• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,028
Reaction score
2,912
Points
113
பொழுது – 17 💖
இரண்டு நாட்கள் அமைதியாய் கழிந்தது. நிவின் எந்தவித தொல்லையும் செய்யாது அமைதியாய் இருக்கவும் சுதிக்கு நிம்மதி பிறந்தது. அன்றைக்கு அவள் வேலை முடிந்து வீடு வர, சந்திராவின் முகம் பொலிவிழந்து காணப்பட்டது. என்னவென புரியாது உடை மாற்றி வந்தாள் இவள்.
அவர் அமைதியாய் அப்பளத்தை தேய்த்துக் கொண்டிருந்தார். சௌம்யா சூடாய் ஆப்பம் சுட்டுக் கொடுக்க, அதை தட்டில் எடுத்துக்கொண்டு வந்து அமர்ந்தவள், “ம்மா... என்னாச்சு. ஏன் ஒருமாதிரி இருக்கீங்க?” எனக் கேட்டவாறே ஆப்பத்தை பிட்டு தேங்காய் பாலில் தோய்த்து வாயிலிட்டாள். பசித்த வயிற்றுக்கு அமிர்தமாய் இருந்தது. சந்திராவிடம் பதிலில்லை.
“ம்மா... உங்ககிட்டேதான் கேட்குறேன். பதில் சொல்லுங்க!” இவள் அழுத்திக் கேட்க, சௌம்யாவிடமிருந்து பதில் வந்தது.
“உன்னைப் பார்த்துட்டுப் போன பையனோட ஜாதகம் உன்னோட பொருந்தலை சுதி. அவங்க வீட்லயும் ஜாதகம் பார்த்திருப்பாங்க போல. கல்யாணம் நடந்தா சண்டையும் சச்சரவுமாத்தான் இருக்கும். அதனால வேணாம்னு ரெண்டு பக்கமும் முடிவெடுத்துட்டோம்!” என அவள் கூற, சுதியின் முகத்தில் அவர்கள் அறியாது நிம்மதி பிறந்தது. ஆனாலும் சௌம்யா கண்களுக்கு அது தவறாமல் புலப்பட்டது.
“சுதிமா, நீ எதுவும் மனசுல ஆசையை வச்சுக்கலையே. வேற நல்ல பையனா பார்ப்போம் டா. ஜாதகம் ஒத்து வரலைன்னா, வாழ்க்கை நல்லா அமையாம போய்டும்!” சந்திரா இவளை வருத்தமாய்ப் பார்த்துக் கூறினார். சுதி முகத்தில் இளமுறுவல் தோன்றிற்று.
“ம்மா... நீங்களா பார்த்து இவர்தான் உனக்கு வருங்கால புருஷன்னு யாரை பிக்ஸ் பண்ணிட்டு என் முன்னாடி நிறுத்துறீங்களோ அவரை நான் ஏத்துப்பேன் மா. அவர் எப்படி இருந்தாலும் பரவாயில்லை. நீங்க எனக்கு கெடுதல் எதுவும் நினைக்க மாட்டீங்க. எனக்கு நல்லது எதுன்னு உங்களுக்குத் தெரியாதா?” எனப் புன்னகைத்தவளின் முகத்தை தடவினார் பெரியவர்.
“ஐ... அத்தை முகத்துல மாவு!” ருத்ரா எட்டி சுதியின் முகத்தைத் துடைத்துவிட, இவள் புன்னகைத்தாள்.
“ரொம்ப சந்தோஷமா இருக்கோ?” செவியோரம் முணுமுணுத்துவிட்டுப் போகும் சௌம்யாவை இவள் முறைத்துப் பார்த்தாள்.
“முறைப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல டி?” என பெரியவள் தனக்குள் முனங்கினாள்.
சுதி அன்றைக்கு நிம்மதியாய் தூங்கினாள். பாஸ்கரின் அன்றைய பேச்சு அவளுக்கு அத்தனை உவப்பாய் இல்லை. அவனோடு எப்படி வாழ்க்கையைப் பகிரப் போகிறோம் என மனதினோரத்தில் கவலை அரித்திருந்தது. அவனுடைய சுபாவமே அன்றைய பேச்சைப் போலத்தான் என்றால் காலத்திற்கும் அவன் தன்னை மட்டம் தட்டிப் பேசுவானே. எப்படி நிம்மதியாய் வாழ முடியுமென பயமும் கவலையும் அப்பியிருந்த மனம் இன்றைக்கு சௌம்யாவின் பதிலில் நிறைந்து போனது. அடுத்து வரும் மாப்பிள்ளையைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என ஆழ்ந்த நித்திரையில் மூழ்கிப் போனாள்.
மறுநாள் மலர்ச்சியுடன் வேலைக்கு வந்த தோழியை சந்தேகமாகப் பார்த்தாள் விவேகா. “என்ன டி... முகமெல்லாம் பளபளன்னு இருக்கு. மேரேஜ் பிக்ஸ் ஆகிடுச்சா?” எனக் கேட்டாள்.
“ப்ம்ச்... அது ஜாதகம் ஒத்து வரலைன்னு தட்டிப் போய்டுச்சு டி. எனக்கு இப்பத்தான் நிம்மதியா இருக்கும் விவே. அந்த மாப்பிள்ளையை எனக்கு சுத்தமா பிடிக்கலை டி. அம்மா சொன்னாங்கன்னுதான் ஓகே சொன்னேன். அதுவா தட்டிப் போனதுல சந்தோஷமா இருக்கேன்!” என்றாள் மலர்ந்து புன்னகைத்து.
“ஆமா... ஆமா. கொஞ்சம் வெள்ளையா இருந்தா நம்பளை மட்டம் தட்டிடுவானுங்க. உனக்குன்னு ஒருத்தன் வருவான் சுதி. அதுவரை வெயிட் பண்ணு!” என அவள் கூற, சுதியின் அலைபேசியில் குறுஞ்செய்தி வந்து விழுந்தது. நிவின்தான் அனுப்பி இருந்தான்.
