- Messages
- 1,028
- Reaction score
- 2,912
- Points
- 113
பொழுது – 15 
பெண் பார்க்க வருகிறார்கள் என்ற எண்ணம் காலையில் மலர்வைக் கொடுத்திருந்தாலும், இடையில் நிவினின் செய்கையில் சுதியின் மனநிலை முற்றிலும் மாறியிருந்தது. கடமைக்கென தன்னை அலங்கரித்து அமர்ந்திருந்தாள் பெண்.
“காலைல நல்லாதானே இருந்த சுதி. என்னாச்சு, ஏன் முகம் டல்லா இருக்கு. எதை நினைச்சு குழப்பிட்டுக் கிடக்குற நீ?” என சௌம்யா அதட்டலிட, சோபையாய் புன்னகைத்தாள் பெண். ஆனாலும் வாயைப் பூட்டுப் போட்டு பூட்டிருந்தாள். தப்பித் தவறிக் கூட எதையும் சொல்லிவிடாதே என மனம் அவளை எச்சரித்தது.
சந்திரா மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வரும் நேரம் என வாயிலையே பார்த்திருக்க, நிவின் அவர்கள் வீட்டின் முன்னே சென்று நின்றான்.
வெளியே எழுந்து வந்த சந்திரா, “தம்பி, யார் நீங்க?” எனக் கேட்டார்.
“இது சுதியோட வீடுதானே ஆன்ட்டி?” அவன் வினவ, “ஆமாப்பா... என் பொண்ணுதான். நீங்க?” என அவனை ஆராய்ச்சியாகப் பார்த்தார் பெண்மணி.
“உள்ள வந்து பேசலாமா ஆன்ட்டி? நான் அவளோட ஃப்ரெண்ட்” அவன் கேள்வியாக நிறுத்த, தயங்கினாலும் அழைத்து இருக்கையில் அமர்த்தினார் பெரியவர்.
“நீங்களும் உக்காருங்க ஆன்ட்டி!” அவன் மரியாதைக்காக கூற, “இல்லப்பா.. நீங்க வந்த விஷயத்தை சொல்லுங்க!” என்றவருக்கு சுதிக்கு ஆண் நண்பர்கள் இருப்பார்கள் என்றெல்லாம் தோன்றவில்லை. அவள் அப்படி ஒருவரையும் வீடு வரை அழைத்து வந்ததில்லையே.
“சுதி என் வீட்லதான் குக் பண்ணித் தர்றா!” அவனின் ஒருமை விளிப்பில் இவரது புலன்கள் கூர்மை பெற்றன.
“அவ வயசான ஒருத்தருக்குத் தானே சமைச்சு தர்றேன்னு சொன்னா தம்பி?” அவர் கேள்வியாய் நிறுத்தினார். சுதி பொய்யுரைத்திருக்கிறாள் என்று உணர்ந்தவன், “யெஸ், அவர் என் அப்பாதான் ஆன்ட்டி!” என்றவனுக்கு அவளை விட்டுக் கொடுக்க எண்ணமில்லை.
“அத்தை யார் கூடப் பேசுறாங்க?” சௌம்யா கேட்டுக் கொண்டே கூடத்திற்கு வந்தாள். அமர்ந்திருந்தவனைப் பார்த்ததும் அவளுக்கு யோசனையாயிற்று. கண்டிப்பாய் அவனது தோற்றமே சொந்தக்காரர் இல்லையென பறைசாற்றியது. சௌம்யாவைத் தொடர்ந்து சுதியும் எட்டிப் பார்த்தாள். இந்த நாளின் இரண்டாவது முறையாக சுதிக்கு நெஞ்சு பதைபதைத்துப் போனது. நிவினை ஒரு நொடி கூட அவள் எதிர்பார்க்கவில்லை. முகம் வியர்க்கத் தொடங்க, மெதுவாய் நடந்து வந்தாள். தன்னைப் பற்றி என்ன சொல்லி இருப்பானோ என நினைக்கையிலே விழிகள் கலங்கின. அதை மறைத்துக் கொண்டு வந்து தீர்க்கமாய் அவனைப் பார்த்தாள்.
