- Messages
- 1,343
- Reaction score
- 4,066
- Points
- 113
பொழுது – 25
சுதி அமைதியாய்ப் படுத்திருக்க,
அவளது இடை நிவினின் ஸ்பரிசம் உணரவும், பட்டென கண்களைத் திறந்தாள்.
“அசையாம படு சுதி. கையில ஹாட் வாட்டர் இருக்கு. அப்புறம் கொட்டிடும்!” என அவன் மெலிதாய் அதட்ட, சுதி தலையணையில் தலை சாய்த்து அவனைப் பார்த்தபடியே படுத்தாள்.
மெதுவாய் ஒரு பருத்தி துணியை எடுத்து வந்து சுடுநீரில் நனைத்து அவளது முதுகிற்து ஒத்தடம் கொடுத்தான். பின்னர் தண்ணீரைத் துடைத்துவிட்டு மருத்துவர் பரிந்துரை செய்த மருந்தை மெதுவாய் அவளது முதுகில் தேய்த்துவிட, சுதியின் விழிகள் தளும்பி நின்றன.
அவள் முகத்தை நிவின் கவனிக்கவில்லை. அப்படியே எழுந்து சென்று வலதுபுறம் அமர்ந்தவன் சுதியின் காலை எடுத்து மடியில் வைத்து ஒத்தடம் கொடுக்கவும், இவள் மெதுவாய் எழுந்தமர, அவன் அவள் புறம் நகர்ந்தான். ஒத்தடம் கொடுத்தப்பின் மருந்தை பூசி மென்மையாய் அழுத்திவிட, சுதி கணவன் முகத்தைதான் கண்ணிமைக்காமல் பார்த்தாள். அவள் பார்வை உணர்ந்து பெருமூச்ச விட்டவன் நிமிர, “நான் கேட்ட எந்த கேள்விக்கும் நீங்க இன்னும் பதில் சொல்லலை!” என்றாள் புகாரளிக்கும் குழந்தையாய். அதில் நிவின் உதடுகளில் மெல்லிய புன்னகை தொற்றியது.
“மௌனம் சம்மதத்துக்கு அறிகுறியாம்!” என்றாள் மீண்டும் அழுத்தமாய். அவன் வாயிலிருந்து வார்த்தைகளை வரவழைக்கப் பெண் மெனக்கெட, நிவின் அந்த துணியைத் துவைக்கும் கூடையில் போட்டுவிட்டு சமையலறை சென்று பாத்திரத்தை கழுவி, கையையும் சோப்பு போட்டு கழுவினான். அந்த மருந்து வாசனை வருகிறதா என ஒருமுறை நுகர்ந்து பார்த்து பரிசோதித்தவன், இல்லையென்று திருப்திபட்டுக் கொண்டான்.
பின்னர் சுதிக்கு என்னென்ன மாத்திரைகள் இரவு கொடுக்க வேண்டும் எனப் பார்த்து அனைத்தையும் பிரித்தெடுத்துக் கொண்டு கையில் நீருடன் அறைக்குள் நுழைந்தான்.
“இந்த டேப்லெட்ஸ் போடு சுதி!” தன் முன்னே நீண்ட கரங்களை முறைத்துப் பார்த்தவள், “ஐ நீட் ஆன்சர்!” என்றாள் கடுப்புடன்.
“சொல்றேன்...ஃப்ர்ஸ்ட் நீ டேப்லெட் போடு!” என அவன் அழுத்தி உரைக்க, முறைத்துக் கொண்டே மாத்திரைகளை விழுங்கினாள். பாத்திரத்தை வைத்துவிட்டு பொத்தலில் தண்ணீர் நிரப்பி அறைக்குள் வைத்தவன், அவளருகே அமர்ந்தான்.
“இப்போ என்ன கேட்கணுமோ கேளு!” அவன் அசிரத்தையாய்க் கேட்க, மனைவிக்கு கோபம் வந்தது.
“நான் எல்லாத்தையும் கேட்டுட்டேன். பட், நீங்கதான் பதில் சொல்லலை!” என்றாள் காரத்துடன்.
“நான் என்ன சொல்லணும்னு எதிர்பார்க்குற சுதி. ஆப்போஸ் பண்ணி இல்லைன்னு சண்டை போடணுமா, ஆர் அக்செப்ட் பண்ணணுமா? நீயே சொல்லு. அது மாதிரியே நான் ரியாக்ட் பண்றேன்!” என்றவனை வெட்டவா குத்தவா எனப் பார்த்தவள், “நான் எப்படி உங்களோட முடிவை எடுக்க முடியும். நீங்கதானே மனசுல இருக்கதை சொல்லணும்!” என்றாள் காரமாய்.
