• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

புன்னகை 27

Administrator
Staff member
Messages
464
Reaction score
794
Points
93
புன்னகை 27:

"சுதி‌ அந்த தாம்பூலத்துல தேங்காயும் பூவையும் வைக்க சொன்னேனே வைக்கலயா?" என்று ரேகா வினவ,

"இதோ எடுத்து வக்கிறேன்த்த. மறந்துட்டேன்" என்ற சுதிக்ஷா அறைக்கு தேங்காயை எடுக்க செல்ல,

வேதவள்ளி, "அண்ணி இருக்க பூ போதுமா இல்லை தியாகுவ வாங்கிட்டு வர சொல்லவா?" என்று வர,

"இல்லை இருக்கட்டும் இதுவே போதும்னு நினைக்கிறேன். பத்தலைனா விக்ரம வாங்கிட்டு வர சொல்றேன் தெரியாத இடத்தில தம்பியை ஏன் அலையவிட்றிங்க" என்று விட்டார்.

வேதவள்ளி சம்மதமாக தலையசைத்து நகர,

"நல்ல நேரம் ஆரம்பிக்கப் போகுது செல்வா ரெடியாகிட்டாளா?" என்று வினவ,

ரேகா, "ரெடியாகி இருப்பான்னு தான் நினைக்கிறேன். நான் போய் சுதியை அழைச்சிட்டு வர சொல்றேன்" என்றவர்,

"சுதி செல்வாவை அழைச்சிட்டு வா. எல்லாரும் வந்துட்டாங்க நாம ஆரம்பிச்சிடுவோம்" என்க,

"சரிங்கத்தை" என்ற சுதிக்ஷா நகர போக,

"அண்ணி நான் போய் செல்வாண்ணியை அழைச்சிட்டு வர்றேன்" என்று அக்ஷயா துள்ளிக் கொண்டு ஓடினாள்.

இங்கு ஆண்களோ வாசலில் நின்று வரும் விருந்தினர்களை வரவேற்ற படி இருந்தனர்.

செல்வா ஹைத்ரபாத் வந்த ஒரு வாரத்திலே அபிஷேக்கும் ரேகாவும் வந்து அவர்களை வீட்டிற்கு அழைத்து சென்றிருந்தனர்.

முதலில் ரேகாவிற்கு அதியை ஏற்றுக்கொள்ள ரேகாவிற்கு சற்று கடினமாக இருந்தாலும் மகனுக்காக ஏற்று கொண்டார்.

அதியும் பாட்டி பாட்டி என்று அவரிடம் ஒட்டிக் கொள்ள அவளது கள்ளமில்லா சிரிப்பில் இவர் மயங்கித்தான் போனார்.

அதன் பிறகு பாட்டியும் பேத்தியும் எந்நேரமும் ஒன்றாக தான் சுற்றினர்.

ரேகா செல்வாவையும் நன்றாகவே பார்த்து கொண்டார்.

செல்வாவை ஏற்றுக்கொள்ள அங்கு யாருக்கும் எந்தவித பிரச்சனையும் இருக்கவில்லை.

ஆன்லைன் சுதிக்ஷாவிற்கு மட்டும் தங்கையின் இடத்தில் இவள் வந்துவிட்டாளே என்று வருத்தம் இருக்கத்தான் செய்தது.

ஆனால் அதை வெளிப்படையாக காண்பிக்க முடியாதே.‌ மாமியாரே என்று கொண்ட பிறகு தான் என்ன செய்ய முடியும்.

அதுவும் வல்லபனை எதிர்த்துவிட்டு அவ்வீட்டில் இருந்துவிட முடியுமா? ஆதலால் விருப்பம் இல்லாவிடினும் அவளை ஏற்று கொண்டாள்.

எல்லாம் விதிப்படி தான் நடக்கும் தன் தங்கைக்கு இங்கு வந்து வாழ கொடுத்து வைக்கவில்லை என்று மனதை தேற்றி கொண்டாள்.

முதலில் செல்வாவிடம் சுதி பட்டும் படாமல் பழகினாலும் அவளது குணத்தினால் ஈர்க்கப்பட சுதிக்கும் செல்வாவை மிகவும் பிடித்துவிட்டது.

