புன்னகை 7:
உணர்தலுக்கும்
உடைதலுக்குமான
சிறு இடைவெளியை
நிரப்பிடும் ஆகப்பெரும்
உணர்வு தான் இந்த
அலாதியான
நேசம்…!
சாரளத்தின் வழியே வந்தோடிய சிலுசிலு காற்றில் கூந்தலிழைகள் கண்ணாடி மீது வந்து விழ, அதனை விரலால் ஒதுக்கி தள்ளியவள் கையில் இருந்த புத்தகத்தில் கவனத்தை திருப்ப அது மாட்டேன் என்றது.
'ப்ச்…' என்று சலித்தவள் நெற்றியில் தட்டிவிட்டு சடுதியில் சுற்றுபுறத்தை ஆராய்ந்தாள் விழிகளால்.
அவள் இறுதியாக இருந்த புத்தக அலமாரியின் பின்னே உள்ள சாரளத்தின் அருகே அமர்ந்திருந்ததால் யாருக்கும் தெரியவில்லை.
அவள் இருப்பதே அவளாக கூறினால் தான் தெரியும். யாரும் வந்து பார்க்க கூட வாய்ப்பில்லை.
எப்போதும் முன்புறமே அமர்ந்துவிடுபவள் இன்று ஏனோ தனிமை வேண்டி புத்தக அலமாரயின் பின்னே நாற்காலியை தூக்கி கொண்டு அமர்ந்துவிட்டாள்.
என்ன முயன்றும் அவளால் புத்தகத்தில் விழியை பதிக்க இயலவில்லை.
காரணம் சாட்சாத் வல்லபன் சக்கரவர்த்தியே தான். பார்க்கும் பொழுதெல்லாம் அவளை வம்பிழுத்தான் பதற வைத்தான் இறுதியில் அவனே கையை கொடுத்து தூக்கியும் விட்டான்.
இதோ இரண்டு வாரங்கள் கடந்திருந்தது. இதற்கு முன்னர் ஒரு மாத காலமாக கண்ணிலே படாத ஒருவன் இரண்டு வாரத்தில் நிறைய முறை கண்ணில் பட்டுவிட்டான்.
இது ஏதேச்சையாக நடக்கிறதா அல்லது வேண்டுமென்றே செய்கிறானா என்று தெரியவில்லை.
ஆனால் அவளை தொல்லை செய்தான் இம்சை செய்தான். என்னவோ செய்தான்.
அவனுக்காக அவள் உருவாக்கி வைத்திருந்த கெட்டவன் என்ற பிம்பத்தை மொத்தமாக உடைத்திருந்தான். அதுமட்டுமின்றி ஏதோ ஒரு வகையில் ஈர்த்திருந்தான்.
கைகளை கட்டி கொண்டு அலட்சியமாகத் தோளை குலுக்கும் பாவனை அவளை பார்த்து ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கும் பாவனை என எல்லாவற்றிலும் அவளை பார்க்க வைத்திருந்தான்.
இதற்கு முன்னர் அவளது அடாவடி குணத்தாலே யாரும் அவளிடம் நேரடியாக காதலை கூறியிருக்கவில்லை.
நண்பர்கள் மூலம் தூது வந்திருக்கிறது அதனை சுலபமாக ஒதுக்கிவிட்டவளால் இவனை கடந்து செல்ல முடியவில்லை.
நேரடியாக முகம் பார்த்து விழியில் ஊடுருவி, "என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?" என்றவனின் நேரடி கேள்வியே அவளுக்கு பிடித்திருந்தது.
இது படிக்கும் வயது இதில் காதல் எல்லாம் வேண்டாம் என்று தனக்குத்தானே கூறி கொண்டாலும் மனது அவனிடம் தான் நின்றது.
அன்று அதுபோல தான் அவனது கேள்வியில் அவள் வகுப்பறையில் விக்கித்து நிற்க,
"இந்த சம்ம இப்படி தான் சால்வ் பண்ணனும்" என்று அவள் தன்னிலை மீள்வதற்கு அவகாசம் கொடுத்தவன் அந்த கணக்கை செய்தும் முடித்திருந்தான்.
அதாவது அவளை காப்பாற்றியிருந்தான்.
