• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

மேகம் 13

Administrator
Staff member
Messages
464
Reaction score
794
Points
93
மேகம் 13

அனைத்திற்கும் பிறகான
நேசம் என்பது
பெரிதொன்றுமில்லை
நீ என் பார்வையில்
விழும் தூரத்தில்
வாழ்ந்துவிட்டு
போவது தான்…

“மேகா அந்த ரோஜாப்பூ தட்டை எடுத்துட்டு போய் ரிஷப்ஷன்ல நிக்கிற கனிஷ்காக்கிட்ட கொடும்மா. பன்னீர் சந்தனம் எல்லாம் இருக்கான்னு பாத்துக்கம்மா” என்று நாகலெட்சுமி கூற,

“சரிங்கத்தை” என்றவள் ரோஜாப்பூ தட்டுடன் நகர போக,

“அப்புறம் கல்கண்டு ரோஜாப்பூ எல்லாம் தீர்ந்திடுச்சுனா ரூம்ல இருக்கு எடுத்துக்க சொல்லு” என்றிட,

“ஹ்ம்ம் சொல்றேன்த்தை” என்றவள் தான் கட்டியிருந்த சேலையை ஒரு கையில் தூக்கிக் கொண்டு மற்றொரு கையில் ரோஜாப்பூவை எடுத்து வந்தவள்,

“கனி இந்தா இதை வர்றவங்ககிட்ட கொடு. தீர்ந்திடுச்சுனா ரூம்ல இருக்கு எடுத்துக்கலாம்” என்றாள்.

கனி, “சரிக்கா” என்றதும் திரும்பிய மேகா வந்து கொண்டிருந்தவர்களை கண்டு புன்னகையை கொடுத்துவிட்டு மற்ற வேலைகளை கவனிக்க துவங்கினாள்.

வெளியே பெயர் பலகையில் காவ்யா வெட்ஸ் சூர்யா என்று இருவரது பெயரும் பூக்களால் அலங்கரிப்பட்டு கண்ணை கவர்ந்தது.

சென்னையில் மையப்பகுதியில் ஓரளவு வசதிபடைத்தவர்கள் வைபோகம் நடத்தும் மண்டபம் அது.

காலை எட்டு மணியை நெருங்கி கொண்டிருக்க சொந்த பந்தங்கள் ஓரளவு வர துவங்கினர்.

அதோ இதோவென நாட்கள் ஓட காவ்யாவின் திருமண நாளும் வந்துவிட்டிருந்தது.

தமயந்தி, “மேகா ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்காத” என்று அக்கறையுடன் மொழிய,

“சின்ன சின்ன வொர்க்தான் பாத்திட்டு இருக்கேன். நீ என்னையே பாக்காம அத்தைக் கூட இருந்து வேலையை பாரும்மா” என்று புன்னகைத்தவள் புரோகிதருக்கு தேவையானதை எடுத்து வைக்க உதவ சென்றாள்.

நேரம் செல்ல செல்ல மண்டபத்தில் ஓரளவு கூட்டம் நிரம்பியிருக்க பேச்சு சத்தமும் அதனை மீறி மங்கள வாத்தியங்களும் ஒலித்து கொண்டிருந்தது.

காவ்யா ஒரே பெண் என்பதால் செந்தில்நாதனும் நாகலெட்சுமியும் தங்களது சேமிப்பு முழுவதையும் செலவு செய்து திருமணத்தை வெகு விமர்சையாக ஏற்பாடு செய்திருந்தனர்.

சூர்யாவின் வீட்டினரும் மேல்தட்டு வர்க்கம் என்பதால் திருமணம் சற்று ஆடம்பரத்துடன் தான் நடந்து கொண்டிருந்தது.