இருவரும் அக்கா தங்கை போல மாறியிருந்தனர். மருமகள்கள் இருவரும் இத்தனை ஒற்றுமையாக இருப்பதில் ரேகாவிற்கும் மகிழ்ச்சி தான்.

நாட்கள் வேகமாக கடந்து செல்ல செல்வாவின் ஒன்பதாம் மாதத்தில் அவளுக்கு வளைகாப்பு செய்வதாக முடிவு செய்து வல்லபனது வீட்டிலே சிறிதாக நெருங்கிய சொந்தங்களை மட்டும் அழைத்திருந்தனர்.

"அண்ணி ரெடியாகிட்டிங்களா?" என்று உள்ளே நுழைந்த அக்ஷயா பளீர்சிவப்பு நிறத்தில் நீலச்சாம்பலில் கரை வைத்த பட்டு சேலையில் அதற்கு பொருத்தமான அணிகலன்களுடன் தாய்மையின் பூரிப்புடன் முகம் மின்ன நின்றிருந்தவளை கண்டு அசந்து தான் விட்டாள்.

"வாவ் அண்ணி செம்ம க்யூட்டா இருக்கிங்க" என்று கூற,

செல்வாவின் முகத்தில் மென்னகை.

"இப்போ மட்டும் அண்ணன் உங்களை பார்த்தாரு டோட்டல் பிளாட் தான்" என்று கூறி கண்ணடிக்க,

செல்வா சிரிப்பும் முறைப்புமாக அவளை கண்டாள்.

"இப்போ மட்டுமா மாமா எப்போ அக்காவ பாத்தாலுமே பிளாட் ஆகிட்றாரு" என்று தானும் பவி தன் பங்கிற்கு வார,

தங்கையும் முறைத்த செல்வா, "அண்ணி பாருங்கண்ணி இவங்களை" என்று சிணுங்க,

"ஏய் வாலுங்களா பேசாம இருங்க. டைம் ஆச்சு இவளை அழைச்சிட்டு போகலாம்" என்று கூற,

தனது மேடிட்ட வயிற்றில் ஒரு கையை வைத்தபடி அவர்களுடன் முகம் முழுவதும் புன்னகையுடன் நடந்து வந்தாள் செல்வ மீனாட்சி.

வெளியே வந்து நடுநாயகமாக போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தவளது விழிகள் கணவனை தேட,

செல்வாவின் தேடலுக்கு சொந்தக்காரன் அவளது புடவை நிறத்திலே கரை வைத்த வேட்டி சட்டையில் முகம் முழுவதும் புன்னகையுடன் உள்ளே பிரவேசித்தான்.

அருகில் அவனது கையை பிடித்தபடி பெற்றோரின் உடை நிறத்திலே பட்டுபாவாடை சரசரக்க கள்ளமில்லா சிரிப்புடன் வந்தாள் அவர்களது புதல்வி அதியா.

அவர்களை பார்த்தவளது இதழ்களிலும் நிறைவான புன்னகை தான்.

கணவனது விழிகள் மனைவியை கண்டதும் ஒரு கணம் புருவத்தை சிரிப்புடன் ஏற்றி இறக்க,

அதில் இவளது புன்னகை பெரியதாக தலையை தாழ்த்தி கொண்டாள்.

புவனா, "எல்லாரும் வந்தாச்சுனா ஆரம்பிச்சிடலாமா? நல்ல நேரம் தொடங்கிடுச்சு" என்று வினவ,

ரேகா, "ஆரம்பிச்சிடலாம் எல்லாரும் ஓரளவுக்கு வந்துட்டாங்க.‌ இனி வர்றவங்க வந்து சேர்ந்துக்கட்டும்" என்று விட,

ஒவ்வொருவராக வந்து செல்வாவின் கன்னத்தில் மஞ்சளை பூசிவிட்டு வளையலை போட்டுவிட்டு சென்றனர்.

ஒவ்வொராக வந்து செல்ல செல்வாவின் பார்வை கணவனிடம் தான் அடிக்கடி பட்டு மீண்டது.

