• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,315
Reaction score
3,913
Points
113
பொழுது – 27 (இறுதி அத்தியாயம்)
மூன்று மாதங்கள் ஓடியிருந்தன. மருத்துவர் சுதி இப்போது நன்றாய் உடல் தேறி விட்டதாகவும், இனிமேல் தினமும் உடற்பயிற்சி மட்டும் காலையில் பத்து நிமிடங்கள் செய்ய வேண்டும், கால்சியம் நிறைந்த உணவுகள் உண்ண வேண்டும், நீண்ட நெடுந்தூரப் பயணங்கள் கூடாதென ஒருசில அறிவுரைகளின் படி அவளை இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம் என கூறிவிட்டார்.
சுதியின் திருப்திக்காக மேலும் சில பரிசோதனைகள் செய்து அவள் தாயாவதற்கு முழுத்தகுதியும் உண்டு என அவர் உறுதி செய்யவும், சுதி அவரிடம் தன் நன்றியை பகிர்ந்திருந்தாள்.
அதற்குப் பின்னர் நிவின், வீட்டுவேலைகளைப் பாதியாக பிரித்து மனைவியிடம் ஒப்படைத்திருந்தான். ஆனாலும் எளிதில் செய்யக் கூடிய வேலையாகத்தான் அவளுக்குக் கொடுத்திருந்தான். இவள் அவனை முறைக்க, “இப்போதானே ஹெல்த் ஓகேவா இருக்கு சுதி. ஸ்டார்டிங் சின்ன சின்ன வொர்க்கைப் பாரு. போக போக பெருசா செய்யலாம். எடுத்ததும் ஹெவி வொர்க் பண்ணக் கூடாது!” என அவன் அழுத்தம் திருத்தமாகக் கூறிவிட, இவளும் சரியென்று விட்டாள்.
திருமணம் முடிந்து இன்னும் இருவரும் விருதுநகர் செல்லவில்லை. சுதியின் உடல்நிலையைக் கருதி நிவின் மனைவியை இத்தனை நாட்கள் அழைத்துச் செல்லவில்லை. பாலுமகேந்திரா இடையில் ஒருமுறை இங்கு வந்து சென்றார். சுதி இப்போது நன்றாய் இருக்கவும் இருவரும் சென்று ஒருவாரம் அங்கு தங்கிவிட்டு வந்திருந்தனர்.
இங்கே போல நகரத்தின் இரைச்சல் எதுவும் இல்லாத அமைதியான வீடு அவளுக்கு நிரம்ப பிடித்திருந்தது. கிராமத்தில் பழமை வாய்ந்த வீடு முழுவதும் நிவினின் அம்மாவின் வாசம்தான். ஆங்காங்கே சுவர் முழுவதும் அவர்கள் மூவரும் நிறைந்து கிடந்தனர்.
மதுரையில் வாசிக்கும்போது பெரிதாய் நிவின் தாயைப் பற்றி உரைத்தது இல்லை. ஆனால் இங்கே வார்த்தைக்கு வார்த்தை அம்மா என்ற விளிப்பை அவளால் உணர முடிந்தது. அவனுடைய வார்த்தைகளில் இருந்தே தாயின் மீதான பிடித்தம் அவளுக்குப் பிடிபட்டது. தாய்க்கான அவனின் தேடலும் ஏக்கமும் புரிந்தாலும், இல்லாத ஒருவரை எவ்வகையிலும் நிரப்ப முடியாதே. அவன் எப்போதாவது உணர்ச்சி ததும்ப பேசினால், இவள்தான் அணைத்து ஆற்றுப்படுத்துவாள். சிறு சிறு அணைப்பு, நெற்றி முத்தம் என அவர்களுக்கு இடையேயான பிணைப்பு இந்த சில நாட்களில் அதிகரித்திருந்தது.
இடையில் ஒருமுறை மறுவீட்டு விருந்திற்காக இருவரும் சுதியின் வீட்டிற்கு சென்று வந்தனர். அதற்குப் பின்னர் சுதி உடல்நிலையைக் காரணம் காண்பித்து கணவன் அவளை அங்கு அனுப்ப மறுத்துவிட, இவள் அலைபேசியில் அவர்களுடன் உரையாடுவாள். சிறுவர்களைக் காண ஏங்கினால், காணொளி அழைப்பை விடுப்பாள், அவ்வளவுதான். இப்போதுதான் வெளி உலக காற்றை நீண்ட மூன்று மாதங்களுக்குப் பின்னர் சுவாசிக்கிறாள்.