நாகலெட்சுமி நேரமாகிவிட்டதை உணர்ந்து,

“மேகா கவி ரெடியாகிட்டாளான்னு பார்த்துட்டு வா கொஞ்ச நேரத்தில பொண்ணை அழைச்சிட்டு வர சொல்லிடுவாங்க” என்றிட,

“ஹ்ம்ம் இதோ பாக்குறேன்த்தை” என்றவள் மெதுவாக படியேறி மணமகள் அறைக்கு சென்றாள்.

அங்கு அழகுகலை செய்யும் பெண் காவ்யாவை தயார் செய்து கொண்டிருக்க அவளை சுற்றி காவ்யாவின் சகோதரிகள் வம்பிழுத்தபடி இருந்தனர்.

காவ்யாவிற்கு சித்தப்பா பெரியப்பா மக்கள் சற்று அதிகம். அதனாலயே அவர்களை விட்டுவிட்டு மேகா கீழிருந்த பணியை கவனிக்க சென்றாள்.

மேகாவை கண்டதும், “வாடி இப்போ தான் உனக்கு வர டைம் இருந்துச்சா.‌ என்கூடவே தான இருக்க சொன்னேன்” என்று உரிமையாய் கடிந்து கொள்ள,

“கீழ அத்தைக்கூட வேலையா இருந்தேன்” என்றவள்,

செங்காந்தள் நிற பட்டில் அதற்கேற்ற அலங்காரத்துடன் நேசம் கைக்கூட போகும் பூரிப்பில் முகம் விகசிக்க நின்றிருந்த காவ்யை கண்டு,

“ரொம்ப அழகா இருக்கடி” என்று புன்னகைக்க,

“நிஜமா?” என்று நம்பாமல் கண்ணை சுருக்கினாள் காவ்யா.

“நிஜமாதான் இப்போ மட்டும் சூர்யா பாத்தா உன்னை இப்போவே தூக்கிட்டு போய்டுவாரு” என்று மென்னகைக்க,

“அதேதான் மேகா நாங்களும் சொன்னோம்” என்று கவியின் சகோதரி சிரிப்புடன் கூற,

“ஹேய் சும்மா இருங்க” என்றவளது முகத்தில் நாணத்தின் சிவப்பு.

“வெட்கத்தை பார்றா நம்ம கவிக்கு” என்று ஒரு பெண் கூற,

அங்கே கொல்லென்ற சிரிப்பொலி எழுந்தது.

“பேசாம இருங்களேன்டி நானே நெர்வெஸ்ஸா இருக்கேன்” என்றவளது கூற்றிற்கு,

“எதுக்கு நெர்வெஸ்?” என்று வினா எழுந்தது.

“பர்ஸ்ட் டைம்ல அதான்” என்று கவி இழுக்க,

“ஓஹோ நாங்க கூட பர்ஸ்ட் நைட்ட நினைச்சு நெர்வெஸ் ஆகுறியோன்னு நினைச்சேன்” என்று அக்கா முறையில் இருந்த மற்றொருவள் கூறிவிட,

“ஹோ…” என்று இரைச்சல் அதிகமானது.

மேகா, ‘என்ன இது இப்படி பேசுகிறார்கள்?’ என்று அதிர்ந்து பார்த்தாள்.

ஆனால் அவர்கள் கிராமத்தை சார்ந்தவர்கள் ஆதலால் அவர்களுக்கு இது சாதாரணமாக தான் இருந்தது.

“போதும் தாயே நிறுத்துங்க” என்ற காவ்யா மொத்தமாக சிவந்திருந்த முகத்தை மறைக்க,

அவர்கள் மேலும் ஏதோ கூறும் முன்,

“மேகா கவி ரெடியாகிட்டாளா? கீழ கூப்பிட்றாங்க” என்றபடி வந்தார் தமயந்தி.

“ஹ்ம்ம் ரெடிதான் மா. அழைச்சிட்டு வரவா?” என்று மேகா வினவ,

உள்ளே வந்து காவ்யாவை கண்ட தமயந்தி,

“ரொம்ப அழகா இருக்க கவி‌. என் கண்ணே பட்டுடும் போல” என்று திருஷ்டி கழிக்க,

கவி நாண புன்னகையை கொடுத்தாள்.

