• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

புன்னகை 8

Administrator
Staff member
Messages
606
Reaction score
836
Points
93
புன்னகை 8


நிச்சயமாக ஒரு

மாமாங்கு வேண்டும்
தான் போல இந்த
அகோர நேசத்தை
அநாயாசமாக உதறி செல்ல…


பார்க்கும் இடமெங்கும் கல்லூரி பறவைகள் வண்ண வண்ண உடைகளில் முகத்தில் மின்னும் சந்தோஷத்துடன் வலம் வந்து கொண்டிருந்தனர்.


அன்று வல்லபன் பயிலும் கல்லூரியில் ஆண்டு விழா கொண்டாட்டம்.

வருடத்திற்கு ஒரு முறை கொண்டாடப்படும் இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் ஆட்டம் பாட்டம் என்று கொண்டாடி தீர்த்துவிடுவார்கள்.

நிறைய போட்டிகள் நடனம், ஓவியம் என்று நடத்தி பரிசும் அளிக்கப்படும். முதுநிலை மாணவர்கள் தான் எல்லாவற்றையும் எடுத்து முன்னின்று செய்து இளநிலை மாணவர்களை வழிநடத்துவார்கள்.

அந்த விதத்தில் வல்லபனது வகுப்பும் மற்ற துறைய முதுகலை மாணவர்களும் எடுத்து நடத்தி கொண்டிருந்தனர்.

அடர் கருப்பு நிறத்தில் சட்டையும் அதற்கு தோதாக வெள்ளை நிறத்தில் வேட்டியும் அணிந்து காற்றினால் நெற்றியில் புரளும் கேசத்தை ஒரு கையால் ஏற்றிவிட்டபடி,

"மச்சான் ஸ்டேஜ்ல மைக் வேலை செய்யுதான்னு பாரு. நான் செக் பண்ணப்போ ஒன்னு தான் நல்லா இருந்துச்சு. அந்த ரேடியோ செட் பையனை இன்னொன்னு கொண்டு வர சொன்னேன் எடுத்திட்டு வந்துட்டான்னு பாரு" என அஜயிடம் கூறியவன், அவன் சரியெனவிட்டு சென்றதும்

மதனிடம், "மச்சான் ஸ்னாக்ஸும் வாட்டர் பாட்டிலயும் ப்ளேட்ல அடுக்கி ரெடியா வச்சாச்சான்னு பாரு. ப்ரோக்ராம் ஸ்டார்ட் ஆனதும் கொடுக்க ஆரம்பிச்சிடனும். அப்புறம் ஸ்டாஃப்ஸ் வந்ததும் பர்ஸ்ட் ரோல உட்கார வச்சிடு" என்று ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்றாக கூறி பம்பரமாக சுழன்றான்.

அவர்கள் வருட மாணவர்கள் எடுத்து செய்யும் முதல் நிகழ்ச்சி அதில் எந்த தவறும் நிகழ்ந்துவிட கூடாது என்று கவனமாக செய்து கொண்டிருந்தான்.

"கனிமொழி இன்னும் ஹாப் ஆன் ஹவர்ல ப்ரோக்ராம் ஸ்டார்ட் ஆகிடும். ப்ரோக்ராம் சார்ட் யார்க்கிட்ட இருக்கு. வெல்கம் ஸ்பீச் அண்ட் டான்ஸ் ஆடுறவங்களை ரெடியா இருக்க சொல்லு" என்க,

"ஹ்ம்ம் சார்ட் என்கிட்ட தான் இருக்கு. ஆல்ரெடி அவங்களை ரெடி ஆக சொல்லிட்டேன்" என்று கனிமொழி நகர,

அடுத்ததாக எந்த வேலை மீதமுள்ளது என்று பார்க்க போய்விட்டான்.

நெற்றியில் சிறிதாக சந்தன கீற்றும் இதழில் தவழும் புன்னகையுடன் வேட்டியின் நுனியை ஒருவிரலில் பிடித்தபடி அங்குமிங்கும் பம்பரமாக சுழன்றவனின் மீது சில விழிகள் படிந்து மீளத்தான் செய்தது. அவன் கண்டும் காணாமல் கடந்துவிட்டான்.

ஆனால் அவன் மனம் கவர்ந்தவள் தான் அவனை கண்டுகொள்வதே இல்லை. அவன் வம்பிழுத்தால் மட்டும் நாசி நுனி சிவக்க அவனை முறைத்து திட்டிவிட்டு நகர்ந்திடுவாள்.