கூடவே அருகில் இரட்டை ஜடையில் மல்லிப்பை அழகாக வைத்து‌ அதனை ஆட்டி ஆட்டி தந்தையிடக்ஷஹஸக்ஷம் ஏதோ பேச அவனும் கர்ம சிரத்தையாக பதிலளித்து கொண்டிருந்தான்.

'அப்படி என்னதான் தந்தைக்கும் மகளுக்கும் இடையில் பேச' என்ற எண்ணம் வந்தது அவளுக்கு.

காரணம் எப்போது பார்த்தாலும் இருவரும் பேசியபடி தான் இருப்பார்கள்.

அதியாவிற்கு தான் ஆயிரம் சந்தேகம் எழும் அதனை தீர்த்து வைப்பதே அவளது தந்தையின் வேலையாக இருந்தது.

எல்லோரும் சந்தனத்தை வைத்து முடிக்க,

ரேகா, "எல்லாரும் வச்சு முடிச்சாச்சுனா சாப்பிட அழைச்சிட்டு போகலாம்" என்க,

முதலில் செல்வாவை அழைத்து சென்று அவளை உண்ண வைத்த பிறகு மற்றவர்களுக்கு பந்தி பரிமாறப்பட்டது.

வல்லபன் அங்குமிங்கும் ஓடி வந்திருந்திருந்தவர்களை கவனித்காலும் அவ்வபோது விழிகள் மனைவியிடம் படிந்து மீண்டது.

விழாவிற்கு அஜய்யும் அவனது மனைவி குழந்தையுடன் வந்திருந்தான்.

எல்லோரும் உண்டு முடிந்து கிளம்பி செல்ல நேரம் மதியத்தினை நெருங்கி இருந்தது.

வல்லபனின் குடும்பத்தினரும் செல்வாவின் குடும்பத்தினரும் தான் எஞ்சி இருந்தனர்.

மதிய சாப்பிட்டிற்கான வேலை நடக்க பெரியவர்கள் அங்கே குழுமியிருந்தனர்.

இங்கு செல்வாவை அமர வைத்து அக்ஷயாவும் பவியும் கேலி பேசிக் கொண்டிருந்தனர்.

வல்லபன் தந்தை மாமானார் மற்றும் மச்சானுடன் பேசியபடி இருந்தான்.

செல்வாவிற்கு தன் ஒவ்வொரு அசைவிலும் சலசலவென ஒலியெழுப்பிய கண்ணாடி வளையலின் ஓசையில் உள்ளுக்குள் ஏதோ ஒரு உணர்வு அதனை விவரிக்க இயலவில்லை.

ஆனால் மனதை சிலிர்க்க வைக்கும் அந்த உணர்வு பிடித்திருந்தது.

தங்கையுடன் பேசியபடி இருந்தவள் தானாக இயல்பாக கையை அசைப்பது போல அசைத்து கொண்டாள்.

"ம்மா…" என்று தன்னை சுரண்டிய அதியின் செயலில் பேச்சை நிறுத்தியவள்,

"என்னடா செல்லம்?" என்க,

"ம்மா பாப்பா எப்போ வரும்?" என்று அதி முக்கிய வினாவை எழுப்பினாள்.

வல்லபன் உனக்கு தம்பி பாப்பா பிறக்கப் போகிறது என்று கூறியதில் இருந்தே அடிக்கடி அதி இந்த வினாவை எழுப்புவாள்.

செல்வாவும் 'சீக்கிரமா வரும்' என்று பொறுமையாகவே ஒவ்வொரு முறையும் கூறினாள்.

அதே போலவே இம்முறையும் கூற வர,

வினிதா இடை நுழைந்து, "அதிக்குட்டி இப்போ எதுக்கு குட்டிப் பாப்பாவ கேக்குற?" என்று வினவ,

"குட்டி பாப்பா வந்ததும் அதுக்கூட சேர்ந்து விளையாட தான்" என்று பெரிய மனிதியாக பதிலளித்தாள்.

