• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

புன்னகை 26

Administrator
Staff member
Messages
464
Reaction score
794
Points
93
புன்னகை 26:

கோவையிலிருந்து ஹைத்ரபாத் செல்லும் பயணிகளின் கவனத்திற்கு என்று விமான நிலையத்தில் அறிவிப்பு தமிழ் ஆங்கிலம் ஹிந்தி என்று மூன்று மொழிகளிலும் மாற்றி மாற்றி ஒலிக்கப்பட,

மகளை ஒரு கையில் பிடித்தபடி மற்றொரு கையில் பையுடன் எழுந்து கொண்டாள் செல்வ மீனாட்சி.

"தியாகு பார்த்து போடா. சேஃப் ஜெர்னி ப்ளைட் ரீச் ஆனதும் எனக்கு கால் பண்ணு. இல்லைனா மெசேஜ் பண்ணு" என்று வாஞ்சையாக தங்கையின் தலையை தடவ,

"சரிண்ணா" என்று தலையசைத்தாள் அவள்.

"ப்ச் போதும் அவளுக்கு காது வலிக்கப் போகுது சொன்னதயே எவ்ளோ டைம் சொல்லுவிங்க" என்று வினிதா கடிய,

"நீ பேசாம இருடி. நான் கூட வர்றேன் இல்லை அப்பாவயாது அழைச்சிட்டு போகலாம். கன்சீவ்வா இருக்கும் போது தனியா அதுவும் பாப்பாவோட ட்ராவல் பண்றா எனக்கு பயமா இருக்காதா?" என்று மனைவியை முறைக்க,

"நீங்க தான் பயந்திட்டு இருக்கிங்க.‌ அங்க பாருங்க உங்க தங்கச்சி நல்லா தெளிவா தைரியமா தான் பேசிட்டு இருக்கா" என்று வினிதா கணவனுக்கு ஆறுதல் கூற,

செல்வா நேரமாகிவிட்டதை உணர்ந்து குடும்பத்தினரது மீது பார்வையை பதித்தாள்.

தந்தையை பார்த்தவள் போய் வருகிறேன் என்றவாறு தலையசைக்க,

"பாத்து போய்ட்டு வாடா" என்று அவரும் மகளது கைப்பிடித்து கூற,

பின்னர் புவனாவிடம் பார்வை திரும்ப,

செல்வாவின் அருகில் வந்தவர் நெருங்கி அணைத்து,

"இப்போ தான் ஒரு சரியான முடிவை எடுத்திருக்க" என்று புன்னகைத்தார்.

செல்வா தானும் பதிலுக்கு மென்னகையை உதிர்த்தாள்.

தனுஷ் வந்து செல்வாவின் கையை பிடித்து, "அத்த ஊருக்கு போய்ட்டு எப்போ திரும்பி வருவ?" என வினவ,

அவனுயரத்திற்கு குனிந்து, "சீக்கிரமா வர்றேன்டா. உன் மாமாவையும் கூட்டிட்டு வர்றேன்" என்று அவனது கன்னத்தில் முத்தமிட்டாள்.

"ஹ்ம்ம்" என்று தலையசைத்தவன் அதியாவிடம் ஏதோ கேட்க,

அவளும் தலையசைத்து ஏதோ பதில் கூறினாள்.

விமானம் கிளம்புவதற்கான இறுதி அறிவிப்பு வர,

"ஓகே போய்ட்டு வர்றேன்" என்று பொதுவாக எல்லோரிடமும் கூறிவிட்டு உள்ளே சென்று அனைத்து செயல்முறைகளையும் முடித்துவிட்டு உள்ளே நுழைந்து அவளுக்கான இருக்கையில் அமர்ந்து மகளையும் அமர வைத்து கொண்டாள்.

மனது கடந்த முறை கோவையில் இருந்து ஹைத்ரபாத் சென்றதை நினைவில் கொண்டு வந்தது.

மகளுக்கு இருக்கை வாரை அணிவித்தவள் விழிகளை மூடி லேசாக சாய்ந்து கொண்டாள்.

மூடிய இமைகளுக்குள் சிரிப்புடன் வந்து நின்றான் வல்லபன் செல்வாவின் வல்லபன் சக்கரவர்த்தி.

நேற்று காணொளி அழைப்பில் அவனது தோற்றத்தை கண்ட பிறகு மனதிற்குள் ஒரு எண்ணம் அவனை பார்க்க வேண்டும் என்று ஆழியாய் சுழற்றடித்தது.

வேதா வந்து பேசவில்லை என்றாலும் செல்வா நிச்சயமாக இன்று கிளம்பியிருப்பாள்.

