• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.
Administrator
Staff member
Messages
1,315
Reaction score
3,913
Points
113
பொழுது - 28 (இறுதி அத்தியாயம்)
இரண்டு வருடங்களுக்குப் பிறகு,
மையிருட்டாயிருந்த அறையில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான் நிவின். மணி பன்னிரெண்டைத் தொடும் வேகத்துடன் சதுர கடிகாரத்தில் முள் வேகமெடுத்தது. நிவினின் போர்வை ஒருபுறம் கலைந்து கிடக்க, ஜன்னல் வழி ஊடுருவிய பனிக்காற்றில் உடலைக் குறுக்கிப் படுத்திருந்தவனை அலைபேசி எழுப்பியது. யாரென தெரியாது கைகளால் துழாவி அதை எடுத்துக் காதுக்குக் கொடுத்தான்.
இந்நேரத்தில் அழைப்பு என்றதும் மூளை சுறுசுறுப்பாக இயங்கினாலும் உடல் ஒத்துழைக்கவில்லை. மசமசப்பாய் இருந்த விழிகளை தேய்த்தவாறே, “ஹலோ...” என்றான் கரகரத்தக் குரலில்.
“ஹேப்பி பெர்த் டே புருஷா!” என சுதியின் குரல் கிசுகிசுப்பாய் கேட்க, இவனது முகம் முழுவதும் புன்னகை படர்ந்தது. தாமதமாய் வாழ்த்தி விட்டாள் என கணவன் குறைக் கூறியதை நினைவில் வைத்து கடந்த வருடமும் அவள்தான் முதல் வாழ்த்தைக் கூறினாள். இந்த வருடம் அருகில் இல்லையென்றாலும் அலைபேசியில் சுதிரமாலா வாழ்த்தைப் பகிர்ந்திருக்க, இவனுக்கு அகமும் புறமும் குளிர்ந்து போனது‌‌. இப்போதெல்லாம் மனைவியின் சின்ன சின்ன மெனக்கெடல்கள் எல்லாம் நிவின் உதடுகளில் புன்னகையைப் பூக்கச் செய்கின்றன.
தான் மட்டுமே ஒரு வழிப்பாதையாய்ப் பகிர்ந்து கொண்டிருந்த அன்பை அதே அளவிற்கு அவளும் திருப்பிக் கொடுக்க, சிந்தாமல் சிதறாமல் அதைப் பத்திரப்படுத்திக் கொண்டான் நிவின்.
“தேங்க்ஸ் டி பொண்டாட்டி...” என அவன் பதிலுரைக்க, “இருக்கட்டும்... இருக்கட்டும். காலைல பேசுவோம். கிசுகிசுன்னு பேசுனா கூட உங்க மகளுக்கு தூக்கம் போய்டுது!” என சுகமாய் சலித்தபடியே அவள் அழைப்பைத் துண்டிக்க, இவனுக்கு முறுவல் அரும்பிற்று.
சிரிப்புடனே நிவின் உறங்கிப் போனான்.
காலையில் எழுந்ததும் தந்தையிடமிருந்து இரண்டாவதாக வாழ்த்தைப் பெற்றிருந்தான். பின்னர் நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் குறுஞ்செய்தியிலும் அழைப்பிலும் வாழ்த்தைப் பகிர, எல்லோருக்கும் பொதுவாய் நன்றி என பதிலளித்துவிட்டு குளித்துக் கிளம்பினான்.
ஒருவாரம் கழித்து மனைவியையும் மகளையும் காணப் போகும் ஆர்வம் முகத்தில் கொட்டிக் கிடந்தது. குளித்து முடித்து ஆலீவ் பச்சை நிறத்தில் சட்டையும் கருமை நிறத்தில் கால்சராயும் உடுத்தினான். இரண்டு மணி நேரப் பயணத்தில் அவனின் மகிழுந்து அந்த மாடிவீட்டின் முன்னே நின்றது. பச்சை பசேலிருந்த வீட்டின் முகப்பில் சிறிய கதவு அடைத்திருக்க, உள்ளே நுழைந்ததும் வலப்புறம் வேப்பரத்தில் பூக்கள் பூத்திருந்தன. ஆங்காங்கே சிறு சிறு செடிகளும் அவ்விடத்தை அடைத்திருக்க, கோடைக்காலத்தின் வெம்மையை அவ்வீட்டை அண்ட விடாமல் பார்த்துக் கொண்டதில் இவற்றின் பங்கு அளப்பரியது‌.
கீழ்தளத்திலிருந்த வீட்டின் ஜன்னலில் அவ்வப்போது வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த சுதியின் முகம் கணவனைக் கண்டதும் சூரிய காந்தியாய் மலர்ந்து போனது. இவனும் அவளைப் பார்த்துவிட்டதாய் புன்னகைத்து தலையை அசைக்க, வாயில்வரை வந்துவிட்டாள் மனைவி.
“வாங்க... உள்ள வாங்க!” முகம் கொள்ளா புன்னகையுடன் அழைப்பவளைக் கண்களில் நிரப்பிக் கொண்டு உள்ளே நுழைந்தவனின் விழிகள் ஒரு ஓரமாய் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த பிஞ்சு முகத்தில் வாஞ்சையுடன் நிலைத்தது.
“வந்ததும் மகளைத்தான் தேட்றது. நான் இங்க ஒருத்தி இருக்கேனாக்கும்!” என அவனை முழங்கையால் இடித்து மனைவி முனங்கவும், இவனுக்கு சிரிப்பு வந்தது. தூங்கும் குழந்தையை சில நொடிகள் ஆசையாய்ப் பார்த்தவன் நாற்காலியில் அமர்ந்தான்.
“வாங்க மாப்பிள்ளை...சுதி சொன்னா, உங்களுக்கு பிறந்தாள்னு. நூறு வயசு வரை நல்லா இருங்க மாப்பிள்ளை!” என மனமுவந்து வாழ்த்திய சந்திராவின் கால்களில் விழுந்து இவன் ஆசி வாங்க, அவர் முதலில் தயங்கிப் பின்னே வாழ்த்தினார்.
