• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

புன்னகை 6

Administrator
Staff member
Messages
606
Reaction score
836
Points
93
புன்னகை 6:

நேசத்தை தாண்டி
இவ்வுலகில் நிறைய
உள்ளதாமே நேசத்தால்
வேயப்பட்ட பூவுலகில்
வேறென்ன பெரிதாக
கண்டுவிட முடியும்…?
ஒரு மாமாங்கு வேண்டுமே
இந்த அற்புத நேசத்தை
அற்பமாய் கடந்து செல்ல….



"செல்வா உன்னைத்தான் கூப்பிட்றேன் கேக்கலையா?" என்ற பானுவின் உலுக்கலில் சுயநினைவை அடைந்தவள்,

"ஆங்…" என்று விழித்தாள்.

"என்ன ஆங்ன்ற நான் கேட்ட கேள்விக்கு பதில் எங்க?" என்று இடுப்பில் கைவைத்து முறைக்க,

"என்ன‌ கேட்ட?" என்றவள் மலங்க மலங்க விழித்தாள்.

"நேத்துல இருந்து நீ சரியே இல்லை?" என்று சந்தேகமாக பார்க்க,

அதில் உள்ளுக்குள் பதறிய செல்வா,

"அதெல்லாம் ஒன்னுமில்லையே" என்று அவசரமாக மறுத்தவள்,

"எந்த கொஸ்டீன்? இதுவா? இது ரொம்ப ஈஸி தான்" என்று அவளுக்கு சொல்லி கொடுப்பது போல பேச்சை மாற்றிவிட்டாள்.

பானுவும் தான் கூற வந்ததை மறந்து அந்தே கேள்வியில் மூழ்கிவிட்டாள்.

பானுவிற்கு சொல்லி கொடுத்து அவள் நகர்ந்ததும் தான் செல்வாவிற்கு மூச்சே வந்தது.

வல்லபன் காதலை கூறிய நொடியிலிருந்து செல்வா இப்படிதான் சுற்றி கொண்டிருக்கிறாள்.

என்னவோ மந்திரித்துவிட்டதை போல எங்கு சென்றாலும் அவன் கேட்ட, "என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?" என்று கேள்வி தான் சுற்றி வந்தது.

'ச்சு செல்வா நீ கொஞ்சம் கூட சரியில்லை. கொஞ்சம் விட்ருந்தா பானுவே கண்டுபிடிச்சிருப்பா. அவன் லவ்வ சொன்னான் நீ பிடிக்கலைன்னு சொல்லிட்டு வந்துட்ட அவ்ளோதான்' என்று மனசாட்சி இயம்ப,

'அவ்ளோதானா?' என்று மற்றொரு மனம் வினா தொடுத்தது.

அதில் சிறிதான தடுமாற்றம் இருந்தும், 'ஆமாம் அவ்ளோதான். இந்த லவ் எல்லாம் உனக்கு செட் ஆகாது. அதுவும் வல்லபன் வாய்ப்பே இல்லை' என்று உறுதியாக நினைத்து கொண்டவள் நிமிர்ந்து அமர,

அவளது நிமிர்வை உடைப்பதற்காகவே வந்து கொண்டிருந்தான் வல்லபன், வல்லபன் சக்கரவர்த்தி.

வல்லபன் அந்த கல்லூரியில் முதுகலை பொறியியல் படித்து கொண்டிருந்தான்.

பொதுவாக முதுகலை மாணவர்களை இளநிலை மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க செல்வது வழக்கம்.

வல்லபன் வழக்கமாக மூன்றாம் மற்றும் நான்காம் வருட மாணவர்களுக்கே வகுப்பு எடுப்பான். அஜய் தான் எப்போதும் செல்வாவின் வகுப்பிற்கு எடுப்பான்.

இப்போது வல்லபன்‌ செல்வாவை பார்ப்பதற்காகவே இந்த வகுப்பை கேட்டு எடுக்க வந்திருந்தான்.

கருஞ்சாம்பல் நிறத்தில் லினன் சர்ட்டும் க்ரீம் நிறத்தில் பேண்ட்டும் அணிந்திருந்தவன் கைகளில் ஒரு புத்தகத்துடன் உள்ளே நுழைய, எல்லோரும் மரியாதைக்காக எழுந்து நிற்க,

'இவனா?' என்று அவனை எதிர்ப்பார்க்காத செல்வாவும் அதிர்ந்து நின்றுவிட்டாள்.