விருதுநகரிலிருந்து மதுரைக்கு வந்து இரண்டு நாட்கள் கடந்திருந்தது. சுதி காலையில் எழுந்ததும் அலைபேசியிலிருந்த தாய் தந்தை புகைப்படத்தைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு வெளியே வர, நிவின் குளித்து முடித்துக் குளம்பி அருந்திக் கொண்டே செய்தியில் ஆழ்ந்திருந்தான்.
அவனைப் பார்த்ததும் சுதி ஆர்வமாய் கணவனருகே செல்ல, “பிரஷ் பண்ணிட்டுத்தான் காஃபி குடிக்கணும் சுதி!” என அவன் முறைக்க, இவளுக்கு முகம் மாறியது.
‘சரியான பீ‌.டி வாத்தியாரைக் கட்டியிருக்கேன் நான். இன்னைக்குப் பொண்டாட்டிக்கு பெர்த் டே விஷ் பண்ணணும்னு தோணுதா இந்த மனுஷனுக்கு. ஒருவேளை மறந்திருப்பாரோ?’ என எண்ணிக் கொண்டே பல்லை விலக்கி முகம் கழுவிவிட்டு அவனருகே அமர்ந்து குளம்பியைப் பருகினாள்.
“என்ன குக் பண்ணலாம் சுதி?” என அவன் கேட்க, “ஹம்ம்... வெஜிடபிள் பிரியாணி வித் பன்னீர் மஞ்சூரியன்!” என அவள் ஆசையாய்க் கூற, “ஓகே... பண்ணிடலாம்!” என எழுந்தான் அவன். இவளும் அவனுக்கு உதவி செய்ய, ஒரு மணி நேரத்தில் சமைத்து முடித்திருந்தனர். சுதி நிமிடத்திற்கு ஒருமுறை அவன் முகத்தையே பார்த்திருந்தாள்.
“என்ன சுதி... எதாவது சொல்லணுமா? ஏன் என் முகத்தையே பார்த்திட்டிருக்க?” என அவன் கவனித்துக் கேட்டுவிட, “இல்லையே... ஒன்னும் இல்லங்க. நான் போய் குளிச்சிட்டு வரேன்!” என்றவள் தலலக்கு குளித்து முடித்து அன்றைக்கு நிவின் அவளை உடுத்த சொல்லிய புடவையை எடுத்து அணிந்து கொண்டாள்.
மடிப்பு வைக்கத் தோன்றாது போக, ஒற்றையாய் தோளில் வழிய விட்டாள். தலையை உலர்த்தி தளர்வாய் பின்னலிட்டு நெற்றியில் பொட்டை வைத்துவிட்டு கண்ணாடியில் தன்னை ஒருமுறைப் பார்த்து திருப்திப்பட்டுக் கொண்டாள் பெண்.
அறையிலிருந்து அவள் வெளியே வர, நிவின் அலுவலகம் செல்லத் தயாராகி அமர்ந்திருந்தான். மனைவியைப் பார்த்ததும் புருவத்தை உயர்த்தியவன், “யூ லுக் ப்ரிட்டி இன் திஸ் சேரி சுதி!” என அவன் கூற, இவள் முகமும் அகமும் மலர, தலையை அசைத்து அதை ஏற்றுக் கொண்டாள்.
“வெளிய எங்கேயும் போறீயா சுதி?” அவன் கேட்க, “ஹம்ம்... கோவிலுக்குப் போகலாமாங்க. உங்களுக்கு டைமாகிடுச்சா. டென் மினிட்ஸ் போய்ட்டு, அப்படியே ஆஃபிஸ் போற வழி தானே, அம்மா வீட்ல இறக்கி விட்றீங்களா?” எனக் கேட்டுக் கொண்டே உணவு மேஜையில் அமர்ந்தாள்.
“போகலாம்... டென் மினிட்ஸ் தானே. டைம் இருக்கு சுதி. போய்ட்டு போகலாம்!” என்றவன் சில நொடிகள் நிறுத்தி, “எனிதிங்க் ஸ்பெஷல்?” எனக் கேட்டான் யோசனையாக.
வாய்வரை வந்த வார்த்தைகளை விழுங்கியவள், “வெள்ளிக்கிழமை, பிரதோஷம் வேற. அதான்ங்க!” என வலிய புன்னகைத்தவள், உணவை உண்ண அவனும் சரியெனக் கேட்டுக் கொண்டான்.