“மாப்ளை... வாங்க, வந்து உக்காருங்க. உங்களுக்காகத்தான் காலைல சீக்கிரமாவே சமைக்க ஆரம்பிச்சேன்...” என்றவர் தன் வயதையும் பொருட்படுத்தாது கூடத்தில் பாயை விரித்து சமைத்தவற்றை அடுக்க, “ம்மா... உங்க மாப்பிளை ஓடிப் போய்ட மாட்டாரு. பொறுமை!” என சுதிக் கடிந்தபடியே அவருக்கு உதவினாள்.
“நல்லா கேளு சுதி... என்னைக்கோ ஒருநாள் வர்ற மாப்பிள்ளைனால உங்கம்மா வகை வகையா சமைச்சுப் போடுறாங்க. வீட்டோட இருக்க மகனைக் கண்டுக்கிறது இல்ல. எங்களுக்கு மட்டும் மீந்து போன குழம்பும் பழைய சோறும்தான்!” என சந்திராவை வம்பிழுத்துக் கொண்டே அறையிலிருந்து வெளியே வந்தான் சித்தார்த். முப்பதைந்தை தொட்டு சில வருடங்கள் கடந்திருந்தாலும் நேர்த்தியாய் வாரியிருந்த சிகையும் கசங்காத உடையும் அவனை முப்பதுக்குள் பிம்பப்படுத்தின.
“ஹக்கும்... நாங்களே என்னைக்காவது ஒருநாள் விருந்தாளியா வந்துட்டுப் போறோம். அதனால் இந்த கவனிப்புண்ணா. இதுவே உங்களை மாதிரி இங்கேயே இருந்தா, எங்களுக்கும் பழைய குழம்புத்தான்... உங்கம்மாவைப் பத்தி உங்களுக்குத் தெரியாதாக்கும்!” என இவள் நொடித்துக் கொள்ள, சந்திரா இருவரையும் மென்மையாய் முறைத்தார்.
“பொழுது விடிஞ்சா போதும்... எங்கத்தையை வம்பிழுக்குறதையே வேலையா வச்சிருக்கது அண்ணனும் தங்கச்சியும்!” அதட்டலுடன் பருத்திப் புடவையின் வடவடப்பை ஒருமுறை சரிசெய்தாள் சௌம்யா. ஆறுமாத மேடிட்ட வயிறு சற்றே அவளைத் தனித்துக் காட்டியது. முகம் தாய்மைக்கே உரிய பூரிப்பில் பூத்திருந்தது.
“ஓஹோ... இப்படி பேசித்தான் எங்கம்மாவை கைக்குள்ளே போட்டு வச்சிருக்கீங்களா அண்ணி?” என சுதி பதிலுக்கு வம்பளக்க, நிவின் சின்ன சிரிப்புடன் அவர்களைப் பார்த்திருந்தான்.
“என்ன மச்சான்... எப்படி போகுது வேலை?” என நிவின் தோளில் தட்டியவாறே சித்தார்த் அவனருகில் அமர்ந்தான்.
“ஹம்ம்... நல்லா போகுது மாமா!” என இவன் பதிலளிக்க, பெண்கள் தங்களுக்குள் சலசலக்கத் நொடங்கினர்.
“ம்மாச்சி... பத்து ரூவா தயிர் இல்ல. முப்பது ரூவாயாம்!” எனத் தயிரை ஏழம் போட்டுக் கொண்டே உள்ளே நுழைந்த ருத்ரா மாமாவைக் கண்டதும், முகம் மலர்ந்தாள்.
“மாமா...” என இவள் தயங்கியபடியே அவனருகே செல்ல, இருகைகளாலும் தன்னருகே அவளை இழுத்த நிவின், “ஸ்கூல் போகலையா ருத்ரா?” எனக் கேட்டவாறே பக்கவாட்டில் வைத்திருந்த நெகிழிப் பையை அவளிடம் நீட்டினான். அவள் பள்ளிக்குத் தேவையான வண்ண பென்சில்கள், படம் வரையும் புத்தகம், சிறுவர் கதைப் புத்தகங்கள் மற்றும் இனிப்புகளும் வாங்கி வந்தான். ஒவ்வொரு வாரமும் எதாவது அவன் வாங்கி வந்து குழந்தையைப் பழக்கப்படுத்தி விட்டிருக்க, அதையே எதிர்பார்க்கத் தொடங்கியிருந்தாள் சின்னவள். சுதி கணவனை அதட்டியும் அவன் கேட்கவில்லை. தவாவிற்கு கைக்கடிகாரம், விளையாடும் போது அணியும் காலணி என அவன் வாயதிற்குத் தகுந்தாற் போல வாங்கிக் கொடுப்பான்.
“சரி...சரி, நேரமாச்சு. எல்லாரும் வாங்க சாப்பிடலாம்!” என சந்திரா அதட்டலுடன் அனைவரையும் அழைக்க, சித்தார்த் எழுந்து வந்து மனைவியின் கைப்பிடித்து அவளைப் பாயில் அமர வைத்தான்.
“அஹம்... ஹக்கும். நாங்களும் இங்கதான் இருக்கோம்ணா!” என சுதி தொண்டையைச் செரும, சித்தார்த் முகம் மெல்ல சிவந்தது.
“என் புருஷனை வம்பிழுக்கலைன்னா உன்னகே நாளே முடியாது சுதி!” என சௌம்யா அங்கலாய்க்க, சிரிப்பும் பேச்சுமாய் உண்டனர். காலை சிறப்பு வகுப்பிற்குச் சென்று வந்த தவாவும் இவர்களுடன் இணைந்து கொண்டான். அனைவரும் சாப்பிட்டு முடிய, சிறுவர்கள் பள்ளிக்குத் தயாராகி நின்றனர்.
“சரி மச்சான்... தங்கச்சியும் நீங்களும் பார்த்துப் பத்திரமா போய்ட்டு வாங்க. நாங்க ஆஃபிஸ் கிளம்புறோம்...” என்ற சித்தார்த் மகிழுந்து சாவியை எடுத்துக்கொண்டு முன்னே நடக்க, சிறியவர்கள் தாயை விட்டுவிட்டு தந்தையின் பின்னே சென்று ஏதோ ரகசியம் பேசினர். அவன் சிரிப்புடன் அவர்கள் கூறியதற்கு தலையை மட்டும் அசைத்து ஒப்புக் கொண்டிருந்தான். அதை கண்டும் காணாமலும் இருந்தாலும் சௌம்யா முகத்தில் புன்னகை கவிந்தது. அவளும் இவர்களிடம் கூறிவிட்டு கணவனுடன் கிளம்பிவிட்டாள்.

