• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

மேகம் 12

Administrator
Staff member
Messages
464
Reaction score
794
Points
93
மேகம் 12:

அத்தனைக்கும் பிறகும் உள்ளிருக்கும் ஆன்மாவை பெருமழையென ஆரத்தழுவி கொள்ளும் உயிர்களுக்கு நேசத்தை தவிர வேறென்ன பெரிதாகிவிட போகிறது…


“ரொம்ப க்யூட்டா இருக்காங்க்கா” என்றவள் மொழிய,

“அவங்கப்பா மாதிரியே க்யூட் தான் பட் சேட்டை ரொம்ப அதிகம்” என்று காயு சிரிப்புடன் மொழிய,

மேகாவின் விழிகள் சட்டென்று சைத்தன்யாவின் மீது படிந்து மீண்டது.

மனது ‘ஆமாம் க்யூட் தான் க்யூட்டன் போல’ என்று நினைத்து கொண்டது.

அனிருத், “நான் சேட்டை பண்ண மாட்டேன். ஐ ஆம் அ குட் பாய்” என்று தாயை பார்த்து முறைத்தபடி கூற,

“ஆமா மீ ஆல்சோ குட் கேர்ள்” என்று அக்ஷயாவும் உதடு பிதுக்கினாள்.

அதில் மேகாவின் புன்னகை விரிந்தது.

“பொய் சொல்றாங்க மேகா. ரெண்டும் சேர்ந்தா நம்மளை தலை கீழா நின்னு தண்ணீ குடிக்க வச்சிடுவாங்க” என்று காயு புகார் வாசிக்க,

“நோ டோன்ட் லை மா. ஐ ஆம் அ குட் பாய்” என்று அனிருத் உதடு பிதுக்கி அழ தயாராக,

அதில் பதறிய மேகா, “ஹே குட்டி பையா நான் உங்க அம்மா சொல்லதை நம்மளை. நீ ரொம்ப குட் பாய் தான்” என்று அணைத்து கொள்ள,

“அப்போ நானு” என்று அக்ஷயா உதடு பிதுக்கினாள்.

“நீயும் தான் பார்பி டால்” என்று அவளையும் அணைத்து கொண்டாள்.

“குட் ஆன்ட்டி” என்ற அக்ஷயா சிரிப்புடன் அவளது கன்னத்தில் இதழ் பதிக்க, சட்டென்று ஏதோ ஒன்று உள்ளே நழுவி சென்றதை மனது உணர, விழிகளில் நீர் கோர்த்துவிட்டது.

சடுதியில் அதனை உள்ளிழுத்தவள்,

“பார்பி டால்” என்று புன்னகையுடன் பதிலுக்கு இதழ் பதிக்க,

அனிருத், “எனக்கு எனக்கு” என்று மொழிய,

காயு சிரிப்புடன், “இதுதான் இவங்க ரெண்டு பேருக்கும் எல்லாத்தையும் போட்டி” என்று பொழிந்தாள்.

“ட்விஸ்னா அப்படி தான் இருப்பாங்க” என்று மேகா இயம்ப,

“ஆன்ட்டி என்னை தூங்குங்க” என்று அக்ஷயா கையை தூக்க,

கைகளில் வாரி கொண்டாள் மேகா.

அனிருத், “ஆன்ட்டி நான்” என்று மொழிய,

சடுதியில் மேகாவின் முகத்தில் இருள் சூழ்ந்தது. காரணம் அவளால் அதிக கனத்தை தூக்க இயலாது. மருத்துவர் கனமான பொருட்களை தூக்கவே கூடாது என்று கூறியிருக்கிறாரே.

கண நேரத்தில் தன்னை சமாளித்தவள்,

“கொஞ்சம் நேரத்துல பாப்பாவ இறக்கிவிட்டு உன்னை தூக்கிக்கிறேன்” என்க,

“இப்பவே சேர்த்து தூங்குங்க. அவ லெஃப்ட் சைட் நான் ரைட் சைட்” என்று கையை உயர்த்த,

மேகாவிடம் பதில் இல்லை. என்ன கூறுவென்று நிச்சயமாக தெரியவில்லை.

