• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

புன்னகை 5

Administrator
Staff member
Messages
606
Reaction score
836
Points
93
காலை சுற்றும் பூனையாய் உன்னையே சுற்றி வரும் தூய ஆன்மாவின் நேசத்தை நிராகரிக்கும்
சூழ்நிலை எல்லாம்
ஆகப்பெரும் சாபம்...

இருள்கவிழ துவங்கிய நேரம் மைதானத்திலிருந்து விடுதி‌ அறையை அடைந்த வல்லபன் கதவை திறக்க கதவின் அருகிலேயே கால்களை பப்ரப்பாவென விரித்து உறங்கி கொண்டிருந்தான் அஜய்.

அவனது போஸில் சிரிப்பு வந்துவிட,

"கதவு மட்டும் திறந்திருந்தா காரிடோர்ல போய் படுத்திருப்பான் போல" என்று முணுமுணுத்துவிட்டு,

"அஜய் எழுந்திரு. போய் பெட்ல படு" என்று எழுப்பிவிட உறக்கம் கலையாமலே கண்களை திறவாமல் எழுந்து மெத்தையில் படுத்துவிட்டான்.

அஜய் எப்போதும் இப்படித்தான் பத்து நிமிட இடைவெளி கிடைத்தால் கூட படுத்து உறங்கிவிடுவான்.

தூங்கிவிட்டால் கொலை நடந்தால்கூட தெரியாது. அவ்வளவு பெரிய கும்பகர்ணன்.

அவனை ஒழுங்குபடுத்தியவன் சென்று குளிர்சாதன பெட்டியில் இருந்து நீரை எடுத்து தாகம் தீர மடமடவென குடித்தவன் வந்து நீள்விருக்கையில் சாய்ந்து அமர அவனது அலைபேசியின் கானா இசைத்தது.

அதனை எடுத்து பார்க்க அவனது தந்தை அபிஷேக் சக்கரவர்த்தி தான் காணொளி அழைப்பை தொடுத்திருந்தார்.

தந்தையின் அழைப்பை கண்டதும் முகத்தில் புன்னகை எழுந்தது. இந்த அழைப்பை காலையே எதிர்ப்பார்த்திருந்தான்.

வல்லபன் புன்னகையுடன் அழைப்பை ஏற்க மறுமுனையில் அமர்ந்திருந்த அபிஷேக் அவனை ஏகமாக முறைத்தார்.

அவரது முறைப்பில் இவனது புன்னகை முகம் முழுவதும் பரவ அபிஷேக் முறையோ முறையென கோபத்தை காண்பித்தார்.

இது இப்போதைக்கு முடியாது என்று நினைத்தவன், "டாடி இப்படியே லைன்ல இருங்க. நான் போய் ப்ரெஷ் ஆகி வந்துட்றேன்" என்றவன் அவர் கூறுவதை காதில் வாங்காமல் அலைபேசியை கதிரையில் சாய்த்து வைத்துவிட்டு உடைமாற்றி வர குளியலறைக்குள் நுழைந்துவிட்டான்.

இங்கு அபிதான் உறங்கும் போதே அங்குமிங்கும் திரும்பி யோகா செய்தபடி இருந்த அஜயை வெறித்து கொண்டிருந்தார்.

முழுதாக பத்து நிமிடங்கள் அவர் பொறுமையை ஏகமாய் சோதித்தவன் வந்து கால்களை நீட்டி வாகாய் அமர்ந்து கொண்டன்,

"சொல்லுங்க டாடி" என்க,

அவர் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார்.

"டேய் உன் மனசுல என்னடா நினைச்சிட்டு இருக்க. நான் அவன்கிட்ட கால்ல விழுகாத குறையா கெஞ்சி உனக்கு அப்பாலஜி கொடுக்க சொன்னா நீ திமிரா சஸ்பென்ஷன பெரிய இவன் மாதிரி வாங்கிவிட்டு வந்து நிக்கிற" என்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க முறைக்க,

"ஷ்…" என்றபடி காதில் பெருவிரலை விட்டு குடைந்தவன் நிதானமாக நிமிர்ந்து,

"பொறுமை டாடி பொறுமை. வயசான காலத்துல இப்படி கத்துனா பிபி எகிறிடும்" என்று அவரது ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தினான்.