‘மறந்துவிட்டாரோ? இருக்கும்... இருக்கும். சே, சர்ப்ரைஸ் எதுவும் பண்ணுவாரா இருக்கும்!’ என ஒருவாராக மனதை சமாதானம் செய்து உண்டுமுடிய, இருவரும் மீனாட்சி வணிகவளகாத்திற்கு அருகேயிருந்த விநாயகர் கோவிலுக்குச் சென்றனர்.

சுதி புன்னகையுடன் அரச மரத்து பிள்ளையாரைப் பார்த்தாள். ஒவ்வொரு முறையும் மனதிலிருப்பதைக் கொட்ட அவரிடம்தானே வருவாள். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு மட்டும் இருக்கிறாரே என மனம் சில கணங்களில் சுணங்கும். ஆனாலும் அனைத்தையும் அமைதியாகக் கேட்டவர், அவள் கேட்டதை விட அதி அற்புதமான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்திருக்கிறார்.
இந்த நொடி சுதியின் மனதில் பெரிதாய் எந்தவித சஞ்சலங்களும் இல்லை. கண்களில் கடவுளை நிரப்பிக் கொண்டாள்.

சந்தனமும் குங்குமும் நாசியை நிறைக்க, விழிமூடி மனமுருக அவரிடம் இந்த வாழ்க்கைக்கான நன்றியை நவில்ந்தாள். இதுபோலொரு அன்பான துணை அமைத்து தருவதற்காக்ததான் தன்னை கடவுள் சோதித்திருக்கிறார் என என எத்தனையோ முறை யோசித்து புன்னகைத்திருக்கிறாள். நிவினுக்கு நேரமாவதை உணர்ந்தவள், சிவனிடமும் நன்றியை பகிர்ந்துவிட்டு இருவரும் கோவிலிலிருந்து கிளம்பினர்.

சந்திராவின் வீட்டிற்கு முன்னே அவளை இறக்கிவிட்டவன், “ஈவ்னிங் பிக் பண்ணிக்கிறேன்!” எனக் கூறி அகல, இவள் அவன் சென்ற திசையையே முறைப்புடன் பார்த்திருந்தாள்.
மாலை வரைக் காத்திருந்து பார்க்கலாம் என எதிர்பார்த்து ஏமாந்த மனம் அவளுக்கு அறிவுரை வழங்க, அதை தலையில் தட்டி அனுப்பாது ஏற்றுக் கொண்டே உள்ளே நுழைந்திருந்தாள்.
சந்திரா இவளின் வருகையை எதிர்பார்க்கவில்லை போல. முகம் மலர்ந்தவர், “வா சுதி... வா, சொல்லாம கொள்ளாம வந்திருக்க?” என புன்னகையுடன் கேட்டார்.
‘இவர்களும் தன்னுடைய பிறந்தநாளை மறந்துவிட்டார்களோ?’ என மனம் சோர்ந்து போக, முகம் பொலிவிழக்கத் தொடங்கியது.
‘இதென்ன சின்ன பிள்ளை மாதிரி சுதி. உனக்கென்ன டீனேஜா? ஏதோ குழந்தை மாதிரி யாரும் விஷ் பண்ணலைன்னு வருத்தம் வேற?’ என அதட்டி மனதை அடக்கியவள், “ஏன் மா... நான் சொல்லாம வரக் கூடாதா? கட்டிக் கொடுத்துட்டா, மகளை உள்ள விட மாட்டீங்களா?” என அவரிடம் வம்பளத்தாள்.
“அடிப்போடி... இதென்ன கேள்வி? என் மக, எப்போ வேணா பொறந்த வீட்டுக்கு வரலாம். போகலாம்!” என்ற சந்திரா, “சாப்டீயா சுதி? இட்லி இருக்கு, சாப்பிடு!” என அப்பளம் தேய்க்கும் வேலையைப் பாதியிலே விட்டுவிட்டு எழ முயன்றார்.
“வயிறு முட்ட சாப்பிட்டிருக்கேன் மா. மதியம் சாப்பிட்றேன்!” என அவள் பதிலளிக்க, சௌம்யா அறையிலிருந்து குளித்து முடித்து வெளியே வந்தாள். என்ன முயன்றும் சுதியின் முகம் அவளிடம் ஒரு வாழ்த்தை எதிர்பார்த்தது. சென்ற வருடமெல்லாம் ஏனோ தானோவென கடந்த பிறந்தநாள் இன்று ஏன் இத்தனை எதிர்பார்க்க வைக்கிறது என அவளுக்கே ஆச்சர்யமாய் இருந்தது.