செல்வாவை நினைத்ததும் இதழ்களில் இருந்த மென்னகை புன்னகையாக உருமாற உள்ளுக்குள், 'ஜான்சி ராணி' என்று முணுமுணுப்பு பிறந்தது.

இன்றைக்கு அவள் முதல் முதலாக வரவேற்பு நடனமாக பரதநாட்டியம் ஆட போகிறாள்.

ஆர்வமாக பெயரை கொடுத்திருந்தாள். நடனப் பயிற்சி செய்யும் போது கூட யாரயும் உள்ளே விடவில்லை.

எப்படி ஆடப்போகிறாள் என்று பார்க்கத்தான் வல்லபன் ஆர்வமாக இருந்தான்.

ஆனால் இங்கே அவனது ஜான்சி ராணியோ பானுவிடம், "டி எனக்கு ரொம்ப பயமா இருக்கு டி. நான் ஆடிதான் ஆகணுமா? ஸ்டேஜ்ல போய் எதாவது சொதப்பிட போறேன்" என்று பத்தாவது முறையாக புலம்ப,

அவளும் பொறுமையாக,"பயப்படாத டி. நீ அப்படிலாம் சொதப்பமாட்ட. நல்லாதான ப்ராக்டிஸ் பண்ணிட்டு வந்திருக்க" என்று ஆறுதல் கூற,

"அப்படின்னா சொல்ற?" என்று சந்தேகமாக வினவினாள்.

"அப்படியே தான் நீ நல்லா பண்ணுவ" என்றாள் பானு.

"சரி என் ட்ரெஸ் எல்லாம் சரியா இருக்கா. இடுப்புக்கிட்ட கொஞ்சம் லூசா இருக்கு. அதை சரி பண்ணி விடு. இந்த நெத்தி சூடி திரும்பிட்டே இருக்கு" என்று செல்வா கூற,

"இதோ சரி பண்றேன்" என்று பானு சரிசெய்ய துவங்கினாள்.

அவள் சரிசெய்து முடித்ததும் நேரத்தை பார்த்த செல்வா பதட்டமாகி, "பானு இன்னும் பத்து நிமிஷம் தான்டி இருக்கு. நான் பதட்டத்துல ஸ்டேஜ்ல மயங்கி விழுந்துட்டா என்ன பண்றது" என்று முகத்தில் அப்பிய பயத்துடன் கேட்க,

பொறுமை இழந்த பானு, "இதோ வந்துட்றேன்" என்று வல்லபனை நோக்கி சென்றாள்.

இந்த இரண்டு மாதத்தில் பானுவிற்கு விடயம் தெரிந்துவிட்டது. வல்லபனுக்கு செல்வா மீது விருப்பம் இருப்பதும் அதே போல செல்வாவிற்கு இருப்பதும் அவள் வெளியே காண்பித்து கொள்ளாததும் தெரிந்தது.

இவள் வல்லபன் வந்து கூறினால் தான் சரியாவாள் என்று வல்லபனை நோக்கி சென்றாள்.

காரணம் அவன் கூறும்போது எதுவென்றாலும் மாட்டேன் முடியாது என்று கூறினாலும் இறுதியில் அதனை செய்திருந்தாள். அது வல்லபனாலா அல்லது செல்வாவின் சுய விருப்பமா என்று தான் பானுவிற்கு தெரியவில்லை.

வேலைகளின் மத்தியில் படு மும்முரமாக இருந்தவனை தேடி கண்டறிந்து,

"வல்லபன் அண்ணா" என்று வந்து நின்றாள் பானு.

"டேய் நீ போய் பாரு நான் வர்றேன்" என்று அருகில் இருந்தவனை அனுப்பியவன்,

"சொல்லும்மா" என்றான்.

"அண்ணா அங்க செல்வா லாஸ்ட் மினிட்ல எனக்கு பயமா இருக்கு நான் டான்ஸ் ஆடலைன்னு சொல்லிட்டு இருக்கா. என்னால அவளை சமாளிக்க முடியலை. நீங்க கொஞ்சம் வர்றீங்களா?" என்று பானு வினா எழுப்ப,

"இதோ இரண்டு நிமிஷத்துல வந்துட்றேன் நீ போ" என்றவன்,

பானு சென்றதும் அஜயிடம் வாசல் வரை சென்று பேராசிரியர்கள் வரும் நேரமாகிற்று வரவேற்க போய் நில் என்றுவிட்டு,

'பேருதான் ஜான்சிராணி எல்லாத்துக்கும் பயப்பட வேண்டியது' என்று முணுமுணுத்தபடி அவள் தயாராகி கொண்டிருந்த அறைக்கு சென்றான்.