"டேய்…" என்று பற்களை நறநறவென கடித்தவர்,

"எதுக்கு வாலண்டியரா போய் சஸ்பென்ஷனை வாங்கிட்டு வந்த?" என்று இழுத்து பிடித்த பொறுமையுடன் கேட்க,

"ஹ்ம்ம் உங்க மருமக ஆசைப்பட்டா அதான் வாங்குனேன்" என்று மொழிந்தார்.

அவனது பதிலில் அதிர்ந்து விழித்தவர்,

"வாட்?" என்க,

"புரியலையா? உங்க மருமகள் ஆசைப்பட்டா அதான் வாங்கிகிட்டேன்" என்று கூற,

"என்னடா சொல்ற? யாரு அந்த பொண்ணு?" என்றவரது குரலில் முழுதாக ஆர்வம் மட்டுமே.

முன்பிருந்த கோபம் எல்லாம் காணாமல் போய்விட்டிருந்தது.

அதில் சிரித்தவன், "இங்க தான் நம்ம காலேஜ் தான்" என்றவன் நடந்ததை கூறிமுடிக்க,

"அட்ரா சக்கை உன்னையும் ஒரு பொண்ணு எதிர்த்து பேசுறாளா? நீ இப்படி ஒரு பொண்ணுக்கிட்ட கவுந்திடுவேன்னு நான் எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்லை. பொண்ணு எந்ல ஊர் அம்மா அப்பா என்ன பண்றாங்க?" என்க,

"டாடி கொஞ்சம் பொறுமை. உங்க பையனுக்கு தான் அந்த பொண்ணை பிடிச்சிருக்கு அந்த பொண்ணுக்கு இல்லை" என்று இயம்பினான்.

"ஏன் என் பையனுக்கு என்ன? தி க்ரேட் சக்கரவர்த்தி குருப் ஆப் கம்பெனிஸோட வாரிசு. அவனை யாரும் பிடிக்காதுனு சொல்லுவாங்களா" என்று பெருமையாக கூற,

"சொல்லிட்டாளே டாடி சொல்லிட்டாளே உங்க மருமகள்" என்று சிரிப்புடன் மொழிய,

"ரியல்லி?" என்று திகைப்பாய் கேட்டார்.

"ப்ச் அது என் ப்ராப்ளம் விடுங்க நான் பாத்துக்கிறேன்" என்று வேறு பேச துவங்க,

பேசி முடித்து அழைப்பை துண்டிக்கும் தருவாயில்,

"ஆல் தி பெஸ்டா மகனே" என்று கண்ணடிக்க,

சிரிப்புடன் அழைப்பை துண்டித்தவன் அப்படியே நீள்விருக்கையில் சாய்ந்துவிட்டான்.

தந்தையை நினைத்து சிரிப்பு வந்தது. அபி மற்ற தந்தைகளை போல அல்லாமல் வல்லபனுக்கு ஒரு நல்ல தோழன்.

அதன் காரணமாகவே அவன் இவ்வாறு நடந்து கொள்வது எது வந்தாலும் பார்த்து கொள்ளலாம் தந்தை பார்த்து கொள்வார் என்று.

மூடிய விழிகளுக்குள் விழிகளை சாசர் போல விரித்து நின்ற செல்வ மீனாட்சி வந்து நின்றாள்.

மனது அவளுடன் காலையில் பேசியதை நினைத்து பார்த்தது.

'கல்யாணம் பண்ணிக்கிறியா?' என்றவனின் கூற்றில் அதிர்ந்து நின்றதெல்லாம் ஒரு கண நேரம் தான்.

பின்னர் தன்னை சமாளித்து கண்ணாடியை ஏற்றிவிட்டு அவனை உருத்துவிழித்தவள்,

"இதுக்காக எல்லாம் உங்களை கல்யாணம் பண்ணிக்க முடியாது. அதுக்கு வேற ஆளை பாருங்க" என்று தெள்ளத் தெளிவாக கூறியவள் சட்டென்று திரும்பி நடக்க துவங்க,

அவளது நிமிர்வில் அவனது புருவம் உச்சி மேட்டிற்கு வியப்பில் உயர்ந்தது.

