• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,343
Reaction score
4,066
Points
113
பொழுது – 24 💖
சாளரத்தின் வழியே மெல்லிய கூதக்காற்று உடலைத் தழுவ, போர்வையை துழாவி எடுத்துப் போர்த்திய சுதிக்கு பாதிவிழிப்பு தட்டியிருந்தது. கண்களை திறக்காமலே கைகளால் அருகோ துழாவினாள். கணவன் இல்லையென மூளை உணர்த்த, இமையைப் பிரித்துப் பார்த்தாள். குளித்து வந்திருந்தான் போல. மேல் சட்டை அணியாது கால்சராய் மட்டும் அணிந்திருக்க, சுதி மங்கலான விழிகளை சிமிட்டி ஒரு முறை அவனைப் பார்த்தாள். அதில் நிவினின் உதடுகளில் புன்னகைத் தொற்றியது.
“ஹக்கும்...” என அவன் செருமினான். அதில் சுயநினைவு பெற்ற சுதியின் கண்கள் ஒருமுறை கடிகாரத்தில் படிந்து மீண்டன.
“யூஸ்வலா உங்களுக்கு ஆஃபிஸ் டைம் என்ன?” இவள் கேட்க, “ஹம்ம்... டென் ஓ க்ளாக்!” என்றான் கணவன்.
“ட்ராவலிங் டைம்?”
“நாட் மோர் தன் ட்வென்ட்டி மினிட்ஸ்!” அவன் யோசனையுடன் மனைவியைப் பார்க்க,
“அப்புறம் ஏன் நீங்க காலைல ஆறு மணி, ஏழு மணிக்கு எழுந்து குளிக்குறீங்க. வாட்ச் மேன் வேலை எதுவும் பார்க்குறீங்களா? பொய் சொல்லி என்னைக் கல்யாணம் பண்ணி இருக்கீங்களோ?” மனைவி உதட்டை வளைத்துக் கேலியாய்க் கேட்க, இவன் மென்மையாய் அவளை முறைத்தான்.
“பழகிடுச்சு சுதி... அம்மா இருந்தவரை அப்படித்தான். இயர்லி மார்னிங் எழுந்து குளிச்சிடணும். அவங்க பழக்கப்படுத்திவிட்டது. சோ ஐ கன்டினியூட்!” என்றவன் விழிகள் தாயின் புகைப்படத்தை நேசத்துடன் தொட்டு மீண்டன.
“அம்மாவை பிடிக்குமாங்க?” இவள் வாஞ்சையாய் அவன் முகம் பார்த்தாள்.
“ரொம்ப ரொம்ப பிடிக்கும்... ஐ லவ் ஹெர் அ லாட். அப்பா கூட சம்டைம்ஸ் பொறாமை படுவார். யாராலையும் அவங்களை ரீப்ளேஸ் பண்ண முடியாது சுதி. அவங்களோட உலகமே நான்தான்!” என்றான். தாயின் மீதான அன்பில் குரல் கனிந்திருந்தது. அவரது இழப்பிலிருந்து மீண்டு வர எத்தனை மாதங்களானது என
நிவின் மட்டுமே அறிவான். இப்போது மனம் அனைத்தையும் ஏற்றுக் கடந்து பக்குவப்பட்டிருந்தது.
அவன் கூறியதைக் கேட்டு தலையை அசைத்த சுதி போர்வையை உதறிவிட்டு கழிவறைக்குச் சென்றுவர, நிவன் அவளது போர்வையை மடித்து தலையணையுடன் சேர்த்து வைத்தான். அதில் இவள் உதட்டைப் பிதுக்கினாள்.
“நான் உங்களுக்கு காஃபி போட்டு எடுத்துட்டு வரேன்ங்க!” அவள் நகர, “நோ சுதி...நானே ப்ரிபேர் பண்றேன்!” என அவன் மறுதலித்தான்.
கதவைத் திறந்து கூடத்தை எட்டிப் பார்த்தவள், “மாமா நாளைக்குத்தான் கிளம்புவேன்னு சொல்லி இருக்காருங்க. அவர் இருக்கவரைக்கும் நானே பண்றேன். எல்லாத்தையும் உங்களை செய்யவிட்டு நான் வேடிக்கைப் பார்த்த அவர் மனசு சங்கடப்படும். கல்யாணம் ஆனப் பின்னாடியும் மகனை வேலை வாங்கிட்டு இருக்காளே என் மருமகன்னு நினைப்பாருங்க அவரு!” என்றாள் தான் யோசித்து வைத்ததை.