“ரெண்டு நாள் நிம்மதியா இருந்தேன். இவருக்குப் பிடிக்கலை போல!” என முணுமுணுத்துவிட்டு அந்தச் செய்தியை திறந்தாள்.
“சுதிரமாலா... ஆர் யூ ஃப்ரீ இன் தி ஈவ்னிங். ஐ ஜஸ்ட் வாண்ட் டு டாக் டு யூ!” என அவன் அனுப்பிய செய்தியைப் படித்தவள், பதிலளிக்கவில்லை.
“என்னவாம் டி... என்ன அனுப்பி இருக்கான். துரை இங்கிலீஷ்லதான் மெசேஜ் பண்ணுவாரோ? எனக்கு ஒன்னும் புரியலை!” விவேகா உதட்டைக் கோணினாள்.
“சாயங்காலம் ப்ரீயா. பேசணும்னு கூப்பிட்டிருக்காரு டி. நான் ரிப்ளை பண்ணலை. அவர்கிட்டே பேசுனா, என் தொண்டைத் தண்ணித்தான் வத்திப் போகும். அமைதியா இருந்துடுறது பெட்டர்!” என்றாள் பெருமூச்சுவிட்டு.
“ப்ளாக் பண்ணிடு சுதி. அப்புறம் எப்படி மெசேஜ் பண்றான்னு பார்ப்போம்!” என விவேகா கூற,
“இல்லை டி. போன மாசம் சம்பள பாக்கி இருக்கு. எட்டாயிரம் சும்மாவா? என் உழைப்பு டி. அதை வாங்கிட்டா ப்ளாக் பண்ணிடுவேன்!”
“ஆஹா... கண்டுபிடிச்சுட்டேன் டி. இந்த லவ் நாடகம் எல்லாம் இந்த எட்டாயிரத்தை அபேஸ் பண்ணவாதான் இருக்கும். எப்படியும் வேலையைவிட்டு தொரத்துற ஐடியால இருந்திருப்பான். இப்படி பேசினா நீயே நின்னுடுவ. சம்பளமும் கொடுக்கத் தேவையில்லை. அவன் மேலயும் தப்பில்லாம போய்டும். செம்ம கில்லாடி அவன்!” விவேகா யோசனையுடன் கூற, சுதி இல்லையென தலையை அசைத்தாள்.
“இல்லை டி... அப்படியெல்லாம் கஞ்சமில்லை டி. அவர் ஒருதடவை காம்ப்ளக்ஸ்க்கு பர்சேஸ்க்கு வந்தாலே ஐயாயிரம் பத்தாயிரம் செலவு பண்ணுவாரு. அதுவும் இல்லாம ஒன்னாந் தேதியானா, கரெக்டா சம்பளம் கொடுத்துடுவாரு. அதனால இது ரீசனா இருக்க வாய்ப்பில்லை!” என்றாள்.
“ஓ...” விவேகா யோசித்தாள். மறுபடியும் அலைபேசி சப்தமெழுப்ப, எடுத்துப் பார்த்த சுதிக்கு கோபம்தான் வந்தது.
“ரிப்ளை மீ சுதி. ஆர் எல்ஸ் ஐ வில் கம் டூ யுவர் ஹோம் டூநைட்!” என்றதைப் படித்தவள், “என் வீடு ஒன்னும் உங்க மாமியார் வீடில்லை. நினைச்ச நேரம் வந்து போறதுக்கு!” எனக் கடுப்புடன் பதிலளித்தாள்.
“இன்னும் ப்யூ டேய்ஸ்ல என் மாமியார் வீடாகிடும் இல்ல?” என கண்ணடிக்கும் பொம்மையை அனுப்பியிருந்தான்.
“சரி, நீ வர வேணாம்‌. நான் நைன் ஓ க்ளாக் அங்க வரேன்!” என அடுத்து ஒரு செய்தியை அனுப்பியிருந்தான்.
“இம்சையைக் கூட்டுறான் டி. தொல்லையைத் தூக்கி நானே என் தோள்ல போட்டுக்கிட்டேன் போல!” சுதி நொந்துகொண்டு கூறினாள்.
“என்னதான் சொல்றான் அவன்? என்ன வேணுமா அவனுக்கு. கருமத்தை தமிழ்ல வேற அனுப்ப மாட்டான்!” என்றவள் என்னவெனப் படித்து புரியாது விழித்தாள்.
“நான் வரலைன்னா அவன் வீட்டுக்கு வருவானாம். இப்போதான் வீடு கொஞ்சம் நிம்மதியா இருக்கு. மறுபடியும் வந்து ஏழரையைக் கூட்டுவான். அண்ணி என்னமோ எல்லாம் என் சம்மதத்தோட நடக்குற மாதிரி பார்ப்பாங்க!” என்றாள் எரிச்சலாய்.
“சரி, வர்றேன்னு பதிலனுப்பு டி. நம்ப ரெண்டு பேரும் போறோம். நான் நாலு கொடுக்குற குடுப்புல உன் பக்கமே அவன் திரும்பக் கூடாது. அவ்வளோ என்ன கொழுப்பு அந்த வெள்ளை உழுவைக்கு!” விவேகா கடுகடுத்தாள்.
“பிரச்சனை வேணாம் விவே!”
“அப்போ அவன் நைட் டைம்ல உங்க வீட்டுக்கு வர்றது உனக்கு ஓகே வா. ஒரு தடவை போய் மூஞ்சில அடிச்ச மாதிரி பேசிட்டு வந்தாதான் சரிபடுவான் டி. நீ ஒதுங்கிப் போனா ஏறி மிதிக்கத்தான் பார்ப்பானுங்க. வர்றேன்னு சொல்லு. ரெண்டு பேரு இருக்கோம். எதுவும் பண்ண மாட்டான்!” என்றாள் அழுத்தமாய். சுதிக்கு செல்ல வேண்டுமா என மீண்டுமொரு யோசனை. பிரச்சனை எதற்கு என யோசித்தாள். இருந்தும் வீட்டிற்கு அவன் வந்துவிட்டால் என எண்ணம் தோன்ற, “சரி வர்றேன் சார்...” என அனுப்பினாள்.