"அப்படியா?" என்று வினிதா வினா தொடுக்க,

"ஹ்ம்ம் ஆமா. அப்பா தான் சொன்னாங்க தம்பி பாப்பா என்கூட விளையாட வரும்னு" என்று தலையசைத்து அசைத்து கூற,

அதில் அவளது கன்னம் கிள்ளி கொஞ்சிய வினிதா,

"ஒரு பாப்பா போதுமா? நீங்க ரெண்டு பேர் தான இருப்பிங்க விளையாட ஆள் பத்தாது. உங்கப்பாக்கிட்ட இன்னொரு பாப்பா கேளு" என்க,

இத்தனை நேரம் இவர்களது சம்பாஷனைகளை புன்னகையுடன் கேட்ட செல்வா அதிர்ந்து, "அண்ணி" என்க,

"ப்ச் நீ சும்மா இரு" என்று சிரிப்பும் கூறிய வினிதா அதியிடம்,

"என்னடா பட்டு அத்தை சொன்ன மாதிரியே கேப்பதான?" என்று வினவினாள்.

"கேட்டா கிடைக்குமா?" என்று வேறு அவள் சந்தேகம் கேட்க,

"கண்டிப்பா கிடைக்கும்" என்று முவரும் கோரஸாக கூற,

செல்வா மூவரையும் முறைப்பும் சிரிப்புமாக பார்த்தாள்.

"அப்போ ஓகே நான் இப்போவே அப்பாட்ட கேக்குறேன்" என்று அதி குதித்து ஓடப்பார்க்க,

செல்வா தான், "அச்சச்சோ" என்று சிறிதாக அலறியிருந்தாள்.

அங்கு வல்லபனுடன் அவளது தந்தை மாமானார் விக்ரம் தியாகு என்று எல்லாருமே அமர்ந்திருக்க இவள் சென்று இப்படி கேட்டால் என்ன ஆவது என்று உள்ளம் பதற,

சட்டென்று அதியை பிடித்து தூக்கியிருந்த வினிதா, "இப்போ வேணாம்டா செல்லம் இப்போ எல்லாரும் இருக்காங்க. அப்புறமா அப்பா தனியா இருக்கும் போது கேளு" என்று கூற,

"ஏன்?" என்று ஒற்றை வார்த்தையில் வினவினாள் அதி.

"அது…" என்று வினிதா இழுக்க,

இப்போது செல்வா நிஜமாகவே முறைத்தாள்.

இதற்குள் அக்ஷி இடை புகுந்து,

"அது எல்லாரும் இருக்கும் கேட்டா குட்டி பாப்பா லேட்டா வரும்" என்று சமாளிக்க,

"அப்பிடியா அப்போ நான் தனியா இருக்கும் போதே கேக்குறேன்" என்று சமத்தாக கூற,

"சமத்துக்குட்டி டி நீ" என்று பவி முத்தமிட்டாள்.

"சமத்துனா என்ன?" என்று பதில் வினவினாள் அதியா.

செல்வா, 'இதோ கேள்வி கேக்க ஆரம்பிச்சிட்டா நீங்களே சமாளிங்க' என்று சிரிப்புடன் மற்றவர்களை பார்க்க,

அக்ஷி, "சமத்துனா குட் கேர்ள்டா செல்லம்" என்க,

"ஆமா அதியா குட் கேர்ள் தான்" என்று சிரிப்புடன் தலையசைக்க,

பவி, "பட்டும்மா அங்க தனுஷ் தனியா விளையாட்றான் பாரு அவன் கூட ஜாயின் பண்ணிக்கோ" என்று அனுப்பிவிட, அவர்களது பேச்சு தொடர்ந்தது.

நேரம் ஆறு மணியை நெருங்க செல்வாவின் குடும்பத்தினர் எல்லோரும் கிளம்ப ஆயத்தமாகினர்.

அபிஷேக் வந்து தங்கிவிட்டு தான் செல்ல வேண்டும் என்று பல முறை கூறியிருக்க,

ராமநாதன் வரும்போதே முக்கிய வேலை ஒன்று உள்ளது அன்றே கிளம்ப வேண்டும் என்று கூறிவிட்டிருந்தார்.