“ஓ... அப்போ ஆப்ஃடர் டூ டேய்ஸ்?” நிவின் இழுக்க,
“அப்புறம் என்ன... டெய்லி பெட் காபியோடதான் என்னை நீங்க எழுப்பணும்!” என உரிமையாய்ப் பேசி சிலுப்பிவிட்டு செல்லும் மனைவி மனம் நிறைந்து போனாள். அவளது பாவனையில் இவனுக்கு அகமும் முகமும் மலர்ந்தது.
திருமணத்திற்கு வர முடியாத ஓரிரு நண்பர்கள், உறவினர்கள் இன்றைக்கு வீட்டிற்கு வந்து பரிசுகளை வழங்கி வாழ்த்திவிட்டுச் சென்றனர். மற்றபடி பெரிதாய் எந்த வேலையும் இல்லாதிருக்க, சுதி மகேந்திராவுடன் அமர்ந்து சிறிது நேரம் பேசினாள். நிவினின் சிறுவயது சாகசங்களை அவர் மகிழ்ச்சியுடன் பகிர, இவள் சின்ன சிரிப்புடன் அதில் லயித்திருந்தாள். இரவு உணவை மகேந்திரா சமைப்பதாக கூற, சுதி அவருக்கு உதவினாள். மூவரும் உண்டுவிட்டு உறங்கச் சென்றனர். சுதி கணவனின் கையணைவில் சுகமாகத் தூங்கியெழுந்தாள்.
மறுநாள் அதிகாலையே மகேந்திரா புறப்படுவதற்கு தயாராகினார். அவருக்கு பணியின் காரணமாக விடுப்பெடுக்க முடியவில்லை. அதுவுமின்றி பத்து நாட்கள் கழித்து கோவிலில் மகன் திருமணத்தை அறிவிக்கும் விதமா ஊரையே அழைத்து அசைவ விருந்து வைப்பதாக எண்ணியிருக்க, அதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்க விரைவாய் சென்றார்.
“எம்புள்ளையை நல்லா பார்த்துக்கோ மருமகளே. அவன் எதுவும் உன்னைத் திட்டுனா என்கிட்டே சொல்லு. வெளுத்துடுறேன்!” என்றவர் விடைபெற, சிரிப்போடு அவரை வழியனுப்பிவைத்தாள் சுதிரமாலா. நிவின் சென்று அவரைப் பேருந்து ஏற்றிவிட்டு வீட்டிற்கு வந்தான்.
சுதி சமையலறையில் ஏதோ உருட்டிக் கொண்டிருந்தாள்.
நிவின் உள்ளே நுழைந்து சத்தம் செய்யாது என்ன செய்கிறாள் எனப் பார்க்க, தனக்குப் பின்னே அரவம் கேட்டதும் திரும்பியவள்,
“மாமா பஸ் ஏறிட்டாரா? எத்தனை மணிக்கு அங்க பஸ் ரீச் ஆகும்?” எனக் கேட்டுக் கொண்டே பன்னீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கினாள்.
“யெஸ்... பஸ்ல ஏத்தி விட்டுட்டுதான் வந்தேன். டூ ஹவர்ஸ்ல ரீச் ஆகிடுவாரு!” என்றவன், “என்ன குக் பண்ணப் போற சுதி?” என வினவினான்.
“பன்னீர் வாங்கி வச்சிருந்தீங்க இல்ல. அதான் பன்னீர் குருமா வச்சிட்டு பூரி சுடலாம்னு இருக்கேன். உங்களுக்கு ஓகே வா?” எனக் கேட்டாள்.
“பூரி வேணாம்.‌ ஆயில் ப்ராடெக்ட். சப்பாத்தி இஸ் ஓகே அண்ட் நான் குருமா ப்ரிபேர் பண்றேன். நீ சப்பாத்தி சுடு!” என்றான்.
“இல்லயில்ல... நீங்களே சப்பாத்திக்கு மாவு பிசைஞ்சு சுட்ருங்க. நான் குருமா வைக்கிறேன். மாவைப் பிசைஞ்சா கையெல்லாம் ஒட்டிடும். பூரினா ரெண்டு நிமிஷத்துல சுட்டுடலாம். சப்பாத்தி நின்னு சுட்டா காலெல்லாம் வலிக்கும். போங்க!” அவள் சின்னக் குழந்தை போல முகத்தை கோணிக் காரணங்களை அடுக்க, இவன் மனைவியை வாஞ்சைமிகப் பார்த்து வைத்தான்.
“நீ போய் டீவி பாரு சுதி. நானே ரெண்டையும் செய்றேன்!” என்றான்.
“இல்லை... நானே குருமா வைக்கிறேனே. இப்போலாம் பன்னீர் குருமா நான் நல்லா செய்றேன் இல்ல?” சுயபாராட்டலில் அவளது முகம் மலர, இவனது உதடுகளில் குறும்பான புன்னகை படர்ந்தது. அவனைக் கீழ்கண்ணால் முறைத்தவள், “ஏன்... ஏன், நான் நல்லா குருமா வைக்க மாட்டேனா
என்ன?” எனக் கோபமாய்க் கேட்டாள் பெண்.