ஆளாளுக்கு செல்வா மனதில் என்ன உள்ளது என தெரியாமல் அவள் வல்லபன் மீது கோபமாக இருப்பதாக அவர்களாக எண்ணி அவளுக்கு அறிவுரை கூறி செல்ல,
அதனை அமைதியாக தான் கேட்டிருந்தாள்.

நேற்று அபிஷேக் மற்றும் ரேகா பேசிய போதும் அதே மனநிலை தான்.

மற்றவர்களது எண்ணம் போல அவளுக்கு வல்லபன் மீது எந்த கோபமும் நிச்சயமாக இல்லை.

உண்மை தெரிய வந்த போது அவளிருந்த மனநிலை அது செல்வாவிற்கே புரியவில்லை.

எதிர்பாராத விதமாக வாழ்வை புரட்டிப்போட்ட புயலில் சிக்கிக் கொண்டவள் தப்பிக்கும் மார்க்கம் அறியாது தவித்திருந்தாள்.

என்னவோ தன் அனுமதி இன்றி தானறியாது தன்னுடைய வாழ்வில் ஏற்பட்ட ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களை அவளால் ஏற்று கொள்ள இயலவில்லை.

அதுவும் நேற்று வரை கணவன் என்று ஒருவனுடன் நேசத்தில் பிண்ணி பினைந்து வாழ்ந்து கொண்டிருக்கும் போது திடீரென அவனில்லாது போய் வேறொருவர் அந்த இடத்தில் அதுவும் தனக்கே தெரியாது எனும் போது உடைந்து போயிருந்தாள்.

தனக்காகவே வாழ்ந்த ஒரு தூய நேசத்தின் இழப்பை அவளால் தாங்க முடியவில்லை.

அதுதான் துக்கத்தில் அழுது கரைந்தாள் அந்த நொடி நிச்சயமாக மனது வல்லபனை பற்றியும் இந்த வாழ்வை பற்றியும் சிந்திக்கவில்லை.

ஓரளவு தன்னை தானே அவளாக தேற்றி‌ நடந்த நிகழ்வினை ஏற்று கடந்து வந்த போது தான் தன்னுடைய தற்போதைய வாழ்வு நினைவிற்கு வந்தது. வல்லபனும் வந்து நின்றான்.

ஏற்கனவே அவனை ஏமாற்றிவிட்டோம் என்ற குற்றவுணர்வில் இருந்தவளுக்கு இப்போது மேலும் மேலும் குற்றவுணர்வு அதிகமாகியது.

இத்தனை வருடங்கள் கழித்த பின்னரும் தன்னை இந்த ஒரு சூழ்நிலையிலும் ஏற்றுக் கொண்டானே…?

அதுவும் அவன் அதியை பார்த்து கொண்டவிதம் அது தான் மேலும் அவளை உடையச் செய்திருந்தது.

தான் அவனுக்கு துன்பத்தை மட்டுமே கொடுத்திருக்க அவன் தனக்கு எல்லாமுமாக எப்போதுமே வந்து நிற்கிறானே…?

என்று பலவாறாக எண்ணம் தோன்ற உள்ளுக்குள் மறுகிப் போனாள்.

அதுவும் உண்மை தெரிந்த பிறகும் 'சீக்கிரமா என்கிட்ட வந்திடு செல்வா' என்றவனது நம்பிக்கையான வார்த்தையில் தான் அதிகமாக உடைந்து போனாள்.

இத்தனை நம்பிக்கைக்கு தான் தகுதியானவளா? இந்த அளப்பரிய நேசத்திற்கு தான் தகுதியானவளா? என்று நினைத்து நினைத்து வருந்தினாள்.

இந்த அதீத குற்றவுணர்ச்சி தான் அவனை இப்போது வரை காண செல்லாததற்கு காரணம்.

அதுவும் தான் கருவுற்றிருக்கும் விடயத்தை கேள்விப்பட்டால் உறுதியாக தன்னை காண வந்துவிடுவான் தனக்கு அவரை எதிர்கொள்ளும் திறனில்லை என்று நினைத்தே கூற வேண்டாம் என்று சொல்லியிருந்தாள்.

ஆனால் அதுவும் இப்போது ஒரு பெரிய தவறாக தெரிகிறது.

ஆக தன் மீது உள்ள தவறெல்லாம் பூதகரமாக தெரிந்ததில் தான் அவனை எதிர்கொள்ள தயங்கி இத்தனை நாட்களாக அறைக்குள் முடங்கியிருந்தாள்.

ஆனால் வல்லபனை அந்நிலையில் கண்ட பிறகு நேசம் கொண்ட நெஞ்சத்தின் துன்பத்தை காண முடியாது இனி தன்னால் அவருக்கு எந்தவித துன்பமும் நேரக் கூடாது என்று சிந்தித்து தான் இந்த பயணம்.

அவர்கள் செல்வா கோபமாக இருப்பதாக நினைத்து பேசிய போது அவன் மீது கோபப்பட எந்த தகுதியும் எனக்கில்லை என்றே இவளுக்கு தோன்றியது.