நிவினும் அப்போதுதான் அவளைக் கண்டு கொண்டான். காலையில் விட இப்போது பட்டுப் புடவையில் இன்னுமே லட்சணமாய் இருந்தாள். எல்லாம் இருந்தும் முகத்தில் அந்த மலர்ச்சி இல்லை; குறைந்திருந்தது.
“ஹாய் சுதிரமாலா!” அவன் இயல்பாய்க் கையசைக்க, சுதி அவனை விழிகளால் பொசுக்கினாள். மற்ற இருவரின் பார்வையும் தன்னிடம் குவிந்திருப்பதை உணர்ந்தவள், “ஹாய் சார்!” என்றாள் மென்று கடித்த குரலில். பயமிருந்தாலும் குபுகுபுவென தொண்டை வரை கோபம் எழுந்தது. அடக்கிக் கொண்டு நின்றாள். என்ன நினைத்து இவன் இங்கே வந்தான் என அவள் மனதில் நிவினை வறுத்தெடுக்கும் போதே தான் வந்த நோக்கத்தை அவன் போட்டுடைத்திருக்க, சுதி நெஞ்சடைத்துப் போய் அவனைப் பார்த்தாள்.
“என்ன சுதி, நான் மார்னிங் சொன்னதை உங்க வீட்ல நீங்க சொல்லலையா?” அவன் கேட்கவும், சுதி பதைபதைத்துப் போய் அவனைப் பார்த்தாள்.
சந்திரா மகளைத்தான் பார்த்தார். அவள் முகம் வேறு ஏதோ சொல்லிற்று.
“அது... ம்மா...அவர்!” என்ன சொல்வதென தெரியாது பெண் தடுமாற, “டோன்ட் கெட் நெவர்ஸ் சுதி. நானே சொல்றேன்!” என்று இயல்பாய்க் கூறியவன், “ஆன்ட்டி... என் நேம் நிவின். அம்மா இல்லை, அப்பா மட்டும்தான். விருதுநகர்ல சொந்த வீடு அண்ட் கொஞ்சம் அசர்ட்ஸ் இருக்கு. அப்பா கவர்மென்ட் ஸ்கூல் டீச்சர். நான் இன்ஜினியரிங் முடிச்சிட்டு ஐடில வொர்க் பண்றேன். குட் சேலரிதான். இங்க அப்பார்ட்மெண்ட் ஒன்னு வாங்கி அதுலதான் ஸ்டே பண்ணியிருக்கேன். இன்னும் சிக்ஸ் மந்த்ஸ்ல ஈ.எம்.ஐ முடிஞ்சிடும். இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா, உங்க பொண்ணுக்கு நீங்க மேரேஜ்க்கு அலையன்ஸ் பார்க்குறதா சுதி சொன்னா. அதான் நான் என்னைக் கன்சிடர் பண்ணுங்கன்னு சொல்றேன். ஐ லைக் ஹெர். சுதியை எனக்கு மேரேஜ் பண்ணி வச்சிங்கன்னா, நான் உங்கப் பொண்ணை நல்லா பார்த்துப்பேன்!” அவன் பேசி முடித்ததும் மூன்று பெண்கள் முகத்திலும் ஈயாடவில்லை.
“மார்னிங் சுதிகிட்டே இதை நான் சொல்லிட்டேன். இருந்தாலும் உங்ககிட்டே நேர்ல பேசுனா நல்லதுன்னு வந்தேன். அண்ட் அப்பாகிட்டே இன்னும் பேசலை. அவர் இந்த வீக் வருவாரு. அவரை வந்து முறையா பேச சொல்றேன் ஆன்ட்டி. அதுக்கு முன்னாடி நீங்க யாரையும் சுதிக்குப் பிக்ஸ் பண்ணிடாதீங்க!” அவன் பேசப் பேச சந்திராவிற்கு முகம் மாறியது. அவருக்கு இதெல்லாம் ஒத்து வருமென தோன்றவில்லை. எந்த முகாந்திரமும் இன்றி இத்தனைப் பெரிய இடத்திலிருந்து ஒருவன் வந்து தன் பெண்ணை மணக்க கேட்டதும் அவரால் சந்தோஷம் கொள்ள முடியவில்லை. பயமாய் இருந்தது. அவளுக்கொரு நிம்மதியான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பது மட்டுமே அவரது பிரதான ஆசை. நிவினுக்குத் திருமணம் செய்து கொடுத்தால் என்ற நினைப்பே அச்சமூட்டியது.