“உண்மையை சொல்லவா? பொய் சொல்லவா?” அவன் கேள்வியாக நிறுத்த,
“உள்ளதை சொல்லுங்க!” என்றாள் அதட்டலாய்.
“ஹம்ம்...நீ வைக்கிற பன்னீர் ஓகேதான். பட் யூ ஹேவ் டூ இம்ப்ரூவ் யுவர் குக்கிங் நாலெட்ஜ்!” என்றவனை முறைத்தவள், “ஓஹோ... அப்போ நான் நல்லா சமைக்கலை. நீங்க அவ்வளோ கஷ்டப்பட்டு எல்லாம் சாப்பிட வேணாம்!” எனக் கத்தியைக் கோபமாய் வைத்தவள், “நீங்களே என்னமோ பண்ணுங்க. நானும் பார்க்குறேன் நீங்க என்னத்தை அப்படி டேஸ்டா சமைக்குறீங்கன்னு...” முனைத்துத்கொண்டு மனைவி நகர இவன் தோள் குலுக்கலில் அதை அசட்டை செய்தபடி சமையலில் இறங்கினான்.
“ரொம்பத்தான் பண்றாரு... இவர் பெரிய குக்... நாங்க கோமாளி மாதிரி தெரியுறோம் போல!” உதட்டை வளைத்தவள் தொலைக்காட்சியை உயிர்ப்பித்தாள். கண்கள் அவ்வப்போது அவன் என்ன செய்கிறான் என சமையலறையை எட்டிப் பார்க்க, உதட்டைப் பிதுக்கிக் கொண்டாள். நிவின் சமைத்து முடித்து மேஜையில் எடுத்து வைத்துவிட்டு அவளைப் பார்க்க, “எனக்குப் பசிக்கலைப்பா!” என முகத்தைத் திருப்பினாள் சுதி.
“ஓகே சுதி... யுவர் விஷ். என்னோட ஃபேவரைட் டிஷ்ஷை டேஸ்ட் பண்ண உனக்கு கொடுத்து வைக்கலை!” என அவன் உணவை தட்டிலெடுத்து வைத்து சாப்பிடத் தொடங்க, ஐந்து நிமிடங்கள் கடந்திருந்தன.
‘ஒரு பேச்சுக்கு சொன்னா, அப்படியே விட்ருவாரு. கூப்பிடுறாரான்னு பாரேன்!’ மனதிற்குள் நொடித்தவாறு நங்கு நங்கென்று நடந்து வந்து அவனருகே இருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தாள்.
தட்டை எடுத்து அவள் சப்பாத்தியை எடுத்து வைக்க, நிவின் இடது கையால் அவளுக்கு பன்னீர் குருமாவைப் பரிமாறினான்.
“ஐயயே... இதென்ன பச்சை கலர்ல இருக்கு குருமா?” என வேண்டுமென்றே உதட்டைச் சுழித்தவாறே அதை ஒரு வாய் எடுத்து உண்டாள். அப்படியே அதன் சுவை அடிநாக்குவரை கரைய, நிவின் அவள் முகத்தைதான் பார்த்த்திருந்தான். நொடியில் முகபாவனைகளை மாற்றியவள்,
“ஹம்ம்... நல்லாதான் இருக்கு. பட், நான் வைக்கிற அளவுக்கு இல்லைங்க!” என்றாள் நொடிப்பாக. நிவின் சிரித்துவிட்டான்.
“சரி... சரி. நல்லா இருக்கு ஒத்துக்கிறேன். முத்து உதிர்ந்துடப் போகுது. சாப்பிடுங்க!” ரோஷத்துடன் கூறியவள் உணவை ரசித்து உண்ண, மனைவியை ஆசையாய்ப் பார்த்திருந்தான் நிவின்.
அவன் உண்டு முடித்து இன்னுமிரண்டு சப்பாத்திகளை அவளது தட்டிலிட, “போதுங்க... வயிறு வெடிச்சுடும்!” மென்மையாய் அதட்டினாலும் சுதி அனைத்தையும் மிச்சம் வைக்காது உண்டதில் மனைவிக்காகவென மெனக்கெட்டு சமைத்த நிவினின் மனமும் நிறைந்து போனது‌.
“இந்த டிஷ் நேம் முகலாய் ஷாகி பன்னீர். நட்ஸ், கர்ட், எல்லாம் போட்டு பண்ணுவோம்!” அவன் விளக்க, “ஓ...” என சுதி உதட்டைக் குவித்துக் கேட்டுக் கொண்டாள்.
