• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

மேகம் 11

Administrator
Staff member
Messages
464
Reaction score
794
Points
93
மேகம் 12:

அனைத்திற்கும் பிறகான

நேசம் என்பது
பெரிதொன்றுமில்லை
அடித்த தாயிடமே
அரவணைப்பை தேடும்
குழந்தையின்

மனோபாவம் தான்

மேகா உன்னைத்தான் கூப்பிட்டுட்டு இருக்கேன்” என்று சரண்யாவின் உளுக்களில் சுயநினைவை அடைந்த மேகா,


“ஹான் சொல்லுடி” என்க,

“என்ன சொல்ல? நான் உன்கிட்ட என்ன கேட்டேன்?” என்று சரண்யா முறைத்து பார்த்தாள்.

அவள் கேட்டதை கவனிதிராத மேகா,

“என்ன கேட்ட?” என்று விழிக்க,

திவ்யா, “மேகா உனக்கு என்ன பிரச்சனை எங்ககிட்ட கூட சொல்ல மாட்டியா?” என்று வினவிட,

“எனக்கு என்ன பிரச்சினை நான் நல்லாதான் இருக்கேன்” என்று பட்டென்று பதில் வந்தது மேகாவிடமிருந்து.

“எனக்கு தெரியும் நீ இதான் சொல்லுவேன்னு. நாங்களும் எவ்ளோ நாளா விதவிதமா கேக்குறோம் நீ இல்லைன்னு சமாளிச்சிட்டே இருக்க” என்று திவ்யா சலித்து கொள்ள,

மேகாவிடம் ஒரு வித புன்னகை மிளிர்ந்தது. ஆனால் அதில் உயிர்ப்பில்லை‌.

இருவருக்கும் அது புரிந்தாலும் என்ன செய்வதென்று தெரியவில்லை. சில நாட்களாக அல்ல சில மாதங்களாகவே மேக மொழியாள் இப்படித்தான் மொழியின்றி இருக்கிறாள். எதிலும் பிடிப்பற்று ஜீவனின்றி இருக்கிறாள்.

எப்போதும் அவளது முகத்தில் மின்னும் அந்த அழகான புன்னகையை காணவில்லை. பேச்சும் முன்பு போல அல்ல.

எப்போதும் ஏதோ ஒரு சிந்தனை மயம் தான். கல்லூரி முடிந்ததும் அப்படியே பணிக்கு செல்பவள் இரவு வந்ததும் உண்டுவிட்டு படுத்துவிடுவாள்.

இப்படித்தான் அவளுடைய நாட்கள் செல்கிறது. மேகாவின் இந்த மாற்றம் உண்ர்ந்த தோழிகளுக்கும் எதனால் என்று தெரியவில்லை.

சரண்யா, “அவதான் சொல்ல மாட்றால்ல விடு. அவளுக்கா தோணும் போது சொல்லட்டும் இப்போ வாங்க கிளம்புவோம்” என்றிட,

“எங்க?” என்று மேகா வினவ,

“இன்னைக்கு உப்மாடி. வாய்லயே வைக்க முடியாது. வா போய் வெளிய சாப்பிட்டு வருவோம்” என்று திவ்யா கூற,

“ஹ்ம்ம்” என்று தலை அசைத்தவள் எழுந்து முகம் கழுவி உடை மாற்றி வந்தாள்.

“எங்க போகலாம்?” என்று சரண்யா கேக்க,

“புகாரி போகலாமா?” என்று திவ்யா மறு வினா தொடுத்தாள்.

“அங்கயா? அங்க ரேட் ரொம்ப அதிகமா இருக்குமே?” என்று சரண் மொழிந்தாள்.

“பரவாயில்லை ஒரு நாள் தான? இன்னைக்கு என்னோட ட்ரீட் வாங்க” என திவ்யா கூறிவிட,

மேகா, “எனக்கு எங்கன்னாலும் ஓகே” என்றுவிட்டாள்.

மூவரும் கிளம்பி ஒரு ஆட்டோவை பிடித்து அந்த உணவகத்தை அடைந்தனர்.

அது சற்று உயர்தர வகுப்பினர் வந்து போகும் உணவகம். சாமானிய மக்களுக்கு அதில் உள்ள விலை நிச்சயமாக சற்று அதிகமாக தான் இருக்கும்.

