• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

புன்னகை 3

Administrator
Staff member
Messages
606
Reaction score
836
Points
93
புன்னகை 3:

இந்த மனித பிறவியே ஒரு தூய நேசத்தில் வாகாய் உன்னை பொறுத்தி கொள்வதற்காக தானே…?


"வல்லபன் ஆகாஷை அடிச்சதை நீ பார்த்தியாம்மா?" என்று கல்லூரி முதல்வர் வினவ,


செல்வாவின் பார்வை தனக்கு பக்கவாட்டில் நின்றிருந்த வல்லபனின் மேல் விழுந்தது.

அவனும் செல்வாவை தான் பார்த்திருந்தான் ஒரு அசட்டையான தோரணையில் ஒரு கையை பேண்ட் பாக்கெட்டில் விட்டவாறு நின்றிருந்தான்.

செல்வாவின் பார்வை வல்லபனின் மீதிருந்து கட்டுடன் நின்றிருந்த ஆகாஷின் மேல் படிய ஆகாஷ் மேலே பரிதாபமும் வல்லபன் மீது கோபமும் வந்தது.

அவள் அமைதியாக இருப்பதை கண்டு,

"சொல்லும்மா யாருக்கும் பயப்படாத" என்று முதல்வர் கூற,

"என்கிட்ட சொன்னதை சார்க்கிட்டயும் சொல்லும்மா" என்று துறை தலைவரும் ஊக்குவித்தார்.

மறுபடியும் வல்லபனை ஒரு பார்வை பார்த்துவிட்டு,

"ஆமா சார் இவர் ஆகாஷை அடிச்சதை நான் பார்த்தேன்" என்க,

முதல்வர், "வல்லபன் ஆகாஷை எதுக்கு இப்படி அடிச்ச?" என்று கோபமாக வினவினார்.

வல்லபனிடம் பதிலில்லை அழுத்தமாக நின்றிருந்தான்.

"உன்னை தான் கேக்கிறேன் எதுக்கு அவனை அடிச்ச. அதுவுமில்லாம ஹெச். ஓ. டி கிட்டயே திமிரா வேற பேசியிருக்க" என்று கடுமையாக வினாவை தொடுக்க,

"அவன் தப்பு பண்ணான் அதான் அடிச்சேன்" என்று கூறுகையிலே இடை நுழைந்த ஆகாஷ்,

"சார் அவன் சொல்ற எதையும் நம்பாதிங்க சார். அவன் ஜூனியர்ஸ ராக் பண்ணான். நான் அதை தட்டி கேட்டேன் அதுக்கு என்னை போட்டு அடிச்சிட்டான்" என்று வேகமாக பதிலளித்தான்.

முதல்வர், "வல்லபன் நீ ராகிங் பண்ணியா?" என வினவ,

"சார் இவன் பொய் சொல்றான் வல்லா யாரையும் ராக் பண்ணலை" என்று அஜய் வல்லபனுக்கு பதிலாக மொழிந்தான்.

"அஜய் நான் உன்கிட்ட கேக்கலை"
என்றவர்,

வல்லபனிடம், "நீ சொல்லு ராகிங் பண்ணியா?" என்று வினவ,

"இல்லை" என்று ஒற்றை வரியில் பதில் வந்தது.

முதல்வருக்கு வல்லபனை பற்றியும் அவனது குடும்பத்தை பற்றியும் நன்றாக தெரியும். அவன் செய்தால் ஆமாம் நான் தான் செய்தேன் என்று திமிராகவே ஒத்துக் கொள்வான்.

ஏன் முதல்வர் வல்லபனது தந்தையின் நெருங்கிய நண்பரும் கூட. இந்த விடயத்தில் நிச்சயமாக அவன் மீது எந்த தவறும் இருக்காது என்று தெரியும்.

ஆகாஷ் தான் ஏதோ தவறாக செய்துள்ளான் அதன் பொருட்டே அடித்துள்ளான். இருந்தும் அவன் எதற்காக அடித்தான் என்பதை தெரிந்து கொள்ளவே அழைத்தார்.