நிவின் அனைத்தையும் எடுத்து உள்ளே வைக்க அவன் பின்னே சென்றவள், “நானே க்ளீன் பண்றேன்ங்க!” என்றாள்.
“இல்ல சுதி, நான் பண்றேன்...” அவன் மறுக்க, “ஓஹோ... அப்போ க்ளீனிங் கூட நான் ஒழுங்கா பண்றது இல்லைன்னு சொல்றீங்க. ரைட்?” எனக் கையைக் கட்டி அவனை முறைத்தாள் பெண்.
“நோ சுதிரமாலா... உன்னோட க்ளீன் வொர்க் பார்த்துதான் சர்வன்டா கன்டினீயூ பண்ண சொன்னேன்!” என்றான்.
“ஓஹோ... என்னோட க்ளீன் வொர்க் ரொம்ப பிடிச்சதும் சர்வன்டா மட்டும் இல்ல, பொண்டாட்டியா இருன்னு கட்டிக்கிட்டீங்களா?” குறும்புடன் அவள் வினவ, மென்முறைப்புடன் அவளைப் பார்த்தவனுக்கும் புன்னகை முளைத்து தொலைத்தது.
“போடி... க்ளீன் பண்ணு!” என்று அவன் நகர, “தெரிஞ்சு போச்சு நிவின் சாரே... எனக்கு இப்பத்தானே புரியுது. சுத்தமா வேலை செய்யவும் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க!” என அவள் மெல்லிய குரலில் கத்த, நிவின் முகத்தின் புன்னகை வாடவேயில்லை. அவன் தொலைக்காட்சியில் செய்தி ஒளியலையை மாற்றி வைத்தான். பத்து நிமிடத்தில் சமையலறையை சுத்தம் செய்து பாத்திரங்களை விலக்கி முடித்த சுதி அவனருகே வந்தமர்ந்தாள்.
“ச்ச... உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா? எப்போ பார்த்தாலும் நியூஸ் சேனல். அதுவும் இங்க்லீஷ்ல!” எனத் திட்டி அவன் கையிலிருந்த தொலைவியக்கியை வாங்கிய சுதி, இசையருவியில் பாடலை ஒலிக்கவிட்டுப் பின்னர் அந்த நீள்விருக்கையில் உடலைக் குறுக்கிப் படுத்து நிவின் மடியில் தலையைக் வைத்தாள். அவன் தொலைவியக்கியைப் பிடுங்கியதற்கு இவளை மென்மையாய் முறைத்துப் பார்த்தாலும், மனைவி வசதியாய் படுக்க உடலைக் கொஞ்சம் தளர்த்தி அமர்ந்தான். அதை அசட்டை செய்தவள் புது வெள்ளை மழை பாடலை உன்னி மோகனோடு சேர்ந்து முணுமுணுத்தாள்.
நிவின் அப்போதுதான் நினைவு வந்தவனாய், “சுதி, ஈவ்னிங் டாக்டர் அப்பாய்ன்மெண்ட் இருக்கு. நம்ப போய் அவங்களைப் பார்க்கணும்!” என்றான்.
“ச்சு...” என தலையை உயர்த்தி அவன் முகம் பார்த்தவள், “அதெல்லாம் வேண்டாம்ங்க. எனக்கு ஒன்னும் இல்லை. இப்போதான் வலியே இல்லையே. சும்மாதானே இருக்கேன். வலிக்காது!” என்றாள் சலுகையாய் அவன் மீது முகத்தைப் புதைத்து.
“ம்கூம்... டாக்டர் அதை சொல்லட்டும் சுதி. தென் ஓகே, சோ டாக்டரை கன்சல்ட் பண்ணியே ஆகணும்!” என அவன் அழுத்தமாய்க் கூற, அவனை முறைத்து விட்டு எழுந்தமர்ந்தவள், “காசெல்லாம் எப்படி கரியாக்குறீங்கன்னு இப்பதானே தெரியுது. ஒன்னுமில்லாத விஷயத்துக்கு டாக்டர்கிட்டே போய் தண்டம் அழுவணும்!” என சுதி கணவனை முறைத்துவிட்டு செல்ல, அவன் அதைக் கண்டு கொள்ளாது மாலை அவளை அழைத்துக் கொண்டு மருத்துவரைக் காணச் சென்றான்.

“எ.ஆர்.ஐ எடுத்துப் பார்க்கலாம் சார். அப்போதான் என்ன ஹெல்த் இஷ்ஷூனு டயகனைஸ் பண்ணி, அதை பேஸ் பண்ணி ட்ரீட்மெண்ட் ஸ்டார்ட் பண்ண முடியும்!” பெண் மருத்துவர் ஒருவர் சுதியைப் பரிசோதித்துவிட்டு உரைக்கவும், இவன் சம்மதமாக தலையை அசைத்தான்.