“தட்ஸ் குட் கேர்ள். நைட் டைம், சோ டோன்ட் கம் அலோன். உன் ஃப்ரெண்ட் விவேகாவைக் கூட்டீட்டு வா சுதி!” என்றவன் பதிலில் சுதிக்கு ஆச்சர்யம்.
“தனியா வர வேணாம். உன் ஃப்ரெண்ட் விவேகாவை கூட்டீட்டுவான்னு சொல்றார் டி. உன் பேரை தெரிஞ்சு வச்சிருக்காரு பாரேன்!” என சுதி அதிசயித்துக் கூற,
“ஏன்... என் பேரை தெரிஞ்சு வச்சிருக்கக் கூடாதா என்ன?” என இவள் முகத்தைக் கோணினாள்.
“ச்சு... அப்படி சொல்லலை டி. உன் பேரை தெரிஞ்சுக்கிற அளவுக்கு நோட் பண்ணி இருக்காரேன்னு சொல்றேன்!”
“ஓ... அப்படி சொல்றீயா. இருக்கும், இருக்கும். நல்லவன் மாதிரி பேசுறான் பார்த்தீயா. சும்மா இருக்கவனைக் கூட நம்பிடலாம். நல்லவன் வேஷம் போட்றவனை நம்பக் கூடாது டி. நேர்ல போறோமில்ல. அவனைப் பார்த்துக்கிறேன்!” என இவள் சூளுரைக்க, சுதி சற்றே பயத்துடன் தோழியை நோக்கினாள்.
“பிரச்சனை எதுவும் வேணாம் டி. அமைதியா பேசிட்டு வரலாம். அவருக்கு ஒன்னும் இல்ல. எது நடந்தாலும் நம்மளைத்தான் குத்தம் சொல்லும் இந்த உலகம். நம்ப சேஃப்டி முக்கியம்!” என்க, விவேகா சும்மாவேனும் தலையசைத்துவிட்டு நகர, இவள் பெருமூச்சை வெளிவிட்டாள்.
இரவு வேலை முடிந்ததும் சௌம்யாவிற்கு குறுஞ்செய்தி ஒன்றைத் தட்டிவிட்டாள் சுதி. வணிகவளாகத்தில் ஆட்கள் என்றைக்காவது நிறைய இருந்தால் தாமதமாய் கிளம்புவாள். அதனால் அதைப் போல பொய்யை உரைத்தாள். மனம் கொஞ்சம் உறுத்தியது. நிவின் மீதுதான் கோபம் வந்தது.

ஐந்து நிமிடங்கள் வீட்டிற்கு அழைத்துப் பேசிவிட்டு வந்த விவேகா, “எங்கம்மா ஒரு பத்து நிமிஷம் லேட்டானாலே என்ன, ஏன், எதுக்குன்னு என்னைப் போட்டு படுத்திடும். இப்போ கொஞ்சம் லேட்டாகும்னு சொன்னதும்... ஷப்பா!” என அலுத்தவள், “ஆனால் பாரேன்... மலைமாடு மாதிரி ஒருத்தன் இருக்கான். எந்த நேரத்துக்கு வர்றான் போறான்னு தெரியாது. அவனைக் கேள்வி கேக்காது. நான்தானே இளிச்சவாய்!” என அவள் புலம்ப, இருவரும் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பிற்குள் நுழைந்தனர்.
விவேகா அனைத்தையும் ஆர்வமாய் சுற்றிப் பார்த்தாள்.
‘வாழ்றானுங்க!’ என அவள் மனம் பொறாமை கொண்டது. இருவரும் சென்று நிற்க, அழைப்புமணி அழுத்தும் முன்னே நிவின் கதவைத் திறந்துவிட்டான்.
“வாங்க சிஸ்டர்... உள்ள வாங்க!” விவேகாவை இன்முகமாக வரவேற்றவன், “கெட் இன் சுதி..” என்றுவிட்டு உள்ளே நுழைந்தான். விவேகா அந்த வீட்டைப் பிரம்மிப்பாய் பார்த்தாள். அவர்கள் வீட்டை நான்கு மடங்காக்கினால் கூட இந்தளவிற்கு வராது என அவள் மனம் கடகடவென கணக்கிட்டது.
“உக்காருங்க சிஸ்டர்...” என அவன் இரண்டு முறை உரைத்ததும் பிகு செய்யாமல் விவேகா அமர்ந்துவிட, சுதி மட்டும் அமரவில்லை. அமைதியாய் அவனை மட்டும் அளவெடுத்தாள்.
“சுதி... நீயும் உக்காரு. ரெண்டு பேரும் டயர்டா இருக்கீங்க. ஐ வில் கெட் யூ ஜூஸ்!” என்றவன் ஏற்கனவே தயாரித்திருந்த பழச்சாற்றை உணவு மேஜை மீதிருந்து எடுத்து இருவருக்கும் பரிமாறினான்.
சுதி அசையாது நிற்க, “சுதிரமாலா... சிட். நின்னுட்டே இருக்கேன்னு காட் கிட்டே வேண்டி இருக்கீயா என்ன? கம் அண்ட் சிட். யூ லுக் வெரி டயர்ட்!” என்றான் அக்கறையாய். அவனை சில நொடிகள் வெறித்தவள், மெதுவாய் வந்து அமர்ந்தாள். காலையிலிருந்து நின்று கொண்டே இருந்ததில் கால் வலி உயிர் போனது. அதோடு மாதவிடாய் காலமும் சேர்ந்து முதுகோடு வலிக்க, அயர்ந்து போனாள். வீட்டிற்கு சென்றதும் அப்படியே படுத்துவிட வேண்டுமென பல்லைக் கடித்து வேலை பார்த்தாள். வீட்டிற்கு செல்லாமல் இங்கு வந்ததும் கொஞ்சம் கடுப்பாய் இருந்தது. ஓய்வுக்காக வேண்டும் உடலை அவளே அழைக்கழித்தாள். கண்ணெல்லாம் சொக்கியது.