“மாப்பிள்ளை... டயர்டா இருப்பீங்க. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு மதியம் சாப்ட்டு சாயங்காலமா போங்க!” என சந்திரா அன்பு கட்டளையிட இவன் மறுக்காது ஏற்றுக் கொண்டான்.
மகள் அப்போதுதான் தந்தையின் குரல் உணர்ந்தாள் போல. மெதுவாய் அவள் சிணுங்க, “ஆரும்மா...எழுந்துட்டீங்களா?” என சுதி குழந்தையைத் தூக்கிக் கொண்டு அறைக்குள் செல்ல, நிவினும் நுழைந்தான். அவள் குழந்தைக்குப் பசியாற்ற, இவன் நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தான்.
“மாமாகிட்டே பேசுனீங்களா? என்ன பண்றாரு? இங்கேயே நம்மளோட வர சொல்லி சொன்னீங்களா? என்ன சொல்றாரு, நான் சொன்னா உங்கப்பா கேட்குறதே இல்லங்க. வயசான காலத்துல தனியா கஷ்டப்படுறாரே!” என்ற சுதியின் குரலில் மாமனாரின் மீதான பிரியமும் மரியாதையும் கொட்டிக் கிடந்தது. நிவின் புன்னகைத்தான், பதிலுரைக்கவில்லை. அவனுமே பல முறை வற்புறுத்தி அழைத்தும் அவர் செவிசாய்க்கவில்லை. வயல், பூக்காடு, நிலம், சொந்த வீடு என எதையுமே அவரால் விட்டுவிட்டு இங்கே வந்து நவீன வாழ்க்கைக்குக்கு உடன்பட விருப்பமில்லை. பேத்தி பிறந்தப்பின் கொஞ்சம் அவரது கொள்கைகள் தளர்ந்திருந்தன. தங்களுடைய குடும்ப வாரிசை அருகில் வைத்துக் கொஞ்ச மனம் ஏங்கினாலும், அவரால் உடனடியாக அனைத்தையும் அப்படியே விட்டுவிட்டு வர முடியவில்லை. இன்னும் கொஞ்ச மாதங்கள் கழித்து வருவதாய் உறுதி கொடுத்தவர், மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பேத்தியைக் காண வந்துவிடுவார். வயதின் மூப்பின் காரணமாக அவரால் அடிக்கடி பயணம் மேற்கொள்ள முடியவில்லை. ஆனாலும் பேத்தி அவரை ஏங்க வைக்க, உடல்நிலையைப் பொருட்படுத்தாமல் வந்து சென்றார். சுதிதான் அவரை சில சமயம் அதட்டுவாள். ஆனால் அதையெல்லாம் தூசியாய் தட்டிவிடுவார் மனிதர்.
அப்படியே அவர்களின் பேச்சு குடும்பத்தை தொட்டு சுற்றி வந்தது. சந்திரா மதியத்திற்கும் சைவ விருந்தை செய்ய, சுதி குழந்தையைக் கணவனின் கையில் கொடுத்துவிட்டு அவருக்கு உதவினாள்.
மதிய உணவை உண்டு முடித்து சிறிது நேரம் உறங்கி எழுந்து மூவரும் விடைபெற்றனர்.
“புள்ளையைப் பத்திரமா பார்த்துக்கோ சுதி. கண்ட மருந்தெல்லாம் கொடுக்காத. ஆறு மாசம் தொடங்குனதும் சத்துமாவுக் கஞ்சி காய்ச்சி வடிகட்டி டப்பால போட்டு கொடு. வாரத்துக்கு ரெண்டு தடவை தலைக்கு குளிக்க வை. மறக்காம சாம்புராணி போடு!” என சந்திரா நீண்ட விளக்கம் கொடுக்கவும், சுகமாய் சலித்தபடியே அனைத்திற்கும் தலையை அசைத்து வைத்தாள் சுதிரமாலா. நிவின் அவரது அக்கறையானப் பேச்சில் புன்னகைத்தான். மூவரும் விடை பெற்றனர்.
 