“ஹப்பா... எங்க, வீட்டுப் பக்கமே வராம இருந்துடுவீயோன்னு நினைச்சேன் சுதி. பரவாயில்லை, இங்க பொறந்த இடம் ஒன்னு இருக்குன்னு ஞாபகம் இருக்கு போல!” என அவள் முகத்தை நொடித்துக் கொள்ள, இவள் சிரித்தாள். மூன்று மாதங்கள் இடையில் விழுந்திருந்த திரையைக் கடினப்பட்டு விளக்கி, கதை கதையாக சுதி கூற, அவர்கள் இருவரும் கேட்டனர். ஒரு சில விஷயங்கள் இவள் அங்கிருந்த வாழ்க்கை முறையை அதிசயித்து கூற, அவர்களது முகமும் வியப்பில் ஆழ்ந்தது.
மதிய உணவை உண்டு முடித்து நீண்ட நாட்கள் கழித்து இந்த வீட்டில் விச்ராந்தையாய் உறங்கி எழுந்த போது சுதியின் மனம் நிறைந்து போயிருந்தது. யாரும் வாழ்த்தவில்லை என்ற குறையைத் தவிர பெரிதாய் ஏதுமில்லை. பரவாயில்லை, நெடிய மூன்று மாதங்கள் கழித்து இங்கே வந்ததில் மனம் மற்றவற்றைக் கிடப்பிலிட்டது.
மாலை ருத்ராவும் தவாவும் வந்துவிட, இவளைக் கையில் பிடிக்க முடியவில்லை. சின்னவளைத் தூக்கி ஆசைத் தீரக் கொஞ்சி விளையாடி என நேரம் ஆறைக் கடந்திருக்க, நிவின் இவளை அழைக்க வந்தான். இரவு உணவை இருவரும் அங்கேயே முடித்துக் கொண்டு வீட்டை அடைய ஒன்பதுக்கு மேலாகியிருந்தது.
சுதிக்கு கொஞ்சம் களைப்பாக இருக்க, உள்ளே நுழைந்ததும் அப்படியே நீள்விருக்கையில் காலை நீட்டி அமர்ந்துவிட்டாள்.‌
“டயர்டா இருக்கா சுதி?” என நிவின் கேட்க, “ச்ச... இல்லங்க. சும்மா உக்கார்ந்திருக்கேன்!” என்றாள் சோபையாய் புன்னகைத்து.
“ஹம்ம்!” என்றவன் அறைக்குள் நுழைந்து உடை மாற்றி தன்னை சுத்தம் செய்து கொண்டு வந்து அவளுக்கு பாலைக் காய்ச்சி முந்திரி, பாதம் எல்லாம் போட்டு ஸ்மூத்தி செய்து கொடுத்தான். தினமும் இரவில் படுக்க செல்லும் முன்னர் அவளுக்கு சத்தான எதையாவது கொடுப்பது கணவனின் வழக்கம்.
நிவின் அருகே அமர, அவன் மீது காலைப் போட்டு சுதி ஒருபுறம் சாய்ந்தமர்ந்து கொண்டே பாலை மெதுவாய் அருந்த, கணவன் மென்மையாய் இவளது காலைப் பிடித்துவிட்டான். ஐ லவ் யூ, ஹேப்பி பெர்த் டே, ஐ வில் ஆல்வேய்ஸ் வித் யூ என்ற எவ்வித அரிதாரமும் இல்லாத மிகத் தூய்மையான அன்பிற்கு சொந்தக்காரன் இந்த நிவின். அவன் பிறந்தநாள் வாழ்த்து சொல்லவில்லை என்ற குறை கூட வெள்ளைக் காகிதத்தில் பட்ட வெண்புள்ளியாய்தான் அவளுக்கு இருந்தது. வேலை பளுவில் மறந்திருக்கக் கூடும். அவளைக் கவனிப்பதையே பிரதானக் கடமையாய் வைத்திருப்பவனுக்கு கொஞ்சம் ஞாபக மறதி இருப்பதில் தவறொன்றும் இல்லையென நேசம் கொண்ட நெஞ்சம் வெகு சிரத்தையாய் அவன் பக்கமிருந்த நியாயங்களைத் தராசு தட்டில் அடுக்கி கோபத்தை கீழிறக்கியிருந்தது.