“சரி ரெண்டு நிமிஷத்துல அழைச்சிட்டு வாங்க” என்றவருக்கு தன் மகளை எப்போது இப்படி மணக்கோலத்தில் பார்ப்போம் என்று கவலை அப்பி கொண்டது.

ஆனால் அதனை முகத்தில் காண்பிக்காது சிரித்த முகத்துடன் வலம் வந்தார்.

வாசலில் செந்தில் நாதனுடன் வந்தவர்களை வரவேற்றபடி நின்றிருந்த சேதுபதிக்கும் மகளது வாழ்வை எண்ணி வருத்தம் இருக்கத்தான் செய்தது.

மேகா புன்னகையுடன் காவ்யை அழைத்து வந்து மணவறையில் அமர வைத்துவிட்டு அருகில் நின்று கொண்டாள்.

அவளுக்கு ஏதேனும் தேவைப்பட்டால் தான் தான் செய்ய வேண்டும் என்று பக்கத்திலே இருந்தாள்.

சூர்யா மற்றும் காவ்யாவின் முகத்தில் வெகுநாளைய நேசம் கைக்கூடியதில் அவ்வளவு ஆனந்தம்.

அது அவர்களுடைய முகத்திலே பிரதிபலித்தது. அதனை பார்த்த மேகாவிற்கு முகமெல்லாம் புன்னகையில் மலர்ந்தது.

நேசித்தவர்களுடன் வாழ்வு பிணைக்கப்படுவதற்கு பெரிதான வரம் வாங்கியிருக்க வேண்டும் போல என்று தான் ஒரு கணம் தோன்றியது.

அடுத்த கணமே ஆழ்மனதில் புதைந்து போனவனது முகம் மனக்கண்ணில் மின்னி மறைந்தது.

உடன் அன்று வணிக வளாகத்தில் நடந்த நிகழ்வும் நினைவிற்கு வந்தது.

அதிர்வில் கையிலிருந்த அலைபேசியை நழுவ விட்டிருந்ததை கண்டு காயு,

“என்ன ஆச்சு மேகா?” என்று வர,

அதில் நினைவு திரும்பியவள் பதறி குனிந்து அலைபேசியை எடுத்தாள்.

அலைபேசிக்கு எதுவும் ஆகவில்லை. அழைப்பு இன்னும் வந்து கொண்டு தான் இருந்தது.

“அது அக்கா உங்களுக்கு கால்” என்றவளது குரல் நடுங்கியது.

வாங்கி பார்த்தவள், “என் வீட்டுக்காரரு தான் கூப்பிட்றாரு பேசிட்டு வர்றேன்” என்று சற்று தள்ளி சென்று பேச,

இவள் இன்னும் அதிர்வில் இருந்து மீளவில்லை.

‘காயத்ரியுடன் முகத்தில் புன்னகையுடன் தோளணைத்து குழந்தைகளுடன் நின்றிருந்தது அவளுடைய கணவனா…? அவருடைய முகத்தில் க்யூட்டனது சாயல் இருந்ததே…?’ என்று பலவாறு கேள்விகள் எழுந்தது.

இவர் தான் காயு அக்காவின் கணவன் என்றால் க்யூட்டன் அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையா…? என்று எண்ணம் வர, இதயத்தில் மெலிதான நடுக்கம் பிறந்தது.

அருகில் இருந்த கம்பியை இறுக பற்றி கொண்டவளது மனது படபடவென அடித்து கொண்டது.

அடுத்த நொடியே அந்த புடவையை எடுத்து விட்டு தன்னுடைய மனைவிக்கு என்று கூறினானே என்று நினைவிற்கு வந்தது.

ஆக அவனுக்கு திருமணம் ஆகிவிட்டது யாரோ ஒரு பெண்ணுடன்.