“டாக்டர்... எக்ஸ்ரே எல்லாம் எடுத்துப் பார்க்கணுமா கண்டிப்பா?” சுதி இடைபுக, “கண்டிப்பாமா... எடுத்தாதானே என்ன பிரச்சனைன்னு கண்டுபிடிக்க முடியும். இப்பவே எடுத்துப் பார்த்தா அது உங்களுக்குத்தான் நல்லது. டிலே பண்ண பண்ண உங்க ஹெல்த் கண்டிஷன்தான் க்ரிட்டிகலா மாறும். உங்களோட விருப்பம்தான். இப்பவே எடுக்குறதுன்னா, பீஸ் பே பண்ணிட்டு போய் எம்.ஆர்.ஐ எடுத்துட்டு வாங்க. ஒன் ஹவர்ல ரிப்போர்ட் வந்துடும். வி கேன் ப்ரொசீட் நெக்ஸ்ட்!” அவர் விளக்கமாய்க் கூற,
“ஷ்யூர் டாக்டர். இப்பவே எடுத்துடலாம். நான் ஃபீஸ் பே பண்ணிட்றேன்...” என நிவின் எழுந்து கொள்ள, சுதியும் அவன் பின்னே சென்றாள். இதற்கெல்லாம் பயந்துதானே அவள் மருத்துவரை இத்தனை நாட்கள் சந்திக்காமல் இருந்தாள்.
“எம்.ஆர்.எடுக்க ஃபைவ் தௌசண்ட் ஆகும் சார். கேஷ் ஆர் கார்ட்?” மருத்துவனை ஊழியர் வினவ, “கார்ட்...” என்றவன் தனது பணப் பரிவர்த்தனை அட்டையை எடுத்து நீட்டினான்.
“ஐஞ்சாயிரமா... ரொம்ப அதிகமா இருக்குங்க. இதெல்லாம் எடுக்கணுமா?” சுதி அவன் கையை சுரண்ட, “சுதிரமாலா!”. அதட்டலிட்டான் நிவின். அதில் இவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். இருவரும் எம்.ஆர்.ஐ பகுதியை நோக்கி நடந்தனர்.
“பில் பே பண்ணிட்டீங்களா சார். ரெசிப்ட் ப்ளீஸ் சார்!” என்ற செவிலியர் ரசீதை வாங்கிப் பார்த்துவிட்டு, “மேடம் ஜ்வல்ஸ் அண்ட் உங்க சேரில இருக்க பின் எல்லாத்தையும் ரிமூவ் பண்ணிடுங்க. எம்.ஆர்.ஐ எடுக்கும்போது இழுத்துடும். எந்த ஜ்வல்ஸூம் இருக்க கூடாது!” எனக் கூறிவிட்டு அவள் உள்ளே செல்ல, சுதி காதிலிருந்த தோடு, கையிலிருந்த வளையல், சேலையில் குத்தியிருந்த ஊக்கு, காலில் அணிந்திருந்த மெட்டி என அனைத்தையும் அகற்றியவள், தாலியை மட்டும் கழட்டவில்லை.
“பத்திரமா வச்சிடுங்க...” என சுதி அந்த அறைக்குள் நுழைந்தாள். நிவின் வெளியேயிருந்த இருக்கையில் அமர்ந்தான்.
“மேடம், தாலியையும் கழட்டுங்க!” செவிலியர் கூற,
“இல்லை... தாலி இருக்கட்டும். அதைக் கழட்ட மாட்டேன் சிஸ்டர்!” என்றவள் கைகள் அன்னிச்சையாய் தாலியைப் பற்றின. திருமணம் முடிந்து மூன்று நாட்களே முடிந்திருந்த நிலையில் தாலியைக் கழட்டி வைக்க சுதிக்கு மனதில்லை.
“மேடம்... மெஷின் தாலியை இழுத்துடும். அப்புறம் உங்களுக்குத்தான் இஞ்சுரி ஆகும். சோ நீங்க கழட்டலைன்னா, எங்களால எதுவும் செய்ய முடியாது மேடம்!” செவிலியர் உறுதியாய் கூற, சுதி பதிலுரைப்பதற்கு முன்பே, “எக்ஸ்யூஸ்மி சிஸ்டர்...” என்று நிவின் உள்ளே வந்தான்.
அவனைப் பார்த்தவள், “தாலியைக் கழட்ட சொல்றாங்க. முடியாது!” என்றாள் தவிப்புடன்.
