவனித்து கொண்டிருந்த மேகா தான் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் பார்த்து கொண்டிருந்தாள்.

சைத்தன்யா, “மேகா கெட் இன்” என்க,

“ஹான்” என்றவள் விழிக்க,

“உன்னை ஏற சொன்னேன் மேகா” என்று மீண்டும் அழுத்தி கூற,

“உங்களுக்கு எதுக்கு தான் சிரமம். நான் ஆட்டோவுல போய்க்கிறேன்” என்று மறுக்க,

“எனக்கு எந்த சிரமமும் இல்லை. நான் போற வழியில தான் உன்னோடு ஏரியா இருக்கு ட்ராப் பண்ணிட்டு போறேன்” என்று மீண்டும் அழைக்க,

அவள் மறுத்து பேசும் முன் தந்தையிடமிருந்து அழைப்பு வந்தது.

தான் வர தாமதமாகிவிட்டதால் தான் அழைக்கிறார் என்று புரிந்தவள் அழைப்பை ஏற்று காதில் பொறுத்த,

“மேகா எங்கடா இருக்க? இன்னும் வீட்டுக்கு வரலை?” என்று வினவிட,

“வந்துட்டு இருக்கேன் பா.‌ கொஞ்ச நேரத்தில வந்திடுவேன்” என்று மொழிந்து அழைப்பை துண்டித்தவள் கதவை திறந்து வைத்து கொண்டிருப்பவனை கண்டு ஏதும் கூறாது ஏறி கொண்டாள்.

சீரான வேகத்தில் வாகனம் சென்று கொண்டிருந்தது. ஆனால் மேகாவின் இதயம் தான் சீரற்று துடித்து கொண்டிருந்தது.

காரணம் அருகில் இருப்பவனை தவிர வேறென்ன இருந்துவிட முடியும்.

முதல் முறை சைத்தன்யாவுடன் பயணம் அதுவும் அவனருகிலே அமர்ந்து கொண்டு.

அந்த கணம் அவன் திருமணம்தான் ஆனவன் அவனுக்கு குழந்தைகள் உள்ளது என்று யாவும் மறந்து போனது.

ஆழ் மனதின் ஏக்கங்கள் ஏதோ ஒரு புள்ளியில் நிறைவேறி கொண்டிருக்க மனதில் சொல்ல முடியாத உவகை.

இன்னும் அவனிடமிருந்து வாழ்த்து வராதது மட்டும் தான் குறையாக இருந்தது.

இந்த நாளின் இறுதி இத்தனை மகிழ்வை கொடுத்திடும் என்று அவள் கிஞ்சிற்றும் எண்ணியிருக்கவில்லை.

தானே அவனிடம் தன்னுடைய பிறந்தநாள் பற்றி கூறி வாழத்தை வாங்கிவிடுவோமா? என்று கூற யோசனை வர தனது சிறுபிள்ளை தனத்தில் சிறு புன்னகை கூட முகிழ்ந்தது.

அவளுடைய சிந்தையை கலைக்கும் விதமாக,

“மேகா” என்றவனது குரல் ஒலிக்க,

“சார்” என்றபடி திரும்பி பார்த்தாள்.

“இன்னைக்கு உனக்கு பர்த்டே வா?” என்று கேள்வி எழுப்ப,

“ஆ…ஆமா சார்” என்று பதில் அளித்தவளுக்கு இவருக்கு எப்படி தெரிந்தது என்று கேள்வி ஜனித்தது.

“எத்தனாவது பர்த்டே” என்று கேட்டிட,

இதை எதிர்பாராது திகைத்து விழித்தவள்,

“ட்வென்ட்டி பைவ்” என்றாள்.

“ஓ…” என்றவன் வாகனத்தை இயக்கியபடியே,

“விஷ்ஷிங் யூ அ ஹாப்பி பர்த்டே மேக மொழியாள்” என்றுவிட,

“தாங்க் யூ சார்” என்றவளுக்கு தான் இனிப்பை கண்ட குழந்தையின் குதூகலம்.

“மேகா பேக் சீட்ல ஒரு கவர் இருக்கும் அதை எடு” என்க,

மனமெங்கும் தித்திப்புடன் இருந்தவள் அதனை எடுத்து அவனிடம் கொடுக்க,

“அது உனக்கு தான் பர்த்டே கிஃப்ட்” என்றுவிட,

இங்கு மேகாவிற்கு அதிர்ச்சியில் நெஞ்சு வலி வராதது தான் குறை.