“போதும்ங்க...” என்றவள் குவளையைக் கழுவி கவிழ்த்தினாள். பின்னர் சேலையை உருவி தூக்கிப் போட்டாள். அது அவளைப் பார்த்து சிரிப்பதாய் ஓர் எண்ணம். அதை முறைத்தவள் இரவு உடையை மாற்றி முகத்தைக் கழுவி கண்ணாடியில் ஒருமுறை முகத்தைப் பார்த்துக் கொண்டே நீண்ட பின்னலை கையில் சுற்றிக் கொண்டையிட்டாள்.
நிவின் உள்ளே வந்து கட்டிலில் கால் நீட்டி அமர்ந்து அலைபேசியில் ஏதோ பார்க்க, இவள் அவனுக்கு அருகே சென்று மறுபுறம் தலையைத் திருப்பிப் படுத்துக் கொண்டாள். சில பல நிமிடங்களில் விழிகள் உறக்கத்திற்கு தயாராக, “ஹேப்பி பெர்த் டே டி பொண்டாட்டி!” என்ற கரகரத்தக் குரலும் கன்னத்தில் புதைந்த உதடுகளும் சொர சொரவென்றிருந்த அவன் முட்தாடியும் அவளது தூக்கத்தை நொடியில் உசுப்பிவிட,கண நேரத்தில் எழுந்தமர்ந்திருந்தாள் சுதி.
“ஹேப்பி பெர்த் டே டி பொண்டாட்டி!” என மீண்டும் அவன் கூற, “ஷப்பா... இப்பவாது என் புருஷனுக்கு ஞாபகம் வந்துச்சே. எங்க விஷ் பண்ணாமலே போய்டுவீங்களோன்னு பயந்துட்டேன் நான்!” என்றவள் முகம் சிரிப்பில் களித்திருந்தது. வெண்ணிற காகிதத்தில் இருந்த வெண்ணிறக் கரையும் கரைந்திருந்தது‌. இந்த நாளிற்கான மொத்த மகிழ்ச்சியும் நிவின் வார்த்தைகளில் குவிந்திருந்தது.
நிவின் உதடுகளில் குறும்பான புன்னகை ஏறியது. “ஏன் ஞாபகம் இல்ல. ஒன் வீக் முன்னாடில இருந்தே என் பொண்டாட்டி பெர்த் டேன்னு மனசுக்குள்ள பிக்ஸ் பண்ணிட்டே இருந்தேன்!” என்றவனை இவள் கேள்வியாகப் பார்த்தாள்.
“அப்புறம் ஏன் விஷ் பண்ணலை!” சுதியிடம் முறைப்பு படர்ந்தது.
“ஹம்ம்... டிட் ஃபார் டேட் டி!” என அவன் விஷமமாய் சிரிக்க, இன்னுமே சுதிக்கு எதுவுமே விளங்கவில்லை.
“என்ன டிட்... என்ன டேட்?” என அவள் கேட்க, “உன் போனை எடுத்து என் வாட்சப் சேட்க்குள்ள போ சுதி!” என்றவன் வெகு கவனமாய் மனைவியிடமிருந்து விலகி எழுந்து நின்றான்.
புலனத்தில் அவன் எண்ணின் செய்திக்குள் நுழைந்தவள் நிமிர்ந்து பார்க்க, “என் பெர்த் டே அப்போ எத்தனை மணிக்கு நீ விஷ் பண்ணேன்னு செக் பண்ணு!” என்றவனின் குரலில் இவளுக்கு ஏதோ புரிவது போலிருக்க, “டென் டென்க்கு விஷ் பண்ணி இருக்கேன்!” என்றாள்.
“ஹம்ம்...நீ மட்டும் மார்னிங்கே பெர்த் டேன்னு தெரிஞ்சும் நைட் போனா போகுதுன்னு விஷ் பண்ணுவ. நான் மட்டும் காலைல முத ஆளா விஷ் பண்ணணுமா? அதான் சின்ன பழிவாங்கல்!” என வில்லத்தனமாய் சிரித்தவனைக் கண்டு இவளுக்குப் பொசுபொசுவென கோபம் பொங்கியது.
“யோவ்... உன் விஷ்ஷே வேணாம். போயா!” என அவனை வாயில் அரைத்துக் கொண்டே கோபமாய் படுத்துப் போர்வையைப் போர்த்திக் கொண்டாள். நிவின் சிரிப்பு சத்தம் இன்னுமே அவளைத் தொடர, போர்வையை விலக்கி அவனை முறைத்தாள்.