பயணங்கள் சிந்தனையுடனே முடிய நீண்ட நெடிய மணிநேரங்களுக்கு பிறகு ஆம் அவளுக்கு அப்படித்தான் இருந்தது.

கணவனை பார்க்க செல்ல முடிவெடுத்த பிறகு எப்போதடா விடியும் கிளம்பலாம் என்று காத்திருந்தாள்.

உள்ளுக்குள் அவளையறியாமலே ஒரு ஆர்ப்பரிப்பு நீர் குமிழிகளாக பொங்கி எழுந்தது.

தான் வருவதை பற்றி அவரிடம் யாரும் கூறக்கூடாது என்று கண்டிப்புடன் வீட்டினரிடம் கூறியிருந்தாள்.

அவர்களும் வல்லபனுக்கு ஆனந்த அதிர்ச்சியாக இருக்கட்டும் என்று கூறவில்லை.

வெளியே வந்து ஒரு நான்கு சக்கர வாகனத்தில் ஏறியவள் செல்ல வேண்டிய முகவரியை கூறிவிட்டு மகளை அணைத்தபடி அமர்ந்து சாளரத்தை வெறித்தாள்.

அதியாவிற்கு தான் தந்தையை பார்க்க செல்கிறோம் என்று அறிந்ததிலிருந்து அப்படி ஒரு ஆர்ப்பரிப்பு ஆனந்தம்.

விழிகளை விரித்து, "நிஜமாவா? அப்பாவ பாக்க போறோமா?" என்று அவள் வினவியதில்,

செல்வாவிற்கு இருவரையும் பிரித்து வைத்து வருத்திவிட்டோம் என்று புரிந்தது.

தந்தையை காண எவ்வளவு ஏக்கம் இவளுக்கு அவருக்கும் அப்படித்தானே இருந்திருக்கும் என்று எண்ணம் வந்தது.

"ஹ்ம்ம் பாக்க மட்டும் இல்லை.‌ அப்பா கூடவே இருக்கப் போறோம்" என்ற போது, அதியாவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

மகளின் மகிழ்ச்சியில் தான் தாய்க்கும் கணவனை காணப் போகும் குறுகுறுப்பு உள்ளே பிறந்தது.

முக்கால் மணிநேர பயணத்தில் அவர்களது குடியிருப்பு வளாகத்தினை அடைந்தவள் இறங்கி உள்ளே வர,

"மேம் எப்படி இருக்கிங்க. நீங்க ஊருக்கு போயிருந்ததா சார் சொன்னாரு" என்று காவலாளி விசாரிக்க,

"நல்லா இருக்கேன்" என்று புன்னகையுடன் பதிலளித்தாள்.

"சார் இன்னும் ஆபிஸ்ல இருந்து வரலையே மேம். நீங்க வர்றதை அவர்கிட்ட சொல்லலையா மேம்?" என்று வினவ,

"ஹ்ம்ம் நான் சொல்லாம தான் வந்திருக்கேன்" என்க,

"ஓ… சர்ப்ரைஸா வந்திருக்கிங்களா? மேம்" என்று அவர் சிரிக்க,

இவளும் புன்னகையுடன், 'ஆம்' என்று தலையசைத்தாள்.

"நான் ஸ்பேர் கீ வச்சு திறந்து விட்றேன் மேம்" என்றவர் சாவியை எடுத்து வந்து அவர்களது வீட்டை திறந்து விட,

அவருக்கு நன்றி கூறி உள்ளே நுழைந்தவளுக்கு ஏதோ தன்னிடத்தற்கு வந்துவிட்ட எண்ணம்.

பயணம் செய்தது சற்று களைப்பாக இருக்க நீள்விருக்கையில் சாய்ந்தமர்ந்தவள் அலைப்பேசியை எடுத்து வீட்டிற்கு தான் வந்துவிட்டதாக தியாகுவிற்கு செய்தியை அனுப்பினாள்.

விழிகள் வீட்டினை ஆராய்ந்து. அவள் எப்படி விட்டு சென்றிருந்தாளோ ஒரு சதவீதம் கூட மாறாது அப்படியே எந்த பொருளும் கலையாமல் இருந்தது.

அவளுக்கு தெரியுமே இது இப்படித்தான் இருக்கும்.

சில நிமிடங்கள் அமர்ந்திருக்க அதி,

"ம்மா பசிக்கிது" என்று வயிற்றை காண்பிக்க,

விமானத்தில் அப்போது உண்டது அதி இவ்வளவு நேரம் தாங்கியதே பெரிது என்று நினைத்தவள்,

"பசிக்குடா அதிக்குட்டிக்கு. அம்மா ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்து உனக்கு சாப்பிட‌ எதுவும் செஞ்சு தர்றேன்" என்க,

"சரிம்மா" என்று தலையசைத்தாள் அதியா.