“எனக்கா?” என்றவளுக்கு நம்ப இயலவில்லை. சைத்தன்யா அதுவும் தன்னுடைய பிறந்த நாளுக்கு பரிசு வாங்கி கொடுத்திருக்கிறார் என்பது கிஞ்சிற்றும் நம்ப இயலவில்லை.

ஒரு நொடி இது கனவா தன்னுடைய கற்பனையில் தான் இத்தனையும் நிகழ்கிறதா என்று தோன்றியது

அவனுடைய வாழ்த்திலே வானத்தில் பறந்தவளுக்கு பரிசை கண்டதும் பேச்சு எழவில்லை.

“உனக்கு தான். பிரிச்சு பாரு” என்று சைத்தன்யா கூறியதும்,

ஆர்வமாக அதனை பிரிக்க ஏதோ உடை வைத்திருக்கும் பெட்டி போல இருந்தது.

‘ட்ரெஸ் எதுவும் வாங்கியிருக்காரா?’ என்று நினைத்தபடி பிரித்து பார்க்க அதில் அழகிய பட்டு புடவை இருந்தது.

அதனை கண்டதும் ஒரு கணம் மின்னிய விழிகள் சடுதியில் ஒளியிழந்து போனது.

அவளது முக மாற்றத்தை கண்டவன்,

“என்ன மேகா சாரி பிடிக்கலையா?” என்றுவிட,

சடுதியில் முக பாவனையை மாற்றியவள்,

“ஆங் ரொம்ப பிடிச்சிருக்கு சார்” என்று பதில் அளித்தாள்.

அவளது பதிலை நம்பாதவனுக்கு மேகாவின் முக மாற்றம் யோசனையை தந்தது.

இங்கு மேகா தான் சற்று முன் இருந்த அத்தனை மகிழ்ச்சி ஆர்வம் எல்லாம் வடிந்து உடைந்திருந்தாள்.

ஏனோ விழிகள் கலங்கியது அதனை மிகவும் சிரமப்பட்டு மறைக்க முயற்சித்து கொண்டிருந்தாள்.

சில நிமிடங்களில் மேகாவின் வீடு வர கதவை திறந்து இறங்கியவள் திரும்பி,

“சார் நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டிங்களே” என்று வினவிட,

“என்ன?” என்றவனது முகத்திலும் முன்பிருந்த இதம் தொலைந்திருந்தது.

“இந்த சேரி அன்னைக்கு நீங்க உங்க வைஃப்க்கு தானே வாங்குனிங்க? அதை ஏன் எனக்கு கிஃப்டா கொடுத்திங்க? உங்க வைஃப்க்கு இந்த சாரி பிடிக்கலையா? அதான் என்கிட்ட கொடுத்துட்டிங்களா?” என்று ஒருவாறு வினவிட,

அடுத்த விநாடியே, “எஸ் யூ ஆர் ரைட் மேகா.
என் வைஃப்க்கு இந்த சேரி சுத்தமா பிடிக்கலை. அதான் வேஸ்ட்டா போறது உனக்கு கொடுக்கலாம்னு கிஃப்ட் பண்ணிட்டேன்” என்றவன் அவளது பதிலை எதிர்பாராது வாகனத்தை எடுத்து கொண்டு சென்றிருந்தான்.

அவனது பதிலை கேட்ட மேகா தான் அதிர்ந்து போய் நின்றிருந்தாள். இருந்தும் விரல்கள் அந்த புடவையை இறுக்கி பிடித்திருந்தது…




 
Well-known member
Messages
859
Reaction score
630
Points
93
adeiiiii shaithu, megha kooda serthu engalayum kulappuriye da
Enna thaan ninaikkiraan nu puriyave maattenguthe 🙄 🙄 🙄 🙄 🙄 🙄 🙄 🙄 🙄
 
Active member
Messages
346
Reaction score
233
Points
43
Adei chaidhu yen da yen aval la mind voice la egapattathu ah nenachi unna vittu othungi iruku ah parpa ah ippo athuku ne thoobam potu vandhu iruka ah
Wait wait ivan epudi correct ah megha ah meet pannam athu accident ah illa well planned ah ennaku innoru doubt um iruku ivanga age keta appuram than ah indha saree kuduthan oru vela ivan megha ku propose pannano ava reaction saree ah partha appuram.nu maravo ivan um avan face la iruka ah kindness poi irundhuchi and unga wife ku pidikkala ah ya keta appuram than ipadi pesitu ponan oru vela iva purinchikala na ra kobathula pesurano enna nu theriyala yae ore suspense ah iruku pa
 
Top