“மன்னிச்சிடுங்க தம்பி. எங்கப் பொண்ணை உங்களுக்குத் தர விருப்பம் இல்லை. ஏற்கனவே அவளுக்கு நல்ல பையனா பார்த்துட்டோம். நீங்க என்ன நினைச்சு இப்படி கேட்குறீங்கன்னுத் தெரியலை. ஆனால் பொண்ணைப் பெத்தவங்களா எங்களால உங்கப் பேச்சை நம்ப முடியாது. எங்களுக்கு ஏத்த இடமா பார்த்து அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறதுதான் எல்லாருக்கும் நல்லது!” அவர் கூற, நிவின் சுதியைப் பார்த்துவிட்டு அவரை நோக்கினான்.
“ஏன் ஆன்ட்டி, உங்கப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்குற அளவுக்கு எனக்குத் தகுதி இல்லைன்னு நினைக்கிறீங்களா? என்னால அவளை நல்லா கேர் பண்ண முடியும். நீங்க பார்த்திருக்க மாப்பிளையை விட நான் அவளை நல்லா புரிஞ்சு வச்சிருக்கேன்!” என்றவனை சுதி உணர்வு துடைத்த முகத்துடன் பார்த்தாள். முதலில் அவன் பேசவும் பயமாய்தான் இருந்தது. அதுதான் எல்லாவற்றையும் உடைத்துவிட்டானே. பிறகென்ன என மனம் அந்தச் சூழ்நிலையை கிரகிக்க முயன்றது.
“உங்களுக்கு தகுதியில்லாம இல்ல தம்பி. எங்களோட நிலைமையை நான் சொல்றேன். எங்களோட நிலைக்கு ஏத்தப் பையனா பார்த்துக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தாதான் என் பொண்ணு நிம்மதியா இருப்பா. உங்களோட அந்தஸ்துக்கு என்னைக்கும் எங்களால வர முடியாது!” என்றவரைப் பார்த்து பெருமூச்சு விட்டவன், “உங்கப் பொண்ணும் இதான் சொன்னா ஆன்ட்டி. நீங்க நினைக்கிற அளவுக்கு நான் ரிச் இல்லை. படிச்சிட்டு ஒரு ஐடி செக்டார்ல வொர்க் பண்றேன். வீட்டோட இ.எம்.ஐ கூட இன்னும் முடியலை. அப்பா சாதாரண ஸ்கூல் டீச்சர். நீங்க முதல்ல எங்களை உயர்த்திப் பாரக்குறதை நிறுத்துங்க. எல்லாரும் மனுஷங்கதான் ஆன்ட்டி!” என்றவன் பேச்சில் சுதியின் இதழ்கள் கேலியாய் வளைத்தன. எல்லாம் பசப்பு வார்த்தைகள் என இவளுக்கு மனம் கசந்தது.
சந்திரா பேசும் முன்னே சுதி இடை புகுந்தாள்.
“சாரி சார்... நான் மார்னிங்கே எனக்கு விருப்பமில்லைன்னு உங்ககிட்ட சொல்லிட்டேன். இப்போ என்னைப் பொண்ணு பார்க்க வர்றவங்க வந்துடுவாங்க. ப்ளீஸ் ப்ராப்ளம் எதுவும் பண்ணாம நீங்க மூவ் பண்ணா நல்லா இருக்கும். என்னோட விருப்பத்தை மீறி என் அம்மா எதுவும் செய்ய மாட்டாங்க. அதனால ப்ளீஸ்!” அவள் முகத்தில் அடித்தது போல கூறவும், நிவின் அவளை உறுத்துப் பார்த்துவிட்டு சந்திராவின் புறம் திரும்பினான். அவன் கோபத்தைத் தூண்டி அனுப்ப விடலாம் என அவள் எண்ணியிருக்க, நிவின் அசைவதாய் தெரியவில்லை.
“ஆன்ட்டி... நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன். அப்பாவோட வந்து பேசுறேன்!” என்றவன் எழுந்து நிற்க, மாப்பிள்ளை வீட்டினர் வந்துவிட்டனர்.