அவளை அறிந்திருந்தவன் அவளிடம் இப்படியான பதிலை தான் எதிர்பார்த்திருந்தான்.

இது போல ஒரு பதிலை கூறாவிடில் அவள் வல்லபனின் ஜான்சி ராணி இல்லையே.

"ஜான்சி ராணி" என்று முணுமுணுத்தவனின் இதழ்களில் புன்னகை ஜனிக்க,

"வேற ஆளெல்லாம் பார்க்க முடியாது. நான் பிக்ஸ் ஆகிட்டேன் இந்த ஜான்சி ராணி எனக்குத்தான்னு" என்று சற்று அழுத்தமாக கூறினான்.

சடுதியில் திரும்பியவள், "ஜான்சி ராணி?" என்று திகைக்க,

"எஸ் ஜான்சிராணி தான். அன்னைக்கு அத்தனை பேர் முன்னாடி என்னை நோக்கி கையை நீட்டி படபடனு பட்டாசு மாதிரி பொறிஞ்சாளே அந்த ஜான்சிராணி தான்" என்று குறும்பாய் புன்னகைக்க,

சடுதியில் மூக்கின் நுனி சிவந்துவிட, "டோன்ட் கால் மீ லைக் தட்" என்றவள் திரும்பி விறுவிறுவென நடக்க,


போகும் அவளையே பார்த்திருந்தவனது முகமெங்கும் மந்தகாச புன்னகை.

இறகாலப் படக நீந்தி காத்தில் நானும் மெதந்தேனே…

கடிவாளக் குதிரையாக எனைதான் நீயும் இழுத்தாயே
மாறாதே மனமே மானே மடிமேலே விழுந்தேன் நானே…
காதல் கனவே தள்ளிப் போகாதே போகாதே ஆச மறச்சு நீ
ஒளியாதே ஓடாதே…




******************



தன்னுடைய பெயரை தெரிந்து கொள்ள ஆர்வமாக முகம் நோக்குபவளை கண்டு மனம் சில்லு சில்லாக சிதறியது.

அதுவும் தான் நுழைந்ததும் தன்னவள் வீசிய அந்நியப் பார்வை உள்ளுக்குள் மெல்லிய இழையாய் இறுக்கியது.

முதன் முதலாக துறைத் தலைவர் அறைக்குள், "இவர் இவர் தான் ஆகாஷை அடிச்சது" என்று அவ்விடமே அதிரும் வண்ணம் அடிதடியாக நுழைந்து தன்னை நோக்கி விரலை நீட்டி படபடவென பட்டாசை பொறிந்தவளது முகம் நினைவில் நழுவியது.

மேலும் காதலை கூறிய நொடி விழிகள் தெறித்து விழும் அளவிற்கு அதிர்ந்து நின்றவளது தோற்றம் கண்முன் வந்து போக மனம் கனத்து போனது.

ஏதும் கூறாது அவளையே சில நொடிகள் வெறித்து பார்த்தான்.

அவளும் அவனது முகத்தினை தான் பார்த்திருந்தாள். அவளால் அவனது முகத்தில் இருந்து எதையும் கண்டறிய இயலவில்லை.

அவன் முகமும் அத்தனை எளிதில் உணர்வுகளை வெளிக் காட்டிவிடாதே.

மேலும் சில கணங்களை மௌனம் விழுங்கி கொள்ள,

"வல்லபன் சர்க்கரவர்த்தி" என்று அழுத்தமாக வார்த்தைகள் வந்து விழுந்தது.

அதனை கேட்ட விநாடி அவளது இதழ்கள் தானாக, "வல்லபன் சக்கரவர்த்தி" என்று உச்சரிக்க, உள்ளுக்குள் ஏதோ ஒன்று நழுவியது.

'வேறு ஏதும் தெரிய வேண்டுமா?' என்ற எண்ணத்தில் அவளை நோக்க,

அவளுக்கு அப்போதைக்கு அதுவே போதுமானதாக இருந்தது போலும் அமைதியாகிவிட்டாள்.