வல்லபன் தலையாட்டியதும் எல்லோரும் அமர செல்வா மட்டும் அதிர்ச்சி மாறாது அங்கேயே நின்றுவிட்டாள்.

அவள் நின்றிருந்த தோரணையை கண்டு வல்லபனுக்கு சிரிப்பு வந்துவிட்டது. அதை இதழ்கடையில் மறைத்து கொள்ள,

எல்லோரது பார்வையும் அவள் மீது தான். அதுவும் முதல் வரிசையில் அமர்ந்திருந்தாள்.

பானு, "செல்வா என்னாச்சு உட்காரு" என்று கைப்பிடித்து இழுக்க,

வல்லபன் சிரிப்பை மறைத்தபடி என்னவென புருவத்தை உச்சி மேட்டிற்கு ஏற்றி இறக்க,

அதில் சுயம் பெற்றவள் சடுதியில் முகம் சிவந்து அமர்ந்துவிட்டாள்.

பானு வேறு அருகில், "டி உனக்கு என்னதான் ஆச்சு?" என்று முறைப்புடன் கிசுகிசுக்க,

"ஒன்னுமில்லை" என்றவள் பாவமாய் விழித்தாள்.

இப்படி இத்தனை பேர் முன்னிலையில் என்ன செய்துவிட்டோம் என்று முகம் வேறு கூச்சத்தில் சிவந்திருந்தது.

"சைலண்ட்" என்று கனீர் குரலில் வல்லபன் உரைக்க,

பானு அமைதியாகிவிட்டாள். செல்வாவும் சில விநாடிகளில் தன்னை மீட்டு அவனிடத்தில் கவனத்தை வைத்தாள்.

அனைவருக்கும் கேட்கும் வகையில் தெளிவாக அதே நேரத்தில் சுலபமாகவும் கரும்பலகையில் எழுதி தான் கூற வந்ததை விளக்க,

செல்வா தான் அதனை வியப்புடன் விழிவிரித்து பார்த்தாள்.

எந்நேரமும் மைதானத்திலே விளையாடி கொண்டிருக்கிறானே இவன் எப்படி எடுப்பானோ…? என்ற எண்ணம் நிச்சயமாக இருந்தது.

அதுவும் அவன் சற்று வசதிபடைத்த குடும்பத்தை சேர்ந்தவன் வேறு அவளது கோணத்தில் பணக்கார வீட்டு பிள்ளைகள் பெரும்பாலும் படிப்பில் அத்தனை கெட்டியாக இருக்க மாட்டார்கள் என்பது தான்

ஆனால் ஒவ்வொரு விநாடியும் அவளது எண்ணத்தை பொய்யாக்கி அத்தனை அழகாக சொல்லி கொடுத்தான்.

அதுவும் அவளுக்கு அவன் கற்று கொடுக்கும் பகுதி தான் சுத்தமாக புரியவில்லை.

நிச்சயமாக அவள் அவனை கண்டு வியந்து தான் போனாள்.

எல்லோரையும் பார்வை சுற்றி வந்தாலும் அவளிடம் ஒரு நொடி நின்று தான் வந்தது. அவளது முக பாவங்களில் இருந்தே அவளது எண்ணத்தை அறிந்தவனுக்கும் உள்ளுக்குள் புன்னகை தான்.

செல்வாவின் விழிகள் சொல்லி கொடுப்பதோடு சேர்த்து கொடுப்பவனையும் சற்று ஆராய்ந்தது.

ஒரு கையை பாக்கெட்டினுள் விட்டுக்கொண்டு மறுகையால் கரும்பலகையை அவன் தட்டி பேசும் பாவனை ஏதேனும் கூறிவந்து பின்னர் நெற்றியை ஒரு விரலால் தேய்த்துவிட்டு விளக்குவது என்று துளிதுளியாக அவதானித்தது.

'ப்ச் செல்வா என்ன பண்ணிக்கிட்டு இருக்க?' என்று மூளை அதட்ட,

அதனை அசட்டை செய்தவள் பார்வை அவன் மீது தான்.