சந்திரா ஒரு நொடி என்ன செய்வதெனத் தெரியாது தடுமாறி நிற்க, “வாங்க வாங்க... எலலாரும் உள்ள வாங்க. கெட் இன்!” என சென்று அவர்களை வரவேற்று அமர வைத்த நிவினைக் கண்டு சுதிக்கு லேசாய் தலை சுற்றியது. என்ன செய்கிறான் இவன் எனப் பயந்து போய் பார்த்தாள்.
மாப்பிள்ளை வீட்டினரும் தலையை அசைத்துப் புன்னகைத்தவாறே இருக்கையை அக்கிரமிப்பு செய்ய, நிவின் சுதிக்கு சற்றுத் தள்ளி சௌம்யா அருகில் நின்றான். அவள் சற்றே அச்சத்துடன் திரும்பி தன்னருகே நிற்பவனைப் பார்க்க, “ரிலாக்ஸ் சிஸ்டர், நான் ஒன்னும் பேச மாட்டேன். நீங்க ப்ரொசீட் பண்ணுங்க!” என மென்மையாய் தலையை அசைத்தான். அவளுக்கு இவனைப் புரிந்து கொள்ள முடியாது முகம் வியர்த்தது.
“சுதி... நீ ரூம்க்குள்ள போ!” சுயம் வரப்பெற்ற சந்திரா அவளிடம் கூற, “நோ... நோ ஆன்ட்டி. பார்மாலிட்டீஸ் வேணாம். அவங்க இங்கேயே இருக்கட்டும்!” மாப்பிளையானவன் கூறி சுதியைப் பார்த்துப் புன்னகைக்க, நிவின் அவனை அளந்தான்.
“சௌமி, சுதியைக் கூட்டீட்டு போய் ஜூஸ் எடுத்துட்டு வா!” என சந்தினா கூற, பெண்கள் இருவரும் சமையலறை நோக்கி நகர்ந்தனர். யார் பேச்சைத் தொடங்குவது எனத் தடுமாற்றமாய் இருக்க, நிவின் அதை உடைத்து எறிந்திருந்தான்.
“ஹாய் ப்ரோ, நீங்கதான் சுதிக்குப் பார்த்திருக்க மாப்பிள்ளையா? உங்க நேம் என்ன?” என அவன் வினவ, சுதி சமையலைறக்குள்ளே தலையைப் பிடித்து நின்றாள். சௌம்யா அவளைப் பாவமாய்ப் பார்த்தாள்.
“எனக்கு எதுவுமே தெரியாது அண்ணி. இவர் ஏன் திடீர்னு இப்படி பேசுறார்னு எனக்குப் புரியவே இல்லை. கோபமா வருதுண்ணி... நீங்க, நீங்க எதுவும் என்னைத் தப்பா நினைக்கலை இல்ல?” தவிப்பும் ஆற்றமையுமாய் அவள் கேட்க, “சுதி, நீ ரிலாக்ஸ்டா இரு. மொதல்ல வந்தவங்க கிளம்பட்டும். அப்புறம் அந்தப் பையன்கிட்டே பேசி புரிய வைக்கலாம். உன் மேல எந்த தப்பும் இருக்காதுன்னு எனக்குத் தெரியும். எங்க வீட்டுப் பொண்ணு எந்தத் தப்பும் பண்ணியிருக்க மாட்டா!” அவள் கூறவும், சுதியின் விழிகளில் லேசாய் ஈரம் படர்ந்தது.
“சரி, சரி. சென்டிமெண்ட் சீன் அப்புறம் ஓட்டிக்கலாம். ரெண்டு மாப்பிள்ளைங்களும் வெளிய வெயிட்டிங்!” குறும்பாய்க் கூறி சௌம்யா குவளைகளில் பழச்சாற்றை நிரப்ப, “அண்ணி!” என சுதி சிணுங்கி முகத்தைத் தூக்கினாள். நிவின் மீது கட்டுக்கடங்காத கோபம் வந்தது.
“ஹாய் ப்ரோ, யெஸ். நான்தான் மாப்பிள்ளை. என் நேம் பாஸ்கர்!” அவன் கூற, “நைஸ் நேம் பாஸ்கர். என்ன படிச்சிருக்கீங்க? எங்க வொர்க் பண்றீங்க?” என நிவின் வினவினான்.
“பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிச்சிட்டு, டி.வி.எஸ்ல வொர்க் பண்றேன் ப்ரோ!” பாஸ்கர் கூற,
“வெரி குட் ப்ரோ. ரொம்ப பேமஸான கம்பெனி இல்ல அது. நல்ல சேலரி தருவாங்களாம். நான் கேள்விபட்டிருக்கேன்!” நிவின் வியப்பாய்க் கூற, கேட்டிருந்த சுதிக்கு கோபம் வந்து தொலைத்தது. அவன் குரலின் பின்னிருந்த நக்கலை அவளால் மட்டுமே உணர முடிந்தது. அவளுடைய கணிப்பின்படி நிவின் சம்பளம் குறைந்தது ஒரு லட்சத்திற்கு மேல் இருக்கும். அப்படியிருக்கையில் இப்படியொரு பொய்யான ஆச்சர்யம் எதற்கென கடுப்பானாள். இவன் நிறைய சம்பாரித்தால், மற்றவர்கள் சம்பாத்தியத்தைக் கேலி செய்வானோ என பல்லைக் கடித்தாள்.
“யெஸ் ப்ரோ... மந்த்லி தேர்டி தௌசண்ட் சேலரி ப்ளஸ் ஓடி கூட இருக்கு. ஏற்கனவே கமலா ஆன்ட்டி எல்லாத்தையும் சொல்லி இருப்பாங்களே!” அவன் கேள்வியாய் நிறுத்தினான்.
“ஆமாங்க... கமலா எல்லாத்தையும் உங்ககிட்டே சொல்லிட்டேன்னு சொன்னாங்க. இந்தப் பையன் விசாரிக்குறதைப் பார்த்தா, எதுவும் சொன்ன மாதிரி தெரியலையே!” மாப்பிள்ளையின் தாய் சந்திராவைப் பார்த்தார்.
அவர் ஒரு நொடி தடுமாறி, “ஆமாங்க... கமலாக்கா எல்லாத்தையும் சொன்னாங்க. எங்க வீட்டைப் பத்தியும் உங்ககிட்டே சொல்லிட்டதா சொன்னாங்க!” என்றார்.
“அப்புறம் என்ன தம்பி, எதுக்கு எல்லாத்தையும் விசாரிக்குறீங்க?” அவர் நிவினிடம் திரும்ப, “இல்ல ஆன்ட்டி, என்னதான் இருந்தாலும் தேர்ட் பெர்சன் சொல்றதை அப்படியே நம்புறது தப்பு. உங்க வாயால என்னென்னு நீங்களே சொல்லிட்டா, நாளை பின்ன எந்தப் பிரச்சினையும் இருக்காதுல்ல. அதான் கேட்டேன்!” நல்ல பிள்ளையாய் நிவின் கூற, சௌம்யா அவனை அசந்து போய் பார்த்தாள். சற்று முன்னர் இவன் பேசிய பேச்சென்ன? இப்போது அவன் பேசுவது என்ன என அவளால் வியக்காமல் இருக்க முடியவில்லை.
சுதி பழச்சாற்றுடன் வந்து ஒவ்வொருவருக்காய் கொடுத்தாள். நிவின் முன்பு நீட்டியவள், “தேவையில்லாத வேலை பார்க்காதீங்க சார். முதல்ல இங்க இருந்து கிளம்புங்க!” என்றாள் பற்களைக் கடித்து முணுமுணுப்பாக.
“நோ சுதிரமாலா. ஐ நீட் டு நோ மோர் அபவுட் பாஸ்கர். எந்த வகையில அவர் என்னைவிட பெஸ்ட்னு எனக்குத் தெரியணும்!” என்றவனை நிமிர்ந்து முறைத்தாள் பெண்.
“தம்பி, பொண்ணு என்ன சொல்லுது உங்ககிட்டே?” மாப்பிள்ளையுடன் தாய், தந்தை, அக்கா, அக்கா கணவர், மேலும் இரண்டு வயதான பெண்மணிகளும் வந்திருந்தனர். அதில் ஒருவர்தான் கேட்டார்.