"இங்கேயே உட்கார்ந்திரு. அம்மா பைவ் மினிட்ஸ்ல வந்துட்றேன்" என்று தொலைக்காட்சியை உயிர்பித்து அவளுக்கு பிடித்த பொம்மை படத்தை போட்டுவிட்டு பையை எடுத்து கொண்டு அறைக்குள் சென்றாள்.

அலமாறியை திறந்து இருப்பதிலே இலகுவான இரவு உடை ஒன்றை எடுத்தவள் அணிய போகும் முன் அவளது கண்களில் பட்டது மெத்தை மேல் விரிக்கப்பட்டிருந்த அவளது சேலையை கவனித்தாள்.

ஒரு நொடி அசையாது நின்றுவிட்டாள். தன்னுடைய நினைவில் தான் தனது சேலையை எடுத்து வைத்து கொண்டு உறங்கியிருக்கிறான் என்று புரிந்த கணம் விழிகள் கலங்கியது அவனது நேசத்தில்.

நொடிகள் நிமிடங்களாக கடக்க சேலையை வெறித்தபடி நின்றுவிட்டவளுக்கு மகள் வெளியே பசியுடன் இருப்பது உரைக்க,

பெருவிரலால் கண்ணீரை சுண்டிவிட்டவள் உடைமாற்றி கொண்டு வேகமாக வெளியே வந்தவள்‌ அடுக்களைக்கு விரைந்தாள்.

அங்கும் அனைத்தும் சுத்தமாக தான் இருந்தது.

'சாப்பிட‌‌ ஏதாவது இருக்கிறதா?' என்று தேடிப்பார்க்க, எதுவுமே இல்லை.

குளிர்சாதன பெட்டியை திறந்து பார்க்க பாலும் முட்டையும் இருந்தது.

சமைப்பதற்கு நேரம் ஆகும் என்று நினைத்தவள் பாலை காய்ச்சி மகளுக்கு பூஸ்ட்டை கலந்தவள் முட்டையை ஆம்லேட் போட்டும் எடுத்து கொண்டு மகளுக்கு ஊட்டிவிட்டு தானும் உண்டாள்.
அவளுக்கும் சிறிது பசித்தது தானும் கொஞ்சம் பாலை அருந்தினாள்.

நேரத்தை பார்க்க ஆறு மணியாகியிருந்தது.‌ வல்லபன் வர நேரம் இருந்தது.

அவனுக்கு பிடித்த ராகி புட்டை செய்து முடித்தவள் நேரத்தை பார்க்க ஏழு தான் ஆகியிருந்தது.

என்னவோ நேரம் நகராதது போல தோன்ற தானும் மகளுடன் அமர்ந்து தொலைக்காட்சியை வெறித்தாலும் மனது முழுதும் கணவனிடம் தான்.

இன்று அவளை சோதிக்கவென தாமதமாக வந்தவன் அழைப்பு மணியை அழுத்தினான்.

அவன் அழைப்பு மணியை அழுத்தியதிலே அவனுக்கு தன்னுடைய வருகை தெரிந்துவிட்டது அவளுக்கு புரிய இத்தனை நேரம் இல்லாத ஒரு தயக்கம் உள்ளே ஒட்டிக் கொண்டது.

மகள், "ம்மா அப்பா வந்துட்டாரு" என்று தாயை சுரண்ட,

"ஹ்ம்ம் வந்துட்டாரு. வா போய் கதவை திறக்கலாம்" என்று தனியாக செல்ல ஏதோ போல இருப்பதால் மகளையும் அழைத்து சென்றவள் கதவை திறக்க,

வெளியே நின்றிருந்த வல்லபனது முகத்தில் எந்தவித உணர்வுகளும் இல்லை.

சாதாரணமாக உள்ளே வர இவளுக்கு தான் சடுதியில் முகம் ஏதோ போல ஆகிவிட்டது.

அதியா, "ப்பா…" என்று ஆர்ப்பரிக்க,

"குட்டிம்மா" என்று முகம் முழுவதும் புன்னகையுடன் அவளை கைகளில் வாரியவன் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டான்.

செல்வா தான் ஏதோ போல ஆகிவிட்டவள் அமைதியாக கதவை மூடிவிட்டு உள்ளே வந்தாள்.

இங்கு அதியா, "ப்பா எனக்கு சாக்லேட் வாங்கி தர்றேன் சொன்ன?" என்று நினைவு வைத்து வினவ,

"குட்டிம்மாக்கு சாக்லேட் மட்டுமில்லை நிறைய டாய்ஸ் எல்லாமே வாங்கித் தர்றேன். நாளைக்கு நாம வெளியே போகலாம்" என்று சிரிப்புடன் கூறினான்.