இத்தனை முறை கூறியும் வரவில்லை என்றால் எதாவது வேலை இருக்கும் என்று மற்றவர்களும் வற்புறுத்தவில்லை.

இவ்வளவு நேரம் குடும்பத்தினருடன் சிரித்து பேசி மகிழ்ந்துவிட்டு அவர்கள் கிளம்பவும் செல்வாவிற்கு சற்று வருத்தமாக இருந்தது.

'மறுமுறை வரும் போது தங்க வைத்து தான் அனுப்ப வேண்டும்' என்று நினைத்து கொண்டாள்.

வல்லபன் தனது மகிழுந்திலே அவர்களை ஏற்றி சென்று விமான நிலையத்தில் விட்டு வந்தான்.

செல்வாவிற்கும் உடன் செல்ல ஆசை தான் ஆனால் மருத்துவர் அதிகமாக பயணம் செய்ய கூடாது என்று கூறியிருந்தார்.

அதன் காரணமாகவே வல்லபன் செல்வாவை தாய் வீட்டிற்கு அனுப்பவில்லை என்று வெளியே கூறினாலும் அவளை பிரிய அவனுக்கு மனமில்லை என்பதே உண்மை.

'ஏற்கனவே இத்தனை வருடங்கள் பிரிந்து இருந்ததே இந்த ஜென்மத்திற்கு போதும் இனி எதற்காகவும் பிரிவில்லை' என்று உறுதியாக நினைத்து கொண்டான்.

அவன் மனம் புரிந்த செல்வாவும் 'நான் இங்கேயே இருக்கேன்' என்று கூறிவிட, யாரும் எதுவும் கூறவில்லை.

எல்லோரும் செல்லும் வரை நின்றிருந்தவள் உள்ளே வர அவளது முகத்திலிருந்த களைப்பை கண்ட ரேகா,

"ரொம்ப டயர்டா தெரியிற போ ரூம்க்கு போய் ரெஸ்ட் எடு" என்று கூறினார்.

சரியென தலையசைத்தவள் மேடிட்ட வயிற்றை பிடித்தபடி அறைக்குள் சென்று மெத்தையில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.

காலையில் இருந்து அமர்ந்தே இருந்தது முதுகு லேசாக வலிக்க உடலும் சற்று அசதியாக இருக்க அப்படியே படுத்துவிட்டவள் சிறிது நேரத்தில் உறங்கியும்விட்டாள்.

விமான நிலையம் சென்று எல்லோரையும் வழி அனுப்பிவிட்டு மகளுடன் வந்த வல்லபனது விழிகள் மனைவியை தேட,

கூடத்தில் அமர்ந்து அலைபேசியை பார்த்து கொண்டிருந்த அக்ஷி, "அண்ணி ரூம்ல இருக்காங்க. அம்மா தான் ரெஸ்ட் எடுக்க சொன்னாங்க" என்று தானாக பதிலளிக்க,

மகளுடன் பேசியபடி அறைக்கு சென்றான்.

உறங்கி கொண்டிருந்த மனைவியை கண்டவன் சடுதியில் பேச்சை நிறுத்திவிட்டு,

"ஷ் சைலண்ட் அம்மா தூங்குறா" என்று மகளிடம் கூற,

அவளும் வாயின் மேல் விரலை வைத்து,

"ஷ் சைலண்ட் அம்மா தூங்குறா" என்று தந்தையை போலவே கூற,

இவனுக்கு மகளது செயலில் அப்படி ஒரு புன்னகை அரும்ப,

"க்யூட்டி" என்று சத்தமில்லாது மகளை கைகளில் வாரி கொஞ்சினாலும் மனைவி அவர்களது அரவத்தில் கண்விழித்துவிட்டாள்.

"இப்போ தான் வந்திங்களா?" என்று செல்வா வினவ,

"ஹ்ம்ம் இப்போ தான் வந்தோம்" என்றவன் நீள்விருக்கையில் நன்றாக சாய்ந்து அமர்ந்தவனது பார்வை பட்டு சேலை சரசரக்க தலையில் வைத்து சிறிதாக வாடி‌ ஒரு பக்க தோளில் வழிந்த மல்லிகை பூவும் கன்னத்தில் பூசிய சந்தனத்துடன் முகம் முழுவதும் ஜொலிப்புடன் அமர்ந்திருந்த மனைவி மீது ரசனையாய் படிந்தது.