“அது எனக்கு பேக்க்ட் ஜூஸ் பிடிக்காது. அதான் சுதிகிட்டே சொல்லிட்டு இருந்தேன் ஆன்ட்டி!” அழகாய் புன்னகைத்து அவன் சமாளிக்க, ஒருவராலும் அவனை சந்தேகிக்க முடியவில்லை.
‘என்ன நடிப்பு?’ என சுதி விழிகளால் அவனை எரித்தாள். அதைக் கண்டு கொண்டாலும் அலட்சியமாய்த் தோளைக் குலுக்கினான் ஆடவன். இவளுக்குத்தான் கோபமாய் வந்தது. எல்லோரும் இருக்கும்போது அவளால் எதுவும் செய்ய முடியவில்லை.
“எங்களுக்குப் பொண்ணை பிடிச்சிருக்கு. என் பையனும் போட்டோல பார்த்துட்டு சரின்னு சொல்லிட்டான். நேர்ல பார்க்கவும் ஓகேதான்!” என பெண்ணின் தந்தை உரைக்க, மாப்பிள்ளை சுதியைப் பார்த்துப் புன்னகைக்க, அவள் தலையை அசைத்தாள். நிவின் மீதிருந்த கோபம் புன்னகைக்க விடவில்லை. இருந்தும் உதட்டை வலுக்கட்டாயமாக பிரித்தாள்.
“கமலா எல்லாத்தையும் சொன்னாங்க. ஆம்பளை துணை இல்லாத வீடுன்னு. நீங்க கவலைப்படாதீங்க. கல்யாணத்துக்குப் பிறகு என் பையன் முன்னாடி நின்னு எல்லாத்தையும் பார்த்துப்பான்!” பெண்ணின் தாய் உரைக்கவும், சுதிக்கு இத்தனை நேரமிருந்த அலைப்புறுதல் எல்லாம் அற்றுப் போனது. தளர்ந்து நின்று அவரை நோக்கினாள்.
“ரொம்ப சந்தோஷங்க. நீங்க சொன்னதே எங்களுக்கு நிம்மதி. எங்க வீட்டுப் பொண்ணை நீங்க நல்லா பார்த்துக்கிட்டாலே போதும். நான் அத்தையையும் என் பசங்களையும் பார்த்துப்பேன்!” என சௌம்யா இடைபுகுந்தாள். தன்மையாய்தான் கூறினாள்.
“அப்புறம் மத்த விஷயத்தை இப்பவே பேசிடலாம். எல்லாம் ஒத்து வந்தா, நிச்சயம் ஒரு நல்ல நாளா பார்த்துக்கலாம்!” மூத்தப் பெண்மணி கூற, சந்திரா புன்னகையுடன் தலையை அசைத்தார்.
“உங்க வீட்டோட நிலைமை எங்களுக்குத் தெரியும். அதனால ரொம்ப வேணாம். ஒரு பதினஞ்சு பவன் மட்டும் போடுங்க. என் பையன் படிச்சிட்டு, நல்ல வேலைல இருக்கான். கை நிறைய சம்பாதிக்கிறான். நாங்க நினைச்சா வேற நல்ல இடத்துல நிறைய நகை போட்டு கட்ட முடியும். உங்க வீட்ல பொண்ணெடுக்க காரணம், கஷ்டப்பட்ற குடும்பத்துல இருந்த வர்ற பொண்ணுங்கதான் வீட்டை அனுசரிச்சு போவாங்க. எனக்கு பணம் காசை விட, வீட்டுக்கு அடங்குன மருமகதான் வேணும்!” அவர் கூற, சுதியின் முகம் மாறியது. ஒரு நொடி அவளைத் திரும்பிப் பார்த்த நிவின், “ஆமா ஆன்ட்டி... உங்கப் பையன் மாசம் தேர்ட்டி தௌசண்ட் வாங்குறாரு. நல்ல ஜாப். நீங்க கேட்குறது சரிதான். இன்னைக்கு கோல்ட் ரேட்க்கு எய்ட் லாக் வேணும் பிப்டின் பவுன் எடுக்க!” என்றான்.