அதி வேறு, "ம்மா ம்மா…" என்று அவளது முகத்தை தன்புறம் திருப்பி ஏதோ சொல்ல,

என்னவென தெரியாமல் அவள் முகம் பார்த்து மலங்க மலங்க விழித்தாள்.

அதனை கண்ட வல்லபன், "அதிக்குட்டி அம்மாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. நாம அப்புறமா அம்மாட்ட பேசலாம்" என்று அவளை தன்னிடம் அழைக்க,

"ம்கூம் நா வதமாத்தேன். ம்மா ம்மா" என்று அதோ இதோவென நிறைந்துவிட்டது விழிகள்.

"அதி…" என்று மீண்டும் வல்லபன் அழைக்க,

"ம்மா ம்மா போ மாத்தேன்" என்று அவளது கழுத்தை மேலும் இறுக்கி கொள்ள கண்ணீர் வெளியேறியிருந்தது.

அப்பிஞ்சின் கண்ணீரில் கரைந்துவிட்டவள், "இல்லை இருக்கட்டும் நானே வச்சிருக்கேன்" என்று முடித்துவிட,

செவிலியர் வந்து ஊடுகதிர் முடிவுகள் வந்துவிட்டதாகவும் மருத்துவர் அவர்களை பார்க்க அழைப்பதாகவும் கூற,

வல்லபனும் தியாகுவும் எழுந்து சென்றனர்.

அவர்கள் சென்ற பிறகு வேதவள்ளியும் பவியும் அவளிடம் வந்து பேசினார்கள்.

பவி, "க்கா நாங்க இந்த ஆறு மாசமா நீ கண் முழிக்காம ரொம்ப பயந்துட்டோம்கா. இப்போதான் ஓரளவு நிம்மதியா இருக்கு" என்று அவளது கையை கலங்கிய விழிகளுடன் பிடிக்க,

"ஆமம்மா" என்று வேதவள்ளியும் கண்ணீரை உகுக்க,

"அதான் நல்லாகிட்டேன்ல ஏம்மா அழறிங்க" என்று தானும் தாயை கட்டி கொண்டாள்.

அவளுக்கும் புரிந்தது எப்போதும் தான் எழுவோம் என்று தெரியாமல் ஆறு மாதங்களாக அவர்கள் மனது பட்ட பாட்டினை அவளது மனமும் உணர்ந்தது.

இவர்கள் பேசியபடி இருக்க அமைதியாக இருந்த ராமநாதனின் மேல் செல்வாவின் பார்வை பதிந்தது.

இத்தனை நாட்கள் அமைதியாக அத்தனை பேரையும் கலங்கடித்து கொண்டிருந்தவள் இன்று எழுந்து உயிர்ப்புடன் பேசுவதை அந்த தந்தை உள்ளம் உணர துவங்கியது.

செல்வாவிற்கு தந்தையிடம் தனி பிரியம் பிணைப்பு இருந்தது.

தியாகுவிற்கு பிறகு வெகுவருடமாக பெண்பிள்ளை வேண்டும் என்று ஆசைப்பட்டு பிறந்தவள் ஆதலால் சற்று அதிகமான‌ செல்லம்.

பெண்பிள்ளை மீது அதிகம் பாசம் கொண்ட ராமநாதன் தப்பு எங்கு நடந்தாலும் தட்டி கேட்க வேண்டும். நேர்மையாக இருக்க வேண்டும் என்று சொல்லி கொடுத்து வளர்த்திருந்தார்.

மேலும் அவர் ஆசைப்பட்ட கொள்கையுடன் தைரியமாக வளர்ந்து நின்றவள் இவள் தான். பவி கூட சற்று பயந்த சுபாவம் கொண்டவள் தான். அதனாலேயே இருவருக்கும் ஒரு தனிப்பட்ட பிணைப்பு இருந்தது.

தன்னையே பார்த்தவாறு உணர்வுகளில் விளிம்பில் அமர்ந்திருந்த தந்தையை கண்டதும் அவளது விழிநீர் கன்னத்தை தாண்டிவிட்டது.