ஏன் அதிலென்ன உனக்கு வருத்தம் நீ அவரை நினைத்து கொண்டு திருமணம் செய்யவில்லை என்பதால் அவரும் திருமணம் செய்ய கூடாதா என்ன?

உனக்கு தான் அவர் மீது விருப்பம் இருந்தது. அவருக்கு நீ கல்லூரியில் படித்த இளைய வகுப்பு மாணவி அவ்வளவு தான்.

அவருடைய அழகிற்கும் அந்தஸ்த்திற்கும் பொருத்தமான நல்ல படித்த பெண்ணாக பார்த்து திருமணம் செய்திருப்பார் என்று தனக்குள் பலவாறு உழன்று கொண்டிருக்க,

“இந்தா மேகா போட்டோ எடு” என்று அலைபேசியை கொடுக்க,

“அக்கா” என்று அவளது கையை பிடித்து விட்டாள்.

“என்ன மேகா?” என்று வினவிட,

“உங்க ஹஸ்பண்ட் சாரோட ஜாடையில இருக்காரே?” என்று வினவினாள்.

“ப்ரதர்ஸ் ரெண்டு பேரும் ஓரே போல தான் இருப்பாங்க” என்று காயு சிரிப்புடன் மொழிய,

“ப்ரதர்ஸா?” என்று மேகா விழிக்க,

“ஆமா” என்க,

“உங்களுக்கும் சைத்தன்யா சாருக்கும் தான மேரேஜ் பண்றதா இருந்தாங்கன்னு சொன்னிங்க” என்றவள் காயு முகம் காண,

“ஆமா ஆனால் ஒரு சில சுட்சுவேஷன்னால ஆதித்யாகூட கல்யாணம் நடந்திடுச்சு. அது ஒரு பெரிய ஸ்டோரி அப்புறம் சொல்றேன். இப்போ போட்டோ எடு” என்றிட,

“ஹான் ஓகேக்கா” என்றவள் புகைப்படத்தை அழகாய் எடுத்து கொடுத்தாள்.

முன்பு போல கரத்தில் நடுக்கம் இல்லை. மாறாக சைத்தன்யாவின் மனைவி யாரென்று தான் கேள்வி எழுந்தது.

திருமணம் எப்போது நடந்தது? எத்தனை குழந்தைகள் ஆணா பெண்ணா? என்று பல்வேறு வினாக்கள் அழியாய் எழுந்தது.

மற்றொரு மனம், ‘அவர் யாரை திருமணம் செய்திருந்தால் உனக்கென்ன அவருடைய குடும்பத்தையும் குழந்தையையும் கண்டு மனதை ரணமாக்கி கொள்ள போகிறாயா?’ என்று கேள்வி எழுப்பியது.

ஆனால் மேகா அதனை எல்லாம் கண்டுகொள்ளவில்லை. அவனை திருமணம் செய்திருக்கும் அந்த அதிர்ஷ்டசாலி யாரென்று தெரிந்து கொள்ள வேண்டும். அவனுடைய அழகான வாழ்வின் சாட்சியாய் அவனை உரித்து வைத்திருக்கும் குழந்தைகளை தூக்கி உச்சி முகர்ந்திட வேண்டும் உள்ளத்தில் அவா எழுந்தது.

நீயே போய் பட்டு திருந்திக் கொள் என்று மனது அவளது போக்கில் விட்டுவிட்டது.

அன்றிலிருந்து இன்றுவரை சைத்தன்யாவின் மனைவி யாரென்று தெரிந்து கொள்ளத்தான் முயற்சித்து கொண்டிருக்கிறாள்.

ஆனால் பதில் தான் கிடைத்தபாடில்லை‌. காயத்ரியிடம் நேரில் கேட்கவும் என்னவோ போல இருந்தது. அவள் போய் க்யூட்டனிடம் கூறிவிட்டால் தான் என்னவென அவரது முகத்தில் விழிப்பது.