"ப்பா பிக் சைஸ் பார்பி டால் வேணும்" என்று மகள் கேட்க,

"நீயே ஒரு க்யூட் டால் உனக்கு டாலா?" என்று வினவி அவளது வயிற்றில் ஊத, அதியா களுக்கி சிரித்தாள்.

தன்னை மட்டும் விட்டுவிட்டு தந்தையும் மகளும் தங்களுக்குள் பொருந்தி போனதை அவளுடைய விழிகள் ஏக்கமாக பார்த்தது.

அதனை வல்லபன் கண்டு கொண்டாலும் ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை.

முகத்தில் சோர்வு கொட்டிக் கிடந்தாலும் விழிகள் மின்ன மகளிடம் பேசும் கணவனை கண்டவளுக்கு அதன் காரணம் தாங்கள் தான் என்று மனது உணர்த்தியது.

"ஒரு டூ மினிட்ஸ்டா குட்டிம்மா ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்திட்றேன்" என்று செல்வாவை காணாது அறைக்குள் நுழைந்தவனது மனதிற்குள் இனம்புரியாத நிம்மதி பிறந்திருந்தது.

காரணம் மனையாளும் மகளும் அன்றி வேறு யாராக இருக்க முடியும்.
 
Administrator
Staff member
Messages
464
Reaction score
794
Points
93
மனைவி வந்துவிட்டாள் தன்னை தேடி தன்னுடன் வாழ வந்துவிட்டாள் என்ற நினைப்பே அவனுக்கு தித்திப்பை தர விழி மூடி ஆழ்ந்து சுவாசித்தான்.

காற்றில் கலந்து வந்த மனையாளின் வாசம் நாசிக்குள் நிறைந்து உள்ளத்தை நிறைக்க ஒரு கணம் விழி மூடி நின்றுவிட்டான்.

இங்கு செல்வாவோ அவனது பாரா முகத்தில் கலங்கி நின்றாள். வல்லபன் தன் மீது கோபமாக இருக்கிறான் அந்த கோபமும் மிகவும் நியாயமானது என்று மனதிற்கு புரிந்தது.

இருந்தும் உள்ளே வருத்தம் இழையோடியது. அவனது பாரா முகம் உயிர்வரை சென்று வதைத்தது.

அவன் கோபம் விரைவில் குறைந்துவிடும் என்று தன்னைத் தானே சமாதானம் செய்தவள் அவனுக்கு தேநீர் தயாரிப்பதற்காக அடுக்களை சென்றாள்.

உடை மாற்றி வந்த வல்லபன் மனைவி சமையலறையில் இருப்பதை கண்டுவிட்டு மகளுடன் அமர்ந்து கொண்டான்.

என்னவோ மனதும் வீடும் நிறைந்து போனது. அவள் தன்னுடன் இருக்கிறாள் தன் கண்முன் நடமாடுகிறாள் என்பதே எல்லையில்லா இன்பத்தை வழங்கிட மகளுடன் பேச துவங்கினான்.

மனைவி தேநீரை எடுத்து வர நிமிர்ந்து கூட பார்க்காது எடுத்து பருகியவன் பார்வை மகளிடம் தான்.

அதியாவுக்கு தந்தையிடம் கூற நிறைய இருந்தது. வீட்டுருகே இருந்த நாய் குட்டி முதல் தெருமுனைக்கு வந்து சென்ற யானை வரை கடந்த நான்கு மாதங்களாக நடந்ததை ஆர்வமாக கூற,

வல்லபனும் அவ்வளவு மகிழ்வுடன் கேட்டுக் கொண்டிருந்தான்.

செல்வா தான் பார்வையாளராகி போனாள்.

அவர்கள் பேச்சு நீண்டு கொண்டே செல்ல இரவுணவு நேரம் நெருங்கிவிட,

"டைம் ஆச்சு சாப்பிடலாமா?" என்று அவனிடம் தான் வினா தொடுத்தாள்.

அவனோ மகளிடம், "குட்டிம்மா சாப்பிடலாமா?" என்று வினா எழுப்ப,

"ஹ்ம்ம் சாப்பிடலாம்பா" என்று மகள் கூறியதும் அவளை அள்ளிக் கொண்டு உணவு மேசையில் அமர,

கேட்டது நான் என் முகத்தை கூட பார்க்க பிடிக்கவில்லையா அவருக்கு? என்று கலங்கிப் போனவள் மௌனமாக உணவை எடுத்து வைத்தாள்.

வல்லபன் தான் சாப்பிட்டபடியே மகளுக்கு ஊட்டிவிட்டவன் பின்னர் மகளை தோளில் போட்டபடியே அவளுக்கு வழக்கம் போல கதையை கூற துவங்க இவள் பாத்திரத்தை ஒதுங்க வைத்துவிட்டு அறைக்குள் சென்று மெத்தை மேலே அமர்ந்து கொண்டாள்.