அவன் கூறாது இருப்பதிலே அது வேறு ஏதோ கூற இயலாத விடயம் என்று அறிந்து கொண்டவர்
ஆகாஷிடம்,

"அவன் யாரை ராக் பண்ணாண். அவங்களை வர சொல்லு" என்றதும் ஆகாஷிடம் சிறிது தடுமாற்றம்.

"அது இவன் அந்த பசங்களை மிரட்டி வச்சிருக்கான் சார். அவங்க இங்க வந்து சொல்ல பயப்பட்றாங்க" என்றான்.

ஆகாஷின் தடுமாற்றமே அவனது நிலையை கூறியது.

மேலும் துருவி விசாரித்தால் விடயம் வெளியே வந்துவிடும் இருந்தும் இதனால் எந்த யாருக்காவது பிரச்சனை வந்துவிட்டால் என்ன செய்வது.

அவர் யூகித்தபடி இது நிச்சயமாக பெண்கள் தொடர்பான விடயம் தான் அதனால் இதனை இங்கேயே முடிக்க முடிவு செய்தவர் ஆகாஷை ஒரு முறை ஆழ்ந்து பார்த்துவிட்டு,

"வல்லபன் உங்கப்பா ரொம்ப ரெக்வஸ்ட் பண்ணி கேட்டுக்கிட்டதால இந்த டைம் எக்ஸ்யூஸ் கொடுக்கிறேன். ஒரு அப்பாலஜி லெட்டர் எழுதி கொடுத்துட்டு போ" என்று மொழிய,

"நோ சார் என் மேல எந்த தப்பும் இல்லை. நான் அப்பாலஜி லெட்டர் கொடுக்க முடியாது. நீங்க ஆக்ஷன் எடுக்குறதுனா எடுத்துக்கோங்க" என்று அழுத்தமாக பதிலளித்தான்.

அவனது தோரணையிலே ஒரு திமிர் தெரிந்தது. செல்வாவின் விழிகள் அவனை தான் அதிர்வுடன் நோக்கியது.

'முதல்வரிடமே எப்படி பேசுகிறான்' என்று.

அவனது பதிலில் முதல்வருக்கே கோபம் வந்துவிட்டது. அவன் யாருக்கோ உதவ போய் தான் ஆகாஷை அடித்துள்ளான் என்று வல்லபனின் தந்தை தேவேந்திரன் சக்கரவர்த்தி மூலம் அறிந்து கொண்டவர் மன்னித்து விடலாம் என்று தான் நினைத்திருந்தார்.

ஆனால் அவனது அலட்சிய பாவனையில் அவருக்கும் சினம் துளிர்த்தது‌. ஒரு முதல்வர் என்றும் பாராமல் எப்படி பதிலளிக்கிறான்.

என்னதான் நடந்திருந்தாலும் அவன் ஆகாஷை பொது இடத்தில் அடித்தது மிகவும் தவறு என்று எண்ணியவர்,

"என்கிட்டயே இவ்ளோ திமிரா பேசுற.‌ உனக்கு ஒன் வீக் சஸ்பெண்ட்" என்று கோபமாக மொழிந்தார்.

"ஓகே சார் தாங்க்யூ " என்று தோள் குலுக்கலுடன் பதிலளித்தவன் எதுவும் தன்னை பாதிக்காத பாவனையில் வெளியேறி செல்ல,

செல்வா தான் இம்முறையும் அதிர்ந்து பார்த்தாள்.

மனது மறுநொடியே அவன் எப்படி நடந்தால் என்ன அவனை கல்லூரியில் இருந்து ஒரு வாரம் விலக்கிவிட்டனர் அவன் செய்த தவறுக்கு இந்த தண்டனை சரிதான் என்று நினைத்து கொண்டாள்.

முதல்வர் அவர்களையும் வெளியேற கூற,

ஆகாஷிற்கு முதல்வருக்கு எதுவும் தெரியாது தப்பித்துவிட்டோம் என்ற நிம்மதியும் வல்லபனையும் கல்லூரியில் இருந்து ஒரு வாரம் விலக்கு கிடைத்ததை நினைத்து மகிழ்ந்தபடி வந்தவன் செல்வாவிடம்,

"ரொம்ப தாங்க்ஸ் செல்வா. எல்லாரும் வேடிக்கை பார்த்தப்ப நீ தான் எனக்காக ஹெல்ப் பண்ணியிருக்க" என்று நன்றி நவிழ்ந்தான்.