செல்வா, "என்னடி எங்க போய்ட்டு வந்த?" என்று வினவும் போதே வல்லபன் உள்ளே வந்திருந்தான்.

அவனை அப்போது எதிர்பாராதவள் அதிர்ந்து நிற்க, வல்லபனும் அவளை தான் பார்த்திருந்தான்.

மஞ்சளில் அரக்கு நிறத்தில் கரை வைத்த நாட்டிய உடையில் அதற்கு தோதாக பெரியதான ஜிமிக்கி காதினை நிறைக்க கழுத்தில் ஆரம் நெற்றியில் நெற்றிசூடி என்று அவனை இமைக்க மறக்க வைக்கும் வகையில் இருந்தவளது மையிட்ட விழிகள் பெரியதாக விரிய,

வல்லபனுக்குத் தான் ஒரு நொடி ஏதும் ஓடவில்லை. குரலை செறுமி தன்னை நிலைப்படுத்தியவன்,

"என்னடி உனக்கு பிரச்சனை. ஏன் இப்போ டான்ஸ் ஆட மாட்டேன்னு சொல்லிட்டு இருக்க?" என்று முறைப்புடன் வினவ,

"அது எனக்கு பயமா இருக்கு. நான் கண்டிப்பா சொதப்பிடுவேன்" என்று பயந்த விழிகளுடன் கூற,

அந்த விழிகளுக்குள் தொலைய இருந்தவன் கையால் கழுத்தை அழுத்தமாக வருடிவிட்டு பானுவிடம்,

"பானு ஸ்டாப்ஸ் வந்துட்டாங்களான்னு எட்டி பாரு" என்றான்.

"சரிண்ணா" என்றவள் வாசலுக்கு சென்று எட்டி பார்க்கும் நொடி,

சடுதியில் அவளை நெருங்கி அணைத்தவன் காதில்,

"நான் இருக்கும் போது நீ எதுக்கு பயப்பட கூடாது. நீ நல்லா டான்ஸ் ஆடுவ" என்று அழுத்தமாய் கூறியவன் அணைத்த வேகத்திலே விலகிட,

இங்கு செல்வா தான் அவனது செயலில் சர்வமும் சமைந்து உறைந்துவிட்டாள்.

இதற்குள் பானு, "ண்ணா வந்துட்டாங்க" என்றிட,

வல்லபனுக்கு அவளது நிலையை கண்டு சிரிப்பு வந்துவிட இதழ்களுக்குள் அதக்கியவன்,

"இனிமே புலம்பமாட்டா. நல்லா பெர்பார்ம் பண்ணிடுவா" என்று அழுத்தமாக கூறிவிட்டு வெளியேறினான்.

ஆனால் செல்வாதான் தன்னிலை அடையாமல் இன்னும் அதிர்வுடன் சிலையாகியிருந்தாள்.

வெளியே வந்து, "வாங்க சார். வாங்க மேம்…" என்று வரவேற்றவனது இதழ்களில் ரகசிய புன்னகை மிளிர்ந்தது



கண் பார்த்து கதைக்க
முடியாமல் நானும் தவிக்கின்ற
ஒரு ‌பெண்ணும் நீ தான்
கண் கொட்ட முடியாமல்
முடியாமல் பார்த்தும்
சலிக்காத ஒரு
பெண்ணும் நீ தான்
சலிக்காத ஒரு
பெண்ணும் நீ தான்….


***********************

கோவை விமான நிலையம் பரபரப்புடன் இயங்கி கொண்டிருக்க,

ஹைத்ரபாத்திலிருந்து வரும் விமானம் தரையிரங்க உள்ளது என மூன்று மொழிகளிலும் ஒலிக்கப்பட்டது.

அடுத்த பத்து நிமிடத்தில் விமானம் தரையிரங்க அனைத்து பரிசோதனைகளையும் முடித்து வெளியே வந்தனர் செல்வாவின் குடும்பத்தினர்.

வல்லபன் அதியை கையில் தூக்கி கொண்டு நடக்க செல்வா தான் இன்னும் மன‌ உலைச்சலிலே இருந்தாள்.

என்னவோ அவனது சிறு முக மாற்றமும் அவளையறியாமலே உள்ளே வருத்தத்தை கிளற செய்ததில் சிறிது திண்டாடி தான் போனாள்.

சட்டென்று அவனிடம் சென்று அவளாலும் சடுதியில் பேச முடியவில்லை.