முன்பைவிட சற்று உடல் பூசினாற் போல இருக்க முகமும் சற்று மினிமினுத்திருந்தது.

என்னவோ மனைவி அத்தனை பேரழகியாக தெரிந்தாள் கணவனுக்கு.

அவனது பார்வையை உணர்ந்தவள் சிரிப்புடன் அவனை போலவே ஒரு புருவத்தை ஏற்றி இறக்க,

அவன் முகத்தில் இருந்த புன்னகை இமை நீண்ட சிரிப்பாக மாறியது.
ஆனால் ரசனை துளியும் குறையவில்லை.

நிமிடத்திற்கு மேல் அவனது பார்வையை தாள மாட்டாதவள் முகத்தை திருப்பி வேறேதையோ பார்ப்பது போல பாவனை செய்தவள்,

"அப்படி என்ன தான் அப்பாவும் பொண்ணும் பேசுவிங்களோ எப்போ பார்த்தாலும்" என்று பேச்சை மாற்றும் பொருட்டு கூறி அலுத்து கொள்ள,

"எனக்கும் என் பொண்ணுக்கும் பேச ஆயிரம் சீக்ரெட்ஸ் இருக்கும்" என்றவன் மகளிடம்,

"என்னடா" என்க,

அவளுக்கு என்ன புரிந்தார்போல ஆமாம் என்று தலையசைத்தாள்.

"ஆமா பொல்லாத ரகசியம்" என்று செல்வா இதழை சுழிக்க,

"ஆமா பொல்லாத ரகசியம் தான் நாங்க ஒரு மிஷனை பத்தி பேசிட்டு இருந்தோம்" என்று சிரிப்பை அடக்கியபடி கூற,

"மிஷனா?" என்று செல்வா புரியாத பார்வை பார்த்தாள்.

"ஆமா மிஷன் தான். என் பொண்ணுக்கு விளையாட ஒரு தம்பி பாப்பா பத்தாதாம் இன்னொன்னு வேணுமாம் அதை பத்தி தான் பேசிட்டு இருந்தோம்" மந்தகாச சிரிப்புடன் கூற,

அதில் விழிகளை விரித்தவள் மகளிடம், "உண்மையாவே கேட்டுட்டியா?" என்க,

அதி, "ஹ்ம்ம்" என்று தலையை அனைத்து பக்கமும் அசைத்து வைக்க,

வல்லபனோ, "என் பொண்ணு கேட்டு அதை இல்லைன்னு சொல்ல முடியுமா அதான் ஸ்டார்ட் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன்" என்று விஷமச் சிரிப்புடன் கண்ணடிக்க,

இவளுக்கு முகம் ரத்தமாக சிவந்து விட அவனை முறைத்தாள்.

"என்ன ப்ராசஸ்ஸ ஸ்டார்ட் பண்ணிடலாமா?" என்று சிரிப்புடன் மேலும் அவளை வம்பிழுக்க,

"ப்ச் அதி முன்னாடி என்ன பேசுறிங்க" என்று முறைக்க,

"அவ முன்னாடி பேசத்தான் முடியும்" என்று சிரித்தவனை,

"வர வர உங்க சேட்டை தாங்கலை" என்று தலையணையை எடுத்து அடிக்கத் துவங்க,

சிரிப்புடன் அடியை பெற்று கொண்டவன் மனைவியை அணைத்து கொள்ள,

"ப்பா நானு நானு" என்று மகள் குதிக்க,

"வாடா…" என்று மகளையும் சேர்த்து அணைத்துக் கொண்டான்.