“உங்களால ரெண்டு பேரை தூக்க முடியாதா? என் டாடி ரெண்டு பேரையும் தூக்கி சுத்துவாரே” என்று சிரிப்புடன் மொழிய,

அதற்கும் மேல் அவளை சங்கடப்படவிடாது,

“அனிருத் வா நான் தூக்குறேன்” சைத்தன்யா மொழிய,

“ப்பா…” என்று சிரிப்புடன் அனிருத் சைத்தன்யாவிடம் ஓட,

“நானும் நானும். இறக்கிவிடுங்க ஆன்ட்டி” என்று அக்ஷயாவும் அவனிடம் ஓடினாள்.

“பாத்தியா கொஞ்ச நேரத்திலயே எவ்ளோ போட்டின்னு” என்று காயு மொழிய,

“காயு குழந்தைங்களை திட்டிட்டே இருக்காத” என்று சைத்தன்யா அதட்டல் போட்டான்.

அடுத்த கணமே இருவரும் சைத்துவின் கன்னத்தில் இதழ் பதித்து சிரிக்க,

“ம்ஹூம் நீ கொடுக்குற செல்லத்துல இவங்க சேட்டை அதிகமாதான் ஆகும். அத்தை தான் இவங்களுக்கு சரியான ஆளு” என்றவள் சலித்து கொள்ள,

அதனை கண்டு கொள்ளாத இருவரும்,

“ப்பா ஸ்னோ வேர்ல்டு கூட்டிட்டு போங்க” என்று சைத்துவிடம் கொஞ்ச துவங்கினர்.

காயு பெரிதாய் முறைத்து, “நோ நெவர் ஸ்னோ வேர்ல்டு கிடையாது. ரெண்டு பேருக்கும் கூலிங் ஒத்துக்காது” என்றிட,

“ப்பா ப்பா” என்று இருவரும் சைத்துவை தாஜா செய்தனர்.

“யார் சொன்னாலும் நோ ஸ்னோ வேர்ல்டு” என்று காயு உறுதியாக கூறிவிட,

சைத்து, “ஸ்னோ வேர்ல்டு இன்னொரு டைம் போகலாம். இப்போ அப்பா வேற ப்ளேஸ்க்கு கூட்டிட்டு போறேன்” என்று குழந்தைகளை சைத்து சமாதானம் செய்ய துவங்கிட,

மேகாவின் விழிகள் வியப்பில் விரிந்தது. இவருக்கு இவ்வளவு பொறுமையாக கூட பேச வருமா? என்று எண்ணம் வர,

தன்னுடைய பிள்ளைகளிடம் எந்த தகப்பனும் இத்தகைய பொறுமையையும் அன்பையும் காண்பிக்கத்தான் செய்வான் என்று மற்றொரு மனம் பதில் மொழிந்தது.

‘அதுவும் சரிதான்’ என்று நினைத்தவளது விழிகள் மெல்லிய சிரிப்புடன் குழந்தைகளை கொஞ்சி கொண்டிருப்பவனது மீது ரசனையுடன் பதிந்தது.

ஆனால் அடுத்த நொடியே கட்டியவளது முன்பு அவளது கணவனையே இப்படி பார்த்து கொண்டிருக்கிறாயே என்று மனசாட்சி இடித்துரைக்க பார்வையை வேறுபுறம் திருப்பிவிட்டாள்.

ஆனால் மனது மட்டும் செவிக்குள் நுழையும் அவனது குரலை உள்வாங்கி கொண்டிருந்தது.

சில நிமிடங்கள் கடந்து அவர்கள் இருவரையும் சமாதானம் செய்தவிட்டான் சைத்தன்யா.

காயு, “ஓகே எதாவது மால் போய்ட்டு பார்க் எதாவது இருந்தா போகலாம்” என்று கூற,

சைத்தன்யா, “ஓகே” என்று தலையசைக்க,

மேகாவிற்கும் மீண்டும் தான் அங்கே இருப்பது அவசியமில்லாதது போல தோன்றியது.