என்னவோ தனக்கு எல்லாம் மறந்துவிட்டது விபத்தில் அதுமட்டுமின்றி பாதி நினைவுகள் மறந்துவிட்டது இதில் திருமணம் கணவன் குழந்தை என்று அடுத்தடுத்த தாக்குதலில் சிறிது தடுமாறி தான் போயிருந்தாள்.

இதில் புதியதாக தன் வாழ்வில் அறிமுகப்படுத்தப்பட்ட உறவுகளை ஏற்றுகொள்ளவும் அவர்களுடன் ஒன்றவும் முடியவில்லை.

அவளுக்கு சிறிது பயமாக கூட இருந்தது எங்கே தன்னையறியாமல் அவர்களை காயப்படுத்திவிடுவோமோ என்று.

வல்லபன் கூட அனைத்தையும் தெரிந்தவன் புரிந்து கொள்வான் ஆனால் அதியா அவளை தெரியாமல் காயப்படுத்திவிட்டால் அச்சிறு பிஞ்சிற்கு என்ன தெரியும்.

ஒருவேளை அவள் தன்னை வெறுத்துவிட்டால் நாளை எனக்கு நினைவு வந்த பிறகு என்னிடம் வர மறுத்துவிட்டால் என்ன செய்வது என்று எண்ணம் வேறு எழுந்து அவளை குழப்பி தவிக்க வைத்தது.

அவர்கள் வெளியே வந்ததும் இரண்டு பெரிய மகிழுந்துகள் வந்து நின்றது.

அவற்றின் தோற்றமே கூறியது அதன் மதிப்பை. செல்வாவிற்கு புரிந்தது அது தங்களுக்காக தான் வந்திருக்கிறது என்று.

மகிழுந்தில் இருந்து இறங்கிய இரண்டு ஓட்டுநர்கள் அவர்களிடமிருந்த பைகளை வாங்கி வைக்க செல்ல,

செல்வா இதனை கண்டு மேலும் மேலும் குழம்பி நின்றுவிட்டாள்.

'இத்தனை வசதி இவனிடமா…?' அவளை ஏதோ ஒரு வகையில் அச்சுறுத்தியது.

"என்னக்கா நிக்கிற வண்டியில ஏறு" என்று அவளது தோளை பவி தொட,

"ஹான்…" என்று ஒரு நொடி விழித்தவள் பின்,

"ஹ்ம்ம்" என்று ஏறி சாரளத்தின் அருகே அமர்ந்துவிட்டாள்.

 
Administrator
Staff member
Messages
606
Reaction score
836
Points
93
'மனம் வல்லபன் இந்த மகிழுந்தில் ஏறுவானா?' என்று எதிர்ப்பார்க்க, அவள் எதிர்ப்பார்ப்பை பொய்யாக்காமல் அதே மகிழுந்தில் ஏறினான்.

ஆனால் முன்புற இருக்கையில் அதியும் அவனிடமே தான் இருந்தாள்.

என்னவோ தன்னுடைய செய்கையால் தான் அதி தன்னிடம் வரவில்லையோ என்று வேறு எண்ணம் வரவைத்தது.

வாகனம் கிளம்பியதிலிருந்து மனம் அவர்களிடம் தான் இருந்தது. ஆனால் அவர்கள் இவள்புறம் நொடி கூட திரும்பவில்லை.

ஏனோ மனம் சுணங்க சாரளத்தில் தலையை சாய்த்து சாலையை வெறிக்க துவங்கிவிட்டாள்.

முக்கால் மணிநேர பயணத்தில் ராமநாதனின் வீட்டை அடைந்திருந்தனர்.

செல்வா இறங்கியதும் வேதவள்ளி,

"செல்வா நில்லு ஹாஸ்பிட்டல்ல இருந்து வந்திருக்க. நான் வினிதாவ ஆரத்தி கலைச்சு எடுத்துட்டு வர சொல்லியிருக்கேன்" என்று கைப்பிடித்து நிற்க வைத்தார்.

செல்வாவின் விழிகள் அவ்வீட்டை ஆராய்ந்தது. அது ராமநாதனின் பூர்வீக வீடு.

செல்வா பள்ளி படிக்கும் காலத்தில் ஊர் திருவிழாவிற்கு வந்து செல்வார்கள்.

அப்போது சற்று பழமையான தோற்றத்தில் இருக்கும். இப்போது தியாகு நிறைய மாற்றங்களை செய்திருந்தான்.

முன்புறம் இருந்த தூண் போன்ற அமைப்பை இடித்து சில குட்டியான அழகு செடிகளின் தொட்டிகளை அடுக்கியிருந்தார்கள்.