தளர்வாய் அமர்ந்ததும் அந்த பஞ்சு நீள்விருக்கை அவளை உள்வாங்கிக் கொண்டது. அப்படியே இங்கேயே படுத்து உறங்கிவிடலாம் என்ற எண்ணம் தோன்றியதும் பெருமூச்சை வெளிவிட்டாள். அவளது முகத்தையே நிவின் பார்த்திருந்தான். அவனுக்கும் அவள் நிலை புரந்திருக்க வேண்டும்.
“சிஸ்டர்... ஏன் ஜூஸ் குடிக்கலை நீங்க. எடுத்துக்கோங்க!” என்றான். விவேகா முதல்நிலை பிர்மமிப்பிலிருந்து மீண்டிருந்தாள்.
“வேண்டாம் சார். நீங்க விஷயத்தை மட்டும் சொல்லுங்க. இன்னைக்கு என்னென்னுப் பேசி முடிச்சிடலாம்‌. என் ஃப்ரெண்ட் உங்க மேல செம்ம காண்டுல இருக்கா!” விவேகா குரலை உயர்த்தினாள்.
“சிஸ்டர்... உங்க கோபம் எனக்குப் புரியுது‌. எல்லாத்தையும் பேசிக்கலாம். இப்போ இந்த ஜூஸைக் குடிச்சிட்டு என்ன வேணாலும் பேசுங்க. நான் பதில் சொல்றேன்!” அவன் அக்கறையாகக் கூறவும், விவேகாவால் அவனிடம் கோபமாய் பேச முடியவில்லை. பழச்சாற்றை கையிலெடுத்து வாயருகே கொண்டு சென்றவள் படக்கென அவனை சந்தேகமாகப் பார்த்தாள்.
எதற்கெனப் புரிந்தவனும் மெலிதாய் சிரித்துவிட்டு ஒரு காலி குவளையை எடுத்து வந்து தானும் பழச்சாற்றை அருந்தினான். “பயப்படாம குடிங்க சிஸ்டர். எதுவும் மிக்ஸ் பண்ணலை நான். இட்ஸ் ப்ரெஷ் ஜூஸ். இப்போதான் ப்ரிபேர் பண்ணேன்!” என அவன் கூற, சுதி கண்களை மட்டும் மூடி தோழயின் தோளில் சாய்ந்திருந்தாள். விவேகா கடகடவென பழச்சாற்றை அருந்தி முடித்தாள். சுவையாய் இருந்ததும் நாக்கில் தித்திப்பாய் இறங்கியது பழச்சாறு.
“ஜூஸ் குடிச்சிட்டேன். இப்போ சொல்லுங்க சார். என்ன பேசணும் உங்களுக்கு?” விவேகா கேட்க, “என்னை நீங்க அண்ணான்னு கூப்பிடுங்க சிஸ்டர். உங்க ஃப்ரெண்டோ ப்யூச்சர் ஹஸ்பண்ட் நான்!” என்றான் சின்ன புன்னகையுடன்.
“அவ இன்னும் உங்களுக்கு ஓகே சொல்லலை!” விவேகா பட்டென கூற, “சீக்கிரம் சொல்லிடுவா!” உறுதியாய் உரைத்தான் நிவின்.
“நான் ஒன்னும் கேட்கணும் சார். எதுக்காக நீங்க சுதியை டார்ச்சர் பண்றீங்க. ஏற்கனவே வேலை வேலைன்னு நொந்து போய்ருக்கா. நீங்களும் அவளைக் கஷ்டப்படுத்துறீங்களே. இதெல்லாம் உங்களுக்கே அடுக்குமா? இவளைப் பார்த்தா பாவமா இல்லையா?” என ஆதங்கமாய்க் கேட்டாள்.
“சிஸ்டர்... நான் உங்கப் ஃப்ரெண்டை என்ன டார்ச்சர் பண்ணேன். அவளை எனக்குப் பிடிச்சது. சோ, சொன்னேன். யெஸ் ஆர் நோ சொல்றது அவளோட டிசிஷன்னு அப்பவே சொல்லிட்டேன்!” என்றவன் பதிலில் விவேகா திரும்பி சுதியைப் பார்க்க, அவள் தலையை அசைத்தாள்.
“ஓ... அதான் அவ பிடிக்கலைன்னு சொல்லிட்டா இல்ல. அப்புறம் ஏன் அதையே பேசுறீங்க?”
“இல்லையே சிஸ்டர். நான் சண்டே அன்னைக்கு என்னோட ப்ரபோசலை சுதிக்கிட்டேயும் அவளோட வீட்லயும் சொன்னேன். மத்தபடி அடுத்து நானா போய் பேசலை. உங்க ஃப்ரெண்ட் தான் என்னை வந்து பார்த்தா!” என்றான்.

“சுதி... அவரைப் போய் ஏன் பார்த்த நீ?” இவள் தோழியைக் கேட்டாள்.
 
Administrator
Staff member
Messages
1,028
Reaction score
2,912
Points
113
“சுதி... அவரைப் போய் ஏன் பார்த்த நீ?” இவள் தோழியைக் கேட்டாள்

“ஆமா... அவரை ஆசையா பார்த்து பேச போனேன் பாரு. பிடிக்கலைன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிட்டு வரத்தான் டி போய் பார்த்தேன்!” சுதி அவனை முறைத்தபடி கூறினாள்.