தான் ஒருத்தி இல்லாதது போல நடந்து கொள்ளும் கணவனின் செயல் வெகுவாக பாதித்தது.

தனக்கு இது தேவை தான் அவரை எவ்வளவு தூரம் துன்பப்படுத்தியிருப்போம் அவருக்கும் கோபம் வரத்தானே செய்யும் என்று எண்ணம் ஜனித்தது.

தானே சென்று மன்னிப்பு கேட்கலாம் என்றாலும் தன்னுடைய தவறின் வீரியம் பெரிதாக இருக்க குற்றவுணர்வில் ஏதும் கேட்கவும் முடியவில்லை.

என்ன செய்வதென்று தெரியாமல் பரிதவித்தபடி அமர்ந்திருக்க உறங்கும் மகளை தோளில் தூக்கி வந்தவன் அருகில் இருந்த சிறிய மெத்தையில் படுக்க வைத்து போர்த்திவிட்டு அவளை ஒரு நொடி பார்த்தவனது பார்வை மேடிட்ட வயிற்றில் பதிந்து மீள தானும் ஓரமாக படுத்துக் கொள்ள இவளுக்குத் தான் விழிகள் நிறைந்துவிட்டது.

விழி சிமிட்டி அதனை உள்ளிழுத்தவள் தானும் விளக்கை அணைத்து விட்டு படுத்தாள்.

இருவருக்கும் இடையே நிறைய தூரம் இருக்க கணவனை நெருங்கி அவனது கதகதப்பான‌ அணைப்பில் துயில் கொள்ள பாவைக்கு ஏக்கம் பிறந்தது.

ஆனால் செய்யமுடியவில்லை விழிகளை மூடி உறங்க முயற்சித்தாள்.

இங்கு அவளுக்கு மறுபுறம் திரும்பி படுத்திருந்த வல்லபனுக்கு மனது ஆறவேயில்லை.

அப்படி என்ன கருவுற்றிருப்பதை கூட என்னிடம் கூற கூடாத அளவிற்கு தான் போய்விட்டேன்.

இவள் என்னை புரிந்து கொண்டு தானாக வருவாள் என்று காத்திருந்தாள் இவளுக்கு என்னை புரிய வைக்க மற்றவர்கள் தேவைப்படுகிறார்களா?

அவளுக்கா என்னை புரியவில்லையா? இல்லை தெரியவில்லையா?

என் தாய் தந்தை சென்று பேசினால் தான் இவள் என்னை புரிந்து தேடி வருவாளா? இல்லையெனில் வந்திருக்க மாட்டாளா?

அவ்வளவு தானா தன்னுடைய இத்தனை வருட நேசம் அன்பு என்று மனது புலம்பியது.

இருவருக்கும் உறக்கம் வரவில்லை. வல்லபன் அப்படியே படுத்திருக்க செல்வா புரண்டு புரண்டு படுத்தாள்.

வெகுநேரம் ஆகிவிட்டதால் செல்வாவிற்கு பசித்தது. கணவனது செயலில் சரியாக உண்ணவும் இல்லை.

பசியை பொறுத்து பொறுத்து பார்க்க ஒரு கட்டத்திற்கு மேல் தாளமாட்டதவள் எழுந்து அமர்ந்திட,

மனைவியின் செயலில் திரும்பியவன் அவள் அமர்ந்திருந்த விதத்தில் எழுந்து விளக்கை போட்டவன்,

"என்ன என்னாச்சுடா?" என்று கோபம் மறந்து பரிதவிக்க,

அவளுக்கு கோபத்திலும் அவனது அக்கறையில் விழிகள் கலங்கிட,

"ம்ஹூம் ஒன்னுமில்லை" என்று தலையசைத்தாள்.

ஆனால் அவள் முகம் வேறு ஏதோ கூற,

"என்னடா எதாவது செய்யுதா?" என்றவன் பதற,

உதடு கடித்து அழுகையை அடக்கியவள்,

"எதுவுமில்லை சும்மா தான் உட்கார்ந்தேன்" என்று மீண்டும் மறுபுறம் திரும்பி படுத்துவிட,

வல்லபன் எழுந்து வேகமாக வெளியே சென்றான்.

அவள் எதையும் கவனிக்கவில்லை.

ஐந்து நிமிடத்தில் சூடான பாலுடன் வந்தவன்,

"செல்வா எழுந்திரு இதை குடி" என்று பாலை நீட்ட,

வார்த்தைகளின்றி உணர்வுகளால் என்னை உணர்ந்து கொள்கிறான் என்று மேலும் கலங்கியவள் அமைதியாக அதனை வாங்கி பருக,

"போதுமா எதாவது ப்ரூட்ஸ் எடுத்திட்டு வரவா?" என்று வினவ,

"ம்ஹூம் போதும்" என்று தலையசைத்தாள்.