“அக்கா எனக்கு கொஞ்சம் வொர்க் இருக்கு. நான் போகவா?” என்று வினவ,

“நீ எங்க போற? நீயும் தான் எங்க கூட வர போற” என்று காயு மொழிய,

“அக்கா அது நான் எதுக்கு. நீங்க பேமிலியா போறீங்க போய்ட்டு வாங்க” என்று மறுத்தாள்.

“நீ எதுக்கா? உன்னை பாக்கதான நான் கிளம்பி வந்திருக்கேன்” என்று செல்லமாக முறைக்க,

“அது எனக்கு கொஞ்சம் வொர்க் இருக்கு கா. ஆபிஸ் முடிஞ்சதும் ஈவ்னிங் எங்கயாவது போகலாம்” என்று முயன்று மறுதலிக்க,

“அப்படியென்ன தலை போற வொர்க்? ஏன் சைத்து எதாவது இம்பார்ட்டன்ட் ப்ராஜெக்ட் டெட்லைன் வர போகுதா?” என்று வினவிட,

“நோ இப்போதைக்கு எந்த எமெர்ஜென்சி வொர்க்கும் இல்ல” என்று சைத்தன்யா பதில் அளித்தான்.

மேகாவிற்கு என்ன கூறுவதென்று தெரியவில்லை. அவர்கள் நால்வரும் குடும்பமாக செல்கையில் தான் எதற்கு அதிகப்படியாக தோன்றியது.

அதுவும் காயு இவ்வளவு வற்புறுத்தும் போது சைத்தன்யா ஒரு வார்த்தை கூட அழைக்காததில் அவனுக்கு தான் வருவதில் விருப்பம் இல்லையோ என்று எண்ண வைத்தது.

எண்ணுவது என்ன? அதுதானே உண்மையும் கூட ஊரிலிருந்து சில நாட்களுக்கு பிறகு மனைவியையும் பிள்ளைகளையும் பார்க்கும் யாவருமே தனியாக செல்ல வேண்டும் என்று தானே விரும்புவார்கள் என்று தனக்கு தானே பலவாறு சிந்தித்தவாறு இருந்தாள்.

“என்ன மேகா பதில் சொல்லாம பாத்திட்டு நிக்கிற?” என்று காயு மீண்டும் வினவ,

இப்போது பதிலற்று கையை பிசைந்துவிட்டு பின்னர்,

“ஆல்ரெடி நிறைய லீவ் போட்டுட்டேன் கா. இப்பவும் எப்படி? சார் வேற சி.எல்லை விட நிறைய லீவ் எடுத்துட்டேன் இதுக்கு மேல லீவ் எடுத்தா டெர்மினேட் பண்ணிடுவேன்னு சொல்லி இருக்காங்க”
என்றவள் வந்த முதல் நாளே சைத்தன்யா விடுமுறை நிறைய‌ எடுக்கிறாய் அதனை குறைத்து கொள் என்று கடிந்து கொண்டதை நினைவில் வைத்து கூறிட,

காயு, “சைத்து” என்று துவங்கிய கணம்,

“மேகா உன் டி.எல்க்கு நான் மெயில் பண்ணிக்கிறேன். வா” என்றுவிட்டான்.

காயுக்கா இவ்வளவு தூரம் கூறிய பிறகு வேண்டா வெறுப்பாக அழைக்கிறாரே என்று தோன்ற நிர்மலான முகத்துடன்,

‘சரியென’ தலையசைத்து வைத்தாள்.

காயு, “ஓகே கிளம்பலாம் வாங்க”என்று சைத்தன்யா வந்து செல்வதற்கு பயன்படுத்தப்படும் வழியில் வெளியே செல்ல,

“நான் மொபைலையும் பேக்கையும் எடுத்துட்டு வர்றேன்” என்றவள் வெளியே வந்து அலைபேசியை பையில் எடுத்து வைத்தாள்.

வந்த சிறிது நேரத்திலே மனதிற் அத்தனை சோர்வு அப்பி கொண்டது.

இன்னும் என்னென்ன சந்திக்க வேண்டி உள்ளதோ என்று மனதிற்குள் ஒருவித வேதனையோடு வெளியே வந்தாள்.