“சுதி... இந்தா பேசு!” என அவன் அலைபேசியை நீட்ட, யோசனையுடன் வாங்கி காதில் வைத்தாள்.
“ஹேப்பி பெர்த் டே சுதி... ஹேப்பி பெர்த் டே அத்தை!” என வாண்டுகளும் பெரியவர்களும் ஒரு சேரக் கத்த, இவளுக்கு மெல்ல விழிகள் கலங்கின.
“தேங்க் யூ செல்லங்களா. தேங்க்ஸ் அண்ணி, அம்மா!” என்றாள் குரல் கனிந்திருந்தது.
“ஹம்ம்... மார்னிங்கே எனக்குப் பெர்த் டேன்னு அனௌன்ஸ் பண்ணாத குறையா புதுப் புடவையைக் கட்டீட்டு வந்து சின்னப் புள்ளை மாதிரி நின்னவளை யாரும் பார்த்தீங்களா? பாவம் புள்ளை. நாங்க யாரும் விஷ் பண்ணலை. எல்லாம் அவ புருஷனோட வேலை!” என சௌம்யா சிரிக்க, இங்கே இவளுக்கு முகம் சிவந்தது.
“ச்சு... போங்க அண்ணி!” என அவள் சிணுங்க, மேலும் இரண்டு நிமிடங்கள் பேசிவிட்டு சுதி அலைபேசியை வைக்க, பின்னிருந்து அவளை இறுக்கி அணைத்தான் கணவன்.
“ஹேவ் அ கிரேட் இயர் சுதி!” என்றவன் அன்பாய்க் கூற, முழங்கையால் அவனை இடித்தவள், “உங்களை ஊர்ல இருக்க எல்லாரும் பெரிய மனுஷன்னு மதிக்குறாங்க. நல்லவர், வல்லவர்னு சொல்றாங்க. ஆனால் இப்படி சின்னப் புள்ளைத்தனமா நடந்துக்குறீங்களே!” என இவள் மெல்லிய சிருங்கார சிணுங்கலுடன் கூற, நிவின் கொஞ்சம் சிதறியிருந்தான்.
கரகரத்த தொண்டையை சரி செய்தவன், “என் பொண்டாட்டிக்கிட்டே மட்டும் நான் இப்படித்தான். சின்னபுள்ளைதான்!” என்றான் அவளது கழுத்தில் வாசம் பிடித்து. சுதியின் அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பறந்தது.
“ஆமா... ஆமா. முசுட்டு நிவினுக்குள்ள இப்படியொரு குழந்தை!” என அவள் சுகமாய் சலிக்க, கணவன் சிரிப்புடன் அவளிடமிருந்து பிரிந்தான்.
“சரி... வா, கேக் வெட்டலாம்!” என்றவனை இவள் நம்பவில்லை.
“பொய் சொல்லாதீங்க!” என இவள் முகத்தை தூக்க, இளமுறுவல் ஒன்றுடன் வெளியே சென்று கையில் அண்ணிச்சலுடன் வந்தான்.
“ஹெப்பி பெர்த் டே மிஸஸ் நிவின்!” என்ற எழுத்துடன் இருபத்து ஆறு எனப் பொறிக்கப்பட்டிருக்க, இவள் அணிச்சலையும் கணவனையும் மாறி மாறி கண்களில் நிரப்பிக் கொண்டாள்‌.
“கட் பண்ணு சுதி...” என அவன் நீட்டிய கத்தியை வாங்கி வெட்டியவள் நிவினுக்கு ஊட்டிவிட்டாள். அவனும் மனைவிக்கு ஊட்டினான்.
“இது மாதிரி பெர்த் டேக்கு கேக் எல்லாம் கட் பண்ணதே இல்லங்க. எனக்கு விவரம் தெரிஞ்சு இதான் ஃபர்ஸ்ட் டைம்!” என்றவளை வாஞ்சையாய்ப் பார்த்தான்.
“இனிமே எவ்ரி இயர் செலிபிரேட் பண்ணலாம்!” என்றவன் பேச்சில், “நம்பிட்டேன் போங்க... இதெல்லாம் புது பொண்டாட்டி மவுசு!” என்றவளின் கூற்றில் மனோகரமான முறுவல் அவன் உதடுகளில் தொற்றியது‌.
“அஹம்... ஹக்கும். ஆமா, ஆமா புது பொண்டாட்டி தான்!” என பார்வையால் மென்று தின்ற முயன்றவனை அப்போதுதான் கவனித்த சுதியின் முகம் சூடேறியது.