“சிஸ்டர், ஒரு டூ மினிட்ஸ்...” என சுதியைக் கைப்பிடித்து அழைத்துச் சென்றவன், “ஐ ரெஸ்பெக்ட் யூவர் பீலிங்க்ஸ் சுதி. பட் நவ் மை வொய்ஃப் ஹெல்த் இஸ் மோர் இம்பார்டெண்ட் தன் எனிதிங்க்!” என்று அவள் கழுத்திலிருந்த தாலியை தலை வழியே கழற்றினான். சுதிக்கு சரசரவென கண்களில் ஈரம் படர்ந்தது.
“சுதி, நான் நல்லா இருப்பேன். ஜஸ்ட் ஹாஃப் அன் ஹவர்தான்!” என அதட்டி அவளது கையை அழுத்திவிட்டு வெளியே வர, முக்கால்மணி நேரம் கழித்தே சுதி வெளியே வந்தாள்.
வந்ததும், “தாலியை எடுத்து எப்படி கழட்டுனீங்களோ, அப்படியே என் கழுத்துல போடுங்க!” என்றாள் முறைப்புடன். நிவின் எதுவும் கூறாது தாலியை அவள் கழுத்தில் அணிவிக்க, அதை ஒரு முறை தொட்டுத் தடவிப் பார்த்தவளைக் கண்டு இவன் முகத்தில் புன்னகை பூத்தது.
“ஆர் யூ ஓகே சுதி!” என்றவனைப் பார்த்தவள், “ஹம்ம்...” என்றாள் முனங்கலாக.
“சார்... ஒன் ஹவர் ஆகும் ரிப்போர்ட் வர. சோ, நீங்க வெயிட் பணறதுன்னா பண்ணலாம். இல்லை வெளிய எங்கேயும் போய்ட்டு வர்றதுனா வாங்க!” என செவிலியர் நகர, நேரத்தைப் பார்த்தான் நிவின். எப்படியும் இரவு வீட்டிற்குச் செல்ல தாமதமாகும் என்றுணர்ந்தவன், “டின்னரை வெளிய சாப்பிடலாமா சுதி?” எனக் கேட்டான். அவள் தலையை அசைக்க, இருவரும் வெளியே சென்று உண்டு வந்தனர்‌.
“சார் ரிப்போர்ட் வந்துடுச்சு. நீங்க போய் டாக்டரைப் பார்க்கலாம். அவங்ககிட்டே ரிப்போர்ட் கொடுத்துட்டோம்!” செவிலியர் கூறிவிட்டு செல்ல, இருவரும் சென்று மருத்துவரைச் சந்தித்தனர்.
“தேங்க் காட்... நீங்க கரெக்டான டைம்க்கு வந்துருக்கீங்க. இதுக்கும் மேல டிலே பண்ணியிருந்தா ஆப்ரேஷன்தான் சொல்யூஷனா இருந்திருக்கும்!” என அவர் கூறவும், சுதி மெல்லிய் அதிர்வுடன் நோக்கினாள்.
“நம்பளோட முதுகெலும்புல ஃபைவ் டைப்ஸ் ஆப் போன் இருக்கு. அதுல லாஸ்ட் போன் லம்பார்னு சொல்லுவோம் சார். அதுல ஒரு போன் கொஞ்சம் நர்வ்ல ப்ரெஷர் கொடுத்ததால இவங்களுக்கு பேக் பெய்ன் அதிகமா இருந்திருக்கு அண்ட் அந்த இடம் ஸ்வெல்லாகி இருக்கதாலதான் இவ்வளோ ப்ராப்ளமும்!” என்றார். சுதி அமைதியாய் அவர் வார்த்தைகளை உள்வாங்கினாள்.
“என்ன ரீசன்னால இப்படியாகும் டாக்டர்?” நிவின் வினவ,
“கன்டினீயஸ் ப்ரஷர்தான் சார். ரொம்ப நேரம் ரெஸ்டே இல்லாம வேலை பார்க்குறது. நடந்துட்டே இருக்கது. ஹெவி வெய்ட் தூக்குறதுன்னு பல ரீசன்ஸ் இருக்கு சார்!”
“ஓகே டாக்டர்... இதுக்கு என்ன சொல்யூஷன்!”
“இவங்களுக்கு மாடரேட் லெவல்லதான் இருக்கு. சோ ஆப்ரேஷன் இப்போ வேணாம். பெய்ன் அண்ட் ஸ்வெல்லிங் குறைய டேப்லெட்ஸ் ப்ளஸ் ஸ்டீராய்ட்ஸ் தரேன். இப்போதைக்கு டேப்லெட்ஸ் ஃபாலோ பண்ணறது மஸ்ட் அண்ட் பெய்ன்க்கு ஒரு லோஷன் தரேன். இடுப்பு வலிச்சா ஜென்டிலா தேய்ச்சுக்கோங்க. கால்ல வீக்கம் எதுவும் இருக்கா மா?” எனக் கேட்டார் அவர்.