இதுவே முன்பிருந்த மேகா என்றால் ஒரு வேளை சாப்பாட்டிற்கு இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா? என்று கண்டிப்பாக கேட்டிருப்பாள்.

ஆனால் அவள் தான் இப்போது உயிர்ப்பற்று இருக்கிறாளே…

அன்று விடுமுறை தினம் என்பதால் அங்கு முக்கால்வாசி இருக்கைகள் நிரம்பி இருந்தது.

இறுதி வரிசையில் போடப்பட்டிருந்த இருக்கை ஒன்றில் மூவரும் சென்று அமர்ந்து கொண்டனர்.

சரண்யா, “என்ன சாப்பிடலாம்?” என்றிட,

திவ்யா, “இதென்ன கேள்வி ஆல்வேஸ் பிரியாணி தான்” என்க,

“உனக்கு பிரியாணி ஓகே? எனக்கு நூடுல்ஸ்” என்றவள்,

“மேகா உனக்கு?” என்று வினவினாள்.

“எனக்கு எதாவது சொல்லுங்க?”

“ஏன்டி உனக்கு கொஞ்சம் சேஞ்சிங்கா இருக்கும்னு தான இங்க அழைச்சிட்டு வந்தோம். இங்க வந்தும் ஏனோ தானோன்னு பதில் சொல்ற?” என்று சரண்யா கடிய,

“நான் இங்க இதுக்கு முன்னாடி வந்ததில்லை. அதான் உங்களுக்கு தெரிஞ்ச நல்ல டிஷ்ஷா சொல்லுங்க” என்று தோழியை சமாதானம் செய்தாள்.

திவ்யா, “அவ சொல்றதும் சரிதான். அவளுக்கு ஒரு சிக்கன் ரைஸ் வாங்கலாம் ஷார் பண்ணிக்கலாம்” என்றுவிட,

“சைட் டிஷ் என்ன சொல்லலாம்” சரண்யா கேட்க, உண்ட உணவு இது.

திவ்யா, “க்ரில் சொல்லுவோம்” என்க,

“பட்டர் சிக்கன்” என்று மேகாவின் இதழ்கள் சற்று சத்தத்துடன் கூறிவிட,

“ஆங் பட்டர் சிக்கன் நல்லா இருக்கும். க்ரில் அண்ட் பட்டர் சிக்கன் பைனலைஸ்” என்றவள் சிப்பந்தியை அழைத்து உணவை கூறினார்கள்.

மூவரும் கை கழுவிவிட்டு வர உணவு வந்திருந்தது.

சரண்யாவும் திவ்யாவும் பேசியபடி உணவருந்த மேகா அதனை கவனித்தபடி உணவை அளந்து கொண்டிருந்தாள்.

“ஏய் மேகா…” என்ற திவ்யாவின் ஆரவாரமான குரலில் மேகா சட்டென்று நிமிர்ந்து பார்க்க,

“அங்க பாருடி சீனியர்” என்றாள்.

‘சீனியர்’ என்ற வார்த்தையில் மேகாவின் இதயம் எகிறி குதிக்க,

“எங்க?” என்று வினவினாள்.

‘பார்க்க கூடாது பார்த்துவிடாதே அவனை’ என்று மூளை எத்தனை முறை கூறியும் உள்மனம் தன்னையும் மீறியும் அவனை கண்டுவிட துடித்தது.

“அதோ அந்த லாஸ்ட் டேபிள்ல” என்றதும் அவளது விழிகள் அடுத்த நொடி அவனிடம் தான்.

கருப்பு நிறத்தில் டீ சர்ட்டும் நீல நிறத்தில் பேண்ட்டும் அணிந்து இருந்தவன் கேஷுவலில் இருந்தான்.

அருகில் இருந்த காயத்ரி ஏதோ கூறி கொண்டிருக்க இவன் சிரிப்புடன் கேட்டிருந்தான்.

விழிகளை இமைக்க மறந்து ரசித்து கொண்டிருந்தவளது பார்வையில் காயத்ரி பட்டதும் மின்சாரம் தாக்கிய உணர்வு.

