• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

புன்னகை 4

Administrator
Staff member
Messages
606
Reaction score
836
Points
93
புன்னகை 3:

யாவுமே நீயென

ஆகிய பிறகு
பிரிதல் புரிதல் என
எவற்றிற்கும் இடையில்
இடமேது…?
மொத்தமாய் அமிழ்ந்து
போவதும் நேசத்தில
சேர்த்தியோ…?



அதிகாலை பனிமூட்டம் ஆங்காங்க புகையாய் விரவியிருக்க கையில்லாத ஸ்போர்ட்ஸ் பனியனும் குட்டியான ஷார்ட்ஸ் ஒன்றையும் அணிந்திருந்த வல்லபன் கையில் பந்தை வைத்து விளையாடி கொண்டிருந்தான்.

உடலை துளைக்கும் குளிரையும் பொருட்படுத்தாது பந்தை தரையில் அடித்து தட்டி கூடைக்குள் போட்டவன் மீண்டும் அதனையே செய்து கொண்டிருந்தான்.


வழக்கமாக இத்தனை விரைவாக எழும் பழக்கம் அவனுக்கு இல்லை.

ஆனால் இன்று ஏனோ உறக்கம் வரவில்லை. என்னவோ ஏதேதோ காரணங்களை தனக்கு தானே கூறி கொண்டாலும் மனதிற்கு தெரிந்தது‌.

இதற்கு முதற் முழுக் காரணம் அவள் தான் செல்வா என்கின்ற செல்வ மீனாட்சி தான்.

ஒற்றை விரலால் கண்ணாடியை சரிசெய்து அவனை முறைத்த இதழ்கள் உள்ளுக்குள் ஏதேதோ செய்தது.

கண்முன்னே தோன்றி இம்சித்தாள். ஏனென்று தெரியவில்லை அவன் செயலை பார்த்து பெரிதாய் விரிந்த நீண்ட இமைகள் கோபத்தில் சிவந்த மூக்கின் நுனி என‌ அனைத்தும் துல்லியமாக வந்து போனது.


வெறும் மூன்றே நாட்களில் ஒருத்தி தன்னை இவ்வளவு தூரம் பாதித்துவிட்டாளா? உறக்கத்தினை தொலைக்கும் அளவிற்கு.

மனதிடம் மீண்டும் மீண்டும் கேட்டாலும் பதிலில்லை. என்ன ஏதென தெரியவில்லை பிடித்தம் தான் அவள் மீது.

அவள் தான் இவ்வுலகின் பேரழகி என்று கூற இயலாது. ஏன் சக்கரவர்த்தி குடும்பத்தின் வாரிசான வல்லபன் எத்தனை எத்தனையோ அழகான பெண்களை பார்த்திருக்கிறான்.

எவ்வளவோ பெண்கள் அவனிடம் பேசுவதற்கு அத்தனை ஆர்வம் காடியிருக்கின்றனர். ஏன் சிலர் நேரடியாக காதலை கூற தெரிவித்திருக்கின்றனர்.

ஆனால் அவனுக்கு அவர்கள் மீது எவ்வித ஈர்ப்பும் ஏற்படவில்லை. வேண்டாம் என்று நாசுக்காக நகர்ந்துவிடுவான்.

ஆனால் பாவை ஒவ்வொரு அசைவிலும் இவன் கண்களுக்கு அழகாய் தெரிந்தாள்.‌ ஒவ்வொரு நொடியும் ஆகர்ஷித்தாள். ஈர்த்தாள்.

மொத்தத்தில் உறக்கத்தை கெடுத்து என்னவோ செய்தாள்.

நேரம் செல்ல செல்ல குளிர் குறைய துவங்கியது. மெலிதான வெளிச்சத்துடன் ஆதவன் கதிர்களை பரப்ப துவங்கினான்.

"ப்ச்…" என்றவன் காரணமின்றி சலித்தவன் பந்தை வேகமாக அடிக்க அது போய் தூர விழுந்தது.

அதற்கும் மனதிற்குள் சிறிதான சலிப்பு தோன்ற நடையில் அழுத்தத்தை கூட்டியவன் பந்தை குனிந்து எடுக்க எதிரில் நின்றிருந்தாள் செல்வா.