“ஓஹோ... அப்போ என் மனசுல என்ன இருக்குன்னு நீ லிஸ்ட் போட்டு சொன்னது எல்லாம் நான் நினைச்சது இல்லையா சுதி. ஆல்ரெடி யூ க்நோ தட் வாட் ஐ யம் திங்கிங் அபவுட் யூ!” என்றவன் வெகு நிதானமாகப் பேச, சுதியின் உதடுகள் இப்போது பூட்டுப் போட்டுக் கொண்டன.
“ஸ்பீக் அவுட் சுதிரமாலா... நான் என்ன நினைக்கிறேன்னு என்னைவிட நீதானே கரெக்டா சொல்லுவ. சோ, லெட் மீ க்நோ மை தாட்ஸ்!” என அவன் அழுத்திப் பேச, சுதி உணர்வற்ற முகத்துடன் அவனைப் பார்த்தாள். நின்றிருந்த விழிகள் மெதுவாய் கலங்கின.
சில நொடிகள் மூச்சை வெளிவிட்டுக் கோபத்தைக் கட்டுப்படுத்தியவன், “யூ ஃபீல் இன்செக்யூர்ட். ரைட்?” எனக் கேட்டான். சில நொடிகள் தயங்கிய சுதி பின்னர் அதை ஆமோதிப்பது போல தலையை அசைத்தாள்.
“ஹம்ம்... ஓகே. நீ இன்செக்யூர்டா ஃபீல் பண்ண. தட்ஸ் ஓகே, உன்னோட சிட்சுவேஷன்ல இருந்து பார்த்தா அது சரிதான். பட் ஏன் என்னோட தாட்ஸ்னு உன்னோட ஃபீலிங்க்கு பேர் வைக்கிற?” எனக் கேட்டவன் குரல் மென்மையைத் தொலைத்திருந்தது.
“யூ ஆல்வேய்ஸ் டோல்ட் மீ, ஐ டோன்ட் ரிசர்வ் யூ... ஐ டோன்ட் ரிசர்வ் யூ. பட் ஆக்சுவலி உண்மை என்னென்னா, யாரு யாருக்கும் டிசர்வடா இருக்கணும்னு நினைக்கிறதில்லை. இட்ஸ் அவர் லைஃப், நானும் நீயும் வைஃபை ஷேர் பண்ணிக்கிறோம். இதுல எங்க இருந்து தகுதி வந்ததுன்னு எனக்குப் புரியலை. பிபோர் மேரேஜ் அண்ட் ஆப்ஃடர் மேரேஜ் டூ, ஐ ஜஸ்ட் வாண்ட் டூ ட்ரீட் யூ அஸ் மை பெட்டர் ஹாஃப். அப்படித்தான் ட்ரீட் பண்ணேன்னு நான் நினைக்கிறேன். பட் உனக்குள்ள ஒரு இன்செக்யூரிட்டி ஃபீலிங் இருக்கு. ஏன் அது வந்துச்சுன்னு எனக்குத் தெரியலை சுதிரமாலா. நான் எங்கேயும் உன்னைக் கீழிறக்கிப் பேசலை, பார்க்கலை. ஈவன் நான் உன்னைப் ப்ரெய்ஸ் பண்றேன். பிகாஸ் ஐ லவ் யூ மோர் தன் யூவர் ஃபேமிலி. ஐ நீட் யூன்னு சும்மா சொல்லலை. ஐ வில் ஸ்டான்ட் ஃபார் யூ இன் ஆல் அப்ஸ் அண்ட் டவுன்ஸ். ப்ரபோஸ் பண்ணும்போது கூட நான் என்னோட கடைசி மூச்சு வரை இந்த முகத்தைப் பார்த்துட்டு இருக்கணும்னு சொன்னதா ஞாபகம். பட் மேடம் அதையெல்லாம் மறந்துட்டீங்க?” என அவன் ஆதங்கமாய்ப் பேச, சுதி பேச்சற்று அவனைப் பார்த்தாள்.