சிறுவயதில் செல்வா தவறு செய்துவிடும் சமயம் ராமநாதன் கண்டிப்பார். தந்தையின் சிறு சொல் கூட தாங்காதவள் கோபமாக பேசிவிட்டு அழுகையுடன் ஒரு மூலையில் அமர்ந்து கொள்வாள்.

பின்னர் ராமநாதன் சமாதானம் செய்ய வரும் சமயம் கோபமாக முகத்தை திருப்பி கொள்பவள் சில நிமிடங்களில் கோபம் குறைந்து அவரை நோக்கி நிரம்பிவிட்ட கண்களுடன் கையை நீட்டுவாள்.

இப்போதும் அதே போல தந்தையை நோக்கி கையை நீட்ட,

அதில் உடைந்து போனவர் எழுந்து வந்து அவளை கட்டிக் கொள்ள அவளும் தந்தையை இடையோடு கட்டி கொண்டாள்.

அவளது மடியில் இருந்த அதி பவியிடம் வந்திருந்தாள்.

சிறிதான உணர்வு போராட்டம் அங்கே நிகழ்ந்தது.

இங்கே மருத்துவர் முன்பு தியாகுவும் வல்லபனும் அமர்ந்திருந்தனர்.

தனது மூக்கு கண்ணாடியை சரிசெய்தபடி ஊடுகதிர் முடிவுகளை புரட்டி புரட்டி பார்த்து கொண்டிருந்தவர் ஐந்து நிமிடங்களுக்கு பிறகு நிமிர்ந்து,

"ஆக்ஸிடென்ட்ல தலையில பலமா அடிப்பட்டதால ஒரு பர்டிகுலர் டைம்க்கு அப்புறமா நடந்தது அவங்களுக்கு மறந்து போயிருக்கு. இப்போ சி.டி அண்ட் எம்.ஆர்.ஐ எடுத்து பார்த்ததுல அவங்களுக்கு இந்த மெமரி திரும்ப வர நிறைய வாய்ப்புகள் இருக்க மாதிரி தான் தெரியிது. பட் என்னால ஹண்ட்ரட் பர்சன்ட் ஸ்யூரா சொல்ல முடியாது"

"..."

"பிகாஸ் ஒரு சில பேஷன்ட்ஸ்க்கு கடைசி வரை மெமரி திரும்ப வராமலே போயிருக்கு" என்றதும்,

தியாகு, "டாக்டர்?" என்று அதிர்ந்தான்.

வல்லபனிடம் அதிர்ச்சி இல்லை. எதையோ தீவிரமாக யோசித்து கொண்டிருந்தான் அவன்.

"கூல் மிஸ்டர். நம்ம பாஸிட்டிவா திங்க் பண்ணுவோம். கண்டிப்பாக சீக்கிரமா மெமரி திரும்ப வந்திடும்" என்க,

தியாகு, "அவளுக்கு பழசெல்லாம் ஞாபகப்படுத்த முயற்சி பண்ணலாமா டாக்டர்?" என்றான்.

"நோ நோ அப்படி‌‌ எதுவும் பண்ணி அவங்களை ரொம்ப ஸ்ட்ரெஸ்க்கு ஆளாக்காதிங்க.‌ இப்போதைக்கு அவங்க ரொம்ப யோசிக்க கூடாது. ஸ்ட்ரெயின் பண்ணவிடாதிங்க.‌ இப்போ நான் கோமாவுல இருந்து வெளியே வந்திருக்காங்க. அவங்களுக்கா மெமரி வரட்டும்" என்று மருத்துவர் மொழிய,

இருவரிடமும் தலையசைப்பு மட்டுமே. மேலும் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு வெளியே வந்தனர்.

தியாகுவின் முகம் கவலையாக இருக்க, வல்லபனின் முகம் யோசனையை தத்தெடுத்திருந்தது.

