• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

மேகம் 10

Administrator
Staff member
Messages
464
Reaction score
794
Points
93
மேகம் 10

யாருமற்ற மனதின்
சாலையில் யாரோ
ஒருவரின் நிழலை
தேடித் திரியும்
இந்த அதீத நேசம்
தான் எத்தனை

விசித்திரமானது

அப்படி யாரை பார்க்க இவள் அழைத்து செல்கிறாள் என்று எண்ணியபடி மேகா வர,


அவர்களுக்கு முன் கல்லூரி முதல்வர் கையில் பூங்கொத்துடன் வருபவர்களை வரவேற்க சென்றார்.

‘முதல்வரே செல்கிறாரே வருபவர் மிகவும் பெரிய இடம் போலும்’ என சிந்தித்தவாறே செல்ல,

வரிசையாக ஐந்து மகிழுந்து வந்து நின்றது.

நின்றதும் கருப்பு சீருடை அணிந்த பாதுகாப்பாளகர்கள் கையில் துப்பாக்கியுடன் கீழிறங்கி நிற்க,

இவளுக்கு யாரோ அரசியல்வாதி தான் வருகிறார் போல என்று புரிந்தது.

ஆனால் வருபவருக்கும் எனக்கு கொடுக்கவிருந்த சர்ப்ரைஸிற்கும் என்ன சம்பந்தம்? என்று பலவாறாக யோசனை ஓடியது.

காப்பாளர்களை தொடர்ந்து வெள்ளை வேட்டி சட்டையில் சாந்தமான முகத்துடன் நெற்றியில் திருநீற்று பட்டையுடன் ஒருவர் இறங்கினார்.

மேகாவின் மூளை உடனடியாக, ‘இவரை எங்கோ பார்த்துள்ளோமே எங்கே?’ என்று மூளையின் பகுதி எங்கும் அலசி ஆராய துவங்க,

அங்கே ஆரவராம் பெரிய ஆரம்பித்தது.

முதல்வர் விரைந்து சென்று பூங்கொத்தை கொடுத்து வரவேற்க, மற்ற துறைத் தலைவர்களும் சென்று வரவேற்றனர்.

ஆனால் இவளுக்கு தான் அவர் யாரென்று தெரியவில்லை.

காயு, “என்ன மேகா அவரை தெரியுதா…?” என்றிட,

“ம்ஹூம் இல்லைக்கா. எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு” என்று மொழிய,

“தெரியலையா? மேகா அவர் தமிழ்நாட்டுல எஜீகேஷன் மினிஸ்டர் சதாசிவம்” என்று சிறு வியப்புடன் மொழிய,

“எனக்குள் பாலிடிக்ஸ் ஏதும் தெரியாது” என்றவள்,

“இவர் தான் நீங்க சொன்ன சர்ப்ரைஸா?” என்று வினவிட,

“ஹ்ம்ம் ஆமா” என்றவள்,

“வா அங்க போவோம்” என்று அழைத்து செல்ல,

சதாசிவத்திடம் சைத்தன்யா பேசி கொண்டு இருந்தான்.

‘க்யூட்டன் பேசுறாருன்னா இவங்களுக்கு தெரிஞ்சவங்களா இருப்பாங்க போல. இருக்கும் பெரிய ரிச்சான பேமிலிக்கு எல்லாம் பாலிடிக்ஸ்ல இருக்கவங்க பழக்கமா தான இருப்பாங்க’ என்று எண்ணியிருக்க,

“மாமா…” என்ற காயுவின் உற்சாகக் குரல் மேகாவின் சிந்தையை கலைத்தது.

அதற்கு பதிலாக, “மருமகளே எப்படி இருக்க?” என்று சதாசிவம் வினா தொடுக்க,

“எனக்கென்ன நான் சூப்பரா இருக்கேன்” என்ற காயத்ரியின் குரலில் அத்தனை உற்சாகம்.

‘ஓ காயுக்காவோட மாமாவா இவங்க?’ என்று நினைக்க,

“மாமா இது என்னோட ஜூனியர் மேகா. நம்ம ஊரு தான்” என்று அறிமுகப்படுத்த,

மேகாவிற்கு சட்டென்று பேச்சு வரவில்லை. இப்படி திடீரென்று அறிமுகம் செய்வாள் என்று அவள் எண்ணியிருக்கவில்லை.