‘சே என்ன செய்து கொண்டிருக்கிறேன். அவர் காயத்ரி அக்காவிற்கு சொந்தமானவர். உன்னை உடன்பிறவா தங்கையாக எண்ணுபவளுக்கு துரோகம் செய்கிறாயா?’ என்று மனசாட்சி நிந்திக்க,

கண பொழுதில் பார்வையை விலக்கி கொண்டாள்.

சரண்யா, “சீனியர் இந்த டீ சர்ட்ல சும்மா பாலிவுட் ஆக்டர் மாதிரி செம்மையா இருக்காருல” என்றிட,

“ஆமாடி. எந்த பக்கம் இருந்து பாத்தாலும் அநியாயத்துக்கு அழகா இருக்காரு” என்று திவ்யா சிலாகித்தாள்.

மேகாவிற்கு இவை யாவும் காதில் விழுந்தாலும் கேட்காதவாறு உணவில் கவனமானாள்.

“சீனியர் மினிஸ்டர் பையன்னு தெரிஞ்சாலும் தெரிஞ்சது மொத்த கேர்ள்ஸும் அவர் பின்னாடி தான் சுத்துறாங்க” என்று சரண்யா கேட்க,

“மெர்லின் நேத்து போய் ப்ரபோஸ் பண்ணுவான்னு நான் எக்ஸ்பெக்டே பண்ணலை” என்று திவ்யா கூற,

விழுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள் மேகா.

“ஆமா போல்டான ஆள் தான். ஆனா அவர் தான் ரிஜெக்ட் பண்ணிட்டாரே” என்ற சரண்யா,

“என்ன இருந்தாலும் காயு சீனியர் தான் அவருக்கு கரெக்டான பேர். அவங்ககிட்ட இருக்க அந்த கெத்து நிமிர்வு எல்லாம் சேர்ந்து அவ்ளோ அழகா இருக்காங்க” என்று திவ்யா மொழிய,

“ஆமாடி. இவங்க அப்பாவும் மினிஸ்டர் அரசியல் அரசியலோட தான் சேரும்” என்று சரண்யா இயம்பினாள்.

அவர்கள் இருவரை பற்றி மும்முரமாக பேசி கொண்டு இருந்தவர்களுக்கு இங்கு ஒருத்தியை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று கொண்டிருக்கிறோம் என்று புரியவில்லை.

பேசி கொண்டு இருந்த திவ்யா,

“மேகா இங்க பாரு என்ன?” என்க,

அவளை நிமிர்ந்து பார்த்த மேகாவின் முகம் நிச்சலமாக இருந்தது.

“எனக்கு ஒரு டவுட்?”

“என்ன?”

“அது உனக்கு சீனியரை பிடிச்சு இருந்ததா? ஐ மீன் விரும்புனியா?” என்று வினவிட,

மேகாவின் இதயம் தாறுமாறாக துடிக்க துவங்கியது.

முகத்தில் எதையும் காண்பிக்காது சிரமப்பட்டவள்,

“இல்லை எனக்கு அந்த மாதிரி தாட் எல்லாம் இல்லை” என்றுவிட்டு,

“ஏன் இந்த கொஸ்டீன்?” என்றிட,

“இல்லை நீ சீனியரை ஒருவேளை விரும்பி அவருக்கும் காயு சீனியருக்கும் மேரேஜ் பண்ற ஐடியான்னு தெரிஞ்சுதும் அப்செட் ஆகி தான் இப்படி இருக்கியோன்னு தோணுச்சு அதான் கேட்டேன்”‌ என்றாள்.

“அப்படியா மேகா” என்று சரண்யாவும் முகம் காண,

“இல்லை அந்த மாதிரி எதுவுமே இல்லை. எனக்கு அவரை பிடிக்கும். பார்க்க அழகா ஹீரோ மாதிரி இருக்காரேன்னு ரசிச்சேன் அவ்ளோ தான். அழகா இருக்க எல்லாமே நமக்கு சொந்தமாகணும்னு நினைக்கிறது தப்பு” என்ற மேகாவின் இதயத்தின் அறையெங்கும் சொல்ல முடியாத வலி ஊடுருவியது.