பார்க்கவே அழகாக தான் இருந்தது. வாசலுக்கும் கதவிற்கும் உள்ள இடைவெளியில் ஒரு பெரிய நெல்லிக்காய் மரம் இருந்தது. அது இப்போது அங்கில்லை.

வீட்டிற்கு அடித்திருந்த சுவர்பூச்சு கூட கத்தரி பூ நிறத்தில் கண்ணை பறித்தது.

செல்வாவின் விழிகள் வீட்டில் செய்யப்பட்டிருந்த மாற்றங்களை அவதானிக்க,

"இங்க பாரு செல்வா…" என்று வினிதா ஆரத்தி தட்டுடன் அவள் முன் நிற்க, அவளருகில் சிறிய இடைவெளியில் வந்து நின்றான் வல்லபன் கையில் அதியா.

"இனிமே எந்த பிரச்சனையும் வராம நீங்க சந்தோஷமா இருக்கணும்" என்று மூவரையும் சேர்த்து சுற்ற, செல்வா ஒரு கணம் அருகில் இருந்தவனை பார்த்துவிட்டு மீண்டும் வினிதாவிடம் பதிய, அவனது கவனம் நேராகதான் இருந்தது.

அவள் ஆரத்தி சுற்றியதும் மூவரும் உள்ளே நுழைய மற்றவர்கள் பின்னர் நுழைந்தனர்.

பவி செல்வாவின் பார்வையை கவனித்துவிட்டு, "என்னக்கா இப்படி பாக்குற?" என்க,

"இல்லை வீடு ரெம்பவே மாறியிருக்கு. நிறைய ஆல்ட்ரேஷன்ஸ் பண்ணியிருக்கிங்க போல" என்று சுற்றி முற்றி பார்த்தாள்.

"ஆமாக்கா. எல்லாம் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி தான் மாத்துனோம். அண்ணா தான் இந்த தூன் எல்லாம் எடுத்தது" என்றவள்,

"மாடில கூட கேட்டுக்கு வெளிய முல்லை கொடி பெரிசா வளர்த்திருக்கோம்" என்று பதில் அளிக்க,

செல்வா அமைதியாக கேட்டு கொண்டாள்.

அவர்கள் வந்த நேரம் இரவு இருள் கவிழ துவங்கியிருந்ததால் வேதவள்ளியும் வினிதாவும் இரவுணவை சமைக்க சென்றுவிட்டனர்.

பவி, "க்கா வா நான் எல்லா ஆல்ரட் பண்ண ப்ளேசயும் காட்றேன்" என்று செல்வாவின் கையை பிடித்து இழுத்து சென்றுவிட்டாள்.

வல்லபன், தியாகு மற்றும் ராமநாதனுடன் பேசியவாறு கூடத்தில் அமர்ந்துவிட்டாள்.

வீட்டை சுற்றி காண்பித்து நிறைய நிறைய பேசினாள் சாம்பவி.

பவி செல்வாவை போல அல்ல. சற்று அமைதி. வார்த்தைகளை அளந்து பேசும் வழக்கம் உடையவள்.

அப்படி இருந்தவள் இன்று தனக்காக தான் இத்தனை தூரம் பேசுகிறாள் என்று புரிந்தது.

விழிகள் தங்கையை அளவிட்டது நல்ல உயரமாக வளர்ந்திருந்தவள் சற்று சதைப்பிடிப்புடன் இருந்தாள்.

ஹ்ம்ம் இப்போது பெரிய பெண்ணாகிவிட்டாள். கல்லூரி படிக்கிறாள் அல்லவா? என்று எண்ணி கொண்டது.

"உன்னோட ரூமை பார்க்கலையா?" என்றவள் அவள் அறைக்கு அழைத்து செல்ல,

செல்வாவின் விழிகள் சற்று ஆர்வமாக உள்ளே நுழைந்தது.

அறையினுள் சென்றவளின் விழிகள் பெரியதாக சுவற்றில் மாட்டப்பட்டிருந்த புகைப்படத்தில் தான் நிலைத்தது

ஒரு கணம் கருமணி அசையவில்லை. அப்புகைப்படத்தில் வல்லபன் மற்றும் செல்வா புன்னகையுடன் நிற்க வல்லபனின் கையில் அதி சிறு குழந்தையாக இருந்தாள்.

மூவரது முகத்திலும் அவ்வளவு மகிழ்ச்சி பிரதிபலித்தது.