“யெஸ் டாக்டர்... அப்போ அப்போ வீக்கம் வரும்!” சுதி அமைதியாய் இருக்கவும், நிவின் பதிலளித்தான்.
“ஓகே... சுடு தண்ணி வச்சு ஒத்தடம் கொடுங்க. இடுப்புலயும் கொடுக்கணும். தென் முக்கியமான விஷயம் எக்ஸர்ஸைஸ் பண்ணணும். பிசியோதெரபிஸ்ட் அப்பாய்ன்மெண்ட் வாங்கிக்கோங்க. ஆன்லைன் செக்ஷன் டூ அவலபிள். நீங்க அவங்கிட்டே பேசிக்கோங்க!” என்றான்.
“இதெல்லாம் பெர்மனென்ட் சொல்யூஷனா டாக்டர்!”
“நோ மிஸ்டர் நிவின். ஆப்ரேஷன் ஒன்லி பெர்மனென்ட் சொல்யூஷன். பட், இப்போ இவங்களுக்கு ரொம்ப இயர்லி ஏஜ். சோ, நோ நீட் ஆப்ரேஷன். இனிமே கொஞ்சம் கவனமா இருக்கணும். ஐ க்நோ யூ ஆர் நியூலி மேரிட். பட், ஷீ நீட்ஸ் ரெஸ்ட். த்ரீ மந்த்ஸ் கேர்புல்லா இருக்கணும். ஹெவி வொர்க் அவுட், எக்ஸர்ஸைஸ் பண்ண கூடாது. வேகமா நடக்க கூடாது. முடிஞ்ச அளவுக்கு ரெஸ்ட் தான் பெஸ்ட் சொல்யூஷன். த்ரீ மந்த்ஸ் முடிஞ்சதும் பெட்டரா ஃபீல் பண்ணா ஓரளவுக்கு ஓகேதான். இல்லன்னா, நெக்ஸ்ட் என்ன ட்ரீட்மெண்ட் பண்ணுறதுன்னு பிளான் பண்ணலாம்!” என அவர் உரைக்க, நிவின் தலையை அசைத்துக் கேட்டுக் கொண்டான். நிவின் மேலும் தன்னுடைய சந்தேகம் அனைத்தையும் கேட்டுத் தெரிந்து கொண்டான்.
“ஓகே... நீங்க பதினைஞ்சு நாள் கழிச்சு செக்கப்க்கு வாங்க!” என மருத்துவர் கூற, இவர்கள் எழுந்து நின்றனர்.இத்தனை நேரம் அமைதியாயிருந்த சுதிரமாலா இப்போதுதான் வாயைத் திறந்தாள்.
“டாக்டர், குழந்தை பிறக்குறதுல பிராப்ளம் எதுவும் வந்துடாதுல்ல டாக்டர்?” என இவள் கேட்க,
“நோமா... அதெல்லாம் பிராப்ளம் வராது. பட், நீங்க கேட்குறதால த்ரீ மந்த்ஸ் ஆப்ஃடர் ஒரு டெஸ்ட் பண்ணி பார்க்கலாம். மத்தபடி திஸ் இஸ் அ காமன் இஷ்ஷூ. டோன்ட் திங்க் எனிதிங்க் பேட் சுதிரமாலா!” என அவர் கூற, தலையை அசைத்தவள் வெளியேறினாள். நிவின் அவள் முகம் வாடியிருப்பதைக் கவனித்தாலும் வீட்டிற்குச் சென்று பேசிக் கொள்ளலாம் என்று மருத்துவருக்கு உரிய பணத்தை செலுத்திவிட்டு வந்தான்.
இவன் மகிழுந்தை இயக்க, அருகில் அமர்ந்திருந்த சுதியிடம் பேச்சே இல்லை. அமைதியாய் ஜன்னலில் தலை சாய்த்து பார்வையை இலக்கற்று அலையவிட்டாள். இப்படியெதாவது இருந்துவிடக் கூடுமென அஞ்சித்தான் அவள் மருத்துவரைக் கலந்தாலோசிக்கவில்லை. என்னவோ நிவின் அவளுக்காகப் பார்த்து பார்த்து அனைத்தையும் செய்ய, அவள் மட்டும் அவன் மீது பாரத்தை சுதத்துவது போலொரு எண்ணம் மேலெழும்ப, கண்களில் உவர் நீர் நிரம்பியது. மெதுவாய் அவனைத் திரும்பிப் பார்த்தவள், “இப்போ நீங்க என்ன நினைக்குறீங்கன்னு நான் சொல்லவா?” இத்தனை நேரமிருந்த அமைதியைக் கிழித்துக்கொண்டு அவளது குரல் செவியை அடைய, நிவின் திரும்பி பார்த்தான். பதிலேதும் உரைக்கவில்லை.