Administrator
Staff member
Messages
1,315
Reaction score
3,913
Points
113
கடந்து சென்ற இரண்டு வருடங்கள் அனைவரின் வாழ்க்கையிலும் பெரிய பெரிய மாற்றங்களைத் தாங்கி நகர்ந்து கொண்டிருந்தன. சுதிரமாலா நிவின் வாழ்க்கையைத் தொடங்கிய சில பல மாதங்களிலே அவர்கள் தாய், தந்தை என்ற ஸ்தானத்தை அடைந்திருந்தனர். ஏழு மாதங்களும் மனைவியை உள்ளங்கையில் வைத்து தாங்கியிருந்தான் நிவின். அவளது உடல்நிலையைக் கருத்தில் கொண்டும் எந்த வேலையையும் மனைவியை செய்ய அனுமதிக்கவில்லை. அவனே அனைத்திற்கும் பொறுப்பேற்றுக் கொண்டான். சுதி மறுக்கவெல்லாம் இல்லை. சுகமாய் சலுகையாக அவனின் அன்பை ஏற்றுக் கொண்டிருந்தாள். இப்போதெல்லாம் அவளுமே நிவினை அள்ள அள்ள குறையாத அளவிற்கு காதலித்தாள். தன்னுடைய அன்பில் அவனைக் குளிர்ந்து போகச் செய்திருந்தாள்.
ஏழாம் மாதம் வளைகாப்பு முடிந்து சுதி தாய் வீட்டிற்கு வந்ததும் வார இறுதிகளில் மனைவியைக் காண வருவதை வழக்கமாக்கி இருந்தான் நிவின். குழந்தைப் பிறந்த பின்னும் அதுவே தொடர் கதையாகிப் போனது‌. இதோ குழந்தை பிறந்து ஐந்து மாதங்கள் ஓடியிருக்க, இதற்கு மேலும் மனைவியைப் பிரிந்திருக்க முடியாது என இவன் திட்டவட்டமாகக் கூறிவிட, சந்திராவும் சரியென்று மகளை மருமகனுடன் அனுப்ப ஒப்புக் கொண்டார். பிறந்தநாள் அன்று வருவதாய்க் கூறியவன், சொன்னது போலவே வந்து மனைவியையும் மகளையும் அழைத்துக் கொண்டிருந்தான்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு சௌம்யா அரசுத் தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று பணியில் அமர்ந்திருந்தாள். அவர்கள் வசிக்கும் குடியிருப்பிலிருந்து இரண்டு மணி நேரப் பயணத்தில் அவளது அலுவலகம் அமைந்திருக்க, அவளால் தொடர்ந்து பயணம் செய்ய முடியவில்லை. ஒரு மாதத்திலே பெண் துவண்டு போக, சந்திரா மருமகளுக்காகப் பார்த்து மொத்தமாய் ஆவியூரின் கிராமப்புற பகுதிக்கு வீட்டை மாற்றியிருந்தார்.
சௌம்யாவின் வருமானமே அவர்களுக்கு போதும் போதும் என்றளவிற்கு இருக்க, சந்திரா அப்பளம் தேய்க்கும் வேலையை விட்டுவிட்டார். பேரன் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வதை தன்னுடைய பிரதானக் கடமையாகக் கொண்டார். சௌம்யா வேலைப் பார்க்கும் அலுவலகத்தில்தான் சித்தார்த் அவளுக்கு மேலதிகாரியாகப் பணியாற்றினான்.
முதல் திருமணம் தோல்வியுற்றதால் அடுத்து திருமணமே வேண்டாம் என்ற முடிவிலிருந்தவனை சௌம்யாவின் வருகை மாற்றியிருந்தது. தாய் தந்தையற்று ஆஸ்ரமத்தில் வளர்ந்தவனுக்கு முறையாய் திருமணம் செய்து வைக்க ஆளில்லாமல் ஏனோ தானோவென்று நடந்த திருமணம் அவசரகதியிலே முடிவுற்றிருக்க, தனித்து நின்றிருந்தான் ஆடவன். முப்பதைந்தைக் கடந்த பிறகு தனக்கொரு துணை வேண்டும் என வயது ஏற ஏற மூளை நச்சரிக்கத் தொடங்கியது.
கணவன் இல்லையென்ற காரணத்தினால் யாரும் தன்னை தவறாக அணுகிவிடக் கூடாதென சௌம்யா அத்தனை எச்சரிக்கையாய் இருந்தாள். எல்லோரையும் ஒரு அடி தள்ளி நிறுத்தியே பேசுவாள். அவளுடைய குணம் பிடித்துப் போய் நட்பென்று தொடங்கிய சித்தார்த் திருமணத்தில் வந்து நிற்க, அவள் ஒப்புக் கொள்ளவே இல்லை. வேண்டாம் என போராட்டம் நிகழ்த்தாத குறையாய் அவனைத் தவிர்க்க, விக்ரமாதித்தனின் வேதாளமாய் வந்தமர்ந்தான் சித்தார்த். வேண்டாம் என்ற பெண்ணை வேண்டும் எனக் கூற வைத்து மணம் முடித்து அவர்களது கூட்டுக்குள் தன்னை இணைத்துக் கொண்டிருந்தான். சந்திராவிற்கு மருமகள் தனது காலத்திற்குப் பின் தனித்து நின்றுவிடக் கூடுமே என்ற பயம் எப்போதும் நெஞ்சம் முழுவதும் உண்டு. சித்தார்த் வந்து பேசிச் சென்ற பிறகு அவனை மறுக்க எந்தக் காரணமும் அவரிடம் இல்லை‌. முழு மனதுடன் அவனை மகனாக ஏற்று, மருமகளுக்குத் திருமணம் முடித்து வைத்திருக்க, அவர்களது வசந்தமான வாழ்வின் அடையாளமாய் சௌம்யா இப்போது ஆறுமாத சிசுவை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கிறாள்.
தவச்செல்வன் முதலில் சித்தார்த்தை தந்தை என்ற இடத்தில் பொருத்திப் பார்க்க முடியாது தவித்துப் போனான். சித்தார்தித்டம் முகம் கொடுத்து சின்னவன் பேச மறுக்க, தந்தை என்ற இடத்தை அத்தனை லாவகமாகப் பற்றிக் கொண்டான் அவன். சின்னவனின் வழியிலே சென்று அவனை சொந்தமாக்கிக் கொண்டான். ருத்ராவிற்கு இது போல தயக்கமெல்லாம் இல்லை. அப்பா என்ற பந்தத்திற்கு ஏங்கித் தவித்திருந்த சின்ன சிட்டிற்கு அவனை எளிதாக ஏற்க முடிந்தது. அவன் இங்கு வந்த சில நாட்களிலேயே அப்பா, அப்பா என ஒட்டிக் கொண்டவளிடம் அவனுமே உருகியிருந்தான். யாருமற்று தனித்திருந்த நாட்களின் வெறுமை எல்லாம் இந்தப் பிஞ்சுகளின் வருகையால் கரைந்திருக்க, காலம் கடந்தென்றாலும் வசந்தம் வாயில் நோக்கி வந்ததை அழகாய் வரவேற்று அதில் பொருந்தியிருந்தான். இப்படி அவரவர் வாழ்க்கை சுகமாய் நகர ஆரம்பித்திருந்தது.