"இதுலென்ன இருக்கு ஆகாஷ். தப்பு நடந்தா யாரா இருந்தாலும் தட்டி கேட்றனும். நீ இனி அவர்கிட்ட கேர்புல்லா இரு" என்று கூறியவள் திரும்ப வெளியே வல்வபன் தன் நண்பர்களுடன் நின்றிருந்ததை கண்டாள்.

அவர்களை கடந்து செல்லும் நேரம் ஆள்காட்டி விரலால் கண்ணாடியை சரி செய்தபடி அவர்களை முறைத்து பார்த்தாள்.

வல்லபனின் பார்வையும் அவள் மீது தான் அவர்களை முறைக்கும் அந்த விழிகள் மீது தான்.

அஜய், "என்ன முறைக்கிற. செய்றதயும் செஞ்சிட்டு முறைப்பு வேற?" என்று கூற,

மதன், "எல்லாம் உன்னால தான்" என்று வேறு மொழிய,

அவ்வளவு தான் செல்வாவிற்கு கோபம் தலைக்கேறிவிட்டது.

"நான் என்ன தப்பெல்லாம் உங்க ப்ரெண்ட் மேல தான்" என்று வார்த்தைகளை விட,

"உனக்கு தெரியுமா அவன் மேல தப்புன்னு" என்று அஜய் எகிறினான்.

"அஜய்…" என்றவனின் அழுத்தமான குரலில் சட்டென்று அஜயின் குரலில் சுருதி குறைந்துவிட்டது.

எங்கே கோபத்தில் அஜய் எதையாவது உளறிவிடுவான் என்று தான் வல்லபன் அவனை அமைதிப்படுத்தினான்.

இதில் நிதானமடைந்தவன்‌, "வல்லா மேல எந்த தப்பும் இல்லை" என்று பொறுமையாக பேச,

"ராகிங் பண்றது தப்புல வராதா? சார் சஸ்பென்ஷனோட விட்டாரு. நானா இருந்திருந்தா டிஸ்மிஸ் பண்ணிடுவேன்" என்று வல்லபனை பார்வையால் பஸ்மாக்கியவள் விருட்டென்று திரும்பி செல்ல,

வல்லபனின் விழிகள் அவளது தாளத்திற்கேற்ப அசைந்தாடும் கூந்தலில் பதிய இதழ்களில் மென்னகை நெளிந்தது.

'போகின்றவள் அவனையும் சேர்த்து கொண்டு செல்கிறாளோ…?' என்று சந்தேகம் வேறு எழுந்தது.

"இந்த பொண்ணு வேற என்ன நடந்துச்சுனு தெரியாம இப்படி பண்ணிடுச்சு" என்று மதன் புலம்பியவாறு திரும்பியவன் வல்லபனின் முகத்தை பார்த்துவிட்டு,

"என்னடா நீ சிரிச்சிட்டு நிக்கிற. உங்கப்பா கேட்டா என்ன பதில் சொல்றது" என்று அதிர்ச்சியாக கேட்டான்.

அதற்கும் பதிலாக இதழ்களில் குறுநகை பூத்தது.

அஜய், "ஏன்டா அவன் அப்பாவை எப்படி சமாளிக்கிறதுனு கேக்குறான். நீ சிரிச்சிட்டு நிக்கிற" என்று வினவ,

"ஹ்ம்ம்… அப்பா கேட்டா உங்க மருமக ஆசைப்பட்டா அதான் சஸ்பென்ஷன் ஆர்டரை வாங்கிட்டேன் சொல்லுவேன்" என்றுவிட்டு கல்லூரியில் இருந்து ஒரு வாரம் விலக்கியதற்கான கடிததத்தை பெற்று கொண்டு நகர்ந்துவிட்டான்


அதனை கேட்டவர்களுக்கு தான் அவன் கூறியது புரிய நொடி நேரம் ஆக,

"மச்சான்…" என்று சத்தமாக கூவியேவிட்டான்.