வல்லபனின் அனைத்து எண்ணங்களுக்கும் சொந்தமானவள் காரணமானவள்.

'இத்தனை காலை நேரத்தில் அவள் இங்கு வர வாய்ப்பில்லையே…'

'இதுவும் கனவாக இருக்குமோ?' என்று எண்ணம் தோன்ற ஒரு நொடி பார்வையை அவளிடம் நிலைக்கவிட்டவன் சடுதியில் திரும்பி மீண்டும் பந்தை அடிக்க
துவங்கியிருந்தான்.


எதிரில் உண்மையாகவே நின்றிருந்த செல்வாவிற்கு தான் எப்படி அவனிடம் பேசுவது தான் கூற வந்ததை கூறுவது என எதுவும் தெரியவில்லை.

நேற்று அத்தனை தூரம் பேசிவிட்டு இப்போது வந்து மன்னிப்பை சட்டென்று கேட்கமுடியவில்லை. தயக்கம் வேறு வந்து ஒட்டி கொண்டது.

எப்படி அழைப்பெதன வேறு தெரியவில்லை. மனசாட்சி வேறு பானு கூறிய போதே சிந்தித்துருக்க வேண்டும் என சாடியது.

அதனை ஒரு தட்டு தட்டி அதட்டி வைத்தவள் தன்னையே நிந்தித்து கொண்டாள்.

நேற்று நடந்தது வேறு நினைவிற்கு வந்தது.

வகுப்பு முடிந்ததும் வழக்கம் போல நூலகத்தில் அமர்ந்து எதையோ படித்து கொண்டிருந்தவள் அருகில் அரவம் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள்.
யாரோ ஒரு பெண் நின்றிருந்தாள்.


அருகில் அமர வந்திருக்கிறாள் போல என்று எண்ணியவள் சற்று தள்ளி அமர்ந்துவிட்டு மீண்டும் புத்தகத்தில் விழியை பதிக்க, அப்பெண் அங்கிருந்து நகர்வதாக இல்லை.

செல்வா கேள்வியாக பார்க்க,

அப்பெண், "நான் சியாமளா இ.சி.இ டிபார்ட்மெண்ட் படிக்கிறேன். உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்" என்று கூற,

செல்வா யாரென தெரியாத பெண் தன்னிடம் என்ன பேச போகிறாள் என்று கேள்வியை முகத்தில் தாங்கி நோக்கினாள்.

"பைவ் மினிட்ஸ் தான்" என்று அப்பெண் மீண்டும் கூற,

இருக்கும் இடத்தை கருத்தில் கொண்டு, "சரி வாங்க வெளியே போகலாம்" என்று எழுந்து நடந்தாள்.

வெளியே வந்ததும் அப்பெண், "ஏங்க இப்படி பண்ணிங்க. மத்தவங்களுக்கு நல்லது செய்யணும்னு நினைக்கிறது நல்ல விஷயம் தான். பட் நடந்தது என்னன்னு தெரியாம உங்க இஷ்டத்துக்கு என்னவோ பண்ணி வல்லா அண்ணாவ டிஸ்மிஸ் பண்ண வச்சிட்டிங்க"

"..."

"எல்லாரும் வேடிக்கை தான பார்த்தாங்க.‌ உங்களுக்கு மட்டும் என்ன அக்கறை. மத்தவங்களுக்கு எல்லாம் ஆகாஷை பத்தி தெரிஞ்சதுனால தான் அமைதியா இருந்தாங்க. நீங்க மட்டும் ஏன் இப்படி பிரின்சி வரைக்கும் கொண்டு போனிங்க"

"...."

"யாராவது சும்மா யாரையாவது அடிப்பாங்களா? அவன் தப்பு பண்ணாண் அதான் அண்ணா அடிச்சாங்க.‌ அவன் என்ன பண்ணான்னு உங்களுக்கு தெரியுமா? என்னை லவ் பண்றேன்னு ரெண்டு வருஷமா தொல்லை பண்ணிட்டு இருந்தான். நான் ஒரு கட்டத்துல கோவப்பட்டு திட்டிட்டேன். அதுக்கு என் போட்டவோ அசிங்கமா மார்ஃபிங் பண்ணி எனக்கு அணுப்பி இதை சோசியல் மீடியாவுல போடுவேன்னு மிரட்டுனான். இன்னும் என்னென்னவோ அசிங்கமா பேசுனான். அதான் வல்லா அண்ணா அவனை அடிச்சாரு"

"..."