“அவ உங்களைப் பிடிக்கலைன்னு சொல்லதான் வந்து பார்த்திருக்கா. இதுல என்ன தப்பு இருக்கு?” விவேகா நிவினிடம் கேட்டாள்.
“தப்பில்லையே சிஸ்டர். நீங்க கேட்குறது சரியான விஷயம். ஹம்ம், உங்க ஃப்ரெண்ட் என்னைப் பிடிக்கலைன்னு சொல்ல என்னைப் பார்க்க வந்தது சரிதானே?” என அவனும் கேட்க, இவள் தலையசைத்தாள்.
“ரைட், அவளுக்கு என்னைப் பிடிக்கலைன்னு என்கிட்ட வந்து சொல்ற மாதிரி எனக்கு அவளைப் பிடிச்சிருக்குறதை அவகிட்ட தானே நான் சொல்ல முடியும். இல்ல உங்ககிட்டே வந்து சொல்ல முடியுமா? அது அநாகரீகமா இருக்குமே சிஸ்டர். இப்போ நான் யார்கிட்டே என் விருப்பத்தை சொல்லணும்?” என அவன் கேட்க, விவேகா குழம்பிப் போனாள்.
“அது... அது அவகிட்டேதான் சொல்லணும் நீங்க!”
“பார்த்தீங்களா... நீங்களே சொல்லிட்டீங்க. இனிமே சுதியைப் பார்த்து என் மனசுல இருக்கதை நான் சொல்றதுல எந்த தப்பும் இல்லை தானே?” என அவன் குறும்பாய் புன்னகைக்கவும், விவேகா திருதிருவென விழித்தாள்.

சுதி நிவினை எரிச்சலாய்ப் பார்த்து, “பேச்சுலயே எல்லாரையும் மடக்கிடலாம்னு நினைக்காதீங்க. எதுக்கு இப்போ கூப்டீங்கன்னு சொல்லுங்க. நான் கிளம்பணும். இதுக்கும் மேல லேட்டா போனா தெரு ரொம்ப இருட்டா இருக்கும்!” என்றாள் கடுப்புடன்.
“ஹம்ம்... நாளைக்கு என் அப்பா, அங்கிள், ஆன்ட்டியோட உங்க வீட்டுக்குப் பேச வரலாம்னு இருக்கேன் சுதி. சோ, அதை சொல்லத்தான் கூப்பிட்டேன்!” என்றவனை முறைத்தாள்.
“எதுக்காக பேச வரணும். என்ன பேச போறீங்க. அதான் அம்மா வேணாம்னு அப்பவே சொல்லிட்டாங்களே. அப்புறம் ஏன் படுத்துறீங்க?” என சீறலாய்க் கேட்டாள்.
“ரிலாக்ஸ் சுதி. ஏன் டென்ஷனாகுற. நாளைக்கு ஜஸ்ட் என் ஃபேமிலியோட வந்து எல்லாரையும் உங்களுக்கு இன்ட்ரோ பண்ண போறேன். சட்டுன்னு நான் மட்டும் வந்து பேசவும் உங்க வீட்ல இருக்கவங்களுக்கு நம்பிக்கை இருக்காது. அதான் முறையா பெரியவங்களை வச்சு பேச சொல்றேன்!” என்றான் பொறுமையாய்.
“தேவையில்லாம உங்க டைமை வேஸ்ட் பண்ணாதீங்க. எதுக்கு இப்படியெல்லாம் பண்றீங்கன்னு சுத்தமா எனக்குப் புரியலை. இதை சொல்லத்தான் கூப்டீங்கன்னா, நான் வந்திருக்கவே மாட்டேன்!” என எழுந்து நின்றாள். விவேகா அவர்கள் இருவரும் பார்த்து விழித்தாள். சுதிக்கு இத்தனைக் கோபம் வருமென அவளுக்கு இன்றுதான் புரிந்தது.
“சண்டை போட்ற மூஞ்சியைப் பாரு. ஜூஸைக் குடிச்சி முடிச்சிட்டீயா? கிளம்பலாமா?” என திரும்பி விவேகாவைப் பார்த்து சுதி குதற, அவள் படக்கென எழுந்து ரோஷத்துடன் பையை மாட்டினாள்.
“நான் வேணாம்னு சொன்னேன். அண்ணன்தான் கட்டாயப்படுத்துனாரு!” என அவள் சின்ன குரலில் உரைக்கவும் சுதி கண்களாலே தோழியை எரித்தாள்.
“அண்ணானாம்... அண்ணன்‌. யாருக்கு யாரு டி அண்ணன். வரும் போதே நினைச்சேன். சரியான ஆள் மயக்கி இவரு. பேச்சுல மடக்கிடுவாரு!” என நிவினைப் பார்த்து சுதி முணுமுணுக்கவும் அவன் முகம் முழுவதும் புன்னகை படர்ந்தது.
“ஆள் மயக்கிதான். பட் இந்தப் பொண்ணு சுதிரமாலாவை மடக்க முடியலையே!” என்றான் குறும்பாய். அவனை முறைத்தவள் விறுவிறுவென வாயிலருகே சென்றாள்.
“என்னோட சம்பள பாக்கியை எப்போ தருவீங்க‌. எனக்கு இப்பவே வேணும்!” என்றாள் அதிகாரமாய்.
“யெஸ்... சாரி, சாரி சுதிரமாலா. ஐ பார்காட் இட்!” என நெற்றியைச் சுருக்கினான்.
“அதானே... உங்கப் பணமா அது. எனக்கு குடுக்க வேண்டியதுதானேன்னு மறந்துடுப்பீங்க. போய் எடுத்துட்டு வாங்க!” என அசையாது நின்றாள்.
“கண்டிப்பா இப்பவே வேணுமா?” அவன் கேட்க, “ஆமா... வீட்டு செலவுக்கு வேணும்!” அடமாய் நின்றாள்.