பின்னர் ரேகா அவர்களை உணவுன்ன அழைக்க,

"ம்மா செல்வாக்கு டையர்டா இருக்காம் இங்க கொடுத்துவிடுங்க. நாங்க இங்கேயே சாப்பிட்டுக்கிறோம்" என்று கூறிவிட்டு வைக்க,

"நான் எப்போ டையர்டா இருக்குனு சொன்னேன். ஏன் இப்படி சொன்னிங்க.‌ அத்தை எதாவது நிறைச்சுக்க போறாங்க" என்று அவனது தோளில் அடிக்க,

"ப்ச் ஒன்னும் நினைக்க மாட்டாங்கடி" என்றான்.

"ம்ஹூம் ஏன் இப்படி சொன்னிங்க" என்று புலம்ப,

"இப்படியே புலம்பிட்டு இருந்த நேரா அம்மாக்கிட்ட போய் என் பொண்டாட்டிய மிரட்டி வச்சிருக்கங்களா உங்களை பார்த்து அப்படி பயப்பட்றான்னு கேட்ருவேன்" என்று எழுந்துவிட,

இவன் செய்தாலும் செய்துவிடுவான் என்று தோன்ற,

"அச்சச்சோ நான் எதுவும் சொல்லலை" என்று அவன் கையை பிடித்து தடுத்திருந்தாள்.

அவன் பதிலளிக்கும் முன் பணியாளர் உணவுடன் வர எழுந்து சென்று அதனை வாங்கியவன் பால்கனியில் உள்ள மேஜை மேலே வைத்துவிட்டு,

"ஜான்சி ராணி சாப்பிட வா" என்க,

"ம்க்கூம்" என்று முகத்தை திருப்பி கொண்டாள்.

அவளது கோபத்தில் புன்னகை பிறக்க,

"குட்டிம்மா நீ சாப்பிட வாடா. நான் அம்மாவ கூப்பிடு வர்றேன்" என்று மகளை அழைத்து அமர வைத்தவன் மனைவியிடம் சென்று,

"ஜான்சி ராணி" என்று சிரிப்புடன் அழைக்க,

அவள் முகத்தினை மேலும் திருப்பிக் கொள்ள,

"என்னவாம் மேடம்க்கு" என்க,

'செய்யிறதை செஞ்சிட்டு என்னவாம் நொன்னவாம்' என்று மனதிற்குள் முணுமுணுக்க,

"ஏய் சாப்பாட வெயிட் பண்ண வைக்க கூடாது வா சாப்பிட்டு வந்து சண்டையை கண்டினியூ பண்ணுவோம்" என்று கூறியும் பதிலில்லில்லை.

"உனக்கு வாய்ல பேசுனா எல்லாம் சரியா வராது" என்றவன் சடுதியில் அவளை கைகளில் ஏந்திவிட,
அவள் அதிர்ந்து விழிவிரித்தாள்.

அதனை சட்டை செய்யாதவன் அவளை அமர வைக்க வேக வேகமாக இருந்த இடத்தில் இருந்து எழுந்து சென்ற அதி மெத்தையில் அமர்ந்து கொண்டு,

"ப்பா என்னையும் தூக்கிட்டு போ" என்று கையை அவனை நோக்கி நீட்ட,

இருவருக்கும் அவளது செயலில் சிரிப்பு வந்துவிட்டது.

செல்வா, "இவளுக்கு எப்போ பார்த்தாலும் என் கூட போட்டி தான்" செல்லமாக மகளை முறைக்க,

வல்லபன் சிரிப்புடன் மகளை தூக்கி வந்து அமர வைத்து இருவருக்கும் தானே உணவையும் ஊட்டிவிட்டு தானும் உண்டவன் அனைத்தையும் பணியாளரை எடுத்து செல்லுமாறு கூறியவன் மகளை தோளில் போட்டு அவளுக்கு கதை சொல்ல துவங்கியிருந்தான்.

இது வாடிக்கையாக நடக்கும் நிகழ்வு தானே என்று செல்வாவும் எழுந்து பால்கனிக்கு சென்று நின்று கொண்டாள்.

சிலு சிலுவென்ற காற்று உடலை தழுவிச் செல்ல முகத்தில் மோதிய கூந்தல் கற்றைகளை ஒதுக்கியபடி இருந்தவள் வல்லபன் ஏதோ கூறுவதும் மகள் பதிலுக்கு வினவுவதுமாக இருப்பதை கவனித்தாள்.