அரைமணி நேரத்தில் எல்லாவற்றையும் முடித்திருந்தவன்,

"எனி டவுட்ஸ்?" என்று கூட்டத்தை பார்த்து வினவ,

குண்டூசி விழும் அளவிற்கு அமைதி. வழக்கமாக செல்வா தான் சந்தேகங்களை கேட்ப்பாள்.

ஆனால் இப்போது இவனிடமா? என்று சிந்தை வந்தாலும் கேட்பதற்கு பெரியதான சந்தேகங்கள் அவளுக்கு வரவில்லை.

"யாருக்கும் எந்த டவுட்ஸும் இல்லையா?" என்று புருவம் உயர்த்தியவன்,

"ஓகே அப்போ நான் கொஸ்டீன் கேக்குறேன் நீங்க ஆன்ஸர் பண்ணுங்க" என்றுவிட்டு ஆட்காட்டி விரலால் கூட்டத்தை அளக்க,

இவளுக்கு இங்கே இதயம் தாறுமாறாக துடித்தது.


விரல் ஆண்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் இருந்து சுற்றி பெண்கள் பகுதிக்கு வந்து அவள் புறம் திரும்ப இதயம் தொண்டை குழியில் துடித்தது.

ஒரு நொடி அவளிடம் தங்கிவிட்ட விரல்கள் பின்னர் அவளுக்கு பின்னால் இருந்த பெண்ணிடம் நிற்க அவள் எழுந்ததும் தான் செல்வாவிற்கு மூச்சு வந்தது.

அப்பெண்ணிடம் வினா எழுப்பி பதில் அளித்ததும் மீண்டும் விரல்களை சுற்றவிட செல்வாவிற்குள் பதட்டம்.

இதே போல நான்கு ஐந்து முறை செய்யவும், 'அட போயா. இந்த பூச்சாண்டி வேலை என்கிட்ட வேணாம்' என்று அசால்ட்டாக அவள் அமர்ந்திருந்த நேரம்,

அவளை நோக்கி கையை நீட்டியிருந்தான்.

வழக்கம் போல பயம் காண்பிப்பான் என்று இருந்தவள் இதனை எதிர்பாராது விழிக்க,

"யெல்லோ சுடிதார் உன்னை தான்" என்று அவன் விளித்த கணம் அவள் எழுந்து நின்றிருந்தாள்.

உள்ளுக்குள் இதயம் குதிரை ஓட்டத்தில் பங்கெடுத்திருந்தது.

இருந்தும் முகத்தில் அச்சத்தை காண்பிக்காது நின்றிருந்தாள்.

இவ்வளவு நேரம் வாயில் கேள்வி கேட்டவன் திரும்பி கரும்பலகையில் ஒரு கணக்கை எழுதிவிட்டு,

"சால்வ் திஸ்" என்று அவளை பார்க்க,

பெரிதாய் உதறல் எடுத்தது உள்ளே.

'பீ ஸ்ட்ராங் செல்வா' என்று தன்னை தானே சமாதானம் செய்தவள்‌ எழுந்து அவனை நோக்கி சென்றாள்.

அவன் கைகள் இரண்டையும் பாக்கெட்டில் விட்டு சுவற்றில் சாய்ந்து தோரணையாக நின்று அவளை பார்த்தான்.

அவள் அவனை பார்த்தபடியே வர அவள் அருகில் நெருங்கிய நொடி சடுதியில் ஒற்றை கண்ணை அடித்திருந்தான்.

அவள் அவனை மறைந்திருந்ததால் யாருக்கும் தெரியவில்லை இவள் தான் அவன் செய்கையில் சட்டென்று கால்கள் தடுமாறிவிட,

"பார்த்து…" என்று பல்வேறு குரல்கள் பின்னிருந்து வந்தது.

அருகில் இருந்த மேஜையை பிடித்து ஊன்றி நின்று கொண்டவள் அவனை ஏகமாய் முறைக்க,

இவனது இதழோரம் புன்னகையில் துடித்தது.