என் குடும்பத்தை பற்றி நீயெதற்கு தெரிந்து கொள்ள நினைக்கிறாய்? என்று கேட்டுவிட்டால்? அப்படி நேரடியாக கேட்க வாய்ப்பில்லை தான் இருந்தும் நூற்றில் ஒரு பங்காக கேட்டுவிட்டால் என்று செய்வதென்று தான் அமைதியாக இருக்கிறாள்.

சிந்தையில் இருந்தவளை, “மேகா” என்ற காவ்யாவின் குரல் கலைக்க,

“சொல்லு கவி” என்று மேகா அருகில் வர,

“ரொம்ப ஸ்வெட் ஆகுது. என் கர்சீப் எங்க?” என்று புகை முன்பு அமர்ந்திருந்தவள் கேட்க,

“இதோ என்கிட்ட தான் இருக்கு” என்ற மேகா குனிந்து தானே அலங்காரம் கலையாதவாறு துடைத்துவிட்டு நிமிர,

சற்று நேரத்திற்கு முன்பு வரை அவளது சிந்தையை ஆக்கிரமித்திருந்த நாயகனே வெள்ளை சட்டையும் கருப்பு பாண்ட்டும் அணிந்து தோரணையாக நடந்து வந்து கொண்டிருந்தான்.

ஒரு விநாடி மேகாவால் நம்ப இயலவில்லை. விழிகளை மூடி திறந்து பார்த்த போதும் அவன் தான்.

சைத்தன்யா அமைச்சரின் மகன் தங்களது வீட்டு திருமணத்திலா அவளால் ஒரு கணம் நம்ப இயலவில்லை.

காவ்யா முதலாளி என்ற முறையில் பத்திரிகை வைத்திருந்தாள் தான். ஆனால் சைத்தன்யா வருவான் என்று மேகா கிஞ்சிற்றும் எண்ணியிருக்கவில்லை.

சட்டென்று உள்ளுக்குள் ஒருவித பதட்டம் தொற்றிக் கொண்டது.

காவ்யாவிடம் குனிந்தவள், “ஹேய் எம்.டி சார் வராரு டி” என்றிட,

காவ்யாவும் சிறிது அதிர்ந்து,

“ஆமாடி சார் வந்திருக்காரு. அவர் வருவாருனு நான் எதிர்பார்க்கவே இல்லை” என்றவள்,

“என்னடி அப்படியே நிக்கிற போ போய் அவரை வெல்கம் பண்ணி கவனி. அவருக்கு இங்க உன்னையும் என்னையும் தவிர யாரையும் தெரியாது” என்றிட,

மேகாவிற்கும் அப்போது தான் அது உரைத்தது போல.

“இதோ போறேன்” என்றவள் கட்டியிருந்த புடவையை ஒரு கையால் பிடித்து கொண்டே அவனை நோக்கி விரைந்தாள்.

இன்று வேலை நாள் ஆதலால் மற்றவர்கள் வரவில்லை. மாலை நடக்கும் வரவேற்புக்கு வருவதாக இருந்தது.

பாந்தமான உடையில் நெற்றியில் சந்தன கீற்றோடு கம்பீரமாக வந்து நிற்பவனை ரசித்து தொலைக்க மனது உந்தித்தள்ள அதனை ஒதுக்கி தள்ளியவளுக்கு படபடப்பு கூடியது.

அவனருகே சென்றுவிட்டவள்,

“வா… வாங்க சார் வாங்க” என்றவள் வரேவேற்க,

ஒரு தலை அசைப்பை பதிலாக கொடுத்தான்.