அதுவும் முதலமைச்சரை நேரில் பார்த்து பேசுவதில் சிறிதான பதற்றம் வேறு தொற்றி கொள்ள,

ஒரு நொடி திகைத்து பின், “வணக்கம் சார்” என்று விட்டாள்.

அதில் சிரித்த சதாசிவம், “எப்படி இருக்கம்மா?” என்று வினவ,

“ஆங் நல்லா இருக்கேன் சார்” என்றவளுக்கு அடுத்து என்ன பேசுவது என்று தெரியவில்லை.

ஆனால் அதற்கு அவசியம் இல்லாதது போல முதல்வர்,

“வாங்க சார் உள்ள போய் உட்கார்ந்து பேசுவோம்” என்று அழைத்துவிட,

அரங்கத்தினுள் எல்லோரும் சென்றனர்.

மேகாவும் காயத்ரியுடன் தான் சென்றாள்.

சுற்றி இருபது பேர் அதனை விட துப்பாக்கி ஏந்தி வரும் கருப்பு பூனைகள் என்று அவளுக்கு உள்ளுக்குள் சிறிது அச்சம் பிறந்தது.

இதற்கு முன் இது போல எல்லாம் சூழ்நிலையை அவள் சந்தித்ததில்லை.

“அக்கா உங்க மாமா மினிஸ்டர்னு சொல்லவே இல்லையே” என்று காயுவிடம் கேட்க,

“அதான் சொன்னேனே சர்ப்ரைஸ்னு” என்றவள்,

“எப்படி என் சர்ப்ரைஸ்?” என்று வினா எழுப்ப,

“ஹ்ம்ம் நல்லா இருந்துச்சு” என்றவளுக்கு அந்த கருப்பு பூனைகளுக்கு நடுவே நிற்பது ஒருவித அசௌகரியத்தை கொடுத்தது.

‘நான் அங்கு சென்று தோழிகளுடன் அமரவா?’ என்று மேகா கேட்க விழைய,

காயு, “மேகா அவர் எனக்கு மாமா மட்டும் இல்லை. உன்னோட பிலவ்ட் சீனியரோட அப்பாவும் தான்.” என்றதும் காயுவின் கையை பிடித்திருந்த மேகாவின் கை சட்டென்று கீழே தளர்ந்தது.

உள்ளுக்குள் அதிர்ச்சி அலையலையாய் பரவிட,

“என்ன?” என்று இதழ்கள் தாமாக உச்சரித்திருந்தது.

“ஆமா பாரு ரெண்டு பேரும் அப்படியேபாரு ஜெராக்ஸ் மாதிரியே இருக்காங்க” என்று மொழிந்ததும் மேகாவின் பார்வை இருவர் மீதும் மாறி மாறி படிந்து காயத்ரி கூறியதை உறுதி செய்தது.

சட்டென்று தனக்கும் அவர்களுக்கும் ஒரு பெரிய இடைவெளி விழுந்ததை இதயம் உணர்ந்தது.

“சைத்துக்கு இதெல்லாம் பிடிக்கலை. ப்ரின்சி ரெக்வஸ்ட் பண்ணி கேட்டதால மாமாவ வர சொல்லி இருக்கான். என் அப்பாவ வர வைக்க தான் நினைச்சோம் பட் லாஸ்ட் மினிட்ல அவருக்கு அஸெம்ளி போக வேண்டியது இருந்தது அதான் மாமாவயே வர வச்சிட்டோம்” என்று காயு பொழிந்ததும்,

காயுவின் தந்தையும் ஏதோ ஒரு பெரிய பதவியில் இருக்கும் அரசியல்வாதி என்று புரிந்தது.

“ஓ…” என்று கேட்டு கொண்டவளுக்கு வார்த்தையே வரவில்லை.

துறைத்தலைவர் முதலமைச்சரோடு சேர்த்து அவர்களுக்கும் முன் வரிசையில் இடம் தர,

காயு, “வா இப்படி உட்காரலாம்” என்று இருக்கையை காண்பித்தாள்.

சடுதியில் எல்லோரும் அந்நியமாகி போன உணர்வில் இருந்தவள்,

“இல்லை… இல்லைக்கா நீங்க உட்காருங்க. நான் என் ஃப்ரெண்ட்ஸோட உட்கார்றேன். இல்லைனா அவங்க கோச்சுபாங்க” என்று அந்த கூட்டத்தில் இருந்து விலகி தனியே வந்துவிட்டாள்.