அஜய்யின் சத்தத்தில் அவர்களை கடந்து சென்றவர்கள் கூட திரும்பி பார்க்க,

வல்லபனும் திரும்பி ஒரு மின்னல் புன்னகையை சிந்திவிட்டு செல்ல,

"மச்சான் இப்படி தலைகுப்புற விழுந்துட்டியேடா" என்று சிரிப்புடன் மொழிய,

திரும்பாது நடந்தவனின் இதழ்களில் மந்தகாச புன்னகை.

மனமெங்கும் சற்று முன்னர் தன்னை முறைத்து உறுத்துவிழித்தவளிடமே வேரூன்றி விட்டது.

மனம் முதல்வர் அறையில் தான் பேச பேச விழிகளில் அபிநயம் பிடித்து அதிர்வை காண்பித்தவளது பாவனைகளிலே உழன்றது.

அந்த விழிகள் காட்டும் பாவனையில் உள்ளுக்குள் ஏதோ குறுகுறுப்பு. இதயம் லேசாக நழுவுவது போல எண்ணம்.

இப்போது அஜய்யிடம் அவள் சண்டையிட்ட போது கூட மனம் அவர்களது உரையாடலை கவனியாது எதிரே நின்றிருந்த ஜான்சி ராணி மீது தான்.

என்னவோ உள்ளுக்குள் செய்தாள் அந்த ஜான்சி ராணி.

இதழ்கள் தாமாக, "ஜான்சி ராணி" என முணுமுணுக்க, லேசான வெட்கப் புன்னகையுடன் இதழ்கள் தலை முடியை கோதியது…

அவனது பின்னே ஓடிவந்த அஜய்,

"நீ இப்படி போய் மாட்டிக்கிட்டியேடா" என்று சிரிக்க,

சிரித்தபடி அவனது தோளில் அடித்தவன் மைதானத்தை நோக்கி சென்றான்…

ஒரு பெண்ணின்

நினைவென்ன செய்யும்
எனை கத்தி இல்லாமல்
கொய்யும் இதில் மீள
வழி உள்ளதே இருப்பினும்
உள்ளம் விரும்பாது….
விழிகளின் அருகினில்
வானம் வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்
இது ஐந்து புலன்களின் ஏக்கம்
என் முதல் முதல் அனுபவம் ஓ…


இங்கோ வல்லபனுக்கு தண்டனை வாங்கி கொடுத்துவிட்டோம் என்று மகிழ்ச்சியில் இருந்தவளுக்கு மறுநாளே அவன் முன் தயங்கி தயங்கி நிற்க போகிறோம் என்று தெரியவில்லை. தெரிந்திருத்தால் இத்தனை தூரம் விழிகளால் முறைத்திருக்க மாட்டாளோ….?

**************************

எல்லோராலும் சில கணங்கள் அதிர்விலிருந்து வெளிவர இயலவில்லை.

'பத்து மாதம் சுமந்து ஆசையாக பெற்ற பிள்ளையை யாரென கேட்கிறாளே…' என தோன்ற,

வேதவள்ளி, "பெத்த பிள்ளைய யாருன்னு கேக்குற…?" என அதிர்ச்சி விலகாதவராக கேட்டார்.

அவரது கேள்வியில் செல்வாவிடத்தில் தான் ஏகமாக அதிர்வு அலை அலையாக பரவியது.

"ம்மா…" என்று ஏக்கத்தை கண்களில் தேக்கி உதடு பிதுக்கி தன்னை காணும் அக்குழந்தையை காணும் நொடி உள்ளுக்குள் ஏதோ நழுவியது.

நினைவுகள் தப்பினாலும் உணர்வுகள் மறக்குமா…? அதுவும் தாய்மையை உணர்ந்த நெஞ்சம் சேய்யை உணராதோ…?

ஒரு கணம் ஆழ்ந்து அதியை நோக்கியவள்,

"என் குழந்தையா…?" என்று கேட்டவளின் இதழ்கள் நடுங்கியது.

"ஹ்ம்ம் ஆமா உன் குழந்தை தான்" என்று வேதவள்ளி அழுத்தி கூற,
அவளிடம் நம்பாத பார்வை தான்.

"எனக்கு கல்யாணம் ஆகிடுச்சாம்மா?" என்று வினவியவளின் நெஞ்சுக் கூட்டில் சிறிதாய் ஒரு நடுக்கம்.