அவன் அமர்வதற்கு மேகா நாற்காலியை தேட இறுதி வரிசையில் மட்டும் தான் காலியாக இருந்தது. அவனை அங்கு அமர வைக்க முடியாதே என்று சிந்தித்தவள் விறுவிறுவென விரைந்து ஒரு நாற்காலியை எடுத்து வந்து முதல் வரிசையில் போட்டு,

“உட்காருங்க சார்” என்று காண்பிக்க,

இத்தனை நேரம் அவளது செய்கையை அவதானித்தவன் ஒரு ஆழ்ந்த பார்வையை அவளிடம் வீசிவிட்டு அமர்ந்து கொண்டான்.

“ஒரு நிமிஷம் வந்திட்றேன் சார்” என்றவள் அவன் தலையசைத்ததும் தந்தையிடம் விரைந்தாள்.

சைத்தன்யா அமைச்சரின் மகன் என்று சில நாட்களுக்கு முன் அறிந்து கொண்ட விடயத்தின் காரணமாக சிறிது பதட்டதம் தான் காவ்யாவிற்கு.

“அப்பா” என்ற மேகாவின் அழைப்பில் திரும்பிய சேதுபதி,

“என்னம்மா?” என்று வினவ,

“அப்பா எங்க எம்.டி வந்து இருக்காரு” என்க,

“அப்படியா? யாரும்மா?” என்று வினவ,

“அதோ ஆவர் தான்”

“ஓ அந்த தம்பியா? நாங்க மாப்பிள்ளையோட ப்ரெண்ட்னு நினைச்சிட்டோம் நீ போ நான் வந்து பேசுறேன்” என்க,

“அப்பா அவரு எங்களுக்கு எம்‌டி மட்டுமில்லை கல்வி துறை அமைச்சர் சதாசிவம் பையனும் கூட கொஞ்சம் கவனிங்க” என்றதும் சேதுபதியிடமும் சிறிது ஆச்சர்யம்.

“மினிஸ்டர் மகன் இவ்வளோ சிம்பிளா வந்திருக்காரா?” என்றிட,

செந்தில்நாதனுக்கும் தங்கள் வீட்டு திருமணத்தில் அமைச்சரின் மகன் வந்திருப்பது மகிழ்ச்சியை தந்தது.

சேதுபதி, “நான் போய் கவனிக்கிறேன்” என்றவர் சைத்தன்யா அருகில் சென்று,

“வாங்க தம்பி நீங்க மாப்பிள்ளையோட ப்ரெண்ட்னு நினைச்சிட்டேன் இப்போ தான் மேகா நீங்க அவங்க எம்‌.டின்னு சொன்னா” என்று வரவேற்க,

பதிலுக்கு எழுந்து நின்ற சைத்தன்யாவும் அவருடைய வரவேற்பை ஏற்று கொள்ள,

‘ஹ்ம்ம் எழுந்து நின்னெல்லாம் மரியாதை கொடுக்குறாரே’ என்று எண்ணி கொண்ட மேகா அவனுக்கு குடிக்க பழச்சாறு எடுத்து வர,

சேதுபதி ஒரு நாற்காலியினை போட்டு அமர்ந்து அவனிடம் பேசி கொண்டிருந்தார்.

‘ஹப்பாடா அப்பா அவருக்கு துணையாக இருக்கிறார்’ என்று ஆசுவாசப் பட்டபடி வந்து பழச்சாறை கொடுத்துவிட்டு வந்தவள் சற்று தள்ளி நின்று கொண்டாள்.

செந்தில் நாதனும் வந்து, “வாங்க தம்பி. நீங்க எங்க வீட்டு விஷேசத்துக்கு வந்திருக்கது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்” என்று பேசிவிட்டு சென்றார்.

சேதுபதி தான் அருகிலே அமர்ந்து சைத்தான்யாவிடம் பேசி கொண்டு இருந்தார்.

சிறிது நேரத்திற்குள்ளே சைத்தன்யா யார் என்பது அங்கே தெரிந்துவிட வரிசையாக ஒவ்வொருவராக வந்து பேச துவங்கினர்.