அந்த கணம் அவளுடைய க்யூட்டனிடமிருந்தும் விலகிவிட்ட உணர்வு.

அந்த கூட்டத்தையும் அவர்கள் இருவருக்கும் கிடைக்கும் மரியாதையையும் கண்டவளுக்கு தனக்கும் அவர்களுக்கும் இருந்த வேறுபாடு புரிந்தது.

தான் இப்படி தூரத்தில் இருந்து வேடிக்கை பார்க்கும் அளவில் தான் இருக்கிறோம் என்று தெரிந்தது.

சைத்தன்யா என்பவன் ஒரு பெரிய பணக்கார வீட்டு பிள்ளை என்று தான் எண்ணியிருந்தாள்.

ஆனால் முதலமைச்சரின் மகனாக இருப்பான் என்று கிஞ்சிற்றும் சிந்தித்திருக்கவில்லை.

முதலிலே அவனுடைய பணவளத்தை பார்த்து விலகி இருக்க எண்ணுபவளுக்கு அவனது இந்த அரசியல் பின்புலம் மேலும் அச்சுறுத்தியது.

அவனுக்கு தனக்கும் எந்தவிதத்திலும் ஒத்துவராது என்று சிந்தை பிறந்த கணம் உள்ளுக்குள் ஏகமாய் அதிர்ந்து போனாள்.


‘இது எப்போதிலிருந்து? அவன் எப்படி‌ தனக்குள் இந்தளவு ஊடுருவி போனான்?’ என்று வினா வர அவளிடம் பதிலில்லை.

சிறிதான பிடித்தம் என்று தானே அது எப்போதிலிருந்து நேசம் எனும் படிக்கு முன்னேறியது.

அவனுடன் தன்னை இணைத்து பார்க்கும் அளவிற்கு தன்னை எது எடுத்து சென்றது என்று புரியவில்லை.

மீண்டும் விழிகள் அவனுக்கு அங்கே கொடுப்படும் ராஜ மரியாதையை கவனிக்க,

‘ம்ஹூம் இது எந்த காலத்திலும் நடக்காது. அவன் எங்கே? நீ எங்கே?’ என்று மனசாட்சி வினா தொடுக்க,

உள்ளுக்குள் சொல்ல முடியாத அச்சம் ஒன்று அடிவயிற்றில் இருந்து கிளர்ந்து எழ விறுவிறுவென அங்கிருந்து நகர்ந்துவிட்டவளுக்கு தன் தகுதிக்கு மீறி ஆசைப்படுவது தவறு என்று புரிந்தது.

தன்னை மீறி வந்துவிட்ட கண்ணீரை முயன்று அடக்கியவள் முகத்தை நன்றாக கழுவிவிட்டு வந்து தோழிகளின் அருகில் வந்து அமர்ந்துவிட்டாள்.

சரண்யா, “என்னடி இப்போ தான் நாங்க கண்ணுக்கு தெரியிறோமா? இவ்வளோ நேரம் உன் சீனியர் கூடவே சுத்துன” என்று வம்பிழுக்க,

இவளிடம் மெலிதான புன்னகை தான் ஆனால் சிறிதும் உயிர்ப்பில்லை.

திவ்யா, “ஏய் மேகா உன் க்ரெஷ் பெரிய ஆள் தான் போ. மினிஸ்டர் சதாசிவத்தோட பையனாமே. ஏதோ பெரிய இடத்து பையன்னு நினைச்சுட்டு இருந்தேன் மினிஸ்டர் மகன்னு தெரியாம போச்சு. அதான் அவர்க்கிட்ட ஒரு கெத்து இருக்கும் அதெல்லாம் பிறக்கும் போதே வந்திருக்கும் போல” என்றவள்,

“இந்த விஷயம் உனக்கு முன்னாடியே தெரியுமா?” என்று வினா எழுப்ப,

“ம்ஹூம்” என்று தலையசைத்தாள்.

அவள் மேலும் ஏதோ கேட்க வர நிகழ்ச்சி துவங்கியதும் அமைதியாகிவிட்டாள்.

மேகாவிற்கு எதிலும் கவனமில்லை. மேடையை வெறித்தபடி அமைதியாக அமர்ந்து இருந்தாள்.

அரை மணி நேரம் சென்றிருக்கும் மீண்டும் ஒரு பரபரப்பு சதாசிவம் கிளம்புகிறார் போல.