குவளையை வைத்து வந்தவன் விளக்கை அணைத்து விட்டு,

"படு செல்வா" என்க,

அமைதியாக படுத்து கொண்டாள்.

அவனும் சற்று தள்ளி படுக்க,

அவளது மனது கணவனது அருகாமையை மிகவும் தேட இம்முறை தயக்கங்களை உடைத்து அவனை நெருங்கி அவனுடன் ஒண்டியவள் கரத்தினை அவன் மேல் போட்டு கொண்டாள்.

மனைவியின் அணைப்பில் ஒரு கணம் அவனுக்கு சிலிர்த்தது. இருந்தும் மீண்டும் அணைக்கவில்லை.

கணவனது செயலில் அழுகையை முட்டிக் கொண்டு வர அவனது மார்பில் முகத்தை புதைத்தவளுக்கு கண்ணீர் பெருகியது.

அவளது கண்ணீர் இரவுடையை தாண்டி உடலை நனைக்க மனைவியின் அழுகை உணர்ந்து பதறியவன்,

"ஹேய் என்னடி ஆச்சு?" என்று எழ முயற்சிக்க,

அவனை எழ விடாது செய்தவளுக்கு கண்ணீர் பெருக் சிறு விசும்பலுடன் அவனுடன் நெருங்கினாள்.

நேரம் செல்ல செல்ல அவளது அழுகையின் வீரியம் பெரியதாக அவளை விலக்கி எழுந்து விளக்கை போட்டவன் மனைவியின் அழுகையில் சிவந்த முகம் பார்த்து,

"எதுக்கு இப்படி அழுதிட்டு இருக்க?" என்று வினவ,

விழிகளில் நீர் நிறைந்து கொண்டே இருந்தது.

உதடு கடித்து அழுகையை விழுங்கியவள் அவனை பார்த்து ஒன்றுமில்லை என்று தலையை இடம் வலமாக அசைக்க,

மனைவியின் முகத்தினை கண்டு உருகிவிட்டவன் அவளை இறுக்கி அணைத்து கொள்ள,

அவன் தோளில் முகத்தை புதைத்தவள் அழுகையில் தேம்பியவாறு,

"சாரி சாரி என்னை மன்னிச்சிடுங்க" என்று இதழ் உரச கூறினாள்.

அவள் சூடான கண்ணீரை உணர்ந்தவன் முகத்தை தன்புறம் திருப்பி,

"ஏய் அழறதை முதல்ல நிறுத்துடி" என்று அதட்ட,

"ம்ஹூம் அது தானா வருது" சிறு பிள்ளையாக தேம்ப,

"செய்யிறதெல்லாம் செஞ்சிட்டு இப்போ எதுக்குடி அழற? நமக்கு குழந்தை வரப்போற சந்தோஷமான விஷயத்தை என்கிட்ட சொல்லக் கூட‌ உனக்கு மனசில்லையா? அப்படி என்ன நான் உனக்கு வேண்டாதவனா போய்ட்டேன்" என்று ஆதங்கமாக வினவ,

அவளிடம் கண்ணீர் மட்டுமே பதிலானது.

"உனக்கு என்னை தெரியாதா செல்வா? என்னை தெரிஞ்சிக்க புரிஞ்சிக்க என் அம்மா அப்பா தேவைப்படுறாங்களா உனக்கு?" என்று மனது கேட்காது வினவிட,

"இல்லை அப்படிலாம் ஏதுமில்லை" என்று உடனடியாக மறுத்தவளுக்கு அழுகை தான் நின்றபாடில்லை.

"அவங்க பேசலைன்னாலும் நான் நான் வந்திருப்பேன். எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியலை. என்னால திடீர்னு நடந்த எதையும் ஏத்துக்க முடியலை.‌ எனக்கு தெரியாம‌ என் வாழ்கையில நடந்த எல்லாத்தையும் ஏத்துக்க கடந்து வர‌ எனக்கு டைம் தேவைப்பட்டது. அதான்" என்றவள் உனக்கு என்னை புரியவில்லையா? என்று பரிதவிப்புடன் பார்த்து வைக்க,

இவனுக்கு புரிந்தது அவளது நிலை அதானால் தானே அவளாக புரிந்து வரட்டும் என்று காத்திருந்தான்.