தந்தையை தெரியும் என்று வந்து பேசினர்.

அது சைத்தன்யாவிற்கு பிடிக்கவில்லை. அவனுக்கு தந்தையின் அரசியலை வைத்து தன்னை அனுகுபவர்கள் மீது பெரிதாக நல்லெண்ணம் இருப்பதில்லை.

சற்று தள்ளி அவனை கவனித்தபடி நின்றிருந்த மேகாவிற்கும் அவனது முக உணர்வுகள் புரிந்ததோ என்னவோ…?

சிறிது நேரத்தில் புரோகிதர் மங்கல நானை எடுத்து தர சூர்யா காவ்யாவின் கழுத்தில் பூட்டி சரி பாதியாக ஏற்று கொண்டான்.

அடுத்தடுத்து சடங்குகள் முடிய கொண்டு வந்த பரிசுகளை கொடுத்து ஒவ்வொருவராக கொடுக்க துவங்க,

சைத்தன்யாவும் நேரத்தை பார்த்துவிட்டு எழுந்து கொண்டான்.

அவனையே கவனித்து கொண்டிருந்த மேகா அருகில் வந்து நிற்க,

“டைம் ஆச்சு கிளம்பணும் மேகா” என்க,

அவன் இவ்வளவு நேரம் இருந்ததே பெரிய விடயம் என்று எண்ணியவள்,

“வாங்க சார் நான் அழைச்சிட்டு போறேன் கிஃப்டை கொடுங்க” என்று கூறி அவனை அழைத்து சென்றாள்.

அவர்களுக்கு முன்பே சிலர் பரிசு கொடுப்பதற்காக நின்றிருக்க இவன் கைக்கடிகாரத்தில் மீண்டும் நேரத்தை கண்டான்.

அதனை பார்த்தவள் அவர்களிடம் கூறிவிட்டு இவனை அழைத்து சென்றாள்.

மேடை ஏறியவன் காவ்யாவிடமும் சூர்யாவிடமும்,

“ஹாப்பி மேரிட் லைஃப்” என்று வாழ்த்திட,

“தாங்க்யூ சார்” என்று புன்னகையுடன் பரிசை பெற்று கொண்டனர்.

பின்னர் புகைப்படம் எடுப்பதற்காக சைத்தன்யா நிற்க, மேகாவிற்கு தானும் அங்கு நிற்பதா இல்லை போகவா என்று குழப்பம்.

காவ்யா இதனை கவனித்துவிட்டு,

“மேகா நீயும் வா வந்து நில்லு” என்றுவிட,

சைத்தன்யாவின் அருகில் நின்று கொள்ள புகைப்படம் அழகாய் பிடிக்கப்பட்டது.

சைத்தன்யா இறங்கியதும் சேதுபதி அருகில் வர,

“நான் போய்ட்டு வர்றேன் சார்” என்று மொழிய,

“அதுக்குள்ளயும் கிளம்புறிங்களா?”

“ஒரு மீட்டிங் இருக்கு சார் அதான்” என்று சைத்தன்யா நிறுத்த,

“சரிங்க தம்பி சாப்பிட்டு போங்க. நம்ம வீட்டு கல்யாணத்துக்கு வந்திட்டு சாப்பிடாம போறீங்களா?” என்றுவிட,

மேகா அவருக்கு நேரமாகிவிட்டது அப்பா வேறு உண்ண சொல்கிறாரே தந்தையிடம் என்ன கூறவது என்று பார்க்க,

“சரிங்க சார் சாப்பிட்டு போறேன்” என்று தலையசைத்துவிட்டான்.

சேதுபதி, “மேகா தம்பியை சாப்பிட அழைச்சிட்டு போய் கூட இருந்து பாத்துக்க” என்க,

“சரிங்கப்பா” என்றவள்

“வாங்க சார்” என்று அழைத்து சென்றாள்.

அப்போது தான் முதல் பந்தி துவங்க இருந்தது.