“ப்ராமிஸ் பண்ணிட்டதால உன்னைவிட்டு நான் போக மாட்டேன்னு நினைக்குறீயா சுதி. உன்னோட ப்ராமிஸ் எந்த வகையிலயும் என்னைக் கண்ட்ரோல் பண்ணாது. எனக்கா உன்னை விடணும்னு தோணணும். இந்தப் பொண்ணோட வாழ்ந்தது போதும்னு தோணுனா வேணா, நான் அப்படி யோசிக்கலாம். பட் இந்த ஜென்மத்துல எனக்கு அப்படியெல்லாம் தோணாது. ஐ வாண்ட் யூ டூ ஃபில் ரெஸ்ட் ஆஃப் மை லைஃப். என் அம்மா மேல எனக்கு ஆயிரம் கோபம் இருந்தாலும் அவங்க வேணாம்னு நான் உதறித் தள்ளிட்டு வந்துடுவேனா சுதி. ஐ டோல்ட் யூ, என் அம்மாவுக்கு அடுத்து நீதான்னு. அப்புறம் எப்படி உன்னை நான் விட்டுடுவேன்னு நினைக்கிற. நீயே வேணாம்னு சொன்னா கூட, நான் உன்னோடதான் வாழ ஆசைப்படுறேன் சுதி. உனக்கு இஷ்டம் இல்லைன்னாலும் என்னோட லவ்வை மட்டும் ப்ரயாரிடைஸ் பண்ணி எல்லாரையும் கன்வின்ஸ் பண்ணி நம்ப மேரேஜை சக்ஸஸ் பண்ணதுலயே நீ அதைப் புரிஞ்சிருப்பன்னு நான் நினைச்சேன் சுதிரமாலா!” என அவன் கூற, சுதி அவனைத்தான் பார்த்திருந்தாள். ஆதங்கம் நிறைந்த வார்த்தைகள் எனினும் அதன் சாராம்சத்தில் இவளது அடிமனது வரை ஆசுவாசம் பரவியது. நிவின் விட்டுவிட மாட்டான் என மனதிற்கு நன்றாகத் தெரியும். ஏனோ அதை அவன் வாய் மொழியாய் உரைக்கும் போது அவளுடைய மனவலி உடல் வலி இரண்டுமே கரைந்து காற்றில் கலந்திருந்தது. தன் மீதான அவனின் குற்றச் சாட்டுகளை மனமுவந்து பெண் ஏற்றுக் கொண்டிருந்தாள்.
“ஹம்ம்... நான் உன்கிட்ட ஐ லவ் யூ சொன்னேனே. அதுக்கு என்ன மீனிங், சொல்லு?” அவன் மனைவியைக் கூர்ந்து பார்த்துக் கேட்க, சில நொடிகள் தயங்கியவள், “உங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கு. காதலிக்குறீங்கன்னு அர்த்தம்!” என்றாள்.
“நோப்... ஐ லவ் யூன்னா ஐ வில் ஆல்வேய்ஸ் வித் யூன்னு அர்த்தம். லவ் இஸ் அ கைண்ட் ஆஃப் ப்ராமிஸ். நீ கேட்குறதுக்கு முன்னாடியே உனக்கு ப்ராமிஸ் பண்ணவன்டி நானு. அப்புறம் எப்படி நீயா உன்னை டீக்ரேட் பண்ணிக்கிற. தென் திஸ் இஸ் த லாஸ்ட் வார்னிங் டூ யூ. டோன்ட் கம்பேர் யூவர் செல்ஃப் வித் அக்ஷா. ஷி இஸ் மை ஃப்ரெண்ட் ஒன்லி. அதை தவிர ஒரு செக்ண்ட் கூட நான் அவளை வேற மாதிரி யோசிச்சது இல்லை. பட் யூ ஆர் மை லைஃப்... ஹம்ம் லைஃப் பாட்னர், வொஃய்ப், சொல்லப் போனா எவ்ரிதிங். சோ, இது மாதிரி கம்பேர் பண்ண கூடாது!” என்றான் அதட்டலாய்.
அவனை முறைத்தவள், “நீங்க சொல்றது எல்லாம் சரிதான்ங்க. அப்கோர்ஸ் என் மேலதான் தப்பு. நான் அப்படி பேசியிருக்க கூடாது. பட் நான் வளர்ந்த சிட்சுவேஷன் அப்படி சொல்ல வச்சிடுச்சுங்க!” என்றாள் வருத்தம் தோய்ந்த குரலில்.