இருவரும் உள்ளே நுழைந்ததும் எல்லோரும் அவர்களையே ஆர்வமாக பார்க்க,

செல்வா பதைபதைப்புடன் அவனை நோக்கினாள். அவளது அச்சம் அப்படியே முகத்தில் பிரதிபலிக்க,

அதனை கண்ட வல்லபன், "சீக்கிரமே அவளுக்கு எல்லா மெமரியும் திரும்ப வந்திடும்னு டாக்டர் சொல்லியிருக்காங்க. வேற எந்த ப்ராப்ளமும் இல்லை" என்று முடித்துவிட, தியாகுவும் யாரையும் பயப்படுத்த வேண்டாம் என்று அப்படியே விட்டுவிட்டான்.

வல்லபன் கூறியதை கேட்டதும் மற்றவர்கள் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி.

செல்வாவின் முகத்திலும் சொல்லமுடியாத நிம்மதி பிறந்தது. வல்லபனின் விழிகளும் அவளை தான் அவதானித்தபடி இருந்தது.

அதன்பின் அங்கே மகிழ்ச்சி அலைகள் தான்

"க்கா கவலைப்படாத உனக்கு எல்லாம் சீக்கிரமே வந்திடும்" என்று மகிழ்வுடன் கட்டிக் கொள்ள,

பெரியவர்களுக்கும் அத்தனை நிறைவு. ஆறு மாதமாக அவர்களை தூங்கவிடாமல் செய்த ஒன்று இன்று முற்றிலுமாக சரியாகிவிட்டதே. அந்த ஆனந்தம் தான்.

பிறகு தியாகு எல்லோருக்கும் இரவுணவை வாங்கி வர உண்டுவிட்டு வீட்டிற்கு கிளம்பினர்.

வல்லபன் வேதவள்ளியிடமும், "நீங்க எதுக்கு இங்க இருந்து கஷ்டப்பட்றிங்க. நானே அவளை பாத்துக்கிறேன். கிளம்புங்க" என்று முடித்துவிட்டான்.

அதியையும் கூட ஏதேதோ சமாதானம் கூறி அழைக்க,

"ம்ஹூம் அம்மாவித்து வதமாத்தேன். அம்மா கூத தான் தூங்குவேன்" என்று வீலென்று அழ துவங்கிவிட,

பவி தான் சமாதானம் கூற மொழியின்றி திணறிப் போனாள்.

அவர்களது போராட்டத்தை கண்ட செல்வா, "விடு பவி அவ என்கூடவே தூங்கட்டும் நான் பாத்துக்கிறேன்" என்க,

"இல்லைக்கா. அவ நடுராத்திரி எழுந்து அழுவாக்கா. உன்னால சமாளிக்க முடியாது" என்று பதிலளித்தாள்.

"குழந்தைனா அழதான் செய்யும் நான் பாத்துக்கிறேன்" என்று கூற,

வல்லபனும், "நானும் இருக்கேன்ல என் பொண்ணை நான் பாத்துக்கிறேன்" என்று மொழிந்தான்.

வேதவள்ளியும், "செல்வாவிட யாரு அதிய நல்லா பாத்துக்க முடியாது" என்றுகூறி பவியிடம் கூறிவிட்டார்.

பவிக்கு சற்று வருத்தமாக இருந்தது.‌ இத்தனை நாட்களாக அவள் தானே அதியை பார்த்து கொண்டாள் இப்போது திடீரென விட்டுசெல்ல முடியவில்லை. இருந்தும் அறை மனதுடன் தலையை அசைத்துவிட்டு கிளம்பிவிட்டாள்.

அவர்கள் சென்றதும் அங்கே அசாத்திய மௌனம் கோலோச்சியது.

செல்வாவிற்கு உள்ளுக்குள் பெரியதான பதட்டம். திடீரென கணவன் மகள் என்று அறிமுகப்படுத்தப்பட்ட இருவருடன் குடும்பமே தனித்து தன்னைவிட்டு சென்றதில் சிறிது அச்சம் உள்ளுக்குள் பரவியது தான்.

'என்னுடன் யாராவது தங்குங்கள்' என்று சட்டென்று கேட்க வார்த்தை வரவில்லை.

அவளது சிந்தனையை கலைக்கும் விதமாக அதி, "ம்மா கத சொல்லும்மா கத சொல்லு" என்று அவளது கன்னத்தை சுரண்ட,

"கதையா என்ன கதை?" என்றவள் விழிக்க,

"ம்ம் லைன் கதை" என்க,

"லைன் கதையா எனக்கு அதெல்லாம் தெரியாதே" என்று மலங்க மலங்க விழித்தாள் செல்வா.