“பின்ன இல்லையா தம்பி? இப்போலாம் எல்லாரும் இருபத்தைஞ்சுக்கு குறைஞ்சு வாங்குறது இல்லையே. என் பொண்ணுக்கே இருபது பவன் போட்டுக் கட்டிக் கொடுத்தோம். வீட்டுக்கு வர்ற மருமக அதைவிடக் கூடப் போட்டுட்டு வந்தாதானே நமக்கு மரியாதை. இருந்தாலும் ஆம்பளை இல்லாத வீடு. சுதி சம்பாத்தியத்துலதான் குடும்பம் ஓடுதுன்னு சொல்றதால நான் பெருசா கேட்கலை பா. எங்க நிலைமைல இருந்து பார்த்தா, நியாயமா தான் இருக்கும்!” மூத்த பெண்மணி ஒருவர் கூற, சுதி வெறுமையாய் அவர்களைப் பார்த்தாள். அவர்களுடைய நியாயம் இன்றைய சூழலில் அவளுக்கு அநியாயம்தான். போதும், எப்படியும் இந்த சம்பந்தம் அமையாது என அவள் ஏதோ பேசும் முன் சந்திரா பதிலளித்தார்.
“நீங்க கேட்குற மாதிரி பதினஞ்சு பவுன் எங்கப் பொண்ணுக்கு செஞ்சுட்றோம். மேற்கொண்டு ஆக வேண்டியதை பார்க்கலாம்!” என அவர் கூற, சுதி அதிர்ந்து அவரைப் பார்த்தாள். இன்றைய நிலைக்கு எட்டு லட்சம் என்பதெல்லாம் அவர்களுக்கு எட்டாக் கனிதான். எப்படி தாய் சமாளிப்பார் என அவள் மனம் பதறியது.
“அடுத்து உங்கப் பொண்ணுக்கு நீங்க என்ன சீர் செய்யணும்னு நினைக்குறீங்களோ, அதை செஞ்சிடுங்க. கல்யாண செலவை ரெண்டு வீட்லயும் பகிர்ந்து பண்ணிடலாம்!” என பாஸ்கரின் தந்தை கூறினார்.
“எங்களுக்கு முழு சம்மதம்ங்க. நீங்க யோசிச்சு எல்லாம் ஓகேன்னா கமலா கிட்டே சொல்லிவிடுங்க. நிச்சயம் வச்சுக்கலாம்!” பாஸ்கரின் தாய் உரைத்தார்.
“ம்மா... பொண்ணுகிட்டே தனியா பேசணும்!” மாப்பிள்ளை தாயின் காதில் முணுமுணுத்தான்.
“என் பையன் உங்கப் பொண்ணுகிட்டே பேசணும்னு ஆசைபடுறான்!” பெண்ணின் தாய்க் கூறவும், சந்திரா மகளைப் பார்த்து தலையை அசைத்தார். அவள் அறையை நோக்கி நடக்க, பாஸ்கரும் நகர்ந்தான். நிவின் அவர்கள் இருவரையும் அமைதியாய்ப் பார்த்தான்.
“அப்புறம் இந்தப் பையன் யாருன்னு நீங்க சொல்லலையே சந்திரா. உங்க சொந்தக்கார பையனா?” மூத்தவர் வினவ, சந்திரா தடுமாறினார்.
“நான் சுதியோட ஃப்ரெண்ட் ஆன்ட்டி. அவளுக்கு சப்போர்ட்டா இருக்கலாம்னு வந்தேன்!” என்றான்.
“ஆமாப்பா... என்னதான் எத்தனை பொம்பளைங்க இருந்தாலும் ஆம்பளை துணை ரொம்ப அவசியம் இல்லப்பா!” அவர் கூற, இவன் மெதுவாய் தலையை அசைத்தான்.
“ஆமா... என்ன படிச்சிருக்கப்பா நீ? எங்க வேலை பார்க்குற. பார்த்தா பெரிய இடத்துப் பையன் மாதிரி இருக்க?” மாப்பிள்ளையின் தாய் வந்ததிலிருந்து கேட்க வேண்டும் என்று நினைத்ததைக் கேட்டார்.
“ஐடில வேலை பார்க்குறேன் ஆன்ட்டி. இன்ஜினியரிங் முடிச்சிருக்கேன்!”
“ஐடி-யா? அப்போ லட்சத்து சம்பளம்னு சொல்லுப்பா!” அவர் ஆர்வமாய் விசாரிக்க, இவன் தலையை ஆமோதிப்பாய் அசைத்தான்.