'செய்வதையும் செய்துவிட்டு நிற்கும் தோரணையை பார்' என்று இதழை சுழித்துவிட்டு செல்ல,
அதனை பெற்று கொண்டவனது இதழ்கள் புன்னகையில் நெளிந்தது.
'உனக்கு கொஞ்சம் கூட வெக்கமாவே இல்லையா. அவனை பத்தி நினைக்காதேன்னு சொல்லிட்டு இருக்கேன் நீ அவனை பத்தி மட்டுமே நினைச்சிட்டு இருக்க. நீ கொஞ்சம் கூட சரியில்லை செல்வா' என்று தன்னை தானே கடிந்து கொண்டவள் பார்வையை புத்தகத்தில் பதித்தாள்.
வெகுநேரம் புத்தகத்தில் ஆழ்ந்துவிட்டவள் நேரத்தை பார்க்க ஏழு முப்பது என்று காண்பிக்க,
'இன்னுமா லைப்ரரிய க்ளோஸ் பண்ணலை?' என்று எண்ணியவாறு பின்புறத்தில் இருந்து எழுந்து வர, வெளியே ஒருவரையும் காணவில்லை.
சடுதியில் அவளுக்கு உள்ளுக்குள் அச்சம் கிளற வேகநடையில் வாசலை எட்டிவிட்டவள் நூலகரை பார்க்க அவரது இருக்கையும் காலியாக இருந்தது.
"ஐயோ…" என்று நெற்றியை பிடித்து கொண்டவளுக்கு ஒரு கணம் பயத்தில் என்ன செய்வதென்று தெரியவில்லை.
இதயம் படபடவென அடிக்க நொடியில் வியர்வை அரும்பிவிட்டது.
இவள் பின்னால் அமர்ந்திருந்ததால் யாருக்கும் தெரியவில்லை ஆதலால் இவளை உள்ளே வைத்துவிட்டு பூட்டியிருந்தனர்.
அலமாரியின் பின்னே மறைந்து அமர்ந்த தனது மடத்தனத்தை எண்ணி அக்கணம் தன்னையே நொந்து கொண்டவளுக்கு அங்கே இருந்த மின்விளக்கு தான் ஆறுதல்.
அதனை எப்போதும் அணைக்கமாட்டார்கள். அணைத்து இருந்தால் கூட நூலகர் கிளம்பும் நேரத்தை செல்வா கவனித்திருப்பாள்.
விழிகள் ஆழ்ந்த அமைதியை தத்தெடுத்திருந்த நூலகத்தினை சுற்றிவர இதயம் தொண்டைக் குழியில் துடித்தது.
காரணம் அவளுக்கு பேனிக் அட்டாக் எனப்படும் இருட்டில் தனியாக இருந்தால் பயப்படும் நிலை இருந்தது.
நேரம் கடக்க கடக்க வியர்வை அதிகமாக பூக்க மூச்சடைப்பது போல ஆனது.
வேகமாக கதவை அடைந்தவள்,
"காப்பாத்துங்க… ஹெல்ப் மீ…." என்று கதவை தடதடவென தட்ட துவங்கினான்.
இங்கு மைதானத்தின் கல்பெஞ்சில் அமர்ந்து நண்பர்கள் கூடை பந்து விளையாடுவதை வெறித்தபடி இருந்தவனது நினைவுகள் முழுவதையும் ஆக்கிரமித்து இருந்தவள் நம் செல்வ மீனாட்சியே தான்.
நேற்றைய தினம் பணிமனையில் தான் ஏதோ வம்பிழுக்க வழக்கம் போல ஒற்றை விரலால் கண்ணாடியை சரிசெய்துவிட்டு நுனி நாசி சிவக்க தன்னை முறைத்துவிட்டு தோளில் வழிந்த துப்பட்டாவை சரிசெய்தபடி சென்ற செல்வா தான்.
உள்ளுக்குள் ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் புதிதாக தெரிந்தாள். எந்த வகையிலே வசீகரித்தாள் ஈர்த்தாள் ஆகர்ஷித்தாள்.
எத்தனையோ பெண்களை கடந்து வந்துவிட்ட நான் இவளிடம் மட்டும் வேரூன்றி நின்றுவிட்ட காரணம் என்ன என்பது தான் அவனை வெகுநாளை துரத்தி கொண்டிருந்த கேள்வி.