எல்லோரும் எழுந்து கொண்டனர். மேகாவும் எழுந்து நின்றாள்.

முதல்வர் மேடையில் மரியாதை செய்ய அதை ஏற்று கொண்ட சதாசிவம் அங்கிருந்து கிளம்ப தயாரானார்.

பாதுகாப்பு சூழ அவர் செல்ல உடன் வந்த காயத்ரி ஓரத்தில் நின்றிருந்த மேகாவை கைப்பிடித்து அழைத்து கொண்டாள்.

அதில் அதிர்ந்த மேகா,

“அக்கா” என்றழைக்க,

“மாமா கிளம்புறாங்க வா அனுப்பிட்டு வருவோம்” என்க,

மேகாவிற்கு என்ன கூறி அதனை தடுப்பதென தெரியவில்லை.

சதாசிவம் கிளம்பும் சமயம் இவர்களிடம் கூறிவிட்டு மேகாவிடமும் ஒரு தலையசைப்பை கொடுக்க, இவளும் தலையசைத்து வைத்தாள்.

அதன் பிறகும் காயு, “வா வந்து எங்ககூட உட்காரு மேகா” என்று அழைக்க,

இவளுக்கு அவர்களிடமிருந்து மேலும் விலக தோன்றியது.

“இல்லை நான் என் ஃப்ரெண்ட்ஸ் கூட உட்கார்றேன்” என்று பதில் மொழிய,

“எப்பவும் அவங்க கூட தான இருக்க இப்போ என் பக்கத்துல வந்து உட்காரு” என்று அழைத்து சென்றுவிட வேறு வழியின்றி அமர்ந்து கொண்டாள்.

“ஏன் மேகா உன் பேஸ் ஒரு மாதிரி இருக்கு? பாலிடிக்ஸ் ஆட்கள பாத்ததும் பயந்துட்டியா?” என்று கேட்க,

“ம்ஹூம் இல்லைக்கா” என்று தலையை இடம்வலமாக அசைத்தவள்,

“நீங்களும் சீனியரும் கசின்ஸ்னு என்கிட்ட சொல்லை?” என்றிட,

“இல்லை நாங்க கசின்ஸ் இல்லை. என் அப்பாவும் சைத்து அப்பாவும் சின்ன வயசுல இருந்தே ப்ரெண்ட்ஸ் அதுனால கூப்டு பழகிடுச்சு‌” என்றவள்,

“அதுவுமில்லாம எங்க ரெண்டு பேருக்கும் மேரேஜ் பண்ணி வைக்கிற ஐடியா அவங்களுக்கு அதான் மருமகளேன்னு ஆசையா கூப்பிடுவாரு” என்றவளுக்கு தன் பதிலினால் ஒருத்தி சத்தமின்றி மரித்து போய் கொண்டிருப்பதை அறியவில்லை.

************

மேகா தன் காதில் விழுந்தது உண்மையா என்று நம்பவியலாது திகைத்து அவனை காண,

“ஐ செட் கிவ் மீ யுவர் மொபைல்” என்று சைத்தன்யா அழுத்தி கூற,

“அது… நான்… என்னோடது” என்று உளரியவளுக்கு என்ன கூறுவதென்று உண்மையாகவே தெரியவில்லை.

அதற்கும் மேல் அவளது அலைபேசி அதனை எப்படி கொடுப்பாள்.

அதில் தான் அவனுடைய புகைப்படம் இருக்கிறதே. அதனை அவன் காண நேர்ந்தால் என்று எண்ணவே உள்ளுக்குள் ஒரு பிரளயம் பிறந்தது.

ஒருவாராக தைரியத்தினை வரவழைத்தவள்,

“ஏன் மொபைல் எப்படி நீங்க… அது பழைய மொபைல்” என்று திக்கி திணறி கேட்டுவிட,

“நீதான உன் மொபைல யூஸ் பண்ணிக்க சொன்ன மேகா?” என்று அவன் அழுத்தி கேட்க,

‘ஆமாம்’ என்று இவளது தலை மேழும் கீழும் அசைந்தது.

“தென் வாட்” என்று சைத்தன்யா ஒற்றை புருவத்தை உயர்த்தினாள் இறக்க,

இவளுக்கு ஒரு பூகம்பம் பூத்தது அவனது பாவனையில். ஒரு கணம் செய்வதறியாது நின்றுவிட்டாள்.