சரியாக அவள் வந்த நேரம் சைத்தன்யாவும் தனது காரை எடுத்துக் கொண்டு வெளியே வந்து நின்றான்.

“வா மேகா” என்று காயு பின் கதவை திறந்து அழைக்க,

ஏறப் போனவளது கை ஒரு கணம் நின்றது. காரணம் அவளுடைய பெல்ட் அது இல்லாது எங்கேயும் அவள் பயணம் செய்ய இயலாதே…

அவளது சிந்தையை கண்ட மேகா, “என்ன யோசனை மேகா?” என்றிட,

“அக்கா அது என் பெல்ட்டை மறந்துட்டேன் போய் எடுத்துட்டு வந்திடவா?” என்று வினவிட,

காயு பதில் அளிக்கும் முன்,

அனிருத், “ஆன்ட்டி கார்லயே சீட் பெல்ட் இருக்கு உங்களுக்கு தெரியாதா?” என்று களுக்கி சிரிக்க,

இங்கு மேகாவிற்கு சட்டென்று முகம் வாடிவிட்டது. குழந்தை தெரியாமல் பேசியிருந்தாலும் அவளிருந்த சூழ்நிலைக்கு அது கஷ்டப்படுத்தியது.

அவனது வினாவில் தானும் காயுவிடம் கூறாதது நினைவில் வந்தது.

மேகாவின் முகத்தை கண்டுவிட்ட காயு,

“அனிருத் அதிகபிரங்கித்தனம் பண்ணக்கூடாது” என்று அதட்டியவள்,

“சாரி மேகா அவன் தெரியாம பேசிட்டான். நீ வந்து ஏறு. இந்த கார்ல பெல்ட் எதுவும் தேவைப்படாது” என்றிட,

“அது அக்கா…” என்றவள் தனது நிலையை எவ்வாறு கூறுவதென தடுமாற,

“ஐ க்னோ எவ்ரிதிங்க்‌. இது இம்ப்போர்ட் கார். எந்த ப்ராப்ளமும் இருக்காது பேக் பெயின் வராது” என்க,

மேகாவின் முகத்தில் ஏகமாய் அதிர்ச்சி பரவியது.

காயுக்காவிற்கு எப்படி அனைத்தும் தெரிந்தது என்று சிந்திக்க,

“மேகா டைம் ஆச்சு வா” என்று காயு கூறிட,

அதில் சிந்தையை கைவிட்டவள் வாகனத்தில் ஏறிவிட்டாள்.

அப்போது தான் சிறிது நேரத்திற்கு முன்பு தான் இருவரையும் தூக்க முடியாது தடுமாறிய போது சைத்தன்யா காப்பாற்றியது நினைவிற்கு வந்தது.

‘அப்போ க்யூட்டனுக்கு முன்பே தெரிந்திருக்கிறது அவர் தான் அக்காவிடம் கூறியிருக்க வேண்டும்’ என்று எண்ணியவளுக்கு அவனுக்கு எப்படி தன்னை பற்றி தெரிந்தது என்று தான் தெரியவில்லை.

பின்னர் அவரது அலுவலகத்தில் பணிபுரியும் என்னை பற்றி அவருக்கு எப்படி தெரியாமல் இருக்கும் யாராவது கூறியிருப்பார்கள் என்று தானே பதிலும் கூறி கொண்டாள்.

முதலில் ஒரு பெரிய பல் பொருள் அங்காடிக்கு சென்றனர்.

மேகாவிற்கு அதனை பார்த்ததுமே தான் பனிரெண்டாம் வகுப்பு முடிந்திருந்த விடுமுறையில் காவ்யாவுடன் வந்தது தான் நினைவிற்கு வந்தது.

முதல் முறை வந்துவிட்டு பொருட்களின் விலையை கண்டு ஏகமாய் அதிர்ந்து எதுவுமே வாங்காமல் சென்று இரண்டு நாட்கள் தாயிடம் புலம்பியது மனக்கண்ணில் நழுவியது.