இத்தனை நேரம் அமைதியாக தன்னவளுக்கும் மகளுக்கும் நடந்த உரையாடலை ரசித்திருந்தவனது மென்னகை மனைவியின் பாவனையில் இமை நீண்ட புன்னகையாக,

"அதிக்குட்டி அப்பாட்ட வாங்க. அப்பா உங்களுக்கு லைன் ஸ்டோரி சொல்றேன்" என்க,

மகளின் விழிகள் சடுதியில் தந்தையை நோக்கிவிட்டு தாயை குண்டு விழிகளை உருட்டி பார்த்தது.

அதில் பதட்டத்தை மறந்து புன்னகைத்துவிட்ட செல்வா, "போ" என்று கூற,

"ப்பா…" என்று அவனிடம் தாவியிருந்தாள்.

மகளையை கைகளில் ஏந்தியவன், "ஒரு ஊர்ல ஒரு பெரிய லைன் இருந்துச்சாம். அது தான் அந்த இடத்துக்கே ராஜாவாம்" என்று ஆரம்பித்தவன் நடந்தவாறே கதையை கூற,

"ம்ம்…" என்று விழிகளை உருட்டி உம் கொட்டி கேட்க துவங்கினாள் அதியா.

வல்லபன் கதையை தொடர, இருவரும் தங்களுக்கான உலகத்தில் பொருந்தி போய்விட்டதை ஆசையாக பார்த்திருந்தவளுக்கு தான் அங்கே அதிகப்படியாக உள்ளோமோ…? என்று எண்ணம் பிறந்தது.

தன்னால் அவர்களுடைய உலகத்தில் பொருந்தி போக முடியுமா…? அல்லது தன்னுடைய உலகத்தில் அவர்களை ஏற்று கொள்ள முடியுமா? என்ற சந்தேகமும் எழ, மனதிற்குள் கவலை பூதகரமாக எழுந்தது.

வல்லபன் பாதி கூறுகையிலே அவன் மகள் தோளில் சாய்ந்து உறங்க துவங்க தட்டி கொடுத்து உறங்க வைத்து செல்வாவின் அருகிலே படுக்க வைத்து அவள் விழுந்துவிடாதவாறு தலையணையை எடுத்து வைத்தவன் மனைவியின் முகத்தை அப்போது தான் கண்டான்.

அவள் முகமே எதையோ நினைத்து குழப்பி கொண்டிருக்கிறாள் என்று தெளிவாக எடுத்துக் கூற, அவளுக்கு கொடுக்க வேண்டிய மாத்திரைகளையும் தண்ணீரையும் கொடுத்தான். அமைதியாக அதனை விழுங்கினாள்.

"எதை நினைச்சும் மனசை குழப்பிக்காம தூங்கு" என்று அவளது விழிகளை பார்த்து கூற,
அவளது தலை சம்மதமாக ஆடியது.

அவள் படுத்ததும் வல்லபன் அவளுக்கு எதிரே இருந்த நீள்விருக்கையில் கையில் அலைபேசியுடன் அமர்ந்துவிட்டான்.

உறக்கம் வராது புரண்டவள் சிறிது நேரத்திலே உறங்கி போனாள்.

வல்லபனும் நீள்விருக்கையில் அமர்ந்தவாறு விழிமூடி சாய்ந்துவிட்டான்.

வெகு நாட்களுக்கு பிறகு மனதின் பேரிசைச்சல் ஏதுமின்றி ஒரு சயனம்.

திடீரென தூக்கத்தில் இருந்து விழித்துவிட்டவள் வலது புறமும் இடது புறமும் திரும்பி படுத்தாள்.

மீண்டும் உறக்கம் வர மறுத்துவிட்டது.‌ எழுந்து சாய்வாக அமர்ந்தவள் கழிவரை செல்வதற்காக காலை தரையில் வைத்து இறங்க,சிறிதாய் தடுமாற்றம்.

"என்ன‌‌ என்னாச்சு" என்று சடுதியில் இடையில் கைக்கொடுத்து பிடித்திருந்தான்.