சைத்தன்யா ஒரு முறை குனிந்து தன்னுடைய கைக்கடிகாரத்தை பார்க்க,

இவளுக்கு புரிந்தது எனக்கு நேரமாகிறது என்னுடைய நேரத்தை வீணாக்காதே என்று உணர்த்துகிறான் என்று.

ஆனால் இவள் தான் என்ன செய்ய இயலும். கையை பிசைந்தபடி அவனை காண,

அவனது கை அவளை நோக்கி நீண்டது.

இதற்கு மேல் எதுவும் செய்ய இயலாது என்று எண்ணியவள்,

“சிம்மை எடுத்துட்டு தர்றேன்” என்று தனது அலைபேசியை திறக்க முயற்சித்த கணம் அங்கே ஒரு அலைபேசியின் கானா இசைத்தது.

அதில் மேகாவின் தலை நிமிர,

தனது பேன்ட் பாக்கெட்டில் இருந்த அலைபேசியை எடுத்த சைத்தன்யா பேச துவங்கினான்.

அவனது கையில் இருந்த புத்தம் புது அலைபேசியை கண்டவளது விழிகள் அதிர்ந்து விரிந்தது.

‘அதற்குள் புது அலைபேசியை வாங்கிவிட்டாரா? அதுவும் அதே மாடல் அலைபேசி?’ என்று எண்ணம் பிறக்க,

‘கல்வி துறை அமைச்சரது மகனுக்கு ஒரு அலைபேசியை வாங்குவது என்ன பெரிய விடயமா?’ என்று பதிலும் தோன்றியது.

மேலும், ‘புது அலைபேசியை வைத்து கொண்டே ஏன் என்னுடைய அலைபேசியை கேட்டார்?’ என்று சிந்தை வர,


‘அவர் எங்கே கேட்டார் நீதானே கொடுப்பதாக கூறினாய்?’ என்று மீண்டும் பதில் வந்தது.

அலைபேசியில் பேசி கொண்டு இருந்தாலும் சைத்தன்யாவின் விழிகள் மேகாவைத்தான் அவதானித்து கொண்டு இருந்தது.

இரண்டு நிமிடங்கள் பேசி முடிப்பதற்குள் இவளுக்குள் ஓராயிரம் சிந்தனை வந்து போனது.

அழைப்பை துண்டித்ததும் அவனுடைய பார்வை அவள் மீது படிய,

மேகா மனதிற்குள், ‘மறுபடியும் முதல்ல இருந்தா? பேசாம போனை கொடுத்துடலாமா?’ என்று யோசித்த கணம்,

“நான் மும்பை ப்ரான்ச்கு கான்டாக்ட் செஞ்சு வாரண்டி க்ளைம் பண்ணி மொபைல வாங்கிக்கிறேன். லீவ் தட்” என்று சைத்தன்யா மொழிய,

“இல்லை அது…” என்று துவங்கியவள் சடுதியில்,

“ஓகே சார்” என்று முடித்துவிட்டாள்.

மறுத்து பிறகு மீண்டும் உன்னுடைய அலைபேசியை கொடு என்றுவிட்டாள் என்ன செய்வது என்று நினைத்து தலை அசைத்தவள் அவனிடம் கூறிவிட்டு வெளியே வந்துவிட்டாள்.

வெளியே வந்ததும் தான் நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது. என்னவோ அவனது அருகாமை தன்னை வெகுவாக பாதிப்பது அவளுக்கு புரிந்தது. இது நல்லதற்கல்ல என்று தெரிந்தது.

இனி அவனை நேரடியாக பார்ப்பதை தவிர்த்துவிட வேண்டும் என்று எண்ணி கொண்டாள்.

இங்கு மேகாவை கண்டதும் காவ்யா, “என்னடி சார் என்ன சொன்னாரு?” என்று வினவ,

மேகா நடந்ததை கூறினாள்.

“என்னது அதுக்குள்ள திரும்பவும் ஏழு லட்சத்துக்கு மொபைல் வாங்கிட்டாரா?” என்று காவ்யா அதிர,


இவளது தலை மேலும் கீழும் அசைந்தது. சைத்தன்யாவின் பின் புலத்தை அறிந்திருந்த தனக்கே சிறு அதிர்வு தோன்றியிருக்க கவி அதிர்வதில் தவறில்லை என்றே மேகாவிற்கு தோன்றியது.