பதில் தான் இப்போது வரை கிடைத்தபாடில்லை.
"மச்சான் வாடா நீயும் ஏன் உட்கார்ந்தே இருக்க?" என்று நண்பன் ஒருவன் அழைக்க,
"நான் வரலை நீங்க விளையாடுங்க" என்று வல்லபன் கூற,
"டேய் அவன் வரமாட்டான். அவன் தங்கச்சியோட கனவுல டூயட் பாடிட்டு இருப்பான்" என்று அஜய் வம்பிழுக்க,
"டேய்…" என்று நாக்கை கடித்து நண்பனை முறைத்தவனது முகம் முழுவதும் புன்னகை அரும்ப, அவர்களை பார்க்காது திரும்பி அமர்ந்தவனது பார்வையில் விழுந்தது நூலகத்தின் கதவு தடதடவென ஆடுவது.
முதலில் காற்றுக்கு ஆடுகிறது என்று நினைத்து ஒதுக்கியவன் பின்னர் வெகுநேரமாக ஆட வேகநடையில் அங்கே நெருங்க,
"யாராவது இருக்கிங்களா? ஹெல்ப் மீ?" என்ற குரல் தூரத்தே கேட்டது.
அதில் யாரோ மாட்டி கொண்டதை உணர்ந்தவன்,
"அஜய் சீக்கிரமா போய் லைப்ரரி கீ வாங்கிட்டு வா. யாரோ உள்ள மாட்டிக்கிட்டாங்க" என்று கத்திவிட்டு விரைய,
"காப்பாத்துங்க…" என்ற பெண் குரல் வெகு நெருக்கத்தில் கேட்டது.
"ஒன்னுமில்லை பயப்படாதிங்க நான் கீ வாங்கிட்டு வர சொல்லியிருக்கேன்" என்று இவனும் இந்த புறம் கத்த,
அவனது குரலை பதட்டத்தில் உணராதவள்,
"சீக்கிரமா ப்ளீஸ் எனக்கு பேனிக் அட்டாக் இருக்கு. மூச்சு விட கஷ்டமா இருக்கு…" என்று திக்கித் திணறிய நொடி தான் அவளது குரலை உணர்ந்து கொண்ட வல்லபனின் இதயம் வேகமாக துடித்தது.
அவனுக்கும் சிறிது பதற்றம் தொற்றி கொள்ள,
"ஏய் ஜான்சி ராணி இங்க பாரு. நான் தான் வல்லபன் பயப்படாத. ஒன்னுமில்லை ரெண்டு நிமிஷத்துல கீ வந்திடும். நீ நல்லா டீப் ப்ரீத் பண்ணு" என்று அவளை தேற்ற கூற,
அவனது குரலை கேட்டதும் சிறிது தெம்பு பிறந்தது தான். உள்ளுக்குள் சிறிதான ஆசுவாசம் பிறக்க,
"சீ… சீக்கிரம் எனக்கு பயமா இருக்கு…" என்றவளின் குரல் முயன்று வெளிவர,
"எதுக்கு பயம். நான் இருக்கும் போது யாரும் உன்னை ஒன்னும் செஞ்சிட முடியாது ஜான்சி ராணி. பயப்படாத" என்று பேச்சு கொடுத்து அவளை திசை திருப்ப,
"உள்ளே யாரோ இருக்க மாதிரி இருக்கு…" என்றவளின் குரல் சிறிது கரகரக்க,
இவனுள் பிரளயம் பிறந்தது. இருந்தும் அதனை வெளிக்காண்பித்து கொள்ளாமல்,
"ஏய் நான் இருக்கும் போது எதுக்குடி பயப்பட்ற" என்று நடுங்கியதை மறைத்து அதட்ட,
அவளுக்கு பெரியதாக மூச்சு திணறியது. பதில் அளிக்க இயலவில்லை.
அவளிடம் பதில் இல்லாததில் பயந்து போனவன்,
"ஏய் செல்வா ஏதாவது பேசுடி" என்று அதட்ட,
எந்த சத்தமும் இல்லை. அவனிதயம் துடிப்பை நிறுத்திய நொடி,
"மச்சான் கீ" என்று நீட்டியிருந்தான் அஜய்.