“நான் கேக்கை வச்சுட்டு வரேன் சுதி. கப்போர்ட்ல செகண்ட ஷெல்ப்ல ஒரு சேரி இருக்கு. அதை கட்டிக்கோ!” என அவன் நகர, “ஒரு நிமிஷங்க...” என்றவள் அணிச்சலில் கொஞ்சம் எடுத்து அவன் முகம் முழுவதும் அப்பிவிட, நிவின் அவளைத் தீயாய் முறைத்தான்.
“லேட்டா விஷ் பணணத்துக்கு பனிஷ்மெண்ட் தர வேணாமா?” என சுதி இப்போது வில்லத் தனமாய் சிரிக்க, “என் பனிஷ்மெண்ட் என்னென்னு வந்து சொல்றேன் டி...” என அவன் கண்ணடித்து நகர, இவளுக்கு வெட்கம் வந்தது.
“போயா...போயா. கல்யாணமாகி நூறு நாள் ஆச்சு‌. ஒரு பனிஷ்மெண்டும் காணோம்!” என அவன் காதிற்கு கேட்டவாறு முணுமுணுத்தவளின் பேச்சில் நிவினுக்கு சிரிப்பு படர்ந்தது.
அலமாரியைத் திறந்து அந்தப் புடவையை எடுத்தாள் சுதி. இடலை நிறத்தில் அங்காங்கே தங்க நிற இழைகள் மின்னின. அதை ஆசையாய் வருடியவள், பக்கத்து அறையில் நுழைந்து கதவைப் பூட்டினாள். இரவு உடையைக் களைந்து புடவையை அணிந்தவள் மடிப்பெடுக்கச் சென்று பின்னர் அப்படியே ஒற்றையாய் தோளில் வழிய விட்டாள். அன்றைக்கு கணவன் நன்றாய் இருக்கிறது என ரசனை மிகுந்து கூறியதில் இருந்தே இவளுக்கு மடிப்பெடுக்க கை செல்லவில்லை. மெலிதாய் ஒப்பனை செய்தவள் அறையை விட்டு மெதுவாய் வெளியே வந்தாள்.
நிவின் அறைக்குள்தான் இருக்கிறான் எனத் தெரிந்ததும் கால்கள் பின்னிக் கொண்டன.‌ ஏனோ மெல்லிய சங்கோஜம் வந்து ஒட்டிக் கொள்ள, மெல்ல அடியெடுத்து வைத்து உள்ளே நுழைந்தாள். நிவின் முகத்தைக் கழுவிவிட்டு மனைவிக்காகத்தான் காத்திருந்தான். அவள் கூச்சப்பட்டவாறே உள்ளே நுழைய, இவன் முகம் முழுவதும் புன்னகை படர்ந்தது.
“யூ லுக் ப்ரிட்டி சுதி!” அவன் பாராட்டவும் இன்னுமே சுதிக்கு வெட்கம் ஒட்டிக் கொண்டது.
“நம்பிட்டேன் போங்க!” என்றாள் முகம் நிமிர்த்தாமல்.
“பட், ஒரேயொரு குறை இருக்கே!” என்றவன் பேச்சில் இவள் நிமிர்ந்து பார்த்தாள்.
“ஃப்லீட் எடுக்கலையேங்க. ஒத்தையா தானே விரிச்சுவிட்டிருக்கேன்!” என அவள் கூற, நூதனமாய் புன்னகைத்தவன் மேஜை மீதிருந்த பூவைக் கையில் எடுத்தான்.
“பூ மிஸ்ஸிங் சுதிரமாலா!” எனப்‌ புருவத்தை உயர்த்திப் புன்னகைத்தவனில் இவளது உள்ளம் கொள்ளை போனது. அவளுக்குப் பின்னே நின்று பூவைச் சூடியவனை ஓரக் கண்ணால் பார்த்தாள் மனைவி. பின்னிருந்து அணைத்து மல்லிகையோடு மனைவியையும் வாசம் பிடித்து, “அவ்வளோ அழகா இருக்க சுதி!” என்றான். ரசிப்பு தெரிந்த அவன் முகத்தைப் பார்க்க முடியாதிருந்தாலும் குரலில் இருந்த கரகரப்பு அவளது கரத்தை சில்லிடச் செய்து, முகத்தை சிவக்க வைத்தது.