"உங்க வீட்டு பொண்ணுக்கிட்ட யாராவது இப்படி செஞ்சிருந்தா நீங்களும் இதை தானே செஞ்சிருப்பிங்க. இனிமே எதை செய்றதா இருந்தாலும் கொஞ்சம் யோசிச்சு பண்ணுங்க. உங்களால தேவையில்லாம எந்த தப்பும் செய்யாத வல்லாண்ணா சஸ்பென்ட் ஆகிட்டாங்க" என்று மளமளவென மடை திறந்த வெள்ளமாக பேசியவள் விறுவிறுவென நடந்துவிட்டாள்.

அதனை கேட்ட செல்வா தான் ஒரு நொடி அதிர்வில் உறைந்துவிட்டாள்.
எதையும் நம்பமுடியவில்லை ஆனால் சியாமளாவின் கலங்கிய முகம் அது உண்மை என அப்பட்டமாக கூறியது.

மேலும் மனது ஆகாஷ் என்ன பிரச்சனை என வினவியதும் பதறியது நினைவில் வந்தது.

பானு கூறியது போல வல்லபனின் பக்கம் சிறிது சிந்தித்திருக்கலாமா? என்று மனது எண்ணியது.

முதல்வர் எத்தனை கேட்டும் சியாமளாவை பற்றி வல்லபன் கூறவில்லையே என மனது அவன் புறம் சாதமாக சிந்திக்க துவங்கியது.

மேலும் பானு வேறு வந்து ஆகாஷ் ஏற்கனவே சியாமளா பின்பு இரண்டு வருடங்களாக சுற்றியது உண்மை தான் என்று கூறி வல்லபன் மேல் தவறில்லை என்று உறுதிபடுத்தினாள்.

அதுமட்டுமின்றி வல்லபன் மிகவும் நல்லவன் மற்ற பணக்கார வீட்டு பிள்ளைகளை போல அல்ல. நிறைய பேருக்கு உதவி செய்திருக்கிறான் என்று அவனது சாதகத்தை எடுத்து கூற, செல்வா அப்படியே ஓய்ந்து அமர்ந்துவிட்டாள்.

'அவசரபட்டுவிட்டாயே…?' மனது வேறு திட்டியது.

அதனை கேட்டதிலிருந்து உள்ளே ஒரு குறுகுறுப்பு குற்றவுணர்வு தான். தவறு செய்யாத ஒருவருக்கு தண்டனை வாங்கி கொடுத்துவிட்டோமே…? என்று ஏக வருத்தம்.

இத்தனை நடந்தும் உண்மையை கூறாத வல்லபனின் மீது மரியாதை உயர்ந்தது. நல்ல எண்ணம் பிறந்தது.


உடனே அவனிடம் மன்னிப்பை கேட்க வேண்டும் என்று எண்ணம் அவளை படாய்படுத்த கல்லூரி முழுவதும் அலைந்து திரிந்து அவனை தேடியவள் காணாது வீட்டிற்கு திரும்பியிருந்தாள்.

இரவெல்லாம் மனது தவறு செய்துவிட்டோமே என்று புலம்பியது.
செல்வா இப்படித்தான் தவறென்றால் யாரையும் தட்டி கேட்பாள். அதுவே தவறு தன் மீது தான் என்று தெரிந்தால் மன்னிப்பு கேட்க சிறிதும் தயங்கமாட்டாள்.

அவனிடம் மன்னிப்பை கேட்கும் எண்ணத்தில் விரைவாகவே எழுந்து வீட்டில் கோவிலுக்கு செல்வதாக கூறி கிளம்பி வந்திருந்தாள்.

ஆனால் உள்ளே நுழைந்ததுமே அவனை பார்ப்போம் என்று எதிர்பாராதவள் அவனை கண்டதும் மன்னிப்பை கேட்க வந்துவிட்டாள்.