வல்லபன் சாவியை வாங்கி கதவை திறக்க,
கதவின் அருகிலே மூர்ச்சையாகி கிடந்தவளை கண்டு ஒரு ஸ்தம்பித்தவன் பின்னர் அவளை தூக்கி கொண்டு கல்லூரியின் மருத்துவ பகுதியை நோக்கி ஓடினான்.
உடனடியாக அவளை உள்ளே அழைத்து செல்ல மருத்துவர் வரவழைக்கப்பட்டு சிகிச்சை தொடங்கியது.
பத்து நிமிடங்கள் ஆனது மருத்துவர் வெளியே வர, அதற்குள் வல்லபன் என்னவோ போல ஆகிவிட்டான்.
அஜய் கூட, "மச்சான் பயத்தில தான் மயங்கி இருப்பா பயப்படாத" என்று ஆறுதல் கூற,
இவனுக்கு அது புரிந்தாலும் 'பேனிக் அட்டாக்' இருப்பதாக கூறியதில் தான் அச்சம் இவனுக்கு.
மருத்துவர் வந்து, "அவங்களுக்கு எந்த ப்ராப்ளமும் இல்லை. தனியா மாட்க்கிட்டதால பேனிக் அட்டாக் வந்திடுச்சு. அதனால தான் ப்ரீத்திங் இஸ்ஸூ வந்திருக்கு. நவ் ஷீ இஸ் நார்மல். கொஞ்ச நேரத்தில அவங்களே கான்சியஸ்க்கு வந்திடுவாங்க" என்று கூறியதும் தான் இவனுக்கு போன உயிர் திரும்ப வந்ததே.
வேறு யாருக்கும் என்றால் பதறியிருப்பான் தான் ஆனால் தன்னவளுக்கு என்றதும் மூச்சே ஒரு விநாடி நின்றுவிட்டது.
"தாங்க்ஸ் டாக்டர்" என்று தளர்வாய் கூறியவன் உள்ளே சென்றான்.
கையில் ட்ரிப்ஸ் ஏறி கொண்டிருக்க விழி மூடி மயக்கத்தில் இருந்தாள் செல்வா.
நண்பர்களிடம், "நான் பாத்துக்கிறேன் நீங்க போய்ட்டு வாங்க" என்று அனுப்பி வைத்தவன் பானுவிற்கு மட்டும் தகவல் கூறிவிட்டு வந்து அவளருகே அமர்ந்துவிட்டான்.
விழிகள் அவள் மீதே இருக்க, "பாவி கொஞ்ச நேரத்தில எப்படி பதற வச்சுட்டா. லைப்ரரிக்குள்ள போனா சுத்தி என்ன நடக்குதுனு கூடவா தெரியாது" என்று அவளை செல்லமாக திட்டியவன்,
'என்னை இப்படி புலம்பவிட்டுட்டு அமைதியா படுத்திருக்கா பாரு' என்று புலம்பியபடி இருந்தவன் விழிகள் அவளை வாஞ்சையாக தான் பார்த்திருந்தது.
சில நிமிடங்கள் கடக்க மெதுவாக இமைகளை பிரித்து விழிகளை திறந்து பார்த்தாள் செல்வா.
முதலில் பார்வையில் பட்டது எதிரில் நின்றிருந்த வல்லபன் தான்.
முகம் அத்தனை தெளிவாய் தெரியவில்லை. மயங்குவதற்கு முன்பு நடந்தது நினைவு வர சடுதியில் எழுந்து அமர்ந்துவிட்டாள்.
இமைகள் மூடி திறந்தும் அவன் பிம்பம் தெளிவாகாததில் தான் கண்ணாடி இல்லை என்பது உரைக்க, விழிகள் சுற்றும் முற்றும் அலைய விட,
அமைதியாக அவளது கண்ணாடியை நீட்டினான்.
வாங்கி அணிந்து கொண்டவள் அவனை பார்க்க,
"ஓய் ஜான்சிராணி உனக்கு லைப்ரரிக்குள்ள போய்ட்டா என்ன நடக்குதுன்னே தெரியாதா…?" என்று முறைக்க,
அவள் அமைதியாக தான் இருந்தாள்.