“ஹம்ம்... சின்ன வயசுலயே அம்மா, அப்பான்னு வளர்ந்திருந்தா நான் ஒரு அன்புக்காக இவ்வளோ ஏங்கிப் போய்ருக்க மாட்டேனோ என்னவோ... திடீர்னு வந்தீங்க. நீதான் புடிக்கும், ஐ லவ் யூன்னு சொல்லி வேண்டாம்னு நின்ன என்னை சம்மதிக்க வச்சு, வீட்டைக் கன்வின்ஸ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க. அப்புறம் எப்படியெல்லாம் நான் வாழணும்னு ஆசைப்பட்டேனோ அதைவிட அன்பா அனுசரணையா என்னைப் பார்த்துக்கிட்டீங்க. டூ பீ பிராங்க், நான் தான் இந்த உலகத்துல ரொம்ப லக்கி கேர்ள்னு என் மனசே பெருமை படுற அளவுக்கு யூ ல்வ்ட் மீ. எனக்காகன்னு மேரேஜ்ல எவ்வளோ அட்ஜஸ்ட் பண்ணியிருக்கீங்கன்னு எனக்குத் தெரியாதுன்னு நீங்க நினைக்குறீங்க. பட் ஐ நோட்டீஸ்ட் ஆல். இப்படி உங்க அன்பை மட்டுமே செல்பிஷ்ஷா அனுபவசிட்டு இருக்கேன் நான். எங்கேயுமே உங்களுக்காகன்னு நான் எதுவுமே செய்யலை. சொகுசா உங்களோட கையணைவுல இருக்கேன். அப்படியிருக்கும் போது எனக்கு ஹெல்த் இஷ்ஷூன்னு டாக்டர் சொன்னப்போ எனக்குள்ள ஒரு கில்டி கான்ஷியஸ். என்னடா... இவருக்கு தொல்லையா இருக்கோம் போலன்னு மனசுக்குள்ள வருத்தமா போச்சு. அதுவும் இல்லாம ஏற்கனவே இன்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் இருக்கு. உங்கக் கூட நான் நடந்து வரும்போது எல்லாரும் என்ன நினைப்பாங்கன்னு நானே யோசிக்கிறேன். அப்படி இருக்கப்போ என்னோட பயம் தப்பில்லைதான். ஆனால், நீங்க சொன்ன மாதிரி எங்கேயும் நீங்க என்னை இல் ட்ரீட் பண்ணலை. அது மனசுக்குப் புரியது. அக்ஷா அன்னைக்கு வந்து பேசுனப்போ கூட நான் என்ன சொன்னேன் தெரியுமா. நிவின் சார் என்னை விட்டுட மாட்டார்னுதான். யெஸ், மனசுக்குப் புரியது. மூளைதான் கேட்க மாட்டுது. உங்க வாயால சொன்னாதான் அமைதியா இருப்பேன்னு அடம் பிடுக்குதுங்க!” என்றவள்,
“ஒண்ட வந்தவ... ஒண்ட வந்தவன்ற வார்த்தையைக் கேட்டு கேட்டு மரத்துப் போச்சுங்க. எனக்கே எனக்கு மட்டும்தான் இந்த நிவின் வேணும். அவரோட சந்தோஷமா வாழணும் நான். மூனு புள்ளைங்களைப் பெத்துக்கணும்னு பேராசைங்க!” என்றாள் அவன் முகம் பார்த்து கலங்கிய விழிகளை சிமிட்டி அடைத்த தொண்டையை சரி செய்து.
அந்தக் குரலில் இத்தனை நேரம் நிவின் பிடித்திழுத்து வைத்திருந்த கோபச் சுவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக உதிரத் தொடங்க, அவளை அன்பாய்ப்
பார்த்தான். “என் கிட்டே என் பொண்டாட்டி செல்பிஷ்ஷா இருக்குறதுல தப்பே இல்லை சுதி. நான் உனக்கு மட்டும்தான். இந்த ஜென்மத்துல இந்த நிவின் சுதிரமாலாக்கு மட்டும்தான் சொந்தம். அவளைத் தவிர யாராலையும் அவனோட வாழ முடியாது. அவளுக்கு இனிமே கில்டி கான்ஷியஸ், இன்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் எல்லாம் வரவே கூடாது. அதே மாதிரி நானும் அவளை அன்பா பார்த்துப்பேன். என் அம்மாவுக்கு அடுத்ததா என்கிட்ட இருக்க மொத்த அன்பும் அவளுக்கு மட்டும்தான். நான் முன்னாடியே சொன்னதுதான் சுதி. உன்னைத் தவிர உன்கிட்ட நான் எதையுமே எதிர்பார்க்கலை. நான் என்னோட அன்புல வாழத்தான் உன்னை என் வாழ்க்கைக்குள்ள வர வச்சேன். உன் மேல எனகிருக்க அன்பை, காதலை, பிடித்தத்தை, வாட் எவர் அதை உன்கிட்ட கொடுக்கணும். எப்பவுமே கஷ்டத்தை மட்டுமே பார்த்த இந்தப் பொண்ணு முகத்துல சந்தோஷத்தைப் பார்க்கணும்னு எனக்கும் பேராசை!” என வாத்சல்யத்துடன் அவளைப் பார்த்து பேசியவனிடம் சுதி உருகியிருந்தாள். உடலும் உள்ளமும் மொத்தமாய் தளர்ந்து போனது. எந்தவித முகாந்திரமும் அற்று அன்பை மட்டுமே பிரதானமாகக் கொண்டு தன் வாழ்வில் நுழைந்த இவனைத் தவிர ஒருவரும் எனக்குப் பொருத்தமாக இருக்க முடியாது என்றொரு இறுமாப்பில் காதல் கொண்ட இதயம் இறுமாந்தது.