“நாம இந்த பதினைஞ்சாயிரம் மொபைல் உடைஞ்சாலே சரி பண்ணி வைக்க தான் நினைப்போம். இவரு ஏழு லட்சம் மொபைல் உடைஞ்சதும் இன்னொரு ஏழு லட்சத்துக்கு மொபைல் வாங்கி இருக்காரு. சமுகம் ரொம்ப பெரிய இடம் போல” என்று காவ்யா கூற,

மேகாவும் அதனை ஆமோதித்தாள்.

பிறகு, “சரி தான் அவங்ககிட்ட இருக்கு வாங்குறாங்க நமக்கென்ன வேலையை பார்ப்போம்” என்க,

“உடைச்சிட்டு சரி பண்ணி தராம இருக்கது எனக்கு தான் கஷ்டமா இருக்கு” என்று மேகா இயம்பினாள்.

“அடியே அதான் அவரே சரி பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டாருல அப்புறம் என்ன? ஐஞ்சாயிரம் பத்தாயிரம் இல்லை முழுசா மூனு லட்சம் நமக்கு அது பெரிய அமௌன்ட். கில்டியா பீல் பண்ணாத” என்றுவிட,

மேகாவும் அதற்கு மேல் அதனை பற்றி பேசவில்லை இருந்தும் உள்ளத்தின் ஓரம் ஒரு குற்றவுணர்வு இருந்து கொண்டே இருந்தது.

“மேகா இந்த க்ளிப் அழகா இருக்குல?” என்று காவ்யா வினவ,

“ஹ்ம்ம் நல்லார்க்கு” என்ற மேகாவின் விழிகள் அந்த கடையை சுற்றி வந்தது.


அலுவலகம் முடிந்து
போகும் வழியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு இருவரும் சென்று இருந்தனர்.

காவ்யாவிற்கு காதணி க்ளிப் போன்றவற்றின் மீது ஈடுபாடு அதிகம் இருப்பதால் அடிக்கடி மேகாவை அழைத்து கொண்டு கடைக்கு செல்வாள்.

“கவி நீ கேட்ட பட்டர்பிளை க்ளிப் இங்க இருக்கு” என்று மேகா மொழிய,

“பட்டர்பிளை க்ளிப் கிடைச்சிடுச்சா?” என்று ஆர்வமாக வந்தவள் தனக்கு பிடித்த நிறங்களில் எடுத்து தன் கையில் இருந்த கூடையில் நிரப்பி கொண்டாள்.

மேகாவும் தனக்கு தேவையான சில பொருட்களை எடுத்து போட்டு கொண்டிருக்க, தனக்கு பின்னே நிழலாடுவதை உணர்ந்து திரும்பினாள்.

அங்கே புன்னகையுடன் அழகாய் நின்றிருந்தவன், “ஹாய்” என்றிட,

“சூர்யா” என்றவளது முகத்தில் மகிழ்ச்சி மின்னியது.

“எப்போ வந்த?” என்று மேகா வினவிட,

“இப்போ தான் ஏர்போர்ட்ல இருந்து டேரெக்டா இவளை பாக்க தான் வந்தேன்” என்றிட,

“மேடம் கோவமா இருக்காங்க” என மேகா இயம்ப,

“அதை சரி பண்ண தான் வந்திருக்கேன்” என்று கண்சிமிட்டினான் சூர்யா.


“சரிதான்” என்று மேகா மென்னகைக்க,

“மேகா…” என்றபடி அருகில் காவ்யா வர,

சூர்யா சடுதியில் அருகில் இருந்த தடுப்பின் பின்புறம் மறைந்து கொண்டான்.

“என்னடி?” என்று மேகா வினவ,

“அங்க ஒரு பையன் செம்மயா இருக்கான். அவனை தான் சைட் அடிச்சிட்டு இருந்தேன் உன்கிட்ட காட்டலாம்னு கூப்டேன்” என்க,

மேகா நின்ற இடத்திலிருந்தே எட்டி காவ்யா கூறியவனை கண்டவள் சிரிப்புடன்,

“இவனை விட இந்த சைடு இருக்கவன் சூப்பரா இருக்கான் பாரு” என்றிட,

“எங்க?” என்று தடுப்பின் புறம் எட்டி பார்த்தவள் பார்த்த வேகத்திலே திரும்பி,

“ம்ஹூம் நான் அவனையே பாத்துக்கிறேன்” என்று நகர்ந்துவிட,

“ப்பா அனல் இங்க அடிக்கிது” என்று சிரிப்புடன் வந்த சூர்யா கூறினான்.