அவன் கைப்பட்ட இடம் குறுகுறுக்க அதிர்ந்து சடுதியில் அவனிடமிருந்து விலகியவள்,

"அ…அது ரெஸ்ட் ரூம் போகணும்" என்று தடுமாறி கூறி முடித்தாள்.

அவன் உறங்கி கொண்டிருக்கிறான் என்று நினைத்து தான் எழுந்தாள்.‌ ஆனால் இப்படி சடுதியில் எழுந்து நிற்பான் என்று சிறிதும் எண்ணியிருக்கவில்லை.

அதுவும் இடையில் அவன் கைப்பட்டதும் ஒரு நொடி மூச்சே நின்றுவிட்டது.

உள்ளே இன்னும் பரபரப்பு குறையவில்லை. உறங்காமல் தன்னையே கவனித்து கொண்டிருப்பார் போல.

"பாத்து போ" என்று அவளுடனே கழிவறையின் கதவு வரை வந்தவன் வெளியே நின்று கொண்டான்.

உள்ளே நுழைந்தவளுக்கு அந்நொடியும் இதயம் படபடவென அடித்து கொண்டது.

இரண்டு நிமிடங்கள் நின்று தன்னை நிதானித்து கொண்டவள் பின்னர் வெளியே வர அவன் இன்னும் அதே இடத்தில் தான் நின்றிருந்தான்.

அவள் படுக்க செல்ல பின்னோடு சென்றவன் அவள் படுத்ததும் போர்வையை எடுத்து போர்த்திவிட்டவன் மீண்டும் தனது இடமான‌ அவளுக்கு எதிரில் போடப்பட்டிருந்த நீள்விருக்கையில் சாய்ந்து கால்களை நீட்டி அமர்ந்து கொள்ள,

இவள் கண்களை மூடி உறங்க முயற்சிக்க கலைந்த உறக்கம் வருவேனா என்றது.

ஏதேச்சையாக திரும்பியவளது பார்வை அவன் மேல் விழ அவனும் அவளைத்தான் பார்த்திருந்தான் இமைக்காது.

அந்த பார்வை அவளை உள்ளுக்குள் என்னென்னவோ செய்ய விழிகளை இறுக மூடி கொண்டாள்.

இருந்தும் அவன் விழிகள் தன்னிலே பதிந்து இருப்பது போல எண்ணம் தோன்ற மறுபடியும் விழிகளை திறந்துவிட்டாள். இன்னும் அவளை தான் நோக்கியிருந்தான்.

அவள் பார்ப்பதை உணர்ந்தவன், 'என்ன' என்பதாய் புருவத்தை ஏற்றி இருக்க,

'ஒன்றுமில்லை' எனும் விதமாய் தலையசைத்தவள்,

"நீ… நீங்க படுக்கலையா? எவ்வளோ நேரம் உட்கார்ந்தே இருப்பிங்க?" என வினவினாள்.

ஒரு கணம் அவளை ஆழ்ந்து பார்த்தவன், "நான் ஆறு மாசமா இந்த இடத்துல தான் அசையாம உட்கார்ந்து இருந்தேன். இப்போ தான் உனக்கு கேட்க மனசு வந்துச்சா" என்று அவளது விழிகளை ஊடுருவ,

அவள் பதிலில்லாது பேச்சிழந்து அவனைப் பார்த்தாள்…
 
Last edited:
Active member
Messages
205
Reaction score
116
Points
43
ரெம்ப கஷ்டம் தான் வல்லபன், செல்வா நிலைமை 🤔🤔🤔
 
Well-known member
Messages
612
Reaction score
348
Points
63
Sikirama antha thuthuru selva varanum😊 vallapan romba pavom thaana six months ya eva epadi irutha avan enna pannuvan😣😣 athi kutty so sweet 🤩🤩
 
Administrator
Staff member
Messages
606
Reaction score
836
Points
93
Sikirama antha thuthuru selva varanum😊 vallapan romba pavom thaana six months ya eva epadi irutha avan enna pannuvan😣😣 athi kutty so sweet 🤩🤩
😍😍😍
 
Top