“என்கிட்ட கைல கேஷ் இல்லை. வாங்க, கார்ல உங்களை பஸ் ஸ்டாப்ல விட்டுட்டு ஏடிஎம்ல எடுத்து தர்றேன்!” என்றான்.
“ஏன்... போன்ல அனுப்புங்க. உங்களோட எல்லாம் வர முடியாது!” சுதி மறுத்தாள்.
“என்னோட இன்டர்நெட் பேங்கிங் டூ டேய்ஸா வொர்க் ஆகலை. சோ, என்னால போன்ல அனுப்ப முடியாது. இப்பவே வேணும்னா என்கூட வர்றதுதான் ஒரே ஆப்ஷன். இல்லைன்னா நான் அப்புறம் கூடத் தர்றேன். உன்னோட மணி என்கிட்டயே இருக்கட்டும் சுதி!” என அவன் சின்ன சிரிப்புடன் கூறவும், “வரேன்...” எனப் பல்லைக் கடித்தாள் அவள்.

விவேகாதான் நடப்பது அனைத்தையும் ஆச்சரியமாய்ப் பார்த்தாள். நிவினின் செய்கையில் பொய்யிருப்பதாய் தோன்றவில்லை. அதைவிட சுதி எத்தனை முறை கோபமாய் பேசினாலும் அவன் முகத்தை சுளிக்கவில்லை. தன்மையாய் பதிலளிக்கிறானே எனப் பார்த்தாள். இத்தனை உயரத்தில் இருப்பவன் இதெல்லாம் ஏன் செய்கிறான் என்ற கேள்வியும் எழுந்தது. சுதி சொல்லும்போது நிவினைப் பற்றி தவறாய்தான் நினைத்தாள். ஆனால் இப்போது அந்த எண்ணத்தை இழுத்துப் பிடிக்க முடியாது விட்டுவிட்டாள்.
விவேகாவைப் பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டவன், “சிஸ்டர்,‌ சேஃப்டியா போங்க. ரீச் ஆனதும் சுதிக்கு மெசேஜ் போடுங்க!” என்றான்.
“ஹம்ம்... டென் மினிட்ஸ் தான் ஆகும்ண்ணா. கவலைப்படாதீங்க!” என அவள் சினேகமாகப்‌ புன்னகைத்தாள். இவன் தலையசைத்து மகிழுந்து நகர்த்திச் சென்று பணம் எடுக்கும் எந்திரத்தருகே நிறுத்திவிட்டு தேவையான பணத்தைப் பெற்று வந்தான்.
அவன் ஏறிமயர்ந்ததும் சுதி, “என்னோட சேலரி?” எனக் கையை நீட்டினாள்.
“ரொம்பதான்!” என முணுமுணுத்தவன் அவளிடம் சம்பளப் பணத்தை எண்ணி நீட்டினான். ஒருமுறை சரிபார்த்து கைப்பையில் வைத்தவள் எதிரே சாலையைப் பார்த்தாள். அடுத்த பேருந்து நிலையத்திற்கு நடக்க வேண்டும் என நினைத்ததும் இத்தனை நேரம் கருத்தில் பதியாத கால்வலி இப்போது பூதாகரமாகத் தோன்றிற்று.
அவனும் அவளைத்தான் பார்த்திருந்தான்.
“என்னை பஸ் ஸ்டாப்ல இறக்கி விட்றீங்களா? அவ்வளோ தூரம் நடந்து போய் பஸ் பிடிச்சுப் போக டைமாகிடும்!” அதிகாரமாய் இல்லாது தயங்கிபடியே கேட்டாள். அவனிடம் உதவி கேட்பது தவறென மனம் கூற, அவனால்தானே இத்தனை தாமதம். உதவி செய்யட்டும் என மூளை இடை புகுந்தது.
தலையை அசைத்த நிவின் மகிழுந்தை இயக்கியவன் பேருந்து நிறுத்தத்தைக் கடந்து செல்ல, “ப்ஸ் ஸ்டாப் போய்டுச்சு‌. எங்கப் போறீங்க?” என சுதி பதறினாள்.
“ரிலாக்ஸ் சுதி. நான் உன்னை வீட்ல விட்டுட்றேன். என்னால தானே உனக்கு லேட்டாச்சு. இந்த மிட் டைம்ல உன்னை தனியா அனுப்ப மனசு வரலை. இது ஜஸ்ட் ஒரு ப்ரெண்ட்லி ஹெல்ப்தான். நான் உன்கிட்ட ப்ரபோஸ் பண்ணேன்றது மறந்துடு. லைக் நான் உன்னோட ஓனர், பாஸ்னு நினைச்சுக்கோ!” என்றவனைப் பார்த்தாவாறு திரும்பி அமர்ந்தவள், “வீட்ல வேலை செய்ற பொண்ணைக் கார்ல ஏத்திட்டுப் போய் வீட்ல ட்ராப் பண்ற அளவுக்கு என் ஓனர் ஜெனரஸ் கிடையாது. ஹி இஸ் ரூத்லெஸ், ஹார்ட்லெஸ்!” என்றாள் நக்கலாய்.

அவளை ஒரு நொடி திரும்பிப் பார்த்துவிட்டு சாலையில் விழிகளைப் படரவிட்ட நிவின், “ஓ... ரூத்லெஸ்னு சொல்றதுக்கு எதாவது ரீசன் இருக்கா மேடம்?” எனக் கேட்டான்.
“ஏன் இல்லை... ரெண்டு இருக்கு. அடுத்தவங்க மேல தப்பில்லைனாலும் வீட்டுல வேலைக்கு வந்தவங்கன்னு எளக்காரமா பார்த்து தேவையில்லாம பழி போட்டுத் திட்டுவீங்களே!”
“தட் வாஸ் மை மிஸ்டேக். பட் அப்பவே நான் சாரி கேட்டுட்டேனே. அதையே சொல்லிக் காட்டாத சுதி!” என்ற நிவின்‌ சற்றே குரலை உயர்த்தியவன் அவளை முறைத்தான்.