வல்லபனுக்கும், 'ப்ச் எத்தனை தூரம் திமிராக கல்லூரியில் சுற்றி கொண்டிருந்த என்னை இப்படி மனதிற்குள் புலம்பிவிட்டுவிட்டாளே' என்று நினைத்து தனது தலையை கோதியபடி அவன் திரும்ப செல்வா இன்னும் அதே இடத்தில் அசையாது நின்றிருந்தாள்.

'ஒருவேளை உண்மையாகத்தான் வந்துவிட்டாளா?' என்று எண்ணி அவளை அழுத்தமாக பார்க்க,

அவனது பார்வையில் சட்டென்று பார்வையை வேறு புறம் திருப்பி கொண்டாள்.

'உண்மைதான் இது அவள்தான்' என்று உணர்ந்த நொடி உள்ளுக்குள் இனிதாய் ஒரு பூகம்பம்.

தனக்கு பக்கவாட்டாக திரும்பி நின்றிருந்தவளின் மீது விழிகள் ஊர்ந்தது.

ஆகாய நீல நிறத்தில் வெண்மையில் பூக்களிக்கட்ட சுரிதாரும் அதற்கு பொறுத்தமாக வெள்ளையில் பேண்ட்டும் துப்பட்டாவும் அணிந்திருந்தவள் சிறிது நேரத்திற்கு முன்பு தான் தலைக்கு குளித்திருப்பாள் போல.

ஒரு சிறிய க்ளிப்பிற்குள் அடக்கியிருந்த கூந்தலின் நுனியில் இருந்து நீர் சொட்டு சொட்டாக வடிந்தது. கூந்தலின் நடுவே சிறு கதம்பம் அழகாய் வீற்றிருந்தது.

நெற்றியில் சிறிதான கருப்பு பொட்டு அதற்கு மேல் மெல்லிய கீற்றாய் திருநீறு இட்டிருந்தாள். ஒரு கையில் அலைபேசி மறுகையில் பேக்கை அணிந்திருந்தாள்.

அவளது வதனத்தை அளந்தவனின் விழிகள் பக்கவாட்டாய் இதழுக்கு கீழாய் இருந்த மச்சத்தில் நிலைத்துவிட விழிகள் ஒரு நொடி இமைக்க மறந்திட்டது.

உள்ளுக்குள் அலை அலையாக ஆர்பரிப்பு. இதனை எப்படி கவனியாமல் விட்டோம் என்று மனது வேறு கூக்குரலிட்டது.

மனது அந்த மச்சத்தில் ஒரு கணம் இயங்க மறுத்திட எண்ணம் போதும் போக்கை உண்ர்ந்தவன்,

'ச்சு என்ன பண்ற நீ' என்று தன்னை தானே வைதவன் சடுதியில் பார்வையை மாற்றிவிட,

செல்வாதான் தயங்கி தயங்கி அவனை நோக்கினாள்.

அவளது பார்வையில் இருந்த தயக்கமே அவளுக்கு எல்லாம் தெரிந்துவிட்டதை கூற, நேற்று எத்தனை தூரம் படபடவென பட்டாசாய் பொறிந்தவள் இன்று அமைதியின் சிகரமாக நிற்பதை கண்டு விநாடியில் சிரிப்பு வந்துவிட்டது.

அதனை இதழ்களுக்குள் அடக்கியவன் ஏதுமறியாதவன் போல விளையாட துவங்க இவள் தான் எப்படி தொடங்குவது என்று தெரியாமல் கைகளை பிசைந்தாள்.

பந்தை கைகள் அளந்தாலும் பார்வை முழுவதும் தன்னை இம்சிக்கவென அன்றலர்ந்த மலராய் வந்து நிற்பவள் மீது தான்.

'எத்தனை நேரம் இப்படி அமைதியாக நிற்பாள்' என்று யோசிக்க,

அதற்கு மேலும் தாமதிக்காமல்,

"சீனியர்…" என்று அழைத்திருந்தாள்.

'குரலில் எத்தனை பவ்யம்' என்று நினைத்தவன் கேட்காது போல இருக்க, அவளுக்கு சிறிது கடுப்பு வந்தது.