அவன் சிரிப்பில் மேலும் மேலும் முறைத்து கொண்டே வந்தவள் சாக்பீஸை எடுத்து கரும்பலகையில் எழுத‌ துவங்க,

அவளருகே நின்றிருந்தவன் ஏதோ கூறுவது போல அருகே குனிந்து,

"ஓய் ஜான்சிராணி என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?" என்று வினவிவிட்டு ஏதும் அறியாதது போல நின்றுவிட,


இவள் தான் இங்கு, "ஹான்…" என்று அதிர்ந்து நின்றுவிட்டாள்….

அழகே நான்
உனக்கென்னவே
முதல் பிறந்தேன்
இளங்கொடியே நீ
எனக்கென்னவே
கரம் விரித்தாய்
என் வரமே…!



*************************



ஒரு கணம் இதயம் வேலை செய்ய மறுத்துவிட்டது.

நிச்சயமாக இப்படி ஒரு பதிலை அவள் எதிர்ப்பார்த்திருக்கவில்லை என்று அவளது பாவனைகளே கூறியது.

'ஆறு மாத காலமாக இப்படியே அமர்ந்திருக்கிறாரா?' என்று உள்ளுக்குள் சிறிதான‌ அதிர்வு படர்ந்தது.

வல்லபனும் அமைதியாக அவளது முகத்தை தான் அவதானித்திருந்தான்.

அவளிடம் அவன் என்ன எதிர்ப்பார்த்தான் என்று தெரியவில்லை ஆனால் மனது ஏதோ அவளிடமிருந்து பெற விரும்பியது.

பேச முயன்றும் அவளுக்கு வார்த்தை வரவில்லை.
என்ன பதில் அளிப்பதென்றும் தெரியவில்லை.

அவளது நிலையை உணர்ந்தவன் ஒரு நொடி வெறித்துவிட்டு,

"தூங்கு…" என்று முடித்துவிட,

அவளும் ஏதும் கூறாது தலையசைத்து படுத்துவிட்டாள்.

ஆனால் உறக்கம் தான் எட்டாக்கனியாக போனது.

அவன் கூறிய, 'நான் ஆறு மாசமா இந்த இடத்துல தான் அசையாம உட்கார்ந்து இருந்தேன். இப்போ தான் உனக்கு கேட்க மனசு வந்துச்சா என்ற வார்த்தைகளே மனதிற்குள் ரீங்காரமிட்டது.

'இப்படியேவா ஆறு மாதங்களாக அமர்ந்திருந்தான். ஏன்…?' என்ற வினா எழுந்த நொடி,

'எனக்காவா?' என்று கேள்வியும் எழுந்தது.

அக்கணம் சொல்லமுடியாத ஒரு மெல்லிய நடுக்கம் இதயத்தின் அறையெங்கும் பரவியது.

இங்கு செல்வா மீது பார்வையை பதித்திருந்தவனது நினைவு முழுவதும் அவளுடனான சந்திப்பு தொடங்கி இன்று வரை நடந்தவைகள்.

முதன் முதலாக அவனை முறையோ முறை என்று முறைத்த செல்வா இரண்டாவது முறை சூரியன் மறையும் நேரம் தேவையாக வந்து தன்னை வைதுவிட்டு போன செல்வா மூன்றாவது முறையாக அதிகாலை குளிரில் தலையில் நீர் சொட்ட சொட்ட பனியில் நனைந்த பன்னீர் ரோஜாவாக வந்து தன்னிடம் மன்னிப்பை கேட்க தயங்கி தவித்து நின்ற செல்வா என்று இறுதியில் காலையில் தன்னை அந்நிய பார்வை செல்வாவின் முகம் நினைவிலாட மனது கனத்து போனது.

விழிகளை மூடியடி சாய்ந்தவன் நேரங்கள் கடந்து தான் சயனத்தை தழுவினான்.

ஆனால் இங்கு அவனது வார்த்தைகளை வாங்கி கொண்டவள் தான் அன்றைய உறங்கா இரவிற்கு சொந்தக்காரியாகி போனாள்.

அவன் தூங்கிவிட்டதை உறுதி செய்தவள் திரும்பி அவனை நோக்கியவாறு படுத்து கொண்டாள்.

விழிகள் அவனிடத்தில் ஆழமாக புதைந்து போனது.