தனியாக அமருவது போல ஒரு இருக்கையை கண்டறிந்தவள்,

“இங்க உட்கார்ந்துகோங்க சார்” என்றாள்.

“நீயும் என் கூட உட்கார்ந்து சாப்பிடு மேகா” என்ற சைத்தன்யாவின் கட்டளைக்கு,

“நா.. நானா?” என்றவள் விழிக்க,

“ஆமா நீ தான் வா வந்து உட்காரு” என்று மீண்டும் அழுத்தி கூற,

“நான் அப்புறம் சாப்பிட்டுக்கிறேன் சார் இப்போ உங்களுக்கு பரிமாறுறேன்” என்றாள்.

“சர்வ் பண்ண ஆள் இருக்காங்க. எனக்கு தனியா சாப்பிட பிடிக்காது என்கூட ஜாயின்ட் பண்ணிக்கோ” என்று விட,

அதற்கு மேல் மறுக்க இயலாதவள் ஒரு நாற்காலியை எடுத்து போட்டு அமர்ந்தாள்.

உணவு பரிமாறப்பட இங்கு மேகாவால் எதையும் உண்ண இயலவில்லை சைத்தன்யாவின் அருகில் அமர்ந்து இருப்பதே ஒரு வித அவஸ்தையாக இருந்தது.

அவள் எதையும் உண்ணாது வைத்திருப்பதை கண்டு,

“ஏன் எதையும் சாப்பிடாம வச்சிருக்க மேகா?” என்றுவிட,

“அது எனக்கு பசியில்லை சார்” என்றவள் மொழிய,

“பரவாயில்லைனாலும் சாப்பிடு புட் வேஸ்ட் பண்ண கூடாது. இதை சாப்பிட்டு முடிக்கிற இப்போ” என்று அதட்டலிட,

“ஹ்ம்ம்” என்று தலையசைத்தவள் வேறு
வழியின்றி உண்டாள்.

இருவரும் உண்டு கைகழுவி வர சைத்தன்யா அனைவரிடமும் கூறிவிட்டு கிளம்ப, அவனை வழியனுப்பி வைப்பதற்காக மேகா கார் வரை வந்தாள்.

காரில் அவன் ஏறி அமர்ந்ததும் இவள் கூறிவிட்டு கிளம்ப எத்தனிக்க,

“மேகா…” என்றவனது குரல் இவளை தடுத்து நிறுத்தியது.

“ஹான் சொல்லுங்க சார்” என்று அவன் முன் சென்றவள் அவன் அடுத்து கேட்ட வினாவில் அதிர்வை விழித்தாள்.





 
Active member
Messages
346
Reaction score
233
Points
43
Sis heroine ku meghamozhiyal nu per vachathuku shocking rani nu vachi irukalam payapulla eppo parthalum shock aagura thu yae velai ah vachi iruka ah ya
Gayathri chaidhu oda annan pondati ah oh ho cutan ku brother iruku ah indha megha ivolo shock aagurathu ah partha oru vela propose panni tan ah enna
 
Administrator
Staff member
Messages
464
Reaction score
794
Points
93
Sis heroine ku meghamozhiyal nu per vachathuku shocking rani nu vachi irukalam payapulla eppo parthalum shock aagura thu yae velai ah vachi iruka ah ya
Gayathri chaidhu oda annan pondati ah oh ho cutan ku brother iruku ah indha megha ivolo shock aagurathu ah partha oru vela propose panni tan ah enna
Shock koduthute iruntha shock agathan seivanga😌😌😌😂😂
 
Well-known member
Messages
859
Reaction score
630
Points
93
Megha shock aagama iruntha thaan athisayam😜😜😜😜😜😜😜😜😜😜

Apdi enna keattaru cuten🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

Oru vazhiya Gayathri husband cuten illa nu therinjuduchu, superrrrrrrrr superrrrrrrrr
 
Top