அவளது அடுத்தடுத்த வினாவில் சுற்றி இருந்தவர்கள் அதிர,

பவி, "க்கா என்ன பேசுற நீ… உனக்கு என்ன ஆச்சு? அதிய பார்த்து யாருன்னு கேக்குற? கல்யாணம் ஆகிடுச்சான்னு கேக்குற?" என்று வினா எழுப்ப,

தியாகு, "உனக்கு எதுவும் ஞாபகம் இல்லையா…?" என்று வினவினான்.

'ஆமாம்' என்று தலையசைத்தவள் தனது நினைவடுக்கெங்கும் அதியை தேடி பார்த்தாள்.
'ம்ஹூம்' சுத்தமாக நினைவில்லை.

பவி, "அதெப்படி நாங்க எல்லாரும் ஞாபகத்தில இருக்கோம். அதி மட்டும் இல்லை…?" என்று சந்தேகத்தை எழுப்ப,

செல்வாவின் மூளை மீண்டும் தேடல் படலத்தை தொடர தலை விண்ணென்று வலிக்க துவங்கியது.

கரங்களால் தலையை பிடித்து கொண்டவள்,

"ம்ஹூம் எனக்கு எதுவும் ஞாபகம் வரலை" என்று கூற, மற்றவர்கள் பதறிவிட்டனர்.

ராமநாதன், "செல்வாம்மா நீ ஸ்ட்ரெயின் பண்ணிக்காத டா" என்றவருக்கு இப்போது தான் மகள் எழுந்து வந்துள்ளாள் மீண்டும் எதாவது ஆகிவிட்டால் என்ன செய்வதென்று அச்சம் வந்துவிட்டது.

தியாகு, "ஆமா நீ ரெஸ்ட் எடு ஸ்ட்ரெயின் பண்ணிக்காத. நான் டாக்டரை வர சொல்றேன்" என்றுவிட்டு வெளியேறினான்.

எல்லோருக்கும் பதைபதைப்புடன் நின்றிருக்க பத்து நிமிடங்களில் மருத்துவர் உள்ளே நுழைந்தவர் "நான் இவங்களை செக் பண்ணனும் வெளியே இருக்கங்க" என்று அனுப்பிவிட்டார்.

மற்றவர்கள் சென்றதும் குழப்பத்துடன் தன் முன்னே அமர்ந்திருப்பவளின் எதிரே அமர்ந்தவர் புன்னகையுடன்,

"ரிலாக்ஸ் செல்வ மீனாட்சி. உங்களுக்கு எந்த ப்ராப்ளமும் இல்லை" என்று இயம்ப,

அவளும் மெலிதாக புன்னகைக்க முயற்சித்தவளுக்கு வதனமெங்கும் குழப்ப ரேகைகள்.

"நான் கேக்குற கேள்விக்கு கரெக்டா யோசிச்சு பதில் சொல்லுங்க" என்றவரிடம் தலையசைப்பை பதிலாக கொடுத்தாள்.

"இப்போ உங்களோட ஏஜ் என்ன?" என வினவ,

"ஹான்" என்றவள் புரியாது விழித்தாள்.

மருத்துவர், "இப்போ உங்களுக்கு எதுவரைக்கும் நினைவுல இருக்கு?" என வினா தொடுக்க,

வெகுவாக முயன்று யோசித்தாள்.

"ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகாம இப்போதைக்கு நினைவு இருக்கவரை சொல்லுங்க" என்று மருத்துவர் மொழிய,

"இப்போ நான் காலேஜ் பர்ஸ்ட் இயர் படிச்சிட்டு இருக்கேன் டாக்டர்" என்று செல்வா பதிலளித்தாள்.

"ஓ‌… ஓகே" என்றவரின் முகம் சிந்தனையை பிரதிபலிக்க,

"கடைசியா காலேஜ்ல நடந்தது எதுவும் ஞாபகம் இருக்கா?" என வினா தொடுத்தார்.