ஒரு காலை முன்னேயும் மறு காலை பின்னேயும் வைத்து ஒரு கையை மடக்கி தலையை தாங்கியபடி அமர்ந்தாவாக்கில் உறங்கியவனை தான் மனதின் நினைவின் மூளையெங்கும் தேடினாள்.

இவன் யார் எப்படி என்னுடைய வாழ்விற்குள் வந்தான் என்று தான் சிந்தை முழுவதும் கேள்விகள்.

பதில் தான் கிடைத்தபாடில்லை.‌ ஆனால் ஒன்று மட்டும் உறுதி இவன் நல்லவன் என்பது தான். இவனை தான் நம்பலாம். காரணம் இவனை நம்பி‌ எனது குடும்பமே என்னைவிட்டு சென்றிருக்கிறது என்ற ஒரு காரணமே போதுமானதாக இருந்தது.

பல்வேறு யோசனையுடன் இருந்தவள் எப்போது தூங்கினாள் என்று தெரியவில்லை.

"க்கா எழுந்திடுக்கா டைம் ஆச்சு" என்று பவி முகம் முழுவதும் புன்னகையுடன் எழுப்பியதும் தான் உறக்கம் கலைய புரண்டு படுக்க,

எதிரில் மொத்த குடும்பமும் அமர்ந்திருந்தது.

அதனை கண்டதும் சடுதியில் பதறி எழுந்துவிட்டாள் அத்தனை பேரும் அமர்ந்திருந்தனர்.

ஏன் அதி கூட எழுந்து வல்லபனுடன் அமர்ந்திருந்தாள்.

எல்லோரும் குளித்து முடித்து தயாராகியிருந்தனர்.

பவி, "என்னக்கா பாக்குற உனக்கு இன்னைக்கு டிஸ்சார்ஜ் சீக்கிரமா எழுந்து குளிச்சிட்டு வா" என்று அவளுக்கு உடை கொடுத்து குளித்து வர கூற,

கையில் புடவையை வாங்கியவள் தடுமாறி நிற்க,

"என்னக்கா?" என்று வினவினாள் பவி.

"எனக்கு சேலை கட்டத் தெரியாதுடி" என்க,

'ஷ் இதை எப்படி மறந்தேன் இவளுக்கு சேலை கட்டுவதும் மறந்திருக்கும் தானே…' என்று மனதிற்குள் நினைத்தவள்,

"சாரிக்கா மறந்துட்டேன். இப்போ என்ன பண்றது? நான் வேணா அம்மாவ கட்டிவிடட சொல்லட்டா" என்க,

வேதவள்ளி, "என்ன ரெண்டு பேரும் பேசிட்டு இருக்கிங்க?" என்று வினவினார்.

பவி, "ம்மா அக்கா சேலை கட்ட தெரியாதுனு சொல்றா. நீ கட்டிவிட்றியா?" என்க,

வேதவள்ளி பதில் அளிக்கும் முன், "நான் அவளுக்கு வேற ட்ரெஸ் வாங்கிட்டு வர சொல்றேன்" என்று வல்லபன் பதிலளித்திருந்தான்.

அதுவும் சரிதான் என்று வேதவள்ளி கூற செல்வாவும் தலையசைத்தாள்.

வல்வபன் அலைபேசியை எடுத்து பேச அடுத்த பத்து நிமிடத்தில் செல்வாவின் அறைக்கே அறை வந்துவிட்டது.

வல்லபனின் வாகன ஓட்டி வந்து உடையை கொடுத்து செல்ல,

அப்போது தான் செல்வாவிற்கு அவனது செல்வ நிலை புரிந்தது.

கார் வைத்து ட்ரைவரும் வைத்திருக்கிறார் என்றால் நிச்சயமாக நல்ல பணக்காரராக தான் இருக்க வேண்டும் என்று நினைத்தவள் உடையை வாங்கிவிட்டு குளித்து வர செல்ல,

அந்த உடை அவளுக்கு அத்தனை கட்சிதமாக இருந்தது.

அவளுக்கே அதில் வியப்பு தான். செல்வா வந்ததும் பவி,

"ட்ரெஸ் கரெக்டா இருக்கு" என்று கூறியிருந்தாள்.