“ஐ லவ் திஸ் நிவின்!” என்றாள் ஆசையாய். கணவன் அந்த வார்த்தையை பரிபூரணமாக உள்வாங்கினான். வார்த்தையேதும் உரைக்கவில்லை.
“ஒன் லாஸ்ட் கொஸ்டீன். திட்டக் கூடாது நீங்க!” என அவள் உள்ளே சென்ற குரலில் வினவ, “ஹம்ம்...” எனத் தலையை அசைத்தான் கணவன்.
“அது... எனக்கு குழந்தை பொறக்காதுன்னு டாக்டர் சொல்லிட்டா?” எனக் கேள்வியாக அவள் நிறுத்த,
“எனக்கு அப்படியெதுவும் தோணலை சுதி. நீ சொன்ன மாதிரி மூனு குழந்தைங்களைப் பெத்து அவங்களை வளர்க்கலாம்!”
“சப்போஸ் அப்படியொரு சிட்சுவேஷன் வந்தா என்ன பண்ணுவீங்க?” எனக் கேட்டவளை அமைதியாகப் பார்த்தவன், “நீ என்ன யோசிச்சு வச்சிருக்கன்னு சொல்லு சுதி. எனக்கு அது ஓகேவான்னு நான் சொல்றேன்!” என்றான் அவள் மனதை உணர்ந்து.
“இல்லை...அது எனக்கு எதுவும் பிரச்சனை இருந்தா அடாப்ட் பண்ணிக்கலாம்னு ஒரு எண்ணம். பட் நீங்க... அது உங்களுக்கு ஓகே வா?” எனத் தயங்கித் தவித்து அவள் கேட்டு முடிக்க, “வொய் நாட் சுதி... இட்ஸ் அ குட் ஐடியா!” என அவன் யோசனையோடு கூற, சுதியின் முகம் மலர்ந்தது.
“அப்போ கூட மூனு குழந்தைங்களைத் தத்தெடுத்துக்கலாம்!” என்றாள் மனைவி சலுகையாய்.
“அதுக்கென்ன... நீ சொல்ற மாதிரி சிட்சுவேஷன் அமைஞ்சா, திஸ் வில் பீ குட் டிஷிசன் சுதிரமாலா. சோ, அப்போ மூனு குழந்தைங்களைத் தத்தெடுத்துக்கலாம்!” என்று அவன் எளிதாய் தோளைக் குலுக்கிக் கூற, இரண்டு கைகளையும் அவனை நோக்கி விரித்தவள், “இங்க கிட்ட வந்து என்னைக் கட்டிக்கோங்க!” என்றாள் மனைவி ஆசையாய், வாஞ்சையான், அன்பாய்.
“ஹம்ம்... முடியாது!” என அவன் உதட்டை வளைத்துப் புன்னகைத்து விளக்கை அணைத்துவிட்டு படுக்க, மனைவி அவனை முறைத்தவாறே அமர்ந்த இடத்திலிருந்து அகலவில்லை.
“டைமாச்சு சதி... வந்து படு. பேக் பெய்ன் இருக்குல்ல!” நிவின் அதட்ட, சுதி அசயவே இல்லை. பின்னர் மனைவியை நோக்கி அவன் கையை விரிக்க, சிரிப்புடன் அவனுள் புகுந்து இறுக்கி அணைத்துக் கொண்டாள் பெண். அகமும் முகமும் மலரப் புன்னகைத்தவளில் நிவின் நிறைந்து கிடந்தான்.