“அதுவும் சரிதான்” என்று சரண்யா ஆமோதிக்க,

திவ்யா நம்பாத பார்வை பார்த்தாள்.

“ஏய் திவி. நிஜமா அவர் க்யூட்டா இருந்தாரு அதான் பார்த்தேன். காஃபி ஷாப்கு வர யார் அழகா இருந்தாலும் சைட் அடிப்பேன் அது போல தான் இதுவும். அதுக்கும் மேல நமக்கு நம்மளோட நிலைமை தெரியும்”

“...”

“அவர் யாரு மினிஸ்டரோட மகன். அவர் மேல எல்லாம் ஆசைப்பட முடியுமா? அதெல்லாம் கனவுல கூட நடக்காது.‌ அழகா இருக்காரேன்னு க்ரஷ்ஷா வச்சு இருந்தேன். மினிஸ்டர் மகன்னு தெரிஞ்சதும் க்ரஷ் கூட நம்ம லெவெல்க்கு தான் இருக்கணும்னு விட்டுட்டேன் அவ்ளோ தான். அங்க பாரு காயுக்காவ ரெண்டு பேருக்கும் ஜோடி பொருத்தம் எவ்ளோ அழகா இருக்கு அவங்க தான் சீனியருக்கு கரெக்டான ஜோடி” என்று அவளுக்கு கூறுவது போல தனக்கும் கூறி கொண்டாள்.

“இவ்வளோ தெளிவு இருந்தா சரி. இவங்களை மாதிரி ஆளுங்களை தூரத்தில இருந்து ரசிக்க தான் நம்மாள முடியும்” என்று திவ்யாவும் தன் பங்கிற்கு கூற,

“சும்மா பிலாசஃபி பேசாதிங்கடி. அழகா இருந்தா ரசிக்கலாம். பாருங்க பத்து பாலிவுட் ஆக்டரை தூக்கி முழுங்கிடுவாரு போல அவ்ளோ அழகா இருக்காரு சீனியர்” என்று மீண்டும் சைட்டடிக்க துவங்கி விட்டாள்.

மேகாவிற்கு சைத்தன்யாவை பார்த்த பிறகு அங்கிருந்து எப்படி கிளம்புவோம் என்று தான் தோன்றியது.

உணவை அளந்து கொண்டிருந்தவள் வேகமாக உண்டு முடித்தாள்.

ஆனால் மற்ற இருவரும் இன்னும் உண்டு முடிக்கவில்லையே

சரண்யா, “ஹே சீனியருக்கு ஒரு ஹாய் சொல்லுவோமா?” என்றிட,

“வேணாம்” என்று சட்டென்று பதில் வந்தது மேகாவிடமிருந்து.

அதில் இருவரும் நிமிர்ந்து பார்க்க,

தன்னுடைய மடத்தனத்தை உணர்ந்தவள்,

“அது டைம் ஆகிடுச்சு. இப்போ கிளம்புனா தான் ஹாஸ்டலுக்குள்ள போகு முடியும் அதான் சொன்னேன்” என்று சமாளிக்க,

சரண்யா, “ஆமா அதுவும் கரெக்ட் தான். லேட்டா போனா நிர்மலா மேம் கண்டபடி திட்டும்” என்று கூற,

அப்போது தான் மேகாவிற்கு நிம்மதியாக மூச்சு விட முடிந்தது‌.

‘தன்னையும் அறியாமல் தன்னிலை இழந்து விடுகிறோம் இது நல்லதல்ல இனி கவனமாக இருக்க வேண்டும்’ என்று தனக்குத்தானே கூறி கொண்டாள்.

உண்டு முடித்து கைகளை கழுவிவிட்டு வெளியே வரும் சமயம் காயத்ரி இவர்களை கண்டுவிட்டாள்.

“மேகா” என்றவளது குரலில் சிறிது அதிர்வு தான்,

“அக்கா” என்றவளது முகத்தில் ஒருவித சங்கடமான பாவம்.

திவியும் சரண்யாவும், “ஹாய் சீனியர்” என்று காயுவை கண்டு புன்னகைக்க,

பதிலுக்கு புன்னகையை கொடுத்தவள்,

“நான் கூப்பிட்டப்போ வர மாட்டேன்னு சொல்லிட்ட” என்று வினவிட,

“அது அக்கா இவங்க கம்பெல் பண்ணி கூப்டாங்க” என்று மொழிந்தாள்.