இரண்டு நாட்களாக வெறும் வாய் வார்த்தையாக தான் இவன் உன் கணவன் அதி உனது குழந்தை என்று கேட்டிருந்தாள்.

இப்போது தான் அதற்கான‌ ஆதாரத்தை விழிகளில் காண்கின்றாள்.

தன் மீது கைப்போட்டு நின்றிருந்தவனது முகத்தில் மின்னிய புன்னகையை கண்டவளுக்கு உள்ளத்தில் என்ன உணர்வென்று தெரியவில்லை.

"க்கா ஏன் அப்படியே நின்னுட்ட வா உள்ள" என்று பவி அழைத்ததும் தான் தன்னிலை அடைந்தவள் அறையை விழிகளால் சுற்றினாள்.

வலதுபுறமிருந்த மர கட்டில் இடதுபுறம் மாற்றப்பட்டிருந்தது. பால்கனியில் சிறிய ரோஜா செடிகள் அடுக்கப்பட்டிருந்தது.

முன்பு பால்கனிக்கு கதவு இல்லை இப்போது கதவு போடப்பட்டு திரைசீலையும் தொங்கவிடப்பட்டிருந்தது.

வேறு பெரியதான மாற்றங்கள் இல்லை.

"இந்த கதவு நீ தான்கா போட சொன்ன" என்று பவி கூற,

"ஓ…" என்று கேட்டு கொண்டாள்.

அதன் பிறகு உரையாடல் தொடர, வினிதா வந்து,

"ரெண்டு பேரும் பேசுனது போதும் சாப்பிட வாங்க" என்று அழைக்கவும் கீழே சென்றனர்.

எல்லோரும் உணவருந்தும் மேசையில் இவர்களுக்காக தான் காத்திருந்தனர்.

செல்வாவின் பார்வை வல்லபனின் மேல் பதிந்தது.

அணிந்திருந்த உடையை மாற்றிவிட்டு வீட்டில் அணிவது போல இலகு உடைக்கு மாறியிருந்தான். அதியாவும் கூட.

பவி சென்று தந்தையினருகே அமர்ந்திட செல்வா வல்லபனின் அருகே அமர்ந்தாள்.

'அதியாவிற்கு ஊட்டிவிட வேண்டுமா?' என்ற யோசனையுடன் பார்க்க, அதற்கு அவசியமின்றி வல்லபனே தானும் உண்டபடி அவளுக்கும் ஊட்டினான்.

அதனை கண்ட விநாடி சடுதியில் ஏதோ போல ஆகிவிட்டது. யாருக்கும் முகத்தை காண்பிக்காது உண்டு முடித்தவள் கூடத்தில் உள்ள நீள்விருக்கையில் சென்று அமர்ந்துவிட்டாள்.

உண்டு முடிந்ததும் வேதவள்ளி, "செல்வா இந்த பாலை குடிச்சிட்டு மறக்காம மாத்திரையை போட்டுட்டு படு" என்று கூற,

"சரிம்மா" என்று தலையசைத்தவளுக்கு வல்லபனுடன் ஓரே அறையில் உறங்க வேண்டுமா? என்ற வினா பெரியதாக எழுந்து நின்றது.

முன்னிருந்த குழப்பங்கள் எல்லாம் பின் செல்ல இந்த கணம் இது ஒரு பூதாகரமாக தோன்றியது.

நேற்று மருத்துவமனையில் அவன் அருகில் இருந்தது பெரியதாக தெரியவில்லை.

ஆனால் இப்போது தன்னுடைய அறையில் அவனுடனா? என்று எண்ணுகையில் சிறிது உதறலே எடுத்தது.

அதுவும் தன்னுடைய அறை மிகவும் சிறியது. அதில் அவனுடன் இருக்க இயலாது.

தன்னுடைய அறையில் தான் மட்டும் இருந்த அறையில் இன்னொருவரை அதுவும் ஒரு ஆணை அனுமதிக்க சடுதியில் மனம் வரவில்லை.

முகம் முழுவதும் பரிதவிப்புடன் என்ன செய்வதென துப்பட்டாவின் முனையை திருகியபடி அமர்ந்திருந்தாள்.

"போய் ரெஸ்ட் எடு செல்வா. டிராவல் பண்ணது டையர்டா இருக்கும்" என்று ராமநாதன் கூற,

மறுப்பு கூற இயலாது தலையசைத்தவள் பரிதவிப்புடன் எழுந்து கொள்ள, அவள் முகத்தையே பார்த்திருந்தான் வல்லபன்.