"சீனியர் உங்களைத்தான்" என்று சற்று உரத்த குரலில் அழைக்க,

திரும்பி புருவம் உயர்த்தி பார்த்தவன், 'வர்றேன்' என்பதாய் சைகை செய்துவிட்டு பந்தை அடித்தான்.

மேலும் பத்து நிமிடங்கள் அவளை நிற்க வைத்து அவன் விளையாட,

மன்னிப்பை கூற வந்தவளுக்கு பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக பறக்க ஆரம்பித்தது.

அவளை சீண்டுவதற்காகவே இவ்வாறு செய்தான்.

கோபத்தில் சிவக்கும் அவளது மூக்கின் நுனியை விரலால் கிள்ள வேண்டும் என்று எழும் பேராவலை அடக்க நேற்று அவன் பட்டபாடு அவனுக்கு தானே தெரியும்.

இருந்தும் இன்று செவ்வானமாய் சிவக்கும் நாசியை காண மனம் ஆவல் கொண்டது.

பத்து நிமிடம் கடந்த பிறகு இதற்கு மேலும் சீண்ட வேண்டாம் என்று எண்ணியவன் பந்தை ஓரமாக தள்ளிவிட்டு நடந்து சென்று தண்ணீரை எடுத்து முகத்தில் நன்றாக அடித்து கொண்டான்.

அவளும் தன் மீது தவறுல்லதே என இழுத்து பிடித்த பொறுமையுடன் அவனை கவனித்தாள்.

முகத்தை துவாலையால் ஒற்றியவன் அருகில் இருந்த கல்மேடையில் நன்றாக சாய்ந்தமர்ந்து கால்களை சற்று அதிகமாகவே நீட்டி தலையை சாய்த்தபடி அவளை பார்த்தவன்,

'என்னவென' என்று புருவத்தை உச்சி மேட்டிற்கு உயர்த்தினான்.

'நல்லவனாக இருந்தாலும் இந்த திமிருக்கு ஒன்றும் குறைச்சலில்லை' என்று நினைத்துவிட்டு,

"சீனியர் ஐ ஆம் சாரி" என்று கூறினாள்.

சுண்டு விரலால் காதை குடைந்தவன்,

"கேட்கலை என்ன சொன்ன?" என்க,

கடுப்படைந்தவள் முகம் மாறாது இருக்க பிரயத்தனப்பட்டவள்,

"நான்… என் மேல தான் தப்பிருக்கு. நேத்து சியாமளா என்ன வந்து பார்த்தாங்க. நான் உண்மை தெரியாம அப்படி பண்ணியிருக்க கூடாது" என்று இழுக்க,

"எப்படி பண்ணியிருக்க கூடாது?" என்று வினா எழுப்பினான்.

அதில் கோபம் முழுவதும் வடிந்து தன்னால் தான் இவனுக்கு முதல்வரிடம் கரும்புள்ளி கல்லூரியில் இருந்து விலக்கு வேறு என்ற குற்றவுணர்வு மேலோங்க முகம் முழுவதுவாக வருத்தத்தை பூசி கொண்டது.

அவனும் அவளது முகபாவங்களை கவனித்து எண்ணவோட்டத்தை புரிந்து கொண்டான் தான்.

"நான் ஆகாஷ் பண்ணது தெரியாம உங்க மேல கம்ப்ளைண்ட் பண்ணி பிரின்சி வரைக்கும் அழைச்சிட்டு போய் சஸ்பென்ஷன் வாங்கி கொடுத்திருக்க கூடாது.‌ என்னை மன்னிச்சிடுங்க சீனியர்" என்று வருத்தம் தேய்ந்த குரலில் கூற,

"நீ செய்றதெல்லாம் செஞ்சிட்டு ஒரு வார்த்தையில மன்னிப்பு கேட்ப. நான் உடனே மன்னிச்சிடனுமா?" என்று சீண்ட கேட்க,

"தப்பு தான் தெரியாம பண்ணிட்டேன்.‌ என்ன செஞ்சா என்னை மன்னிப்பிங்க?" என்று குழந்தையாய் கூந்தல் முகத்தில் மோத நிற்பவளை கண்டு ரசனை உள்ளுக்குள் ஊறியது.