"ஆமாடி" என்றவளின் பார்வை ஒரு கணம் வல்லபனின் புறம் திரும்ப, அவனும் அந்நொடி அவள் மீது தான் பார்வையை பதித்திருந்தான்.

சடுதியில் பார்வையை மாற்றி கொண்டவள் தங்கையுடன் அமர்ந்துவிட்டாள்.

செல்வாவை மருத்துவமனையிலிருந்து அழைத்து செல்வதற்கான வேலை நடந்து கொண்டிருக்கிறது.

எல்லோர் முகத்திலும் சொல்ல முடியாத சொல்லால் வடிக்க முடியாத மகிழ்ச்சி குடியிருந்தது.

தங்கையுடன் அமர்ந்தவள் அக்கணம் தான் தனது அறையை சுற்றி பார்த்தாள்.‌ சகல வசதியுடன் இருந்தது.

உறுதியாக இது மிகவும் பெரிய மருத்த்துவமனையாக தான் இருக்கும் என்று அவளுக்கு புரிந்தது.

ஏதேதோ நினைத்து கொண்டிருந்தவளுக்கு திடீரென இரவு வல்லபன் கூறிய வார்த்தை நினைவு வர தங்கையை அழைத்திருந்தாள்.

"பவி" என்ற தமக்கையின் அழைப்பில் அதியுடன் பேசி கொண்டிருந்தவள் திரும்பி,

"சொல்லுக்கா" என்க,

அவள் முகத்தை தயக்கத்துடன் பார்த்தவள்,

"ஒன்னுமில்லை" என்று தலையசைத்தாள்.

அவளது தயக்கத்தை உணர்ந்தவள்,

"என்கிட்ட என்னக்கா தயக்கம். என்ன கேக்க வந்த?" என்று அருகில் வந்து வினவ,

செல்வா பார்வையை தூரத்தில் நின்று அலைபேசியை பேசி கொண்டிருந்த வல்லபனின் மீது வீசிவிட்டு பின்னர்,

"அது அவர் இங்க ஆறுமாசமா எங்கேயும் நகராம என் பக்கதிலே தான் இருந்தாரா?" என்று தயங்கினாள்.

"ஆமாக்கா. நாங்க கூட அப்பப்போ வீட்டுக்கு போயிட்டு வந்தோம். ஆனால் மாமா அங்க இங்கேன்னு எங்கேயும் அசையலை. அப்படியே உன் பெட்கிட்ட இருக்க சோபாலயே உட்கார்ந்து உன்னை பார்த்திட்டு மட்டுமே இருந்தாரு"என்றவள்,

செல்வாவின் கைப்பிடித்து,

"அக்கா இங்க பாரு நீ எதையும் நினைச்சு குழப்பிக்காத. உனக்கு எல்லாமே ஞாபகம் வர்றப்போ வரட்டும். மாமாவ நம்புக்கா. ஒன்னுமட்டும் நிஜம் இந்த ஜென்மத்தில இவரை தவிர யாராலயும் உன்னை இவ்ளோ காதலிக்க முடியாது. உன்னோட நிஜம் இவர் தான்" என்று நகர்ந்துவிட,


செல்வாவின் பார்வை வல்லபனை வெறிக்க துவங்கியது…



யாரோ நீ

யாரோ நான் என்றே
நாம் இருந்திடுவோமா
நீயே நான் நானே நீ
ஒன்றாகி இணைந்திடுவோமா…?
 
Active member
Messages
205
Reaction score
116
Points
43
செல்வாவுக்கு எப்போ பழசு எல்லாம் ஞபாகம் வருமோ 🤔🤔🤔🤔🤔
 
Well-known member
Messages
1,081
Reaction score
770
Points
113
Superrrrrrrrr superrrrrrrrr
Vallaban Selva va tease panrathellam semmmmmmmaaaaa azhgha irukku
 
Well-known member
Messages
612
Reaction score
348
Points
63
Selva ku love vanthuruju poola 😁🥰🥰vallapan ne nalla pandra jansirani ya kindal pannama Iruka mudiyala hero 🤩🤩🥰ku vallapan pavom pa sikirama selva ku sari agadum 😊😊
 
Top