வெகுநேர முயற்சிக்கு பிறகு,

"தெரியலை டாக்டர்" என்றவள் பின்னர்,

"டாக்டர் எனக்கு உண்மையாவே கல்யாணம் ஆகி குழந்தை இருக்கா? எனக்கு எதுவுமே நினைவுல வர மாட்டுது. எனக்கு என்ன ஆச்சு டாக்டர்" என்று பரிதவிப்புடன் கேட்க,

"சில் செல்வ மீனாட்சி உங்களுக்கு எதுவும் ஆகலை. ஒரு சின்ன ஆக்சிடென்ட்ல தலையில அடிபட்டு கோமாவுல இருந்திங்க. இப்போ உங்களுக்கு கான்சியஸ் வந்திடுச்சு" என்க,

"ஓ…" என்று இழுத்தவள் மெதுவாக,

"எவ்வளவு நாள் கோமாவுல இருந்தேன் டாக்டர்" என்றாள்.

"சிக்ஸ் மந்த்ஸ்" என்று மருத்துவர் கூற,

"ஓ… அப்போ அந்த ஆக்ஸிடென்ட்னால தான் எனக்கு எல்லாமே மறந்து போச்சா?" என்க,

"ஹ்ம்ம் ஆமா. பட் ஒரு சின்ன கரெக்ஷன். உங்களுக்கு எல்லாமே மறக்கலை. ஒரு குறிப்பிட்ட சில விஷயங்கள் தான் மறந்திருக்கு" என்றார் மருத்துவர்.

அதற்கும், "ஓ…" என்று முகத்தில் வருத்தத்தை காண்பிக்க,

"டோன்ட் வர்ரி செல்வ மீனாட்சி மறந்தது எல்லாம் சீக்கிரமே ஞாபகம் வந்திடும். இப்போ நீங்க ரெஸ்ட் எடுங்க" என்று கூறிவிட்டு வெளியேற,

வெளியே நிற்பவர்கள் பதட்டத்தை பூசி கொண்டு, "டாக்டர் செல்வாக்கு என்ன ஆச்சு?" என்று வினவினார்கள்.

மருத்துவர், "ஒன்னுமில்ல பயப்படாதிங்க" என்றவர் தியாகுவிடம்,

"நீங்க என் கேபினுக்கு வாங்க" என்றவாறு செல்ல,

அச்ச ரேகை பெற்றோர் முகத்தில் விரவியது.

தியாகு, "ம்மா, ப்பா பயப்படாதிங்க. அவளுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது அதான் டாக்டரே சொல்லிட்டாருல்ல‌. நான் போய் டாக்டரை பார்த்திட்டு வர்றேன்" என்று மருத்துவரது அறையை நோக்கி சென்றான்.

இங்கே விழிமூடி படுத்திருந்த செல்வாவின் கருமணிகள் அங்குமிங்கும் அசைந்து அவளது சிந்தனையை பிரதிபலித்தது.

தியாகு, "டாக்டர் செல்வாக்கு என்னாச்சு. ஏன் அவளுக்கு மேரேஜ் பாப்பா எதுவும் ஞாபகத்தில இல்லை?" என்க,

"மிஸ்டர் தியாகு நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க. உங்க சிஸ்டருக்கு போஸ்ட் ட்ராமாட்டிக் அம்னீஷியா" என்று மருத்துவர் மொழிய,
தியாகு புரியாது நோக்கினான்.

"அதாவது ஆக்ஸிடென்ட் நடக்குறதுக்கு முன்னாடி சில வருஷங்களா நடந்ததை மட்டும் அவங்க நினைவுல இல்லை. ஐ மீன் மறந்துட்டாங்க" என்க,

விழிகளில் தேக்கிய பயத்துடன் அதிர்ந்து மருத்துவரை கண்டான் தியாகு.

"இது நூத்துல பத்து பேருக்கு வரும். இப்போ அவங்களுக்கு காலேஜ் பர்ஸ்ட் இயர் படிச்சது வரை தான் நினைவுல இருக்கு‌. இப்போ அவங்களை பொறுத்தவரை அவங்க பர்ஸ்ட் இயர் ஸ்டூடன்ட்" என்று மருத்துவர் கூற,

"டாக்டர் அப்போ இதெல்லாம் எப்போ அவளுக்கு ஞாபகம் வரும்?" என தியாகு கேட்க,

"அதை நாம கன்பார்மா சொல்ல முடியாது. ஏன் இன்னைக்கு கூட வரலாம். நாளைக்கு வரலாம். ஒன் வீக், ஒன் இயர் எவ்ளோ நாள் வேணா ஆகலாம்" என்றவர்,

"இன்னும் சில கேஸ்ல கடைசி வரை ஞாபகம் வராமலே போயிருக்கு" என்ற நொடி தியாகுவிற்கு அதிர்ச்சி இடியாக விழுந்தது.