சரண்யாவும், “நாங்க கூப்பிட்டப்பவும் வரலைனு சொல்லிட்டா கா. கம்பெல் பண்ணி தான் அழைச்சிட்டு வந்தோம்” என்று இயம்ப,

“என்னவோ போ. வர வர நீ சரியில்லை” என்ற காயு,

“சாப்பிட்டு முடிச்சாச்சா? இல்லை இனி தானா?” என்று வினவ,

“சாப்பிட்டோம் கா”

“சரி வாங்க நாங்க ஹாஸ்டல் வழியா தான போறோம் ட்ராப் பண்ணிட்டு போறோம்” என்று அழைத்தாள்.

“சரிங்க சீனியர் பில் பே பண்ணிட்டு வர்றோம்” என்று திவி கூற,

“கொடு பில்லை” என்று அவளது கையில் இருந்து வாங்கி கொண்டவள் பணம் செலுத்த சென்ற சைத்தன்யாவிடம் சேர்த்து கட்ட கூறிவிட்டாள்.

திவ்யா அதிர்ந்து, “சீனியர் இன்னைக்கு என்னோட ட்ரீட் நான் தான் பே பண்ணனும்” என்க,

“நெக்ஸ்ட் டைம் பண்ணிக்கோ வாங்க போகலாம்” என்று காயு முடித்துவிட,

மேகா இங்கு பார்வையாளராக தான் இருந்தாள்.

மூவரும் பின்னிருக்கையில் ஏறிக் கொள்ள காயு சைத்தன்யாவின் அருகில் அமர்ந்து கொண்டாள்.

மேகா சாளரத்தினை வேடிக்கை பார்த்தடி அமர்ந்து கொண்டாள்.

மற்ற இருவரும் காயத்ரியிடம் வளவளத்து கொண்டு வந்தனர்.

விடுதி வந்ததும் மூவரும் இறங்கி கொள்ள காயத்ரி,

“மேகா” என்று அழைத்திட,

இதனை எதிர்பார்த்திருந்தவள் திரும்பி பார்க்க,

காயத்ரி, “நீங்க போங்க நான் இவளை அனுப்புறேன்”என்று அவர்களை அனுப்பியவள் மகிழுந்தில் இருந்து சற்று தள்ளி அழைத்துச் சென்று மேகாவின் கையை பிடித்து கொண்டாள்.

ஏதோ கேட்க போகிறாள் என்று மேகாவின் இதயம் தடதடத்தது.

“மேகா நீயென்ன உன் அக்காவாதான நினைக்கிற?” என்று வினவ,

“ஆமா கா” என்று சாந்தமாக பதில் தந்தாள்.

“அப்போ சொல்லு உனக்கு என்ன பிரச்சனை?” என்று வினவ,

“எனக்கென்ன பிரச்சனை?” என்று வழக்கம் போல ஆர்பரிப்பில்லாது பதில் தர,

“அப்புறம் ஏன் நீ ஒரு மாதிரி இருக்க? நீ முன்ன மாதிரி இல்லை. ரொம்ப டல்லா என்கிட்ட சரியாவே பேசுறது இல்லை” என்று கூர்மையாக பார்க்க,

“நான் நல்லாதான் இருக்கேன் கா. எக்ஸாம்ஸ் வர்றதால கொஞ்சம் டல்லாயிட்டேன் அவ்ளோ தான் மத்தபடி எதுவுமில்லை கா” என்று வழக்கமான புன்னகையை உதிர்த்தாள்.

நம்பாத பார்வை பார்த்தவள்,

“இதுக்கு மேல நான் உன்னை கம்பெல் பண்ண மாட்டேன். உனக்கு தோணும் போது நீயே சொல்லு. ஒன்னு மட்டும் ஞாபகம் வச்சுக்கோ உனக்கு என்ன பிராப்ளம்னாலும் நான் கண்டிப்பா உன்கூட இருப்பேன்” என்று கையில் அழுத்தம் கொடுக்க,

இங்கு மேகாவிற்கு விழிகள் கலங்கியது அவளது பாசத்தில்.