அப்போதே அவ்வளவு விலை இன்றைக்கு எவ்வளவு இருக்கும்? என தோன்ற,

‘நாம் எதுவும் வாங்கப் போவதில்லையே சுற்றி பார்த்துவிட்டு போவோம்’ என்று நினைத்து கொண்டாள்.

நுழைந்ததும் அவர்கள் சென்றது குழந்தைகளுக்கான பொருட்கள் இருக்கும் தளத்திற்கு தான்.

“பர்ஸ்ட் இவங்களுக்கு ட்ரெஸ் எடுக்கலாம்” என்று காயு கூறிவிட,

ஓவ்வொரு உடையாக பார்க்க துவங்கினர்.

காயு சிப்பந்தியை ஒவ்வொன்றாக எடுத்து போட கூறி புரட்டி பார்க்க,

அனிருத்தும் அக்ஷயாவும்,

“ம்மா அது ம்மா இது” என்று தங்களுக்கு பிடித்தவற்றை கை காட்டி கொண்டிருந்தனர்.

சைத்தன்யா சற்று தொலைவில் நின்று அலைபேசியில் பேசியபடி இருக்க,

மேகா காயத்ரி எடுக்கும் ஆடைகளை பார்த்திருந்தாள்.

காயு, “என்ன மேகா வேடிக்கை பாத்திட்டு இருக்க செலெக்ட் பண்ண எதாவது ஹெல்ப் பண்ணு” என்க,

“ஹான் பாக்குறேன் கா” என்றவள் தானும் சிலவற்றை எடுத்து போட கூறினாள்.

பத்து நிமிடங்கள் அலசி ஆராய்ந்து அக்ஷயாவிற்கு நன்றாக பொருந்தும் பேபி பிங்க் நிறத்தில் ஒரு உடையை எடுத்தாள்.

முன்னும் திருப்பி பார்த்தவளுக்கு அதன் விலையை கண்டதும் லேசாக தூக்கி வாரி போட்டது.

சிறு குழந்தைகளின் உடை இவ்வளவு அதிக விலையிலா? இதனை வேறு எதாவது சின்ன கடையில் எடுத்தாள் பல மடங்கு குறைத்து வாங்கலாமே என்று சிந்தித்தவள்‌ அதனை அப்படியே வைத்துவிட்டாள்.

காயு, “என்ன அது செட்டாகாதா?” என்க,

“ஹ்ம்ம்” என்று தலை அசைத்தவளது கரம் உடையை கண்டதும் அதன் விலையை தான் கண்டது.

என்னவோ அவ்வளவு விலையில் தேர்ந்தெடுக்க மனதில்லாது போக விலையை பார்ப்பதும் உடையை பார்ப்பதுமாக இருந்தாள்.

அலைபேசியை பேசியபடி இருந்தவனது பார்வையில் மேகாவின் செயல்பட்டுவிட அவர்கள் அருகில் வந்தவன்,

“மேகா ட்ரெஸ்ஸ பாத்து செலெக்ட் பண்ணு ப்ரைஸ பாக்காத” என்றிட,

அவனது குரலை எதிர்பார்க்கவள் தூக்கிவாரி போட திரும்பி,

“ஹான்” என்று விழிக்க,

“மனி இஸ் நாட் அ இஸ்ஸூ ட்ரெஸ் நல்லா இருந்தா செலெக்ட் பண்ணு” என்று அழுத்தி கூற,

“ச… சரிங்க சார்” என்றவள் திரும்பி உடையை பார்க்க துவங்கிவிட்டாள்.

மனதிற்குள், ‘அடியே மக்கு உனக்கா வாங்குற ரேட் பாக்க. அது அவங்க காசு அவங்க வாங்க போறாங்க. மினிஸ்டர் வீட்டு ஆளுங்க ரோட்டு கடையிலயா வாங்குவாங்க பைத்தியம் ஓழுங்கா ட்ரெஸ்ஸ மட்டும் பாரு’ என்று தனக்குத்தானே கூறி கொண்டவள் முன்பு தேர்ந்தெடுத்த அதே உடையை எடுத்து வைத்தாள்.

காயு குழந்தைகளுடன் பேசி கொண்டு இருந்ததால் இதனை கவனிக்கவில்லை.