இரண்டு மணி நேரப் பயணத்தில் சுதிக்கு லேசாய் முதுகு வலித்தது. குழந்தை தூங்கிக் கொண்டே வந்தாள். உள்ளே நுழைந்ததும் குழந்தையை மெத்தையில் படுக்க வைத்து சுற்றிலும் தலையணையை வைத்தவள், விச்ராந்தையாக கட்டிலில் சாய்ந்தமர்ந்து காலை நீட்டினாள். சில பல நிமிடங்களில் கையில் பழச்சாறுடன் வந்தான் நிவின்.
“இப்போதானே நீங்களும் வந்தீங்க. டயர்டா இல்லையா?” எனக் கடிந்தவாறே சுதி குவளையைக் கையிலெடுக்க, நிவின் சிறு முறுவலுடன் அவளருகே அமர்ந்து பழச்சாற்றை பருகினான்.
“பொண்டாட்டி இல்லாத வீடு எப்படி இருக்கும்னு உங்களுக்குத் தெரியுமாங்க?” இவள் கேலி இழையோடக் கேட்க, மென்மையாய் அவளை முறைத்தான் கணவன்.
“எப்படிங்க இப்படி ஒரு தூசு தரையில இல்லாம சுத்தமா வச்சிருக்கீங்க. உங்களுக்கு ஓசிடி எதுவும் இருக்குமோன்னு இப்போ டவுட் வருது எனக்கு?” என அவனை விடாது வம்பிழுத்தவளிடம் பதிலுரைக்காது எழுந்து சென்று குவளையைக் கழுவி கவிழ்த்தியவன் அறைக்குள்ளே மீண்டும் நுழைந்தான்.
குழந்தையை சற்றே கீழிறக்கி நன்றாகப் படுக்க வைத்தவன் அப்படியே மனைவி மடிமீது படுத்து முகத்தைப் புதைத்துக் கொண்டான். அவன் என்ன செய்கிறான் எனப் பார்த்திருந்த சுதிக்கு கணவனின் செய்கையில் முகம் கனிந்து போனது. அவனது தலையை வாஞ்சையாயக் கோதியவள், “எங்களை ரொம்ப மிஸ் பண்ணீங்களா? தேடுனீங்களா?” எனக் கனிவாகக் கேட்டாள்.
“யெஸ்...” என்றவனிடம் உஷ்ணமாய் ஏக்கப் பெருமூச்சு. நீண்ட நாட்கள் கழித்து கிடைத்த மனைவியின் சுகந்ததை சுகமாய் நாசியில் ஏற்றி தன்னுள் நிரப்பினான். சில பல நிமிடங்கள் கடக்க, “சுதி... உனக்கு ஞாபகம் இருக்கா?” எனக் கேட்டான் கணவன். என்னவென்பதாய் இவள் பார்த்தாள்.
“இதோ... இதே மாதிரிதான் ஆக்சிடென்ட் ஆனப்போ நீ என்னைப் பிடிச்சிருந்த!” என அவளது கையை எடுத்து தனது பின்னந்தலையில் அழுத்தி வைத்தவன் அவளது வயிற்றில் முகம் புதைத்தான். அவன் செய்கையில் இவளுக்கு ஆச்சர்யமும் வெட்கமும் வந்தது.
“என்ன பண்றீங்க?” என்ற சுதியின் அதட்டல் கூட மென்மையாய் மிக மென்மையாய் வந்தது.
“இதோ... இந்தப் பொண்ணு, இந்த ஸ்மெல், இந்த வாய்ஸ், இந்த ஸ்பரிசம் எதையுமே மிஸ் பண்ணக் கூடாதுன்னு அன்னைக்கே என் ஹார்ட் சொல்லுச்சு சுதி!” என்றவன் குரலில் மெதுவாய் சுதி கரைந்து கொண்டிருந்தாள். அவளுக்குமே இது புதிய செய்திதான். முசுடு நிவினுக்குள் ஒரு காதல் மன்னனா என மனம் வியந்து போனது. அவளுமே ஒரு சில நாட்கள் எப்போது தன் மீது காதல் வந்தது என்றெல்லாம் தோண்டித் துருவிக் கேட்டும் எமகாதகன் வாயையே திறக்கவில்லை என விட்டுவிடுவாள்‌. இன்றைக்கு அவனாகக் கூறவும் நுரைத்துப் பொங்கிய உணர்வுகளுக்கு அணைபோட விரும்பாமல் அதில் நனைந்து குளிர்ந்தாள் பெண்.
“ஆப்ரேஷன் முடிஞ்சு கான்ஷியஸ் வந்ததும் என்னை காப்பாத்துன பொண்ணு யாருன்னுதான் ஃபர்ஸ்ட் கேட்டேன் சுதி!” என்றவனை பிரியத்துடன் நோக்கியவள், “நம்பிட்டேன் போங்க...” என்றாள் பொய்யான நொடிப்புடன்.
“ஹம்ம்... நிஜமா சுதி. அத்தனை பேர் என்னை சுத்தி இருந்தும் ஒருத்தர் கூட என் பக்கத்துல வரலை‌. பட் நீ வந்த. இதோ, ஒரு டைம் கேட்ட வாய்ஸ். ஹாஸ்பிடல்ல மயக்கமா இருக்கப்போ கூட ஐ யம் ட்ரையிங் டூ சீ யுவர் ஃபேஸ். பட் க்ளியரா இல்லை. நீ வந்து என் பாக்கெட்ல இருந்து போன் எடுத்தப்போ ஐ வாஸ் நாட் இன் கான்ஷியஸ். பட், ஐ கேன் பெல்ட் யூ. என்னால உணர முடிஞ்சது சுதி. ரெண்டு வாரமா எங்கயாவது யாராவது பொண்ணு க்ராஸ் பண்ணி போனா அது நீயா இருக்குமோன்னு தோணிட்டே இருக்கும். சீரியஸ்லி நான் மீனாட்சி காம்ப்ளக்ஸ்க்கு த்ரீ இயர்ஸா வந்திருக்கேன். அப்போலாம் உன் வாய்ஸ் கேட்டிருக்கலாம், நானே உன்கிட்ட பேசி இருக்கலாம். பட் அப்போ எல்லாம் இந்த வாய்ஸ், இந்த பொண்ணு என்னை டிஸ்டர்ப் பண்ணது இல்லையே!” என்றவனை இவள் ஆச்சரியமாகப் பார்த்தாள். ஆனாலும் கணவனின் அன்பில் மனம் நனைந்து தோய்ந்திருந்தது.