இந்த பாசத்திற்காக தானே யாவும் என்று தோன்ற கலங்கிய கண்களை மறைத்து,

“ஹ்ம்ம்” என்று தலையசைத்தாள்.


சரி நான் போய்ட்டு வர்றேன்” என்று கூறியவள் மகிழுந்தில் ஏறிக்கொள்ள தலையசைத்து விடை கொடுத்தவளது கன்னம் கண்ணீரில் நனைந்திருந்தது.


காரணம் இந்த பொல்லாத நேசத்தை தவிர வேறென்ன இருந்துவிட முடியும்.

**************


தன்னுடைய இரு சக்கர வாகனத்தினை அதன் இடத்தில் நிறுத்தியவள் தான் கட்டியிருந்த பெல்ட்டை எடுத்து இருக்கைக்கு அருகில் வைத்து பூட்டிவிட்டு அலுவலகத்தினுள் நுழைந்தாள்.

இன்னும் ஒரு வாரத்தில் காவ்யாவிற்கு திருமணம் ஆதலால் அவள் விடுப்பு எடுத்திருந்தாள்.

காவ்யா இல்லாமல் அலுவலகத்திற்கு வருவது இதுதான் முதன்முறை என்பதால் என்னவோ போல இருந்தது.

அமைதியாக சென்று தன்னுடைய இருக்கையில் அமர்ந்து கொண்டவள் அன்றைய தினத்திற்கென்று ஒதுக்கப்பட்ட பணிகளை கவனிக்க துவங்கினாள்.

மேகா இப்போது புதிதாக ஒரு ப்ராஜெக்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தாள். இப்போது இருக்கும் டி.எல் மற்றும் ப்ராஜெக்ட் மேனேஜர் மிகவும் நல்ல மாதிரி ஆதலால் இவளுக்கு பெரியதான தலைவலி ஏதும் இல்லை.

உணவு நேரத்தில் தனியாகவே அமர்ந்து உணவை உண்டவள் உணவு இடைவேளை முடியும் முடியும் முன்பே வந்து இடத்தில் அமர, அவளது அலைபேசி அலறியது.

எடுத்து பார்க்க புது எண்ணியிருந்து அழைப்பு வந்தது.

‘யாரது?’ என்று சிந்தனையுடன் அழைப்பை ஏற்று,

“ஹலோ” என்றிட,

“மேகா கம் டூ மை கேபின்” என்று அழுத்தமாக செவியில் வந்து மோதிய குரல் சொந்தக்காரனை உணர்த்த,

“ஓ..ஓகே சார்” என்று தன்னை மீறி பதில் அளித்தவள்,

‘இவர் எப்போது வந்தார்? ஒரு மாதமாக ஆளை காணவில்லையே ஒருவேளை பொறுப்பை யாரிடமோ ஒப்படைத்துவிட்டு சொந்த ஊரிலே இருந்துவிட்டாரோ என்று நினைத்திருந்தோமே’ என்று நினைத்தபடி கதவை தட்டி அனுமதி வாங்க,

“எஸ் கம்மின்” என்ற குரல் வந்ததும் உள்ளே நுழைந்தாள்.

நுழைந்த கணம் ஒரு கரம் அவளது விழிகளை மூடியது.

அதில் அதிர்ந்தவள் அந்த கரத்தின் மீது கையை வைக்க,

“கெஸ் மீ‌…” என்ற குரல் ஆரவாரமாய் செவிக்குள் நுழைந்தது.

இவளது இதழ்கள் தாமாக,

“காயுக்கா” என்று முணுமுணுக்க,

“கண்டுபிடிச்சிட்டியா மேகா” என்று சிரிப்புடன் காயத்ரி அவள் முன் நிற்க,

மேகாவிற்கு சில கணம் பேச்சே வரவில்லை மகிழ்ச்சியில்.

“என்ன மேகா அப்படியே ஸ்டக் ஆகிட்ட?” என்று காயு சிரிப்புடன் கேட்க,

“எப்போ வந்திங்க கா” என்று மேகாவும் புன்னகையுடன் கேட்க,

“மார்னிங் தான் வந்தேன்.‌ வந்ததுமே உன்னை பாக்க தான் ஓடி வந்துட்டேன்” என்று மொழிந்தவள் மேகாவை கைப்பிடித்து அமரவைத்து தானும் அமர்ந்து கொண்டாள்.

“வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்கா” என்று மேகா விசாரிக்க,

“எல்லாரும் ரொம்ப நல்லா இருக்காங்க. நீ ஏன் இப்படி இவ்வளோ லீனா இருக்க? காலேஜ் படிக்கும் போது கூட நல்லா இருந்த?” என்று கவலையாக கேட்டிட,

பதிலுக்கு மேகா சிறு மென்னகையை பதிலாக கொடுத்தாள்.

இருவரும் வெகு நாட்கள் கழித்து சந்திப்பதால் தங்களை மறந்து சைத்தன்யாவையும் மறந்து பேசி கொண்டிருக்க,

“ப்பா இவன் என் பார்பியை உடைச்சுட்டான்” என்ற மழலை குரல் வர,

அதனை தொடர்ந்து, “நான் உடைக்கலப்பா” என்ற குரலும் வந்தது.

“ப்பா ஹீ இஸ் லையிங்” என்றபடி தலையில் இரண்டு குடுமியுடன் கையில் பொம்மையுடனும் இதழ் பிதுக்கி நின்ற குழந்தையை கண்டதும் இவளுக்கு இதயமே துடிப்பை நிறுத்திவிட்டது.

“நோ ப்பா ஐ டின்ட்” என்றபடி அவளது பின்னால் வந்த வாண்டு அவளை முறைத்தது.

“இங்கேயும் வந்து ஸ்டார்ட் பண்ணிட்டிங்களா?” என்று காயு முறைக்க,

இருவரும் சைத்தன்யாவை கண்டனர்.

காயு, “அவனை பாத்தா விட்ருவேனா. அழைச்சிட்டு வரும் போதே சைலண்ட்டா இருக்கணும்னு சொல்லித்தானே அழைச்சிட்டு வந்தேன்” என்று மொழிய,

“காயு பசங்களை திட்டாத” என்று சைதன்யா அதட்டல் போட்டான்.

இவை யாவையும் பார்த்து கொண்டிருந்த மேகாவிற்கு அவர்களது குடும்பத்தில் தான் தேவையில்லாது இருப்பது போல தோன்ற வைத்தது.

மேகா அங்கிருப்பதை உணர்ந்த காயு,

“சாரி மேகா உன்னை மறந்துட்டேன்” என்றவள்,

“இவங்க ரெண்டு பேரும் என்னோடது பசங்க ட்வின்ஸ் அக்ஷயா அனிருத்” என்று அறிமுகம் செய்தவள்,

“ஆன்டிக்கு ஹாய் சொல்லுங்க” என்று அவர்களிடம் மொழிந்தாள்.

“ஹாய் ஆன்ட்டி” என்று இருவரும் பளீரிடும் புன்னகையுடன் மொழிய,

“ஹாய்” என்று புன்னகைத்தவளது இதயத்தில் மெலிதான நடுக்கம் பரவியது.

அவர்கள் உயரத்திற்கு அமர்ந்தவள்
இருவரையும் நோக்கி கையை நீட்டினாள்.

“ஆன்ட்டி கூப்பிட்றாங்கல்ல போங்க” என்று காயு கூறியதும் இருவரும் மேகாவை நோக்கி நகர்ந்தனர்.

இருவரையும் தன்னோடு சேர்த்து பிடித்து கொண்டவளுக்கு இவர்கள் சைத்தன்யாவின் பிள்ளைகள் அவனுடைய ரத்தம் என்பதே நடுங்க செய்தது.

தன்னை பார்த்து சிரித்த அந்த குண்டு கன்னங்களை பிடித்து கொஞ்சியவளது இதயம் மெல்லிய சங்கிலியால் இறுகியது…











 
Active member
Messages
346
Reaction score
233
Points
43
Megha oda changes appo start aanathu ippo varaikkum maravae illa aval oda ennamum.than chaidhu ku ava match illa na ra thu
 
Active member
Messages
112
Reaction score
66
Points
28
Wow amazing sister.. Pls reveal the suspense.. Superb
 
Top