"டாக்டர்…." என்றவனுக்கு பேச்சு வரவில்லை.

"நான் உண்மையத்தான் சொல்றேன் மிஸ்டர் தியாகு. என்னால அவங்களுக்கு பழசெல்லாம் ஞாபகம் வந்திடும்னு உறுதியா சொல்ல முடியாது. அவங்களுக்கு சிடி, எம்.ஆர்.ஐ எல்லாம் எடுத்து பார்த்திட்டு சொல்றேன்" என்று மருத்துவர் இயம்ப,

சரியென தலையசைத்தவன் எழுந்து வந்தான்.

பவி, "ண்ணா டாக்டர் என்ன சொன்னாரு" என்க,

மருத்துவர் கூறியதை தெரிவித்தான்.

அதனை கேட்டு மற்றவர்கள் முழுதாக அதிர்வை தாங்கி பார்த்தனர்.

"வாங்க உள்ள போகலாம். யாரும் இதை பத்தி செல்வாக்கிட்ட டீப்பா பேசாதிங்க. பாத்துக்கலாம்‌‌ வாங்க" என்றவன் உள்ளே செல்ல,

அவர்களது அரவத்தில் விழிதிறந்து பார்த்தாள் செல்வா.

மற்றவர்கள் அவளிடம் என்ன கூறுவதென்று தெரியாது பார்க்க,

தட்டென்று சத்தத்துடன் வேகமாக கதவு திறக்கப்பட அழுத்தமான காலடிகளுடன் நுழைந்தான் அவன்…

யார் அவன்…?



















 
Active member
Messages
205
Reaction score
116
Points
43
அடடா பயபிள்ளைக்கு முதல் வருஷ காலேஜ் படிக்கிற வரை நினைப்பு இருக்குன்னா, அப்போ வல்லபனை சஸ்பெண்ட் பண்ணுனதும் ஞாபகம் இருக்குமோ 😀😀😀😀😀😀
 
Administrator
Staff member
Messages
606
Reaction score
836
Points
93
அடடா பயபிள்ளைக்கு முதல் வருஷ காலேஜ் படிக்கிற வரை நினைப்பு இருக்குன்னா, அப்போ வல்லபனை சஸ்பெண்ட் பண்ணுனதும் ஞாபகம் இருக்குமோ 😀😀😀😀😀😀
Irukathu athu third year la nadanthathu😁😁😁
 
Well-known member
Messages
1,081
Reaction score
770
Points
113
Vallaban👌👌👌👌👌👌👌👌👌
Selva voda husband yaara irukkum, ippo varathu yaara irukkum 🤔🤔

Superrrrrrrrr moving ma, waiting for next ud
 
Well-known member
Messages
612
Reaction score
348
Points
63
Hero va suspensed pannidaga 🥺🥺clg la iruthu namma hero ku love vanthuruju poola selva mela💖💖 .. amnesia va Meena ku ayoo clg first year yar avan Namma vallapan hero thaana👍💞👍
 
Messages
524
Reaction score
403
Points
63
அடேய் வல்லபா அவ உன் மேலே கம்ப்லெண்ட் கொடுத்துட்டு இருக்கா நீ சைட் அடிச்சிட்டு இருக்கியே டா செல்வா கோமா இருந்து வந்துட்டா இப்போ உள்ளே வந்தது யாரு 🤔🤔 வல்லபனா
 
Administrator
Staff member
Messages
606
Reaction score
836
Points
93
அடேய் வல்லபா அவ உன் மேலே கம்ப்லெண்ட் கொடுத்துட்டு இருக்கா நீ சைட் அடிச்சிட்டு இருக்கியே டா செல்வா கோமா இருந்து வந்துட்டா இப்போ உள்ளே வந்தது யாரு 🤔🤔 வல்லபனா
Guess pannunga
 
Top