“ஒரே டைம் கேட்ட வாய்ஸை எப்படி ரெகக்னைஸ் பண்ணேன்னு ஸ்டில் எனக்குத் தெரியலை. பட், இந்தப் பொண்ணைத் தெரிஞ்சுக்கணும்னு எனக்கொரு எண்ணம். அதான் காஃபி சாப்பிடக் கூப்பிட்டேன். பட் மேடம் வரலை. அப்புறம் எனக்குள்ள சின்னதா ஒரு ஈகோ. அது என்னை மேல பேச விடாம தடுத்துடுச்சு. ஐ வாஸ் ட்வென்ட்டி செவன் தட் டைம். அவ்வளோ நாள் எந்தப் பொண்ணு பின்னாடியும் நானா போனது இல்லை. போகவும் தோணலே. அப்படி இருக்கப்போ உன் பின்னாடி நான் ஏன் வரணும்னு ஈகோ க்ராஷ் ஆகவும், நான் உன்னை இக்னோர் பண்ணிட்டேன்!” என்றவனை இவள் மென்மையாய் முறைத்தாலும் அதிலிருந்த உண்மை அவளும் உளப்பூர்வமாக உணர்ந்திருக்கிறாள். நிவின் சட்டென்று அவனாக யாரிடமும் சென்று வழிய பேசும் ரகமில்லை. புன்னகைத்தாலும் எல்லோரையும் எட்ட நிற்க வைத்துதான் பேசுவான். நேர்மையானவன், அதைவிட கொஞ்சம் அவனுக்குத் தன்முனைப்பும் உண்டு. ஆனால் அவை எல்லாமும் சுதி என்ற மந்திரச் சொல்லுக்கு முன்னே சுழியம்தான். அவள் என்று வரும்போது எங்கேயும் அவன் பெரிதாய் அலட்டிக் கொள்ளாது இறங்கிவிடுவதை இவளுமே உணர்ந்திருக்கிறாள். அப்போதெல்லாம் மனம் தான் என்ற அகந்தையில் இறக்கை விரித்துப் பறக்கும். இவள்தான் அதட்டி அடக்குவாள்.
“பட், காட் க்ரியேடட் அ சான்ஸ். அப்புறம்தான் நீ சர்வன்டா வந்தது. உன்னைப் பார்த்ததும் ஸ்பார்க் வந்துச்சுன்னு சொல்ல மாட்டேன். ஏதோ பேசணும், பழகணும்னு ஒரு எண்ணம். வெறும் ஒரு தடவை ஹெல்ப் பண்ணதுக்காக உன் கேரக்டர் தெரியாம நான் லவ்னு நிக்கிறது எனக்கே அபத்தமா தெரிஞ்சது. அதான் உன் கூடப் பழக வாய்ப்பு கிடைச்சதும், ஐ அக்செப்டட். சீரியஸ்லி இந்த சுதிரமாலவை எனக்குப் பிடிச்சுப் போச்சு. ஒருநாள் நீ வரலைன்னதும் ஐ ஃபீல் எம்ப்டி. என் அம்மாவுக்கு அடுத்ததா நான் ஒரு பொண்ணை இந்த அளவுக்குத் தேடுனது இல்லை. அப்போதான் புரிஞ்சது. ஐ வாஸ் இன் லவ் வித் யூ. தென் ஈகோ எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு உன்கிட்ட வந்துட்டேன் சுதி!” என்றவன் மனதில் உள்ளதை உணர்வுகளை மறைக்காது கொட்டிவிட, சுதியின் முகம் கனிந்திருந்தது.
“உங்களை மாதிரி லவ் சீன்ஸ், ஃபைட் சீன்ஸ், சிம்பதி சீன்ஸ் வச்செல்லாம் கதையெழுத வராதுங்க எனக்கு. ஹம்ம், என்கிட்ட நீங்க ப்ரபோஸ் பண்ண பிறகு கூட உங்க மேல நல்ல எண்ணமெல்லாம் இல்லவே இல்லை. சரியான முன்கோபி, ஊதாரிதனமா செலவு பண்றவரு, மனுஷங்களை மதிக்கத் தெரியாதவர்னுதான் என் மனசுல உங்களைப் பத்தின அபிப்ராயம். அப்போ நீங்க வந்து பிடிச்சிருக்குன்னு சொன்னா ஓகேவா சொல்ல முடியும். மாட்டேன்னுதான்‌ மறுத்தேன். பட், அம்மா, அப்பான்னு யாரோட அன்புமே இல்லாம வளர்ந்ததால நீங்க பாசமா பேசவும் மனசு வழுக்கிடுச்சு. கல்யாணம் பண்ணும்போது கூட எனக்கு கொஞ்சம் பயம்தான். இந்த மனுஷனோட காலம் முழுக்க வாழ்க்கையை ஓட்டிட முடியுமா? எல்லாம் ஒத்து வருமான்னு யோசிச்சு, என் மேல இருக்க உங்க லவ்வை மட்டுமே அடிப்படையா வச்சுத்தான் இந்த வாழ்க்கைக்குள்ள வந்தேன். பட் ஒரே வாரத்துல இந்த நிவினை எனக்கு எவ்வளோ பிடிச்சுப் போச்சுன்னு வார்த்தையால சொல்ல முடியலை. இப்போ இந்த நிமிஷம் நான் ரொம்ப ரொம்ப கம்ப்ளீட்டா ஃபீல் பண்றேன். அழகு, படிப்புன்னு எவ்வளவோ காரணம் இருந்தும் என் மனசை மட்டுமே பார்த்துக் கட்டிக்கிட்டு வந்த இவரைத் தவிர யாராலையும் என்னை இந்தளவுக்கு அன்பா பார்த்துக்க முடியாதுன்னு புரிஞ்சது. எவ்வளோ நாள் வாழப் போறோம்னு அஷ்ஷூரன்ஸ் இல்லாத வாழ்க்கை. அதனால இருக்க காலத்தை எனக்கே எனக்கா இருக்க உங்க அன்புல வாழ்ந்துடணும்ன்றதை தவிர பெருசா எந்த ஆசையும் இல்ல என்கிட்ட!” என மூச்சு வாங்கப் பேசியவளின் விழிகளில் மெலிதாய் நீர்ப்படலம். குனிந்து கணவன் நெற்றியில் சிரிப்புடன் முத்தமிட்டாள்.
“ப்ம்ச்... சுதிர்மாலா!” அவன் அதட்ட, “என்ன... என்னங்க. கண்ல தூசி. அவ்வளோதான்!” என சமாளிக்கும் மனைவியைப் பார்த்து நிவினின் உதடுகளில் புன்னகை ஏறியது.
“என்ன சிரிப்பு!” என்ற அதட்டலுடன் அவனின் இரண்டு கன்னத்திலும் அழுத்தி முத்தமிட்டாள் மனைவி.
“இதென்ன டி ஆருவோட கிஸ் மாதிரி இருக்கு!” என்றவன் குறும்பாய் எழுந்தமர்ந்து, “பொறுமையா ஆழமா இங்க ஒன்னு கொடுப்பீயாம்?” என ரசனையாய் ஆசையாய் உதட்டைக் குவித்துக் காட்டியவனின் பேச்சில் சுதி முகம் சிவந்தாள்.‌
“போயா... அப்படிலாம் தர முடியாது!” இவள் எழுந்து கொள்ள, “எட்டு மாசமா ஏங்கிப் போய்ருக்கேன் டி...” அவன் ஏகக்மாய்க் கூறினான்.