“படிக்கவும் இல்ல. அழகாவும் இல்ல... சரி உடம்பாவது நல்லா இருக்கும்னு பார்த்தா புதுசா வியாதியை வேற தொத்திட்டு வந்திருக்கா. இவளைப் போய் ஏன் கல்யாணம் பண்ணேன்னு நினைக்குறீங்க தானே?” சுதி வேதனையை அடக்கிய குரலில் வினவ, அவன் பேசவே இல்லை.
“ஐ டோன்ட் ரிசர்வ் யூ... உங்களுக்கே அது தெரியும். நான் முன்னாடியே சொன்னேன். நான் உங்களுக்கு ஒத்து வர மாட்டேன்னு எத்தனையோ டைம் வார்ன் பண்ணேன். பட் நீங்க கேட்கலை. இப்போ பாருங்க, உங்களுக்குத்தான் தேவையில்லாத கஷ்டம். பேசாம அக்ஷாவைக் கல்யாணம் பண்ணி இருந்தா நீங்க சந்தோஷமா இருந்துருப்பீங்க. என்னை மாதிரி சீக்காழியைக் கட்டிக்கிட்டு ஹாஸ்பிடல் அலைய வேண்டி இருந்திருக்காது!” என்றவளின் விழிகளில் குபுகுபுவென நீர் இறங்கியது. நிவின் இரவு நேரம் போக்குவரத்து அதிகமாய் இருந்ததால் சாலையில் கவனமாய் இருந்தான். அவன் பதிலுரைக்காது இருப்பது இவற்றையெல்லாம் ஆமோதிப்பதாய் தோன்ற, சுதிக்கு அழுகைப் பொங்கியது.
“டைவர்ஸ் கூட உங்களால பண்ண முடியாது. கடைசி வரைக்கும் என் கூட ட்ராவல் பண்ணுவேன்னு ப்ராமிஸ் வேற பண்ணிட்டீங்க இல்ல? வேற ஆப்ஷனே இல்ல உங்களுக்கு. கண்டினியூ பண்ணித்தான் ஆகணும்!” என்றாள் கரகரத்தக் குரலில்.

அவள் மேலும் எதுவும் பேசும் முன்னே, “சுதி, வில் யூ ஷட் அப்?” என அவன் காரமாய்க் கூற, “ஓ... நான் பேசுறது கூட உங்களுக்குப் பிடிக்கலை போல?” என அதற்கும் தேம்பியவள் முகத்தை மறுபுறம் திருப்பிக் கொண்டாள்.
இருவரும் வீடு நுழைய, சுதி விறுவிறுவென அறைக்குள் நுழைந்து சேலையை அகற்றிவிட்டு இரவு உடைக்கு மாறிப் படுத்துவிட்டாள். போர்வையைப் போர்த்திக் கொண்டாள். விழிகளில் நீர் மட்டும் வடிந்து கொண்டேயிருந்தது. அவனுக்கு பாரமாய் இருக்கிறோம் என மனம் அழுது கரைய, விசும்பிக் கொண்டே படுத்திருந்தாள். நிவினும் உடை மாற்றினான். அவன் தன்னை சமாதானம் செய்வான் என சுதி எண்ணியிருக்க, அவன் வெளியே கூடத்திற்குச் செல்ல, இவளுக்கு இன்னுமே கழிவிரக்கத்தில் தொண்டை அடைத்தது. சில பல நிமிடங்கள் கடந்தும் அவன் வராது போக, இவள் அழுது கொண்டே படுத்திருந்தாள்.
தொடரும்..
சாரி ஃபார் லேட் அப்டேட் மக்களே. சரியா சீன் வராம அழிச்சு எழுதுனேன். ஸ்டில் ஏதோ குறையுதுதான். அடுத்த அப்டேட்ல மேச் பண்ணிடலாம் 🏃‍♀️🙈 இன்னும் மூனு அப்டேட் கதை வரும்















































































 
Well-known member
Messages
1,110
Reaction score
799
Points
113
Ok maa, romba perusa illama konjama thaan problem. Irunthalum paavam suthi

Nivina pesi pesiye tension eathuraale
 
Well-known member
Messages
616
Reaction score
426
Points
63
எப்படி அவளை கன்வின்ஸ் பண்ணப் போறான்
 
Messages
60
Reaction score
39
Points
18
அன்பு மட்டும்தான் அலங்கார வார்த்தை இல்லை
அவள் வேண்டிய அரவணைப்பை தர அது போதவில்லை போல அவளுக்கு.....
 
Top