செல்வாவும் அவனை பார்த்துவிட்டு திரும்பி நடக்க,

"நானும் அதியும் இங்க கீழ இருக்கிற கெஸ்ட் ரூம்லயே தங்கிக்கிறோம்" என்ற வல்லபனின் குரல் அவள் முதுகை மோதியது.

அதில் உள்ளுக்குள் சிறு ஆசுவாசம் பிறக்க சட்டென்று திரும்பி பார்த்தாள்.

ஆனால் அவன் முகத்தை பார்க்க இயலவில்லை. அதியை தூக்கி கொண்டு அறைக்குள் நுழைந்திருந்தான்.

அதியை தூக்கி சென்றதில் சற்று வருத்தம் குமிழிட ஆசுவாசம் பிறந்த வேகத்திலே காணாமல் போய்விட்டது.

அதுவும் தன்னுடைய முகத்தை பயத்தை பார்த்த பின்பு தான் அவன் இவ்வாறு கூறியிருக்கிறான் என்று உணர்ந்த நொடி பட்டென்று விழிகள் கலங்கிவிட அறைக்குள் ஓடிவிட்டாள்.

விழிநீரை துடைத்தவளுக்கு தனக்கு என்ன வேண்டுமென்று தெரியவில்லை.

முதலில் தான் தான் அவன் வேறு அறைக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் இப்போது அவன் சென்றதும் வருந்துகிறோம்.

என்னதான் எனக்கு வேண்டும் என்று வினா தொடுத்தவளின் விடை சுழியம் தான்.

அவனை மீண்டும் மீண்டும் காயப்படுத்துக்கிறோம் என்று புரிந்த நொடி உள்ளுக்குள் மெல்லிய இழை இறுகியது.

'ப்ச்' என்று சலித்தவள் கட்டிலின் ஓரத்தில் சென்று படுத்து கொண்டாள்.

'அதியும் ஏன் தன்னிடம் வரவேண்டும் என்று கூறவில்லை. உணவருந்தும் நேரம் கூட என்னை தேடவில்லை'

'ஒருவேளை வல்லபன் தான் எதாவது கூறியிருப்பாரோ' என்று எண்ணிய மறு நொடியே,

'சே சே இருக்காது' என்று இரண்டாவது மனம் கூறியது.

விழிகளை மூடி உறங்க முயற்சித்தாலும் உன்னை நேசிக்கும் இரு ஜீவன்களை நீ காயப்படுத்திவிட்டாய் என்ற‌ எண்ணமே பாரமாக அழுத்த‌ எழுந்து தலையை பிடித்தபடி அமர்ந்துவிட்டாள்.

என்ன செய்வதென புரியவில்லை.

நேரத்தை பார்த்தவளுக்கு எல்லோரும் உறங்கிவிட்டிருப்பார்கள் என தெரிந்தது.

மாடிக்கு சென்று சிறிது நேரம் நின்றுவிட்டு வருவோம் என்று நினைத்தவள் எழுந்து வெளியே செல்ல அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டிருந்தது.

மெல்ல இருளுக்கு பழகி மாடிக்கு செல்லும் படியை கண்டுபிடித்து சத்தம் வராது மாடி கதவை திறந்து செல்ல அழகிய முல்லை கொடி காற்றின் தாளத்திற்கேற்ப ஆடி அவளை வரவேற்க,

ஒரு நிமிடம் அதனை பார்த்து மெய்மறந்து நின்றுவிட்டவள் மேனியை தழுவிய காற்றை உணர்ந்தவாறு மேலும் முன்னேறி செல்ல அவளது பார்வையில் விழுந்தான் கைகளை கட்டி கொண்டு வானத்தை வெறித்து கொண்டிருந்த வல்லபன்.

அவனை அங்கு எதிர்பாராதவள் அதிர்ந்து விழிக்க, அவளது அரவத்தில் அவனும் திரும்பி பார்த்திருந்தான்.

இருவரது விழிகளும் ஒரே கோட்டில் மோதி கொண்டது.

வல்லபன் வேறு பார்த்துவிட்டான் நிற்கவா? போகவா? என்று சந்தேகம் வேறு வந்துவிட்டது.

அவனை பார்த்தபிறகும் பேசாமல் சென்றால் நன்றா இராது என்று சிந்தித்தவள் மெல்ல தயங்கி தயங்கி தான் சென்றாள்.

முல்லை கொடியில் லயித்திருந்த மனம் வல்லபனை கண்டதும் பழைய விடயத்திற்கு தாவிவிட்டது.

அவனுக்கு அது போல எந்த தயக்கமும் இல்லை போலும்.