“நோ... இன்னும் ஒன் மந்த்க்கு எல்லாத்துக்கும் நோதான். என் புருஷன் ஸ்க்ரிக்ட் ஆபிசர்!” கேலியுடன் உரைத்தவள் அறையைவிட்டு வெளியேறினாள்.
“ஏய்... ஒரு கிஸ் கூட தடையா. இதெல்லாம் அநியாயம் டி!” என நிவின் கத்தி புலம்பியபடியே வாயில் வரை வந்தவன் வேறு ஏதோ பேசும் முன்னே அவனருகே வந்த சுதி அவன் கண்களில் கையை வைத்து மறைத்து அவன் உதட்டில் அழுந்த முத்தமிட்டுவிட்டு சமையலறைக்குள் ஓடிவிட, நிவின் முகம் முழுவதும் புன்னகை படர்ந்தது.
“ஏய் கேடி...” என்றவாறே சமையலறை நுழைந்து மனைவியைப் பின்னிருந்து இறுக்கி அணைத்தான். அவளுக்கு முகம் சிவந்தது.
“பொண்டாட்டி, ஐ லவ் யூ டி!” என இவன் செவிக்கும் கன்னத்திற்கு இடையேயிருந்த இடைவெளியில் முத்தமிட்டுக் கூறவும், அவளுக்கு பூனை முடிகள் சிலிர்த்து நின்றன.
“ஓஹோ... இதைத்தானே ரெண்டு வருஷமா சொல்லிட்டு பின்னாடியே வர்றீங்க?” என சுதி உதட்டை வளைத்தாள்.
“நீதானே டி பின்னாடி சுத்த வைக்கிற. கெஞ்ச வைக்கிற!” என்றவன் மனைவியை ஆழமாய் வாசம் பிடித்தான். அதில் சிலிர்த்தவள், “நான் உங்களை கெஞ்ச சொன்னேனா... மிஞ்ச சொன்னேனா மிஸ்டர் சுதிரமாலா?” எனக் கேட்டவளின் குரல் முழுவதும் குறும்புதான். இவன் பதிலளிக்கும் முன்னே குழந்தை வீறிட்டு அழத் தொடங்க, “போங்க... போங்க. உங்க செல்ல மக அழறா. என்னென்னுப் பாருங்க. நான் நைட்க்கு எதாவது சமைக்கிறேன்!” என கணவனை விரட்டினாள் பெண். மறுப்பேதும் கூறாது அறைக்குச் சென்றவன் குழந்தையைத் தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்துக் கொண்டே கூடத்தில் நடக்க, அவனைக் கண்களில் நிரப்பிக் கொண்டாள் சுதி.
*சுபம்*