அவன் கழுத்தோரம் வாசம் பிடித்தவள், “ஐ லவ் யூங்க!” என்றாள் ஆத்மார்த்தமான குரலில். கணவன் உடல் சிலிர்த்தது. அவளை இறுக்கி அணைத்து நெற்றியில் முத்தமிட்டான். அப்படியே அவன் மீது கையையும் காலையும் போட்டு படுத்தாள் சுதி.
“இப்படி ஒரு பொசிஷன் இல்லாம படுக்காத சுதி. பெய்ன் அதிகமாகிடும்!” அவன் அக்கறையாய்க் கடிய, ஆசையாய் அதை உள்வாங்கியவள், “பரவாயில்லை... இதான் எனக்கு கம்பர்டபிளா இருக்கு!” என்றாள் வாகாய் அவனருகே படுத்து.
தொண்டையைக் கனைத்த நிவின், “அப்புறம் உன்கிட்ட ஒன்னு சொல்லணும் சுதி!” என்றான்.
“எது சொல்றதா இருந்தாலும் சீக்கிரமா சொல்லுங்க. அப்புறம் நான் தூங்கிடுவேன்!” மெலிதாய் சிணுங்கியவளை முறைத்தவன்,
“அது...யூ க்நோ சுதி. ஐ ஹேவ் அ ஃபீலிங்க்ஸ் டூ. நான் முனிவர் எல்லாம் இல்ல மா. உன்னோட ஹெல்த் கண்டிஷனை யோசிச்சுத்தான் நான் தள்ளியிருக்கேன். பட் நீ டெய்லி இப்படி வந்து கட்டிப் பிடிச்சிட்டு படுக்குற. நான் கன்ட்ரோலாதான் இருக்கேன். பட் என்னைக்காவது கன்ட்ரோல் மிஸ் ஆகிடுமோன்னு பயமா இருக்கு. சோ, நீ கொஞ்சம் தள்ளிப் படுத்தா உன் ஹெல்த்க்கு நல்லது!” தயங்கியபடியே நிவின் கூற, அவனை நிமிர்ந்து குறும்பாய் பார்த்தாள் பெண்.
“ஓ... நீங்க பையன்ல... நான் கூட ரெண்டு மூனு நாளா கட்டிப் பிடிச்சுப் படுத்தும் டெடி பியர் போல மனுஷன் அமைதியா இருக்காரே. ஒருவேளை இவர் அப்படி இப்படியோன்னு நினைச்சேன்!” என அவள் கூறவும், நிவின் மனைவியை முறைத்தான்.
“சரி... சரி விடுங்க. இப்போதான் நீங்க பையன், உங்களுக்கும் ஃபீலிங்க்ஸ் இருக்குன்னு வாயைத் தொறந்து சொல்லிட்டீங்க இல்ல. அதனால தள்ளிப் படுக்குறேன். பட் ஃபர்ஸ்ட் கிஸ் நீங்க பண்ணிட்டீங்க. வாங்குனதை நான் திருப்பிக் கொடுக்க வேணாமா... நீங்க பாரி வள்ளல். பட் நான் அப்படியில்லை!” எனப் பேசிக் கொண்டிருக்கும் போதே எட்டி அவன் உதட்டில் அழுந்த முத்தமிட்டுவிட்டு சுதி மறுஓரம் சென்று படுத்துவிட, நிவினுக்கு சூழ்நிலையைக் கிரகித்து, அந்த முத்தத்தின் தித்திப்பை உள்வாங்கியவன், மனைவியை முறைக்க முயன்று தோற்றவனாய் அவளுக்கருகே சென்று பின்னிருந்து அணைத்தான்.
“சொல்ற பேச்சே கேட்க மாட்டீயா டி?” குரலில் அதட்டலிருந்தாலும் கைகள் மனைவியை மென்மையாய் அணைத்தன. தலையை மட்டும் உயர்த்தியவள்,
“உங்ககிட்டே மட்டும் சொல் பேச்சைக் கேட்க கூடாதுன்னு தோணுதே... நான் என்னங்க பண்ண?” என்றாள் சலுகையாய்.
அவள் முகத்தை ஆசையாய் பார்த்தவன், “கேட்க தேவையில்லை!” என்று அவள் செவியோரம் முத்தமிட்டு, “குட் நைட்!” என்றான் கிசுகிசுப்பாய்.