சைத்தன்யா வந்தமர்ந்து தானும் குழந்தைகளுக்கு உடை தேர்ந்தெடுக்க,

மேகா இருவருக்கும் இரண்டு உடைகளை எடுத்து வைத்தாள்.

காயுவும் இரண்டு உடைகளை எடுக்க சைத்தன்யா மூன்று எடுத்து வைத்திருந்தான்.

அவர்கள் இருவரும் எடுத்ததை கண்டுவிட்டு தான் எடுத்ததை மேகா திருப்பி வைக்க போக,

“அதை ஏன் வைக்கிற?” என்று காயு வினவ,

“நீங்க செலெக்ட் பண்ணிட்டிங்களே அதான்” என்று இழுக்க,

“ஸோ வாட் அதுவும் நல்லாயிருக்கு சேத்து எடுப்போம்” என்றுவிட்டு மூவர் எடுத்த உடைக்கும் பில்லை போட கூறினாள்.

மேகா சிறிதாக அதிர்ந்து, ‘இவ்வளவும் வாங்க போகிறார்களா?’ என்று நினைக்க,

காயு, “வாங்க அடுத்து சாரீஸ் செக்ஷனுக்கு போவோம்” என்றிட,

உள்ளே நுழைந்த மேகா, ‘குழந்தைகள் உடையே இவ்வளவு இருந்தால் பெரியவர்கள் உடை எவ்வளவு இருக்கும்’ என்று யோசனை பிறந்தது.

மறுகணமே விலையை பற்றியே சிந்திக்காதே அவர்களுடைய பணம் அது தான் பணம் பிரச்சனை இல்லை என்று கூறிவிட்டானே மீண்டும் விலையை பார்த்தால் திட்டிவிடுவான் என்று பயந்து சேலையை மட்டும் புரட்டி பார்த்தாள்.

காயு, “மேகா வீட்ல இருக்க எல்லாருக்குமே எடுக்கணும் அத்தை அப்புறம் என் நாத்தனாருங்களுக்கு நல்ல சேலையா பாரு‌. ஒருத்தருக்கு நல்லா வந்து இன்னொருத்தருக்கு வரலைனா கோச்சுப்பாங்க” என்றுவிட,

“சரிங்கக்கா” என்றவள்,

“அவங்க என்ன கலர்ல இருப்பாங்க கா?” என்று வினவ,

“வீட்ல எல்லாருமே சைத்துவோட கலர் தான்” என்று பதில் பொழிந்தாள்.

“ஓகே கா அப்போ ப்ரைட் கலர் நல்லா எடுக்கும்” என்றவள் நல்ல பளிச்சென்று இருந்த நிறத்திலான புடவைகளை எடுத்து கொடுத்தாள்.

ஒரே ஒரு புடவை மேகாவிற்கு பார்த்ததும் பிடித்துவிட அதனை எடுத்தவள் கரங்களால் வருடினாள்.

அடர் பச்சை நிறத்தில் இருந்த அந்த புடவை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.

‘வாங்குவோமா?’ என்று எண்ணம் தோன்ற கரம் விலையை பார்த்தது.

அதனை கண்டு முடிவை கைவிட்டுவிட்டாள். இவ்வளவு விலை கொடுத்து புடவை அவசியமாக வாங்க வேண்டுமா? என்ற எண்ணம் தான் காரணம்.

காயு, “மேகா இது நல்லாயிருக்கா?” என்று கேட்க,

“ஹ்ம்ம் சூப்பரா இருக்கு கா. இந்த பர்புல் உங்களுக்கு நல்லா சூட் ஆகும்” என்க,

“அடியே இது எனக்கில்லை உனக்கு” என்று காயு பதில் இயம்ப,

“எனக்கா?” என்று அதிர்ந்தவள்,

“எனக்கெதுக்குக்கா?” என்றிட,

“மூச் எதுவும் பேசக்கூடாது இது நான் கொடுக்குற கிஃப்ட்” என்று அவளது வாயை அடைத்துவிட்டாள்.