'ஜான்சி ராணி முயல்குட்டி தான்' என்று மனதிற்குள் கூறியவன்,

"நீ செஞ்ச தப்பை உடனே மன்னிக்கிறது கஷ்டம். சோ நீ என்ன பண்ற‌ என்னை கல்யாணம் பண்ணிக்கோ மன்னிச்சிட்றேன்" என்றவன்,

"என்ன பண்ணிக்கிறியா?" என்றவனிடம்,

"ஹ்ம்ம்…" என்று தலையாட்டிவிட்டவள் பின்னர் அவனது கூற்றின் அர்த்தம் உணர்ந்து நீண்ட விழிகளை அதிர்ச்சியில் விரித்து அவனை பார்த்தாள்.

கண்ணாடிக்கு பின்னே ஒளிந்திருக்கும் அந்த விழியின் மொழியில் சடுதியில் தொலைந்தவன் விழிகளுக்குள் மூழ்கிவிடும் எண்ணத்துடன் அவளை நோக்கினான்.


என்னை சாய்த்தாளே உயிர் தேய்த்தாளே
இனி வாழ்வேனோ இனிதாக
தடுமாறாமல் தரை மோதாமல்
இனி மீள்வேனோ முழுதாக…?


********************

மெத்தைகள் சாய்ந்திருந்த செல்வாவின் மனதிற்குள் ஆயிரக்கணக்கான எண்ணங்கள் சுனாமியாய் சுழன்றடித்தது.

'எனக்கு திருமணம் ஆகிவிட்டதா? ஒரு குழந்தை கூட இருக்கின்றதா?'

'இதெல்லாம் எப்போது நடந்தது. ஏன் என் நினைவில் ஏதும் இல்லை'

'திருமணம் ஆகிவிட்டதென்றால் என்னுடைய கணவர்?' என்று தோன்றிய நொடி எழுந்து அமர்ந்துவிட்டாள்.

இதயம் படபடவென அடித்து கொண்டது.

'யார் என்னுடைய கணவர்? என் குழந்தைக்கு தந்தை? அவர் ஏன் இன்னும் என்னை காண வரவில்லை?'

'எல்லோரும் வந்திருந்தனர். அம்மா அப்பா அண்ணா அண்ணி மற்றும் பவி கூட. அவர் மட்டும் ஏன் வரவில்லை?'

'ஒருவேளை நடந்த விபத்தில் அவருக்கு ஏதாவது நடந்திருக்குமோ?' என்று எண்ணம் வந்த நொடி இதயம் ஒரு நொடி துடிப்பை நிறுத்தியிருந்தது.

'இல்லை இருக்காது அவ்வாறு இருக்காது' என்று தனக்கு தானே சமாதானம் கூறிக் கொள்ள,

மறுமனம், 'அவர் நன்றாக இருந்தால் ஏன் இன்னும் உன்னை காண வரவில்லை. அவருக்கு நிச்சயம் ஏதோ ஆகிவிட்டது' என்க,

யாரென தெரியாத கணவனுக்காக உள்ளுக்குள் சிறிது போராட்டம்.

இத்தனை குழப்பங்களில் தவிக்கும் நொடி தான் செல்வாவின் குடும்பத்தினரும் அதனை தொடர்ந்து கதவினை திறந்து கொண்டு அவனும் வந்தான்.

செல்வாவின் விழிகள் அவனிடம் தான் நிலைத்தது.

கருப்பு நிறத்தில் சட்டையும் கரு நீல நிறத்தில் பேண்ட்டும் அணிந்திருந்தவன் நல்ல உயரத்தில் இருந்தான்.

முகத்தை நன்றாக பார்க்க முடியவில்லை காடு போல வளர்ந்திருந்த தாடி முக்கால்வாசி முகத்தை மறைத்திருந்தது.

விழிகள் முழுவதும் தவிப்பை தேக்கி நின்றவன் தோற்றத்தில் கருத்து நன்றாக இளைத்திருந்தான்.