ஒருவழியாக மகளை உறங்க வைத்துவிட்டு அவன் வர வந்ததுமே,

"உங்களுக்கு என்னை விட அதிய தான் பிடிக்கிது" என்று முறைக்க,

முதலில் புரியாது விழித்தவன் பின்னர் சத்தமாக சிரித்துவிட்டான்.

வல்வபனது சிரிப்பில் இவளது முறைப்பு அதிகமாகியது.

"ஏய் அவ நம்ம பொண்ணுடி" என்று கூற,

"ப்ச்…" என்றவள் முகத்தை திருப்ப,

"க்யூட் பொசசீவ்னெஸ் பட் அது வந்திருக்க ஆள் தான் தப்பு" என்று மனைவியை அணைக்க வர,

"போங்க போய் உங்க பொண்ணுக்கிட்டயே பேசுங்க" என்று சிலுப்ப,

"அடியே வர வர உங்க ரெண்டு பேருக்கும் எனக்கு டிப்பரண்ஸ் தெரிய மாட்டுது" என்ற அவளை இறுக்கிக் கொள்ள,

அவனது மார்பில் முகத்தை அழுத்தியவள், "இப்போலாம் நீங்க என்னைவிட அவக்கூட தான் அதிகமாக டைம் ஸ்பென்ட் பண்றீங்க" என்க,

அவளது முகத்தை தன்னிடம் திருப்பியவன், "ஓய் ஜான்சிராணி அதி யாரு நம்ம பொண்ணு. நீயில்லாம அவ வந்திருப்பாளா. ஹ்ம்ம் சொல்லு. இதுக்கெல்லாம் மேல எனக்கு இந்த உலகத்திலே ரொம்ப பிடிச்ச ஒருத்தி நீ தான் சரியா" என்று அவள் நெற்றியில் இதழ் பதிக்க,

"இங்க" என்று கன்னத்தை காண்பித்தாள்.

"ஒய் நாட்" என்றவன் அவளது கன்னத்தினை பிடித்து திருப்பி அவனுக்கு பிடித்தமான மச்சத்தில் முத்தமிட்டு இதழில் தொடர்ந்து விலக,

"ப்ராடு ப்ராடு நான் எங்க கேட்டேன் நீங்க எங்க கொடுத்திருக்கிங்க" என்று செல்லமாக முறைக்க,

"ஐயாவுக்கு தாராளம் குணம் அதான் நீ கேட்காத இடத்துலயும் கொடுத்திருக்கேன்" என்று மந்தகாச சிரிப்புடன் கூற,

"ஆஹான்" என்று இழுத்தவளது முகத்திலும் புன்னகை மின்ன, வல்லபன் அவளை இடையோடு சேர்த்து அணைத்து கொள்ள அவளும் அவனுக்குள் வாகாய் பொருந்தி போனாள்.

இந்த மனித பிறவியே ஒரு தூய நேசத்தில் வாகாய் பொருந்தி கொள்வதற்கு தானே! ஆக இருவரும் ஒருவருக்குள் ஒருவர் அழகாய் பொருந்தி போயினர்…
 
Active member
Messages
346
Reaction score
233
Points
43
Super story azhagana love la unexpected twist oda full ah interesting ah pochi vallaban oda love chanceless athuvum.nega vacha twist unexpected oru edathula kooda ipadi oru twist varum.nu doubt kooda varala andha alavuku irundhuchi vasi oda entry vallaban ku thirupi kedaikavae kedaikathu nenacha avan oda love selva late aanalum avan kita yae serndhuta
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
So sweet of vallapan selva aathi kutty❤️❤️ vallapan pure love thaa selva avanuku illama Poona aparama kuda thirupa kedaju Iruka vasi character illana ethu nadathu irugathu la 😊😊father daughter Combo ultimate tha pa🎉🎉💯 selva oda cute possiveness finally family ya ellarum santhosama irugaga 💖🥰🥰 cute love story semma woww 💝💝💝💝
 
Top