"என்ன செல்வா தூக்கம் வரலையா?" என்று வினவ,

"ஹ்ம்ம் ஆமா" என்று தலையசைத்தவள் தயங்கியவாறு அவனை பார்க்க,

அவளது பார்வையை கண்டுகொண்டவன்,

"என்ன‌ என்கிட்ட எதாவது கேட்கணுமா?" என்று ஆழந்து பார்க்க,

அவனது அந்த ஆழ்ந்த பார்வையும் அழுத்தமான குரலும் அவளை குளிரெடுக்க செய்தது.

'இவன் பார்வையால் ஏதோ செய்கிறான் என்னை' என்று மட்டும் உணர்ந்தவள்,

"அது… உங்களுக்கு எம்மேல எதாவது கோபமா?" என வினா எழுப்ப,

அவன் புரியாது புருவம் சுருக்கினான்.

"நான் அங்க காஃபி ஷாப்ல கேட்டது அப்புறம் ப்ளைட்ல பவியோட உட்கார்ந்தது தென் இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ரூம்க்கு" என்றவள் தயங்கி நிறுத்த,

'மேலே சொல்' என்பது போல பார்த்திருந்தான்.

"ஐ ஆம் சாரி.‌ எனக்கு உஙக கூட ஐ மீன் எப்படி சொல்றதுன்னு தெரியலை. உங்களை அதியை அக்சப்ட் பண்ணிக்க…" என்று வார்த்தைகளை தேடி தன் முன் திணறி கொண்டிருந்தவளை நெருங்கி அவளது வலது கரத்தை அழுத்தமாக பற்ற,

திக்கி திணறி பேசியவளின் வார்த்தை நின்றே போனது.

சிறிய இடைவெளியில் நெருங்கி அவளருகே குனிந்து அவளது விழிகளை ஊடுருவி,

"ஐ டோன்ட் வான்ட் எனி எக்ஸ்ப்ளனேஷன். ஐ கேன் பெல்ட் யூ. ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட் யுவர் சுட்சுவேஷன். சில நேரம் எல்லாத்துக்கும் வார்த்தையால விளக்கம் சொல்ல தேவையில்லை" என்று ஆழ்ந்து பேசியவன் நிறுத்திவிட்டு பார்க்க,

அவள் இமைக்காது அவனை பார்த்திருந்தாள்.

"அண்ட் மோர் ஓவர் எனக்கு உன்மேல எந்த கோபமும் இல்லை. எனக்கு தெரியும் என்னையும் அதியையும் அக்சப்ட் பண்ணிக்க உனக்கு டைம் வேணும்னு. டேக் யுவர் வோன் டைம். கண்டதையும் யோசிக்காம போய் தூங்கு" என்றவன் கையை ஒரு முறை அழுத்தி விடுவிக்க, அவளுக்குள் ஒன்று நழுவியது.

எதுவும் பதிலளிக்க தோன்றவில்லை என்பதை விட வார்த்தை வரவில்லை என்று தான் சரியாக கூற வேண்டும்.

சரியென தலையசைத்தவள் பிரித்தறியா வகை உணர்வில் கீழிறங்கி செல்ல,

அவள் செல்வதை பார்த்தவனின் இதழ்களி மெல்லிய கீற்றாய் புன்னகை முகிழ்த்தது.

இதயத்தினுள் சொல்ல முடியாத இதம் பரவியது.

காரணம் மனையாள் இத்தனை தூரம் கவனித்திருக்கிறாளா? அதுவுமின்றி தன்னுடைய செயல்கள் அவளை பாதிக்கிறதா? தன்னை உணர்ந்து கொள்ள முயற்சிக்கிறாளா? என்று பலவிதமாக‌‌ எண்ணங்கள் யாவுமே அவனுக்கு தித்தித்தது.

விரைவில் செல்வா தங்களை அவளது கூட்டுக்குள் சேர்த்து கொள்வாள் என்ற‌ சிந்தனை வர மெலிதான மென்னகை இதழ்வரை நீண்டது…


 
Active member
Messages
205
Reaction score
116
Points
43
வல்லபனுக்கு ரெம்ப வலி தான் மனைவியை உரிமைகொண்டாட முடியாத வலி. 😔😔😔😔😔😔
 
Well-known member
Messages
612
Reaction score
348
Points
63
சிக்கிரமா செல்வ அவளோட கூட்டுக்குள் சேர்த்து கொள்வாள் வல்லப செல்வ ஆதி சந்தோசமா இருக்கணும் 💞💞💞💞💞
 
Top