அவளை கண்ட நொடி அவனது முகத்தில் தவிப்பு மகிழ்ச்சி நிம்மதி என வரிசையாக வந்து போன உணர்வுகளை அவளது விழிகள் அவதானித்தபடி தான் இருந்தது.

என்னவோ உள்ளுக்குள் ஒரு கணம் அந்த தவிப்பு, நிம்மதி, மகிழ்ச்சி எல்லாம் தனக்காகத்தான் என தோன்றியது.

உள்ளே ஒன்று நழுவியது. அங்கே அவளை கண்டவனுக்கோ உணர்வுகளின் பெருக்கில் பேச்சற்ற நிலை தான்.

வார்த்தைகள் வரவில்லை. தெய்வத்தை கண்ட பக்தனின் நிலை தான். விழிகள் கலங்கியது.

அதோ கதவின் அருகேயே நின்றுவிட்டான். கால்கள் அங்கேயே வேரூன்றிவிட்டது.

இவ்வுலகில் அந்நொடி வேறென்ன வேண்டிய அவனுக்கு என்று உள்ளே ஒரு கூக்குரல்.

உள்ளுக்குள் ஏதோ ஒரு எண்ணம் வர அவனது நிலையை உணர்ந்தவள்,

"இவர்தான் என் ஹஸ்பண்ட்டா?" என்று திக்கி திணறி ஒருவாறாக
கேட்டுவிட்டாள்.

மறுநொடியே தாமதமின்றி, "ஆமாம்…" என்று கணீர் குரலில் பதில் வந்தது.

ஒரே ஒரு விநாடியேனும் வந்து சென்ற அவளது அந்நிய பார்வை உள்ளுக்குள் முள்ளாய் தைத்தது.

அதன் பொருட்டே இத்தனை உறுதியான உரிமையான சத்தமான பதிலை அளித்தான்.

அவனது குரல் அவ்வறையே எதிரொலித்தது.

தாயை காண அவரது தலையும் மேலும் கீழும் ஆடி ஆமாம் என்றது.

இவன் இவன் தான் என் கணவன் என்றதை அறிந்த விநாடி அவளையும் அறியாமல் சிறிதாய் நிம்மதி படர்ந்தது.

அறையின் அமைதியை குலைத்து கொண்டு 'க்ரீச்….' என்ற ஒலியுடன் சக்கர நாற்காலியினை தள்ளியபடி ஒரு மருத்துவமனை பணியாளர் உள்ளே வர,

அவனை தொடர்ந்து வந்த செவியர்,

"டாக்டர் சிடி எடுக்க சொல்லி இருக்காங்க. பேஷண்ட்டை அழைச்சிட்டு போகணும்" என்றவள் அருகில் வர,

வேதவள்ளி செல்வாவை எழுந்து சக்கர நாற்காலியில் அமர வைக்க உதவ, சடாரென அருகில் வந்தவன் வேதவள்ளியை கண்டு காலை பின்னுக்கு இழுத்துவிட்டான்.

செல்வாவும் அவனது செய்கைகளை கவனித்தாள்.

பணியாளர் நாற்காலியை தள்ள செல்வாவின் பார்வை முழுவதும் அவனது மீது தான்.

ஆனால் அவன் அங்கிருந்து நகரவில்லை. அவனுக்கு சில விடயங்கள் தெரிந்து கொள்ள வேண்டிருந்தது.

செல்வாவிற்கு மறந்துவிட்டது என்று மட்டும் தான் அலைபேசியின் வாயிலாக அறிந்திருந்தான்.

மற்றபடி எதனையும் கேட்கவில்லை. அவளுக்கு நினைவு திரும்பியதை அறிந்த நொடி அதுவே போதுமானது என்று எண்ணி வேறெதையும் அறிய விழையவில்லை.

இதோ இப்போது அவளை பார்த்து விழிகள் முழுவதிலும் அவளை நிரப்பி நிஜத்தின் வாசத்தை உணர்ந்த பிறகு மற்றதை அறிந்து கொள்ளும் எண்ணம் வந்தது.

செல்வாவை அழைத்து சென்று சி.டி மற்றும்

அவனது பார்வையில் பவி செல்வாவுடன் சென்றாள்.