“ஹம்ம்...” முனங்கலாகக் கூறிய சுதி அவன்புறம் திரும்பிப் படுத்து அவன் மார்பில் முகத்தைப் புதைக்க, கணவன் மனைவியை ஏற்றுக் கொண்டான்.
மறுநாள் காலையில் சுதிக்கு வெகு தாமதமாகத்தான் விடிந்தது. அதுவும் அலைபேசி ஒலியெழுப்ப, பாதி உறக்கம் கலைந்தும் கலையாமலும் எடுத்துக் காதில் பொருத்தினாள்.
“என்ன சுதி... என்ன பண்ற?” சௌம்யா குரல் கேட்டதும் இவளது முகம் மலர்ந்தது.
“ஹம்ம்... இன்னும் பெட்டைவிட்டு கூட எழுந்திரிக்கலை அண்ணி!” என்றாள் அசட்டுச் சிரிப்புடன்.
“நினைச்சேன் டி... கொடுத்து வச்சவ நீ?” அவள் அங்கலாய்க்க, சுதி புன்னகைத்தாள். சௌம்யா கூற்றை மனம் முன்வந்து ஏற்று மனம் ஆமா எனத் தலையை அசைக்க, அதைத் தட்டி அடக்கியவள், “அவங்க ரெண்டு பேரும் எங்க அண்ணி... ஸ்கூல் போய்ட்டாங்களா பசங்க?” எனக் கேட்டு இவள் சில நிமிடங்கள் பேசினாள்.
“அப்புறம் சுதி... நிவின் ஊர்க் கோவில்ல உங்க மேரேஜ்க்கு பங்சன் வைக்கலாம்னு முடிவெடித்திருந்ததை இப்போ வேணாம்னு கேன்சல் பண்ணிட்டாங்க போல. இப்போதான் நிவினோட அப்பா கால் பண்ணாரு. அவங்க கோவில் பூசாரி நேரம் சரியில்லை. ஊரைக் கூட்டி எதையும் செய்ய வேணாம். அடுத்த வருஷம் பேரன் பேத்தி வந்தப்புறம் பண்ணிக்கலாம்னு சொன்னதா இப்போதான் பேசுனாரு!” என அவள் கூற, கணவனின் வேலைதான் இது எனப் புரிந்ததும் விழிகள் ஒருமுறை அறையைவிட்டு வெளியேறின.
தனக்காகத்தான் இந்த மெனக்கெடல் எனப் புரிந்தவள் படுக்கையிலிருந்து எழுந்து கொண்டே, “ஆமா அண்ணி... வேணாம்னு சொல்லிட்டாங்க!” என்றாள். குரல் அவளிடமிருந்தாலும் பார்வை என்னவோ கணவனைத் தேடியது. சமையலறையில் இருந்தான் போல. உணவின் வாசனை மூக்கைத் துளைக்க, இவளிடம் பேசிக்கொண்டே மெதுவாய் சென்று பின்னபக்கமாய் அவனை அணைத்துக் கொண்டாள். ஒரு நொடி எதிர்பாராது திடுக்கிட்டவன், அவளை மென்மையாய் முறைத்துவிட்டு வேலையைத் தொடர்ந்தான்.
“ஹம்ம் அண்ணி... ஆங்... ஆமா அண்ணி!” என சௌமியாவிடம் பேசினாலும் இவனது இடையில் கிள்ளி வைத்தாள் பெண்.
“சுதி...” அவன் அதட்ட, சிரிப்புடன் நகர்ந்தவள் சௌம்யாவிடம் பேசி அழைப்பைத் துண்டித்தாள்.
“பேசாம சோப்பு விளம்பரம் இல்ல சென்ட் விளம்பரத்துக்குப் போகலாம் நீங்க. எப்போ பார்த்தாலும் எதாவது ஒரு ஸ்மெல் உங்க மேல வந்துட்டே இருக்கு!” எனக் கூறியவளை முறைத்தவன், “போய் பிரஷ் பண்ணிட்டு வந்து காஃபி குடி சுதி!” என்றான்.
“இன்னைக்கு ஒரு நாளைக்குப் பிரஷ் பண்ணுறதுக்கு லீவ். நாளைக்கு பண்ணிக்கிறேன்ங்க!” எனக் குவளையைத் தொடச் சென்ற கையிலே அடித்தவன், “போய் பிரஷ் பண்ணு டி!” என்றான்.