"ப்ச் உனக்கு போய் யார் ஜான்சிராணினு பேர் வச்சிருக்கேன் பாரு. பயந்தாங்கொள்ளினு வச்சிருக்கணும்" என்று மேலும் சீண்ட,
"ஹலோ யாரு பயந்தாகொள்ளி. மைண்ட் யுவர் வோர்ட்ஸ்" என்று மூக்கின் நுனி சிவக்க முறைத்தாள்.
அவன் வம்பிழுத்ததில் அவனுக்கு நன்றி கூற மறந்து போனாலோ அல்லது நன்றி கூற விருப்பமில்லையோ அதை அவள் தான் அறிவாள்.
"நீதான் பயந்தாங்கொள்ளி ரெண்டு நிமிஷத்துல கீ வந்திடும்னு சொல்லியும் பயத்துல மயங்கிட்ட" என்று வம்பிழுக்க,
"அவ்ளோ தான் உங்களுக்கு மரியாதை" என்று செல்வா முறைக்க, அவனது முகத்தில் மந்தகாச புன்னகை.
புன்னகையுடனே அவளை நெருங்கி வர அவளுக்கு ஏதோ ஏடா கூடமாக கூற போகிறான் என்று புரிந்து இதயம் துடித்தது.
சடுதியில் அவளை நெருங்கியவன்,
"உன்னை யாரு மரியாதை கொடுக்க சொன்னது. உன் இஷ்டப்படியே கூப்டுக்கோ ஈவன் ஆஃபடர் மேரேஜ்" என்று நெருக்கத்தில் மூச்சுக்காற்று பட கூறிவிட்டு கண்ணடிக்க,
சடுதியில் அவளுக்கு முகம் சிவந்து விட்டது.
ஒற்றை கையால் அவனை சட்டென்று தள்ளிவிட்டவள் அவனை முறைத்துவிட்டு முகத்தை திருப்பிவிட,
இவனது இதழ்களில் குறும்பு புன்னகை. விழிகள் அவளது சிவந்த வதனத்தின் மீது தான் ரசனையாக படிந்தது.
அவனது செயலில் இதயம் படபடக்க தன்னை நிதானப்படுத்தியவள்,
"இப்போ யாரு உங்களை கல்யாணம் பண்ணிக்க போறேன்னு சொன்னா?" என்று அவளது அக்மார்க் முறைப்பை வெளியிட,
அவன் இதழ்களில் பூத்த விஷமப் புன்னகையுடன் பதிலளிக்க வருகையில்,
"செல்வா என்னாச்சு?" என்று பதட்டத்துடன் உள்ளே நுழைந்தாள் பானு.
"எனக்கு ஒன்னுமில்லை" என்று செல்வா பானுவை சமாதானம் செய்ய,
"ஆமா பயப்பட்ற அளவுக்கு ஏதும் இல்லை" என்று வல்லபனும் கூறிய பிறகு தான் பானு சாதாரணமானாள்.
பின்னர், "சரி கிளம்புறேன் பாத்துக்கம்மா" என்று பானுவிடம் கூறிவிட்டு இவள் புறம் திரும்பியவன் குறும்பு சிரிப்புடன் கண்சிமிட்டி,
"நீ தான் என்னை கல்யாணம் பண்ணிக்க போற" என்று வாயசைத்துவிட்டு செல்ல,
அவளுக்கு தெளிவாக விளங்க அவனை முறையோ முறை என்று முறைத்தாள்.
வெளியே வந்த வல்லபனுக்கு முகம் முழுவதும் புன்னகை தான்.
அவள் கண்விழித்ததும் நடந்ததை நினைத்து பயப்படவோ வருந்தவோ கூடாது என்று தான் அவளை வம்பிழுத்து பேசி சாதாரணமாக்கியிருந்தான்.
அதை அவளும் உணர்ந்திருந்தாள்.
"க்யூட் ஜான்சிராணி" என்று சன்னமாய் முணுமுணுத்தவனது இதழோரம் சிரிப்பில் மின்னியது.
எதுவரை போகலாம் என்று நீ சொல்லவேண்டும் என்றுதான்
விடாமல் கேட்கிறேன்
தேன் முத்தங்கள் மட்டுமே
போதும் என்று சொல்வதால்
தொடாமல் போகிறேன்…
*************************