அடுத்து இரண்டு மணி நேரம் ஆகியது. செல்வாவிற்கு சி.டி மற்றும் எம்.ஆர்.ஐ எடுத்து முடித்து மீண்டும் அழைத்து வர, எம்.ஆர்.ஐ இயந்திரத்தில் ஒரு மணி நேரம் அமர்ந்திருந்தது வேறு வலி தலையை பிளந்தது.

பவி செல்வாவுடன் மீண்டும் அறைக்குள் நுழைய எல்லோரும் அமர்ந்திருந்தனர்.

அவன் செல்வாவின் மெத்தைக்கு அருகிலே ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தான்.

மடியில் அதியா அவனது கழுத்தை கட்டி கொண்டு அமர்ந்திருந்தாள்.

செல்வா மெத்தைக்கு வந்ததும்,

அதி, "ம்மா…" என்று கையை நீட்ட,

அவள் தயக்கத்துடன் அவனை கண்டாள்.

"ஹ்ம்ம் வாங்கிக்கோ" என்றவன் அதியாவை அவளது மடியில் அமர வைக்க, செல்வாவினுள் ஏதோ சொல்ல முடியாத உணர்வு.

"ம்மா ம்மா" என்ற அதி அவளது கழுத்தை கட்டி கொள்ள, தன்னையறியாது அவளது கரங்களும் அதியை பற்றி கொண்டது.

"இவ இவ பேர் என்ன?" என்று அவனிடம் வினவ,

"அதியா…" என்று உரைத்தான்.

பின்னர் தயங்கி தயங்கி, "உங்க பேர் என்ன?" என்க,

ஒரு விநாடி மொழியின்றி அவளை வெறித்தான்.

தன்னை அந்நியமாக அவள் பார்த்த கணம் தன்னுடைய பெயரை அவள் கேட்ட சமயம் உள்ளுக்குள் சொல்ல முடியாத துக்கம் தொண்டையை அடைக்க பேச்சிழந்து போனான்…




























 
Messages
524
Reaction score
403
Points
63
ஆனால் உனக்கு ரொம்ப தைரியம் தான் வல்லபா கல்யாணம் பண்ணிக்க சொல்லுற
ரொம்ப கஷ்டமாக இருக்கும் நமக்கு ரொம்ப பிடித்தவங்க நம்மை யாருனு கேட்கும் போது
 
Administrator
Staff member
Messages
606
Reaction score
836
Points
93
ஆனால் உனக்கு ரொம்ப தைரியம் தான் வல்லபா கல்யாணம் பண்ணிக்க சொல்லுற
ரொம்ப கஷ்டமாக இருக்கும் நமக்கு ரொம்ப பிடித்தவங்க நம்மை யாருனு கேட்கும் போது
Ama ka🤕🤕🤕
 
Active member
Messages
205
Reaction score
116
Points
43
மவனே பொண்டாட்டி கோமால இருக்கானு சோகத்துல தாடி வளத்திருக்கானே, அந்த பிள்ளை முழு முகம் பார்த்திருந்தா கூட கண்டுபிடிச்சிருக்கும் மறதியிலயும் ஒரு ராசாயன மாற்றம் வந்திருக்குமே 🙄🙄🙄🙄🙄🙄
 
Well-known member
Messages
612
Reaction score
348
Points
63
Vallapan ku romba over tha😍😍 selva ta marrige pannikiraya nu kekuran Ava yosikama thala ya adura😁😁 romba thairiyam tha pa unaku. Paavam selva husband avanoda uyire avan per enna nu kekura 😲😲kastama irukum name sollama episode over pannidiga☹️☹️
 
Administrator
Staff member
Messages
606
Reaction score
836
Points
93
மவனே பொண்டாட்டி கோமால இருக்கானு சோகத்துல தாடி வளத்திருக்கானே, அந்த பிள்ளை முழு முகம் பார்த்திருந்தா கூட கண்டுபிடிச்சிருக்கும் மறதியிலயும் ஒரு ராசாயன மாற்றம் வந்திருக்குமே 🙄🙄🙄🙄🙄🙄
அது எல்லாம் ஒரு பீலிங்🥰🥰🥰
 
Top