"குழந்தை" என்றவனது பேச்சில் இடை நுழைந்தவள்,

"அது நான் கன்சீவ்வா இருக்கிறதை தெரிஞ்சுக்கிட்டப்போ ரொம்ப ஒரு மாதிரி டிப்ரஷன்ல இருந்தேன். இந்த விஷயம் தெரிஞ்சா நீங்க உடனே என்னை பாக்க வந்திடுவிங்க எனக்கு அப்போ உங்களை பேஸ் பண்ற தைரியம் இல்லை. ஆனால் கொஞ்சம் நாள் ஆகி நான் ஓரளவு தேறின பிறகு தான் நான் செஞ்ச தப்பெல்லாம் எனக்கு புரிஞ்சுது. என்னால உங்களுக்கு எப்பவுமே கஷ்டம் தான்.‌ நான் உங்களை ஏமாத்திட்டேன் இருந்தும் நீங்க" என்றவளுக்கு தொண்டைக்குழியில்
வார்த்தை சிக்கிக் கொள்ள,

"எனக்கு ரொம்ப கில்டி ஆகிடுச்சு அதான் இவ்ளோ நாள் உங்களை எப்படி பேஸ் பண்றதுன்னு தெரியாம நான் இங்க உங்களை தேடி வரலை" என்று தேம்பியபடி கூற,

அவளது விளக்கங்களிலே அவளது நிலையை உணர்ந்தவன் போதும் இதற்கு மேலும் ஏதும் வேண்டாம் என்பது போல அவளை அணைத்து கொள்ள,

"என்னால உங்களுக்கு நிறைய கஷ்டம் நான் நான் உங்களுக்கு வேணாம்" என்றவள் தேம்ப,

அவளது கன்னத்தை பற்றி தன்னை பார்க்கும்படி செய்தவன்,

"நீ நீ மட்டும் இருந்தாலே போதும் நான் எவ்ளோ பெரிய கஷ்டத்தையும் தாங்குவேன் நீ தான்டி எனக்கு எல்லாமே" என்று விழி பார்த்து கூற,

அவளுக்குத்தான் அவனது நேசத்தில் மூச்சு முட்டியது.

"இனிமேல் என்னைவிட்டு எங்கேயும் போகாதடி. நீயில்லாம எனக்கு எதுவுமே இல்லை" என்று கூற,

"ம்ஹூம் போகமாட்டேன்" என்று அழுகையும் சிரிப்பும் கலந்து கூற,

அவளது கண்ணீரை தனது இதழ்களால் துடைத்தவன், "ஐ லவ் யூ" என்று அழுத்தமாக இதழில் இதழை உறவாடவிட்டான்.

விழிமூடி வல்லபனது முத்தத்தினை ஏற்று கொண்டவள் அவனது கழுத்தை இறுக்கி கொண்டாள்.

நீண்ட நெடிய முத்தத்தில் இருவருக்குமே மூச்சு வாங்கியது. இருவரது முகத்திலும் நிறைந்த புன்னகை தவழ்ந்தது.

"உனக்கு கொடுத்திட்டேன் ஆனால் இன்னும் என் மகனுக்கு கொடுக்கலையே" என்று அவளது வயிற்றில் குனிந்து மெதுவாக இதழ் பதித்து நிமிர,

"அதுக்குள்ள பையன்னு நீங்களே முடிவு பண்ணிட்டிங்களா?" என செல்வா சிரிப்புடன் வினவ,

"ஹ்ம்ம் நமக்கு பையன் தான் பிறப்பான்" என்று சிரித்தவாறு கூற,

"பொண்ணு பிறந்தா?" என்று செல்வா புருவத்தை உயர்த்த,

"அடுத்ததா பையனை பெத்துக்க வேண்டியது தான் நான் ரெடியா தான் இருக்கேன்.‌ இப்போவே பிராசசஸ்ஸ ஆரம்பிக்கலாமா?" என்று விஷமத்துடன் கண்ணடிக்க,

அதில் சடுதியில் முகம் சிவந்தவள் அவனது தோளில் அடிக்க சிரிப்புடன் மனைவியை அணைத்து கொண்டான்.

இருவரது மனதிலும் சொல்ல முடியாத உவகை குடிக்கொள்ள விழிமூடி அந்த தருணத்தின் ஏகாந்தத்தை அனுபவித்தனர்…




 
Active member
Messages
205
Reaction score
116
Points
43
அய்யோ 🤗🤗🤗ரெம்ப ரெம்பவே டச்சிங் டச்சிங்க்க்கா இருக்கே ☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️
 
Active member
Messages
346
Reaction score
233
Points
43
Wow wow vallaban selva vum.normal agitanga sema happy athi yum vallaban um.onnu serndhu ah yara ah yum kandu kirathu illa
 
Well-known member
Messages
610
Reaction score
346
Points
63
Selva vallapan pakka vanthuda happy happy 🤩🤩aathi kutty ku appa va pakka poran nu enna oru santhosam cha so sweet 🤗🤗🥰🥰apadiyo vallapan selva serthudaga eni jolly thaa🥳🥳🥳🥳💖💖
 
Top