இதுவரைக்கும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள் பல 💖💖 பைனல் எபிசோடக்கும் கமெண்ட் பண்ணி என் மனசை குளிர்விக்கவும். அப்புறம் முக்கியமான விஷயம். டைட்டிலை ஜஸ்டிபை பண்ணிட்டேனா? இந்த நிவின் உங்களை உருக வச்சுட்டானா 🙈🙈

அடுத்த கதை மே மாசம்தான். நல்ல வேலைல செட்டிலாகிட்டு ப்ரெஷ்ஷா கதையோட உங்களை மீட் பண்றென். டைட்டில் "சர்வம் காதல் மயம்!" இடையில டீசர் மட்டும் போட்டு வெறுப்பேத்துவேன். அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க டியர்ஸ் 😁🏃‍♀️
 
Last edited:
Well-known member
Messages
1,106
Reaction score
794
Points
113
Superrrrrrrrr ma
Azhaghana ending
Nivin semmmmmmmaaaaa chance eh illa, ithukku thaan nivina naan starting la thittama hero vache nu mannichi vittutten😏😏😏😏😏😏


Sowmya ku oru azhaghana life, superrrrrrrrr superrrrrrrrr
Nivin suthi lovely pair❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

Next story may la thaana, ithellam konjam kooda nallave illa ma

Seekkirama storyoda Vara jaanu ma
 
Active member
Messages
252
Reaction score
203
Points
43
Awesome sis suthi nivin mattum illa
Sowmiya and Siddarth semma semma
Muzhmaiyana urugum pozhuthugal 🫶🫶🫶🫶🫶🫶
 
Messages
60
Reaction score
39
Points
18
#கதை_உருகும்_பொழுதுகள்_உன்னோடு

#கதை_ஆசிரியர் : @ஜானு முருகன்

#கவிக்குயிலின்_கவி_விமர்சனம்.


உயிர் தந்தாய் என் வாழ்வில்,
உணர்ச்சியால் நெஞ்சம் நிறைந்தது.
உயர்ந்த இவனது மனதுக்குள்,
உண்மை காதல் மலர்ந்ததோ?

உயர்ந்த இடத்தில் இருப்பவன்
உழைப்பை மட்டும் நம்பி இருப்பவள்
உணர்ந்தவன் நெருங்கி வர
உணராமல் விலகிச் செல்கிறாள்...


நண்பர்கள் துணை
நட்பு வேறு காதல் வேறு
நாசுக்காக தவிர்க்கும் நிவின்.....

ஆண் துணை இல்லாத
அத்தை அண்ணியுடன்
அன்பு இருந்தாலும்
ஆறுதல் கிடைத்தாலும்
அல்லல் படும் தினக்கூலி
அவள் குடும்பம்....

உயிர் காப்பாற்றிய
உன்னத மனதை உணர்ந்ததோ நிவின் உள்ளம்_ உள்ளத்தில்
உதித்த காதல் சொன்னதோ?

உறவினரின் வார்த்தை கடந்து,
உறவுகளின் நம்பிக்கையில்
உண்மையான காதலென,
உணர்ந்த நொடி_
உலகத்தை வென்ற பூரிப்பு...


உறுதியாய் நின்றாலும்
உள்ளம் அவன் பக்கம்
உருகத்தான் செய்தது...

உண்மை உரைத்து தடைகளை தகர்த்தான்,
உன் கை தழுவி
உறுதி தந்தான்...

உழைத்த உடல்
உருக்குலைந்த நிலையில்
உணர்ச்சிகளை தள்ளி நிறுத்தி
உணர்வு பூர்வமாக
உரிமையோடும் மனைவியின்
உடலை பார்த்துக் கொண்டு
உள்ளம் குளிர பார்த்துக் கொள்வது அருமை...


சுத்தமும் சுகாதாரமும் இருப்பவன் நிவின்
உழைப்பும் உடல்வலியும்
இருப்பவள் சுதிர்மாலா
சத்தியமும் சகலமும் நான் உனக்கு
நிதர்சனமும் நேர்மையும் நீ எனக்கு
நம்பிக்கையும் பாதுகாப்பும்
நான் தருவேன்
அன்பும் அரவணைப்பும் நீ
தந்தால் போதும் பெண்ணே....
அமைதியும் புன்னகையும் நான் உனக்கு
சிரிப்பும் சந்தோசமும் நீ எனக்கு....

உன்னோடு உருகும் பொழுதுகளில்,
உலகமாய் நின்ற நிவின்
உள்ளம் நிறைந்த காதலில்
உறைய வைத்தான் சுதிர் மாலாவை....

வலியில் உறைய வைத்து
விழியில் காதலை ஏற்று
வாழ்க்கையில் இன்பம் கூட
விடைபெற்ற துன்பம்
வாழ்வே வரமாக
உருகும் பொழு
துகள் உன்னோடு....

அருமை டியர்....
வாழ்த்துக்கள்❤️🤩💐👏🏻👏🏻👍🏻👍🏻💖💖




 
Top