அவனைப் பார்த்து உதட்டை சுழித்தவள், “இருந்தாலும் நீங்க இவ்வளோ ஸ்ரிக்ட் ஆபிஸரா இருக்க கூடாதுங்க!” என்றாள் கடுப்புடன். பின்னர் பல் விலக்கி முகம் கழுவிவிட்டு குளம்பியை எடுத்துக் கொண்டு நீள்விருக்கையில் அமர்ந்தாள். ஐந்து நிமிடங்கள் கடக்க, நிவின் அலைபேசியுடன் அவளருகே வந்தான்.
“சுதி... பிஸியோதெரபிஸ்ட் இவங்க!” என அலைபேசியை நீட்ட, காணொளி அழைப்பில் ஒரு பெண் நின்றிருந்தாள்.
“ஹாய் சுதிரமாலா!” அவள் புன்னகைத்தாள்.
“ஹாய் மேம்...” என இவள் கூற, சில நிமிடங்கள் பரஸ்பர அறிமுகம் நிகழ்ந்தது. நிவின் சென்று யோகா செய்ய ஏதுவாக போர்வை ஒன்றை எடுத்து வந்தான்.
“சுதி... யோகா மேட்ல உட்கார்ந்துக்கோ... ஃபோனை இங்க ஸ்டான்ட்ல வச்சுக்கோ!” என அவளுக்கு வசதி செய்து கொடுக்க சுதி இயன்முறை மருத்துவர் சொல்லிக் கொடுத்ததை பின்பற்றி உடல்பயிற்சியை முடித்தாள். மேலும் சந்தேகங்களையும் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொண்டு அழைப்பைத் துண்டிக்க, காலும் முதுகும் வலித்தது. முதல்முறையாக உடற்பயிற்சி செய்தால் வலிக்கும் என இப்போதுதான் அந்தப் பெண் கூறியிருக்க, நிவின் சுடு தண்ணீரோடு பருத்தி துணியையும் எடுத்துக் கொண்டு வந்தான். சுதி அவனைப் பார்க்க, கைக்கொடுத்து தூக்கிவிட்டு நீள்விருக்கையில் அமர்த்தினான்.
பின்னர் அவளது காலிற்கு ஒத்தடம் கொடுத்தான். அவனைக் கண்களில் நிரப்பிக் கொண்ட சுதி, “இங்க வாங்களேன்!” என்றாள்.
நிவின் யோசனையுடன் அவளருகே செல்ல, அவன் முகத்தைக் கைகளில் தாங்கியவள், “ஒவ்வொரு டைம் கோவிலுக்குப் போகும்போதும் எனக்கு அழுக்கான புருஷனா இருந்தாலும் என்னை அன்பா பார்த்துக்கிட்டா போதும். பணக்கார புருஷன் வேணாம், என்கிட்டே பண்பா நடத்துகிட்டா போதும்னுதாங்க வேண்டுவேன். பெருசா என்னோட எதிர்பார்பெல்லாம் எனக்குன்னு ஒருத்தர், என்னை மட்டுமே நேசிக்க ஒரு மனசு. அவ்வளோதான். கடவுள் நான் கேட்டதைவிட அதிகமா கொடுத்திருக்காரு. அழகு, படிப்பு, பணம் இதையெல்லாம் தாண்டி இவ்வளோ அன்பா என்னைப் பார்த்துக்க ஒருத்தரைக் கொடுத்துட்டார்னு நைட்டு சந்தோஷத்துல தூக்கமே வரலைங்க. என்னைப் பத்தி மட்டுமே நீங்க யோசிக்குறீங்கன்னு நினைக்கும்போது நான் ராணி மாதிரி ஃபீல் பண்றேன். இந்த நிவினோட ராணி நான். உங்க அளவுக்கு என்னால காதலிக்க முடியுமான்னு தெரியலை. பட் இந்த லவ் அண்ட் கேர் எப்பவும் எனக்கு மட்டும்தான். தேங்க் யூ ஃபார் கம்மிங் இன் மை லைஃப். கொஞ்சம் லேட்டா வந்திருக்கீங்க. பட் இட்ஸ் ஓகே!” எனப் பெருந்தன்மையாய்க் கூறி அவன் நெற்றியில் அழுந்த முத்தமிட்டவளின் நேசத்தை சிந்தாமல் சிதறாமல் லாவகமாய்ப் பத்திரப்படுத்திக் கொண்டான் சுதியின் நிவின்.
தொடரும்...