“ஆமா சரி பண்ண கொஞ்ச கஷ்டப்படணும்” என்க,

“அதெல்லாம் என் செல்லத்துக்காக பட்றலாம்” என்றவன் அவள் பின்னே சென்றான்.

மேகா, ‘சரி’ என்பதாய் தலை ஆட்டிவிட்டு தன்னுடைய பணியை கவனித்தாள்.

இங்கு பதினைந்து நிமிடங்கள் கழித்து அவளை நோக்கி வந்த இருவரது முகத்திலும் புன்னகை மிளிர்ந்தது.

‘பார்த்தாயா? சமாதானம் செய்துவிட்டேன்’ என்று புருவம் உயர்த்த,

இவளும் பதிலுக்கு கீற்று புன்னகையை சிந்தினாள்.

பின்னர் மூவரும் வாங்கிய பொருளுக்கு பணம் கட்ட செல்ல,

சூர்யா காவ்யா வாங்கிய பொருட்களோடு சேர்த்து மேகா வாங்கியவற்றிற்கும் பணத்தை கொடுக்க விழைய, மேகா அதனை மறுத்துவிட்டாள்.

வெகு நாட்கள் கழித்து காதலர்கள் சந்தித்து கொள்வதால் மேகா தனிமை கொடுக்க எண்ணி,

“கவி நான் கிளம்புறேன். நீங்க டின்னரை முடிச்சிட்டு வாங்க. நான் அத்தைக்கிட்ட சொல்லிட்றேன்” என்றிட,

காவ்யா, “ஏய் நீ எங்க போற? எங்க கூட வா” என்று கையை பிடித்தாள்.

“இல்லை டி நான் வரலை. நீங்க போய்ட்டு வாங்க” என்க,

“நீ எப்படி தனியா போவ? எங்க கூட வா” என்று மீண்டும் வற்புறுத்த,

சூர்யாவும், “மேகா எங்களோட ஜாயின்ட் பண்ணிக்கோ. லஞ்ச் முடிச்சிட்டு போகலாம்” என்று அழைத்தான்.

“இல்லை நேத்தே அம்மா அப்பா ஒரு மாதிரி தான் இருந்தாங்க. நான் போய் தான் அவங்களை சாப்பிட வைக்கணும்” என்று மொழிந்தவள்,

“ஒரு நாள் பஸ்ல போனா ஏதும் ஆகாது. நான் பாத்துக்கிறேன்” காவ்யாவிடம் கூறிவிட்டு கிளம்பிவிட்டாள்.

வெளியே வந்து சாலையை கடந்ததும் பேருந்து நிறுத்தம் இருக்க அங்கே நின்று கொண்டாள்.

இத்தனை நேரம் காவ்யாவுடன் இருக்கவும் எதுவும் தெரியவில்லை. இப்போது தனிமையில் மனது யாவையும் மீட்ட துவங்கியது.

முயன்று மனதை திசை திருப்ப பேருந்தும் வந்தது. ஏறி அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்க்க துவங்கிவிட்டாள்.

இன்னும் ஒரு மாத காலம் தான் காவ்யா
விற்கு திருமணம் முடிந்துவிட்டால் இதே போல தான் தனியாக பயணம் செய்ய வேண்டும்.

யாரும் இறுதி வரை வரப்போவதில்லை எல்லாவற்றையும் பழகி கொள்ள வேண்டும் என்று நினைத்து கொண்டவள் அலைபேசியை எடுத்து பாடலை ஒலிக்கவிட்டாள்.

வெகுநாட்கள் கழித்து அவளுக்கு பிடித்த பிரதீப் குமாரின் கோடி அருவி கொட்டுதே இவளது செவிக்குள் தேனாய் நுழைய விழிகளை மூடி இசையை அனுபவிக்க துவங்கிவிட்டாள்.
 
Active member
Messages
346
Reaction score
233
Points
43
Ethey minister paiyan ah aathadi rombha periya edam than athu than sir oda status mobile oda rate la yae theriyuthu yae 7lakhs ku marupadiyum mobile vangitan athu vum next day ah vae 😯😯😯😯
 
Top