“சரி... அதை விடுங்க. ஒருநாள் எக்ஸ்ட்ரா லீவ் கேட்டதுக்கு அவ்வளோ யோசிக்கிறீங்க. இந்த ஐஞ்சு மாசத்துல நானா என்னைக்காவது சொல்லாம கொள்ளாம லீவ் போட்டு இருக்கேனா என்ன? ஒருநாள் லீவ் கேட்டா கூட கொடுக்காத ஹார்ட்லெஸ் நீங்க!” என்றவளைத் திரும்பி ஆழப் பார்த்தான், பதிலில்லை.
“ஏன் பேச மாட்றீங்க. பதில் சொல்லுங்க!” என இவள் விடாமல் கேட்டாள்.
“ஐ ஹெவ் ஆன்சர். பட் நீ நம்ப மாட்ட!” என்றான்.
“சரி... சொல்லுங்க. எதாவது பொய்யான ரீசன் வச்சிருப்பீங்க. அதான் நான் நம்ப மாட்டேன்னு சொல்றீங்க!” என அவள் கூற, நிவின் பேசவில்லை.
சுதிக்கு அவனைத் திரும்பிப் பார்த்து அமர்ந்ததில் சற்றே அசௌகரியமாக இருந்தது. இடுப்பு வலிக்க, மறுபுறம் திரும்பி அமர்ந்தாள். கால்களைத் தூக்கி மடக்கி வைத்து வயிற்று வலியோடு இடுப்பு வலியையும் குறைக்க முயன்றாள்.
அவளைப் பார்த்த நிவின், “என்ன பண்ணுது சுதி... டயர்டா இருக்கா? காம்ப்ளக்ஸ்ல வொர்க் அதிகமா?” என அவன் அக்கறையாய்க் கேட்க, சுதியிடம் அமைதி. அவள் எத்தனை எடுத்தெறிந்து பேசியும் அவன் இப்படி கேட்கவும் அவளுக்கு மெல்லிய குற்றவுணர்வு படர்ந்தது. அதை விரட்ட முயன்றவள், “ஏன் வேலை அதிகமா இருந்தா நீங்க வந்து ஷேர் பண்ணப் போறீங்களா?” நக்கலாகக் கேட்டாள்.
“ஹம்ம்...அது இம்பாசிபிள் ஆச்சே சுதிரமாலா. இதுவே ஆப்டர் மேரேஜ் சொல்லி இருந்தா எங்க வலிக்குதுன்னு கேட்டு பெய்ன் பாம் தேய்ச்சு விட்டிருப்பேன். கால் அமுக்கி விட்டிருப்பேன்!” என்றான் அடர்ந்தக் குரலில். மூடியிருந்த இமைகளைப் பிரித்தவள், “உங்களோட சேலரி எவ்வளோ?” எனக் கேட்டாள்.
சம்பந்தமில்லாத கேள்வியில் விழித்தவன், “டூ லேக்ஸ் பெர் மந்த்!” என்றான். அதைக் கேட்டதும் சுதியிடம் சில நொடிகள் பேச்சே இல்லை. இரண்டு லட்சமா என மலைத்தவள், “ரெண்டு லட்சம் மாசம் சம்பளம் வாங்குறீங்களே. அப்புறம் கூட கல்யாணத்துக்கு பிறகு என்னை வேலைக்கு அனுப்புவீங்களா? மனசாட்சியே இல்லையா உங்களுக்கு?” என சற்றே கோபமாய்க் கேட்டாள். அவளது கேள்வியில் நிவின் உதடுகளில் புன்னகை ஏறின.
“அப்போ உனக்கு மேரேஜ்க்குப் பிறகு வேலைக்குப் போறது பிடிக்கலை. ஓகே சுதி, நீ சொல்லிட்டல்ல. நம்ப மேரேஜ் முடிஞ்சதும் வேலையை விட்ரு!” என்றான் குறும்பாய். அப்போதுதான் அவளும் தன் பேச்சை உணர்ந்திருப்பாள் போல. எதுவும் பேசாது பார்வையை ஜன்னலில் பதித்தாள்.
“ரெண்டு லட்சம் சம்பளம் வாங்குறீங்க. பார்க்க அழகா இருக்கீங்க. சொந்தமா பெரிய அப்பார்ட்மெண்ட் அண்ட் ஊர்ல சொத்து வேற இருக்குன்னு உங்க வாயாலே ஒத்துக்கிட்டீங்க. அப்புறம் ஏன் என்கிட்ட இந்த மாதிரி பிஹேவ் பண்றீங்க. உங்ஙளோட மோட்டீவ் என்னென்னு எனக்கு சுத்தமா புரியலை. நீங்க வேற யாரோன்னு நினைச்சு என்கிட்ட பேசுறீங்களோ? நீங்க நினைக்கிற மாதிரி என்கிட்ட சொத்து ஆர் வாட் எவர், எதுவும் கிடையாது. நானே பூமிக்குப் பாரமா அம்மா, அப்பா இல்லாம ஒரு வீட்ல ஒண்டீட்டு இருக்கேன். உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ? என் அத்தைதான் எனக்கு அம்மா‌. ஏன் இதை சொல்றேனா, நானே அவங்களுக்குப் பாரமா இருக்கேன். இதுல என்னால அவங்களுக்கு எந்தப் பிரச்சினையும் வர்றதை நான் விரும்ப மாட்டேன். உங்ககிட்ட ரெக்வஸ்ட் பண்ணி கேட்குறேன். இந்த மாதிரி என்கிட்ட பேசாதீங்க!” என்றாள். என்ன முயன்றும் குரல் முழுவதும் வலி தெரிந்தது. நிவினிடம் பேச்சே இல்லை. இவளே தொடர்ந்தாள்.