“ஸ்டார்ட் பண்ணாலாமா சுதி. என் பொண்டாட்டி வேற ஹண்ட்ரட் டேய்ஸை வேஸ்ட் பண்ணிட்டேன்னு சொல்லிட்டா!” நிவின் அவளில் நுகர்ந்து ஊர்ந்து சுவைக்க முயன்று கூறவும், பெண் மெதுவாய் அவன் கைகளில் தளர்ந்தாள். நிற்க முடியாது தள்ளாடியவளைக் கைகளில் அள்ளிக்கொண்டு கட்டிலில் கிடத்தி அவளருகே நிவின் படுக்கவும், சுதியிடம் பேச்சை இல்லை.
வெட்கமாய் இருந்தாலும் கணவனின் கைகளில் தன்னை ஒப்படைத்திருந்தாள். சுதியோடு லயம் சேர, நிவினும் அதில் சேர்ந்து மனைவியை ஆலாபனை செய்திருந்தான். அவளின் உடல்நிலையையும் கருத்தில் கொண்டு உணர்ச்சி வேகத்திலும் கூட அவளுக்காக எனக் கண் பார்த்து முகபாவனை அறிந்து அவளில் சேர்ந்திருந்தவனைக் கண்டு சுதியின் விழிகள் வேக வேகமாய் நனைந்தன. தளும்பி நின்ற உவர் நீரோடு, “லவ் யூ நிவின்!” என்றாள் உளமார உணர்ந்து. உவகையுடன் அதை ஏற்றுக் கொண்டவன் அவளது உதடுகளில் மென்முத்தமிட்டு மனைவியின் காதலில் கரைந்து போனான்.
களைத்து கலைந்து போயிருந்தவளைப் பின்னோடு அணைத்தவனின் கரத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள் சுதி. அவனிடம் பேச வேண்டும் என்ற நா எழ, வெட்கமாய் வந்தது பெண்ணுக்கு.
“என்ன பேசணும் என் சுதி பொண்ணுக்கு!” செவியோரம் அடர்ந்து கரகரத்துப் போன குரல் இன்னுமே இவளை சிலிர்க்கச் செய்தது.
“பெர்த் டே கிஃப்ட் என்ன வேணும்னு கேட்கவே இல்லையே!” என அவள் கணவனின் முகம் பார்க்க,
“என்ன வேணும் என் பொண்டாட்டிக்கு?” என்றான் நிவின்‌, அவளது கரத்தை மென்மையாய் தடவிக் கொடுத்தவாறே.
“ஹம்ம்... மூனு புள்ளைங்க வேணும்ங்க. அடுத்த வருஷம் ஒரு புள்ளையாவது கைல இருக்கணும்!” என வெட்கமும் முணுமுணுப்புமாய் உரைத்தவளை அள்ளித் தன் மீது போட்டுக் கொண்டான் நிவின்.
“இப்போ டயர்டா இருக்கா சுதி?” அவன் கேட்க, இவள் மென்மையாய் அவனை முறைத்தாள்.
“ஏய்... நீதானே டி நெக்ஸ்ட் இயர் பேபி வேணும்னு கேட்ட. ஹம்ம்... அப்போ இப்போல இருந்தே பிராசஸ் பண்ணணும்!” அவன் கூற்றிற்கு பதில் பேச வந்தவளின் பேச்சை கணவன் தன் உதடுகளால் விழுங்கியிருந்தான். முத்தமிட்டு மோட்சம் பெற்று அன்றைய இரவை சுதியோடு நிவின் தனக்கென மொத்தமாய் எழுதி வாங்கியிருந்தான்.
தொடரும்...
எபிலாக் உண்டு மக்களே 🏃‍♀️🏃‍♀️ இன்பாக்ஸ் மெசேஜ் யாருக்கும் ரிப்ளை போடலை. போஸ்ட்டுக்கும்தான். அப்டேட் போட்டுட்டு ரிப்ளை தரேன். லேட்டான அப்டேட்க்கு மன்னிக்கவும் 😁 கமெண்ட் பொறுத்து எபிலாக் ஈவ்னிங் ஆர் நாளைக்கான்னு தீர்மானிக்கப்படும். வரட்டா டியர்ஸ் 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 
Well-known member
Messages
1,106
Reaction score
794
Points
113
Superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr superrrrrrrrr epilogue ku aarvama waiting maa
 
Well-known member
Messages
602
Reaction score
411
Points
63
சூப்பர் பர்த்டே கிப்ட், அடுத்த பர்த்டேக்கு குழந்தையோட கொண்டாடட்டும் 💓💓💓💓💓💓
 
Top