அங்கிருந்து நகர எத்தனித்த போது மேகா பார்த்துவிட்டு வைத்த அதே புடவையை எடுத்து புரட்டி பார்த்த சைத்தன்யா,

“இதையும் பில் போடுங்க” என்றிட,

“இது யாருக்கு?” என்று காயு வினவ,

“என் பொண்டாட்டிக்கு” என்க,

“சரிதான்” என்றாள் காயு நமட்டு சிரிப்புடன்.

அப்போது தான் அந்த புடவையை கவனித்த மேகா,

‘க்காவுக்கு சார் எடுத்திருக்காரு போல’ என்று எண்ணியவள்,

‘எப்போ பாத்தாலும் அக்காவுக்குனு இருக்கதையே எனக்கு பிடிக்கிது’ என்று நினைத்து கொண்டவளுக்கு உள்ளே இறுகியது.

ஒருவழியாக வீட்டு ஆண்களுக்கு எடுத்து முடிய களைத்து பசிக்க துவங்கிவிட்டது.

சாப்பிட்டு கிளம்புவோம் என்று உணவகம் இருந்த இறுதி தளத்தை நோக்கி சென்றனர்.

அங்கு நுழைந்ததும் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருந்த இடத்தினை கண்டதும் இருவருக்கும் குஷியாகிவிட்டது.

“அங்க போலாம் அங்க போலாம்” என்று இழுத்து வந்து பெரிய பொம்மையின் அருகே அமர்ந்து புகைப்படம் எடுக்க கூற,

காயத்ரி சிரிப்புடன் வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்தாள்.

“ம்மா நீயும் வா ப்பா நீயும் வந்து உட்காரு” என்று இருவரையும் அனிருத் அழைக்க,

“டேய் நாங்க எதுக்கு நீங்க மட்டும் எடுங்க” என்று சைத்து மறுக்க,

“வாப்பா” என்று அனிருத் அழுகைக்கு தயாராக,

“சரி சரி வர்றோம்” என்ற காயு,

“மேகா இதுல எங்களை போட்டோ எடு” என்று அலைபேசியை கொடுத்துவிட்டு வலப்புறம் அமர,

சைத்தன்யா குழந்தைகளுக்கு இடம் புறம் அமர்ந்தான்.

கள்ளமில்லா சிரிப்புடன் அமர்ந்திருந்த குழந்தைகளுடன் மென்சிரிப்பை உதிர்த்தவாறு இருபுறமும் உட்கார்ந்து இருந்தவர்களை கண்டு,

“பெர்பெக்ட் பேமிலி” என்று உதடு முணுமுணுத்து.

அலைபேசி வழியாக அக்குடும்பத்தை கண்டவளது இதயத்தினுள் வலி ஊசியாய் ஊடுருவ ஏனோ நடுங்கிய
கரங்கள் வியர்வையில் பிசுபிசுத்தது.

மேகா சைத்தன்யாவுடன் வாழ விரும்பிய ஒரு வாழ்க்கை இது தான் ஆனால் நிஜத்தில் அவள் அங்கு இல்லை.

நடுங்கிய கரங்களை முயன்று சரி செய்து கொண்டவள் புகைப்படம் எடுக்க முயலும் கணம் காயுவின் அலைபேசிக்கு அழைப்பு வந்தது.

அலைபேசியின் திரையில் மின்னிய புகைப்படத்தை கண்டவளது கரங்கள் அலைபேசியை அப்படியே நழுவ விட்டிருந்தது.
 
Well-known member
Messages
859
Reaction score
630
Points
93
Ithellam konjam kooda sari illa paathukkonga, enna eathu nu sollaama ipdi posukku mudichitingale pa


Megha ean shock aagura
Yaaru call pannathu
Gaayu husband ah irukkumo
 
Active member
Messages
346
Reaction score
233
Points
43
Megha marupadiyum mobile ah keezha potutiya ithu oda rate evolo lakhs nu vera theriyala yae
Chaidhu pondati nu sonnathu Megha ah va ya irukumo nu oru doubt iruku yae but athu than confirm ah theriyala nu partha indha phone call la vandhathu gayu oda husband ah than irukum aana avar ah parthu iva yen ipadi shock aagura athu than theriyalla
 
Top