“அக்ஷா மேடமும் நீங்களும் லவ் பண்றீங்கன்னு நான் நினைச்சேன். அப்படியில்லையா?” இவள் கேட்க, “ஷி இஸ் அ குட் ஃப்ரெண்ட் ஆஃப் மைன். நத்திங் மோர் தன் தட்!” அவன் பதிலளித்தான்.
“ஓஹோ... உங்களுக்கு நத்திங்கா இருக்கலாம். பட் அவங்களுக்கு நீங்கன்னா ரொம்ப பிடிக்கும். உங்களை ரொம்ப லவ் பண்றாங்க. அவங்களோட பிகேவியர்ஸே சொல்லும். என் விஷயத்துல அவங்க அப்படி நடந்துகிட்டது கூட உங்க மேல இருக்க அன்பாலதான். அவங்களை ஏன் நீங்க கன்சிடர் பண்ண கூடாது. டாக்டருக்குப் படிச்சிருக்காங்க. குட் லுக்கிங், உங்க பக்கத்துல நின்னா ரெண்டு பேரோட ஜோடி பொருத்தம் அழகா இருக்கும். இதுவே நான் உங்கப் பக்கத்துல நின்னா எப்படியிருக்கும்னு யோசிச்சு பாருங்களேன். உங்களுக்கே அது நல்லா இருக்காதுன்னு புரியும். உங்க மேல அன்பா இருக்க அக்ஷா மேடமை கல்யாணம் பண்ணா, உங்க வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்!” பொறுமையாய் அவள் கூறி முடித்து நிவினைப் பார்த்தாள்.
“ஐ திங்க் திஸ் இஸ் நன் ஆஃப் யுவர் பிசினெஸ் சுதிரமாலா. என்னோட வாழ்க்கைல முடிவெடுக்குற உரிமையை நான் யாருக்கும் கொடுக்கலை. கொடுக்கவும் மாட்டேன்!” என்ற குரலில் பழைய நிவின் வந்திருந்தான். சுதியும் அதைக் கவனித்தாள்.
“ஓ... உங்க லைஃப்ல முடிவை நான் எடுக்க கூடாது. பட் என் வாழ்க்கைல என்ன நடக்கணும்னு நீங்க டிசைட் பண்ணலாம். இதெல்லாம் எந்த விதத்துல நியாயம் சார்?" அமைதியாகத்தான் கேட்டாள். ஆனாலும் குரலில் அழுத்தமிருந்தது.
“உங்களுக்கு அக்ஷா மேடத்தைப் பிடிக்கலைன்னு சொல்ற உரிமை எவ்வளோ இருக்கோ, அதே மாதிரி உங்களைப் பிடிக்கலைன்னு சொல்ற உரிமை எனக்கும் இருக்கு. நியாயம் எல்லாருக்கும் எப்பவும் ஒன்னாதான் இருக்கணும். இல்ல, அதுக்குப் பேர் நியாயமே கிடையாது!” அதிராமல் சுதி பேச,
“உன் விஷயத்துல நியாயம், அநியாயம் பார்க்குற ஸ்டேஜ் எல்லாம் க்ராஸ் பண்ணிட்டேன் சுதிரமாலா!” அவள் முகத்தை ஆழ்ந்துப் பார்த்து உரைத்தவன், “உன் வீடு வந்துடுச்சு. இறங்கலாம்!” என்றான்.
அவனை சில நொடிகள் வெறித்தவள், கீழே இறங்கினாள்.
மகிழுந்து கண்ணாடியை கீழிறக்கியவன், “நாளைக்கு மீட் பண்ணலாம்!” எனவும், அவனை வெற்றுப் பார்வை பார்த்தாள். இவ்வளவு நேரம் தான் பேசியவை எல்லாம் விழலுக்கு இரைத்த நீரென வீணாகிப் போனதை உணர்ந்து கோபத்துடன் நடந்தாள்.
சில நொடிகளில் பின்னே அரவம் கேட்க, திடுக்கிட்டு திரும்பினாள் பெண். “டோன்ட் பேனிக் சுதி, நான்தான்!” என்ற நிவின் குரலில் ஆசுவாசமானவள், “பேய் பிசாசை விட நீங்க ரொம்ப டேஞ்சரான ஆள். எதுக்கு இப்போ என் பின்னாடியே வர்றீங்க. உங்க அக்கறைக்கு ரொம்ப நன்றி. ப்ளீஸ் போய்டுங்க. இந்த டைம்ல உங்களோட வர்றதைப் பார்த்தா, யாரும் தப்பா நினைச்சுடுவாங்க. அம்மா வெளுத்துருவாங்க!” என்றாள் பல்லைக் கடித்து.
“நோ சுதி... ஐ நீட் டு டாக் டு ஆன்ட்டி!” என்றவன் அவளுக்கு முன்னே விறுவிறுவென திறந்திருந்த வீட்டிற்குள் சென்றுவிட, சுதி என்ன செய்யப் போகிறானோ என பயத்துடன் பின்னே விரைந்தாள்.
தொடரும்...

Member
Messages
66
Reaction score
52
Points
18

Nice super interesting super 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
 
Messages
55
Reaction score
36
Points
18
ஏணி வைத்தாலும்
எட்டாத உறவுக்கு
ஏட்டிக்கு போட்டியாய்
பேசி நிற்க
எதற்கு இந்த பிடிவாதம் என
இவள் முழித்து நிற்க...

இரு துருவங்களாய்
பணம் நடுவில் நிற்க
இரு தூண்களாய்
குணம் நடுவில் நிற்க
இரு கரைகளாக எண்ணங்கள் நடுவில் இருக்க
இடியும் மின்னலுமாய்
இடிக்கும் பேச்சில் இவர்கள் மோதிக்கொள்ள
இதயங்கள்
இவர்களை வேடிக்கை பார்க்க

இனி என்ன நடக்குமோ....
 
Active member
Messages
178
Reaction score
119
Points
43
Paya mudivoda tan irukan suthi
 
Top